பின்பற்றுபவர்கள்

9 ஜூலை, 2008

எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மின்னஞ்சல் !

அப்பாவும், மகனும் என்ற தலைப்பில் மே 25, 2006ல் ஒரு கிறுக்கல் கவிதை எழுதி இருந்தேன். அதில் சேர்ப்பதற்கு பொருத்தமான படம் இணையத்தில் தேடிய போது ஒரு படம் அகப்பட்டது. தரவிரக்கம் (Download) செய்யாமல் படத்தை நேரடியாக இணைத்திருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த படத்திற்கு உடையவரின் (சொந்தக்காரர்) மனைவி திருமதி லிசா என்பவர் ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். மின் அஞ்சலின் விபரம்,

2008/7/6, LisaBdot :
LisaBdot has left a new comment on your post "அப்பாவும் மகனும் !":

Hi!
I'm hoping someone will be willing to tell me what this page says (and what is that pretty alphabet?).
The image that appears is my work, "Father and Son," a portrait sculpture of my husband reading to our son. It belongs to Youngsville Elementary School in Youngsville, NC. The photographer was Seth Tice-Lewis of Pittsboro, NC.
Thanks,
Lisa B.

அந்த படம் (Father_Son_2.jpg )எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர்கள் இணையத்தில் தேடிய போது எனது அந்த பதிவு அவர்களிடம் சிக்கி இருக்கும் என நினைக்கிறேன்.

அவருக்கு அவருடைய படத்தை வைத்து என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள ஆவல் மற்றபடி காப்புரிமை பிரச்சனையை அவர் எழுப்பவில்லை என்று புரிந்தது.

அந்த கவிதையை எளிமையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், அவரது படத்தைப் பாராட்டியும் மின் அஞ்சல் அனுப்பினேன். திருமதி லிசாவுக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லாததால் அவரது கணவர் திரு ஜோயல் எனக்கு அனுப்பிய பதில் மின் அஞ்சலில், எனது கவிதையின் பொருள் அவர்களை கவர்ந்ததாகவும், அவர்களின் பெருமை படுத்துவதாகவும் உணர்வதாக எழுதி இருந்தார்.

Dear Kannan,

I am Lisa's husband, Joel. I am writing because Lisa had surgery on her foot and can sit at the computer only for a short time.

The little boy is our son Ian. He is now 23 years old.

I read your poem and was quite moved. The poem says what I feel with my son.

Lisa and I were honored by your choice of her sculpture for your blog.

You are absolutely correct. It is very suitable.

Please continue to use it and tell your bloggers.

Lisa will write you soon and tell you the history of the sculpture.

Joel & Lisa Wolf

In a message dated 7/6/2008 11:13:54 A.M. Eastern Daylight


*****

அந்த தம்பதிகளின் அனுப்பிய மின் அஞ்சலைப் படிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனை பதிவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.



-கோவி.கண்ணன்

31 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
வாழ்த்துக்கள்!!!

rapp சொன்னது…

வாழ்த்துக்கள் கண்ணன் சார். கவிதையும் அருமை

Kavinaya சொன்னது…

வாழ்த்துக்கள் கண்ணன் அவர்களே! உங்கள் கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை:

//தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !//

கிரி சொன்னது…

கோவி கண்ணன் பல திறமையை வைத்து இருக்கீங்க..

கவிதை எல்லாம் கலக்குறீங்க..

நீண்ட நாட்களுக்கு பிறகு ..நாமே மறந்து போன நிகழ்வை திரும்ப அசை போடுவது அல்லது அதற்க்கு பாராட்டு கிடைப்பது..ஒரு சந்தோசமான தருணமே..

உங்களுடைய கவிதை மற்றும் இதை நாகரீகமாக எடுத்துக்கொண்ட அந்த தம்பதியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி சொன்னது…

கவிதையின் பொருள் புரிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான்!

என்ஜாய்!

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

anujanya சொன்னது…

கண்ணன்,

அழகிய சிற்பமும் அர்த்தமுள்ள கவிதையும் சேர்ந்த கதை நன்று.

அனுஜன்யா

பரிசல்காரன் சொன்னது…

//இரண்டு ஆண்டுகள் கழித்து //

நல்ல நோக்கத்துடன் செய்யப்படும் எந்தச் செயலுக்கும் பாராட்டு எப்பது வேண்டுமானாலும் கிடைக்கும்!

Congrats!

நையாண்டி நைனா சொன்னது…

I saw your "kavithai" now only. It was really good.
It is a fact about children of modern world.

(I apologize to type in English)

இவன் சொன்னது…

வாழ்த்துக்கள் கண்ணன்.... கலக்கல் கவிதை

//தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !//


ரசித்தேன் இந்த வரிகளை....

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தங்கள் புகழ் உலகெலாம் பரவ வாழ்த்துக்கள் கவிஞர் கோவி.கண்ணன்!
மாற்றான் இதயத்தையும் மல்லிகையாக்கி மணம் கமழச்செய்யும், மரிக்கொழுந்து கவிஞர் நீங்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
வாழ்த்துக்கள்!!!
//

மி(க்)க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
வாழ்த்துக்கள் கண்ணன் சார். கவிதையும் அருமை
//

rapp,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கவிநயா said...
வாழ்த்துக்கள் கண்ணன் அவர்களே! உங்கள் கவிதையில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை:

//தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !//
//

கவிநயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி, இன்னொருவரும் கூட இதே அடிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் பல திறமையை வைத்து இருக்கீங்க..
//

கிரி,

கவிதைக்கு தனி வலைப்பக்கம் வைத்திருக்கிறேன். ஆனால் அதில் மிகுந்து எழுதுவதில்லை.

