உயர்சாதியினர் தமிழகத்தில் 14 விழுக்காடு இருக்கிறார்களாம், அவர்கள் தங்களுக்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டதை கலைஞர் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. பேசாமல் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி மொத்த இடமான 100 விழுக்காட்டையும் சாதி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்துவிடலாம்.
அப்படியே பிரிச்சு கொடுத்துட்டு அந்த ஒதுக்கீட்டில் எந்த மாணவனைத் தேர்ந்தெடுப்பது என்ற தலைவலியையும் அரசு வைத்துக் கொள்ளாமல் அதாவது கட் ஆப் மார்க் பற்றி யெல்லாம் அந்தந்த சாதிகளே தீர்மாணிக்க சாதிசங்கங்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்.
தற்போதைய ஒதுக்கீட்டு முறையில் மொத்தம் 4 பிரிவுகள் இருக்கிறது,
எஸ்ஸி / எஸ்டி - 19
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20
பிற்படுத்தப்பட்டோர் - 30 விழுக்காடு
ஓப்பன் - 29 விழுக்காடு (கணக்கு சரியாக தெரியல, கொஞ்சம் கூட குறைவாகக் கூட இருக்கும்)
உயர்வகுப்பினர் வெறும் 14 விழுக்காடு தானே கேட்கிறார்கள், மீதம் இருக்கும் (29 மைனஸ் 14 ) 15 விழுக்காடும் அதே அடிப்படையில் பிரித்துக் கொடுத்தால்
எஸ்ஸி / எஸ்டி - 22
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 23
பிற்படுத்தப்பட்டோர் - 35 விழுக்காடு
உயர்வகுப்பு - 15 விழுக்காடு
என்று கணக்கு வந்துவிடும்......
இந்திய அளவில் இருக்கும் இந்திய அரசு வேலை / கல்விகளிலும் இட ஒதுக்கீட்டு முறை மாற்றப்பட வேண்டும். தற்போது வகுப்படிப்படையில் இருக்கும் ஒதுக்கீட்டை மாநில அடிப்படைக்கு மாற்றி அமைத்து அந்தந்த மாநில நிலவரப்படி ஒதுக்கீடு வழங்கவேண்டும். பல்வேறு மாநிலங்களில் சாதிப்பெயர் ஒன்றாக இருந்தாலும், மக்கள் நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறு. அதனால் இந்திய அளவில் மாநில அளவிலான இட ஒதுக்கீடே சரியான தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.
சேவகம் பண்ணுவதற்காக என்ற எந்த தனிப்பட்ட சாதியும் கிடையாது ஆகவே.....இருக்கும் சாதி மக்கள் தொகை அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் தான் சமத்துவம் நிலைநாட்டப்படும்.
உயர்வகுப்பினர்களும் படிக்க வேண்டுமே. அவர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்றால் எப்படி ?
எல்லோரும் எல்லாமும் பெருக !
:)
இவரு என்ன சொல்றாருன்னா ? இட ஒதுக்கீட்டையே எடுத்துவிடனுமாம்...யாரா ? அதை அங்கேயே போய் படிங்க...
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
31 கருத்துகள்:
இல்லை இல்லை...
இடஒதுக்கீட்டை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேறும்...
:P
ஆமாம்....ஆமாம்..இட ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே நாட்டு மக்கள் எல்லோரும் முன்னேறுவார்கள்...
ஒதுக்கீட்டின் சதவீதப்பங்கீட்டில் உள்ள மாற்றுக்கருத்துக்களைக் களைய, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, ஒதுக்கீடானது, எவ்வித பாகுபாடுமின்றி, அனைவருக்கும் சரியான சம்பங்கோடு வரையறுக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு வேண்டும், ஆனால் க்ரீமி லேயர் முறை பின்பற்றப்பட வேண்டும்.
இதுக்கு நான் நிறைய சொல்லனும். ஒரு நாள் அவகாசம் கொடுங்க. நாளைக்கே ஒரு பதிவு எழுதுறேன்.
//ஒரு நாள் அவகாசம் கொடுங்க//
கொடுக்காதிங்க...
"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டுமென்று" சொல்லி இருக்கேன். ஆதரவே குமியலையே ஏன் ஏன் உயர்வகுப்பினருக்கு இட ஒதிக்கீடு வேண்டாமா ?
