பின்பற்றுபவர்கள்

24 ஜூலை, 2008

பட்டையைக் கிளப்பும் லக்கிலுக் !

லக்கிலுக்கின் (கிருஷ்ணகுமார்) எழுத்துக்கள் வார இதழ்களில் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு எழுத்தாளராக அவர் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழகுவதற்கு இனிய நண்பரான லக்கிலுக் இன்னும் குறுகிய காலத்திற்குள்ளேயே பல்வேறு தமிழ் ஊடகங்கள் அடங்கிய வாசிப்பு உலகம் அறிந்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு வளர்ந்துவிடுவார். எதை எழுதினாலும் நகைச்சுவை ததும்ப எழுதும் அவரது எழுத்துக்கள் வளரும் பதிவர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தையும், எழுதத்தூண்டும் ஆர்வத்தையும் கொடுக்கிறது.

நமக்கு தெரிந்த பதிவர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, பாலபாரதி, லக்கிலுக் என பதிவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக மாறி இருப்பது பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

லக்கிலுக் புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார் என்று அண்மையில் மற்றொரு பதிவரும் குறிப்பிட்டு இருந்தார். லக்கிலுக்குடன் உரையாடிய போது அடுத்த புத்தகக் கண்காட்சியில் லக்கிலுக்கின் புத்தகம் வாசிப்பதற்கு கிடைக்கும் என்றார்.

நேற்று.....

"நான் சுஜாதாவோ, பாலகுமாரனோ அல்ல. அதனால் என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்! :-) " - லக்கி லுக்

இன்று...

"நான் லக்கிலுக்கோ, யெஸ். பாலபாரதியோ அல்ல. என் எழுத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.. " - பரிசல்காரன்

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் லக்கிலுக் !!




அன்புடன்
கோவி.கண்ணன்

41 கருத்துகள்:

TBCD சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி...!!!

கிரி சொன்னது…

பட்டய கிளப்ப வாழ்த்துக்கள் இருவருக்கும் :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

லக்கியாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

சரவணகுமரன் சொன்னது…

லக்கிலுக் இன்னமும் பல ஊடகங்கள் மூலம் நிறைய ரசிகர்களைப் பெற வாழ்த்துக்கள்...

rapp சொன்னது…

அவர் இன்னும் பெரிய புகழ் பெற வாழ்த்துக்கள்

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

அன்புச் சகோதரன் லக்கிலுக்கிற்கும், பதிவிட்டு விளம்பரப்"படுத்திய" நண்பர் கோவிக்கும் பாராட்டுகள்!


எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் லக்கி! எந்த சூழ்நிலையிலும் உங்களின் எதார்த்த எழுத்து நடையையும் நகைச்சுவை உணர்வுடன் எழுதும் பாங்கையும் மாற்றிவிட வேண்டாம்!

முரட்டு நண்பன்!
சரவணன்.

உடன்பிறப்பு சொன்னது…

சீனியர் வாயால் வாழ்த்து பெற்ற உடன்பிறப்பு லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்கள்

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

அப்பப்பா, இப்போ எழுதின டமாரு கொமாரு கத இருக்கே, என்ன வேகம், என்ன நடை..லக்கி வாழ்த்துக்கள்

பரிசல்காரன் சொன்னது…

ஒருவர் புகழ்பெற லக்கோ, லுக்கோ இருக்கவேண்டும் என்பார்கள்! (இரண்டையும் கிண்டலடிப்பார் இவர்..!) இரண்டும் பெற்றிருக்கும் பதிவர் லக்கிலுக் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் சொன்னது…

இதுல கூத்து என்னான்னா, என்னோட ஒரு தொடர் பதிவுக்கு (சிவாஜி வாயிலே ஜிலேபி) நான் அடுத்ததா லக்கிலுக்கைக் கூப்பிட்டிருந்தேன். அவர் (இன்னும்) எழுதாம இருந்தார். மடல்ல கேட்டதுக்கு அவர் சொன்னார்.. “ஒரு வாரம் செம பிஸி தோழர். இந்த ஒரு வாரத்துல நான் பண்ற வேலைகள்தான் என்னையும் உங்களை மாதிரி பெரிய எழுத்தாளராக்கும்” ன்னு பதில் சொன்னார்!!

என்னை மாதிரி எழுத்தாளராம்!!!

பதிவுகள்ல கிண்டலும், நையாண்டியுமா வலம் வந்தாலும் பழகச் சிறந்தவர் லக்கிலுக்!

அவர் புகழ் மேலும் உயர வலையுலகம் சார்பாக வாழ்த்துவோம்!!

புதுகை.அப்துல்லா சொன்னது…

அண்ணன் லக்கிலுக் இன்னும் பல சிகரங்களை அடைய இறைவனை வேண்டுகிறேன்

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி...!!!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

லக்கி அண்ணா எழுதுன டமாரு கொமாரு கதைய நேத்துதான் படிச்சேன். நல்லா இருந்துச்சு.

