பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2008

சென்னையில் வீடுகட்ட பொருள் உதவி !

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சென்னையில் விற்கும் விலைவாசியில் இடம் வாங்கிப் போட்ட கோடிஸ்வரர்களுக்கு... 'இடம் தான் வாங்கிப் போட்டிங்க, வீடுகட்டுவதற்கு என்ன செய்வீர்கள் ?

யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.

மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.

இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.

இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.

கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.

பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?

மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)

7 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

நானே இன்னும் 10 வருடத்தில் எப்படியும் வீடு கட்ட போவதால் அதுவரை யாருக்கும் விற்க போவது இல்லை

குசும்பன் சொன்னது…

//பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?//

போன் போட்டு வம்பு வளப்பாங்க, பதிவு போட்டு வம்பை வளப்பாங்க அது என்னாங்க லேபிள் போட்டு வம்பு...புச்சா இருக்கு.

ஏதும் உரம் வகையா?

இப்படிக்கு
அப்பாவி குசும்பன்

குசும்பன் சொன்னது…

என் கிட்ட இருப்பது 5 ம் சின்ன கல் ஆகவே ”சின்ன வீடு” தான் கட்ட முடியும்.. ”சின்ன வீடு” கட்ட விருப்பம் இருப்பவர்கள், முன் அனுபவம் உள்ள கோவியாரை கேட்டு ஆலோசனை பெற்று பின் வரவும்

ஜெகதீசன் சொன்னது…

:))

ஜெகதீசன் சொன்னது…

பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையா???

ஜெகதீசன் சொன்னது…

அப்ப கும்மியா??

மோகன் கந்தசாமி சொன்னது…

ஊடு கட்டி உதைக்கிரத்துக்கு அந்த கல் பயன்படுமா? :-)))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்