பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2008

எழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா !

1996 - 97 வாக்கில் நான் எழும்பூர் அரும்காட்சியகம் அருகில் அல்சம்மாள் வணிக வளாகத்தில் இருக்கும் ஒரு ஆட்டோமேஷன் அலுவலகத்தில் பணி புரிந்தேன். அப்போது பேச்சிலர் வாழ்கைதான். அங்கு அருகில் மாமா / மாமி மெஸ்கள் போன்று எதுவும் இல்லை. சாப்பிட வேண்டுமென்றால் கொஞ்சம் தொலைவு நடந்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் இருந்து சரியாக 8 நிமிட நடை தொலைவில் எழும்பூரையும் பூந்தமல்லி விரைவு சாலையையும் இணைக்கும் மேம் பாலத்திற்கு அருகில் எழும்பூர் பகுதியில் இருக்கிறது பாலாஜி உட்லண்ட்ஸ. என்னுடன் பணிபுரிபவர்கள் அதனை மாமா ஓட்டல் என்று தான் அழைப்போம் (அதற்கான காரணம் பின்னர்). அலுவலகத்திற்கு எதிரிலேயெ விரைவு உணவகம் இருக்கிறது விலை கொஞ்சம் மிகுதி. என்றாவது மாற்றம் தேவையிருந்தால் அங்கும் உணவு அருந்துவோம்.

பாலாஜி உட்லண்ட்ஸ் ஏன் மறக்க முடியாத உணவகம் ஆகியது ? பொதுவாகவே தொடர்ந்து ஒரு ஓட்டலுக்குச் சென்றால் அங்கு இருக்கும் பறிமாறுபவர் நமக்கு பழக்கம் ஆகிவிடுவார். முன்பெல்லாம் பறிமாறும் ஊழியர்களுக்கு ஊதியம் மிகக் குறைவே தற்பொழுது எப்படி என்று தெரியவில்லை. தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்ர்கள் சிறு அன்பளிப்பு ( டிப்ஸ் ) கொடுப்பார்கள், ஒருமுறை வருபவர்களாக இருந்து தாரள மனது உடையவராக இருந்தால் அவர்களும் முடிந்த அளவு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கொடுப்பார்கள். பல இடங்களில் வசித்த போது அந்தந்த பகுதியில் இருக்கும் ஓட்டல்களில் உள்ள சர்வர்கள் நாள்தோறும் செல்வதால் நமக்கு நல்ல பழக்கம் ஆகிவிடுவார்கள். ஆரம்பத்தில் சாம்பார், சட்டினி எல்லாம் தட்டில் / இலையில் குறையும் போது நிரப்பிவிட்டுச் செல்வார்கள், அப்பறம் சில நாட்களிலேயே....'சார் இன்னிக்கு வடை சூடாக இருக்கு' என்று சொல்லிக் கொண்டே எடுத்து வந்ததை நம் விருப்பத்தைக் கேட்காமலேயே தட்டில் வைத்துவிடுவார்கள். தட்டமுடியாத நிலைமையில் சாப்பிட்டுவிட்டு பில் கேட்கும் போது, வடைக்காகன் பில்
இருக்காது, 'வடைக்கான தொகை இல்லையே ?' பரவல்ல சார்...விடுங்க...இதைப் போய் கவுண்டரில் கேட்டுடாதிங்க...அப்பறம் முதலாளி எல்லோரும் கேட்பது போல் அசிங்கமாக திட்டுவார்' என்பார்கள். இதுபோல் சர்வரின் தனி கவனி0பு பல ஓட்டல்களில் எனக்கு நடந்திருக்கிறது.

