பின்பற்றுபவர்கள்

24 ஆகஸ்ட், 2008

சிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்படங்கள் !

விஜய் ஆனந்த் என்கிற பின்னூட்ட சூறாவளியை திங்கள் கிழமை லக்கிலுக் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார், பின்னூட்ட சூறாவளி சிங்கையில் தான் இருக்கிறார். நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர். விரைவில் பதிவும் எழுத இருக்கிறார். 'இன்று சந்திக்கலாம் உங்கள் வீட்டு அருகே பார்ப்போம்' என்று சொல்லி இருந்தேன். இடையில் ஜெகதீசனையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து தொலைபேச... 'எங்க வீட்டுக்கே இரண்டு பேரும் வந்துடுங்க' என்றார். அப்பறம் 5 நிமிடம் கழித்து தொலைபேசியில் அழைத்து ... 'பாரி.அரசு அங்மோகியோ கூப்பிடுகிறார் 6 மணிக்கு அங்கேயே வந்துடுங்க' என்றார். இராம் (முகவை மைந்தன்) வருவதாகச் சொன்னார். விஜய்க்கு தொலைபேசி அங்கு வரச்சொல்லிவிட்டு ஜோசப் பால்ராஜைக் கூப்பீட்டு தீடீர் சந்திப்பு நேரம் இருந்தால் வாருங்கள் என்றேன். 'அண்ணே பொழுது போகாமல் உட்கார்ந்து இருக்கேன்...இப்பவோ போய் துண்டு போட்டுவிடுகிறேன்...' என்றார். கிரியும், ஜோதிபாரதியும் வேலைக் காரணமாக திடீர் சந்திப்பின் அழைப்பை புறக்கணித்து விட்டார்கள், மற்றவர்களைக் கூப்பிடலாம் அவங்க வீட்டு அம்மணிகளின் சாபத்தைப் பெறவேண்டாம் என்று நினைத்து அதுக்குமேல் யாரையும் கூப்பிடல, ஏனென்றால் சிங்கை சந்திப்பு நடந்து மூன்றுவாரம் கூட ஆகலை.

சந்திப்பிற்கு குறித்த நேரத்தில் ஆறுபேருமே அடைந்துவிட்டோம். அங்கே ஒரு காஃபி கடையில் உட்கார்ந்து ஒருமணினேரம் பேசினோம்



* விமானநிலையங்களில் பாதுக்காப்புக்காக டெக்னாலஜி வழியாக பயணிகளை நிர்வாணமாக்கிப் பார்பதை அரசுகள் நடைமுறை படுத்தி இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?" என்றார் அரசு.

பாதுகாப்புக்காக செய்யப்படுவை அதைத் தவறு என்று சொல்லமுடியவில்லை. விமானப்பயணம் அச்சமூட்டுவதாக இல்லாமல் இருக்க தற்போதைய சூழலில் தேவைதான் என்றோம். அதைக் கண்காணிப்பவர்கள் ஆண்களின் படங்களையும், பெண்களின் படங்களையும் பார்பவர்கள் ஆணுக்கு ஆண் சோதனையாளர், பெண்ணுக்கு பெண் சோதனையாளர்களை வைக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பாரி.அரசு, மற்றும் பால்ராஜ் ஆகியோரின் அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடப்பங்கீடு, கிரீமி லேயர் பற்றி பெரிய விவாதம் நடந்தது.

(இராம், அரசு,பதிவர்,பால்ராஜ் மற்றும் விஜய் ஆனந்த்)

இரவு மணி 8 வாக்கில் அங்கிருந்து அரசுவின் வீட்டுக்குச் சென்று இரவு 10:15 வரை பேசிக் கொண்டு (மட்டும்தான்!!!) இருந்தோம். இடையில் பரிசல்காரன் மற்றும் வெண்பூவிடம் கைபேசியில் பேசினோம். மலேசிய தம்பி விக்னேஷ்வரன் ஈபோவிலிருந்து அழைத்துப் பேசினார். சந்திப்பின் நோக்கம் விஜய் ஆனந்தின் அறிமுகம். சந்திப்பில் விவாதித்தவற்றைப் பற்றி தம்பி பால்ராஜ் அவர்கள் விரிவாக எழுதுவார். பேசிய மற்ற விசயங்கள் ஈஎஸ்பி அனுபவம் பற்றி இராம் எழுதுவார். MACH3 FUSION பற்றி ஜெகதீசன் எழுதுவார். அவர்களுக்கெலலம் விஜய் ஆனந்த் 'மீ த பர்ஸ்ட் பின்னூட்டம்' போடுவார்

