
பக்வா ஆடு, மாடு, பன்றி இறைச்சி என்ற வகைகளில் செய்யப்படுகிறது, இருந்தாலும் விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை, மற்றும் அது விரும்பி வாங்கப்படும் ஒன்றாகும். பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது, அதை வாங்கி பக்குவமாக (தணல் அல்லது நெருப்பில்) வாட்டி சிங்கை மற்றும் மலேசியாவில் விற்கிறார்கள், இவை மிளகு அடை போன்று தட்டையாக கருஞ்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவை ? தட்டையாக்கி இதை பதப்படுத்தும் போதே இதனுடன் காரம், இனிப்பு, சோயாச் சாறு மற்றும் உப்பு சேர்த்து வெயிலில் பாறைகளின் மீது காய வைப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு காய வைக்கப்பட்டதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடை பார்த்து காற்றுப் போகாமல் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகிறது, அதை கடைகள் வாங்கி நெருப்புத் தணலில் இரு பக்கமும் வாட்டி சுட சுட விற்பனை செய்கிறார்கள்.
சீனப்புத் தாண்டு சீசனில் இவற்றிற்கென சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும், விளக்குகள் அலங்காரங்களுடன் குறிப்பிட்ட சில கடைகளின் பக்வா சுவை மிகுந்தது என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவே இருக்காது (இருட்டுக்கடை அல்வா போன்று), அதற்கு வாடிக்கையளர் சொல்லும் காரணம், அவர்கள் தரமான மூலப் பொருள்களை நம்பிக்கையான இடங்களில் இருந்து வாங்கி பக்குவமாக செய்து தருகிறார்கள், உடல் நலத்திற்கு பாதுகாப்புடன் சுவைக்கும் குறைவில்லை என்பதே.
நம் மீனவர்கள் விற்காத அல்லது நொந்து போன மீனைக் குறுக்காக வகுந்து உப்பு சேர்த்து மணலில் காய வைத்து கருவாடு போடுவார்கள், வஞ்சிரம், கொடுவா மற்றும் வவ்வாள் மீன்கள் வீணாகமல் கருவாடு ஆக்கப்படுகிறது. பக்வா முன்பெல்லாம் விற்காமல் அல்லது பயன்படுத்தி மீதமான இறைச்சியை பதப்படுத்து பக்குவா செய்யப்பட்டதாம், தற்பொழுது இருமுறைகளில் அவற்றை தயாரிக்கிறார்கள், மெல்லப் பொடித்த இறைச்சியை தட்டையாக்கி செய்வது மற்றொன்று பெரிய துண்டங்களை சிறு சிறு தட்டையாக்கி செய்வது, இரண்டாம் முறையில் செய்வது விலை மிகுதி. இவ்வகை பாக்வா பெரும்பாலும் சதுர, செவ்வக வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மிகவும் தரமாக தாயரிக்கப்பட்டு அவை 5 செமி விட்டமுள்ள வட்டவடிவிலும் விற்கப்படுகிறது, அதற்கு பெயர் தங்கக் காசு (Golden Coin), இவை பெரும்பாலும் பரிசு பைகளாக வாங்கிக் உறவினர்களுக்கு அளிக்க தயாரிக்கப்படுகிறது.

மதம் சார்ந்த சீன விழாக்கள் மற்றும் சீன பாரம்பரிய திருமணத்தில் பக்வா கண்டிப்பாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று. தரமான பக்வா கிலோ 60 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது என்றாலும் பக்வா விலை கிலோவிற்கு 40 வெள்ளி என்பது மலிவான விலை. பெரிய சீன நிறுவனங்கள் தங்களுக்குள் விற்பனை உறவை பேன பக்வா அடங்கிய பெரிய பரிசு பொட்டலங்கள் மற்றும் பைகளை அனுப்பும். காரமும் இனிப்பும் சேர்ந்த இறைச்சி சுவையுடன் இருந்தாலும் காரம் மிகுந்த, இனிப்பு மிகுந்த, காரம் குறைந்த, இனிப்பு குறைந்த வகைகளில் பல்வேறு தரங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

