இது போன்ற அதிர்ஷ்டங்கள் பிறரின் இழப்பின் எதிர்வினையான நிகழ்வு மட்டுமே. மனித குணம் தன்னலமாக மாறியதற்கு முதலில் மக்கள் தொகை பெருக்கமும், அதற்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றிற்கு போதிய பொருளாதார வசதி இன்மையே. ஓரளவு பொருளியல் வளர்ச்சியில் உள்ள நாடுகளில் திருட்டுப் பழக்கம் குறைவு தான், பிறர் பொருளை எடுப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், அங்கெல்லாம் களவு என்பது அன்றாட நிகழ்வு அல்ல, ஆனால் நிகழ்ந்தால் அது அன்றைய செய்தியாகிவிடும். ஆயிரம் மதங்களும் அதில் நாலாயிரம் பிரிவுகளும் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலனவர்கள் அடிப்படை நேர்மைகளை கற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல எதுவுமில்லை, காரணம் வயிற்றுப் பாட்டுக்கு முன்பு மதமாவது மண்ணாங்கட்டியாவது. அவற்றையெல்லாம் மீறி மனிதனில் சிலர் நேர்மையாளனாக இருப்பதற்கு காரணம் தன்னளவில் அவற்றை விரும்புகின்றனர் அதற்கு மதமோ மண்ணாங்கட்டியோ காரணமாக அமைவதும் இல்லை. ஏழைப் பணக்காரன் இவற்றிற்கு இடையேயான பொருளாதார இடைவெளி மனித நேர்மையை தொலைவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
மேலே புகைப்படத்தில் உள்ள அம்மா இரயில் பெட்டியை தூய்மை செய்யும் ஒரு துப்புரவாளர் தான், அவர் நினைத்திருந்தால் பணத்தை பதுக்கி இருக்க முடியும், ஆனால் மிகவும் நேர்மையாக அவற்றை ஒப்படைத்திருக்கிறார். இந்த தகவல் வாரம் பழையது என்றாலும் நான் இதனை இங்கு குறிப்பிடக் காரணம், நேர்மையாளர்களை தேடிப் பிடிக்கும் அளவுக்குத்தான் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நாட்டில் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கே நேர்மையாளர்கள் தென்படுகிறார்கள்.
இன்னும் ஒருவர் அவர் பெயர் 'பரிஜத் சாஹா'. தன் பெயரில் தவறாக செலுத்தப்பட்ட 49000 கோடி இருப்புக் கணக்கை வங்கியிடம் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி தானாகவே முன்சென்றிருக்கிறார்
நம்பிக்கை அடிப்படையில் ஆட்சிக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் திருடர்களாகவே மாறியுள்ளனர், கோடிகளில் ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் இவர்களது காலில் விழுந்து வணங்க மிகவும் தகுதியானவர், திருத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகள் இவரின் சிறு நீரைக் கூட குடிக்கலாம்.
6 கருத்துகள்:
கடைசி வரி, முழு பதிவின் நோக்கத்தையே மாற்றிவிட்டதாக உணர்கிறேன். சிறுநீரை குடித்தால் குணம் மாறுமா? எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு.
இப்பொழுதுதான் பதிவர் சுவனப்பிரியன் அறிவியல் விளக்க பதிவுக்கு பின்னூட்டம் போட்டு விட்டு வந்தேன்.
வழியில் நீங்க தென்பட்டீங்க:)
திருப்பூரில் பல நிறுவனங்களில் அடிமட்ட வேலைகள் பார்க்கும் பலரும் இவரைப் போன்றே முழுமையான நேர்மையோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எந்த முதலாளி வர்க்கமும் இவர்களை அதிக அளவுக்கு கண்டு கொள்வதும் இல்லை. இவர்களும் தங்கள் நேர்மையான குணத்தினை மாற்றிக் கொள்வதும் இல்லை.
ஜோதிஜியின் கருத்தை நான் முழுவதும் ஒத்துகொள்கிறேன். அவர் கருத்துதான் என் கருத்தும்
// சிறுநீரை குடித்தால் குணம் மாறுமா? எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு.//
இது சொலவாடை தான், வாத்தியார்கள் சில சமயம் பெற்றோர்கள் கோபமாகச் சொல்லுவார்கள். மற்றபடி சிறுநீரைக் குடித்தால் நோய் தான் வரும்.
மனிதனுக்கு எந்த சூழ்நிலையிலும் எந்தச் செயலுக்கும் நல்லது எது, கெட்டது எது, என்று தெரிந்து விடும். இதன் படி நடப்பவனே மனிதன். அவ்வாறு நடப்பதற்கு வேறு யாரும் எவையும் சொல்லித் தர தேவையில்லை. நான் அவ்வாறு நடக்க மாட்டேன் என்றால் யாராலும் கட்டுப்படுத்தமுடியாது மற்றும் அது சட்டத்தை மீறிய செயலாக இருந்தால் அதன் படி அவன் தண்டனை பெறுவான்.
கருத்துரையிடுக