பின்பற்றுபவர்கள்

3 ஆகஸ்ட், 2008

சிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் !

சரியாக மாலை 4 மணிக்கு சந்திக்கும் இடத்தை அடைந்துவிட்டேன். அதற்கும் முன்பே கிரி மற்றும் ஜெகதீசன் வந்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தினார்கள். 4.05க்கு 'ஜோ' அழைத்து அருகில் நூலகத்தில் காத்திருப்பதாகச் சொன்னார். அங்கு சென்றேன். அவரும் நானும் சந்திப்பின் இடம் நோக்கிச் செல்லும் போதே ஜெகதீசன், கிரி அங்குவந்துவிட்டார்கள்.

சந்திப்பு நடந்த இடம் மருதமலைக் கோவில் உச்சி போன்று படிக்கட்டுகளில் ஏறிச்சென்று அடையக் கூடிய இடம், நாங்கள் நால்வரும் படி ஏறியதும் மூச்சு வாங்கியது, இடையிடையே மற்ற பதிவர் நண்பர்கள் வருகையை உறுதிப்படுத்தினார்கள்.

4.30 வாக்கில் பதிவர் முகவை மைந்தன் (இராம்) மற்றும் அகரம் அமுதன் வந்துவிட்டார்கள். சிறிது நேரத்தில் அதிரடியாக ஜோசப் பால்ராஜ் மழித்த(ஷேவ் செய்த) முகத்துடன் பளபளப்பாக வந்தார்.

(ஜோசப் பால்ராஜ்)

அவரை சென்றவாரம் நான் சந்தித்த போது தாடி வைத்திருந்தார். அவர் தானா இவர் ? என நினைக்கும் படி படு அசத்தலாக (ஸ்மார்டாக) இருந்தார். மனைவி ஊருக்குப் போய் இருக்கிறார் என்பதை ஆரம்பத்தில் தாடி வைத்து சோகமாக வெளியுலகுக்குக் காட்டிவிட்டு, பிறகு 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டாள்..' என்று மழித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நுட்பம் (டெக்னிக்) போல.

அங்கேயே பேச்சு சுவையார்வம் கூடிக் கொண்டே சென்றது, விவசாயம் பற்றி அதன் கடின - நட்டங்களை (கஷ்ட நஷ்டங்களை) பால்ராஜ் சொல்ல சொல்ல மிகவும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார் ஜோ. இடையே பதிவர் பரிசல்காரன் இந்தியாவில் இருந்து அழைத்து அனைவருக்கும் நண்பர் நன்நாள் வாழ்த்தையும், பதிவர் சந்திப்புக்கான வாழ்த்தையும் தெரிவித்தார்.

பேச்சில் நகைச்சுவைக்காக குசேலனையும் கிரியையும் கொத்து புராட்டா போட, கிரி 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்' என்பதாக மன உறுதியைக் கடைபிடித்தார். இடையே சிங்கை நாதன் மற்றும் வடுவூரார் அழைத்து சந்திப்பின் இடத்தின் அருகில் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். அழைத்துவரச் சென்றேன். 'அம்மாடியோவ்....என்னால மலையேற முடியாது...அவர்களை கீழே அழையுங்கள்' என்றார். அங்கு அருகில் அழகான புல் தரை சற்று உயரமான இடத்தில் இருக்க அங்கேயே அமர்ந்துவிட்டு மேலே இருந்தவர்களை இறங்கிவரச் சொன்னோம். வந்தார்கள்.

சிறிது நேரத்தில் பதிவர் LL தாஸ் வந்தார், அதன் பிறகு வலைப்பதிவு வாசகர் திரு பாஸ்கர் வந்திருந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பரவலாக வலைப்பதிவுகளை வாசிப்பவராம். எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப் படுத்தி வைத்தோம். மணி மாலை 6ஐ நெருங்கியது, அதன் பிறகு சந்திப்பை மேலும் சுவையானதாக்கியது ஜெகதீசன் கொண்டு வந்திருந்த போண்டா - புதினா சட்னி, நான் கொண்டு சென்ற வாழைக்காய் பஜ்ஜி - கத்திரிக்காய் சட்டினி, சிங்கை (செந்தில்) நாதன் கொண்டு வந்திருந்த பிட்ரூட் அல்வா, கேரட் அல்வா, மிக்சர் ஆகிய சிற்றுண்டி வகைகள்.


(ஜோசப் பால்ராஜ், ஜோ, வாசகர் (பாஸ்கர்), தாஸ், அகரம் அமுதன், இராம்)

சுனாமி - கடற்கரை உள்வாங்குவது, கடல் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி ஜோ பேசினார், கத்தோலிக்க கிறிதுவத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பால்ராஜ், ஜோ மற்றும் தாஸ் மூவரும் இராம் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள். விகடனில் லக்கி லுக் எழுதுவது பற்றியெல்லாம் பேச்சு வந்தது. அகரம் அமுதன் தூயதமிழில் பேசி அசத்தினார். கொஞ்சம் மேடைப்பேச்சு சாயலில் இருந்தது, தேவநேய பாவாணரின் தீவிர பற்றாளர், தமிழ் இலக்கியங்களை முற்றிலும் மீட்டெடுக்க வேண்டும், தமிழின் தொன்மையையும், பெருமையையும் நிலைநாட்ட முயலவேண்டும், தான் ஒரு இலக்கியவாதி என்ற அடையாளத்துடன் வாழந்து மறைய விரும்புதாகச் சொன்னார்.

மணி மாலை 7 ஐ நெருங்கும் போது பாரி.அரசு எகிறி குதித்து வந்து சேர்ந்தார். அந்த நேரத்தில் நிழல்படக் கருவியை ஆயத்தமாக வைத்திருக்காததால் அந்த காட்சியை படம் எடுக்க முடியவில்லை :) பாரி.அரசு வந்ததும் பேச்சு சமூகம், அரசியல் பற்றிச் சென்றது.