நம்மக்களிடையே கருவாட்டுக் குழம்பு, மற்றும் உப்பகண்ட விரும்பம் போல், 40 வயதிற்கு கீழ் உள்ள சீனர்கள் இதை விரும்பி உண்ணுவது இல்லை, நன்கு பழகிய நாக்குகள் அந்த சுவையைத் தேடித் தேடி வாங்குகின்றனர். மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது, மிளகு அடை (தட்டை) போன்று தனியாகவும் கடித்து உண்ணுகிறார்கள், இது பார்க்க மென்மையாக வளைக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது.
உணவுகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு சுவை, இதில் பக்வாவுக்கு மட்டும் இடம் இல்லையா என்ன ?
நான் என் சீன நண்பர்கள் சிலரிடம் இந்த புத்தாண்டுக்கு பக்வா வாங்கியாச்சா ? என்று கேட்டால் சிலர் 'ஐயே......' என்பது போல் பார்கிறார்கள், சிலர் 'யெஸ்....' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.
இன்னொரு நாள் 'பக்குத்தே' என்ற பன்றி இறைச்சி வகை உணவு பற்றி எழுதுகிறேன். அவை பெரும்பாலும் உள்ளுறுப்புகள் எனப்படும் பன்றி ஆர்கன்களில் செய்யப்பட்ட ஒரு வகையாக சூடான சாறு வகை. கணவாய் மீன், அக்டோபஸ் மற்றும் பாம்பு கருவாடுகளையெல்லாம் இங்கு தான் பார்க்கிறேன்.
இவற்றையெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் சாப்பிடுபவர்களின் ரசனையை ரசித்து இருக்கிறேன்.

அன்றைய விற்பனையில் 'பக்வா' தீர்ந்து போன அறிவிப்பின் பிறகும் வரிசையில் நிற்பவர்கள் (Bah Kwa's sold out for the day)


'பக்வா' வாங்கி வர அனுப்பி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் (சர்சை My boss told me to come, so I came, cannot argue. I'm very tired,' )
5 கருத்துகள்:
கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்...நல்லத்தான் இருந்துச்சு ..
வணக்கம் நண்பரே,
அருமை.நான் மாமிச உணவில் வித்தியாசம் பார்ப்பது இல்லை.புகைப்படங்கள் உண்ண தூண்டுகின்றன.நம்ம ஊர் மாட்டுக்கறி உப்புக் கண்டம் எனக்கு பிடித்த சைட் டிஷ்!!!!!!!!!!!!.இந்தியாவில் சைன உணவகங்களில் பக்வா கிடைக்குமா என்று பார்த்து சுவைக்க வேண்டியதுதான்!!!!!!!!!.
நன்றி
// சார்வாகன் said...
வணக்கம் நண்பரே,
அருமை.நான் மாமிச உணவில் வித்தியாசம் பார்ப்பது இல்லை.புகைப்படங்கள் உண்ண தூண்டுகின்றன.நம்ம ஊர் மாட்டுக்கறி உப்புக் கண்டம் எனக்கு பிடித்த சைட் டிஷ்!!!!!!!!!!!!.இந்தியாவில் சைன உணவகங்களில் பக்வா கிடைக்குமா என்று பார்த்து சுவைக்க வேண்டியதுதான்!!!!!!!!!.
நன்றி//
சைனீஸ் ஒரிஜினல் 'ப்ரைட் ரைஸ்' நன்றாக இருக்கும், அதை சாப்பிட்டுவிட்டு இந்தியாவில் சைனீஸ் ப்ரைடு ரைஸ் என்று சொல்லப்படுவதை வாங்கிச் சாப்பிட்டால் சுவை வேற மாதிரி இருக்கும்.
//பிரியமுடன் பிரபு said...
கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தேன்...நல்லத்தான் இருந்துச்சு ..//
வெல அதிகமாம், நேற்றைய விலை 44 வெள்ளி என்று எனது சீன நண்பர் புலம்பினார்
//மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது//
நீங்கள் சொல்லுவதையும் படத்தையும் பார்த்தால் நான் விரும்பி ப்ரட்டுக்கு நடுவே வைத்து சாப்பிடும் பன்றி இறைச்சியில் செய்த sausage விட உப்பு கண்டம் சுவையாக இருக்கும் போல் தெரிகிறதே!
கருத்துரையிடுக