பின்பற்றுபவர்கள்

13 ஆகஸ்ட், 2008

ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !


ரோஜாக்களுக்கு வண்ணமயமான வரலாறு இருக்கிறது. நெடுங்காலமாக அன்பென்னும் சொல்லுக்கான சின்னம் என்று சொல்கிறார்கள். மகிழ்விலும் துக்கத்திலும் மற்றப் பூக்களை விட ரோஜாவின் பங்கு அளப் பெரியது. 35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருக்கிறதாம். உலகெங்கிலும் 150 வகைகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றதாம். முதன் முதலில் சீனாவில் தான் ரோஜாவை மலர் தோட்டப்பயிராக விளைவித்தார்களாம். அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்து இருக்கிறது. ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு ரோஜாவின் பயன்பாடு எண்ணிக்கை அந்த காலத்திய ரசனைக்கேற்ப ஏற்ற இரக்கமாக மாறி மாறி வந்திருக்கிறது.


15 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வெள்ளை மற்றும் சிகப்பு ரோஜாக்களின் பெயரில் இரு அரசு மாளிகைகள் இருந்ததாகவும் இரண்டிற்கும் இடையே யான போர்கள் 'வார் ஆப் ரோஸஸ்' என்று அழைக்கப்பட்டதாம்.

17 ஆம் நூற்றாண்டில் ரோஜாவுக்கு கடும் தட்டுப்பாடு எற்பட்டு இருக்கிறது. ரோஜா, ரோஜா திரவம் ஆகியவை பண்டமாற்றுக்கு பயன்பட்டு இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் பாரிசின் மன்னர் நெப்போலியன் மனைவி ஜோஸ்பின் என்பவர் Château de Malmaison என்ற இடத்தில் தோட்டம் அமைத்து அரிய வகை ரோஜாக்களை வளர்த்து அழகு படுத்தினாராம்.



ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !

இந்த சொற்றொடர் புகழ்வாய்ந்தது உண்மையும் கூட. இது பற்றிய புரிதல் இருந்துவிட்டால் உலகில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வந்துவிடும்.

ஈஸ்வரனும் அல்லாவும் ஒரே இறைவனின் வேறு பெயர்கள் என்று சொன்னதற்காக சுட்டுக்கொள்ளப் பட்ட மகாத்மா காந்தி நினைவுக்கு வருகிறார். பல்வேறு பெயர்களில் ரோஜாவை எல்லோருமே ஏற்றுக் கொள்ளும் பொழுது பல்வேறு பெயர்களால் (ஈஸ்வரன், அல்லா, ஜீசஸ் என) அழைக்கப்படும் தகுதி பரம்பொருளுக்கு இல்லையா ? அனைத்து மதவாதிகளும், அவர்கள் காட்டும் ஆன்மீகமும் சறுக்குவது இங்கே தான். மதநம்பிக்கையாளர்கள் வைத்திருக்கும் இறை நம்பிக்கை (வெறும்) 'பெயரளவோ' இருக்கிறது அல்லவா. இது உண்மை எனும் போது மதப்பற்றாளர்களை போலி ஆன்மிகவாதிகள் என்று ஏன் சொல்லக் கூடாது ?

பலவண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கிறது, இந்த மதத்திற்கு சொந்தமானவை என்று எந்த ஒரு தனிப்பட்ட நிறத்திலோ, அல்லது அந்த மதத்திற்கு மட்டுமே, அல்லது பகுத்தறிவாளர்களுக்காகவோ பூப்பது இல்லை.
உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் ரோஜாவின் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் ரோஜா ஒன்றுதான். அது எந்த மதத்திற்கும், கொள்கைக்கும் தொடர்பானது அல்ல.

ரோஜா ROSE, ரோசா எந்த பெயரில் இருந்தாலும் ரோஜா ரோஜாதான்.

இறை என்று உண்டு என்று நம்புவர்களாக இருந்தாலும்,

இந்த பெயரில் இருக்கும் இறைவனே என் நம்பிக்கைக்குரியவன் என்பது என்ன வகையான இறைநம்பிக்கை ?

இந்து மத தெய்வங்கள் - பேய் / பிசாசு எனச் சொல்லும் கிறித்துவர்கள்
அல்லா - முகமது நபியின் கற்பனை என்று சொல்லும் 'ஹிந்து'க்கள்
பிதா சுதன் பரிசுத்தஆவி - கிறித்துவ மிசினெறிகளின் பிதற்றல் என்று சொல்லும் ஹிந்து மற்றும் பிற மதங்கள்.

