நேற்று மாலை ஆறுமணிக்கு தம்பி ஜெகதீசன் போன் செய்தார். 'லிட்டில் இந்தியாவுக்குப் போறேன்... அண்ணனுக்கு புதுப்படம் சிடி வாங்கிக் கொடுத்தனுப்பனும்...உங்களுக்கு தெரிஞ்ச கடை இருக்கா?', 'நான் அந்த பக்கம் வழியாகத்தான் போவேன்...7.30 மணிக்கு வருகிறேன்..லிட்டில் இந்தியாவில் வெயிட் பண்ணு' என்று சொல்லிவிட்டு...7.15 மணிக்கு லிட்டில் இந்தியாவிற்கு சென்றேன்...முஸ்தபாவில் கொஞ்சம் வேலை இருக்கு...'அங்கேயே இருங்க..,வருகிறேன்'...என்றார்.
லிட்டில் இந்தியா எருமை சாலையில் (Baffalo Road) வாடகைக் கார்கள் நிறுத்துமிடம் (டாக்ஸி ஸ்டாண்ட்) அருகில் உட்கார்ந்து இருந்தேன்.
ஒருவர் அருகில் நெருங்கி வந்து.....'நீங்க தானே கோவி.கண்ணன் ?' எனக்கு வியப்பாகிவிட்டது...'முன்னபின்னே தெரியாத ஒருவர் சரியாகக் கேட்கிறாரே... வலைப் பதிவாளராகத்தான் இருக்கும்....வேற யாரும் 'கோவி' சேர்த்துச் சொல்லமாட்டாங்க' என்பதால் 'நீங்க வலைப்பதிவாளரா ?' என்று கேட்டேன். பெயரைச் சொன்னார். 'அடக்கொடுமையே...அவரோடு ஒரு 10 தடவையாவது போனில் பேசி இருந்தும்...எதிரில் பார்த்து பேசும் போது குரலை வைத்துக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை...' வந்தவர் வேறு யாருமில்லை நம்ம
ஜோதி பாரதி!!!
சராசரி உயரமும்...சற்றே கூடுதலான உடலும்...அடுத்த வினாடி புன்னகை பூக்கத் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கும் முகம் அவரது அடையாளத்தில் உடனடியாக காண்பது இவைதான்.
வியப்பு பொங்க....
"ஓ....நீங்கள் தானா அவர் ? எங்கே இந்த பக்கம் ?"
"இட்லி அரிசி வாங்க வந்தேன்" என்றார் கையில் அரிசி மற்றும் இதர பொருட்கள் இருந்தது... பொறுப்பான இல்லத்தரசன் ... சிறிது நேரம் அங்கேயே நின்று பேசினோம்
"ஜெகதீசன் முஸ்தபாவில் இருக்கார்... அவரையும் பார்த்து விட்டு வருவோம்" என்று கிளம்பினேம்
அதற்குள் வேலை முடிந்ததாக செல்பேசியில் அழைத்துவிட்டு வீரமா காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து திரும்பவும் அருகிலேயே நின்று கொண்டு 'எங்க இருக்கிங்க ?' என்று கேட்டார் ஜெகதீசன்.
பிறகு மூவரும் காஃபி குடித்துக்கொண்டே மொக்கைப் போடலாம் என்று கோமள விலாசுக்குச் சென்றோம்.
காஃபி மற்றும் பீட்ருட் காரசிப்ஸ் வாங்கிக் கொறித்துக் கொண்டே ஒரு 40 நிமிடம் மொக்கை... பெருசாக எதைப்பற்றியும் விவாதிக்க வில்லை. ஒருவர் ஒருவரைப் பற்றி கேட்டுக் கொண்டோம். அவரிடம் திரட்டிய தகவல்கள், எனக்கு தெரிந்த தகவல்களும்
* பதிவர் சந்திப்புக்கு வரமுடியாமல் போனதற்கு குடும்ப பாரமே காரணம் என்றார் (நம்பாதிங்க...முதுகு வளைவாக இல்லை)
* அடுத்த முறை சந்திப்புக்கு வருகிறேன் என்றார்
* 10 ஆண்டுகளாக சிங்கையில் இருக்கிறார்
* 3 வண்டுகளுடன் கொஞ்சம் சிறிய குடும்பம்
* சிங்கை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நெருக்கமானவர்
* அவ்வப்போது சிறு சிறு கவிதைகளை எழுதுவார்
* அண்மையில் பிராவகம் நடத்திய போட்டியில் ஈழத்தமிழர் குறித்து கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்றவர்
* இயல்பாக பேசக் கூடியவர், சட்டென்று நண்பராகிவிடும் குணம், இந்த பூனை பால் மட்டும் தான் குடிக்கும் புலிப்பால் குடிக்காது
* நாள் தோறும் கிடைத்தால் வாரத்துக்கு 7 நாளும் அசைவம் சாப்பிடுபவர்
* கோவிலுக்குப் போகக் கூடியவர்
* ஊர் அத்திவட்டி
* போண்டாவுடன் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றார், வடைத்தான் கிடைத்து. (நிழற்படம் பார்க்க)
* மகாகவி பாரதி மீது சற்று விமர்சனம் இருந்தாலும் பாரதியைப் போற்றுபவர்
* பாரதி ராஜாவின் விருப்ப நாயகன் நடிகர் 'ராஜா' வின் அசப்பிலான தோற்றம்.