பாலாஜி உட்லண்ட்சில் சாப்பிட ஆரம்பித்து 1 மாதம் இருக்கும், எப்போதாவது குளிர்சாதன அறைக்குச் செல்வோம். அங்கு ஒரு சர்வர் மாமா (25 வயது தான் இருக்கும்) ஒரு நாள் சூடான பகோடாவை சுமார் 200 கிராம் இருக்கும் சிறிய தட்டு நிறைய கொண்டு வந்து வைத்தார் சாப்பிட்டதும் அதற்கான பில் கொடுக்கவில்லை. அதற்கும் முன்பே அவ்வப்போது 2ரூபாய் வரைக்கும் டிப்ஸ் கொடுத்து வந்த பழக்கத்தினால் இலவச பகோடா வந்திருக்கிறது. எவ்வளவோ முறை வேண்டாம் என்று சொன்னாலும் சாப்பிடப் போகும் போதெல்லாம் மிக்சர், இனிப்பு என்று எதாவது ஒன்றை கொண்டு வந்து வைத்துவிடுவார். முதலாளிகளுக்கு தெரிந்தால் வேலை போய்விடும், அப்படியே அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டாலும் பில் போடும் போது மறந்துவிட்டதாக சமாளித்துவிடுவார்கள்.

ஒரு முறை என்னுடன் பணி புரிந்த சம்பத் என்ற நண்பரை பாலாஜி உட்லண்ட்சுக்கு அழைத்துச் சென்றேன். அதே சர்வர்தான் நன்றாகவே கவனித்தார். 'கண்ணன்...நானும் எத்தனையோ முறை இந்து ஓட்டலுக்கு வந்திருக்கிறேன். என்னை ஒருநாளும் இது போல் கவனித்தது இல்லையே !' என்று வியப்பு பொங்க கேட்டார். 'நமக்கு சாப்பாடு வைத்தை சர்வர் என்னோட மாமா தான்' என்றேன் :). அந்த சர்வர் அருகில் வரும்போது என் முகத்தையும், சர்வர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் சம்பத். எனக்கு புரிந்துவிட்டது.

'இப்ப ஏன் இருவரையும் மாறி மாறி பார்த்தேன்னு சொல்லவா ?' என்று கேட்டேன். சிரித்தபடியே 'சொல்லுங்க' என்றான்

'மாமாவுக்கும் எனக்கும் முகசாடையில் எதாவது ஒத்து வருகிறதா ? என்று தானே பார்த்தே ?' 'அட ஆமாம் எப்படி இவ்வளவு சரியாகக் கேட்கிறீர்கள் ? அவரு வெள்ளையாக இருக்கார்..நீங்க அவ்வளவு கலர் இல்லையே...' அதே வியப்பு பொங்க கேட்டான். இதை அலுவலகத்திற்கு சென்று எல்லோரிடமும் சொல்ல சம்பத்தை ஓட்டினார்கள். 'அவன் தான் உன்னை ஏமாத்த சொந்த மாமான்னு சொல்லி இருக்கிறான்...அதைப் புரிஞ்சிக்காம இருண்டு பேருக்கும் முகச் சாடை பார்த்து இருக்கியே...உன்னையெல்லாம் ஈசியாக ஏமாத்திடலாம்' என்று சொல்ல சம்பத்துக்கு வெட்கமாக போய்விட்டது.

கிட்டத்தட்ட நான் அந்த பகுதியில் ஓர் ஆண்டு வேலை பார்த்தவரை பாலாஜி உட்லண்ட்ஸில் சில மாதங்கள் வரை நல்ல கவனிப்புதான். 'நீ பண்ணுவது தப்பு...அவன் தான் கொண்டு வந்து வைக்கிறான் என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே' கூடவே என்னுடன் பணி புரிந்த தமிழ்செல்வன் என்னை அடிக்கடி கடிந்து கொள்வான். 'நானாக வைக்கச் சொல்லவில்லை....வேண்டாம் என்று பலமுறை சொல்லிவிட்டேன். அதுக்கும் மேல் பொருக்க முடியவில்லை என்றால் ஓட்டல் ஓனரிடம் தான் சொல்ல முடியும், அவன் வேலை போய்விடும், எனக்கு மனசு வரலை...நான் இனி வேற ஓட்டலுக்கு சாப்பிடப் போகப் போகிறேன். என்று சொல்லி இடம் மாற்றிவிட்டேன்.

பிறகு சிங்கை வந்த பிறகு பேச்சிலராக இருந்த கொஞ்ச நாளில் அடையார் உடுப்பியிலும் அதே போன்ற நிகழ்வுகள்.ஓட்டல் சர்வர்களின் பந்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்பொழுதெல்லாம் வாடிக்கையாளராக எந்த உணவகத்திற்கும் செல்வது இல்லை.