மத நம்பிக்கையாளர்கள் காட்டும் எந்த இறைவனுக்கும் இல்லாத ஒரு தகுதியாக, எந்த பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது. மேலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் படுகிறது

14 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நான் தான் முதல்ல...

narsim சொன்னது…

A rose is a rose is a rose is a rose....

என்று கதாநாயகிகளை புகழ பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இதை மதநல்லிணக்கத்திற்கு பயன்படுத்தியது நன்றாக உள்ளது..

(வாழ்த்த வயதில்லை,வணங்குகிறேன்..:(..

நர்சிம்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஒரு ஆழமான ஒப்பீடு, ரொம்ப யோசிக்கிறீங்கண்ணே.

நீங்கள் ரோஜாவை மதத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். நான் ரோஜா செடியோடு ஒப்பிடுகிறேன். ரோஜா செடியில்தானே முள்ளும் இருக்கின்றது? அப்படித்தான் எல்லா மதத்திலும் அழகான மலர் போன்ற நல்லவர்களும், செடியில் உள்ள முள்ளைப் போல சில தீயவர்களும் இருக்கின்றார்கள். செடியில் முள் இருந்தாலும் அழகிய மலரால் ரோஜா செடிக்கு பெருமை. ஆனால் மதங்களில் இருக்கும் முட்கள் ஏற்படுத்திய கீறல்களால், அங்கே இருக்கும் மலர் போன்ற நல்லவர்களும் சேர்ந்து விமர்சிக்கப்படுகின்றார்கள்.

முரளிகண்ணன் சொன்னது…

சகல கலா கோவியாரே நீங்கள் வெர்சடைல் பதிவர் என அடிக்கடி நிருபிக்கிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
ஒரு ஆழமான ஒப்பீடு, ரொம்ப யோசிக்கிறீங்கண்ணே.

நீங்கள் ரோஜாவை மதத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். நான் ரோஜா செடியோடு ஒப்பிடுகிறேன். ரோஜா செடியில்தானே முள்ளும் இருக்கின்றது? அப்படித்தான் எல்லா மதத்திலும் அழகான மலர் போன்ற நல்லவர்களும், செடியில் உள்ள முள்ளைப் போல சில தீயவர்களும் இருக்கின்றார்கள். செடியில் முள் இருந்தாலும் அழகிய மலரால் ரோஜா செடிக்கு பெருமை. ஆனால் மதங்களில் இருக்கும் முட்கள் ஏற்படுத்திய கீறல்களால், அங்கே இருக்கும் மலர் போன்ற நல்லவர்களும் சேர்ந்து விமர்சிக்கப்படுகின்றார்கள்.

1:12 PM, August 13, 2008
//

மனிதனைத் தவிர்த்து உயிரினங்கள், செடி கொடி மரவகைக்களுக்கென்றே தனிப்பாதுக்காப்பு உண்டு, அந்த பாதுகாப்பு அதனை அழிப்பதிலிருந்து 100 விழுக்காடு பாதுகாப்பு வழங்காவிட்டாலும் முற்றிலும் அதன் இன அழிப்பு நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்கு ஏற்றவகையில் இருக்கிறது. உதாரணத்திற்கு விரைவாக ஓடும் திறன் இருப்பதால் ஒரு மான் அழிந்தாலும் மற்ற மான்(கள்) அழிவிலிருந்து தப்பிக் கொள்ளும்.

ரோஜா செடியில் இருக்கும் முள்ளும் அத்தகையது தான், அதைச் செடியோடு திண்பதற்கு வரும் விலங்கினத்திடமிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் தடுக்க முட்கள் ரோஜா செடியில் இருப்பது ஒரு இயற்கை அமைப்பு. ரோஜா முள் அதுவாக சென்று யாரைடும் தைக்காது. இந்த ரோஜா முள்ளையும் மதங்களில் இருக்கும் தீவிரவாதிகளையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்றே புரியவில்லை. உங்கள் வாதப்படி பார்த்தால் மதத்தீவிரவாதிகள் தான் மதங்களை அழிவில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பது சரியான கூற்றா ?

