பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2008

பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !

//இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:

காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?

பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...

கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..//

என்னை சவாலுக்கு இழுத்திருக்கும் ஜெகதீசன் தம்பி, இதெல்லலம் ஜிஞ்சுபி கேள்வி. இதுக்கு பின்னூட்டம் போடத்தெரியாத அனானிகளே கூட பதில் சொல்லிவிடுவார்கள்.

காக்கா - தமிழில் ஒரு காக்காவுக்கான பெயர்ச் சொல். கன்னடம், தெலுங்கு மொழிகளில் 'காகி' ன்னு சொல்லுவாங்க. உலகத்தில் எந்த நாட்டில் காக்காகளாக இருந்தாலும் (தலையில் விழும் 'அந்த கக்கா'... 'இருந்தாலும்' இல்லை) கா...கா ன்னு தான் கரையும். மத்த நாடுகளிலும் காகா வைக் காக்கா என்று பெயர் வைத்துக் கூப்பிடவில்லை என்பதால் காக்கா 'கா...கா' என்று கரையாமல் இல்லை.

காக்கை மட்டுமல்ல... அனைத்து பறவை இனங்களும், மழலைகளின் அழுகுரலும் மொழிக்கு அப்பாற்பட்டது.

இங்கே விடையை நேரடியாகாவே சொல்லிவிடுகிறேன். காகத்திற்கு தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி......'கா...கா' தான். தமிழில் பொருளின் தன்மைக்கு (எடுத்துக்காட்டு நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி) ஏற்ப பெயர் சொல் வழங்கி வருவதால் நாம் 'காக்கா' என்கிறோம். உறுதியாக சொல்கிறேன், நாம் காக்கா என்பதால் அது 'கா...கா' என்று கரையவில்லை.

அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). எளிமையான கேள்வி, ஆனால் இதுவரை யாரும் விடை சொல்லவில்லை. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பார்த்து இருந்தால் உங்களுக்கே தெரியும். இது பற்றிய நிபந்தனைகளை சின்னத் தம்பி ஜெகதீசன் (பெரிய தம்பி டிபிசிடி) பதிவில் படித்துக் கொள்ளுங்கள்

ஒரே கேள்வி :

தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?

பரிசலாரே...! விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த (மொக்கை) உடனே கேள்வியைக் கேளுங்கள்.

13 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

எனக்குத் தெரியும்...

ஜெகதீசன் சொன்னது…

மன்னிக்கவும்....
இந்த பதில் ஏற்றுக் கொள்ள முடியாது.

7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.
இந்த விதி பின்பற்றப் படவில்லை...
:P

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

அறிவியல் பூர்வமான விளக்கம்... :)
ஜெதீசனுக்குச் சரியான பதிலடி.

ஆனால் அறிவார்த்தமாக இல்லை :(

ஜெகதீசன் சொன்னது…

7வது விதிக்கு கொஞ்சம் விளக்கம்:

இதில் பதில் என்பது மொத்தப் பதிவும் இல்லை... கேள்விக்கான பதில் மட்டுமே!!!
முன்னுரை, அடுத்த பதிவருக்கான கேள்வி, மற்ற எந்த பின் குறிப்புகளும் இதில் வராது..

நிஜமா நல்லவன் சொன்னது…

///ஜெகதீசன் said...

மன்னிக்கவும்....
இந்த பதில் ஏற்றுக் கொள்ள முடியாது.

7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.
இந்த விதி பின்பற்றப் படவில்லை...
:P///


இதுக்கு தான் சொன்னேன் ஒரு நடுவர் குழு போட்டுடலாம்னு. சொன்னா கேட்டா தானே:)

இம்சை சொன்னது…

தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?

அவுட் ஆப் சிலபஸ் கொஸ்டின், நான் அப்புறம் வரேன்...

பரிசல்காரன் சொன்னது…

அப்பாடா.. நாளைக்கு என்ன மொக்கை போடலாம்-ன்னு நெனச்சிருந்தேன். ரொம்ப நன்றிங்க கண்ணன்!

//பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.//

ஆஹா,, சிக்கீட்டாங்கையா!!!

பரிசல்காரன் சொன்னது…

//அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). //

நான் K.B.கிருஷ்ணகுமார்-ங்க..

//தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?//


என்னங்க.. பதிலைத்தான் காப்பியடிப்பாங்க.. நீங்க என்னடான்னா, கேள்வியையே காப்பியடிக்கறீங்களே.. என்னமோ போங்க..

பரிசல்காரன் சொன்னது…

//பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !//

நான் பரிசல்காரன். `பரிசல்காரர்' அல்ல!

மரியாதையால் கிடைக்கும் தூரத்தை விட.. உரிமையோடு கிடைக்கும் அண்மையை விரும்பும் பாமரன் நான் என்பதாலேயே இந்தப் பெயர் வைத்தேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !//

நான் பரிசல்காரன். `பரிசல்காரர்' அல்ல!

மரியாதையால் கிடைக்கும் தூரத்தை விட.. உரிமையோடு கிடைக்கும் அண்மையை விரும்பும் பாமரன் நான் என்பதாலேயே இந்தப் பெயர் வைத்தேன்!
//

கிருஷ்ணகுமார்,

மிக்க நன்றி,

வெட்டிபயல், கப்பிபய இது போல் நிக்நேம் வைத்திருப்பவர்களுக்கு பின்னூட்டம் போடும் போது கூட தயக்கமாகவே அதைத் தவிர்த்து அவர்களின் பெயர்களையே பின்னூட்டத்தில் குறிப்பிடுவேன். உரிமை எடுத்துக் கொள்வதை விட கேட்டுப் பெற்றபின் பயன்படுத்துவதே நல்லது என்பது என் எண்ணம். பரிசல்காரன் என்றே இனி பின்னூட்டத்தில் சொல்கிறேன். போதுமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
எனக்குத் தெரியும்...//

அடக்கி வாசிக்க தெரியுமா ? வெளியே சொல்லாதிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அறிவியல் பூர்வமான விளக்கம்... :)
ஜெதீசனுக்குச் சரியான பதிலடி.

ஆனால் அறிவார்த்தமாக இல்லை :(
//

ஜ்யோவ்ராம் சுந்தர்,
இருப்பதை வைத்துதானே எழுதமுடியும் ? அதீதனிடம் தான் பயிற்சிக்கு வரவேண்டும் நான்
:)

Thamira சொன்னது…

ஜ்யோவ்ராம் சொல்வது போல பதிலின் 'மொக்கைத்தரம்' போதவில்லை. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். இடையே பரிசலின் காரன்' - காரர்' விளக்கம் புல்லரிக்க வைத்தது. (நிஜமாப்பா!). தட்டான் கேள்விக்கு பரிசலின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்