"காப்பியைக் குடிச்சிட்டு...அப்படியே வச்சிருக்கிங்களே...டம்ளர் காஞ்சிடும்...அடுப்பில் வேலையாக இருக்கேன் சிங்க்ல கொண்டு வந்து போடக் கூடாதா ?...நியூஸ் பேப்பரில் காலை 8 மணி வரை படிக்க என்ன தான் போட்டு இருப்பானோ... தண்ணி ஆறிடும்...சீக்கிரமாக குளிச்சிட்டு வாங்க"
***
"அடடே...என்ன இது காக்கா குளியல்...முதுகுபக்கம் சோப்பாக இருக்கு...குளியல் அறைக்கு போங்க...வந்து தேய்ச்சிவுடுறேன்"
"ஆ....சுடுது..."
"தண்ணி ஆறிப்போய் ஜில்லுன்னு இருக்கு...சுடுதா ?"
"உன் கை பட்டு இருக்கே...சுடாதா ?"
"காலங்காத்தால ரொமான்சா...சூடுதானே...குறைச்சிடுறேன்..ஞாயித்து கிழமை ஆகட்டம் நல்லண்ணை தேய்க்கும் போது கொஞ்சம் கண்ணுலையும் ஊத்தி விடுறேன்...எல்லாம் சரியாப்போகும்"
"நாளைக்கே ஞாயித்து கிழமை வராதா ?"
"ஆசைதான்...உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கனும்...சீக்கிரமாக துவட்டிக் கொண்டு வந்து சேருங்க...உங்களுக்கு பிடிச்ச பொங்கல் சாம்பார் செஞ்சு வச்சிருக்கேன்"
*****
"டெய்லி அப்படி என்ன தான் இந்த ஷூவை பண்ணுவிங்களோ...ஒரே நாளில் தூசி அடைஞ்ச கிடக்கு...சீக்கிரமாக காரு வாங்குங்க...வண்டில போவதால் தான் ஷூவெல்லாம் டஸ்ட் ஆகிடுது" ஷூவை பாலிஸ் போட்டுக் கொண்டே சொன்னாள்
"அங்க என்ன தேடுறிங்க ... சட்டை அயர்ன் பண்ணி இங்கே எடுத்து வச்சிருக்கேன்..."
"சாக்ஸ் லூசாகிவிட்டது...இந்த வாரம் வேற வாங்கனும்..."
காலில் மாட்டிவிட்டுக் கொண்டே சொன்னாள்
"மதிய சாப்பட்டுக்கு...சின்ன டப்பாவுல தனியாக தயிர்சாதமும் வச்சிருக்கேன்...நீங்க பாட்டுக்கு திறந்து கூட பார்க்கமல் அப்படியே திருப்பி எடுத்து வந்திடாதிங்க...தயிர் கொஞ்சமாவது தினமும் சேர்த்துக் கொள்ளனும்...அப்பதான் நல்லதாம்"
*********
திருப்தியாக சாப்பிட்டத்தில் மதியம் 10 நிமிடம் அலுவலகத்தில் சிறு குட்டி தூக்கம்
இடையில் போன் செய்து
"என்னங்க...சாப்பாடு பத்துச்சா ? குறைச்சி கிறைச்சி வச்சிட்டேனோன்னு..."
"சும்மா தொல்லை பண்ணாதே...சரியாக இருந்தது..."
"உப்பு காரமெல்லாம் சரியாக இருந்ததா ?"
"நீ போனை வைக்கிறியா ? இல்லையா ?"
***********
மாலை 6:30, வீட்டில் ஷூ ராக்கினில் ஷூவை கழட்டி வைத்துவிட்டு...
உள்ளே சென்று ஷோபாவில் உட்கார
"சுண்டல் செஞ்சு வச்சிருக்கேன்...இஞ்சி டீ இருக்கு......"
சாக்சை கழட்டி விட்டுக் கொண்டே சொல்லிக் கொண்டு இருந்தாள்
*******
"என்னங்க நாய்குட்டி காலில் இருக்கும் சாக்சை கடிச்சு இழுப்பது கூட தெரியாமல் அப்படி என்ன டிவியை பார்த்துக் கொண்டே யோசனை ?"
திடுக்கிட்டேன்...என்னை நினைவுக்கு திருப்பிய வேலைக்குச் சென்ற திரும்பிய மனைவியின் குரல் தான் அது.
'வயிறெரிச்சலை கொட்டிக் கிளறிக் கொண்டிருந்த டிவியை அணைத்து விட்டு...ஹூம்' பெருமூச்சுடன் மனைவியைப் பார்க்க...