(பாரி.அரசு, அகரம் அமுதன், இராம்)

"தலைவனுக்கும், தலைமைக்கும் என்ன வேறுபாடு என்ற பின்னவீனத்துவ பதிவர்கள் பதில் எழுதக் கூடிய கேள்வியைக் கேட்டு வைத்து, அதற்கு விளக்கமும் சொன்னார், 'வெளங்குன மாதிரிதான்' என ஜெகதீசன் அவர் காதில் விழுவது போலவே கிண்டல் அடித்தார் :)

பதிவர் சந்திப்பில் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

1. பதிவர்களில் 'தலை' என்று எவரும் கிடையாது, வேண்டுமென்றால் ஒருங்கிணைப்பாளர் அல்லது ஏற்பாட்டாளர் என்றே இன்று முதல் சொல்லிக் கொள்ளலாம் என்று ஒருமனதாக தீர்மானம் போடப்பட்டது

2. தற்பொழுது உதவி தேவைப்படும் ஒரு பதிவர் இருக்கிறார், அவருக்கு மிகத் தேவையான ஒன்றை பதிவர்களுடன் கலந்து ஆலோசித்து, முடிந்த பொருள் உதவிகளைப் பெற்று, அதை வாங்கித் தருவது என்ற இரண்டாவது தீர்மானம். அந்த பதிவர் யார் அவருக்கு என்ன உதவி தேவைப்பட்டது என்பதை உதவி செய்துவிட்டு தெரிவிப்போம். தற்பொழுது அதை வெளியே சொல்வதை அவர் மீது தேவையற்ற இரக்கத்தைத் ஏற்படுத்தி அவருக்கு கூச்சத்தை ஏற்படுத்திவிடும். இதுபற்றி பாலபாரதி மற்றும் லக்கிலுக்குடன் கலந்து ஆலோசிக்கப்படும், அதற்கான தொடர்புகளையும், செயல்படுத்தும் ஏற்பாடுகளையும் நிதி திரட்டலையும் பதிவர் பால்ராஜ் ஏற்றுக் கொள்கிறார்.

3. கலந்து கொண்ட பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவரும் 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்டம் நிபந்தனையின்றி போடவேண்டும்.

4. அடுத்த சந்திப்பு சிங்கைநாதன் செந்தில் ஏற்பாட்டில் சிங்கை மேற்குப்பகுதியான இயற்கை எழில் சூழ்ந்த புக்கிட்கொம்பாவில் நடைபெறும். அதற்கான அறிவிப்பு தேதி முடிவு செய்தபிறகு பால்ராஜ் அறிவிப்பார்.


(இராம், ஜெகதீசன், வடுவூர்குமார், சிங்கைநாதன் செந்தில், கிரி,பால்ராஜ் மற்றும் ஜோ)

சந்திப்பில் கிரி அடக்கியே வாசித்தார், குசேலன் மற்றும் அவருடைய தலைவரின் அண்மைய பேச்சுக்கள் அவருடைய வாயைக் கட்டிப் போட்டு இருந்தது. 'நெலம சரியில்லை பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதால் அமைதியாக இருக்கிறேன், கிளறிவிடாதீர்கள்' என்று என்னிடம் மெதுவாக கிசுகிசுத்தார். அடுத்த சந்திப்புக்கு 'டா...ட்...டா' சொல்லிவிடப் போகிறார் என்பதால் நானும் ஜெகதீசனும் கிரிக்கு பாதுகாப்பு வளையம் அமைத்தோம்.

வடுவூர் குமாரின் கடன் அட்டைகள், ஐசி மற்றும் பர்ஸ் ஆகியவை எங்கோ தொலைந்துவிட்டது என்பது பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் போதுதான் தெரிந்ததாம். வருத்தம் அடைந்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர் மிகுந்து பேசாமல் இருந்ததற்கு அதுவே காரணம் என்று நினைக்கிறேன். திரும்ப அவற்றையெல்லாம் பெற சொலவும் ஆகும், முன்பே அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டு இருந்தது, இந்த முறை ஐசியை புதிதாக பெற இருமடங்கு கேட்பார்கள் என்றார்.

சென்ற சந்திப்பில் பேசிய களைப்பினால் சிங்கைநாதன் இந்த முறை புதியவர்களுக்கு வாய்பளித்தார் :) மொத்தம் என்னுடன் சேர்த்து 12 பேர் கலந்து கொண்டோம். நேரம் சென்றதே தெரியவில்லை.மாலை 7.30 ஆகி இருந்தது கொஞ்சம் வெளிச்சம் குறைய சந்திப்பு நிறைவுக்கு வந்தது. அங்கேயே குமார் விடைபெற விடைகொடுத்தோம்.

கோவை சந்திப்பின் போது கிரியை சந்தித்த பரிசல்காரன் (கிருஷ்ணா) எனக்கு கொடுத்து அனுப்பிய அன்புப் பரிசு ஒன்றை மறக்காமல் கொண்டு வந்து கொடுத்தார் கிரி. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பரிசல்காரன் மற்றும் கிரிக்கு எனது நன்றி.



(பால்ராஜ், ஜோ, சிங்கை நாதன் செந்தில்)

(பாரி.அரசு,பால்ராஜ்,தாஸ்,பாஸ்கர்,அகரம்.அமுதன்)

(பாஸ்கர்,அகரம்.அமுதன்,கோவி.கண்ணன்,கிரி)

மீதம் 11 பேர் அருகில் இருந்த உணவுத் தொகுதிக்குச் சென்று காஃபியை வரவழைத்து குடித்துக் கொண்டே பாரி.அரசு - அகரம் அமுதன் ஆகியவர்களின் தமிழ் குறித்தான காரசார சொற்போர்(விவாதம்) தொடங்கியது. சொற்போரின் ஒலி மிக மிக, அதற்க்கும் மேல் அங்கிருப்பது பிறருக்கும் தொல்லையாக இருக்கும் என்று இரவு 9.00 மணிக்கு விடைபெற கிளம்பினோம். அதன்பிறகு பதிவர் புதுகை அப்துல்லா பால்ராஜை தொலைபேசியில் அழைத்து அனைவருக்கும் நண்பர் நன்நாள் வாழ்தைச் சொல்லி பேசினார்.

