பின்பற்றுபவர்கள்

12 ஜனவரி, 2012

மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் !

நாத்திகவாதத்திற்கு எதிராக எப்போதும் வேண்டுகோள் என்ற பெயரில் எள்ளி நகையாடப்படுவதில் ஒன்று "உங்க நாத்திக பிரச்சாரங்களை உங்கள் குடும்பத்தினருக்கு செய்தீர்களா ?, அவர்கள் வழிபாடு செய்வதை உங்களால் தடுக்க முடிகிறதா ?" ஐயா வெறும் வழிபாடு மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வழிபாடுகளை நாத்திகன் பழித்ததாகத் தெரியவில்லை, ஒரு நாத்திகனின் மனைவி வீட்டுகுள் சூடம் கொளுத்துவது அதிகபட்சமாக சூடத்தில் களப்படம் இருந்தால் கரும் புகையினால் கண் எரிச்சல் தரும் அவ்வளவு தான், அவற்றை நாத்திகர் பொறுத்துக் கொள்கிறார்கள். கழிவறை செல்லும் விருப்பங்களை யாருமே தவறு என்ற சொல்லமாட்டார்கள். அவரவருக்கான உந்துதல் என்ற அளவில் நாத்திகன் வழிபாடு செய்பவர்களை பழிப்பது கிடையாது, நடுத்தெருவை கழிவறையாக்கினால் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது அது போல் தான் ஆன்மீகம் என்ற பெயரில் பொது இடத்தில் மதவியாபாரங்கள் கடைவிரிக்கப்படும் போது மதத்தீவிரவாதத்தின் தன்மைகள், பாதிப்புகள் சுட்டப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாத்திகன் ஏன் தன் வீட்டினரின் வழிபாட்டை கேள்வி கேட்பதில்லை என்பது இப்பொழுது தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பெரும்பாலும் நாத்திக பிரச்சாரங்கள் மூடநம்பிக்கை, மதவாத மற்றும் மனித இன வெறுப்புவாதங்களை எதிர்த்தும், அவ்வாறு எதிர்க்க அவற்றில் பிணைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி துவங்கி மூடநம்பிக்கை, மதவாதாங்களை முற்றிலும் தகர்க்க முடியாவிட்டாலும் அவற்றில் உள்ள பித்தலாட்டங்களை, அரசியல்களை வெளிச்சம் போடுவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் விழிப்புணர்வு தூண்டலை தம் பிரச்சாரங்கள் மூலம் செய்கின்றன நாத்திக வாதங்கள், நாத்திகவாதம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமே சார்ந்தவை அல்ல, நாத்திக வாதமென்பது புத்தர் காலத்திற்கு முற்பட்ட தேவையாக இருந்து இன்றும் அவை தேவை என்பதாக உள்ளது என்பது அவை தொடர்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,

மதவாதிகளால் இந்த உலகம் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனவே அன்றி ஒருமித்த ஒற்றுமைகான தீர்வு அவர்களால் என்றுமே சொல்லப்பட்டு இருந்ததில்லை என்பதை, ஒரு மதம் என்பது பிரிதொரு மதத்தை நாத்திக மதமாக பார்க்கிறது என்பதிலிருந்து அனைவருக்குமே தெரியும், ஏனெனில் மதக்கட்டுமானத்தில் கடவுள் என்பது அம்மதத்தை மட்டுமே உண்மையானதாகவும், அந்தக் கடவுள் மட்டுமே உண்மையானதாகவும் பிரிது யாவும் போலி என்றும் நம்பிக்கையற்றோர் என்றும் கூறிவருகின்றனர். மதவாதிகளை பொதுப்படுத்திக் கேள்வி கேட்கும் போது அவர்கள் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொண்டு தாங்கள் மதவாதிகள் அனைவரும் ஒரே இறைவனை நம்புவதாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அதில் இம்மியும் உண்மை இல்லை, ஒரு வழிபாட்டுத்தளத்தின் திருவமுதை, கடவுள் ஒன்றே என்றால் மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா ? ஆனால் அவர்கள் என்றுமே அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை, தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்த்து புறக்கணிக்கின்றனர் என்பது தான் உண்மை, மதவாதிகளின் மத, கடவுள் அரசியல் அறியாத பொது மக்கள் மட்டுமே எந்த வழிபாட்டுத் தளங்களையும் புறக்கணிப்பது இல்லை.

*****

மதவாதிகளே,

1.உங்கள் மதமோ மார்கமோ, நல்வழியோ எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் நன்றாக உள்வாங்கி இருப்பதாகவும், அவற்றின் படியே நடந்தால் உலகம் உய்வுரும் என்று சொல்லுகிறீர்கள், அப்படி என்றால் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களிடம் வந்து பிரச்சாரம் செய்வதை விட அவற்றைப் பற்றி உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?

இயந்திரவியல் படித்து அதன் படி, அல்லது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நல்ல நிலையில் இருப்பவர்களிடம் வந்து நீ மருத்துவம் படித்தால் இன்னும் சம்பாதிக்கலாம் என்று கூறுவது அபத்தம் தானே, அதற்கு பதிலாக ஏற்கனவே மருத்துவம் படித்து பாதியில் ஓடி அல்லது தேராமல் வெளியேறி அரசுக்கு தெரியாமல் அரை குறை மருத்துவம் பார்த்து நான்கு பேர் செத்துப் போவதற்கு காரணமான ஒருவருக்கு முறையான மருத்துவ பாடங்களை கற்றுக் கொடுப்பது எளிதா ? அல்லது முற்றிலும் துறைக்கே தொடர்பில்லாத ஒருவருக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்து மாமேதை ஆக்குவோம் என்று கூறி செயல்படுவது எளிதா ?


2. உங்கள் மதத்தின் உட்பிரிவுக்குள் ஒரு பிரிவான நீங்கள் மட்டும் தான் அக்மார்க் மற்றதெல்லாம் ஆகாத மார்க் என்கிறீர்கள், அப்படி என்றால் உங்கள் பிரச்சரங்களை உங்கள் உட்பிரிவுகளுக்கு நீட்டித்து அவர்களையெல்லாம் உங்கள் அக்மார்க்கத்துக்கு திருப்பிவிட்டு உங்கள் மதம் சாராதவர்களிடம் உங்கள் பிரச்சாரம் செய்யலாமே, உங்கள் மார்கத்தை ஓரளவு உள்வாங்கியவர்கள் புரிந்து கொள்ள முடியாதவற்றை உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பின் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை. அதாவது உங்கள் வீடு தூய்மையானது என்றால் உங்கள் தெருவில் வசிக்கும் மற்றவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி மாற்றிவிட்டு அதன் பிறகு பக்கத்து தெருவோ வீடோ தூய்மையாக இருக்கிறதா என்று பார்க்கலாமே ?

3. மதவாதிகளே, உங்கள் கூற்றுப்படி, உங்கள் புனித நூல்களின் படி உங்கள் கொள்கைகளை ஏற்காத எவரும் நரக நெருப்பில் வாடுவார்கள் என்று நன்கு தெரிந்துள்ளீர்கள், நரக நெருப்பில் வாடப் போகிறவர்களுக்காக வருந்தாமல் அவர்களின் தற்கால வாழ்க்கையையும் உங்கள் மதத்தீவிரவாதங்களின் தற்கொலைகளால் நரகமாக்கப்படுவது உங்களுக்கு தெரியவில்லையா ? நாங்களெல்லோரும் இந்த பூமியோ சொர்கம், அதில் தத்தமவருக்கு கிடைத்தவர்களே உடனிருக்கும் சொர்கவாசிகள் என்று மெய்யான இந்த உலகை சொர்கமாகத்தான் நம்பியுள்ளோம், கற்பனை மற்றும் நம்பிக்கை சார்ந்த சொர்கம் பற்றி எங்களுக்கு கவலை எதுவும் கிடையாது, எங்களை எங்களது உலக சொர்கத்திலாவது அமைதியாக வாழவிடலாமே, உங்கள் கூற்றுபடி நரகத்திற்கு செல்லும் முன்பாவது நாங்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகிறோம், அதை செய்ய உங்களுக்கு என்ன தயக்கம் ?

4. கடைசி நாள், தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு நன்கு தெரிவதாகச் சொல்கிறீர்கள், அப்படி என்றால் அது குறித்த சிந்தனையில் உங்கள் கவனம் இருந்து உங்கள் சொர்க வாயிலின் டோக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்கள் மதம் சார்ந்த ஈகைகளை செய்ய முயற்சி எடுக்காமல் அவற்றில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நீங்கள் செய்யும் மதவாதப் பிரச்சாரம் உங்கள் நேரங்களை விழுங்குவதுடன் டோக்கன் உங்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் அபாயம் இருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா ?முதலில் உங்களை மேன்மைபடுத்திக் கொண்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் மத மார்க்கப்படி நீங்கள் ஆகாய மார்கமாக சொர்கம் செல்லுவீர்க்ள், ஆனால் நாங்கள் தரை மார்க்கமாக பேருந்திலோ, தொடர்வண்டியிலோ தான் செல்லவேண்டி இருக்கிறது, அதில் குண்டு வெடிப்பதால் எங்கள் வாழ்க்கைச் சொர்கம் நரகமாக்கப்படுகிறது என்பதால் இந்த வேண்டுகோள்.

