அவியல் பதிவுகளை நண்பர்கள் போடுகிறார்கள். சிற்றுண்டி வகையில் ஒரு பதிவைப் போட்டுப் பார்ப்போமே. அவியல் பதிவுகளில் பா.கே.ப சாயலில் எழுதுகிறார்கள். இதைக் கொஞ்சம் க.போ.யா ( கலக்கப் போவது யாரு பாணியில் நகைச்சுவையாக எழுத முயற்சிக்கிறேன். சிரிப்பு வரலைன்னா, ரொம்ப கவலையை விடுங்க. நம்ம சாதி
வெட்டிப்பயல் பாலாஜி (பதிவர் சாதிதானுங்க) பதிவு பக்கம் எட்டிப் பாருங்க, உண்மையிலேயே நகைச்சுவையில் கலக்குபவர் அவருதான். நகச்சுவையில் கொஞ்சம் யோசித்தால் ஐ மீன் நகத்தைக் கடிச்சிக்கிட்டே யோசித்துப் பார்த்து....
நடிகர்கள் கடற்கரையில் சுண்டல் விற்றால் ? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் சுண்டல் விற்பதைப் பற்றி கேட்ப்போம்.
கோவி : சூப்பர் ஸ்டார் ரஜினி சார், நேற்று நீங்கள் விற்ற சுண்டல் சூப்பர் சுண்டல் என்று வித்திங்களே, உண்மையில்யே அது சூப்பர் சுண்டலா ?
ரஜினி : ஹா...ஹ்ஹா..ஹா...யாரோ செஞ்ச சுண்டல நான் இங்கே வந்து விக்கிறேன். அத நான் செஞ்ச சுண்டலாக நீங்க தான் நெனக்கிறிங்க, இன்னிக்கு நல்ல சுண்டலோடு வந்திருக்கன் இது நல்ல சுண்டல். மக்கள் இதை வாங்கித் தீர்கணும், நல்ல சுண்டலை ஆண்டவனே கைவிட்டாலும் மக்கள் கைவிட்டுட மாட்டாங்க
கோவி ; மனதுக்குள்...இன்னிக்கு மட்டு இவரே செஞ்ச சுண்டலாக்கும்...
*******
கோவி : கமல் சார், உங்க சுண்டல் தான் இப்ப நல்லா போகுதாமே ... ஆனால் ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையே.
கமல் : நான் 5 வயதிலிருந்து சுண்டல் விக்கிறேன்...சுண்டலை எப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு எனக்கு தெரியும்...கொண்டக்கடலை சுண்டல் ஒருவகைதான் செய்யமுடியும்னு பலர் நினைக்கிறாங்க...நான் ஒரே கொண்டக்கடலையில் 10 வகையான சுண்டல் செய்திருக்கேன். பார்த்திங்க என்றால் அது கொண்டக்கடலை சுண்டலான்னு தெரியாது. அமெரிக்கா சமையக்காரர் தான் சுண்டலுக்கு மசாலா அரைக்கிறார். என்ன கேட்டிங்க ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லையா ? ஒரிஜினல் சுண்டல் மாதிரி இல்லைன்னு யார் சொன்னது ? இருந்தால் நல்லா இருக்கும்னு தானே எல்லோரும் நினைப்பாங்க ? இப்படித்தான் சண்முகி மாமி...
கோவி: (எஸ்கேப்) ஐயோ சாமி...
*********
கோவி : இளைய தளபதி....வணங்கங்ணா... அவங்களாவது சுண்டல் விற்கிறாங்க...நீங்க நமத்துப்போன முறுக்கை சுண்டல்னு சொல்லி விக்கிறிங்களே எப்படிங்கண்னா
விஜய் : அப்படிங்களான்னா...அப்பா இருக்காருங்களே அவருதான்னா முறுக்கைக் கூட சுண்டல்னு விக்கலாம்னு சொன்னார். சுண்டல் என்னங்கண்னா சுண்டல், ஒரு குத்துப்பாட்டோ ஊசிப்போன போண்டாவைக் கூட விக்கலாங்கண்னா...ஏன்னா இங்கதான் வலைபதிவாளர்கள் சந்திக்கிறாங்க
கோவி : போண்டா மேட்டரு இஸ்டாருங்களுக்குக் கூட தெரிஞ்சு போச்சு
*********
கோவி : தல...பழைய சரக்கை சுடவெச்சு சூப்பராக தள்ளிவிடுறங்களே...உங்க சுண்டலும் வியாபாரம் ஆகிடுதாமே
அஜித் : சுண்டல் விக்கறது பெரிசுல்ல...நாம அதை எப்படி விக்கிறம்ங்கிறது தான் பெரிசு...கெட்டப்போடு விக்கனும் ...கெட்ட சுண்டலை வித்துடக் கூடாது...பழைய சரக்கானாலும் பதமாக இருந்தால் விக்கலாம்.