தகவல்கள் போதுமா ? :)
அதன் பிறகு விடைபெற்றோம்.
நான் வசிக்கும் இடத்திலிருந்து 30 நிமிட பயணத்தொலைவில் தான் அவரது வீடு இருக்கிறது, நேரில் சந்திக்கவேண்டும் என்று நீண்டநாளாகவே சொல்லிக் கொண்டு இருந்தோம், நேற்று அது சற்றும் எதிர்பாராவிதமாக, இனிமையான சந்திப்பாக அமைந்தது.
***
மற்றோர் மினி சந்திப்பு...பிறகு
நானும் ஜெகாவும் சிடி வாங்கப் போகும் போது ...இடைமறித்து குறுக்கே கையைப் பிடிச்சு இழுத்து....'பொன்னி அரிசி இங்கே கிடைக்குது....வாங்க வாங்க' என்றார் ஒருவர்...ஹெல்மெட் போட்ட தலை...பார்த்தால்...நம்ம ஜோசப்.பால்ராஜ்....அவருடைய உறவினர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். முச்சந்தியில் நடந்த இந்த மற்றொரு குறுஞ் சந்திப்பு வெறும் 2 நிமிடங்களில் 'பை பை...' ஆகிவிட்டது
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
33 கருத்துகள்:
:-)))...
சாயங்காலம் லிட்டில் இந்தியா பக்கம் வந்தா நெறய பேர பாக்கலாம் போலருக்கே!!!
நிழல்படம் பார்த்தேன். நிஜத்துக்கு வெயிட்டிங்(-:
எல்லாரும் அங்கேயா இருக்கீங்க? அடுத்தமுறை சந்திப்பு எருமைச்சாலையில்:-))))
படங்களுக்கு நன்றி. கண்டுபுடிச்சுருவேன்.....
:))
"இவரும் பதிவர் தான்.. யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.." என்று கேட்டதும் நான் உடனே "இவர் ஜோதி பாரதி தானே?" என்று கண்டுபிடித்ததைப் பற்றி பதிவில் சொல்லாமல் என் திறமையை இருட்டடிப்பு செய்யும் கோவியாருக்கு கடும் கண்டனங்கள்!!!
//
ஹெல்மெட் போட்ட தலை...பார்த்தால்...நம்ம ஜோசப்.பால்ராஜ்....அவருடைய உறவினர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். முச்சந்தியில் நடந்த இந்த மற்றொரு குறுஞ் சந்திப்பு வெறும் 2 நிமிடங்களில் 'பை பை...' ஆகிவிட்டது
//
அந்த 2 நிமிடங்களுக்குள்ளேயே மூன்று முறை இவர் என் "சொந்த" அண்ணன் என்று ஜோசப் அறிமுகப் படுத்திய பின்னும் இங்கு "உறவினர் ஒருவர்" என்று சொல்வதையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்!!!
அண்ணே, நேத்து என் கூட வந்தவரு என் உடன்பிறந்த சகோதரர் ஜோசப் செல்வன்.
ஜோதிபாரதியை சரியாக கண்டுபிடித்த ஜெகதீசனின் திறமையும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
டன்லப் தெருவில் ஹனீபாவிற்கு எதிர்புறம் வரும் சாலையில் ஆரம்பத்தில் உள்ள கோமளஸ் காய்கறி கடையில் தரமான இந்திய பொன்னி அரிசி நேற்று கிடைத்தது. 5கிலோ விலை 18 டாலர்கள். சிங்கை வாழ் மக்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
//
பிறகு மூவரும் காஃபி குடித்துக்கொண்டே மொக்கைப் போடலாம் என்று கோமள விலாசுக்குச் சென்றோம்.
