இரண்டுமே உணர்வு பற்றிய சொல்தான். இரண்டிற்கும் என்ன பெரிய வேறுபாடு ? வானொலி கேட்ட போது இதுபற்றி சொன்னார்கள். சினம் உணர்ச்சி வசத்தில் ஏற்படுவதாம். வெறுப்பு ? அதுவும் உணர்ச்சிவசத்தில் ஏற்படுவதுதான். சினம் சட்டென்று செயலாற்றிவிடும், வெறுப்பு ? சமயம் கிடைக்கும் வரையில் அப்படியே அசைப் போட்டுக் கொண்டு இருக்குமாம். சினம் காலங்களால் ஆற்றப்படும். வெறுப்பு ஆறுவது கடினமாம். ஏற்படும் சினத்தினால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாவிட்டால் அது வெறுப்பாக மாறிக் கொண்டு இருக்கும்.
*******
பெரும்பாலும் கட்சிக்காரர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்கள் மீது வைத்திருப்பது வெறுப்பு சார்ந்த உணர்வே. அந்த மாற்றுக்கட்சித் தலைவரிடம் இவர்களுடைய சினத்தினால் ஒன்னும் செய்ய முடியாது என்பதால் வெறுப்பாகவே இருப்பார்கள். அவரைப் பற்றி மறந்தும் நல்லதாக நான்கு வார்த்தைப் பேசிவிடமாட்டார்கள். பொதுமக்களுக்கு ஒரு முதல்வர் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால் 5 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த வெறுப்பு தேர்தல் நேரத்து சினமாக மாறி வாக்குச் சீட்டில் வெளிப்பட்டுவிடும்.
குறிப்பிட்ட நடிகரின் தீவிர ரசிகர்களாக தனனை அறிவித்துக் கொள்பவர்கள் அவருக்கு மாற்றானவரிடம் எந்த அளவு வெறுப்பு வைக்கிறார்களோ அதுவேதான் தான் விரும்பும் நடிகரின் நேசத்திற்கான அளவுகோல் என்று நினைக்கிறார்கள். புதசெவி ? கமல் எவ்வளவு தான் சிறப்பாக நடித்திருந்தாலும் ரஜினியின் தீவிர ரசிகர்களின் ரசனைக்கு அது குப்பைதான். அதே போல் கமலின் தீவிர ரசிகர்களும் நினைப்பார்கள். கமல் - ரஜினி என்கிற நடிகர்களை எதிர் எதிர் போட்டி பிம்பங்களாக கற்பனை செய்து கொண்டு, ஒருவருக்கு கமல் பிடித்தது என்று அதற்காக சில காரணங்கள் கூட இருக்கும். அடுத்தது அவருக்கு ரஜினி ஏன் பிடிக்காது என்பதற்கு காரணமே இருக்காது. ஆனாலும் பிடிக்காது. கட்சித் தொண்டர்களும் இப்படித்தான். கொள்கை பிடித்து இருக்கிறது என்பதற்காக ஒரு தலைவரை பிடிக்கிறது என்று சொல்பவர்கள் எவரிடமும், ஏன் எதிர்கட்சித் தலைவரைப் பிடிக்கவில்லை என்பதற்கு மிகச் சரியானக் காரணம் எதுவும் இருக்க முடியாது, பொதுவாக சரியில்லை, பிடிக்கவில்லை என்பார்கள். கொள்கை ரீதியாக பிடித்திருக்கிறது என்று சொன்னாலும், அந்த கொள்கைக்கு மாற்றாக அந்த தலைவர் நடக்கும் போது அதனைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். காரணம் தலைமைக்குக் காட்டும் விசுவாசம். நீண்டகாலமாக ஒரு தலைவரை முதலில் கொள்கைக்காக பிடித்ததற்கும், தற்போதும் எதிர்கட்சித் தலைவரை காரணமின்றி வெறுப்பதற்கும் தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அமைவதே இல்லை. இவை காரணமின்றிய ஈர்ப்புகள் மற்றும் வெறுப்புகள்.