//கவிதை எல்லாம் கலக்குறீங்க..//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

//நீண்ட நாட்களுக்கு பிறகு ..நாமே மறந்து போன நிகழ்வை திரும்ப அசை போடுவது அல்லது அதற்க்கு பாராட்டு கிடைப்பது..ஒரு சந்தோசமான தருணமே..//

ஆமாம் !

//உங்களுடைய கவிதை மற்றும் இதை நாகரீகமாக எடுத்துக்கொண்ட அந்த தம்பதியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//

ஆமாம், வெள்ளைக்காரர்களுக்கு அவர்களுடைய படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் கோபம் வரும். இவர்கள் அனுமதித்து பாராட்டி இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
கவிதையின் பொருள் புரிந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான்!

என்ஜாய்!
//
நன்றி பித்தானந்தா,

என்னுடைய மொழிப்பெயர்பையும் புரிந்து கொண்டார்கள் என்பதே எனக்கு அதைவிட மகிழ்ச்சி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
கண்ணன்,

அழகிய சிற்பமும் அர்த்தமுள்ள கவிதையும் சேர்ந்த கதை நன்று.

அனுஜன்யா
//

அனுஜன்யா,

பாராட்டுக்கு மிக்க நன்றி, நெகிழ்ச்சியாக இருக்கிறது !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//இரண்டு ஆண்டுகள் கழித்து //

நல்ல நோக்கத்துடன் செய்யப்படும் எந்தச் செயலுக்கும் பாராட்டு எப்பது வேண்டுமானாலும் கிடைக்கும்!

Congrats!
//

பரிசல்,
மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
I saw your "kavithai" now only. It was really good.
It is a fact about children of modern world.

(I apologize to type in English)
//

நையாண்டி நைனா,

மிக்க நன்றி !

ஆணி அதிகமோ ? சாட்டில் காணவில்லையே !

கோவி.கண்ணன் சொன்னது…

//இவன் said...
வாழ்த்துக்கள் கண்ணன்.... கலக்கல் கவிதை

//தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !//

ரசித்தேன் இந்த வரிகளை....
//

இவன்,

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
தங்கள் புகழ் உலகெலாம் பரவ வாழ்த்துக்கள் கவிஞர் கோவி.கண்ணன்!
மாற்றான் இதயத்தையும் மல்லிகையாக்கி மணம் கமழச்செய்யும், மரிக்கொழுந்து கவிஞர் நீங்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதி,

மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ! அதற்கு தகுதியுடயவனாக முயற்சிக்கிறேன். :)

லக்கிலுக் சொன்னது…

கோவிகண்ணன் வடகலை அய்யங்கார்!

தங்கள் புகழ் உலகமெல்லாம் பரவுவது குறித்து புளங்காங்கிதம் அடைகிறேன்.

தலைப்பில் 'காண்டு' ஸ்டைல் தெரிகிறதே?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
தங்கள் புகழ் உலகெலாம் பரவ வாழ்த்துக்கள் கவிஞர் கோவி.கண்ணன்!
மாற்றான் இதயத்தையும் மல்லிகையாக்கி மணம் கமழச்செய்யும், மரிக்கொழுந்து கவிஞர் நீங்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

லக்கி,

தலைப்பில் 'என்னை பாராட்டி வந்த அமெரிக்க மின் அஞ்சல்' என்று போட நினைத்தேன். அப்படி செய்தால் நீங்கள் சொல்லும் ஸ்டைல் என்று நினைத்து தவிர்த்தேன்.

இந்த பதிவுக்கு பொருத்தமான தலைப்பே நீங்களே சொல்லுங்களேன்
:)

லக்கிலுக் சொன்னது…

”எனக்கு ஏன் லிசாவை பிடிக்கும்? கன்னாபின்னாவென்று மொக்கை கோவி கண்ணனிடமிருந்து” - இந்த தலைப்பு ஓக்கேவா அய்யங்கார்?

கோவி.கண்ணன் சொன்னது…

//
லக்கிலுக் said...
”எனக்கு ஏன் லிசாவை பிடிக்கும்? கன்னாபின்னாவென்று மொக்கை கோவி கண்ணனிடமிருந்து” - இந்த தலைப்பு ஓக்கேவா அய்யங்கார்?

2:47 PM, July 10, 2008
//

:)

சென்ற வாரங்களில் நான் பாலியல் தொடர்பிலான பதிவுகள் எழுதியதால் இப்படி தலைப்பு வைத்தால் பலர் புறக்கணித்திருப்பார்கள்
:)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துகள்.. பரிசல்காரரின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! மகிழ்ச்சி!
சக பதிவர் என்ற முறையில் எங்களுகெல்லாம் பெறுமையும் கூட!!:)

வாழ்த்துக்கள்!

//எனக்கு ஏன் லிசாவை பிடிக்கும்? கன்னாபின்னாவென்று மொக்கை கோவி கண்ணனிடமிருந்து” - இந்த தலைப்பு ஓக்கேவா அய்யங்கார்?//

இவா அடங்கவே மாட்டாளா?:))

அன்புடன்...
சரவணன்.

தருமி சொன்னது…

மகிழ்ச்சியும்,
நெகிழ்ச்சியும்.

வாழ்த்துக்கள்

Vetirmagal சொன்னது…

Very touching ..

மனித நேயம் இதுதானா?

உங்களைப்பார்த்தால் கொஞ்சம் பொறாமைப்படத் தோன்றுகிறதே!

Lucky guy,

Congrats

இக்பால் சொன்னது…

மலரும் நினைவுகள் என்றும் மகிழ்ச்சியே. அந்த வெள்ளைக்காரரின் புன்னகையை என்னால் உணரமுடிகிறது. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்