"சீக்கிரம் தான் வந்துட்டிங்களே...ஒரு காப்பியாவது போட்டு வச்சிருக்கக் கூடாதா ?"
"சரி சரி ...பையனுக்கு டூயசன் முடிஞ்சிருக்கும்...போய் கூட்டிட்டு வாங்க"
"போகும் போது வீட்டில என்ன இருக்கு இல்லைன்னு பாத்துட்டு கடையில அப்படியே வாங்கிட்டு வந்துடுங்க...சொல்ல மறந்துட்டேன்...இட்லி பொடிக்கு நல்லண்ணை இல்லை.... தீர்ந்துட்டு அதையும் வாங்கிட்டு வந்துடுங்க..."
"சீக்கிரமாக வந்துடுங்க...நீங்க வந்து காய்கறி வெட்டிக் கொடுத்தால் தான் நான் சமைக்கவே ஆரம்பிக்கனும்...குளிச்சிட்டு நான் ரெடியாவதற்குள் வந்துடுங்க"
***
சிறிது நேரத்தில் கைப்பேசியில் அழைத்து.....
"எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு...வந்து சமைச்சிடுங்க"
"சரி"
'தாத்தாக்கள்...அப்பா.....புண்ணியம் செஞ்சவங்க....வீட்டுக்குள்ள எந்த வேலையும் செய்யல....இப்ப இருக்கிற பொருளாதார நிலமையை சமாளிக்க...படிச்ச பொண்ணை வீட்டில சமைக்க விடுவதா ? முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் மனைவியை வேலைக்கு அனுப்பும்.. என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... ஹூம்... மறந்து இருந்ததலும்...வயித்தெரிச்சலைக் கிளப்பவே... குளிப்பாட்டிவிட்டு...சட்டைக்கு பட்டன் போட்டுவிட்டு, டை கட்டிவிடும் மனைவி... இதையெல்லாம் அவ்வப்போது டிவியில் போடுறானுங்களே...ஹூம்....வைப் இருந்தாலும்...லைப்புல மெனிதிங்க் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்......'
நினைத்துக் கொண்டே மளிகை சாமன்களை, ஒரு கையிலும், மகனை மறுகையிலும் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைவாக நடந்து வீட்டை அடைந்ததும்,
"அப்பா...ஹூவை கழட்டிவிடு..." மகனின் குறலால் மீண்டும் நினைவிலிருந்து மீண்டேன்
**********
பின்குறிப்பு : இது...சிறுகதை...! தலைப்பு கதைக்கு பொருத்தமானது...பரபரப்புக்காக வைக்கவில்லை. :)
பின்பற்றுபவர்கள்
13 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
24 கருத்துகள்:
சிறுகதை நல்லா காமெடியா இருந்துச்சு.
//என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... //
எத்தனை வருஷத்துக்கு தான் பெண்களே வீட்டு வேலையையும் சேர்த்தே செய்வது. ஆண்கள் உதவி செய்வதால் ஒன்னும் தப்பில்லையே!:))
//
'தாத்தாக்கள்...அப்பா.....புண்ணியம் செஞ்சவங்க....வீட்டுக்குள்ள எந்த வேலையும் செய்யல....இப்ப இருக்கிற பொருளாதார நிலமையை சமாளிக்க...படிச்ச பொண்ணை வீட்டில சமைக்க விடுவதா ? முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் மனைவியை வேலைக்கு அனுப்பும்.. என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... ஹூம்... மறந்து இருந்ததலும்...வயித்தெரிச்சலைக் கிளப்பவே... குளிப்பாட்டிவிட்டு...சட்டைக்கு பட்டன் போட்டுவிட்டு, டை கட்டிவிடும் மனைவி... இதையெல்லாம் அவ்வப்போது டிவியில் போடுறானுங்களே...ஹூம்....வைப் இருந்தாலும்...லைப்புல மெனிதிங்க் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்......'
//
உங்களுக்குள்ளும் இப்படி ஒரு ஆணாதிக்க சிந்தனையா???????
:P
க ைத நல்லாயிருக்கு நண்ப ேர...ெதாடர்ந்து எழுதுங்கள்
தலைப்பை பாத்துட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி வந்து படிச்சேன். எப்பிடி இருந்தாலும் வரும்காலத்தில தேவைப்படும்ல அப்படின்னு
:)
ஆனாலும் ஓவரா பயமுறுத்தறீங்க!!
/
Thamizhmaangani said...