தன் இல்லத்துக்குள், நல்ல நண்பர்களுக்குள் சினம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றியோ, தள்ளிப் போட்டோ ஆற்றிக் கொள்வார்கள். அந்த சினம் தொடர்ந்து ஏற்படும் போதும் ஏதும் செய்ய முடியாது என்று நினைக்கும் போது வெறுப்பாக மாறும். வெறுப்பு ஏற்பட்டால் மணவிலக்கு, நட்பு முறிவு இவையே நடக்கும். சினம் சில நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்று, அவை வெறுப்பாக பரிணாமம் அடையும் போது ஒன்றுமே செய்ய முடியாது. சேர்வதற்கான வாய்பை ஏற்படுத்தித் தரும் மறுசிந்தனை என்பது சினத்தில் இருக்கும், வெறுப்பில் அதற்கான வாய்ப்பு மிக மிக அரிது.
தீவிர ரசிகர்கள் ஏன் எப்போதும் ஒரே நடிகரின் தீவிர ரசிகர்களாகவே இருக்கிறார்கள் ? அவருக்கு மாற்றான நடிகராக இருப்பவர் என்று பரவலாக பலரும் மாற்றாக ஒருவரை சொல்லும் போது இவர்களுக்கு அந்த மாற்று என்பது எதிர்ப்பு என்பதாகக் புரிந்து கொள்ளப்பட்டு, இவர்கள் பற்றுக்கு மாற்றான வெறுப்பை மாற்று நடிகர்கள் மீது கொள்கின்றனர்.
வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
37 கருத்துகள்:
நல்ல கட்டுரை கோவி.கண்ணன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முக்கியமாக
//நீண்டகாலமாக ஒரு தலைவரை முதலில் கொள்கைக்காக பிடித்ததற்கும், தற்போதும் எதிர்கட்சித் தலைவரை காரணமின்றி வெறுப்பதற்கும் தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அமைவதே இல்லை. இவை காரணமின்றிய ஈர்ப்புகள் மற்றும் வெறுப்புகள்.
//
அண்ணாச்சி ஆசிப் மொழியில் சொல்வதென்றால் "வாழ்க்கைப்பட்டவங்க" மனநிலை இது.
//வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும்//
உங்களோட சமீப குசேலன் பற்றிய இடுகைகளை அதற்க்கு உதாரணமா சொல்லலாம்.கும்மியாக கூறவில்லை, சீரியஸ் ஆக கூறுகிறேன்.
//
வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.
//
புரிஞ்சது.....
:)
ஆறுவது சினம் - ஆத்திசூடி - ஒளவையார்
வெறுப்பதை ஒதுக்கு - புதிய ஆத்திசூடி - கோவி.கண்ணன்
மிக நன்று
நன்றி
நல்ல பதிவு.
இதுபோல எழுத நீங்கள் ஒருத்தராவது மிச்சம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.
//வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.//
க்ளாஸ்.
// வெண்பூ said...
நல்ல கட்டுரை கோவி.கண்ணன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முக்கியமாக//
வெண்பூ,
பாராட்டுக்கு மிக்க நன்றி !
////நீண்டகாலமாக ஒரு தலைவரை முதலில் கொள்கைக்காக பிடித்ததற்கும், தற்போதும் எதிர்கட்சித் தலைவரை காரணமின்றி வெறுப்பதற்கும் தலைவர்களின் செயல்பாடுகள் காரணமாக அமைவதே இல்லை. இவை காரணமின்றிய ஈர்ப்புகள் மற்றும் வெறுப்புகள்.
////
அண்ணாச்சி ஆசிப் மொழியில் சொல்வதென்றால் "வாழ்க்கைப்பட்டவங்க" மனநிலை இது.
//
அதே அதே !
//கிரி said...
//வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும்//
உங்களோட சமீப குசேலன் பற்றிய இடுகைகளை அதற்க்கு உதாரணமா சொல்லலாம்.கும்மியாக கூறவில்லை, சீரியஸ் ஆக கூறுகிறேன்.
1:00 PM, August 06, 2008
//
கிரி ஐயா,
நானும் ஜெகதீசன் சரி யாருக்கும் ரசிகர் இல்லிங்கோ, கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிக்கிறோம். அம்புட்டுதான். நம்ம ஜேகே ரித்தீஸ் மீது யாருக்கு வெறுப்பு ? இருந்தாலும் கும்மி அடிப்பதில்லையா ?