அண்ணண் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கலக்கலான அறிவியல் கதைகளை எழுதிவரும் கோவி.க அண்ணணின் எழுத்துக்களும் விரைவில் பத்திரிக்கைகளை அடைய வாழ்த்துகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
வாழ்த்துக்கள் லக்கி...!!!
//

உங்களுக்கும் சிறந்த எழுத்துத் திறமை உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
பட்டய கிளப்ப வாழ்த்துக்கள் இருவருக்கும் :-)
//

கிரி,

அவரு பட்டைகளையும் கிளப்புபவர் தான். மகரநெடுங்குலைக்காதனின் பக்தன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
லக்கியாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கிங்க !

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
லக்கிலுக் இன்னமும் பல ஊடகங்கள் மூலம் நிறைய ரசிகர்களைப் பெற வாழ்த்துக்கள்...
//

லக்கி சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன்(சரா) said...
அன்புச் சகோதரன் லக்கிலுக்கிற்கும், பதிவிட்டு விளம்பரப்"படுத்திய" நண்பர் கோவிக்கும் பாராட்டுகள்!


எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் லக்கி! எந்த சூழ்நிலையிலும் உங்களின் எதார்த்த எழுத்து நடையையும் நகைச்சுவை உணர்வுடன் எழுதும் பாங்கையும் மாற்றிவிட வேண்டாம்!

முரட்டு நண்பன்!
சரவணன்.
//

அவர் பெரிய எழுத்தாளர் ஆனாலும் தொடர்ந்து பதிவராகவும் இயங்கிவரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

பாராட்டுக்கு நன்றி சரா.

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
அவர் இன்னும் பெரிய புகழ் பெற வாழ்த்துக்கள்

11:43 PM, July 24, 2008
//

அவர் சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
சீனியர் வாயால் வாழ்த்து பெற்ற உடன்பிறப்பு லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்கள்
//

உடன்பிறப்பு, கடந்த பிப்ரவரியில்
ஒரு வாழ்த்து செய்தியால் புண்ணாக்கப்பட்டேன். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும் பிறகு எரிச்சல் அடையவில்லை... காரணம் நான் கொடுக்கும் அங்கீகாரம் மதிப்புடையது என்றே புண்ணாக்கியவர்கள் உணர்த்தினார்கள்.

லக்கியுடன் அந்த நிலமை வராது. :)அப்படி வந்தாலும் லக்கியே அதையெல்லாம் சமாளிப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...
சீனியர் வாயால் வாழ்த்து பெற்ற உடன்பிறப்பு லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்கள்
//

உடன்பிறப்பு, கடந்த பிப்ரவரியில்
ஒரு வாழ்த்ட்து பதிவு எழுதியதால் புண்ணாக்கப்பட்டேன். ஆரம்பத்தில் எரிச்சல் இருந்தாலும் பிறகு எரிச்சல் அடையவில்லை... காரணம் நான் கொடுக்கும் அங்கீகாரம் மதிப்புடையது என்றே புண்ணாக்கியவர்கள் உணர்த்தினார்கள்.

லக்கியுடன் அந்த நிலமை வராது. :)அப்படி வந்தாலும் லக்கியே அதையெல்லாம் சமாளிப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//மதுவதனன் மௌ. said...
அப்பப்பா, இப்போ எழுதின டமாரு கொமாரு கத இருக்கே, என்ன வேகம், என்ன நடை..லக்கி வாழ்த்துக்கள்

1:20 AM, July 25, 2008
//

அவர் சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
ஒருவர் புகழ்பெற லக்கோ, லுக்கோ இருக்கவேண்டும் என்பார்கள்! (இரண்டையும் கிண்டலடிப்பார் இவர்..!) இரண்டும் பெற்றிருக்கும் பதிவர் லக்கிலுக் மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்!
//

நச்சின்னு நறுக்காக சொல்லி இருக்கிங்க. கிருஷ்ணகுமார் என்ற பெயருடையவர்கள் குசும்பு ஆளுங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
இதுல கூத்து என்னான்னா, என்னோட ஒரு தொடர் பதிவுக்கு (சிவாஜி வாயிலே ஜிலேபி) நான் அடுத்ததா லக்கிலுக்கைக் கூப்பிட்டிருந்தேன். அவர் (இன்னும்) எழுதாம இருந்தார். மடல்ல கேட்டதுக்கு அவர் சொன்னார்.. “ஒரு வாரம் செம பிஸி தோழர். இந்த ஒரு வாரத்துல நான் பண்ற வேலைகள்தான் என்னையும் உங்களை மாதிரி பெரிய எழுத்தாளராக்கும்” ன்னு பதில் சொன்னார்!!//

தரமான கேலி !

//என்னை மாதிரி எழுத்தாளராம்!!!//

நீங்க தான் சீனியர் எழுத்தாளர் ஆச்சே. நாங்கள் பதிவில் மட்டும் தான் எழுதி வருகிறோம்.நீங்கள் வார இதழ்களில் எழுதி கலக்கியவர் ஆச்சே.

///பதிவுகள்ல கிண்டலும், நையாண்டியுமா வலம் வந்தாலும் பழகச் சிறந்தவர் லக்கிலுக்!

