'மதவாத சக்திகளை அனுமதிக்க மாட்டோம்' என்ற கொள்கை அடிப்படையில் இடது சாரிகள் காங்கிரசுக்கான நிபந்தனை ஆதரவை... அமெரிக்காவுடன் ஆன அணு உடன்படிக்கைக்கு எதிராக விலக்கிக் கொள்ள, நம்பிக்கை இல்லா(த) / கோரும் தீர்மானத்தின் மீது தற்பொழுது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
செய்தி இதழ்களின் வாயிலாக வந்த செய்திகள் பலவற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ 25 கோடிகள் முதல் ரூ 100 கோடிகள் வரை பேரம் நடைபெறுவதாக கோடி(ட்டுக்)காட்டி அறிவிக்கின்றன
இடதுசாரிகள் உறுப்பினர் எண்ணிக்கை மொத்தம் 59, இந்த இழப்பை 59 பிற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆதரவாக திருப்புவதன் மூலம் தான் ஈடு செய்ய முடியும், ஒரு உறுப்பினருக்கு சராசரி(க்கும் குறைவுதான்) 50 கோடிகள் என்று வைத்துக் கொண்டாலும் ரூ 2950 கோடிகள், முழுமையாகச் சொன்னால் 3000 கோடி, கிட்டதட்ட தமிழகம் போன்ற ஒரு மாநில அரசின் ஆண்டுக்கான வரவு செலவு (பட்ஜெட்).
இப்படி பேரத்திற்கு செலவிடும் பணம் எதுவும் திரும்பப் போவதில்லை என்பதால், இதை காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கான கட்சியின் முதலீடு உறுதியாக சொல்லிவிடமுடியாது.
அதையெல்லாம் வீட இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கும் அளவுக்கு அம்பாணி சகோதர்களையே மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியிடம் அசையும் / அசையா சொத்துக்கள் இருக்கிறதா ? இவை செய்தித்தாள்களின் மூலம் பரப்படும் அவதூறு என்றால் காங்கிரஸ் கட்சி ஏன் பொய் செய்திகள் போடுவோர் மீது அவதூறு வழக்குக் போடக் கூடாது?
அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் மவுனமாக இருப்பதிலிருந்தே தெரிகிறது, திரைமறைவில் பேரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றே. அப்படியென்றால் இந்த பேரத்தில் பயண்படும் பணமெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியைக் காப்பாற்ற மனமுவந்து கொடுத்த நன்கொடையா ? அப்படி என்றால்,
இதுபோல் தேசியக் கட்சித் தொண்டர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்தே இந்தியாவின் கடன் அத்தனையையும் அடைத்துவிட்டு பணவீக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியுமே.
மக்கள் ஆட்சி என்றாலும், மன்னர் ஆட்சி என்றாலும், சர்வாதிகார ஆட்சி என்றாலும் பொதுவாகப் பார்க்கப் போனால் எல்லாம் பல்வேறு வேடத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலே. அரசியல்வாதிகளின் எண்ணமெல்லாம் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து அவர்களது வரிப்பணத்தில் சுகபோகமாக உண்டு கொளுத்துவிட்டு, அதன் பிறகு வரும் அவர்களுடைய தலைமுறைகெளெல்லாம் இனி உழைக்கமாலேயே சொகுசு வாழ்வை அனுபவிக்க வேண்டுமமென்பதற்காகவே சொத்துக்களை குவிக்கிறார்கள். இதில் அரசியல் கொள்கையாவது... மயிராவது..! எல்லாம் ஏமாற்று வித்தை, வாய்ச்சொல்.
இதையெல்லாம் பார்க்கும் போது, தன்னால் ஆரம்பிக்கப் பட்ட 'திராவிட கழகம்' என்ற இயக்கம் எந்த நாளும் அரசியல் கட்சியாக மாறிவிடக் கூடாது என்று நினைத்து அதில் உறுதியாக நின்ற தந்தைப் பெரியார் போற்றுதலுக்குரியவர்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல (no confidence motion). இது நம்பிக்கை கோரும் தீர்மானமென்று நினைக்கிறேன் (motion seeking confidence).
எதிர்கட்சிகள்தானே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்..?!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீங்க இவ்வளவு நல்லவரா....
சொல்லவே இல்லை...
அட போங்கப்பா போய் பிள்ளைகளை படிக்க வைக்கிற வழியயைப் பாருங்க..என்ற வசனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...
(என்று நியாயமாக இருந்தார்கள், இதில் மட்டும் எதிர்ப்பார்க்க..)
//தந்தைப் பெரியார் போற்றுதலுக்குரியவர்.//
எப்போதுமே.
அண்ணே, பெரியார் வேணும்ணா காசு விசயத்துல சரியா இருந்துருக்கலாம். இன்னைக்கு திராவிட கழகங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும்தானே?
திராவிடக்கழகம் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்திற்கு வரவில்லையென்றாலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டு சலுகைகளை அனுபவிக்காமல் இல்லை. கல்வி நிறுவனங்கள் மூலம் அவர்கள் அடிக்கும் கொள்ளை அநியாயமானது.
அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் எல்லோரும் கட்டாயம் விடுதலை இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்த வேண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
//ஜோசப் பால்ராஜ் said...

//
ஜோசப்,
பெரியாரைப் பற்றிதான் குறிப்பிட்டேன் மானமிகு வீரமணி ஐயாவைப் பற்றியல்ல. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
:)
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல (no confidence motion). இது நம்பிக்கை கோரும் தீர்மானமென்று நினைக்கிறேன் (motion seeking confidence).
எதிர்கட்சிகள்தானே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்..?!
//
சுந்தர்,
நம்பிக்கை இல்லா / நம்பிக்கை கோரும் தீர்மானம், ஒன்று
முந்தையது, அடுத்தது பிந்தையது ஆக இரண்டும் ஒன்று தானே. அதன் தொடர்ச்சி தானே வாக்கெடுப்பு
//Dharan said...
//தந்தைப் பெரியார் போற்றுதலுக்குரியவர்.//
எப்போதுமே.
//
தரண் நன்றி !
// TBCD said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீங்க இவ்வளவு நல்லவரா....
சொல்லவே இல்லை...
அட போங்கப்பா போய் பிள்ளைகளை படிக்க வைக்கிற வழியயைப் பாருங்க..என்ற வசனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...
(என்று நியாயமாக இருந்தார்கள், இதில் மட்டும் எதிர்ப்பார்க்க..)
//
டிபிசிடி ஐயர்வாள்,
மதங்களைப் போலவே அரசியல் பாதிப்புகளும் நம்மீது திணிக்கப்படும் ஒன்று, பேசாமல் இருக்க முடியாது !
:)
//போஃபர்ஸ் பணமெல்லாம் ஆட்சியை காத்துக் கொள்ளும் பேரத்துக்கா ?//
சரியானக் கேள்வி! மிகப்பெரிய பிரளயம் ஏற்படுத்திய வி.பி.சிங் அவர்களே அவர்கள் ஊழல் செய்யவில்லை என்று சொல்வது, நமக்குக் கசப்பான பொய்யாகவே தெரிகிறது.
அன்புடன்,
ஜோதிபாரதி.
கருத்துரையிடுக