நேற்று வெளியிட்ட பதிவர் சந்திப்பு நினைவூட்டல் இடுகையின் நிகழ்ச்சி நிரலில் குறிந்திருந்த அறிவிப்பின் படி 'பதிவர் சந்திப்பு நடத்துவது தேவையா ?' என்ற மொக்கை கேள்வி கேட்ட இராமுக்கு 'பதிவர் குசும்பன் விருது'ம் , சந்திப்பில் மிகுந்து பேசியவர் என்பதால் பால்ராஜ் அவர்களுக்கு 'பதிவர் சுப்பையா விருது'ம் கொடுக்கப்பட்டது. குசேலேன் பற்றி மட்டுமே எழுதப்பட்ட வகைகளில் கடைசியாக எழுதி வைத்திருக்கும் தனது ஆறாவது இடுகையை வெளியிடப் போவதில்லை என்று ஜெகதீசன் அதிரடியாக தெரிவிக்க... 'அப்படியென்றால் எழுதப்பட்ட குசேலன் விமர்சன பதிவை நாளையே நான் வெளிவிட நேரம் கூடி வந்துவிட்டது' என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் கிரி.

பதிவர் மாநாட்டில் விடுபட்ட மற்ற துளிகளை பதிவர் ஜோசப். பால்ராஜ் எழுதுவார்.

நண்பர் நன்நாள் (03 ஆகஸ்ட்) அன்று சிங்கைப் பதிவர்கள் ஒருவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தது, அந்நாளுக்கு மிகவும் பொருத்தமான நிகழ்வாக அமைந்தது.

56 கருத்துகள்:

TBCD சொன்னது…

சிங்கையில் பதிவர் சோதி அரங்கேற்றம்..

வாழ்க..!! வளர்க !!

ஃஃஃஃஃ

நிழற்படங்களில் யார் யார் என்று பெயரைப் போட்டு விடுங்க..

பாரி, ஜெகதீசன், கோவி தவிர ஒருவரையும் அடையாளம் தெரியவில்லை...

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
சிங்கையில் பதிவர் சோதி அரங்கேற்றம்..

வாழ்க..!! வளர்க !!

ஃஃஃஃஃ

நிழற்படங்களில் யார் யார் என்று பெயரைப் போட்டு விடுங்க..

பாரி, ஜெகதீசன், கோவி தவிர ஒருவரையும் அடையாளம் தெரியவில்லை...

12:45 AM, August 04, 2008
//

நிறைவேற்றியாகிவிட்டது அன்பு தம்பியே !

:)

நன்றி !

முரளிகண்ணன் சொன்னது…

மீ த பர்ஸ்ட் தீர்மானமமெல்லாம் கொஞ்சம் ஒவர்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
மீ த பர்ஸ்ட் தீர்மானமமெல்லாம் கொஞ்சம் ஒவர்
//


முரளிகண்ணன்,
அது பால்ராஜின் அறிவுறுத்தல் ! அவரை போட்டு தாக்குங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
:)
//

நண்பர் நன்நாள் வாழ்த்துகள் !

Athisha சொன்னது…

நண்பர்கள் தினத்தில் நச்னு ஒரு பதிவர் சந்திப்புக்கு அச்சாரமிட்ட

அண்ணன் ''தல'' கோவி அவர்கள் வாழ்க

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

\\
சந்திப்பு நடந்த இடம் மருதமலைக் கோவில் உச்சி போன்று படிக்கட்டுகளில் ஏறிச்சென்று அடையக் கூடிய இடம், நாங்கள் நால்வரும் படி ஏறியதும் மூச்சு வாங்கியது,, \\

;-)))

அண்ணே உங்களுக்கு வயசாயிருச்சோ

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கடைசி நேரத்தில் எகிறிகுதித்து வந்து, என்னை விட அதிகமாக பேசிய பட்டுக்கோட்டை பாரி.அரசுக்கு சுப்பையா ஆசான் விருதை அளிக்கிறேன்.

G.Ragavan சொன்னது…

சிங்கைச் சந்திப்பை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

நீங்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டு இளநீர் குடித்ததைப் பற்றி ஏன் சொல்லவில்லை? :D

manikandan சொன்னது…

*********நீங்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டு இளநீர் குடித்ததைப் பற்றி ஏன் சொல்லவில்லை? *********

இந்த மாதிரியான censorshipai வன்மையாக கண்டிக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

எப்படியோ எல்லாரையும் 'மலை ஏற' வச்சுட்டானா முருகன்? :-))))

போண்டா & பஜ்ஜி எல்லாம் ஆறிப் போயிருக்குமே.........

இப்படிப்பட்டச் சந்திப்பு அடிக்கடி நடத்தணும். அப்பத்தான் நமக்குள்ளே நல்ல ஒரு புரிதல். நட்பு எல்லாம் இன்னும் அதிகமாக இருக்கும்.

கலந்துக்கிட்ட அனைவருக்கும் நியூஸிக் கிளையின் சார்பில் அன்பும் பாராட்டுகளும்.

-L-L-D-a-s-u சொன்னது…

Me the twelfth

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
நண்பர்கள் தினத்தில் நச்னு ஒரு பதிவர் சந்திப்புக்கு அச்சாரமிட்ட

அண்ணன் ''தல'' கோவி அவர்கள் வாழ்க

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

\\
சந்திப்பு நடந்த இடம் மருதமலைக் கோவில் உச்சி போன்று படிக்கட்டுகளில் ஏறிச்சென்று அடையக் கூடிய இடம், நாங்கள் நால்வரும் படி ஏறியதும் மூச்சு வாங்கியது,, \\

;-)))

அண்ணே உங்களுக்கு வயசாயிருச்சோ
//

அதிஷா,

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி !

அண்ணே உங்களுக்கு வயசாயிருச்சோ - தாடி, மீசை நரைத்தால் ஆகுமோ ? இன்னும் அப்படி எதுவும் நடக்கவில்லை !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
கடைசி நேரத்தில் எகிறிகுதித்து வந்து, என்னை விட அதிகமாக பேசிய பட்டுக்கோட்டை பாரி.அரசுக்கு சுப்பையா ஆசான் விருதை அளிக்கிறேன்.