*****

மதத் தீவிரவாதம் பற்றிய விக்கி இணைப்பு

ஒரே மதத்தைச் சார்ந்த பல நாடுகளில் சில உணவுக்கு வழியே இல்லாத ஏழைகளைக் கொண்டதாகவும் பிற மீதமான உணவை கடலில் கொட்டுவதாகவும் உள்ளன, இதிலிருந்து மதம் என்பது ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதாரத்தை சமப்படுத்தும் சாதனம் இல்லை என்று நன்கு தெரிந்து கொள்ளலாம், இதை ஒப்புக் கொண்ட நாடுகள் தங்களை மதச் சார்பற்ற நாடுகள் என்று கூறிக் கொள்கின்றன, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தங்கள் நாடு மதச் சார்பற்ற நாடாக தொடர்வதையே விரும்புகின்றனர், அதன் மூலம் மதம் சார்ந்த தங்கள் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் நாம் பெரும்பான்மை நிலைக்கு வளர்ந்து இந்த நாடு நம் மதம் சார்ந்த நாடாக மாறவேண்டும் என்ற தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் ஒத்துவராத முரண்பட்ட கனவும் காண்கிறார்கள்.

உலகில் எந்த ஒரு காலகட்டத்திலும் 100 விழுக்காடு ஒரே மதத்தைப் பின்பற்றிய மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது அவை இனியும் ஏற்படாது என்பது தெளிவு, எனவே தம் பின்பற்றும் மதம் உலகின் ஒரே மதமாகும் என்கிற கனவுகளை மதவாதிகள் கைவிட்டுவிடலாம், தேவைக்கேற்ப ஊருக்கு பொதுக் கழிவறைகள் உருவாவது போல் மதங்களோ, புதிய மதங்களோ உருவாகிவிடும், இவை திறந்த வெளி கழிவறையாகி தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்படும் முன் அங்கு நாத்திக கழிவறைகளும் மாற்றாக ஏற்பட்டுவிடும். இது தான் இதுவரை நடந்துள்ளது.

பின்குறிப்பு : நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை, அவற்றின் கடைகோடிகளை முற்றிலும் அறியாத நிலையில் அவற்றில் எந்த ஒரு நிலையையும் நான் சார்ந்து இருப்பது இல்லை, இதனால் என்னால் போலி மதவாதிகளையும், போலிச்சாமியார்களையும், மதத்தீவிரவாதிகளையும் 'இறை அச்சம்' எதுவுமின்றி விமர்சனம் செய்யமுடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரை வேண்டுகோளில் நான் எந்த ஒரு தனிமதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை, அப்படி உங்களுக்குத் தோன்றினால் உங்கள் மதத்தின் மீதான உங்கள் ஆழ்ந்த பார்வை உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது என்றே பொருள்.

நான்கு பேர் மத்தியில் யாராவது குசு விட்டிருந்தால், விளையாட்டாகச் சொல்லுவார்கள், 'குசு விட்டவன் கை சிவந்திருக்கும்' இதுல என்ன நகைச்சுவை என்றால் தன் கை சிவந்திருக்கிறதா என்று குசுவிடாதவரும் பார்ப்பார், அவ்வாறு பார்க்கத் தேவை இல்லை என்பது தான் பின்குறிப்பின் செய்தி. மதவாதிகளே நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பொதுப்பயம் பலரின் வெளிப்படையான விவாதங்களை தடுக்கிறது, கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கான வெற்றி அல்ல, அது உங்கள் மீது படித்திருக்கும் பொதுப்பார்வை, அவற்றை ஏற்படுத்தியது நீங்கள் தான், முடிந்தால் அவற்றை களைய /கழுவ முயற்சி செய்யுங்கள். நான் தனிமனித தாக்குதல்களோ, தனிமதத் தாக்குதலோ செய்வதில்லை என்பதில் உறுதியாகத்தான் உள்ளேன். எனக்கு புத்தமதம் உள்ளிட்ட அனைத்த மதங்களில் ஏராளமான நெருங்கிய நண்பர்கள் உண்டு.

மத நம்பிக்கைகள் கழிவறை பயன்படுத்துவது போன்று தனிமையான, யாருக்கும் தொந்தரவு செய்யாத, யாருடைய தொந்தரவையும் விரும்பாத ஒரு தனிமனித தேவை மற்றும் விருப்பம் போல் இருந்தால் அவை விமர்சனம் செய்யப்பட மாட்டாது.

55 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நல்ல கேள்விகள்தான்!!!!!!
நம்ம சகோக்கள் பதில் அளிக்கு முன் அந்த பதில்கள் இப்படித்தான் இருக்கும் என ஒரு அனுமானம்.
1.இந்த தீவிரவாதம் அனைத்தும் (அமெரிக்கா& கோ வின்) பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மட்டுமே.இதனை மதத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது.
இது பிற‌ ம‌த‌த்த‌வ‌ராலும் இத்த‌கைய‌ போராட்ட‌ங்க‌ள் முன்னெடுக்க‌ப் ப‌டுவ‌தை ம‌றைத்து எங்கள் மத ஆட்கள் ம‌ட்டுமே தீவிரவாதிக‌ள் என்னும் விஷ‌ம‌ பிர‌ச்சார‌மே!

2.அனைத்து பிரிவுக‌ளையும் ஒன்றாக்கும் முய‌ற்சியும் ந‌டை பெற்றுக் கொண்டுதான் இருக்கிற‌து.ந‌ட‌க்க‌வில்லை என்று உங்க‌ளுக்கு தெரியுமா? நிரூபிக்க முடியுமா? .இந்த பிரிவினை அனைத்துக்குமே யூதர்களே காரணம். எங்க‌ள் தாய் மொழி பேசும் எங்க‌ள் இர‌த்த‌ உற‌வு ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ர‌க்த்திற்கு செல்ல‌க் கூடாது என்ப‌த‌ற்காக்வே (சவுதியில் இருந்து!!!!!!)இப்பிர‌ச்சார‌ம் செய்கிறோம் அன்றி வேறு எதற்காக‌வும் அல்ல‌.

3.விஷமத் தனமான கேள்வி.உலகில் அனைவருமே பிறக்கும் போது எங்கள் மதமே, வழி மாறி போனவர்களை மீட்பதே இறைவன் சித்தம்.முதல் மனிதர்கள் கூட எங்கள் மதமே. ஆகவே இப்பூவுலகும் மறுமை வாழ்வும் இறைவனால் எங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட அருட் கொடை.நீங்கள் திருந்த ஒரு வாய்ப்பு ஈவுலகில் அளிக்கப் படுகிறது. Soooooo பூவுலக வாழ்விலும் எங்களுக்கே முன்னுரிமை.சிந்திக்க மாட்டீர்களா?

4 உங்களுக்கு எங்கள் மதம் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.நாங்கள் மத கடமைகளை உண்மையாக பின்பற்றினாலும் எங்களின் இறை நம்பிக்கை மட்டுமே சுவனம் செல்ல போதுமானது. உலகிலும் இறைவனின் சட்டம் மீதான ஆட்சியை அழகிய வழியில் அறிவுரீதியாக பிரசாரம் செய்து அமைப்போம்.எங்களுடன் விவாதித்து வெல்ல முடியாமல் நாத்திகர்கள் அவதூறு பிரச்சாரம் இவ்வாறு செய்கின்றனர்.வேண்டுமானல் எங்கள் "அஆஇஈ" உடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?

டிஸ்கி
[நண்பர் சுவன‌ப்பிரியனின் பல பதிவுலக விவாத கேள்வி பதில்களை தழுவி எழுதப்பட்டது!!!!!!!!]

கோவி.கண்ணன் சொன்னது…

சார்வாகன்,

நண்பர் சுவனப்பிரியன் மதவாதியா ?
எனக்கு தெரியாதே. தவிர நான் குறிப்பிட்டு எந்த மதத்தையும் கோடிட்டு எழுதவில்லை. உங்களுக்கு இதில் அவர்களைக் குறிப்பிடுவது போல் தெரிந்துள்ளது போல், அவர்களில் சிலர் இதைப் படிக்கும் போது இந்துமதத் தீவிரவாதம் பற்றி நான் எழுதி இருகிறேன் என்று நினைக்கக் கூடும். என்றே நினைக்கிறேன்.

