பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2008

இனி தமிழ்மணம் செய்ய வேண்டியது என்ன ?

மூன்று நாளாக மேட்டர் ஓடுது, ஏங்க நீங்களும் ஒரு மூத்த பதிவர் தானே ? ( மூத்த பதிவர் என்று இவனுங்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?) உங்கள் கருத்து என்ன ? என்ன ? ஜிமெயில் சாட்டில் ஒரே நச்சரிப்பு, ஒரு பத்து நாளைக்கு ஜிமெயிலையே திறக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

தலைப்பைப் பார்த்தீர்கள் தானே ?

இன்னும் ஒருவாரத்திற்கு தமிழ்மணத்தில் வரக்கூடிய பல்வேறு பதிவர்களின் பதிவுகளின் தலைப்புகள் இவைதான்

தமிழ்மணம் ஒரு பாசிச திரட்டி
தமிழ்மணம் நடுநிலையான திரட்டி
தமிழ்மணம் வெறும் திரட்டிதானே ?
தமிழ்மணத்தை இனி நம்பலமா ?
தமிழ்மணத்துக்கு 10 யோசனைகள்
**** பதிவரின் பிடியில் தமிழ்மணம்
காமக் கதைகள் ஆபசமானதா ? (101 ஆவது விளக்கமாக பதிவர் குசும்பன்),
தமிழ்மணம் ஒரு பாயாச திரட்டி,
தமிழ்மணம் ஒரு ஆயாச திரட்டி,
தமிழ்மணத்தினால் பயன் என்ன ?,
தமிழ்மணத்திற்கு இறங்கு முகம்,
தமிழ்மணத்திற்கு வரப்போகும் பொற்காலம் - ஜோதிட ரத்னா சுப்பையா வாத்தியார்,
தமிழ்மணத்தினால் பயனடைந்தேன் - டோண்டு ராகவன் (108 ஆவதுமுறையாக)
தமிழ்மணம் பதிவர் நலனில் அக்கரை காட்டுகிறதா ?
தமிழ்மண வளர்ச்சியில் பதிவர்களின் பங்கிடு
தமிழ்மணத்தால் பாதிப்படைந்தேன்
தமிழ்மணத்தால் கொதிப்படைந்தேன்
காமத்துப்பாலில் வரும் காமம் ஆபாசமானதா ? (50 ஆவது விளக்கம்)

இன்னும் எதும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க சேர்ப்போம் :)
**********

தமிழ்மணத்தில் எழுதாமல் வேறெங்காவது எழுதி இருந்தால் இன்னேரம் தேசிய அளவில் பேசப்படும் இலக்கியம் எழுதி, எழுதி... சாகித்திய அகாடமி விருது வாங்கி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருப்பேன் இருப்பேன். என்னுடைய நேரம் நான் இங்கே வந்து சிக்கிவிட்டேன். என்னுடைய வளர்ச்சியை கெடுத்துவிட்டது தமிழ்மணம் :) ஹிஹி

*********

யப்பா.....யாராவது எதாவது எழுதிட்டு போங்க, எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. நான் தமிழ்மணத்தை வெறும் திரட்டிதானே என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பந்தய குதிரை எல்லாமே குதிரைதான். பலம் உள்ளது மட்டுமே முதலில் வருகிறது. அதன் மீதுதான் பணமும் கட்டுகிறார்கள். பலனடைந்தவர்கள் எல்லா குதிரையும் குதிரைதான் என்று சொல்ல முயல்வார்களா ?
அம்புட்டுதான் நம்ம கருத்து !

பின்குறிப்பு : சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் பிரச்சனையை 'காம'டியாக்கிவிடனும் :) இந்த பதிவிற்கு நல் ஓசனை வழங்கிய பதிவர் பெருந்தகை குசும்பன் வாழ்க.

23 கருத்துகள்:

நிஜமா நல்லவன் சொன்னது…

:)

Athisha சொன்னது…

\\ எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. \\

நிச்சயமாங்கண்ணா

தமிழ்மணத்துக்கு நம்மால எதாவது பலன் இருக்கா ?