ஐயா ஐயா,
பரிசல்காரன் சொல்றது போல நட்பு தான் முதன்மை, அந்த இடுகைகளால் உங்கள் மனம் புண்பட்டு இருக்கிறது அதனால் ஏற்பட்ட தங்களின் எங்கள் மீதான 'வெறிப்பின்' குறியீடாக - 'கும்மியாக கூறவில்லை, சீரியஸ் ஆக கூறுகிறேன்' என்று சொல்ல முடிகிறது. அது நட்பைக் கலங்கப்படுத்துவதாக நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும் !
நான் கும்மியாகச் இதைச் சொல்லவில்லை சீரியஸாகவே சொல்கிறேன்.
:)
//ஜெகதீசன் said...
//
வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.
//
புரிஞ்சது.....
:)
//
நானும் பயந்துட்டேன். எங்கே புரியவில்லை என்று விளக்கம் கேட்டு புதசெவி என்று சொல்லிவிடப் போகிறீர்கள் என்று !
// லக்கிலுக் said...
நல்ல பதிவு.
இதுபோல எழுத நீங்கள் ஒருத்தராவது மிச்சம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.//
லக்கி ஐயங்கார்,
'என்னங்கடா ஒருத்தனை மாத்தி ஒருத்தன் சொறிஞ்சிங்கிறிங்க...'
வெளியே பொகையிற வாசனை வருது, நான் உங்களுக்கு மறுமொழி போடவில்லை.
:)
*//வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும். சினத்தைவிட வெறுப்பே ஆபத்தானது ஏனென்றால் 'அவனை நினைச்சாலே...எனக்கு ஒடம்பெல்லாம் எரியுது...' என்பதாக தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு.//*
க்ளாஸ்.
1:26 PM, August 06, 2008
//
நன்றி நன்றி நன்றி !
ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அருமையான பதிவு.
மிகச் சிறப்பாய் சினம் வெறுப்பு இரண்டையும் கூர்ந்து நோக்கி, அருமையாக எழுதியுள்ளீர்கள்.
சுவாமி கண்ணாந்தா வின் சொற்பொழிவுகள் என்ற பெயரில் இவை தொகுத்து புத்தகமாக்கப்படும். பரிசல்காரர் பதிப்பகத்தில், குசும்பாணந்தாவின் முன்னுரையோடு லதானந்தா அவர்கள் இதை விரைவில் வெளியிடுவார்.
நானும் ரொம்ப சீரியஸா ஒரு பின்னூட்டம் பேட்டுட்டேன், கொஞ்சமாவது மொக்கை போடனும்ல,
//ஜோசப் பால்ராஜ் said...
ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அருமையான பதிவு.
மிகச் சிறப்பாய் சினம் வெறுப்பு இரண்டையும் கூர்ந்து நோக்கி, அருமையாக எழுதியுள்ளீர்கள்.
2:19 PM, August 06, 2008
//
பால்ராஜ்,
இதுபோன்ற ஒருபக்கக் கட்டுரைகளுக்கு முன்னோடியாக இருப்பவர் டி.பி.ஆர் ஜோசப். 2006ல் நூற்றுக்கணக்கில் எழுதினார். அதன் பிறகு அவர் குறைந்து விட்டது. இப்பொழுது எப்போதாவது அதுபோல் எழுதுகிறார். அவர் எழுதுவதைப் பார்த்து ஊக்கம் அடைந்து அதுபோன்ற சிந்தனைகளில் அவ்வப்போது நானும் எழுதுகிறேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி !
//
நானும் ஜெகதீசன் சரி யாருக்கும் ரசிகர் இல்லிங்கோ, கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிக்கிறோம். அம்புட்டுதான். நம்ம ஜேகே ரித்தீஸ் மீது யாருக்கு வெறுப்பு ? இருந்தாலும் கும்மி அடிப்பதில்லையா ?
//
என்ன ஏங்க சேர்த்துக்குறீங்க?
எனக்கும் ரஜினிக்கும் வரப்புத் தகராறு.. அதனால அவர் மேல இருக்குற வெறுப்புல தான் குசேலன் பத்தி எழுதுறேன்.... :P
வாழ்க சூப்பர்ஸ்டார்.... :)
//ஜெகதீசன் said...
என்ன ஏங்க சேர்த்துக்குறீங்க?