இங்கு குறிப்பிட்டு இருக்கும் சொர்கம் நரகம் போன்ற கட்டுகதைகள் பல மதங்களுக்கும் பொதுவானது, நாத்திக மதமான பெளத்த மதங்களில் அவை உள்ளன, அவை இலங்கையில் நடத்திவரும் அட்டூழியமும், அவை ஒன்றும் அமைதியான மதம் இல்லை என்றே காட்டுகிறது

நிகழ்காலத்தில்... சொன்னது…

கோவியாரே., கட்டுரையின் உள்ளடக்கம், ஆதங்கம் புரிகிறது.,

நானும் இதுபோன்ற என் மதம் உயர்ந்தது என்கிற நினைப்புகளில் இருந்து விடுபட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

மனிதன் உயிர் ம்னம் இவற்றிற்கு உள்ள உறவு, இவற்றை பழக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள்., பின்பற்றலாம், பிரச்சாரம் பண்ணலாம், ஆனால் கேட்பவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் அதன்படி தகுதியானவர்களா என்று பார்த்தாலே போதும்.

வாழ்த்துகள்.,

Robin சொன்னது…

//ஒரு நாத்திகனின் மனைவி வீட்டுகுள் சூடம் கொளுத்துவது அதிகபட்சமாக சூடத்தில் களப்படம் இருந்தால் கரும் புகையினால் கண் எரிச்சல் தரும் அவ்வளவு தான், அவற்றை நாத்திகர் பொறுத்துக் கொள்கிறார்கள்// ஏன் பொறுத்துக்கொள்ளவேண்டும்? கடவுள் இல்லையே, பின் ஏன் வெட்டி செலவு என்று மனைவிக்கு அறிவுரை சொல்லலாமே.

//அது போல் தான் ஆன்மீகம் என்ற பெயரில் பொது இடத்தில் மதவியாபாரங்கள் கடைவிரிக்கப்படும் போது// ஆன்மிகம் மட்டுமல்ல நாத்திகமும் பொது இடத்தில்தான் கடை விரிக்கப்படுகிறது.

//மதத்தீவிரவாதத்தின் தன்மைகள், பாதிப்புகள் சுட்டப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.// இதெல்லாம் கேள்விக்குட்படவேண்டியவைதான்.

//மதவாதிகளால் இந்த உலகம் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனவே அன்றி ஒருமித்த ஒற்றுமைகான தீர்வு அவர்களால் என்றுமே சொல்லப்பட்டு இருந்ததில்லை// நாத்திகர்களாலும் இந்த உலகம் சிதரடிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆன்மிகம் மட்டுமல்ல நாத்திகமும் பொது இடத்தில்தான் கடை விரிக்கப்படுகிறது.//

பொது இடத்தில் மலம் கழித்தால் அந்த இடத்தில் வந்து அதைச் சுட்டிக் காட்டித் தான் பேசமுடியும்.

பொதுக்கூட்டத்தில் கலவரம் நடந்தால் போலிஸ்காரன் அந்த இடத்தில் தான் தடி அடி நடத்துவான்

Robin சொன்னது…

//உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?// சரியாக உள்வாங்கி இருப்பதால்தான் தங்கள் மார்க்கத்தில் சொல்லியிருப்பதைப் போல தீவிரவாதம் செய்கிறார்கள். உங்களுக்கு அது புரியவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்?

// உங்கள் மதத்தின் உட்பிரிவுக்குள் ஒரு பிரிவான நீங்கள் மட்டும் தான் அக்மார்க் மற்றதெல்லாம் ஆகாத மார்க் என்கிறீர்கள், அப்படி என்றால் உங்கள் பிரச்சரங்களை உங்கள் உட்பிரிவுகளுக்கு நீட்டித்து அவர்களையெல்லாம் உங்கள் அக்மார்க்கத்துக்கு திருப்பிவிட்டு உங்கள் மதம் சாராதவர்களிடம் உங்கள் பிரச்சாரம் செய்யலாமே// அதுவும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. சொல் பேச்சு கேட்காதவர்கள் வெடிகுண்டு வீசி கொல்லப்படுவதும் தினமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. வெளிப்பிரிவு, உட்பிரிவு எல்லாரும் துன்மார்க்கத்தைப் பின்பற்றியாகவேண்டும். மறுப்பவர்கள் கொல்லப்படவேண்டும் என்பதுதான் மார்க்கவிதி. அப்படி கொலை செய்ய வசதியில்லாத நாடுகளில் வசைபாடுதலே தண்டனையாக தரப்படும்.

//நாங்களெல்லோரும் இந்த பூமியோ சொர்கம், அதில் தத்தமவருக்கு கிடைத்தவர்களே உடனிருக்கும் சொர்கவாசிகள் என்று மெய்யான இந்த உலகை சொர்கமாகத்தான் நம்பியுள்ளோம்// ஒரிஜினல் சொர்க்கத்தில் கிடைக்கும் வசதிகளைப் பற்றி அறிந்தால் இப்படியெல்லாம் நினைக்க மாட்டீர்கள்.

//கடைசி நாள், தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு நன்கு தெரிவதாகச் சொல்கிறீர்கள், அப்படி என்றால் அது குறித்த சிந்தனையில் உங்கள் கவனம் இருந்து உங்கள் சொர்க வாயிலின் டோக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ள உங்கள் மதம் சார்ந்த ஈகைகளை செய்து முயற்சி எடுக்காமல்// புரியாமல் பேசவேண்டாம். சொர்க்கம் கிடைக்கவேண்டுமானால் எதையெல்லாம் செய்யவேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறதோ அதைத்தான் செய்து வருகிறார்கள்.

// நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை// நீங்கள் ஆத்திகன் என்பதுதான் உலகுக்கே தெரியுமே. விரைவில் உங்களை தமிழ்மண மகுடத்தில் ஏற்றப்போகிறார்கள்.

//மதவாதிகளே நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பொதுப்பயம் பலரின் வெளிப்படையான விவாதங்களை தடுக்கிறது// இதைத்தானே போன பதிவில் சொன்னேன்.

//கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கான வெற்றி அல்ல, அது உங்கள் மீது படித்திருக்கும் பொதுப்பார்வை, அவற்றை ஏற்படுத்தியது நீங்கள் தான், முடிந்தால் அவற்றை களைய /கழுவ முயற்சி செய்யுங்கள்.// இதை வேண்டுமென்றேதான் செய்கிறார்கள். பயத்தை ஏற்படுத்தாமல் துன்மார்க்கத்தை பரப்ப முடியாது.

//மத நம்பிக்கைகள் கழிவறை பயன்படுத்துவது போன்று தனிமையான, யாருக்கும் தொந்தரவு செய்யாத, யாருடைய தொந்தரவையும் விரும்பாத ஒரு தனிமனித தேவை மற்றும் விருப்பம் போல் இருந்தால் அவை விமர்சனம் செய்யப்பட மாட்டாது. // மத நம்பிக்கைகள் பொதுவில் வைக்கப்படும்போது விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

ராபின், சன்மார்கம் அதாவது 'சமரச சன்மார்கம்' வள்ளலார் வழியினர் கேள்விப்பட்டு இருக்கிறேன், நீங்கள் குறிப்பிடும் துன்மார்க்கம் கேள்விப்பட்டதில்லை.

கபிலன் சொன்னது…

நல்ல தெளிவான பதிவு !
கழிவறை உதாரணம் மிகப் பொருத்தம் !
வாழ்த்துக்கள் !

அடுத்தவனுக்கு தொந்தரவு இல்லாமல் சாமி கும்பிடும் போது, அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கு !

naren சொன்னது…

”சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும்” என்ற பதிவில் என்னுடைய மறுமொழியை ஏன் வெளியிடவில்லை என்று தெரிந்துகொள்ள ஆவல்.

கோவி.கண்ணன் சொன்னது…

”சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும்” என்ற பதிவில் என்னுடைய மறுமொழியை ஏன் வெளியிடவில்லை என்று தெரிந்துகொள்ள ஆவல்.

//

நரேன்,

உங்களது கீழ் கண்ட பின்னூட்டம் மொபைல் வழியாக வெளியிடும் போது தவறுதலாக 'டெலிட்' லிங்கை அழுத்தியதால் நீங்கிவிட்டது, மொபைலில் மிகச் சரியாக 'பப்ளிஸ்' என்பதை அழுத்த இயலாமல் போனதே அதற்குக்காரணம், தவிர நீங்கள் கேட்டு இருப்பது போன்ற கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே வெறு ஒருவருக்கும் சொல்லி இருக்கிறேன்.