எத்தனை வருஷத்துக்கு தான் பெண்களே வீட்டு வேலையையும் சேர்த்தே செய்வது. ஆண்கள் உதவி செய்வதால் ஒன்னும் தப்பில்லையே!:))
/
கெளம்பிட்ட்டாங்கய்ய்யா கெளம்பீட்டாங்க
:))))))
இது நல்லாருக்கே.
கனவு கினவு கண்டீங்களோன்னு பார்த்தா... ம். அதேதான்.
//பின்குறிப்பு : இது...சிறுகதை...! தலைப்பு கதைக்கு பொருத்தமானது...பரபரப்புக்காக வைக்கவில்லை. :)
//
ம்ம்ம்...உங்க மனைவி எப்பப் பின்னூட்டம் போடுவாங்க????? :P :D
நான் கூட முத பகுதிய படிச்சுட்டு உங்க வீட்ல இப்டி எல்லாம் நடக்குதேன்னு நினைச்சு உங்க மேல ரொம்ப பொறாமை பட்டுட்டேன் போங்க.
அதுல சொல்லியிருக்கதுல ஒன்னு மட்டும் தவறாம நடக்கும், என்ன தெரியுமா? அடிக்கடி அலுவலகத்துல இருக்கவனுக்கு தொ(ல்)லை பேசியில அழைச்சி ஏதாவது பேசுறது.
//'தாத்தாக்கள்...அப்பா.....புண்ணியம் செஞ்சவங்க....வீட்டுக்குள்ள எந்த வேலையும் செய்யல....இப்ப இருக்கிற பொருளாதார நிலமையை சமாளிக்க...படிச்ச பொண்ணை வீட்டில சமைக்க விடுவதா ? முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் மனைவியை வேலைக்கு அனுப்பும்.. என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... ஹூம்... மறந்து இருந்ததலும்...வயித்தெரிச்சலைக் கிளப்பவே... குளிப்பாட்டிவிட்டு...சட்டைக்கு பட்டன் போட்டுவிட்டு, டை கட்டிவிடும் மனைவி... இதையெல்லாம் அவ்வப்போது டிவியில் போடுறானுங்களே...ஹூம்....வைப் இருந்தாலும்...லைப்புல மெனிதிங்க் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்......//
:-(((((
இங்கயும் அதே நிலமைதான் கண்ணன்! இதுகுறீத்து ஒரு ஸ்பெஷல் பதிவு போடணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கேன். கொஞ்சம் சீரியஸா எழுதணும். அந்த மூடே நமக்கு வரமாட்டீங்குது. உட்கார்ந்தா, யோசிச்சா ஒரே மொக்கைதான் வருது!
(உங்களுக்கு மட்டுமான பின்குறிப்பு: இன்றைக்கு கோவை பதிவர் சந்திப்புக்கு வந்த `கிரி' கிட்ட உங்களுக்கு ஒண்ணு குடுத்து விட்டுருக்கேன். அடுத்த வாரம் அவர் சிங்கப்பூர் வருவார். உங்களை எப்படியாவது தொடர்பு கொண்டு சேர்த்துவிடுவார். வந்த விபரத்திற்கு மின்மடலிடுங்கள். kbkk007@gmail.com)
இது உங்க சொந்த அனுபவமோ
Good Post.
Innum namakku work share panni family panndra culture develop aagulannu nenikkiren. yaarO oruthar, adhu kanavano illa manaiviyO, avanga 1 kai thaan Oongi irukkum padi irukku.. naveena remote family...
//Thamizhmaangani said...
சிறுகதை நல்லா காமெடியா இருந்துச்சு.
//என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... //
எத்தனை வருஷத்துக்கு தான் பெண்களே வீட்டு வேலையையும் சேர்த்தே செய்வது. ஆண்கள் உதவி செய்வதால் ஒன்னும் தப்பில்லையே!:))
//
சரிதான். முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் எதெல்லாம் மிஸ்ஸிங் மிஸ்ஸிங் என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறேன். தவறு என்று எதையும் சொல்லவில்லை
//ஜெகதீசன் said... உங்களுக்குள்ளும் இப்படி ஒரு ஆணாதிக்க சிந்தனையா???????
:P//
வாய்யா, அடுத்த ஆண்டு தானே கல்யாணம் ? சிரிப்பதற்கு எங்களுக்கும் காலம் வரும் !
:)
//நவநீத்(அ)கிருஷ்ணன் said...
:-)
//
இதைப்படிச்சும் சிரிப்பு வருதா ?
ஹூம் :(
//anandrey said...
க ைத நல்லாயிருக்கு நண்ப ேர...ெதாடர்ந்து எழுதுங்கள்
//
என்னது கதையா ?