2:22 AM, August 04, 2008
//

கூடாது கூடாது, நீங்கதான் பேசியது மிகுதி, சின்ன ரஜினி கிரி சொல்லட்டும் விருது மாற்றிக் கொடுப்பது பற்றி பரிசீலனை செய்வோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
சிங்கைச் சந்திப்பை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

நீங்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டு இளநீர் குடித்ததைப் பற்றி ஏன் சொல்லவில்லை? :D

3:07 AM, August 04, 2008
//

பாராட்டுக்கு வாழ்த்துகள் ஜிரா,

கிடைக்கல அந்த இளநீர் கிடைக்கல. புலிப்பாலுக்குக் கூட யாரும் ஆசைப்படல, சந்திப்பு முடிந்து வீட்டுக்கு போகனுமே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
எப்படியோ எல்லாரையும் 'மலை ஏற' வச்சுட்டானா முருகன்? :-))))//

துளசி அம்மா,
மலை ஏறவைத்தது முருகன் இல்லை, கோபால கிருஷ்ணன் அதாவது கண்ணன். :)

//போண்டா & பஜ்ஜி எல்லாம் ஆறிப் போயிருக்குமே.........//
சட்னி காரமாக (ஹாட்) இருந்ததால் சூடு இல்லாவிட்டாலும் சாப்பிட முடிந்தது.

//இப்படிப்பட்டச் சந்திப்பு அடிக்கடி நடத்தணும். அப்பத்தான் நமக்குள்ளே நல்ல ஒரு புரிதல். நட்பு எல்லாம் இன்னும் அதிகமாக இருக்கும்.//

சரியாகச் சொன்னீர்கள், இதுபோல சந்திப்பு நடத்திவந்தாலே பதிவர்களுக்கிடையே தனிப்பட்ட பகைமை வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் நல்ல புரிந்துணர்வைக் கொடுக்கும். மாமனா மச்சானா பங்காளியா ஏன் அடித்துக் கொள்கிறார்களோ ! மூளைச் செல்லில் சேமிப்பில் அதையெல்லாம் நினைவாக வைத்திருக்கிறார்களோ ! -இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை, பதிவர் சந்திப்புகளால் ஒற்றுமையை வளர்க்க முடியும்.

//கலந்துக்கிட்ட அனைவருக்கும் நியூஸிக் கிளையின் சார்பில் அன்பும் பாராட்டுகளும்.

4:49 AM, August 04, 2008
//

மிக்க நன்றி. உங்களுக்கும் ஐயாவுக்கும், ஜிகேவுக்கும் நண்பர்கள் நன்நாள் வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//-L-L-D-a-s-u said...
Me the twelfth
//

தாஸ்,
சந்திப்பின் தீர்மானத்தை முதன் முதலில் நிறைவேற்றிய செயல்வீரர் என்ற பெருமை உங்களையே சாரும். !

ஜோ/Joe சொன்னது…

மகிழ்ச்சியான சந்திப்பு..படங்களுக்கு நன்றி!

ஜெகதீசன் சொன்னது…

me the 19th

கிரி சொன்னது…

//பிறகு 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டாள்..' என்று மழித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நுட்பம் (டெக்னிக்) போல//

ஹி ஹி ஹி

//அந்த நேரத்தில் நிழல்படக் கருவியை ஆயத்தமாக வைத்திருக்காததால் அந்த காட்சியை படம் எடுக்க முடியவில்லை //

ஹா ஹா

//'நெலம சரியில்லை பேசி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதால் அமைதியாக இருக்கிறேன், கிளறிவிடாதீர்கள்' //

//அடுத்த சந்திப்புக்கு 'டா...ட்...டா' சொல்லிவிடப் போகிறார் என்பதால் நானும் ஜெகதீசனும் கிரிக்கு பாதுகாப்பு வளையம் அமைத்தோம்.//

ஹா ஹா இது அண்ட புளுகு :-)))

//வருத்தம் அடைந்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர் மிகுந்து பேசாமல் இருந்ததற்கு அதுவே காரணம் என்று நினைக்கிறேன்//

அய்யயோ அப்படியா..:-( நானும் அப்படியே நினைக்கிறேன்

//சொற்போரின் ஒலி மிக மிக, அதற்க்கும் மேல் அங்கிருப்பது பிறருக்கும் தொல்லையாக இருக்கும் //

:-)))))))))))))

// 'அப்படியென்றால் எழுதப்பட்ட குசேலன் விமர்சன பதிவை நாளையே நான் வெளிவிட நேரம் கூடி வந்துவிட்டது' என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் கிரி.//

இதை வன்மையாக கண்டிக்கிறேன் ..நான் அதற்க்கு முன்னாடியே உங்கள் பதிவில் கூறி விட்டேன்..:-)

//நண்பர் நன்நாள் (03 ஆகஸ்ட்) அன்று சிங்கைப் பதிவர்கள் ஒருவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்தது, அந்நாளுக்கு மிகவும் பொருத்தமான நிகழ்வாக அமைந்தது.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

//கூடாது கூடாது, நீங்கதான் பேசியது மிகுதி, சின்ன ரஜினி கிரி சொல்லட்டும் விருது மாற்றிக் கொடுப்பது பற்றி பரிசீலனை செய்வோம்.//

கோவி கண்ணன் ஐயா இருக்கும் போது வால் ஆடலாமா (நீங்க தான் தலைன்னு சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டீங்களே) :-))))

இந்த அருமையான சந்திப்பை ஏற்பாடு செய்த ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி கண்ணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

...ஜெகதீசன் கொண்டு வந்திருந்த போண்டா - புதினா சட்னி, நான் கொண்டு சென்ற வாழைக்காய் பஜ்ஜி - கத்திரிக்காய் சட்டினி, சிங்கை (செந்தில்) நாதன் கொண்டு வந்திருந்த பிட்ரூட் அல்வா, கேரட் அல்வா, மிக்சர் ஆகிய சிற்றுண்டி வகைகள்.....