இயங்கிக் கொண்டு இருந்து பெருகும் வாய்ப்புள்ள எதுவும் இயற்கையாக அவற்றின் பெருக்கதலில் ஓர் கட்டுப்பாடு இருக்கவே செய்யும். மதம் பரவலைத் தடுக்க இயற்கையாக / செயற்கையாக இருப்பது தான் மதத்தீவிரவாதம், மூடநம்பிக்கைகள் ! ஏனென்றால் அவை தான் மதத்திற்கு எதிரான அவநம்பிக்கையை ஏற்படுத்தி மதவளர்ச்சியை மட்டுப்படுத்துவதில் பகுத்தறிவாதத்தைவிட விரைவாக செயல்படுகின்றன

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
சகல கலா கோவியாரே நீங்கள் வெர்சடைல் பதிவர் என அடிக்கடி நிருபிக்கிறீர்கள்

2:48 PM, August 13, 2008
//

முரளிகண்ணன் ஐயா,

மிக்க நன்றி !

தன்னடக்கமாக இதற்கு பதில் சொல்லவேண்டும் மென்றால், முடிந்த அளவு நல் எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம் என்றே எழுதுகிறேன்.

3:43 PM, August 13, 2008

anujanya சொன்னது…

முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட.

முகலாய -சூ?பி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது?

இப்பிரபஞ்சம் இறைமயம் என்பதற்கான மறுக்க முடியாத சான்றாக இதை சூ?பிகள் முன்வைத்தார்கள். மண்ணில் அதன் அனைத்து புழுதிகளுடனும் வியர்வைகளுடனும் ரத்தங்களுடனும் வாழ்கையிலும்கூட முகலாயப் பாதுஷாக்கள் விண்ணின் பேரருள் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டிருந்தார்கள் என்பதே பாதுஷா முகரும் அந்த ரோஜாவின் பொருள்

சூ?பிகளுக்கு ரோஜா என்பது அறிவதற்கரிய இறைமொழியின் பேரழகு மிக்க ஒரு சொல். மண்ணில் உள்ள எந்த அர்த்தமும் அந்த நறுமணத்தை விளக்காது. ரோஜாவின் நறுமணம் ஒரு சொல்லாகுமென்றால் அல்லா என்றுமட்டுமே ஆகும்.

ரோஜாவில் இருந்து சாறு எடுக்கும் கலையை பாரசீக வணிகர்களிடமிருந்து ஷா ஜகானின் மகள் கற்றதாகவும் பின்னர் அது முகலாயப் பண்பாட்டின் மைய அடையாளமாக ஆகியது என்றும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.

anujanya சொன்னது…

கண்ணன்,

எப்போதிலிருந்து இவ்வளவு கோர்வையாக எழுத ஆரம்பித்தேன் என்று எண்ணம் வந்ததா? முந்தைய பின்னூட்டம், ஜெயமோகன், 'யாமம்' என்ற எஸ்ராவின் நூலைப்பற்றி எழுதுகையில் இவ்வாறு எழுதினார். நான் சும்மா வெட்டி ஓட்டினேன்.

உங்கள் பதிவு நல்ல, அழகிய, வித்தியாசமான சிந்தனை.

அனுஜன்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட.

முகலாய -சூ?பி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது?

இப்பிரபஞ்சம் இறைமயம் என்பதற்கான மறுக்க முடியாத சான்றாக இதை சூ?பிகள் முன்வைத்தார்கள். மண்ணில் அதன் அனைத்து புழுதிகளுடனும் வியர்வைகளுடனும் ரத்தங்களுடனும் வாழ்கையிலும்கூட முகலாயப் பாதுஷாக்கள் விண்ணின் பேரருள் ஒன்றை எப்போதும் அறிந்துகொண்டிருந்தார்கள் என்பதே பாதுஷா முகரும் அந்த ரோஜாவின் பொருள்

சூ?பிகளுக்கு ரோஜா என்பது அறிவதற்கரிய இறைமொழியின் பேரழகு மிக்க ஒரு சொல். மண்ணில் உள்ள எந்த அர்த்தமும் அந்த நறுமணத்தை விளக்காது. ரோஜாவின் நறுமணம் ஒரு சொல்லாகுமென்றால் அல்லா என்றுமட்டுமே ஆகும்.

ரோஜாவில் இருந்து சாறு எடுக்கும் கலையை பாரசீக வணிகர்களிடமிருந்து ஷா ஜகானின் மகள் கற்றதாகவும் பின்னர் அது முகலாயப் பண்பாட்டின் மைய அடையாளமாக ஆகியது என்றும் வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.