விஜய் ஆனந்த்...துடிப்பான இளைஞர் 26 வயதாகிறது, திருமணமானவர், சென்ற வாரத்தில் குட்டிப் பையனுக்கு அப்பாவாகி இருக்கிறார். புதியவரானாலும் வெட்கப்படமால் விவாத ஜோதியில் கலந்தார் , நீண்ட நாள்களாக வலை மேய்பவர்.

20 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

அண்ணே...
அவ்வ்வ்வ்....

விஜய் ஆனந்த் சொன்னது…

ஆமாமாமா...நாந்தான்

மீ த பஸ்ட்ட்ட்டூடூடூ!!!!!!!!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

விஜய் ஆனந்த் மீ த பஸ்ட் போடலாம்னு இருந்தேன்...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, உங்க வேகம் எங்களுக்கெல்லாம் வராது. நான் பொறுமையா பதிவு போடுறேன்.

ஜோ/Joe சொன்னது…

நல்லா இருங்கடே!
நானும் 7-9 அங்மோக்கியோ நூலகத்தில் தான் இருந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
நல்லா இருங்கடே!
நானும் 7-9 அங்மோக்கியோ நூலகத்தில் தான் இருந்தேன்.
//

அடக்கொடுமையே...அம்மணிகளின் சாபம் பெறக் கூடாது என்பதற்காவே திடீர் சந்திப்புக்கு திருமணம் ஆனவர்களை அழைக்கவில்லை. :)

அடுத்தமுறை அங்க்மோகியோ சென்றால் குறுந்தகவல் அனுப்புகிறேன் :) நிலைமை சரியாக இருந்தால் பதில் அனுப்புங்க !

TBCD சொன்னது…

நல்லா இருங்கடே!

பரிசல்காரன் சொன்னது…

விஜய் ஆனந்த் இவ்வளவு ஸ்மார்டா இருக்காரே!

அடிக்கடி தொலைபேசும் நண்பரின் முகமறிய வைத்த கண்ணஜிக்கு நன்றி!

தருமி சொன்னது…

//நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர்//

இதுவரை எனக்கு அவரின் பின்னூட்டம் ஏதும் வந்ததில்லை.

ஃ என் பதிவுகள் = ??
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி has left a new comment on your post "சிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...":

//நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர்//

இதுவரை எனக்கு அவரின் பின்னூட்டம் ஏதும் வந்ததில்லை.

ஃ என் பதிவுகள் = ??
:(
//

தருமி ஐயா,

'மிக மிக' நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் போட தனக்கு தகுதி இல்லை, நான் சின்னப் பையன் என்றார் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//தருமி has left a new comment on your post "சிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...":

//நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர்//

இதுவரை எனக்கு அவரின் பின்னூட்டம் ஏதும் வந்ததில்லை.

ஃ என் பதிவுகள் = ??
:(
//

தருமி ஐயா,

ஜமாலன் பதிவுக்கு பின்னூட்டம் போட நான் யோசிப்பேன். அவர் எழுதி இருக்கும் அடர்த்திக்கு என்னுடைய பின்னூட்டம் சப்பையாக இருக்கும் என்பதால் பின்னூட்டமே இடமாட்டேன். எப்போதாவது அருமையாக இருக்கிறது என்ற ஒற்றைவரி பின்னூட்டம் இடுவதுடன் சரி. :) அதுபோல் தான் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து பயந்திருப்பார்.
:)

பரிசல்காரன் சொன்னது…

இந்தப் பதிவுல ஒரு முக்கியமான மேட்டர் மிஸ் ஆவுதே..

நீங்க ரொம்பத்தான் நல்லவரு கண்ணன்..


பாக்கறேன்.. யாரு அந்த உண்மையை ஒத்துக்கப் போறங்கன்னு..

யாரும் சொல்லல.., அப்புறம் இருக்கு கச்சேரி...