எனக்கும் ரஜினிக்கும் வரப்புத் தகராறு.. அதனால அவர் மேல இருக்குற வெறுப்புல தான் குசேலன் பத்தி எழுதுறேன்.... :P
வாழ்க சூப்பர்ஸ்டார்.... :)
2:41 PM, August 06, 2008 //
ஜெகதீசன் ஐயர்,
இது குசேலன் பற்றிய பதிவு அல்ல.
//நையாண்டி நைனா said...
ஆறுவது சினம் - ஆத்திசூடி - ஒளவையார்
வெறுப்பதை ஒதுக்கு - புதிய ஆத்திசூடி - கோவி.கண்ணன்
மிக நன்று
நன்றி
1:24 PM, August 06, 2008
//
நைனா,
வெறுப்பை ஒதுக்கச் சொல்லி நான் சொல்லவில்லை 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார்.
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, வெறுப்பை வெறுப்பால் அணைக்க முடியாது, வெறுப்பை வெறுப்பின்மையால் தான் தனிக்க முடியும்
நல்ல கட்டுரை கோவி.கண்ணன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
புரிஞ்சது.....
மிக நன்று.. நன்றி
நல்ல பதிவு.
இதுபோல எழுத நீங்கள் ஒருத்தராவது மிச்சம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.
ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அருமையான பதிவு.
me the FIRST!!!
// தன் மனதையே எப்போதும் கிளறிவிட்டுக் கொண்டு சோர்ந்து போகச் செய்யும் ஆற்றல் வெறுப்புக்கு உண்டு //
ரொம்பச்சரிங்க....
வெறுப்பு வர்றதுக்கு சினம் காரணம்
சினம் வர்றதுக்கு ?
எனக்கு இப்ப நீங்க கேட்ட வானொலி மேல இருக்கறது சினம். சாயங்காலம் அத தூக்கி போட்டு உடைக்கமுடியலனா வெறுப்பா மாறிடும்.
சரியா புரிஞ்சிகிட்டு இருக்கேனா ?
//நானும் ஜெகதீசன் சரி யாருக்கும் ரசிகர் இல்லிங்கோ, கூட்டத்தோடு சேர்ந்து கும்மி அடிக்கிறோம். //
நான் உங்களிடம் நீங்கள் எழுதிய பதிவை மட்டும் தானே கூறினேன்..நீங்க ஏன் அவரை கூட்டு சேர்க்கறீங்க பாவம். அவரிடம் நான் கேட்க வேண்டும் என்றால் நான் அவரிடமே கேட்க போகிறேன்..அவர் என்ன என்னை தவறாக நினைக்க போகிறார்.
கூட்டத்தோடு சேர்ந்து கும்மியடித்தால் அதற்க்கு பெயர் வெறுப்பில் செய்வது இல்லையா? பிரியத்துடன் செய்வதாக அர்த்தமா? ஒருத்தனா இருந்து கொன்றால் கொலை பலருடன் சேர்ந்து கொன்றால் அது கலவரம் என்று கூறுகிறீர்கள்.
//பரிசல்காரன் சொல்றது போல நட்பு தான் முதன்மை//
நான் அவ்வாறு உங்களை மற்றும் மற்றவர்களை நினைப்பதால் தான் என்னால் உங்களுடன் பேச முடிகிறது மற்றவர்கள் பதிவிற்கு சென்று பின்னூட்டம் போட முடிகிறது. நான் அப்படி தவறாக நினைத்தால் பாதி பதிவர் வலை தளமே போக மாட்டேன் ரஜினியை பற்றி அவசரப்பட்டு தரம் தாழ்ந்து எழுதிய பதிவால் (தரம் தாழ்ந்து எழுதப்பட்ட பதிவுகளை மட்டுமே கூறுகிறேன்)
//அந்த இடுகைகளால் உங்கள் மனம் புண்பட்டு இருக்கிறது அதனால் ஏற்பட்ட தங்களின் எங்கள் மீதான 'வெறிப்பின்' குறியீடாக - 'கும்மியாக கூறவில்லை, சீரியஸ் ஆக கூறுகிறேன்' என்று சொல்ல முடிகிறது//
அவ்வாறு அர்த்தம் இல்லை. நான் கூறினால் நீங்கள் வழக்கம் போல ரஜினி ரசிகன் என்கிற பார்வையிலேயே உங்கள் பின்னூட்டம் போடுவீர்கள், அதை தவிர்க்கவே இயல்பாக போடுங்க என்ற அர்த்தத்தில் கூறினேன்.