"தனி மனிதர்கள் செய்யும் தவறுகளை, சவுதி அரபிய நாடே செய்கிறது என்று எண்ணம் வர வாய்ப்பு இருக்கின்ற வகயில் அமைந்த பதிவிற்கு பயங்கரமான கண்டனங்கள்.

பதிவில் சுட்டிக்காட்டிய தவறை தவிர்த்து பார்த்தால் சவுதியில் நிச்சயாமாக பாலாறும் தேனாறும் ஓடுகின்றது. அது இஸ்லாத்தை சரியாக உள்வாங்கியதால் ஏற்பட்டது."

சுவனப்பிரியன் குறிப்பிடுகிறார் "பெண்களை தனியாக வேலைக்கு அனுப்பாதீர்கள்" என்று, ஆனால் இஸ்லாத் சரியத் சட்டப்படி பெண்ணை தனியாக அனுப்புவது அனுமதிக்கப்படாத ஒன்று என்று தெரிந்தும் அதை அந்த நாடு அனுமதிப்பதே தவறுகளுக்கான காரணம், தன்னாட்டு பெண்கள் தனியாக எங்கும் செல்லக் கூடாது ஆனால் பிற நாட்டுப் பெண்கள் பணிப்பெண் அடிமைகளாக இங்கு வரலாம் போன்ற அனுமதி முரண்பாடான ஒன்று. தவறுகள் நேர்வதற்கு அரசு காரணமில்லை என்று எப்படிச் சொல்லுகிறீர்கள், பெண்கள் பற்றிய அக்கரை இருந்தால் பெண்கள் பணிப்பெண் வேலைக்கு தனியாக வர அனுமதி இல்லை என்று அந்த நாடு சட்டம் இயற்றலாமே, அது ஒன்றும் புதிய சட்டமும் இல்லை, சரியத்தில் ஏற்கனவே இருப்பவை தானே. ஆக அவர்களைப் பொருத்த அளவில் அடிமைகளுக்கு எந்த சட்டங்களும் தேவை இல்லை என்பது தானே.

ஷர்புதீன் சொன்னது…

குறிப்பிட்ட மதத்தை ஒருவர் பின்பற்றுவதை பார்த்து அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னொருவர் அதில் இணைவதை நான் ஏற்றுகொள்கிறேன்.

கடவுளை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ , அதனை விட அடுத்தவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது அதிமுக்கியம் என்றே எனக்கு தோன்றுகிறது. சௌத்ஆப்ரிகா வீரர் ஆசிப் அம்லாவின் நடவடிக்கை தன்னை இஸ்லாம் மதத்தில் இணைய தூண்டியது என்று ஒருவர் மதம் மாறினாரே அது எனக்கு பிடித்திருக்கிறது.

இன்று வரையிலும் எனக்கு எப்படி வாழ்வது என்பதுதாம் முக்கியம் , எப்படி வணங்குவது என்பது இரண்டாவது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை அந்த பக்குவம் எனக்கு இருக்கிறது, அதை போல் மற்றவர்களிடமும் இருக்காது, அதனால் கடவுள் என்ற பதம் தேவைபடுகிறது என்று ஒருவர் சொன்னால் ..... அதற்க்கு என்ன சொல்லலாம்?!

--

என்றும் அன்புடன்
ஷர்புதீன்
www.rasekan.blogspot.com

K சொன்னது…

ஆனால் ஒன்று கண்ணன்,

மதவாதிகள் மீண்டும் மீண்டும் மதம் மதம் என்று சொல்லிக்கொண்டிருப்பதும், அதனைத் திணிப்பதும், அதற்காகச் சண்டை போடுவதும், எதிர்ப்பதிவு, மைனஸ் ஓட்டுப் போடுவதும் மதத்தின் மீது வெறுப்பைத்தான் வரவழைக்கிறது!

வலிந்து நிறுவித் திணிக்கப்படும் எந்தவொரு விஷயமும் வெறுப்பையே தரும் என்கிற அடிப்படை உளவியல்கூட இவர்களுப் புரியாததுதான் ஆச்சரியம்!

இயல்பாக ஒரு மதத்தின் மீது இருந்த நல்மதிப்பும் இந்த மதவாதிகளால் இல்லாமல் போய்விட்டது!

இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் மைனஸ் ஓட்டுக்களும் மதத்தை மேலும் மேலும் வெறுக்கவே செய்கின்றன!

naren சொன்னது…

நண்பரே,
அதற்கு முன்னர் அனுப்பிய மறுமொழி பெறவில்லை என நினைக்கிறேன். சுவனப்பிரியனின் பதில் இப்படித்தான் இருக்கும் என அனுப்பிய மறுமொழி பெற்றிருக்கீர்கள்.

முந்தைய மறுமொழியின் சாராம்சம் இதுதான்.

1) உலகத்தில் எல்லா நாடுகளுமே வளர்ச்சியடைந்துள்ளது. சவுதிக்கு மட்டும் சிறப்பு ஒன்றுமில்லை. அப்படி பார்த்தால் ஒன்றுமில்லாத இஸ்ரேல் வளர்ச்சி அதை விட மகத்தானது. அவர்கள் அமெரிக்கா பணத்தால் வளர்ச்சியென்றால், சவுதிக்கு எண்ணையால வளர்ச்சி. எண்ணையை பற்றி குரானில் சொல்லப்படவில்லை. அதனால் அந்த வளர்ச்சியில் “தெய்வீக” சிறப்பு ஒன்றுமில்லை.

2)சுவ.பிரி. பதிவில் முழுமையாக படித்தால் இஸ்லாம் சவுதி தீப கர்ப்பத்திற்கு மட்டுமே உண்டான இருக்க்வேண்டிய மதம் என்று புரிகிறது. குரானின் உலகம் சவுதியும் அப்போதிருந்த உலக அறிவும்தான்.

3)இந்த பாலைவனத்தி சோலைவனமாக்கும் முயற்சி எல்லா நாடுகளில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ராஜஸ்தானின் தார் பாலைவனத்திலும் நடக்கின்றது. இந்தியாவிற்கு எண்ணை பணம் இருந்தால் இன்னும் மும்முரமாக நடைமுறைப்படுத்தலாம்.

4) விவசாயத்தில் வளர்ச்சி எனப்து எல்லா நாடுகளும் முயற்ச்சிப்பதுதான். விளைநிலங்கள் வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது பொருளாதார சமுதாய காரணங்களால். விவசாயம் இலாபம் என்று நிலை வந்தால். எல்லாமே விளைநிலங்களாக மாறும்.

5) ice age மாற்றம் சவுதிக்கு மாத்திரமல்ல எல்லா இடங்களுக்கு பொருந்தும்.

6)அரசியல்வாதிகள் ஒரு நாட்டில் எது இல்லையோ அதை பிற்காலத்தில் வரும் உருவாக்குவோம் என்பார்களே. அதைப் போல் சவுதியில் சோலை காய்கனிகள் இல்லை. அது பிற்காலத்தில் வரும் வாக்குறுதிகளை சொல்லி இப்போது நடக்கிறது என்றால்- சென்னை சிங்காப்பூர் ஆகிவிட்டால் ஸ்டாலினை என்னவகை சாமியார் என்பது.

....contd.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் மைனஸ் ஓட்டுக்களும் மதத்தை மேலும் மேலும் வெறுக்கவே செய்கின்றன!

3:21 PM, January 12, 2012//

இராசபக்சேவுக்கு சிஎன்என் வாக்கெடுப்பில் வாக்கு விழுந்தது போல் தான் அவை மதிப்பற்றது என்பதை அவர்கள் அறியாதவர்கள் இல்லை. காலம் காலமாக பதிவு எழுதுபவர்களுக்கும் தமிழ்மண வாசகர்களுக்கும் வாக்குகள் விழுவது பற்றி நன்கு தெரியும் என்பதால் வாக்குகள் மற்றும் பதிவு அதிகம்பார்க்கப்பட்டோர் பகுதியில் வருவது பற்றி நன்கே அறிந்துள்ளனர்.

காசு வாங்காமல் கூவும் கூட்டம் மதவாதிகளுக்குள் கூட இருப்பார்கள், அதெல்லாம் மகேசன் சேவை அன்றோ
:)

naren சொன்னது…

தொடர்ச்சி..

5) காஃபா மீது தாக்குதல் நடக்கவேயில்லையாம் என்ற ஒரு பச்சைப் பொய்.
உண்மை இந்த சுட்டியில் http://en.wikipedia.org/wiki/Grand_Mosque_Seizure

6) முன்னேற்றம் என்றால் எல்லா வகையிலும் துறையிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற உங்களின் பதிவின் சாராம்சத்திற்கு எதிராக வந்த கும்மிகளுக்கு இந்த பதிவு சரியான விளக்கம்.

இந்தப் பதிவை சு.பி. நன்றாக படிக்கட்டும்.