//
காஃபி குடித்தது கோமளாஸ், கோமள் விலாஸ் இல்லை!!
ஒரு சின்ன இடுகையில் இத்தனை தவறுகளா??????
எத்தனை முறைதான் கண்டனம் தெரிவ்விப்பது?
:P
கண்டணப் பதிவு ஒன்னு போட்ரலாமா ஜெகு?
எருமை சாலையில் நான் கண்டு பிடித்த அருமைப் பதிவர்
அல்லது
வடைப்பதிவர் சந்திப்பு.(படத்தில் வடை உள்ளது பார்க்கவும்) நன்றி: திரு.கோவி.கண்ணன்.
அல்லது
நான்கு பதிவிட்டு விட்டு காணமல் போன என்னை கண்டுபிடித்த ஜோதிபாரதி.
அல்லது
சும்மா நச்சுன்னு பார்த்தவுடனே புன்னகை பூக்க ஜோதிபாரதியை அடையாளம் கண்டு கொண்ட புன்னகை அரசன் ஜெகதீசன்.
அல்லது
என்னைப் பார்த்து நீங்கள் கோவி.கண்ணனா? இது என்ன கேள்வி?
அல்லது
தேக்காவில் வாடிக்கையாக வேடிக்கை பார்க்கும் என்னை கண்டு பிடித்த புதிய வலைப் பதிவர்.
அல்லது
என்ன கொடுமை அய்யா இது? பிரபலமானதால் புகழ் பெற்றேன், நான் ஒரு காய்கறி வாங்க போனாக் கூட கண்டுபிடித்துவிடுகிறார்கள்.(நன்றி:நடிகை,நடிகர்கள்)
அல்லது
வலைப்பதிவருடன் பேசுகிறேன் என்று சொல்லி நான் எடுத்த பேட்டி.
அல்லது
திருட்டு வி.சி.டி வாங்க போன போது என்னைப் பிடித்த வலைப்பதிவர்.
அல்லது
இட்லி அரிசி வாங்க வந்த இனிய பதிவர்
அல்லது
பதிவர் சந்திப்பிற்கு வராமல் டிமிக்கி கொடுத்த பதவிசான பையன் பாரதி
அல்லது
துருவித் துருவிக் கேட்ட போதும் தேங்காய் வாங்க வந்ததாகச் சொன்ன பதிவர்
அல்லது
பீட்டு ரூட்டு சிப்சை வீட்டுக்கு வாங்காமல் சென்ற பதிவர்கள்
அல்லது
குழம்பிப் போனப் பதிவர்களுக்கு நான் வைத்த குழம்பி விருந்து
அல்லது
போண்டா வேண்டா..! வடையுடன் வலைப்பதிவர் சந்திப்பு
போன்ற தலைப்புகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு தலைப்பு வைத்த வலையுலக பிரபலம் கோவி.கண்ணன் அவர்களை நானும் கண்டிக்கிறேன்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
பின்னூட்டம் போட்டுவிடதான்நினைக்கிறேன் ஒரு சிரிப்பான் இல்லாமல்.. சிரிபான் இல்லாத பின்னூட்டம் ஆகது எனும் ஜெகதீசனின் கூற்றை மதித்து இட்டுச் செல்கிறேன் ஒரு :.
முகம் பார்த்து பெயர் சொல்லும் ஜெகதீசன் அண்ணாச்சி வாழ்க...
சரியாக பெயர் சொன்னதால் ஜெகதீசன் அண்ணாச்சிக்கு நாளைக்கு வெளியாகும் ஜே.கே.ரித்திஷின் நாயகன் படத்திற்கான டிக்கட் ஒன்று இலவயமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனந்தத்தோடு கண்டு களிக்கவும்..
சிங்கப்பூர் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற கொ.ப.செ ஜெகதீசன் அண்ணாச்சி வாழ்க!!!!
சுவையான வர்ணனை!!
பதிவர்களை ஒருங்கிணைக்கும் பரமாத்மா கோவியார் வாழ்க!!!
அதெல்லாம் சரி.. அடுத்த சந்திப்பு எப்போ ?
தவறவிட்டு விட்ட ஜோதிபாரதியின் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன்றி!!!
//
திருட்டு வி.சி.டி வாங்க போன போது என்னைப் பிடித்த வலைப்பதிவர்.
//
தவறான தலைப்பு!!!!!
நாங்கள் ஒரிஜினல் CD தான் வாங்கினோம்!!