4:52 PM, August 13, 2008
//

அனுஜன்யா,

இடுகையை அலங்கரிக்கும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
கண்ணன்,

எப்போதிலிருந்து இவ்வளவு கோர்வையாக எழுத ஆரம்பித்தேன் என்று எண்ணம் வந்ததா? முந்தைய பின்னூட்டம், ஜெயமோகன், 'யாமம்' என்ற எஸ்ராவின் நூலைப்பற்றி எழுதுகையில் இவ்வாறு எழுதினார். நான் சும்மா வெட்டி ஓட்டினேன்.

உங்கள் பதிவு நல்ல, அழகிய, வித்தியாசமான சிந்தனை.

அனுஜன்யா
//

அனுஜன்யா,
கருத்து உங்களுடையது இல்லை என்றாலும் அதன் தொடர்பில் சரியான தகவல்களைத் தேடிக் கொடுத்து இருக்கிறீர்கள், மிக்க நன்றி.

பாராட்டுக்கும் மிக்க நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ரோஜவைபற்றி வலையுலக ராஜா!

ரோஜா மர(த)த்தில் பூப்பதில்லை! அருமை!!

Unknown சொன்னது…

//அனைத்து மதவாதிகளும், அவர்கள் காட்டும் ஆன்மீகமும் சறுக்குவது இங்கே தான். மதநம்பிக்கையாளர்கள் வைத்திருக்கும் இறை நம்பிக்கை (வெறும்) 'பெயரளவோ' இருக்கிறது அல்லவா. இது உண்மை எனும் போது மதப்பற்றாளர்களை போலி ஆன்மிகவாதிகள் என்று ஏன் சொல்லக் கூடாது?//

ஒன்று ஒன்றும்தான் சமம். ஒன்று மூன்றுக்குச் சமம். ஒன்று இலட்சத்துக்கும் கோடிகளுக்கும் சமம் என்று சொல்வதெல்லாம் எப்படி ஒன்றையே சொல்வதாகும். கடவுள் உண்டு என்பதும் கடவுளே இல்லை என்பதும் கடவுள் என்று வருவதால் ஒரே கொள்கையாகி விடுமா? பகுத்தறிவைச் சொல்பவர்கள் சிந்திக்கக் கூடாதா? சிந்திக்கத் தெரியாமல் தம்மை பகுத்தறிவு வாதிகளாக இனங்காட்டுபவர்களே போலிகள்.

//பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூக்கிறது, இந்த மதத்திற்கு சொந்தமானவை என்று எந்த ஒரு தனிப்பட்ட நிறத்திலோ, அல்லது அந்த மதத்திற்கு மட்டுமே, அல்லது பகுத்தறிவாளர்களுக்காகவோ பூப்பது இல்லை. உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் ரோஜாவின் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் ரோஜா ஒன்றுதான். அது எந்த மதத்திற்கும், கொள்கைக்கும் தொடர்பானது அல்ல.//

இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ, கிறித்துவரோ, பகுத்தறிவாளர்களாக தமமைக் கூறிக் கொள்பவரோ, கருப்பரோ, வெள்ளையரோ, பிற்படுத்தப்பட்டவனோ, தாழ்த்தப்பட்டவரோ, தன்னை உயர்நதவனாக சொல்லிக் கொள்பவரோ, யாராக இருந்தாலும், குறிப்பிட்ட இனத்தாருக்கோ பிரிவாருக்கோ என்றில்லாமல் மனித சமூகம் முழுமைக்கும் இறைவன் ஒன்றுதான்.

இது நீங்கள் சொன்னதை விடவும் சிறப்பாக ஒன்று படுத்தவில்லை?

//இறை என்று உண்டு என்று நம்புவர்களாக இருந்தாலும், இந்த பெயரில் இருக்கும் இறைவனே என் நம்பிக்கைக்குரியவன் என்பது என்ன வகையான இறைநம்பிக்கை?//

அவனுக்குரிய தகுதி வல்லமைகளோடு இறைவனை நம்பி அவன் தடுத்ததிலிருந்து விடுபட்டு அவன் வகுத்தபடி வாழ்ந்து வருபவர் இறைவனுக்குள்ள அழகிய பற்பல பெயர்களில் எதைக் கொண்டாவது அழைத்து விட்டு போவதால் தவறேதுமில்லை.