வேண்டவே...! வேண்டாம்! என்று யார் தான் சொல்லுவார்கள். பேசாம எல்லா சாதியினருக்கும் சராசரிக்கு 100% கொடுத்திட்டா ஆட்சியாளர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற எதுவாக அமையும். 1000000% அப்படின்னு ஒன்னு புதுசா உருவாக்கிட வேண்டியதுதான். பட்ஜெட் போடுறப்ப சொல்ற மாதிரி பற்றாக்குறை பர்செண்டேஜ் என்று சொல்லி நாமத்த போட்டுட்டு ஓட்டு வாங்கிடலாம்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
//உயர்சாதியினர் தமிழகத்தில் 14 விழுக்காடு இருக்கிறார்களாம், அவர்கள் தங்களுக்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டதை கலைஞர் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது.//
அந்த ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் இருக்குமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்பதும், அனைத்து சாதியினருக்கும் உரிமை வழங்க சமுகநீதி காக்க 100 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்பதே அனைத்து சமுகநீதி போராளிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
உங்களோடு சில கருத்துக்களில் ஒத்துப் போகவில்லை என்றாலும் உங்கள் மய்யக் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன் (எனக்கும் creamy layer பற்றி தெளிவு வேண்டும். நேரம் கிடைக்கும் பொது பின்னூட்டமோ அல்லது பதிவோ இடுகிறேன்.). BleachingPowder அவர்களின் பதிவில் உங்கள் பின்னூட்டங்கள் நன்றாக வந்துள்ளன. அவற்றை ஏன் ஒரு பதிவாகப் போடக் கூடாது?
சரி, இந்த வலைப்பூக்களில் எங்களைப் போன்ற புதுப் பதிவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக் கூடாதா?
முதல ஜாதிவாரியான சென்சஸ் எடுத்து ஒரு அறுவது வருடம் ஆகிறது(1934 சேகரிச்ச விவரங்கள வச்சி இன்னும் பேசிகிட்டு இருக்காங்க. ) அத எடுக்காம அரசாங்கம் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல.
கோவிகண்ணன் :- இந்த கேள்விகளுக்கு உங்களோட பதிலை எதிர்பார்க்கிறேன்.
1) ஒரு ஜாதி முன்னேரிடுச்சா இல்லையான்னு பாக்க என்ன அளவுகோல் ? இத எவ்வளவு வருசத்துக்கு ஒரு தடவ ஆராய்ச்சி செய்யணும் ?
2) இடஒதிக்கீடு எதுல செயல்படுத்தனும் ? படிக்கும் பள்ளிகளில, கல்லூரிகளிலா ? முனைவர் பட்டம் பெரும் மாணவர்களிடமா ? (இவை அனைத்திலுமா ? இதற்கான அளவுகோல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா ?)
3) இடஒதிக்கீடு வேலை அரசாங்க வேலையில் மட்டும் தானா ? எந்த எந்த அரசாங்க வேலைகளில் ? (இந்திய இராணுவம், போலீஸ், மருத்துவம், கவர்னர், சுகாதார துறை). promotion இடஒதிக்கீடு அடிப்படையில் கொடுக்க வேண்டுமா ? (மேனேஜர், brigadier)
4) இன்றைய சூழலில், வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் private sectoril கொண்டு வரவேண்டுமா ? (டாட்டா, TVS, கவிதாலயா நிறுவனம்). promotions இதில் அடங்க வேண்டுமா ?
இது சம்பந்தமாக, இந்திய அரசாங்கம் எத்தகைய ஆராய்ச்சி செய்து உள்ளது ? தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறியுள்ளது இடஒதுக்கீட்டின் காரணமாகவா ? அல்லது இந்திய அரசியல் சூழலின் காரணமாகவா ? எவ்வளவு ஜாதிகள் புதிதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சேர்க்க படுகின்றன (ஒரு வருடத்தில்)? எவ்வளவு ஜாதிகள் நீக்கபடுகின்றன ?
(எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் )
இட ஒதுக்கிடு உயர் ஜாதியினருக்கு என்றாலே அது பிராமணர்களுக்குத்தான் என்று எண்ணுகிறார்கள்.
அது தவறு.ரிசர்வேசனில் வராத பிரிவினர் அனைவரும் உயர்ஜாதிதான்.
இவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்..ஆனால்..அது பொருளாதார அடிப்படையில் இருக்கலாம்.
அப்போது இப்போது இருக்கும் கூப்பாடு இருக்காது என்பது என் கருத்து.
கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு வந்து பாருங்களேன், உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.
//அவனும் அவளும் said...
முதல ஜாதிவாரியான சென்சஸ் எடுத்து ஒரு அறுவது வருடம் ஆகிறது(1934 சேகரிச்ச விவரங்கள வச்சி இன்னும் பேசிகிட்டு இருக்காங்க. ) அத எடுக்காம அரசாங்கம் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல. //
ஜாதிவாரியாக சென்ஸ் கணக்கிடு செய்வது தேவைதான். நெருக்கடி காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு அரசாங்கம் எடுத்துவிட்டால் தங்கள் பலம் என்ன என்பதை ஜாதி சங்கங்கள் தெரிந்து கொள்ளும். இதுவரை எந்த சாதிகளும் மாநில அளவிலான கணக்கிட்டை அரசாங்கம் எடுக்க வேண்டும் வலியுறுத்தியது கிடையாது. சும்மா அவர்களாகவே நாங்கள் தமிழகத்தில் 30 விழுக்காடு இருக்கிறோம் என்கிறார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் 4 ஆயிரம் சாதிகளும் தாங்களே 10 சதவிகிதம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். பெரிய காமடி. ஜாதிகளைக் கணக்கெடுத்துவிட்டால் சாதிமக்களின் சாபத்துக் குள்ளாவோம் என்பதாலேயே அரசியல் வாதிகள் கணக்கெடுப்பை ஊக்குவிக்க மாட்டார்கள்.
//கோவிகண்ணன் :- இந்த கேள்விகளுக்கு உங்களோட பதிலை எதிர்பார்க்கிறேன்.
1) ஒரு ஜாதி முன்னேரிடுச்சா இல்லையான்னு பாக்க என்ன அளவுகோல் ? இத எவ்வளவு வருசத்துக்கு ஒரு தடவ ஆராய்ச்சி செய்யணும் ?//
2000 ஆண்டுகளாக அடக்கியே வைத்திருக்கப்பெற்றவர்கள் 'பலரைப் போல் தான் தாங்களும்' என்று விழித்துக்கொள்ள எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ? தற்போதைய இட ஒதிக்கீட்டினால் அவர்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது. தங்களுக்கு படிப்பு வராது என்று நினைப்பதைவிட 'உனக்கு படிப்பு வராது ' என்று அம் மாணவர்களை நோக்கி ஆசிரியர்கள் சாதியைச் சொல்லாமல் திட்டும் போது அவர்களுக்கு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டு படிப்பை பாதியில் நிறுத்திச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 100 சதவித மக்களுக்கு படிப்பின் அருமை புரியும் போது, இந்த இடஒதுக்கீடுகள் எதுவுமே தேவையற்றதாக இருக்கும்.
//2) இடஒதிக்கீடு எதுல செயல்படுத்தனும் ? படிக்கும் பள்ளிகளில, கல்லூரிகளிலா ? முனைவர் பட்டம் பெரும் மாணவர்களிடமா ? (இவை அனைத்திலுமா ? இதற்கான அளவுகோல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா ?)