// ஜெகதீசன் said...
//
திருட்டு வி.சி.டி வாங்க போன போது என்னைப் பிடித்த வலைப்பதிவர்.
//
தவறான தலைப்பு!!!!!
நாங்கள் ஒரிஜினல் CD தான் வாங்கினோம்//
நேற்றைக்கு கோவியாரின் கூற்றுப்படி தலைப்பு வைத்துவிட்டேன்.
வேண்டுமென்றால் இப்படி மாற்றிக்கொள்ளலாம்,
இருட்டில் வி.சி.டி வாங்க போன போது என்னைப் பிடித்த வலைப்பதிவர்(நன்றி:சிங்கை தெருவிளக்கு)
அன்புடன்,
ஜோதிபாரதி.
//லக்கிலுக் said...
தவறவிட்டு விட்ட ஜோதிபாரதியின் கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நன்றி!!!//
நன்றி திரு.லக்கிலுக்!
இன்டர்நேஷனல் பிகர்!! ஆகிட்டாரு கோவி கண்ணன்
மகிழ்ச்சி!
ப்ளாக்கர்சுக்கு சென்ற இடமெல்லாம் நண்பர்கள்தான்!
//பதிவர் சந்திப்புக்கு வரமுடியாமல் போனதற்கு குடும்ப பாரமே காரணம் என்றார் (நம்பாதிங்க...முதுகு வளைவாக இல்லை)//
நீங்கள் எடுத்த படத்தில் முதுகு பின் பக்கம் வளைந்திருக்கிறது. நன்றாக பாருங்கள்.
வளைய வளைய வலையில் எழுதும் கோவியாருக்கு முன் பக்கம்.
சனிக்கிழமை என்றால் சரி.
எனக்கு இன்னிக்கு ஆணி நிறைய இருக்கு உடனடியாக மறுமொழி போடமுடியாமல் போவதற்கு வருந்துகிறேன்.
ரஜினிகந்த் பேட்டிக்கு பிறகு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்வதற்கு பதிலாக வருந்துகிறேன் என்றே எழுத வருது...ஏன் ?
//ஜெகதீசன் said...
"இவரும் பதிவர் தான்.. யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.." என்று கேட்டதும் நான் உடனே "இவர் ஜோதி பாரதி தானே?" என்று கண்டுபிடித்ததைப் பற்றி பதிவில் சொல்லாமல் என் திறமையை இருட்டடிப்பு செய்யும் கோவியாருக்கு கடும் கண்டனங்கள்!!!
11:55 AM, August 21, 2008
//
ஜெகதீசன்,
நீங்க முழிச்ச பிறகு, இவர் 'ஒரு பதிவர்' என்று சொன்னதும் 'ஜோதி பாரதி ?' ங்கிற மாதிரி கேள்வியாக கேட்டிங்க, சட்டென்று ஒன்னும் சொல்லவில்லை !
//விஜய் ஆனந்த் said...
சாயங்காலம் லிட்டில் இந்தியா பக்கம் வந்தா நெறய பேர பாக்கலாம் போலருக்கே!!!
11:09 AM, August 21, 2008
//
ஆமாம் ! லிட்டில் இந்தியா பக்கம் போய் தெரிஞ்ச பதிவருக்கெல்லாம் போன் செய்தால் யாராவது சிக்குவாங்க !
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, நேத்து என் கூட வந்தவரு என் உடன்பிறந்த சகோதரர் ஜோசப் செல்வன்.
ஜோதிபாரதியை சரியாக கண்டுபிடித்த ஜெகதீசனின் திறமையும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. கடுமையான கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
டன்லப் தெருவில் ஹனீபாவிற்கு எதிர்புறம் வரும் சாலையில் ஆரம்பத்தில் உள்ள கோமளஸ் காய்கறி கடையில் தரமான இந்திய பொன்னி அரிசி நேற்று கிடைத்தது. 5கிலோ விலை 18 டாலர்கள். சிங்கை வாழ் மக்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
12:01 PM, August 21, 2008
//
அண்ணனை உறவுக்காரர் என்று சொல்லக் கூடாதா ? நீங்கள் அண்ணன் என்று குறிப்பிட்டத்தை மறக்கல, எழுதும் போது நினைவு வரல !
:)
ஜெகதீசன் ஒடனேல்லாம் கண்டுபிடிக்கல...வேண்டுமென்றால் வெளிச்ச பதிவரிடம் கேட்டுப் பாருங்கள் !
//துளசி கோபால் said...
