பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2008

தமிழகத்தில் கோட்சே பேரவை - அத்வானி, இல.கனேசன் ஆசியுடன் !

தேசபக்திக்கு பெயர் 'போன' பாஜக அமைப்பினரின் நல்லாசியுடன் பழனியில் கோட்சே பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் நோக்கம் நாது'ராம்' கோட்சேவை தேசபக்தராக இந்துக்களுக்கு (திரித்து) புரியவைப்பதாம். இதற்காக நாதுராம் கோட்சே தேச ப(க்)தரா ? அல்லது தேசவிரோதியா ? (அடைப்புக் குறி எனது உபயம்) என்ற தலைப்பில் பேசுவதற்கு தமிழ்நாடு முழுவது இந்து அபிமானிகளை திரட்டுவதற்காக திண்டுக்கல் நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதாக நக்கீரனில் சுவரட்டியின் படம் வெளியிட்டு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிகோலியவராம். கோட்சே ஒன்றுபட்ட பரந்த இந்தியாவை (அகண்ட பாரதம்) உருவாக்க முயன்றவராம். இந்த பேரவை நேதாஜியின் பிறந்தநாள் ஜன 23ஆம் தேதி அதை ஒட்டி(க்கொண்டு) ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது. கோட்சே பற்றிய கருத்தரங்கை நவ 15 ஆம் தேதி நடத்தியே தீருவோம் என்று பாஜக அமைப்பினர் தற்கால தேசப்பிதா (காந்தி நகரில் வேட்பாளராக இருக்கிறாரே) அத்வானி மற்றும் இல.கனேசன் ஆகியோரின் ஆசியுடன் கங்கனம் கட்டிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.

*****

இதுபோன்ற புதிய தலைவலிகள், இந்து - முஸ்லிம் பதட்டம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளும் கோவை குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவிதங்களுக்கும் நடைபெறுவதற்கான பிள்ளையார் (ஊர்வல) சுழியாக அமைந்துவிடும். குற்றவாளி என்று நிருபணம் ஆகி தூக்குதண்டனைப் பெற்ற ஒரு தேச துரோகிக்கு தமிழ்நாட்டில் பழனியில் காவடி எடுப்பது தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய விசயம். கோட்சேவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? இதையெல்லாம் இங்கே அரங்கேற்றுவதற்கான அவசியம் என்ன ? எதாவது இந்து -முஸ்லிம் கலவரத்தை உருவாக்கினால் மக்களை இந்து முஸ்லிமாக பிரித்து அரசியல் ஆதயம் காணலாம் என்ற கொடும் பேராசைத் தவிர இதற்கான நோக்கம் எதுவுமில்லை. கோட்சே தேசதுரோகியா, தேச அ(சி)ங்கமா என்று தெரிந்து கொண்டு இனி என்ன ஆகப்போகிறது. 'இந்து' அரசியலால் நாட்டின் பிரிவினை வாதமும் ஒற்றுமை இன்மையும் ஏற்படுமேயன்றி யாதொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. இவர்களின் எல்லைக் கடந்த இந்து அரசியலால் ஏற்கனவே நேபாளத்தில் புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாற்றம் அமைந்தது.

இந்து என்ற உணர்வுக்கு பதிலாக வெறியை ஏற்படுத்தும் இந்த இந்து அமைப்புகளினால் இந்து மதத்திற்கு சிறுமையும், வீழ்ச்சியும் ஏற்படுமேயன்றி பெருமையோ, மேன்மையோ எந்தகாலத்திலும் ஏற்படப் போவதில்லை.

இதுபோன்ற தவறான அமைப்புகள் கொடுக்கும் தைரியத்தால் எதிர்காலத்தில் ஆட்டோ சங்கருக்கும், மணல்மேடு சங்கருக்கும் கூட பேரவை ஏற்படலாம்.

மகாத்மா காந்திக்கு (என்றுமே) வெற்றி (ஜெ) .........!

7 கருத்துகள்:

Xavier சொன்னது…

எல்லாம் சுயநல அரசியல்

விஜய் சொன்னது…

எல்லாம் தேர்தல் சுரம்.

உடன்பிறப்பு சொன்னது…

பாகிஸ்தான் சென்று ஜின்னாவை போல் ஒரு மதச்சார்பற்ற மனிதரை கண்டதில்லை என்று சொல்லி தன் கட்சியினராலேயே கட்டம் கட்டப்பட்டவர் அத்வானி அவர் ஆசிர்வாதத்துடன் கோட்சே தேசபக்தர் என்று சொல்லப்படுவதில் வியப்பில்லை

ஜோதிபாரதி சொன்னது…

காந்தி ஒருவரை மட்டும் உயர்த்திக் காட்டுவதில் மற்றவர்களை விட்டு விடுகிறோம். வெள்ளைக்காரர்கள் எல்லா காலனி நாடுகளுக்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்துவிட்டார்கள். நமக்கும் கொடுத்தார்கள். காந்தியின் பங்கும் போற்றத்தக்கது, எனினும் மற்றவர்களின் தியாகங்களை நினைவு கூறவேண்டும்.
ஒரு நாட்டை அழகுற உருவாக்கியவர்களையே அவ்வாறு தேசபிதா என்று அழைப்பதில்லை. இவர்களையெல்லாம் அழைப்பதை அந்த இறைவன் இருந்தால் பொறுத்துக் கொள்ளமாட்டான்.
அன்புடன்,
ஜோதிபாரதி.

நையாண்டி நைனா சொன்னது…

இவை மட்டுமா????

நம் வரலாற்று புத்தகத்திலே நிறைய தவறு உண்டு. கற்பனை பாத்திரங்களுக்கும், இதிகாச பாத்திரங்களுக்கும் இடம் இருக்கும். ஆனால் உண்மையிலேயே சமுதாய முன்னேற்றத்திற்காக பாடு பட்டவர்களுக்கு இடம் இருக்காது, இருந்தாலும் திரித்து கூறப்பட்டிருக்கும்.

சிந்தித்து பார்த்தால் உங்கள் அனைவருக்குமே விடை தெரியும்.

பி.கு. எனக்கே அநேக சீர்திருத்த செம்மல்களை, அவர்களின் வாழ்வை, போராட்டத்தை, இந்த வலை பதிவுகளை படிக்க வந்தவுடன் படித்து தெரிந்து கொண்டேன்

Thamira சொன்னது…

இந்தக் காளான்களைப் பற்றியெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன் கோவி. இருப்பினும் உங்கள் ஆதங்கம் புரிகிறது.

Mastan சொன்னது…

கோவி,

என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. கோட்சே வைத்து எல்லாம் பேரவை, ம்ம்ம்... ஏதாவது செய்து மக்களை பிரிக்க வேண்டும், அதுதான் இவர்களுக்கு தேவை, அப்போதுதான் ஒட்டு வாங்க முடியும். சே என்ன மனிதர்களோ...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்