பின்பற்றுபவர்கள்

14 ஜூலை, 2008

***மக் கதை !

"பொண்ணுக்கு 100 சவரன், பையனுக்கு சின்னதாக டாடா நானோ காரும், வெயிட்டு கம்மியாக 10 சவரனுக்கு செயின் மோதிரம் போட்டால் போதும்"

தரகர் தங்கசாமி பெண்ணின் அப்பாவின் காதைக் கடித்தார்.

"என்ன யோசனை பண்ணுறிங்க...சரியான சம்பந்தம்...இப்படி பட்ட இடம் கிடைக்கிறதுக்கு கொடுத்து வைக்கனும்..."

"ம்..அதுக்கு இல்லே.....எதாவது செய்யணுமே......என் பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன்......ஈஸ்வரா..."

"100 சவரனுக்கு எங்கே போவது...ஈஸ்வரா நீ எங்கே போவே... நீ போட்டு இருப்பதெல்லாம் பாம்பு நகைகள்...." தலையில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தார்......அப்போது....அப்போது....அதிசயம் பயமுறுத்திக் கொண்டு நிகழ்ந்தது.

பலமான காற்று அடித்தது, மின்னல் மின்னியது. பீரோ திறந்து கொண்டது....கதவெல்லாம் படபடவென்று அடித்தது...

பீரோவிலிருந்து ஒரு ஃபைல் காற்றின் வேகத்தில் தாக்கு பிடிக்காமல் கீழே நழுவ.....

அதிலிருந்து ஒரு பேப்பர் மேலும் கீழுமாக அசைந்து அசைந்து ... பாபா படத்தில் ரஜினி கையில் பட்டம் வந்து விழுவதைப் போல்...

பெண்ணின் தந்தையின் கைகளில் விழ, "Marriage Endowment Policy - LIC" 10 லட்சத்திற்கு 15 ஆண்டுக்கு முன்பு எடுத்தது அன்று தான் மெச்சூர் ஆகி இருப்பதாக அதிலிருந்த தேதி காட்டியது

அப்பறம் என்ன திருமணத்தை ஜாம் ஜாம் என்று மில்கா ப்ரட்டோடு நடத்தினார்கள். :)
(சின்ன பொண்ணுக்கா கல்யாணம் ? கேட்டுடாதிங்க...படத்தில் இருப்பது பொண்ணோட யங்கர் சிஸ்டர்)

********

பின்குறிப்பு : மர்மக் கதை என்று தலைப்பிட்டேன். தலைப்பும் கொஞ்சம் மர்மமாக இருக்கட்டுமேன்னு... *** போட்டேன். சரியாப் பாருங்க *** (மூன்று ஸ்டார்) இருக்கும் ** (இரண்டு ஸ்டார்) அல்ல. ஹலோ மொக்கை இல்லிங்க. வளரும் குழந்தைகளுக்கு காம்ப்ளான் மட்டுமல்ல, காப்பீடு மிக மிகத் தேவை. வரதட்சணைக்கு இல்லாவிட்டாலும், மேற்படிப்பு, உயர்கல்விக்கு மிகவும் பயன்படும். சத்தியமாக நான் எல்ஐசி ஏஜெண்ட் கிடையாது. :))))))))))

34 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

********** ********** *********** ********** *********** ********* ******** *********** **********

மங்களூர் சிவா சொன்னது…

மேலே போட்டது மர்ம கதைக்கான மர்ம பின்னூட்டம்!

:))))))

ALIF AHAMED சொன்னது…

*** **** **



:)


(நல்லா இருக்கு கதை )

manikandan சொன்னது…

கரும கதை

Loganathan சொன்னது…

நல்ல தலைப்பு :)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஒரு சிறப்பான விளம்பரப்படத்திற்குறிய கதை இது.
பாராட்டுக்கள் அண்ணா.
3 மணி நேரம் ஓடும் திரைப்படத்தைவிட 16 விநாடிகள் ஓடும் விளம்பரத்திற்கு கதை எழுதுவதுதான் கடினமானது.