அவர் புகழ் மேலும் உயர வலையுலகம் சார்பாக வாழ்த்துவோம்!!
//

வழிமொழிகிறேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அண்ணன் லக்கிலுக் இன்னும் பல சிகரங்களை அடைய இறைவனை வேண்டுகிறேன்

1:49 AM, July 25, 2008
//

நன்றி !

அப்துல்லா சார்,

நீங்கள் ஒரு மர்ம மனிதராமே !
உங்களைப் பற்றிச் சொன்னார்...ஆள் யாருன்னு தெரியல... ஆனால் நெருக்கமானவர் என்பதை உணர்த்துகிறார் என்றார் நண்பர் ஜோசப் பால்ராஜ் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
வாழ்த்துக்கள் லக்கி...!!!

10:05 AM, July 25, 2008
//

அவர் சார்பில் நன்றிங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

///ஜோசப் பால்ராஜ் said...
லக்கி அண்ணா எழுதுன டமாரு கொமாரு கதைய நேத்துதான் படிச்சேன். நல்லா இருந்துச்சு.

அண்ணண் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.//

ஜோசப் பால்ராஜ்,

லக்கி சார்பில் நன்றிங்கோ

//கலக்கலான அறிவியல் கதைகளை எழுதிவரும் கோவி.க அண்ணணின் எழுத்துக்களும் விரைவில் பத்திரிக்கைகளை அடைய வாழ்த்துகிறேன்.

11:13 AM, July 25, 2008
//

அச்சச்சோ...முன்பு சிங்கை தமிழ்முரசில் அடிக்கடி எதாவது எழுதியதை அனுப்புவேன் வரும். இங்கே பதிவுலகில் எழுத வந்த பிறகு அங்கு அனுப்புவதே இல்லை.

லக்கிலுக் சொன்னது…

பதிவுக்கும், வாழ்த்திய நண்பர்களுக்கும் கொஞ்சம் சங்கோஜத்தோடு நன்றி சொல்லி கொள்கிறேன் :-)

Unknown சொன்னது…

Heartily congratulation lucky, wish you all the best. May Almighty god makes you everything success in your life. I’m regular visiting your blog and entire post absolutely superb.

Thanks govi also, give us such opportunities for wishes lucky.

Anyhow govi, when I click post a comment link then I’m getting “Stack overflow at line: 1” error… nothing is going wrongly, just its display the error message and shows the comment box.

Can you check your script please?

Thanks
--Mastan

King... சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கிலுக் அண்ணன்...

King... சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கிலுக் அண்ணன்...

King... சொன்னது…

பரிசல்காரன் said...
\\\
பதிவுகள்ல கிண்டலும், நையாண்டியுமா வலம் வந்தாலும் பழகச் சிறந்தவர் லக்கிலுக்!

அவர் புகழ் மேலும் உயர வலையுலகம் சார்பாக வாழ்த்துவோம்!!
\\\

ரிப்பீட்டு...!

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
பதிவுக்கும், வாழ்த்திய நண்பர்களுக்கும் கொஞ்சம் சங்கோஜத்தோடு நன்றி சொல்லி கொள்கிறேன் :-)

12:36 PM, July 25, 2008
//

லக்கி,
தகுதியான ஒருவரை பாரட்ட கிடைக்கும் வாய்ப்புக் கூட பெருமையானது தான் அந்த வகையில் இந்த பதிவு எனக்கும் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//Mastan said...
Heartily congratulation lucky, wish you all the best. May Almighty god makes you everything success in your life. I’m regular visiting your blog and entire post absolutely superb.

Thanks govi also, give us such opportunities for wishes lucky. //

Mastan,
Thanks for your comments



//Anyhow govi, when I click post a comment link then I’m getting “Stack overflow at line: 1” error… nothing is going wrongly, just its display the error message and shows the comment box.

Can you check your script please?

Thanks
--Mastan
//

Yes, I also noticed. But it is not stop posting comments or not giving any trouble. That's why i didn't consider this error. I will try to debug this scrpit error.

Thanks for the info !

கோவி.கண்ணன் சொன்னது…

//King... said...
வாழ்த்துக்கள் லக்கிலுக் அண்ணன்...
//

கிங்(ஸ்) மூன்று பின்னூட்டத்திற்கும் சேர்த்து.

அவர் சார்பில் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

நிழல் தொண்டர் என்ற பெயரில் வந்த ஒரு போலியின் பின்னூட்டம் நிராகறிக்கப்பட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

போலியின் அல்லக்கையான மற்றொரு போலி இங்கே... லக்கிலுக்கை திட்டி அனுப்பிய மற்றொரு பின்னூட்டமும் நிராகரிக்கப்பட்டது.

Yogi சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி !!!! :)

வெண்பூ சொன்னது…

அடுத்தது என்ன லக்கி? சினிமாவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்வண்டு said...
வாழ்த்துக்கள் லக்கி !!!!
//

லக்கி சார்பில் நன்றி !

கோவை விஜய் சொன்னது…

சின்ன அண்ணா வளர்ச்சி கண்டு
பெரிய அண்ணா மகிழ்வு கொண்டு
மனம் திறந்த பாராட்டுக் கண்டு
பதிவுலகம் அளிக்குது மணக்கும் பூச்செண்டு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்