இதில் என்னிடம் ஆறிப்போன போண்டாவை தவிர வேறெதையும் என் கண்ணில் காட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்! :)

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

:)

அன்புடன்
சிங்கை நாதன்

விஜய் ஆனந்த் சொன்னது…

அடடா...miss பண்ணிட்டனே..:-(((....

// 3. கலந்து கொண்ட பதிவர்களுக்கு ஒவ்வொரு பதிவரும் 'மீ த பர்ஸ்ட்' பின்னூட்டம் நிபந்தனையின்றி போடவேண்டும். //

கொஞ்சம் லேட்டாயிடுச்சு...அடுத்து கரெக்டா போட்டுடறேன்...இங்க "மீ த லாஷ்ட்டு"...சாரிங்கோவ்...

குறிப்பு :
// ஜெகதீசன் கொண்டு வந்திருந்த போண்டா - புதினா சட்னி, நான் கொண்டு சென்ற வாழைக்காய் பஜ்ஜி - கத்திரிக்காய் சட்டினி, சிங்கை (செந்தில்) நாதன் கொண்டு வந்திருந்த பிட்ரூட் அல்வா, கேரட் அல்வா, மிக்சர் ஆகிய சிற்றுண்டி வகைகள். //

"miss பண்ணிட்டனே.." என்றது கண்டிப்பாக இவற்றை அல்ல!!!

Thamira சொன்னது…

அருமையாக நிகழ்ந்த பதிவர் சந்திப்புக்கு எனது வழ்த்துக்கள்.!

//சுனாமி - கடற்கரை உள்வாங்குவது, கடல் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி ஜோ பேசினார், கத்தோலிக்க கிறிதுவத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி பால்ராஜ், ஜோ மற்றும் தாஸ் மூவரும் இராம் அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னார்கள்//
என்னங்க இது பதிவர் சந்திப்புக்கு வந்தால் இப்படி ஏதாச்சும் சொற்பொழிவாற்றணுமா? (எஸ்கேகேகேப்)

பாரி அரசு : //இதில் என்னிடம் ஆறிப்போன போண்டாவை தவிர வேறெதையும் என் கண்ணில் காட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்! :)//
எங்க போனாலும் என‌க்கும் இப்படித்தான் ஆகிவிடுகிறது அரசு!

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
...ஜெகதீசன் கொண்டு வந்திருந்த போண்டா - புதினா சட்னி, நான் கொண்டு சென்ற வாழைக்காய் பஜ்ஜி - கத்திரிக்காய் சட்டினி, சிங்கை (செந்தில்) நாதன் கொண்டு வந்திருந்த பிட்ரூட் அல்வா, கேரட் அல்வா, மிக்சர் ஆகிய சிற்றுண்டி வகைகள்.....


இதில் என்னிடம் ஆறிப்போன போண்டாவை தவிர வேறெதையும் என் கண்ணில் காட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்! :)

10:08 AM, August 04, 2008
//

பந்திக்கு முந்து என்கிற பழமொழி கேள்விப்பட்டதே இல்லையா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//singainathan said...
:)

அன்புடன்
சிங்கை நாதன்
//

அடுத்து புக்கிட்கொம்பா உங்க ஏரியாவில் தானே. எப்போது ஏற்பாடு செய்யப் போகிறீர்கள் ?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நான் தான் விருது வழங்கனும்னு உங்களோட அழைப்பிதழ் பதிவுல சொல்லியிருக்கீங்க, கொடுக்குறவனே எடுத்துக்க கூடாதுல்ல, அதோட பாரி.அரசு பாருங்க, ஆறிப்போன போண்டா மட்டும்தான் எனக்கு கிடைச்சுச்சுனு ரொம்ப ஆதங்கப்படுறாரு. எனவே விருதையாவது அவருக்கு கொடுத்து சமாதானப்படுத்துவோம். இல்லைன அப்றம் சாலமன் மீன் வாங்கித்தர மாட்டாருண்ணே.

கோவி.கண்ணன் சொன்னது…

// தாமிரா said...
அருமையாக நிகழ்ந்த பதிவர் சந்திப்புக்கு எனது வழ்த்துக்கள்.!//

தாமிரா,
சந்திப்பில் கலந்து கொண்டோர், அனைவர் சார்பிலும் நன்றி !

//என்னங்க இது பதிவர் சந்திப்புக்கு வந்தால் இப்படி ஏதாச்சும் சொற்பொழிவாற்றணுமா? (எஸ்கேகேகேப்)

//

சொற்பொழிவுதான் சிறந்தது, தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளலா
பதிவர் சந்திப்பில் பதிவுகள் தொடர்பாக பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே என்கருத்து, சிலருக்கு சிலவிமர்சனங்கள் பிடிக்காமல் போகும், தேவையற்ற சர்சைகள் வரும், அதைத் தவிர்த்து பிறவிசயங்கள், பதிவு சார் தொழில் நுட்பம், மேம்படுத்துவது, பதிவின் பயன் குறித்தெல்லாம் பேசலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...
நான் தான் விருது வழங்கனும்னு உங்களோட அழைப்பிதழ் பதிவுல சொல்லியிருக்கீங்க, கொடுக்குறவனே எடுத்துக்க கூடாதுல்ல, அதோட பாரி.அரசு பாருங்க, ஆறிப்போன போண்டா மட்டும்தான் எனக்கு கிடைச்சுச்சுனு ரொம்ப ஆதங்கப்படுறாரு. எனவே விருதையாவது அவருக்கு கொடுத்து சமாதானப்படுத்துவோம். இல்லைன அப்றம் சாலமன் மீன் வாங்கித்தர மாட்டாருண்ணே.

12:05 PM, August 04, 2008
//

பால்ராஜ்,
இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்கிற தொனி ஒலிக்கிறது. தகுதி உள்ளவர்கள் பரிசளிப்பவராகவே இருந்தாலும் அவருக்கே தான் பரிசு. பாரி.அரசுவிற்கு அடுத்த சந்திப்பில் பெரிய பட்டம் கொடுத்துவிடுவோம். உங்களுக்கு பட்டம் செய்யத் தெரியுமா ?