//மத நம்பிக்கையாளர்கள் காட்டும் எந்த இறைவனுக்கும் இல்லாத ஒரு தகுதியாக, எந்த பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாவாகவே இருக்கிறது//
மனிதன், சமூகம். நீங்கள், நான், இறைவன் இது போல எல்லா வார்த்தைகளும் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு மாதிரிதான் அழைக்கப்படுகின்றன. மொழியறிந்தவர் பொருளறிவர். இதிலென்ன ரோசாவுக்கு மட்டும் சிறப்பு.
'நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன' என்று (நபியே!) கூறுவீராக. அல் குர்ஆன் 17:110

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் has left a new comment on your post "ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் !":

ஒன்று ஒன்றும்தான் சமம். ஒன்று மூன்றுக்குச் சமம். ஒன்று இலட்சத்துக்கும் கோடிகளுக்கும் சமம் என்று சொல்வதெல்லாம் எப்படி ஒன்றையே சொல்வதாகும். கடவுள் உண்டு என்பதும் கடவுளே இல்லை என்பதும் கடவுள் என்று வருவதால் ஒரே கொள்கையாகி விடுமா? பகுத்தறிவைச் சொல்பவர்கள் சிந்திக்கக் கூடாதா? சிந்திக்கத் தெரியாமல் தம்மை பகுத்தறிவு வாதிகளாக இனங்காட்டுபவர்களே போலிகள். //

சுல்தான் ஐயா,
சொற்பொழிவு போல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால் இந்து இறைவன் பெயரில் திருநீறு கொடுத்தால் காத தொலைவு ஓடும் பிறமதத்தினரைத்தான் பார்த்து வருகிறோம், ஞானஸ்தானம் பெற்றவருக்கே அப்பம் என்று கொள்கையெல்லாம் வைத்திருக்கிறோம். இது போல் அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதனால் பயனேது ? பெயரே உண்மையென்று நம்பி மசூதிகளை, கோவில்களை, சர்சுகளை இடிப்பவர்களைத்தான் பார்த்துவருகிறோம். எல்லாம் ஒரே இறைவனின் வேறு பெயர்கள் என்று சொல்லுபவர் 10 லட்சத்தில் ஒருவர் இருப்பாரா ? பகுத்தறிவு சிந்திப்பதால் தான் இது போன்ற கேள்வியே வருகிறது. எல்லாம் ஒன்று என்று வெறும் தியரியாக சொல்வது வெறும் தியரிதான். மதவாதிகள் இதுவரை சாதித்து என்ன என்ற கேள்வி வரும் போது மதவாதிகளால் பதில் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் மதவாதிகள் இறைவனின் பெயரில் நடத்துவது அரசியல் தான் ஆன்மிகம் அல்ல.

முதலில் இந்த விவாதத்தை தனிப்பட்ட எந்த மதத்தையும் சார்ந்து நான் கொண்டு செல்ல விரும்பவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. மதம் வேறு ஆன்மிகம் வேறு. மதம் காட்டும் இறைவன் வேறு, உண்மையான பக்தியாயளர்களின் நம்பிக்கை உகந்த இறைவன் வேறு. மன அளவில் மதம் காட்டும் இறைவனைத்தான் மதப்பற்றாளர்கள் நம்புவார்கள்.


//இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ, கிறித்துவரோ, பகுத்தறிவாளர்களாக தமமைக் கூறிக் கொள்பவரோ, கருப்பரோ, வெள்ளையரோ, பிற்படுத்தப்பட்டவனோ, தாழ்த்தப்பட்டவரோ, தன்னை உயர்நதவனாக சொல்லிக் கொள்பவரோ, யாராக இருந்தாலும், குறிப்பிட்ட இனத்தாருக்கோ பிரிவாருக்கோ என்றில்லாமல் மனித சமூகம் முழுமைக்கும் இறைவன் ஒன்றுதான்.

இது நீங்கள் சொன்னதை விடவும் சிறப்பாக ஒன்று படுத்தவில்லை?//

ஒவ்வொருவரும் தனித்தனி பள்ளியின் மாணவர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் 'எங்களுக்கு நல்ல ஆசிரியர் இருக்கிறார்' என்று சொல்கிறார்கள். 'எங்களின் ஆசிரியரே சிறப்பானவர்' என்று சொல்லிக் கொண்டு பிற ஆசிரியர்கள் மீது எச்சில் துப்புகிறார்கள். இப்பொழுது சொல்ல முடியுமா ? எல்லா ஆசிரியர்களும் ஒருவரே என்று ? இறைமறுப்பாளனுக்கு மட்டும் இறை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவைகள் ஒன்று என்றே தெரியும். எல்லா ஆசிரியர்காளும் அடுத்த மாணவரின் ஆசிரியரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் சொல்லிக் கொடுக்காததால் எல்லா ஆசிரியரும் ஒரே ஆசிரியர் தான் என்று பகுத்தறிவாளன் சொல்லுவான். ஆசிரியரின் தவறோ மோசமான மாணவனின் தவறோ பாதிக்கபடுபர்கள் பிற ஆசிரியர்களும் பிற மாணவர்களும் தானே.