அத மட்டும் சொல்லிருங்க

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

தமிழ்மணம் இனி நிறுத்தப்படுமா? - அப்படின்னு கூட பதிவுகள் வரலாம். :)

ஓசை செல்லா சொன்னது…

ஓஹோ. அப்படிங்களாண்ணா? தெரியாதுங்களே. நீங்க வளர்ந்தது “நான் வளர்கிறேன் மம்மி” ந்னு காம்ப்ளான் குடிச்சுன்னுதானே இத்தனை நாளா நான் நெனைச்சிருந்தேன்! நீங்க தமிழ்மணம் குடிச்சு வளர்ந்த விசயம் இன்னைக்குத்தாங்கண்ணா அவுட் ஆகுது! முத்தமிழும் கற்பித்த தமிழ்மணம் அப்படின்னு அடுத்த பதிவு போட அடியேனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓசை செல்லா said...
ஓஹோ. அப்படிங்களாண்ணா? தெரியாதுங்களே. நீங்க வளர்ந்தது “நான் வளர்கிறேன் மம்மி” ந்னு காம்ப்ளான் குடிச்சுன்னுதானே இத்தனை நாளா நான் நெனைச்சிருந்தேன்! நீங்க தமிழ்மணம் குடிச்சு வளர்ந்த விசயம் இன்னைக்குத்தாங்கண்ணா அவுட் ஆகுது! முத்தமிழும் கற்பித்த தமிழ்மணம் அப்படின்னு அடுத்த பதிவு போட அடியேனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

6:57 PM, July 17, 2008
//

ஓசை செல்லா,

இந்த இடுகை தமிழ்மணம் சில இடுகைகளின் ஆபாசத் தலைப்புகளின் தடைகுறித்து வெளியிட்ட அறிக்கையும், அதற்கு பதிவர்களிடம் தோன்றிய எதிர்ப்பும் பற்றியது மட்டுமே, சம்மந்தப்பட்ட தலைப்புகளில் நானும் எழுதி இருக்கிறேன். சில பதிவர்கள் தனிப்பட்ட முறையில் இப்படி வேண்டாம், நீங்களும் ஏன் அதில் கலந்து கொண்டீர்கள் என கடிந்து கொண்டதும் மாற்றிக் கொண்டேன். இருந்தாலும் அந்த பிரச்சனை தமிழ்மணத்தில் கருத்து சுதந்திர தலையிடு என்ற விவாதமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தமிழ்மணத்தின் அந்த விளக்கப் பதிவிலும் பின்னூட்டமிட்டு இருக்கிறேன். இந்த இடுகை அதன் தொடர்புடையது மட்டுமே.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் இடையேயான மற்றொரு யுத்ததைப் பற்றியெல்லாம் நான் எதும் சொல்லவில்லை, அதில் துளிகூட விருப்பமும் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Unknown சொன்னது…

எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

மங்களூர் சிவா சொன்னது…

சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் பிரச்சனையை 'காம'டியாக்கிவிடனும் :)
:)

கோவி.கண்ணன் சொன்னது…

நிஜமா நல்லவன் said...
:)
//
ஹிஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...

நிச்சயமாங்கண்ணா

தமிழ்மணத்துக்கு நம்மால எதாவது பலன் இருக்கா ?

அத மட்டும் சொல்லிருங்க
//

அதிஷா,
உடனடி பலன் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதை வழிநடத்துபவர்களுக்கு தமிழ்மண நிர்வாகி என்கிற ஒரு அடையாளம் கிடைக்கும். காசி என்றால் தமிழ்மணம் காசி என்கிற அடையாளம் கிடைத்திருக்கிறது அல்லவா, பெயர் தான் கிடைக்கும், அதன் மூலம் அதைப் போற்றுபவர்களிடமிருந்து மதிப்பு கிடைக்கும். பதிவர்கள் ஆதரவு இல்லாமல் தமிழ்மணம் மட்டும் இயங்கினால் இவையெல்லாம் கிடைக்காது. மற்ற திரட்டிகளுக்கும் தமிழ்மணத்திற்கும் அதுவே வேறுபாடும் கூட

கோவி.கண்ணன் சொன்னது…

// Gnaniyar @ நிலவு நண்பன் said...
தமிழ்மணம் இனி நிறுத்தப்படுமா? - அப்படின்னு கூட பதிவுகள் வரலாம். :)
//

ஞானியார் வரும் வரும்.

தமிழ்மணம் இனி மட்டுறுத்தல் (sensor / moderation) நிறுத்தப்படுமா? - அப்படின்னு கூட பதிவுகள் வரலாம். :)

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

ஆமா கோவி இந்த விசயத்த காமெடியாக்கிடணும்.