பல ஆண்களோட வாழ்கை, பின்னுட்டங்களைப் படிச்சுப் பாருங்க அது உண்மை என்று தெரியும்.
//மங்களூர் சிவா said...
தலைப்பை பாத்துட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி வந்து படிச்சேன். எப்பிடி இருந்தாலும் வரும்காலத்தில தேவைப்படும்ல அப்படின்னு
:)
//
சிவா,
உங்களுக்குத்தான் எல்லா வேலையும் தெரியும் அப்பறம் என்ன கவலை ?
:)
//சுல்தான் said...
இது நல்லாருக்கே.
கனவு கினவு கண்டீங்களோன்னு பார்த்தா... ம். அதேதான்.
10:20 PM, July 13, 2008
//
சுல்தான் ஐயா,
கிண்டலாப் போச்சு...நமக்கு நாம் தான் ஆறுதல் படுத்திக் கொள்ளனும்.
:)
//NewBee said...
//பின்குறிப்பு : இது...சிறுகதை...! தலைப்பு கதைக்கு பொருத்தமானது...பரபரப்புக்காக வைக்கவில்லை. :)
//
ம்ம்ம்...உங்க மனைவி எப்பப் பின்னூட்டம் போடுவாங்க????? :P :D
//
பதிவெல்லாம் படிக்க மாட்டாங்க என்ற அசட்டு தைரியத்தில் தானே இதை எழுதுகிறேன்.
:)
//ஜோசப் பால்ராஜ் said...
நான் கூட முத பகுதிய படிச்சுட்டு உங்க வீட்ல இப்டி எல்லாம் நடக்குதேன்னு நினைச்சு உங்க மேல ரொம்ப பொறாமை பட்டுட்டேன் போங்க. //
நெனப்பு பொழப்பை கெடுக்குதாம் - பழமொழி :)
//அதுல சொல்லியிருக்கதுல ஒன்னு மட்டும் தவறாம நடக்கும், என்ன தெரியுமா? அடிக்கடி அலுவலகத்துல இருக்கவனுக்கு தொ(ல்)லை பேசியில அழைச்சி ஏதாவது பேசுறது.
11:41 PM, July 13, 2008
//
அலுவலகத்தில் டாவு அடிக்கிறீர்களா என்று கண்டுபிடிக்க,
அப்படியெல்லாம் வேவு பார்ப்பாங்களா ? அச்சச்சோ பாவம் நீங்கள்.
(கொளுத்தி போட்டாச்சு)
:))))))))))))))))
//பாரிஸ் திவா said...
இது உங்க சொந்த அனுபவமோ
1:29 AM, July 14, 2008
//
பாரிஸ் திவா,
கற்பனைவேறு வாழ்க்கை வேறு, ஒரு சில பொருந்தி போகும். கொலைக் கதை எழுதுபவர்கள் கொலை செய்துவிட்டு வந்து எழுதுவதில்லை.
//Praveen said...
Good Post.
Innum namakku work share panni family panndra culture develop aagulannu nenikkiren. yaarO oruthar, adhu kanavano illa manaiviyO, avanga 1 kai thaan Oongi irukkum padi irukku.. naveena remote family...
//
பிரவீன்,
இந்திய குடும்பங்களில் மணமுறிவு பெருகுவதும் கூட தற்போது கட்டாயம் அல்லது சூழல் ஆகியுள்ள இந்த ட்ரான்சிசன் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் தான்.
மாறுதல் என்பதை தடுக்க முடியாது. நீங்கள் எழுதி இருப்பதில் ஆணாதிக்கபோக்கு இல்லை.
கிட்டத்தட்ட இது சம்பந்தமாக நானும் ஒன்று எழுதி உள்ளேன். படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும் !!!!!!
http://saavu.blogspot.com/2008/07/blog-post_10.html
பாவம் அந்த பெண்
பொய்! பொய்! பொய்!
பாவம், அண்ணியார் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி குமுறி இருக்காங்க!
நான் தான் தேற்றி, "அதெல்லாம் லூசுல வுடுங்க அண்ணி, கோவி அண்ணன் வழக்கமா எழுதறதே அப்படித் தான்"-னு சொல்லிச் சமாளிச்சேன்! :-)))
அண்ணி, இந்தப் பதிவைப் படிச்சி, ஒரே தலைவலியா இருக்கு! ஒரு கப் காபி கிடைக்குங்களா?
உனக்கு இல்லாத காபியாப்பா? தோ...சுக்குக் காபி...
கோவி அண்ணா, காபி சுடுது! ஒரு ஆத்து ஆத்திக் குடுங்க! :-)))
கருத்துரையிடுக