//
இதற்கு முன்பே பதில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உயரிய கல்வியை பணக்காரன் மட்டும்தான் படிக்க முடியும். ஏழ்மை நிலையில் இருந்து ஐஐடி போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் மிகக் குறைவே. ஐஐடி யுனுள் நுழைபவர்கள் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வதை பண வசதியே ஏற்படுத்துகிறது. முழுநேரமும் ஐஐடியை குறிவைத்து நேரம் செலவு செய்து, பணம் செலவு செய்து திறமையை வளர்த்துக் கொள்பவர்களால் மட்டுமே 99.92 மதிப்பெண் பெற முடியும். மற்றபடி படிக்கும் ஆசை இருக்கும் பிறருக்கு அவ்வளவு பணவசதி இருக்காது, வேலையை விட்டுவிட்டு, வேலையே செய்ய முடியாமல் அதற்கெல்லாம் முயற்சி செய்யமுடியாது. ஆக ஐஐடியில் 99.92 மதிப்பெண் பெறுவது என்பது மாணவரின் தனித்திறமை என்று சொல்லமுடியாது. பணக்ககரானாக இருப்பதால் அவன் முழுமூச்சாக முயல்கிறான். இங்கு பணம் தான் உயர்கல்வி பெறும் தகுதியை தீர்மாணிக்கிறது. இப்போது சொல்லுங்கள் பணமில்லாதவர்கள், ஐஐடி படிக்கவேண்டும் என்று விரும்பினால் அவர்கள் எவ்வாறு பணக்கார இளைஞர்களுடன் போட்டி இடமுடியும் ? வேலை செய்தால் தான் மேலே படிக்க முடியும் என்ற நிலை இருப்பவனும் , வேலை செய்யமால் படிப்புக்காக மட்டுமே முழு எண்ணமும் செலுத்துபவனும் ஒன்றாகவே போட்டி இட முடியுமா ? படிக்க வசதி இருப்பவர்கள் ஏன் அரசாங்க உதவியினால் நடக்கும் ஐஐடி போன்றவற்றின் மீது ஏன் குறிவைக்க வேண்டும் ? வெளிநாட்டில் அந்த கல்வியை ஏன் தொடரக்கூடாது ? படித்து முடித்ததும் இவர்கள் செல்லும் இடமும் அதுதானே.
//3) இடஒதிக்கீடு வேலை அரசாங்க வேலையில் மட்டும் தானா ? எந்த எந்த அரசாங்க வேலைகளில் ? (இந்திய இராணுவம், போலீஸ், மருத்துவம், கவர்னர், சுகாதார துறை). promotion இடஒதிக்கீடு அடிப்படையில் கொடுக்க வேண்டுமா ? (மேனேஜர், brigadier)//
சிப்பாய்வேலைக்கு எத்தனை உயர்வகுப்பினர்கள் சென்றுள்ளார்கள் என்ற கணக்கு எதுவும் இருக்கிறதா ? சாதாரண போலிஸ் வேலையில் உயர்வகுப்பினரை நான் பார்ததே இல்லை. வெறும் 10 ஆம் வகுப்பு முடித்த உயர்வகுப்பினர் ஏன் போலிஸ் வேலைகெல்லாம் செல்வது இல்லை. உயர்பதிவி மட்டுமே தான் உயர்வகுப்பினருக்கானது என்கிற வரைமுறை எதுவும் உண்டா ? சென்னை மாநகராட்சி ஊழியராக எத்தனை உயர்வகுப்பினர் இருக்க்கிறார்கள். உயர்பதவிகளை மட்டுமே உயர்வகுப்பினர் மட்டுமே குறைவைக்கும் போது அந்த பதவிகளை ஏன் இடஒதுக்கீடு முறையில் நிறப்பக் கூடாது ?
//
4) இன்றைய சூழலில், வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் private sectoril கொண்டு வரவேண்டுமா ? (டாட்டா, TVS, கவிதாலயா நிறுவனம்). promotions இதில் அடங்க வேண்டுமா ?//
தனியார் நிறுவனங்களை அரசுகள் கட்டுப்படுத்த முடியாது, சமுக்க நன்மைக்காக அவர்களும் இடஒதுக்கீடு வழங்கலாம். தன் நிறுவனத்துக்கு லாபம் என்றால் திறமை உள்ளவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் தனியார் நிறுவனங்கள் விலைகொடுத்துவாங்கும்.
//
இது சம்பந்தமாக, இந்திய அரசாங்கம் எத்தகைய ஆராய்ச்சி செய்து உள்ளது ? தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறியுள்ளது இடஒதுக்கீட்டின் காரணமாகவா ? அல்லது இந்திய அரசியல் சூழலின் காரணமாகவா ? எவ்வளவு ஜாதிகள் புதிதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் சேர்க்க படுகின்றன (ஒரு வருடத்தில்)? எவ்வளவு ஜாதிகள் நீக்கபடுகின்றன ?
(எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் )
//
டாக்டர் புருனோவின் சென்ற மாத இடுகையில் எழுதி இருக்கிறார். முடிந்தால் பின்னூட்டத்துடன் படியுங்கள்.
http://www.payanangal.in/2008/08/blog-post.html
என்ன அண்ணாச்சி, கொஞ்சம் கொளப்புரீங்க. (இல்ல, என் மரமண்டைக்கு தான் வெளங்கலையா??)