கோவி.கண்ணன் சொன்னது…

//

இந்தப் பதிவுல ஒரு முக்கியமான மேட்டர் மிஸ் ஆவுதே..

நீங்க ரொம்பத்தான் நல்லவரு கண்ணன்..


பாக்கறேன்.. யாரு அந்த உண்மையை ஒத்துக்கப் போறங்கன்னு..

யாரும் சொல்லல.., அப்புறம் இருக்கு கச்சேரி... //

அதை மட்டும் ! கேட்காதிங்க ! அது மான பெரச்சனை
:)

விஜய் ஆனந்த் சொன்னது…

// கோவி.கண்ணன் said...
கோவி.கண்ணன் said...
//தருமி has left a new comment on your post "சிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...":

//நல்ல பதிவுகளாக தேடிப்பிடித்து பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துபவர்//

இதுவரை எனக்கு அவரின் பின்னூட்டம் ஏதும் வந்ததில்லை.

ஃ என் பதிவுகள் = ??
:(
//

தருமி ஐயா,

ஜமாலன் பதிவுக்கு பின்னூட்டம் போட நான் யோசிப்பேன். அவர் எழுதி இருக்கும் அடர்த்திக்கு என்னுடைய பின்னூட்டம் சப்பையாக இருக்கும் என்பதால் பின்னூட்டமே இடமாட்டேன். எப்போதாவது அருமையாக இருக்கிறது என்ற ஒற்றைவரி பின்னூட்டம் இடுவதுடன் சரி. :) அதுபோல் தான் உங்கள் எழுத்துக்களைப் பார்த்து பயந்திருப்பார்.
:) //

கண்ணன் அண்ணே...ரொம்ப நன்றி..

தருமி ஐயா,
// அவர் பதிவ படிப்பேன்...ஆனா கமெண்ட்டு போட தயக்கம்...
மூத்த பதிவராச்சே!!!!! //

இது உங்க பின்னூட்டத்த திரு.கண்ணன் எனக்கு chat-ல காட்டினப்போ நா சொன்ன பதில்...பின்னூட்டம் போடாததுக்கு நெஜம்மா காரணம்....உங்க மேல வச்சிருக்கற மரியாதை....

சின்னப் பையன் சொன்னது…

அப்போ என்னோட பதிவுகள் நல்ல பதிவுகள்னு சொல்றீங்களா???? ரொம்ப நன்றி அண்ணே!!!

சின்னப் பையன் சொன்னது…

தம்பி விஜய் பின்னூட்டப் புயல் மட்டுமில்லே, ஜிடாக்லே பேசும் புயல்கூட!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கிரியும், ஜோதிபாரதியும் வேலைக் காரணமாக திடீர் சந்திப்பின் அழைப்பை புறக்கணித்து விட்டார்கள், மற்றவர்களைக் கூப்பிடலாம் அவங்க வீட்டு அம்மணிகளின் சாபத்தைப் பெறவேண்டாம் என்று நினைத்து அதுக்குமேல் யாரையும் கூப்பிடல, ஏனென்றால் சிங்கை சந்திப்பு நடந்து மூன்றுவாரம் கூட ஆகலை.//

கோவியாரே இது நியாயமா?

ஜெகதீசன் சொன்னது…

சந்திப்பு நடந்ததா????
என்னை ஏன் அழைக்கவில்லை????

நான் கூட 6 - 11 அங்-மோ-கியோவில் தான் இருந்தேன்... என்னை அழைத்திருக்கலாமே?

கிரி சொன்னது…

நல்லா இருங்கப்பா :-)

Sanjai Gandhi சொன்னது…

ஓ.. நீங்க எல்லாம் திடீர் பதிவர்களா? :)).. நல்லா இருங்கய்யா எல்லாரும். :)

.. கோவியாரே .. சும்மா ஃப்ரீயா உக்காருங்க தல.. அதான் அந்த நடிகைங்க கூட போட்டோ எடுத்து வெளிச்சம் போட்டு காட்டிட்டிங்களே.. எவ்ளோ நேரம் தான் இப்டியே வயித்த உள்ள இழுத்து வச்சி உக்காருவீங்க.. சங்கட்டமா இல்ல? :P
( ....இதெல்லாம் அந்த போட்டோவ பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும் :P ...)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்