நான் உங்களை தவறாக நினைத்து இருப்பேன் என்று நீங்கள் நினைத்து இருந்தால் தயவு செய்து மாற்றி கொள்ளவும். நான் அவ்வாறான ஆள் கிடையாது. கருத்து வேறுபாடுகள் அனைவருக்கும் சகஜம் அதற்காக அவர் கூட பேச மாட்டேன் என்று கூறினால் உலகத்தில் பெரும்பாலானவர் கூட நண்பராக இருக்க முடியாது. எனக்கு கோபம் வரும் ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்து மற்றவர்கள் பதிவிற்கு போகாமல் இருக்க மாட்டேன், முடிந்த வரை இறங்கி தான் போவேன். தொடர்ந்து புறக்கணித்தால் அல்லது தன்மானத்தை இழக்கும் படி நடந்தால் திரும்பி கூட பார்க்க மாட்டேன், அது எவ்வளோ பெரிய ஆளாக இருந்தாலும். அன்புக்கு நான் அடிமை :-)
உங்களை நான் இது வரை தவறாக நினைத்தது இல்லை, இனிமேலும் அப்படி தான் இருக்கும் என்றே நம்புகிறேன்.
//valar said...
வெறுப்பு வர்றதுக்கு சினம் காரணம்
சினம் வர்றதுக்கு ?
4:08 PM, August 06, 2008
//
valar,
ஒருவருக்கு உடனே எதிர்செயலாற்ற தூண்டுதலாக இருப்பது எதுவும் குறிப்பாக அவரது மனதைக் காயப்படுத்துதல், அவரது எதிர்ப்பார்ப்பில் முட்டுக்கட்டைப் போடும் திடீர் தடை அவருக்கு ஏற்படும் சினத்துக்கான காரணமாக அமைந்துவிடும்.
சிலர் தம்மை பெரியாளாகக் நினைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் கூட எரிந்துவிழுவார்கள். அது தனிரகம்
//அவனும் அவளும் said...
எனக்கு இப்ப நீங்க கேட்ட வானொலி மேல இருக்கறது சினம். சாயங்காலம் அத தூக்கி போட்டு உடைக்கமுடியலனா வெறுப்பா மாறிடும்.
சரியா புரிஞ்சிகிட்டு இருக்கேனா ?
4:14 PM, August 06, 2008
//
ஏன் இந்த கொல வெறி ?
சிங்கை வானொலி தூக்கிப் போட்டு உடைக்கும் அளவுக்கு மட்டமானவ நிகழ்ச்சிகள் படைப்பது இல்லை.
//விஜய் ஆனந்த் said...
me the FIRST!!!
3:05 PM, August 06, 2008
//
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆள் பிடிக்கிறார்களாம். ஒழிந்து கொள்ளுங்கள் !
//பரிசல்காரன் said...
நல்ல கட்டுரை கோவி.கண்ணன்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
புரிஞ்சது.....
மிக நன்று.. நன்றி
நல்ல பதிவு.
இதுபோல எழுத நீங்கள் ஒருத்தராவது மிச்சம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.
ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட அருமையான பதிவு.
3:01 PM, August 06, 2008
//
எல்லா பாராட்டுக்கும் சேர்த்து மொத்தமாக நன்றி !
சில சமயம் நீங்கள் போடும் நீண்ட பின்னூட்டத்திற்க்கு 'நன்றி' என்று ஒற்றைச் சொல்லில் மறுமொழி இட்டால் உங்களுக்கு சினம் வருமா ? வெறுப்பு வருமா ?
'சின்ன மறுமொழிக்கு இடுவதற்குக் காரணமாக நேரமின்மையும் கூட காரணம் இருக்கலாம்' இது போன்ற சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சினமோ, வெறுப்பே வரவழைத்துக் கொள்ளக் கூடாது. :)))))
இயலாமை ஒரு காரணம் என்று கேள்வி பட்டிருக்கிறேன்
னக்கு இப்ப நீங்க கேட்ட வானொலி மேல இருக்கறது சினம். சாயங்காலம் அத தூக்கி போட்டு உடைக்கமுடியலனா வெறுப்பா மாறிடும்.