ஜோதிஜி சொன்னது…

யோசிக்க யோசிக்க அலுப்பு தான் வருகின்றது. இதைப்பற்றியே யோசித்துக் கொண்டேயிருந்தால் நாம் உருப்படியாக வாழ்வதற்கான யோசனைகள் அறுந்து போய்விடக்கூடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி திருப்பூர் said...
யோசிக்க யோசிக்க அலுப்பு தான் வருகின்றது. இதைப்பற்றியே யோசித்துக் கொண்டேயிருந்தால் நாம் உருப்படியாக வாழ்வதற்கான யோசனைகள் அறுந்து போய்விடக்கூடும்.//

வேலில போற ஓணான் ஓடி வந்து வேட்டி மீது ஏறும் போது யேசிக்க ஒண்ணும் இல்லை என்று இருக்க முடியாது என்று கருதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வலிந்து நிறுவித் திணிக்கப்படும் எந்தவொரு விஷயமும் வெறுப்பையே தரும் என்கிற அடிப்படை உளவியல்கூட இவர்களுப் புரியாததுதான் ஆச்சரியம்! //

அவர்கள் உங்களை வெறுப்பார்கள், உங்களை காறித்துப்புவார்கள் ஆனால் அதற்காக உங்கள் முயற்சிகளை பிரச்சாரங்களை விட்டுவிட்டால் சொர்கத்தில் உங்களுக்கு சேவை செய்ய அடிமைகள் கிடைக்காது என்று மத நூல்கள் கூறுகின்றனவோ என்னவோ ?

அப்படியே கூறி இருந்தாலும் வெறுப்பதும் காறித்துப்புவதும் அவர்களின் இயல்பு என்பது மறைமுகமாக அதில் புரிய வைக்கப்பட்டுள்ள உண்மை தான் என்று அறியாமல் நம்மீது பாய்கின்றனர். இச்செயல் அவர்கள் மதப்புத்தகங்களில் சொல்லி இருப்பதை அவர்களே முழுவதும் நம்பவில்லை என்பதைத் தான் காட்டுகின்றனர்.

நாய்கள் ஒரு நாள் காலைத்தூக்கமல் இருக்கக் கற்றுக் கொள்ளும் என்பது கூட வெறும் நம்பிக்கைதானே, அதற்கான முயற்சிகள் பயன் கொடுத்தால் அதில் ஒரு சில நாய்கள் மட்டுமே தேறும், அவை சர்கஸ் கூடாரங்களில் வித்தைக்காட்டப் பயன்படுத்தலாம். மதவாதிகளின் முயற்சிக் கூட நாய்களை காலைத்தூக்கமல் இருக்க வைப்பதற்கான முயற்சி போன்றதே.

கோவி.கண்ணன் சொன்னது…

ஷர்புதீன்

குறிப்பிட்ட மதத்தை ஒருவர் பின்பற்றுவதை பார்த்து அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னொருவர் அதில் இணைவதை நான் ஏற்றுகொள்கிறேன்.

கடவுளை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ , அதனை விட அடுத்தவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது அதிமுக்கியம் என்றே எனக்கு தோன்றுகிறது. சௌத்ஆப்ரிகா வீரர் ஆசிப் அம்லாவின் நடவடிக்கை தன்னை இஸ்லாம் மதத்தில் இணைய தூண்டியது என்று ஒருவர் மதம் மாறினாரே அது எனக்கு பிடித்திருக்கிறது.

இன்று வரையிலும் எனக்கு எப்படி வாழ்வது என்பதுதாம் முக்கியம் , எப்படி வணங்குவது என்பது இரண்டாவது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை அந்த பக்குவம் எனக்கு இருக்கிறது, அதை போல் மற்றவர்களிடமும் இருக்காது, அதனால் கடவுள் என்ற பதம் தேவைபடுகிறது என்று ஒருவர் சொன்னால் ..... அதற்க்கு என்ன சொல்லலாம்?!

--

என்றும் அன்புடன்
ஷர்புதீன்
www.rasekan.blogspot.com

*******

சர்புதீன்,

தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி, இது போன்ற புரிதல்கள் பலருக்கு இருந்தால் இந்த பதிவின் தேவை இருக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

நாரேன்,

நான் குறிப்பிட்ட மதத்தை மட்டுமே மையப்படுத்தி இதை எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

suvanappiriyan சொன்னது…

கோவி கண்ணன்!

'மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்' என்று தலைப்பு வைத்துள்ளீர்கள். நான் பின்பற்றுவது உலகில் எந்த மதத்தையும் அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தை! குர்ஆனும், முகமது நபியும் சொல்லிய வாழ்க்கை முறையை. எனவே நீங்கள் சொல்லும் கருத்துகள் அனைத்தும் உலக மதங்களை நோக்கி சொல்லப்பட்டவையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

வேகநரி சொன்னது…

கோவி கண்ணன்!
இனிய அன்பான மார்க்கங்களாகியா இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், யூதம் மதங்களில் வராது என்பதை அறிய தருகிறேன்.ஒரு மதத்தினரது பதிவுகளுக்கு ஆதரவு வாக்கும குத்தி கொண்டு திரிபவர்கள் தான் மதத்தை சேர்ந்தவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// thequickfox said...
கோவி கண்ணன்!
இனிய அன்பான மார்க்கங்களாகியா இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், யூதம் மதங்களில் வராது என்பதை அறிய தருகிறேன்.ஒரு மதத்தினரது பதிவுகளுக்கு ஆதரவு வாக்கும குத்தி கொண்டு திரிபவர்கள் தான் மதத்தை சேர்ந்தவர்கள்.//

இரு ஆண்டுகளுக்கு முன்பே மதமல்ல மார்க்கம் ! என்ற எனது பதிவில் தெளிவு படுத்தி இருக்கிறேன்.

ஆகய மார்க்கமாகப் போகிறவர்களுக்கு தரைவழி மார்க்கம் மார்க்கமாகப் படாது போல.

நண்பர் சுவனப்பிரியன் அவருக்கான மார்க்கத்தை மட்டும் பின்பற்றுவதாகச் சொல்லுகிறார், அவருக்கு என் நல்வாழ்த்துகள்

K சொன்னது…

கண்ணன்!
உங்களுக்குப் பிசி கணேசனைத் தெரியும் என்று நினைக்கிறேன்! மனிதன் எப்படி எப்படி வாழ வேண்டும் என்று புத்தகம் எழுதியவர்! அவரது புத்தகங்களில் நல்ல பல விஷயங்கள் உள்ளன! அவற்றின்படி வாழ்ந்தால், மனிதன் சிறப்பாக வாழ முடியும்!

ஆனால், பி சி கணேஷன் கடவுள் கிடையாது! யாரும் கணேஷனுக்கா சண்டை போடுவதும் கிடையாது! யாராவது கணேஷனைக் குறை + குற்றம் சொன்னால், நாம் ஓடிப்போய் மைனஸ் ஓட்டும் போடுவது கிடையாது!

ஆக, வாழ வழி சொன்ன ஒருத்தனுக்காக, நாம் வெட்டுப் பட்டுச் சாகவேண்டிய அவசியம் கிடையாது!
வழி என்றால் மார்க்கம் தானே!

ஆகவே பி சி கணேஷனும் ஒரு மார்க்கத்தையே போதிக்கிறார்! ஆனால், பி சி கணேஷனை நாங்கள் கடவுளாக மதிப்பதில்லை! அவருக்காகக் குண்டைக் கட்டிக்கொண்டு சாவதும் இல்லை!

வாழ்க்கையும் + வாழ்வதும் மிகவும் சிம்ப்ளானது! அதை ஏன் இவ்வளவு சிக்கல் ஆக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

என்மதமே சிறந்தது என்பது, என் தாயே சிறந்தவள் என்பது போன்றது.
என் தாயும் சிறந்தவள் எனும் உணர்வால் உருவாகும்-அமைதி பற்றி அறியார், உலகுக்கு அந்த
அமைதியே தேவை என்பது புரியார்;
வாழும் போது அனுபவிக்க வேண்டிய பூலோகசுவர்க்கத்தை கெடுத்து, இறந்து சுவர்க்கம் காணப்போவோர்.
இதை இந்த தன்மதமே சிறந்ததென கூச்சலிடும் மதவாதிகள் உணருவதாகவில்லை.
உணரார்.
இது மனப்பிறட்சியின் ஒரு வகை. மருந்துக்கு அடங்காது.

கல்வெட்டு சொன்னது…

கோவி,
சவூதி என்பது மெக்கா என்ற புனித இடம் உள்ள நாடு. உலக முஸ்லீம்களின் முக்கிய இடம்.