நானும் என்பங்குக்கு ஆக்கிட்டேன்ல. :-))

மதுவதனன் மௌ

வால்பையன் சொன்னது…

//எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. //

இது தான் முழுக்க முழுக்க என் நிலையும்.
அந்த உதவியை மறக்க கூடாது

வால்பையன்

மோகன் கந்தசாமி சொன்னது…

////ஏங்க நீங்களும் ஒரு மூத்த பதிவர் தானே ? ( மூத்த பதிவர் என்று இவனுங்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?) /////

'மூத்த' என்ற சொல் வசைச்சொல்லாகிவிட்டது போலிருக்கே. சாட்டில் நிறைய பேர் வசை பாடிவிட்டார்களோ! கவலைப்படாதீங்க மூத்த பதிவரே! ....சாரி வெறும் பதிவரே
:-))))))))

ILA (a) இளா சொன்னது…

தமிழ்மணம்.,?

Sanjai Gandhi சொன்னது…

மேற் கூறிய தலைப்புகளில் சிறப்பாக பதிவு எழுதுபவர்களுக்கு அண்ணன் கோ.க அவர்களின் தலைமையில் அவர் சொந்த செலவில் பொற்கிளி வழங்கப் படும் என அறிவிக்கப் படுகிறது.. :)


... அண்ணே.. வலைச்சரத்தில் உங்களின் அப்பா பற்றிய பதிவு போட்டிருக்கேன்.. வந்துட்டு போங்கோ...

தருமி சொன்னது…

// எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. \\

ரிப்பீபீபீபீட்டேய்....

ஓசை செல்லா மாதிரி ஆட்களையும் கூட எனக்கு 'இங்கு' வந்த்தால்தான் தெரியும் :(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"இனி தமிழ்மணம் செய்ய வேண்டியது என்ன ?"//

இனி அல்ல, எப்பவும்...!

தமிழ்மணம் கமழ வாழ்த்துக்கள்!

கோ.க(ஜி.கே) என்பவர்களெல்லாம் மிகப்பெரிய தலைவர்களாக ஆகியிருக்கிறார்கள். ஆனால் நான் கோவி.கண்ணன் அவர்களை வலையுலக ஜாம்பவான் என்று அழைப்பதுண்டு. மூத்தப் பதிவர் என்றால் அவருக்கு வயதாகிவிட்டது என்று நினைத்துவிடப் போகிறார்கள். அவர் என்றும் இளைஞர்தான். அவருடைய எழுத்திலும் இளமை குடியிருக்கும்

அன்புடன்,
ஜோதிபாரதி.

பரிசல்காரன் சொன்னது…

வந்துடுச்சு...

வந்துடுச்சு...
உங்க பதிவு சூடான இடுகைல வந்துடுச்சு!

இதற்குத்தானே இத்தனை பாடுகளும்!

Jokes Apart...

எனக்கும் இந்த...
.
.
.
.
.


வேண்டாம். என் சுபாவத்துக்கு இந்த சீரியஸ் மேட்டரெல்லாம் ஆகாது! ஒன்லி காமெடி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
தமிழ்மணம்.,?
//

இளா,

தமிழ்மணம் நேற்று இன்று நாளையா ?

குசும்பன் சொன்னது…

//உங்கள் கருத்து என்ன ? என்ன ? ஜிமெயில் சாட்டில் ஒரே நச்சரிப்பு,//

இன்னும் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லாமலா இருந்தீங்க:)))

குசும்பன் சொன்னது…

//காமக் கதைகள் ஆபசமானதா ? (101 ஆவது விளக்கமாக பதிவர் குசும்பன்),//

அவ்வ்வ்வ்வ் நானா:((((((

காம கதைன்னா என்னான்னே எனக்கு தெரியாதே:(

குசும்பன் சொன்னது…

நான் தமிழ்மணத்தை வெறும் திரட்டிதானே என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பந்தய குதிரை எல்லாமே குதிரைதான். பலம் உள்ளது மட்டுமே முதலில் வருகிறது. அதன் மீதுதான் பணமும் கட்டுகிறார்கள். பலனடைந்தவர்கள் எல்லா குதிரையும் குதிரைதான் என்று சொல்ல முயல்வார்களா ?
அம்புட்டுதான் நம்ம கருத்து !///

அப்பாடா சொல்லிட்டீங்க:) எங்க சொல்லாமல் பதிவை முடிச்சுடுவீங்களோன்னு ஒரு வித பத பதைப்போடு படிச்சேன்:))

குசும்பன் சொன்னது…

//சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் பிரச்சனையை 'காம'டியாக்கிவிடனும் :) இந்த பதிவிற்கு நல் ஓசனை வழங்கிய பதிவர் பெருந்தகை குசும்பன் வாழ்க.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்