சிங்கை வானொலியில் அருமையான தமிழில் தொகுப்பார்கள்
என்று கேள்வி பட்டிருக்கிறேன்
நீங்க என்னன்னா வானொலி பெட்டியை உதாரணத்துக்கு ?
//valar said...
இயலாமை ஒரு காரணம் என்று கேள்வி பட்டிருக்கிறேன்
4:33 PM, August 06, 2008
//
மிகச் சரிதான், 'எதுவும் செய்ய முடியாத போது' என்று இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
மிக்க நன்றி.
//கிரி said...
நான் உங்களிடம் நீங்கள் எழுதிய பதிவை மட்டும் தானே கூறினேன்..நீங்க ஏன் அவரை கூட்டு சேர்க்கறீங்க பாவம். அவரிடம் நான் கேட்க வேண்டும் என்றால் நான் அவரிடமே கேட்க போகிறேன்..அவர் என்ன என்னை தவறாக நினைக்க போகிறார்.
.......
//
நீண்ட தன்னிலை விளக்கம் தவிர்ப்போம். :) புரிந்துணர்வு இல்லாதவர்களுக்குத்தான் அவை தேவைப்படும்.
நானும் முன்பு இதுபோல் நீண்ட விளக்கம் கொடுப்பேன். அப்பறம் சில நண்பர்கள் கடிந்து கொண்டார்கள். இப்போதெல்லாம் செய்வதில்லை.
நல்ல மனசுக்காரர்கள் , 'யார் மனதையாவது காயப்படுத்துவிட்டோமா ?' என மனசு கேட்காமல் நீண்ட விளக்கம் எழுதுவார்கள்.
:)
டிபிசிடி பின்னூட்டம் போட்டு...'யோவ் இங்கன என்ன துக்கமா நடக்குது?' ன்னு கேட்பார். கோபக்காரர் ! :))
அருமையான திறனாய்வு ஜி.கே.
//சுல்தான் said...
அருமையான திறனாய்வு ஜி.கே.
4:55 PM, August 06, 2008
//
சுல்தான் ஐயா,
பாராட்டுக்கு மிக்க நன்றி !
இதையும் இரயிலில் பயணிக்கும் போதுதான் யோசித்தீரோ?
அருமையான பதிவு.
அடுத்து மதிப்பு..மரியாதை ..பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
// கோவி.கண்ணன் said...
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆள் பிடிக்கிறார்களாம். ஒழிந்து கொள்ளுங்கள் ! //
என்னண்ணே, என்னிய ஒழிஞ்சு போன்னுட்டீங்க???? :-)))....
//விஜய் ஆனந்த் said...
// கோவி.கண்ணன் said...
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஆள் பிடிக்கிறார்களாம். ஒழிந்து கொள்ளுங்கள் ! //
என்னண்ணே, என்னிய ஒழிஞ்சு போன்னுட்டீங்க???? :-)))....
//
விஜய்,
ஒ'ளி'ந்து கொள்ளுங்கள் என்று இருக்க வேண்டும். I mean Hide ! 'ளி' க்கு பதிலாக 'ழி' போட்டுவிட்டேன். வெர்ரி சாரி !
:)
//kanchana Radhakrishnan said...
இதையும் இரயிலில் பயணிக்கும் போதுதான் யோசித்தீரோ?
அருமையான பதிவு.
அடுத்து மதிப்பு..மரியாதை ..பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
6:01 PM, August 06, 2008
//
ராதாகிருஷ்ணன் ஐயா,
இல்லை, இது அலுவலகத்தில் வேலை இல்லாமல் இருக்கும் போது விரைவு விரைவாக எழுதியது. மதிப்பு - மரியாதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். நாளைக்கு கிட்டதட்ட அதை ஒட்டிய ஒரு பதிவு வரும். :)
//வெறுப்புக்குள் சினம் எப்போதும் வெதுவெதுப்பாக தூங்கிக் கொண்டே இருக்கும், அதற்கு சரியான சமயம் வாய்க்கும் போது எழுந்தாடிவிட்டு திரும்பவும் வெறுப்புக்குள் சென்றுவிடும். ஒருவர் மீது தன் சினம் செல்லுபடியாகாது என்று தெரிந்துவிட்டால் வெறுப்பு அங்கே குடியேறிவிடும்//
ரொம்ப நல்ல கருத்துக்கள்
கருத்துரையிடுக