மேலும் இந்த நாடு தனது அரசியல் அமைப்புச் சட்டமாக குரானைக் கொண்டுள்ளது. மேலும் இறைத்தூதர் முகம்மது நபி (சாந்தி நிலவுவதாக) அவர்களின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களை தனது சட்ட விதிகள், தீர்ப்புகளுக்கு நேரடியாப் பயன்படுத்தும் புனித நாடு.

இப்படி குரானையும், இறைத்தூதர் இறைத்தூதர் முகம்மது நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் கடைபிடிக்கும் இந்த நாட்டில் ,இஸ்லாத்திற்கு எதிரான அல்லது முகமது நபி அவர்களின் சிறப்பைக் குலைக்கும் விதத்தில் எந்தச் செயலும் நடக்க வாய்ப்பேயில்லை.

மேலும் இந்த பூவுலகில் இறைவனின் விருப்பத்தை மீறி ஒன்றும் நடக்க வாய்ப்பேயில்லை. அதுவும் சவூதியிலா??? என்ன விளையாடுகிறீர்களா?

அப்படி நடப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறியாமை. விட்டால் நீங்கள் சுவ‌னத்திலேயே தவறு நடக்கிற‌து என்று சொல்வீர்கள்போல.

சவூதி ஒரு பூலோக சுவனம். என்னைக் கேட்டால், அது கடவுளின் நேரடிப் பார்வையில் உள்ள நாடு அங்கு எந்த மானுடச் சட்டங்களும் தேவையில்லை. புனித குரானே அங்கு நேரடியாக ஆட்சி செய்யும் புனித நாடு.

குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.
http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


Article 1:
---------
The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

Article 45:
-----------
The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

Article 48:
----------
The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.

.

நிகழ்காலத்தில்... சொன்னது…

கட்டுரையை படிப்பவர்கள் தன்மதத்தை சொன்னதாக நினைத்தன் விளைவே மைனஸ் ஓட்டுகள்..

கட்டுரையை வெளியிட்டவுடன் பலமுறை படித்தேன். கட்டுரை கத்திமேல் நடப்பது போல் மிகக்கவனமாக செதுக்கப்பட்டு இருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் ஏதும் இல்லை.

இணையம் என்பது சமுதாயத்தின் கண்ணாடிதான். ஆக்கபூர்வமான இடம் அல்ல என்ற என் எண்ணம் மீண்டும் உறுதி ஆகி இருக்கிறது.

உங்கள் வலைப்பதிவின் கீழேஏஏஏஏ மதத்தை பற்றி எழுதி இருப்பதை படித்தேன். அவை தவறேதுமில்லை.,

கோவி.கண்ணன் சொன்னது…

//கட்டுரையை படிப்பவர்கள் தன்மதத்தை சொன்னதாக நினைத்தன் விளைவே மைனஸ் ஓட்டுகள்..//

போதை என்ற உணர்ச்சிப் பெருக்கு நிலையில் மதவாதிகளும் குடிகாரர்களும் ஒன்று தான்.

தனக்குத்தானே முகமூடிகளைக் கிழித்துக் கொள்வதால் நாம் என்ன செய்ய ?

மதவாதிகளின் ஆக்கிரமிப்புகளால் வலைப்பதிவுகள் சீரழியுது, ஆனால் மதவெறிப் பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது என்பது எனக்கு கிடைத்த + வாக்குகள் வழியாகத் தெரிகிறது. என் பதிவுக்கு நானே ஓட்டுப் போடாத நிலையில் பலர் தாமாக முன்வந்து வாக்களித்திருக்கிறார்கள், அவர்களுக்கு என் பாராட்டுகள்

மரைக்காயர் சொன்னது…

நண்பரே, ஒரு விஷயத்தை கவனித்தீர்களா? எந்த மதத்தையும் குறிப்பிட்டு கோடிட்டு எழுதவில்லை என்று நீங்கள் சொல்லியிருந்தாலும் வந்திருக்கும் பின்னூட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை (சார்வாகன், ராபின், நரேன், ஒ.தெ.ஐடியாமனி, கல்வெட்டு ஆகியோர்) இதை இஸ்லாம் குறித்த பதிவாகவே கருதி எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். ஏன் அப்படி?

ஒன்று, இந்தப் பதிவின் கருத்தோடு இவர்கள் ஒத்துப் போகலாம். அல்லது தங்கள் மதம் அல்லது கொள்கையை தற்காத்து இந்தப் பதிவின் கருத்துக்களுக்கு எதிராக கருத்திடலாம். அதை விட்டுவிட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏன் இவர்கள் இங்கே இழுக்க வேண்டும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒன்று, இந்தப் பதிவின் கருத்தோடு இவர்கள் ஒத்துப் போகலாம். அல்லது தங்கள் மதம் அல்லது கொள்கையை தற்காத்து இந்தப் பதிவின் கருத்துக்களுக்கு எதிராக கருத்திடலாம். அதை விட்டுவிட்டு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏன் இவர்கள் இங்கே இழுக்க வேண்டும்?//

இந்தப் பதிவுக்கு நான் ஓட்டுப் போடவில்லை, மேலும் யாரையும் ஓட்டுப் போடச் சொல்லிக்கேட்கவும் இல்லை, இஸ்லாமியர்கள் பற்றிய பிறரின் பொதுவான கருத்துக்கு இந்தப் பதிவு ஒத்துப் போவதாக அவர்கள் நினைத்திருக்கக் கூடும், அத்தகைய எண்ணத்தை யாரும் வழிந்து திணிக்கவில்லை. மதவாதிகள் அப்படி ஒரு எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றே நினைக்க வேண்டி உள்ளது

இதில் ஓட்டுப் போட்டுள்ளவர்களில் எத்தனை மைனஸ் ஓட்டுகள் விழுந்துள்ளதோ அவர்கள் தங்களைத்தான் கூறுவதாக ஏன் நினைத்திருக்கக் கூடாது ?


arivhedeivam@gmail.com Bhupesh rainbird nkumaranaar cpkabilan@yahoo.com Kaddaan kurumban hunter yasar pasdawood Jafferkhan23 mdsultan texlords@aol.in haitharjunus robin rammy ideamani615 saarvaakan manickanathan@ymail.com nijam saahul3@yahoo.com raazi landscaping

இதில் இருக்கும் 13 பேர் ஏற்கனவே எனக்கு எதிர்வினை என்ற என்ற பெயரில் எழுதப்பட்ட அரைகுறை இடுகைக்கு ஆதரவு வாக்களித்தவர்களே.

தவிர நான் குறிப்பிட்ட மதத்தை வைத்து எழுதவில்லை என்று சிலரின் பின்னூட்டத்தில் பதிலாக எழுதியுள்ளேன். அவர்கள் எண்ணத்தை என்னால் மாற்ற முடியாது, அவற்றை மாற்ற வைக்கும் சக்தி மதவாதிகளின் கையில் தான் உள்ளன

மரைக்காயர் சொன்னது…

நண்பரே, இந்த ஓட்டுப் போடும் பாலிடிக்ஸ் எனக்குப் புரியவில்லை. நான் சொல்ல வந்தது உங்கள் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களைப் பற்றி. நீங்க எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை என்றாலும் பின்னூட்டம் இட்டவர்கள் இஸ்லாத்தை குறித்தே தாக்கியிருக்கிறார்கள் என்பதை கவனிக்கவும்.

நான் ஒரு முஸ்லிம். அதுபோலவே சகோதரகள் ஷர்புதீனும் சுவனப்பிரியனும் தங்களை முஸ்லிம்கள் என்றே அடையாளப் படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நான் சுட்டிக்காட்டிய பின்னூட்டக்காரர்களோ தங்களை தங்கள் மதத்துடனோ கொள்கையுடனோ அடையாளப்படுத்திக் கொள்ளாமல் 'இஸ்லாத்தை பிடிக்காதவர்கள்' என அடையாளப்படுத்திக் கொண்டு கருத்திட்டிருக்கிறார்கள். அதுதான் ஏன் என்கிறேன். முஸ்லிம்களை சீண்டுவதைத் தவிர இவர்களுக்கு வேறு கொள்கையே இல்லையா என்ன? எந்த பதிவில் யார் மதத்தைப் பற்றி எழுதினாலும் ஓடோடிப் போய் இஸ்லாத்தைப் பற்றி நாலு வார்த்தை எழுதிவிட்டு வருவார்கள் போல.