கட் ஆஃப் மார்க் என்பது அரசு "தீர்மானிப்பது" இல்லை. இத்தன சீட்டு காலியா இருக்கு, அதனால இத்தன பேர சேக்கலாம், அதுல மார்க்படி, கடேசியா இருக்கவன் மார்க் தான் "கட் ஆஃப்" மார்க்.
இட ஒதுக்கீடு பத்தி எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா, அது தேவையானவங்களுக்கு போய் சேருதா?? க்ரீமி லேயர் பத்தி சொன்னாலே தி.மு.க அரசு ஏன் ரொம்ப டென்ஷன் ஆவுதுன்னு எனக்கு புரியல. இடஒதுக்கீடுனால, நல்ல வசதியான குடும்ப மக்கள் தான் அதிகம் பலன் அடையறாங்க. அதெ பிற்படுத்தப்பட்ட சமூகத்தில, கிராமத்தில இருக்குற பல மாணவர்கள், பல நடைமுறைகளும், கல்வி நிறுவனங்களும் இல்லாததால இந்த இட ஒதுக்கீடு முறை அதிக பலனை தரல!
"பாட்டன் சேத்த சொத்தில் பங்கு வேணும், ஆனா, அவன் பாவத்தில பங்கு வேணாமா"ன்னு இன்னொரு பதிவுல கேள்வி கேட்ரீந்தீங்க.
நான் வெளிப்படையாவே கேக்குறேன் அண்ணாச்சி. நம்ம ஃப்ரண்டு ஒருத்தன் இருக்கான். அய்யர் பையன். நல்லா படிப்பான்னு வச்சிக்கங்களென். +2வுல கிட்டத்தட்ட 89% எடுத்தான். அவனுக்கு இஞ்சினியரிங் படிக்கனும் ஆச. ஆனா, அவன் அய்யருங்கிறதால, இந்த மார்க் போதல. அவனுக்கு அப்பாவும் இல்ல. அம்மா பக்கத்து வீடுங்களுக்கு சமையல் வேலக்கு போய்தான் குடும்பத்த காப்பத்துறாங்க. அதனால, பிரைவேட் காலேஜுல எல்லாம் பணம்கட்டி படிக்கமுடியாது.
வேற வழியில்லாம, பாலிடெக்னிக்ல சேந்தான். அங்கயும் நல்லா தான் படிச்சான். ஆனா, வழக்கம் போல இட ஒதுக்கீடு பிரச்சினைல கவர்மெண்ட் வேல எதுவும் கெடக்கலை. (இப்ப கவர்மேன்ட் பெருசா ஆள் எடுக்கிறது இல்லங்கிறதால, நெறைய பேருக்கு அப்படித்தான், அவனுக்கு மட்டும்னு இல்ல)
அதனால, இப்ப 3,000 சம்பளத்துல ஒரு சின்ன கம்பெனில வேல பாக்குறான். தனியா எதுனா தொழில் தொடங்கலாம்னு பேங்கில லோன் கேட்டா, அங்க லஞ்சம் கேக்குறாங்க. மாசம் 3,000 சம்பளம் வாங்குறவன் எப்படி லஞ்சம் கொடுக்க முடியும் அண்ணாச்சி??
இப்பிடி, அவன் பொறந்த நாட்டிலயே அவன சுத்தி சுத்தி அடிச்சா அவன் என்ன பண்ணுவான்??
அவன்ட்ட போயி "உங்க பாட்டன் சேத்த பாவத்தோட பங்கு இது" அப்பிடின்னு சொல்ல சொல்றீங்களா?? என்னால முடில அண்ணாச்சி!
//ஓப்பன் - 29 விழுக்காடு (கணக்கு சரியாக தெரியல, கொஞ்சம் கூட குறைவாகக் கூட இருக்கும்)//
31
மேலும் சில விபரங்களுக்கு ரவியின் ஆங்கில பதிவில் என் மறுமொழிகளை பார்க்கவும்
இங்கு கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் விடை உள்ளது.
//இட ஒதுக்கீடு வேண்டும், ஆனால் க்ரீமி லேயர் முறை பின்பற்றப்பட வேண்டும். //
இது குறித்து என் பதிவில் விளக்கியுள்ளேன்
//க்ரீமி லேயர் பத்தி சொன்னாலே தி.மு.க அரசு ஏன் ரொம்ப டென்ஷன் ஆவுதுன்னு எனக்கு புரியல.