நிழல்படம் பார்த்தேன். நிஜத்துக்கு வெயிட்டிங்(-:
எல்லாரும் அங்கேயா இருக்கீங்க? அடுத்தமுறை சந்திப்பு எருமைச்சாலையில்:-))))
படங்களுக்கு நன்றி. கண்டுபுடிச்சுருவேன்.....
11:35 AM, August 21, 2008
//
துளசி அம்மா,
வரும் போது தகவல் சொல்லுங்க, முன்பே அறிவிப்பு போட்டுவிடலாம் !
ஜோதி பாரதி அண்ணாச்சி இவர் தானா?
நன்றி கோவி அண்ணன்.
//நிஜமா நல்லவன் said...
ஜோதி பாரதி அண்ணாச்சி இவர் தானா?
நன்றி கோவி அண்ணன்.//
ஆமாங்க பாரதி,
உங்களைப் பார்க்கவே முடியவில்லையே?
அன்புடன்,
ஜோதிபாரதி.
திரு.கோவி.கண்ணன் அவர்களின் டிஜிட்டல் கேமராவில் ஒரு நாளைக்கு எல்லா பாரதியும் மாட்டி தான் ஆகணும்.
அதற்கு தான், அதை எங்கு சென்றாலும் தனது பையிலேயே எடுத்துக்கொண்டு செல்கிறார்.
நன்றி ஜெகதீசன்!(தோரியம் புகழ்) உங்கள் செல் பேசி கேமராவையும் குறைத்து மதிப்பிட முடியாது. நன்றாகக் கிளிக்கியது.
அன்புடன்,
ஜோதிபாரதி
என்னைப் பற்றி கோவியார் எழுதியதில் புரிந்து உணர்வுக்காக சில விளக்கங்களைத் தர கடமைப் பட்டிருக்கிறேன்.
//@இயல்பாக பேசக் கூடியவர், சட்டென்று நண்பராகிவிடும் குணம், இந்த பூனை பால் மட்டும் தான் குடிக்கும் புலிப்பால் குடிக்காது//
இது சிங்கப்பூர் பதிவர்களுக்குப் புரியும். மற்றவர்களுக்கும் புரிந்தாலும் மகிழ்ச்சியே.
அதற்காக நான் இதை விளக்கப் போவதில்லை.
நான் அய்யப்பனும் அல்ல, பூனையும் அல்ல!
புலிக்கு ஆங்கிலத்தில் டைகர் என்று சொல்லுவோம். பாலுக்கு மட்டும் இல்ல, குடிக்கிற ஐட்டம் எல்லாம் தண்ணிதான் இங்கே சிங்கபூரிலே.
//* நாள் தோறும் கிடைத்தால் வாரத்துக்கு 7 நாளும் அசைவம் சாப்பிடுபவர்//
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வாரத்தில் வெள்ளி,செவ்வாய்,திங்கள் போற்ற தினங்களில் கவிச்சி சாப்பிடுவதில்லை என்பது போன்ற கட்டுப் பாட்டு மரபுக்கு மாறுபட்டவன். எப்ப வேண்டுமானாலும் சாப்பிடுவேன். அதற்காக அதையே தினமும் சாப்பிடப் பிடிக்காது.
//* ஊர் அத்திவட்டி//
ஊர் அத்திவட்டி அல்ல! அத்திவெட்டி!!
வட்டி என்றால் வரவு! வெட்டி என்றால் செலவு!!
ஒரு கொம்பால் எதிர்மறையாகிவிட்டது...!
அந்த வகையில் நான் பிறந்தது அத்திவெட்டி எனும் அழகிய கிராமத்தில்.
அளவான தகவல்களை,அழகாக, குறிப்பறிந்து எழுதிய திரு.கோவியாருக்கு எனது இதயங்கனிந்த நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
//ஜோதிபாரதி said...
//நிஜமா நல்லவன் said...
ஜோதி பாரதி அண்ணாச்சி இவர் தானா?
நன்றி கோவி அண்ணன்.//
ஆமாங்க பாரதி,
உங்களைப் பார்க்கவே முடியவில்லையே?
அன்புடன்,
ஜோதிபாரதி.//
உங்களை நான் முன்பே எங்கோ பார்த்தது போன்று இருக்கிறது. எங்கு என்று தான் தெரியவில்லை:)
உங்களை மாதிரி நான் பெரிய வி.வி.ஐ.பி. இல்லைங்க.....அதனால தான் என்னை பார்க்க முடிவதில்லை:)
கருத்துரையிடுக