10 கருத்துகள்:

கிரி சொன்னது…

கோவி கண்ணன் இந்த வாரம் மெஸ் வாரமா :-)))

ஜெகதீசன் சொன்னது…

மீ த பஸ்ட்டு...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

என்னன்னே பகி(கீர்)ரங்க கடிதங்களுக்கு போட்டிய மெஸ்ஸா?
நானும் வாரேன் மெஸ் கதையோட.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் இந்த வாரம் மெஸ் வாரமா :-)))

10:51 AM, August 14, 2008
//
கிரி,
ஆமாம் ! மணக்க மணக்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
மீ த பஸ்ட்டு...
//

இல்லை செகண்டுல செகண்டாகிட்டிங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
என்னன்னே பகி(கீர்)ரங்க கடிதங்களுக்கு போட்டிய மெஸ்ஸா?
நானும் வாரேன் மெஸ் கதையோட.

11:08 AM, August 14, 2008
//

பால்ராஜ்,

அந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை. அதனால மெஸ் கதை தான். உங்களுக்கும் 'சுவை'யான அனுபவம் இருக்கும் பறிமாறுங்க !

துளசி கோபால் சொன்னது…

நல்லாதான் இருக்கு மெஸ் கதைகள்.

நான் வேலை செஞ்ச காலத்துலே இப்படித்தான் லோன் டிபார்ட்மெண்டில் கேஷியரா இருந்தவரை 'சித்தப்பா'ன்னு சொல்லி வச்சேன்.

எல்லாரும் சித்தப்பாவிடம் பரிந்துரைக்கச் சொல்லி என்னிடம் விண்ணப்பம் போடுவாங்க.

எப்படித்தான் உண்மைன்னு நம்புனாங்களோ? இத்தனைக்கும் அவரோட நான் பேசுனதே இல்லை:-))))

Voice on Wings சொன்னது…

தலைப்பில் 'எலும்பூர்'ன்னு பார்த்ததுமே கொஞ்சம் ரத்த அழுத்தத்தோட உள்ள வந்தேன். பராவாயில்ல, மாத்திட்டீங்க. மேலும், நீங்கள் பணி புரிந்த அலுவலக complexஇன் பெயர் Alsa Mallஆ? தீவிர சென்னைக்காரங்க இருக்கும்போது இந்த மாதிரி தவறெல்லாம் செய்ய வேண்டாம்ன்னு 'அன்போட' கேட்டுக்கறேன்.

எழும்பூர் உட்லேண்ட்ஸ் ஞாபகமிருக்கு. ரொம்ப கூட்டமா இருக்கும், அதுனால கொஞ்சம் பிடிக்காது. உங்க அலுவலகத்திற்கு வெகு அருகிலேயே Shamiyanaன்னு ஒரு உணவகம் இருந்திருக்குமே? (இப்போ இல்லன்னு கவனிச்சேன்). சாப்பாடு கிடைக்காது, ஆனா சிற்றுண்டிகள் சிறப்பா இருந்தது. Hotel Kanchi கூட அருகில்தான் இருந்தது, கொஞ்சம் விலை அதிகம். நாங்க எழும்பூரில் ராம் பிரசாத்ன்னு ஒரு உணவகத்துக்கு போவோம். two wheelerஇல் அவ்வப்போது தி. நகருக்கே போய் சாப்பிடுவோம் :) அப்போல்லாம் போக்குவரத்து இவ்வளவு இருக்காது. ஸ்கூட்டர் கற்றுக் கொள்ள ஆரம்பித்த நாட்கள். சென்னை போக்குவரத்து அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டு லஞ்சம் கொடுத்த அனுபவமெல்லாம் நிறைய உண்டு :)

- (90 - 93) எழும்பூர் அலுவலகவாசி :)

வெண்பூ சொன்னது…

நல்ல அனுபவங்கள் கோவி.கண்ணன். எத்தனை வருடங்கள் ஆனாலும் சுவையான சாப்பாடு மட்டும் மறக்காது என்பது உண்மை.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இதை எல்லாம் பார்க்கும் பொது கோவியார் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டது மிகவும் குறைவு என்று தெரிகிறது. விடுதியில் தங்கி படித்த அனுபவம் ஏதாவது உண்டா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்