மேலேயே சொல்லி இருக்கிறேன். கேட்பதற்கு மட்டுமே நன்றாக இருக்கிறது. ரோஜாவை பலமதத்தினரும் எந்த பெயரில் இருந்தாலும் ஏற்றுக் கொள்வது போல் இறைவனின் பெயர்களை ஏற்றுக் கொள்வதில்லையே.

//அவனுக்குரிய தகுதி வல்லமைகளோடு இறைவனை நம்பி அவன் தடுத்ததிலிருந்து விடுபட்டு அவன் வகுத்தபடி வாழ்ந்து வருபவர் இறைவனுக்குள்ள அழகிய பற்பல பெயர்களில் எதைக் கொண்டாவது அழைத்து விட்டு போவதால் தவறேதுமில்லை. //

நான் இங்கே பலபெயர்கள் இருப்பது தவறு என்றே சொல்லவில்லை. இதுதான் உண்மை என்று சொல்வதையும், அதையே பிடித்துக் கொண்டு தொங்குவதையும், பிற மதத்தினரின் கடவுள்களைத் தூற்றுவதும். குறிப்பாக சிலை வழிபாட்டை கடுமையாக சாடும் மதங்கள் இருக்கிறதா இல்லையா ?


//மனிதன், சமூகம். நீங்கள், நான், இறைவன் இது போல எல்லா வார்த்தைகளும் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு மாதிரிதான் அழைக்கப்படுகின்றன. மொழியறிந்தவர் பொருளறிவர். இதிலென்ன ரோசாவுக்கு மட்டும் சிறப்பு.
'நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன' என்று (நபியே!) கூறுவீராக. அல் குர்ஆன் 17:110 //

இங்கும் கூட மறந்தும் அல்லாவும் (பல திருநாமத்தில் ஒன்றான) ஈஸ்வரனும் ஒன்று என்று உங்களால் சொல்ல முடியாமல் குர்ஆனைக் காட்டுகிறீர்கள். ஏனென்றால் இஸ்லாம் கொள்கைப் படி இணைவைத்தல் பெரும் குற்றமாகும் அது பெயரளவில் இருக்கும் ஒப்பீடாக இருந்தாலும் கூட, பிறகு ஏன் பிற மதத்தினர் தங்கள் இறைவனும், அதன் பெயரும் மட்டுமே உண்மை என்று கூறமாட்டர்கள் ? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது தானே உண்மை. நண்பராக இருக்கும் உங்களிடம் இதுபற்றி விவாதம் செய்யவும் விரும்பவில்லை. (வீண்) விவாதங்களை விட நட்பே பெரிதென்று எப்போதும் நினைப்பேன்.

Unknown சொன்னது…

//நண்பராக இருக்கும் உங்களிடம் இதுபற்றி விவாதம் செய்யவும் விரும்பவில்லை. (வீண்) விவாதங்களை விட நட்பே பெரிதென்று எப்போதும் நினைப்பேன்.//
உங்கள் கொள்கைகளை நான் அறிந்து கொள்ளவும் அதில் சிறப்பென்றால் நான் ஏற்றுக் கொள்வதும், என் கொள்கைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும் அதில்தான் சிறப்பென உங்களால் உணர முடிந்தால் ஏற்றுக் கொள்வதும் - என்ற பாதையில் விவாதம் இருந்தால் நல்லது தான் நண்பரே. இது நம் அன்பையும் நட்பையும் மேலும் வலுப்படுத்தவே செய்யும்.

வீணாக நீங்கள் பெரியவரா நான் பெரியவனா, உங்களுக்கு மிகச் சிறந்த வாதத் திறமையா எனக்குத்தான் கூடுதல் வாதத்திறமையா என்ற வெற்றுப் போட்டி மனப்பான்மைக்காக இருந்தால் அது பயனற்றது. அன்பை நட்பை முறிக்கக் கூடியது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்