//
என் பதிவில் தெளிவான விளக்கம் இருக்கிறது
http://payanangal.blogspot.com/2008/06/blog-post.html
மற்றும் இடப்பங்கீடு தொடர்பான பிற இடுகைகளை பாருங்கள்
2008 ஆண்டு மருத்துவ படிப்பிற்கான குறைந்த பட்ச மதிபெண் தேவை (அதாவது கட் ஆப்)
* முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 197.25 / 200 = 98.625 %
* பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 195.25 /200 = 97.625 %
* கிருத்தவர்கள் - பி.சி.சி - 194.50 /200 = 97.250 % (இந்த பங்கீடு பலன் அளிக்கிறது என்பதற்கு இதுவே ஆதாரம்
* முஸ்லிம்கள் - பி.சி.எம் - 193.25 / 200 = 96.625 %
* மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 192.50 /200 = 96.250 %
* அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 187.50 /200 = 93.750 %
* பழங்குடியினர் - எஸ்.டி - 176.25 / 200 = 88.125 %
Difference between FC Cut Off and BC Cut Off is 1 %
Difference between FC Cut Off and SC Cut Off is less than 5 % (4.875)
Difference between BC Cut Off and SC Cut Off is less than 4 % (3.875)
//புருனோ Bruno said...
என் பதிவில் தெளிவான விளக்கம் இருக்கிறது
http://payanangal.blogspot.com/2008/06/blog-post.html
மற்றும் இடப்பங்கீடு தொடர்பான பிற இடுகைகளை பாருங்கள்
//
புருனோ Bruno,
சுட்டிக்கு மிக்க நன்றி !
சாதி தொகை அடிப்படையிலான அனைவருக்குமான இட ஒதுக்கீடு என்றால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் உயர்வகுப்பினர் யாரும் அது சரியான தீர்வு என்று சொல்லவதற்கு முன்வரவில்லை :) கவனித்தீர்களா, அவர்கள் சொல்வது இட ஒதுக்கீடே கூடாது என்பதுதான். இட ஒதுக்கீடு தரத்தைக் குறைக்கிறதாம், வேறுபாடுகள் உள்ளவற்றை ஒரே தட்டில் வைக்க முயற்சிக்கிறதாம் !
:)
//சமிபத்தில் செய்திதாளில் வந்த ஒரு செய்தி. ஐ.ஐ.டி யில் பிற்படுத்தோர் இடஒதுக்கிட்டு பிரிவில் இன்னமும் இடங்கள் நிரப்ப படவில்லை, இத்தனைக்கு அவர்களூக்கு நிர்னையத்த கட் அஃப் மதிப்பெண் மிகவும் குறைவானதே. இப்போது திரும்பவும் கட் ஆஃபை குறைக்க போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் உயிரை கொடுத்து படித்த மாணவர்கள் 90 சதவிதம் மதிப்பெண் வைத்திருந்தாலும், மிதமுள்ள இருக்கைகளை அவர்களுக்கு தர மாட்டார்களாம்.//
இந்த பொய் தகவல்களை இங்கு தோலுரித்திருக்கிறேன்
பார்க்கவும்
ஐ.ஐ.டி தொடர்பாக நான் அளித்த சுட்டி குறித்து உங்களின் கருத்து எதிர்பார்க்கப்படுகிறது :)
The population of various castes in Tamil Nadu
BC 2,87,93,980
MBC/DC 1,30,24,065
SC 1,18,57,504
ST 6,51,321
Forward Castes 80,78,809
Total 6,24,05,679
BC 46.14% (30 % இடப்பங்கீடு)
MBC/DC 20.86% (20 % இடப்பங்கீடு)
SC 19.00% (18 % இடப்பங்கீடு)
ST 1.04% (1 % இடப்பங்கீடு))
Forward Castes 12.95%
Total 100.00%
டாக்டர் புரூனோ,
தாங்கள் அளித்திருக்கும் தகவல்கள் அனைத்தும் பயனானவை !
இட பங்கீடு குறித்து எழுதுவதற்கென்றே தனி குழும பதிவு தொடங்குங்கள், அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் தான் அவ்வப்போது சுட்டிக் கொடுத்து பதில் சொல்லிவிடமுடியும்.
//புருனோ Bruno said...