குசும்பன் சொன்னது…

//அதிரடியாக ஜோசப் பால்ராஜ் மழித்த(ஷேவ் செய்த) முகத்துடன் பளபளப்பாக வந்தார்.//

வீட்டில் மொசைக்குக்கு பாலீஸ் போட்டு கொண்டு இருப்பதாக சொன்னார் அப்படியே இவருக்கும் போட்டு இருப்பார்?

ஆமாம் எங்கு (கடையில்) ஷேவிங் செய்தார் என்று கேட்டு வெச்சுக்கிட்டீங்களா இல்லையா?:))))

குசும்பன் சொன்னது…

//நான் கொண்டு சென்ற வாழைக்காய் பஜ்ஜி - கத்திரிக்காய் சட்டினி, //

அண்ணே ஒருமாதம் முன்பு நான் சொன்னது இப்போது உபயோகமாக இருந்துச்சு பார்த்தீங்களா?

அப்பொழுது நீங்க தூக்கி போட போறேன் என்று சொன்னப்ப வேண்டாம் வெச்சு வையுங்க சந்திப்பு நடக்காமலா போய்விடும் என்றேன். அதன் படியே ஆகிவிட்டது.

சிறு துறும்பும் பல் குத்த உதவும்.

குசும்பன் சொன்னது…

//பதிவர் மாநாட்டில் விடுபட்ட மற்ற துளிகளை பதிவர் ஜோசப். பால்ராஜ் எழுதுவார்.//

குடிக்கும் பொழுது கீழே சிந்திய தண்ணீர் துளிகள்,

காப்பி துளிகள்

டீ துளிகள் பற்றிதானே... ஓக்கே

பிறது சிதறிய போண்டா, சட்டினி, பஜ்ஜி சிதறல்களை ஆரு எழுதுவா?

குசும்பன் சொன்னது…

இராமுக்கு அந்த பொற்கிழியை கொடுக்கவில்லையா:((

பரிசல்காரன் என் சார்பாக கொடுத்து அனுப்பி இருந்தாரே!!!

Sivaram சொன்னது…

இப்படிப்பட்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதது, வருத்தம்..

ப‌ர‌வாயில்லை. அடுத்த‌ முறை பார்த்துக் கொள்ள‌லாம்.


சிங்கை நாதன் , இப்போதாவது , தன் பதிவின் பேரை சொன்னாரா இல்லையா ?

அகரம் அமுதா என்பவர் பெண்மணி என்று தான் , இதுவரை நினைத்து வந்தேன்.. ஒருவேளை, அவர் வேறயோ?

கல்ந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//துளசி கோபால் said...
எப்படியோ எல்லாரையும் 'மலை ஏற' வச்சுட்டானா முருகன்? :-))))//

துளசி அம்மா,
மலை ஏறவைத்தது முருகன் இல்லை, கோபால கிருஷ்ணன் அதாவது கண்ணன். :)//

ஒத்துக்கவே முடியாது!
டீச்சரையே எதிர்த்துப் பேசும் மாணவரா நீங்க கோவி அண்ணா? Too bad! :(

எல்லாரையும் 'மலை ஏற' வச்சது முருகன், முருகன், முருகன்!-சிங்கை நாதன் செந்தில்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//முரளிகண்ணன் said...
மீ த பர்ஸ்ட் தீர்மானமமெல்லாம் கொஞ்சம் ஒவர்
//

அப்போ முடிஞ்சா மீ த லாஸ்ட் போடுங்களேன் பார்ப்போம்! :)

குசும்பன் இருக்க பயமேன்? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
இப்படிப்பட்ட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதது, வருத்தம்..

ப‌ர‌வாயில்லை. அடுத்த‌ முறை பார்த்துக் கொள்ள‌லாம். //

எனக்கும் வருத்தம் தான். வந்திருந்தால் போண்டாவை பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

//சிங்கை நாதன் , இப்போதாவது , தன் பதிவின் பேரை சொன்னாரா இல்லையா ?//

அவர் ஒரு பதிவு தீவிரவாதி, மறைத்துதான் வைத்திருப்பார். :)

//அகரம் அமுதா என்பவர் பெண்மணி என்று தான் , இதுவரை நினைத்து வந்தேன்.. ஒருவேளை, அவர் வேறயோ?

கல்ந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//

சுஜாதா மாதிரி பெண் பெயரிலான பதிவர் !
:) வாழ்த்துக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//முரளிகண்ணன் said...
மீ த பர்ஸ்ட் தீர்மானமமெல்லாம் கொஞ்சம் ஒவர்
//

அப்போ முடிஞ்சா மீ த லாஸ்ட் போடுங்களேன் பார்ப்போம்! :)

குசும்பன் இருக்க பயமேன்? :))
//

ரவிசங்கர்,
கடைசி பதிவென்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது என்பது போல மீத லாஸ்ட் பின்னூட்டமும் எப்போதும் போடப்பட்டு இருக்காது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
இராமுக்கு அந்த பொற்கிழியை கொடுக்கவில்லையா:((

பரிசல்காரன் என் சார்பாக கொடுத்து அனுப்பி இருந்தாரே!!!

1:09 PM, August 04, 2008
//

குசும்பன் உன்னோட பின்னூட்டத்திற்கெல்லாம் மறுமொழி போடனும் என்றால் கைவலிக்கும்டா.
அவ்வ்வ்வ்வ்வ்

லக்கிலுக் சொன்னது…

சந்திப்பில் கலந்துகொண்டு கிடா வெட்டிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள். சந்திப்பு நல்லவிதமாக நடந்தது என்று பிரபல பதிவர் கோமணகிருஷ்ணன் எனக்கு மெயில் செய்திருந்தார்.