திரைப்படத்தை விட ரொம்ப சுலபமாக கதை எழுத முடிவது முடிவே இல்லாமல் வருட கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும் மகா நீளத் தொலைகாட்சி தொடர்கள் தான் என்னும் உண்மையை எனக்கடுத்து வந்து பின்னூட்டமிடும் யாராவது ஒருவர் சொல்லக்கூடும் என்பதால் அதையும் நானே சொல்லிவிடும் இவ்வேளையில் மீண்டும் ஒருமுறை சிறந்த கதைபடைத்த அண்ணணை பாராட்டி மகிழ்கின்றேன்.

பரிசல்காரன் சொன்னது…

அடக்கடவுளே! இன்னைக்குதான் இதேமாதிரி தலைப்புல கதையெழுதி வெச்சுட்டு நாளைக்கு போடலாம்ன்னு இருந்தேன்! அதுக்குள்ள, நீங்க முந்திகிட்டீங்க! (வேணும்ன்னா யெஸ்.பாலபாரதிகிட்ட கேளுங்க. அவருகிட்ட மதியமே இதுபத்தி பேசிகிட்டிருந்தேன்!)

அதுக்கொண்ணும் பண்ண முடியாது, தலைப்புதான் இந்த டைப்பு. உள்ள மேட்டர் வேற!

நாளைக்கு வந்து பாருங்க!

Veera சொன்னது…

கதை பயங்கர மர்மமா இருந்தது! :D :D :D

சென்ஷி சொன்னது…

//ஹலோ மொக்கை இல்லிங்க. வளரும் குழந்தைகளுக்கு காம்ப்ளான் மட்டுமல்ல, காப்பீடு மிக மிகத் தேவை. வரதட்சனைக்கு இல்லாவிட்டாலும், மேற்படிப்பு, உயர்கல்விக்கு மிகவும் பயன்படும். சத்தியமாக நான் எல்ஐசி ஏஜெண்ட் கிடையாது. :))))))))))
//

இந்த மாதிரி டிஸ்கியில ஏதாவது மெசேஜ் சொல்லாட்டி தமிழ்மணம் மொக்கையில தள்ளாடுதுன்னு தடை செஞ்சாலும் செஞ்சுடுவாங்க. இல்லியாண்ணே :))

சூப்பர்...

Kanchana Radhakrishnan சொன்னது…

**க்கதை நன்றாகவே உள்ளது.
பி.கு.,நானும் மூன்று நட்சத்திரம்தான் டைப் செய்தேன்.ஒன்றில் கை சரியாக அழுந்தவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
********** ********** *********** ********** *********** ********* ******** *********** **********
//

முதல் பின்னூட்டம் நட்சத்திர பதிவரோடது...மிக்க மகிழ்ச்சி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
மேலே போட்டது மர்ம கதைக்கான மர்ம பின்னூட்டம்!

:))))))
//

இது அதைச் சொல்லும் தர்ம பின்னூட்டமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
*** **** **



:)


(நல்லா இருக்கு கதை )
//

எங்கிட்டு போயிருந்தீக, ரொம்ப நாளாக காணல...

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
கரும கதை

12:28 AM, July 15, 2008
//

உங்க அவனும் அவளும் (தொடர் ?) கதையை படித்து கொண்டிருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Loganathan said...
நல்ல தலைப்பு :)
//

எருமைகள் இருக்கும் ஊருக்கு போனால் நாம் தான் சேறு என்று மாறிடனும். ஐ மீன் ஊரோடு ஒத்துப் போவது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
ஒரு சிறப்பான விளம்பரப்படத்திற்குறிய கதை இது.
பாராட்டுக்கள் அண்ணா.
3 மணி நேரம் ஓடும் திரைப்படத்தைவிட 16 விநாடிகள் ஓடும் விளம்பரத்திற்கு கதை எழுதுவதுதான் கடினமானது.

திரைப்படத்தை விட ரொம்ப சுலபமாக கதை எழுத முடிவது முடிவே இல்லாமல் வருட கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும் மகா நீளத் தொலைகாட்சி தொடர்கள் தான் என்னும் உண்மையை எனக்கடுத்து வந்து பின்னூட்டமிடும் யாராவது ஒருவர் சொல்லக்கூடும் என்பதால் அதையும் நானே சொல்லிவிடும் இவ்வேளையில் மீண்டும் ஒருமுறை சிறந்த கதைபடைத்த அண்ணணை பாராட்டி மகிழ்கின்றேன்.
//

ஜோசப்,
வழக்கமாக எழுதுவதற்கு எதாவது கரு தேவைப்படும் (அப்படித்தான் சொல்றாங்க). இங்கே தலைப்பை வைத்துவிட்டு என்ன எழுதுவது என்று நினைத்துக் கொண்டிருந்த போது சின்னதாக விளம்பரத்தில் வருவது போன்று எழுதுவோம் என்று தொடங்கினேன். கொஞ்சம் சொதப்பலாக வந்தது அப்பறம் அப்படி இப்படி மாற்றி ஒருவழியாக ஒரு மெசேஜோடு முடித்தாகிவிட்டது.