உங்கள் பதிவுக்கு விழுந்த ஓட்டுகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன் பயன் என்ன என்று சொல்ல முடியுமா? உங்கள் பதிவில் உள்ள கருத்துக்களை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள் மைனஸ் ஓட்டு போடுவது தவறா? நான் இன்னும் இந்த பதிவுக்கு ஓட்டுப் போடவில்லை. என்னை போடச் சொன்னால் நான் மைனஸ்தான் போடுவேன். ஏனெனில் இந்த பதிவில் உள்ள பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் பதிவுக்கு விழுந்த ஓட்டுகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதன் பயன் என்ன என்று சொல்ல முடியுமா? உங்கள் பதிவில் உள்ள கருத்துக்களை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள் மைனஸ் ஓட்டு போடுவது தவறா? நான் இன்னும் இந்த பதிவுக்கு ஓட்டுப் போடவில்லை. என்னை போடச் சொன்னால் நான் மைனஸ்தான் போடுவேன். ஏனெனில் இந்த பதிவில் உள்ள பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை.//

ஓட்டுப் பற்றி எனக்கு ஆர்வம் இல்லை, என் ஓட்டே இந்தப் பதிவில் இல்லை, மேலும் மைனஸ் ஓட்டுப் போடுவது போல் இதில் இருக்கும் கருத்து மதவாதிகளால் புரியவைக்கப்பட்ட எண்ணப்படி ஒத்துப் போகிறது என்று நினைத்து உங்கள் மதம் குறித்த பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள், எனக்கு இதில் உடன்பாடா இல்லையா என்பது வேற. அதாவது உங்கள் பின்னூட்டம் போல் அதையும் வெளியுட்டுள்ளேன்.

மரைக்காயர் சொன்னது…

// 1.உங்கள் மதமோ மார்கமோ, நல்வழியோ எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் நன்றாக உள்வாங்கி இருப்பதாகவும், அவற்றின் படியே நடந்தால் உலகம் உய்வுரும் என்று சொல்லுகிறீர்கள், அப்படி என்றால் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களிடம் வந்து பிரச்சாரம் செய்வதை விட அவற்றைப் பற்றி உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ? //

இந்த கருத்தை நீங்கள் எந்த மதத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் இது முஸ்லிம்களை மட்டுமே குறிக்கிறது என்பதுபோல பின்னூட்டமிட்டிருப்பவர்களுக்காக ஒரு தகவல்... இதை நீங்கள் சிங்கப்பூர் நாளிதழில் பார்த்திருக்கலாமே?

http://www.eurasiareview.com/09012012-singapore-and-engaging-former-ji-detainees-in-countering-extremism-can-it-work-analysis/

Singaporeans can be proud that local Muslim community leaders have since 2002 devised and refined a highly sophisticated counter-ideological programme targeted at Singapore JI detainees at first, but expanded since then to encompass their families and the wider public. As more than two-thirds of all detainees since 2001 have been successfully rehabilitated, Singapore’s counter-ideological programme, spearheaded by the all-volunteer Islamic scholars of the Religious Rehabilitation Group (RRG), has been internationally acclaimed to have been effective.

இதைப்பற்றி கோவி கண்ணன் ஏன் ஒரு பதிவு எழுதக்கூடாது?

கல்வெட்டு சொன்னது…

.
அன்புள்ள மரைக்காயர்,
நான் எழுதிய மறுமொழி கோவியின்

சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !
http://govikannan.blogspot.com/2012/01/blog-post_10.html

என்ற பதிவுக்கானது.


தவறுதலாக இந்தப்பதிவில் இட்டுவிட்டேன். :-(((


இப்போது நான் அதை எடுத்துவிடலாம் ஆனால் அப்படி எடுத்துவிட்டால் உங்களின் கேள்வி முதல் என்னைக் குறித்து நீங்கள் இந்தப்பதிவில் வைத்துள்ள விமர்சனங்கள் அர்த்தமற்றதாக வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

எனவே...

1. வேறு பதிவிற்கான பின்னூட்டத்தை இங்கே நான் தவ‌றுதலாக இட்டுவிட்டேன்.அது உங்களுக்கு வருத்ததை ஏற்படுத்தி இருந்தாலோ அல்லது குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாலோ வருந்துகிறேன். மன்னிக்கவும்.

2.உண்மையில் எனது எண்ணங்கள் என்ன? செயல்கள் என்ன? என்பதை, நீங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துகள் மாற்றப்போவது இல்லை.

3.தவறைச் சுட்டிக்காடியமைக்கு நன்றி!

********************


பக்கவாட்டுக்குறிப்பு:
-----------------
மதவாதிகள் அல்லது மத‌ப்பிரியர்கள் அல்லது மதங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் இருந்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் வாழவே முடியாது போன்ற மன நிலையில் உள்ள‌வர்கள்..... என்னைப்பற்றிக் கொண்டுள்ள கருத்தைக் குறித்து எனக்கு எந்தவிதமான‌ அக்கறையும் இல்லை. அது அவர்களின் சுதந்திரம்.

ஆனால் ஒரு சகபதிவராக (நான் பதிவிட்டு பலகாலம் ஆனாலும் அப்படிச்சொல்லத்தான் வேண்டும்.) நான் செய்த ஒன்றால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்றால், அதற்கான வருத்தத்தைப் பதிவுசெய்வது எனது கடமை.

.

மரைக்காயர் சொன்னது…

அன்புள்ள கல்வெட்டு, உங்கள் பதிலுக்கு நன்றி.

// 2.உண்மையில் எனது எண்ணங்கள் என்ன? செயல்கள் என்ன? என்பதை, நீங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துகள் மாற்றப்போவது இல்லை. //

இதுதானே மனித இயல்பு? நானோ நீங்களோ கோவி கண்ணனோ இதற்கு விதிவிலக்கா என்ன? நாம் ஒரு கொள்கையைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ ஒரு சமூகத்தைப் பற்றியோ ஒருவித மனப்பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தால் அதற்கு மாற்றமாக எந்த தகவல் வந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

உதாரணமாக, சவூதி என்ற பெயரைக் கேட்டாலே உங்களுக்கு அலர்ஜி என்று வைத்துக் கொள்வோம். அந்த நாட்டைப் பற்றி யாராவது நல்லதாக நாலு வார்த்தை எழுதினால்கூட அதை உடனே மறுக்க வேண்டும் என்று உங்கள் கை துறுதுறுக்கும், இல்லையா?

உங்களுடைய பின்னூட்டத்திலிருந்து ஒரு பகுதியை கீழே பேஸ்ட் செய்திருக்கிறேன்.

// சவூதி ஒரு பூலோக சுவனம். என்னைக் கேட்டால், அது கடவுளின் நேரடிப் பார்வையில் உள்ள நாடு அங்கு எந்த மானுடச் சட்டங்களும் தேவையில்லை. புனித குரானே அங்கு நேரடியாக ஆட்சி செய்யும் புனித நாடு. //


இப்படி எந்த முஸ்லிம் பதிவராவது எழுதியிருக்கிறார்களா? அல்லது, இது உங்கள் சொந்தக் கருத்தா? இது வஞ்சகப் புகழ்ச்சி என்பது ஒன்னாம்ப்பு படிக்கும் புள்ளைங்களுக்குகூடத் தெளிவாகத் தெரியும்.

உண்மையில் உங்களது எண்ணங்கள் என்ன? செயல்கள் என்ன? என்பதை உங்கள் வார்த்தைகள்தான் தெரிவிக்கின்றன. சவூதி மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வே உங்கள் பின்னூட்டத்தில் வெளிப்படுவதாகத்தான் எனக்குத் தெரிகிறது.

அன்புடன்
மரைக்காயர்

கோவி.கண்ணன் சொன்னது…

//http://www.eurasiareview.com/09012012-singapore-and-engaging-former-ji-detainees-in-countering-extremism-can-it-work-analysis/

Singaporeans can be proud that local Muslim community leaders have since 2002 devised and refined a highly sophisticated counter-ideological programme targeted at Singapore JI detainees at first, but expanded since then to encompass their families and the wider public. As more than two-thirds of all detainees since 2001 have been successfully rehabilitated, Singapore’s counter-ideological programme, spearheaded by the all-volunteer Islamic scholars of the Religious Rehabilitation Group (RRG), has been internationally acclaimed to have been effective.