TBR. JOSPEH சொன்னது…

சிங்கை பதிவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தது போன்ற ஒரு பிரமை உங்கள் படங்களைப் பார்த்ததும். வரும் பதிமூன்றாம் தேதி மலேசியா வருகிறேன். இரண்டு வாரங்கள் இருப்பதாக திட்டம். இரண்டு திருமணங்கள், என் பேத்தியின் ஞானஸ்நானம், மற்றும் என்னுடைய சம்பந்தியின் மறைவின் 30ம் நாள் நினைவு நாள் என பல்வேறு நிகழ்ச்சிக்கு இடையில் முடிந்தால் சிங்கை வந்து திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. பார்க்கலாம். வருவதாக இருந்தால் உங்களுக்கு தெரிவுபடுத்த உங்கள் தொலைபேசி எண் தேவை. என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
சந்திப்பில் கலந்துகொண்டு கிடா வெட்டிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள். சந்திப்பு நல்லவிதமாக நடந்தது என்று பிரபல பதிவர் கோமணகிருஷ்ணன் எனக்கு மெயில் செய்திருந்தார்.

1:50 PM, August 04, 2008
//

லக்கி தென்கலை ஐயங்கார்
வாழ்த்துக்கு மிக்க நன்றி !

கோமணகிருஷ்ணனா ? ஒற்றர்படையெல்லாம் வைத்தி இருக்கிறீர்களா ? அடுத்த சந்திப்பின் போது மரங்களின் மேலெல்லாம் கண்காணிக்கனும், பலத்த போலிஸ் பாதுகாப்பு கேட்கனும் போல இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
சிங்கை பதிவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தது போன்ற ஒரு பிரமை உங்கள் படங்களைப் பார்த்ததும்.//

ஜோசப் ஐயா,

தங்கள் கனிவான பாரட்டுக்கு மிக்க மகிழ்ச்சி

வரும் பதிமூன்றாம் தேதி மலேசியா வருகிறேன். இரண்டு வாரங்கள் இருப்பதாக திட்டம். இரண்டு திருமணங்கள், என் பேத்தியின் ஞானஸ்நானம், மற்றும் என்னுடைய சம்பந்தியின் மறைவின் 30ம் நாள் நினைவு நாள் என பல்வேறு நிகழ்ச்சிக்கு இடையில் முடிந்தால் சிங்கை வந்து திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. பார்க்கலாம். வருவதாக இருந்தால் உங்களுக்கு தெரிவுபடுத்த உங்கள் தொலைபேசி எண் தேவை. என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
//

ஒரு மகிழ்வான ஒரு துக்கமான காரணங்களால் மலேசியா வருகிறீர்கள், உங்கள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

சிங்கை வருவதற்கு முயற்சி செய்யுங்கள், வருவதற்கு முன் தகவல் சொல்லுங்கள், பதிவர் நண்பர்கள் படைசூழ சந்திக்க ஆவலாக உள்ளேன்.

http://govikannan.blogspot.com/2008/08/blog-post.html - இந்த பதிவில் மூவரது செல்பேசி எண்கள் இருக்கிறது.

எனது எண் +65 9876 7586

TBR. JOSPEH சொன்னது…

மிக்க நன்றி கண்ணன். நிச்சயமாக சிங்கை வர முயல்கிறேன். வரும் தியதியை பிறகு தெரிவிக்கிறேன்.

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

@KRS
//எல்லாரையும் 'மலை ஏற' வச்சது முருகன், முருகன், முருகன்!-சிங்கை நாதன் செந்தில்! :)))//

இந்த சிங்கை நாதன் 'மலை இறங்க வச்சான்'


@டி.பி.ஆர்
//முடிந்தால் சிங்கை வந்து திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் உண்டு//

கண்டிப்பாக வரவும் . 'திரும்பிப்பார்த்துடுவோம்'
'புகிட் கொம்பாக்'-ல் சந்தித்து விடுவோம்.

@லக்கிலுக்
//சந்திப்பு நல்லவிதமாக நடந்தது என்று பிரபல பதிவர் கோமணகிருஷ்ணன் எனக்கு மெயில் செய்திருந்தார்//
ஏன் பொதுவில் சொல்கிறீர்? இப்போது அது யாராக இருக்குமென தெரிந்துவிட்டது.;)

@ கோவி.கண்ணன்
//ரவிசங்கர்,
கடைசி பதிவென்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது என்பது போல மீத லாஸ்ட் பின்னூட்டமும் எப்போதும் போடப்பட்டு இருக்காது !
:)//

அது எப்படி ? நீங்க பின்னூட்ட பெட்டிய மூடிட்டா முடியுமே? ;)


@ குசும்பன்
//அண்ணே ஒருமாதம் முன்பு நான் சொன்னது இப்போது உபயோகமாக இருந்துச்சு பார்த்தீங்களா? //

அல்வா மட்டும் என்ன? அதே கத தான் ;)

வடுவூர் குமார் சொன்னது…

எல்லா அட்டைகளும் கிடைத்துவிட்டது.
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது போலும்!!!
நான் வெளிப்புறத்துக்கு சாதரணமாக இருந்தாலும் பின்புலத்தில் ஓடுவது தான் முகத்தில் தெரிகிறது போலும்.:-)
வழக்கம் போல் அல்லாமல்...(அல்வாக்கா சொல்லவேண்டியது)
ஜெகதீசன் அம்மாவுக்கு சிறப்பு நன்றி.
பீரூட் அல்வா சூப்பர்,இரண்டு முறை சாப்பிட்டுவிட்டு பாரி.அரசுக்கு இல்லாமல் பண்ணிவிட்டேன்.
நன்றி,திருமதி சிங்கைநாதன்.

குசும்பன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
குசும்பன் உன்னோட பின்னூட்டத்திற்கெல்லாம் மறுமொழி போடனும் என்றால் கைவலிக்கும்டா.
அவ்வ்வ்வ்வ்வ்///

இது சதி, துரோகம்... எவ்வளோ பொருப்பா கம்மெண்ட் யோசிச்சி யோசிச்சு போட்டா அது எப்படி பதில் சொல்ல முடியாது என்று சொல்வது, உங்க பின்னூட்டத்துக்கு பிறகும் சங்க தலைவர் லக்கி எப்படி பின்னூட்டம் போட்டார்?