கோவி : எனக்கு இப்ப விக்குது !
*******
கோவி : குழந்தை தியா எப்படி இருக்கா ? உங்க சுண்டல் இப்பெல்லாம் ஏன் சரியாக போகல மிஸ்டர் சூர்யா ?
சூர்யா : முன்பெல்லாம் விக்கிறது சுண்டல் தானான்னு நானே தெரிஞ்சிக்க உடம்பு முழுவதும் 'சுண்டல்' 'சுண்டல்' னு பச்சக் குத்திக்குவேன். மறக்காமல் எல்லாத்தையும் வித்துடுவேன். கல்யாணம் ஆனதும் காலேஜ் பொண்ணுங்க சுண்டல் வாங்குவது குறைஞ்சிட்டு...நாளைக்கு நான் விக்கிற சுண்டலோட வாசனை மியாமி பீச் வரைக்கும் தெரியும்.
கோவி : மூக்கைப் பிடித்துக் கொண்டே .... கெட்டுது போ......
*******
கோவி : விக்ரம் சார்.....ஆரிச்சாமி சுண்டல், அந்நியன் சுண்டல் னு நல்லா வித்துக்கிட்டு தானே இருந்திங்க..
விக்ரம் : ம்ம்..எங்கிட்ட சுண்டலைக் கொடுத்து விக்கச் சொன்னவங்களெல்லாம் நான் நல்லா விக்கிறேன் என்று தான் கொடுத்தாங்க...நல்ல சுண்டலைக் கொடுக்கல...இப்ப சுண்டல் வாங்கி விக்கும் போது சரக்கு நல்லா இருந்தான் வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு பீச்சில வந்து பாருங்க கந்தசாமின்னு ஒருத்தன் சுண்டல் விப்பான்
கோவி : ஐயோ நாளைக்கு பீச்சுப்பக்கம் வந்து வேறு யாரும் வாங்கினால் நானும் வாங்குறேன்
*******
கோவி : சிம்பு தம்பி...
சிம்பு : என்ன கேக்கப் போறிங்க ? அவங்க சுண்டல் வேகமாக விக்குதேன்னு தானே...முதலில் யார் வேகமாக சுண்டல் விக்கிறாங்கங்கங்கிறது முக்கியமில்லே...கடைசியில யாரு வித்து முடிக்கிறாங்கங்கிறதுதான் வியாபார வெற்றியே..இன்னிக்கு நாலு பேரு அவங்க சுண்டல் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா என் சுண்டல் விக்காம போய்டுமா ? நல்ல சுண்டலை வாங்கிட்டு வந்து விக்கிறது பெரிசு இல்லை. நல்ல சுண்டலை நாமே செஞ்சு விக்கெனும்...
சொல்லிக் கொண்டே விரலை சொடுக்க அவர் வைத்திருக்கும் சுண்டல் பாத்திரம் நழுவி பீச் மணலில் தலைகீழாக விழுகிறது
******
கோவி : உங்க சுண்டல் மட்டும் ஏன் விக்கும்னு சரியாகவே சொல்ல முடியல ?
தனுஷ் : இத பாருங்க நான் என்ன விக்கிறேன்னு எனக்குத் தெரியாது...எங்க அண்ணனும், அப்பாவும், சுண்டல் செய்றவங்களும் என்ன சொல்லி விக்கச் சொல்றாங்களோ அதை விப்பேன். முந்தா நேத்திக்கு நல்லா இருந்தது...நேத்திக்கு நல்லா இல்லை...இன்னிக்கு நல்லா இருக்கு. ஏத்த இறக்கம் வியாபாரத்துல இருக்கும்.
கோவி : தத்துவம் பேசுவதில் மாமனார் தோற்றாரு போங்க...
*****
ரூம் போட்டு யோசிச்சி...மூடு இருந்தால் நாளைக்கு அரசியல் வாதிகள் விற்கும் சுண்டலைப் பற்றி கேட்போம்.