ஐ.ஐ.டி தொடர்பாக நான் அளித்த சுட்டி குறித்து உங்களின் கருத்து எதிர்பார்க்கப்படுகிறது :)
10:31 AM, August 28, 2008
//
டாக்டர் புரோனோ,
அதில் கருத்துரைக்க ஆவல்தான் தமிழ் சரளமாக வரும் அளவுக்கு ஆங்கிலம் எனக்கு கோர்வையாக வராது, அப்படியே எழுதினாலும் அதில் சொல்லப்படும் கருத்தை விட்டு எனது ஆங்கிலத்தை கேலி செய்து திருப்புவார்கள். முயற்சிப் பண்ணுகிறேன்.
:)
//இட பங்கீடு குறித்து எழுதுவதற்கென்றே தனி குழும பதிவு தொடங்குங்கள், அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் தான் அவ்வப்போது சுட்டிக் கொடுத்து பதில் சொல்லிவிடமுடியும்.//
நல்ல யோசனை
ஆரம்பித்து விடலாம் :) :)
//அதில் கருத்துரைக்க ஆவல்தான் தமிழ் சரளமாக வரும் அளவுக்கு ஆங்கிலம் எனக்கு கோர்வையாக வராது, அப்படியே எழுதினாலும் அதில் சொல்லப்படும் கருத்தை விட்டு எனது ஆங்கிலத்தை கேலி செய்து திருப்புவார்கள். முயற்சிப் பண்ணுகிறேன்.//
அங்கு இல்லையென்றால் என்ன,
உங்கள் பதிவில் இந்த மோசடி குறித்து ஒரு இடுகை எழுதுங்கள்.
குறைந்த பட்சம் நம்ம மக்களாவது திருந்த வேண்டும்
//டாக்டர் புரோனோ,//
ஆங்கில உச்சரிப்பு ப்ருனோ
தமிழில் எழுதுவது புருனோ
நீங்கள் புருனோ என்றே அழைக்கலாம்
//புருனோ Bruno said...
நல்ல யோசனை
ஆரம்பித்து விடலாம் :) :)
//
பாராட்டுக்கள், அதுகுறித்த ஒத்த கருத்துடைய பதிவர்களை இணைத்துக் கொள்ளுங்கள், 2007 வரை இட ஒதுக்கீடு பற்றிய கட்டுரைகளை பதிவர் குழலி தொகுத்துள்ளார். அதில் அவர் இணைத்திருக்கும் கட்டுரையாளர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு பற்றிய தெளிவு இருக்கும்.
//புருனோ Bruno said...
//டாக்டர் புரோனோ,//
ஆங்கில உச்சரிப்பு ப்ருனோ
தமிழில் எழுதுவது புருனோ
நீங்கள் புருனோ என்றே அழைக்கலாம்
10:57 AM, August 28, 2008
//
டாக்டர் புருனோ,
எழுத்துப்பிழை தவறுக்கு வருந்துகிறேன் நண்பரே !
/இட பங்கீடு குறித்து எழுதுவதற்கென்றே தனி குழும பதிவு தொடங்குங்கள், அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் தான் அவ்வப்போது சுட்டிக் கொடுத்து பதில் சொல்லிவிடமுடியும்.//
தளத்திற்கு ஒரு நல்ல பெயர் கூறுங்கள்.
Reservation in India
Truths about Quota
என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் :)
//புருனோ Bruno said...
/இட பங்கீடு குறித்து எழுதுவதற்கென்றே தனி குழும பதிவு தொடங்குங்கள், அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தால் தான் அவ்வப்போது சுட்டிக் கொடுத்து பதில் சொல்லிவிடமுடியும்.//
தளத்திற்கு ஒரு நல்ல பெயர் கூறுங்கள்.
Reservation in India
Truths about Quota
என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் :)
//
டாக்டர் புரூனோ,
Truths about Quota
இது சூப்பர்.... தமிழில்
இடபங்கீடும் உண்மைகளும் !
******
இங்கே உங்கள் பின்னூட்டங்களைப் படித்தால் நையாண்டி நைனா மிகவும் மகிழ்ச்சியடைவார். உங்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர். 15 நாட்களாக சாட்டில் காணவில்லை. விரைவில் அவருக்கு திருமணம் ஆக இருப்பதும் மற்றொரு காரணம்
கருத்துரையிடுக