சக கும்மியனுக்கு ஒரு அநீதி இழைக்கபடுகிறது. இதைக்கேட்க யாரும் இல்லையா?:(((((((((

குசும்பன் சொன்னது…

நண்பன் பால்ராஜ் எப்படி என் பதிவில் வந்து எம்புட்டு வருத்தப்பட்டு இருக்கிறார் பாருங்க.. நீங்க எல்லாம் ஒழுங்கா கவனிச்சு அனுப்புவீங்க என்றுதானே நாங்க பேசாம இருந்தோ,,, நண்பா அடுத்தமுறை மெனு லிஸ்டை முன்பே கோவிக்கு அனுப்பிவிடு. பிறகு பார்த்துக்கலாம்.

குசும்பன் சொன்னது…

வடுவூர் குமார் said...

ஜெகதீசன் அம்மாவுக்கு சிறப்பு நன்றி.
பீரூட் அல்வா சூப்பர்,இரண்டு முறை சாப்பிட்டுவிட்டு பாரி.அரசுக்கு இல்லாமல் பண்ணிவிட்டேன்.
நன்றி,திருமதி சிங்கைநாதன்.//

கோவி கொண்டுவந்த பஜ்ஜிக்கு மட்டும் இங்கு நன்றி சொல்லாதது ஏன்?

நன்றி சொல்வது என்றால் பஜ்ஜி செய்த கோவிக்கு நன்றி சொல்லனும் அதனால் சில பல பிரச்சினைகள் வரும் என்று விட்டுவிட்டீர்களா???

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தொடர்ந்து வலைப்பதிவர் மாநாட்டில் கலந்து கொண்டு எழுத்தாளர்களின் அறிவுரைகளை பெற சந்தர்ப்பம் அமையவில்லை. போண்டா, பஜ்ஜி, நொறுக்குத்தீனி எல்லாம் சாப்பிடுவதை பார்க்கும் போது வாய் ஊரியதுதான் தான் மிச்சம். வாழ்த்துக்கள் திரு. கோவி.கண்ணன், திரு. பாரி அரசு, திரு.வடுவூர் குமார், திரு.ஜெகதீசன் மற்றும் சக எழுத்தாளர்களே! உங்கள் பணி சிறக்கட்டும்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜெகதீசன் சொன்னது…

//
வடுவூர் குமார் said...

எல்லா அட்டைகளும் கிடைத்துவிட்டது.
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது போலும்!!!
நான் வெளிப்புறத்துக்கு சாதரணமாக இருந்தாலும் பின்புலத்தில் ஓடுவது தான் முகத்தில் தெரிகிறது போலும்.:-)
வழக்கம் போல் அல்லாமல்...(அல்வாக்கா சொல்லவேண்டியது)
ஜெகதீசன் அம்மாவுக்கு சிறப்பு நன்றி.
பீரூட் அல்வா சூப்பர்,இரண்டு முறை சாப்பிட்டுவிட்டு பாரி.அரசுக்கு இல்லாமல் பண்ணிவிட்டேன்.
நன்றி,திருமதி சிங்கைநாதன்.

//

அட்டைகள் கிடைத்தது மகிழ்வான செய்தி...
நன்றியை அம்மாவிடம் தெரிவித்து விட்டேன்.. அவர்களும் உங்களுக்கு பதில் நன்றி தெரிவிக்கச் சொன்னார்..
:))

பரிசல்காரன் சொன்னது…

வாழ்த்துக்கள் எல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு.

மறுபடி அடுத்த சந்திப்பு எப்போன்னு சொல்லுங்க!

கோவை விஜய் சொன்னது…

சிங்கைச் சந்திப்பை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துகள்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

சி தயாளன் சொன்னது…

சந்திச்ச சிங்கங்களுக்கு பாராட்டுக்கள். வெளியூர் பயணத்தில் இருந்த படியால் வலைப்பூ, மற்றும் இணையத்திலிருந்து ஒதுங்கி இருந்த படியால் இறுதி நேரமே எனக்கு இந்த சந்திப்பு பற்றி தெரிய வந்தது, அதுவும் சிங்கை நாதனின் மின்னஞ்சல் மூலமா..

அடுத்த சந்திப்புக்கு கட்டாயம் வருவேன்..:)

கொஞ்சம் முன்னமே அறிவியுங்கள், அந்த நாளை விடுமுறையாக்க உதவும்..

வடுவூர் குமார் சொன்னது…

குசும்பன் ஞாபகமுடித்தியதற்கு நன்றி.
திருமதி கண்ணனுக்கும் நன்றி.(பாயசம் இன்னும் நாக்கு நுனியில் இருக்கு).
பஜ்ஜியும் ஜெகதீசன் வீட்டில் பண்ணியது என்று நினைத்தேன்.சுவை வேறு ஒரே மாதிரி இருந்தது.
ஒரே பிரண்டு மாவோ??
ஒருவேளை, இது தான் கடைசி பதிவர் சந்திப்பாக இருக்குமோ (சிங்கையில்) என்ற எண்ணம் வேறு தனியாக ஓடிக்கொண்டிருந்தது.பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
ஜெகதீசன் சொன்ன மாதிரி...
தொழிற்நுட்பவாதிகள் சிங்கைக்கு வேலைக்கு வருவது பற்றி யாராவது விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.இங்கு வேலைக்கு வர நினைக்கும் நம் மக்களுக்கு உதவியாக இருக்கும்.அதைப்பற்றி ஜோசப்பால்ராஜ் சொன்னவிஷயமும் ஆறுதலாக இருந்தது.அவர் பதிவில் மேல் விபரங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Thekkikattan|தெகா சொன்னது…

சிங்கை படங்களும், பதிவர்களின் படங்களையும் பார்க்கும் பொழுது சிங்கை கண்ணிற்கு முன்னால் ஓடி வந்ததை மறுக்க முடியாது, பதிவர்களுடன் எப்பொழுது அமர்ந்து அத்தனை பஜ்ஜி, சொஜ்ஜிகளையும் நானே சாப்பிடுவது என்று ஆசைப் பட வைக்கிறது.

எஞ்சாய் மக்களே!

VSK சொன்னது…

நல்லாப் பண்ணியிருக்கீங்க கோவியாரே!

நான் வந்தபோது நடத்தின மினி பதிவர் சந்திப்பு மனதில் நிழலாடியது!:))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்