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு (ம)(நெ)கிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//பரிசல்காரன் said...
அடக்கடவுளே! இன்னைக்குதான் இதேமாதிரி தலைப்புல கதையெழுதி வெச்சுட்டு நாளைக்கு போடலாம்ன்னு இருந்தேன்! அதுக்குள்ள, நீங்க முந்திகிட்டீங்க! (வேணும்ன்னா யெஸ்.பாலபாரதிகிட்ட கேளுங்க. அவருகிட்ட மதியமே இதுபத்தி பேசிகிட்டிருந்தேன்!)

அதுக்கொண்ணும் பண்ண முடியாது, தலைப்புதான் இந்த டைப்பு. உள்ள மேட்டர் வேற!

நாளைக்கு வந்து பாருங்க!

12:54 AM, July 15, 2008
//

பரிசல்,

நீங்கள் சொன்னால் சரிதான்.

நம் சிந்தனைகள் அடிக்கடி ஒன்றாக சிந்திக்கிதே. வியப்புதான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வீரசுந்தர் said...
கதை பயங்கர மர்மமா இருந்தது! :D :D :D
//
வீரசுந்தர்,
ஐயையோ..ஐயையோ.....கொல்றாங்களே. பொய் பொய்யாக சொல்றாங்களே

கோவி.கண்ணன் சொன்னது…

// சென்ஷி said...

இந்த மாதிரி டிஸ்கியில ஏதாவது மெசேஜ் சொல்லாட்டி தமிழ்மணம் மொக்கையில தள்ளாடுதுன்னு தடை செஞ்சாலும் செஞ்சுடுவாங்க. இல்லியாண்ணே :))

சூப்பர்...//

சென்ஷி,
அது......! நெத்தியடிகாக சொல்லி இருக்கிங்க.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kanchana Radhakrishnan said...
**க்கதை நன்றாகவே உள்ளது.
பி.கு.,நானும் மூன்று நட்சத்திரம்தான் டைப் செய்தேன்.ஒன்றில் கை சரியாக அழுந்தவில்லை

4:34 AM, July 15, 2008
//

Kanchana Radhakrishnan
டைப் செய்ய முடியாவிட்டால் காபி / பேஸ்ட் செய்யலாமே ?

பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க மிக்க நன்றி !

Sivaram சொன்னது…

இது மர்மக் கதையா ?
இன்னும், ** போட்டு, சிரமக் கதை, வர்மக் கதை, கருமக் கதை என்று எழுதும் திட்டம் ஏதாவது இருந்தால், தயவுசெய்து எச்சரிக்கை செய்யவும்.. தயார் படுத்திக் கொள்கிறேன்..

ஜெகதீசன் சொன்னது…

:)))

மோகன் கந்தசாமி சொன்னது…

ரொ

மோகன் கந்தசாமி சொன்னது…

ம்

மோகன் கந்தசாமி சொன்னது…

மோகன் கந்தசாமி சொன்னது…

மோகன் கந்தசாமி சொன்னது…

மோகன் கந்தசாமி சொன்னது…

மா

மோகன் கந்தசாமி சொன்னது…

ரு

மோகன் கந்தசாமி சொன்னது…

க்

மோகன் கந்தசாமி சொன்னது…

கு

மோகன் கந்தசாமி சொன்னது…

!

லக்கிலுக் சொன்னது…

ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்தா... :-)))))

☼ வெயிலான் சொன்னது…

// லக்கிலுக் said...

ச்சே... என்னவோ ஏதோன்னு ஓடிவந்தா... :-))))) //

இப்டி ஆசை ஆசையா ஓடி வந்த புள்ளைய ஏமாத்திட்டீங்களே கோவியாரே! ;)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்