இதைப்பற்றி கோவி கண்ணன் ஏன் ஒரு பதிவு எழுதக்கூடாது?//

மரைக்காயர்,

நான் ஏன் உங்கள் மதத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டும், தவிர மதம் சார்ந்த விளம்பரங்கள் எனக்கு ஒவ்வாத ஒன்று. எங்காவது பள்ளிவாசலில் அன்னதானம் செய்கிறார்கள் என்று சொன்னால் அது பற்றி தகவல் போடக் கேட்டால் யோசிக்கலாம்

*****

சிங்கப்பூரில் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல எந்த மதவாத அமைப்பும் வாலை ஆட்ட முடியாது என்பதால் தமக்குள் கட்டுப்பாடுகளை கடைபிடித்துவருகின்றனர். தைப்பூசத்திற்கு இங்கு மேளம் அடித்து காவடி எடுக்க முடியாது, சீனப்புத்தாண்டுக்கு சீனர் பட்டாசு வெடிக்க முடியாது, அல்லேலோயா மைக் கட்டி அழைப்பு விடுக்க முடியாது, அதிகாலை நான்கு மணிக்கு ஸ்பீக்கர் கட்டி நான்கு தெருவிற்கு கேட்கும் அளவுக்கு தொழ முடியாது, இன்னும் நிறைய கூடாதுகள் உண்டு,

இங்கு கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் மதம் சார்ந்த ஒன்று அல்ல, அவை அரசின் சட்டதிட்டங்களும் வழிகாட்டுதலாலும் மாற்றிக் கொள்ளப்பட்டவையாகும், உதாரணத்திற்கு மலேசியாவில் நான்கு மனைவி வரை சரியத் சட்டப்படி அங்குள்ள இஸ்லாமியர் மணந்து கொள்ள தடையில்லை, சிங்கையில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடியாது.

சிங்கப்பூர் பொது பள்ளிகளில் விதிமுறைகளின் படி இஸ்லாமிய மாணவி பர்தா அணிந்து செல்ல முடியாது, அவ்வாறு அவர்கள் அணிந்து செல்ல விரும்பினால் இஸ்லாமிய அற்க்கட்டளைகள் செயல்படும் பள்ளியில் தான் அவ்வாறு செல்ல முடியும்.

மரைக்காயர் சொன்னது…

//நான் ஏன் உங்கள் மதத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டும், தவிர மதம் சார்ந்த விளம்பரங்கள் எனக்கு ஒவ்வாத ஒன்று.//

கோவி கண்ணன்,

உங்கள் விளம்பரங்கள் இஸ்லாத்திற்கு தேவையில்லை. அதுபோலவே உங்கள் அறிவுரைகளும் எங்களுக்குத் தேவையில்லை.

//..உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?//

இப்படி எழுதியது நீங்கள்தானே? எல்லா மதவாதிகளுக்குமாக நீங்கள் எழுதிய இந்த 'அறிவுரை' எங்களுக்குத் தேவையில்லை. 'இதை நீங்கள் ஏன் செய்வதில்லை' என்று முஸ்லிம்களையும் இணைத்து நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வசிக்கும் சிங்கப்பூரிலேயே அரசாங்க ஆதரவுடன் இஸ்லாமிய அறிஞர்களும் தொண்டூழியர்களும் இதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதற்குத்தான் இதை குறிப்பிட்டேன். உங்கள் பதிவு இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ பொருந்தாது நீங்கள் குறிப்பிட்டிருந்தால் நான் இதை உங்களிடம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.

சிங்கப்பூரில் மத வழிபாட்டு உரிமைகள் பற்றிய தகவலுக்கு நன்றி. அதே சிங்கப்பூரில் பிற மதங்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ நிந்தனை செய்யும் விதத்தில் பதிவுகள் எழுதுவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் என்றில்லாமல் எல்லா மதவாதிகளையும் 'தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்த்துபவர்கள்' என்ற ரீதியில் நீங்கள் பதிவு எழுதியதோடு மட்டுமல்லாமல் அதில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வந்திருக்கும் பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறீர்கள். நன்றாக யோசித்துதான் இதைச் செய்தீர்களா?

இந்தியாவில் உண்மையில் யார் குண்டுகளை வெடிக்கச் செய்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்லாமிய பெயர்களைக் கொண்ட அமைப்புகளே அதைச் செய்திருந்தாலும் அவர்களின் தீவிரவாதச் செயல்களை ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தோடு சம்பந்தப்படுத்தாமல் சிங்கப்பூர் அரசு மிக கவனமாக இந்த விஷயத்தை கையாண்டு வருகிறது. அரசாங்கத்தின் பாராட்டத்தக்க இந்த முயற்சிகளுக்கு எதிர்மறையாக நீங்கள் பதிவு எழுதுகிறீர்கள். உங்கள் பதிவு எந்த மதவாதியையாவது உசுப்பேற்றி, 'என் மதத்தை குறிப்பிட்டுத்தான் இவர் இதை எழுதியிருக்கிறார்' என்று புகார்
செய்தால் என்ன செய்வீர்கள்?

யாரோ சில மதவாதிகளால் நீங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருந்தால், அவரைக் குறிப்பிட்டோ அல்லது உங்களுக்கு நேர்ந்த பாதிப்பைக் குறிப்பிட்டோ பதிவு எழுதுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி பொத்தாம்பொதுவாக 'குண்டுவெடிப்பு' 'தீவிரவாதம்' என்றெல்லாம் எழுதினால் உங்கள் பதிவுக்கு நிறைய ஓட்டுகளும் பின்னூட்டங்களும் வேண்டுமானால் கிடைக்கும். அதுதான் உங்கள் நோக்கம் என்றால் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள்.

நன்றி.

வேகநரி சொன்னது…

நீங்க எப்படி பதிவு எழுத வேண்டும் என்பதை அவர்கள் தான் அறிவுறுத்தல் சொல்வார்கள். இதர மார்க்கங்களை தாக்கி இஸ்லாமை பிரசாரபடுத்துவதாக அது இருக்க வேண்டும். லண்டனில் குண்டுவெடிப்பு நடத்தபட்டு மக்கள் கொல்லபட்டால் அதுபற்றி நீங்க எழுத கூடாது. சிங்கப்பூரில் குண்டுவெடிப்பு நடத்தபட்டு அதில் நீங்க நேரிடையாக பாதிக்கப்பட்டிருந்து உயிர் தப்பி வந்தால் மட்டும் அது பற்றி நீங்க எழுதலாம்.
குண்டுவெடிப்பு தீவிரவாதம் என்றால் உலகத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கே உடனே விளங்கிவிடும்.

அதிரைக்காரன் சொன்னது…

//குண்டுவெடிப்பு தீவிரவாதம் என்றால் உலகத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கே உடனே விளங்கிவிடும்.//

ஏன் சார் குண்டு வெடிப்புல மிதவாதம் எதுவும் உண்டா?

கோவி.கண்ணன் சொன்னது…

//அதுபோலவே உங்கள் அறிவுரைகளும் எங்களுக்குத் தேவையில்லை.//

மதவாதிகளுக்கு நான் அறிவுரைக் கூறவில்லை, பாதிக்கப்படுகிறவன் என்ற முறையில் எனது வேண்டுகோளைத்தான் தெரிவித்துள்ளேன்.

என்ன பாதிப்பா ? வெளங்காதவர்களுக்கு வெளங்காது சார். 911 க்கு பிறகு விமானநிலையங்களில் அம்மணக் குண்டி ஆக்கி சோதனைக்கு நாங்கள் எதிர்ப்புக் காட்டமுடியாது என்கிற ஆதங்கம் தான், விரைவீக்கம், மூலம் இவைகளோடு தாங்கி தாங்கி நடந்து அவ்விடங்களுக்குச் போகும் போது அவிழ்த்துக் காட்டக் கேட்டால் அவமானப்படுவது யார் ? மேலும் மூடிப் பாதுகாக்கும் பெண் அழகை ஒரு நொடியில் எக்ஸ்ரே வழியாகப் பார்த்துவிடுகிறார்கள் என்பது எங்களுக்கான சங்கடம், மதவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பதே எனது எண்ணம், ஏனெனில் பிறக்கும் போதே அவர்கள் தீவிரவாதக் குழுக்களின் பிள்ளைகளாக எவரும் பிறப்பது இல்லை.

//அதே சிங்கப்பூரில் பிற மதங்களை நேரிடையாகவோ மறைமுகமாகவோ நிந்தனை செய்யும் விதத்தில் பதிவுகள் எழுதுவது சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா? தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் என்றில்லாமல் எல்லா மதவாதிகளையும் 'தற்கொலை குண்டு வெடிப்பு நிகழ்த்துபவர்கள்' என்ற ரீதியில் நீங்கள் பதிவு எழுதியதோடு மட்டுமல்லாமல் அதில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வந்திருக்கும் பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறீர்கள். நன்றாக யோசித்துதான் இதைச் செய்தீர்களா? //

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கு வேண்டாம். மதத்தீவிரவாதிகளால் உலகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதை காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கும் சிங்கப்பூர் பற்றி நான் நன்றாகவே அறிவேன். 'எங்கள் மதம் காஃபீர்களை கொல்லச் சொல்கிறது என்பது மதவுரிமை என்று எந்த மதம் சாரத நாடும் ஏற்பது இல்லை, அவற்றை பாதிக்கப்படுவர்கள் விமர்சனம் செய்யத் தடையில்லை.

உங்கப் பூச்சாண்டிக்கு பயப்பட நான் மலேசியாவிலோ வளைகுடாவிலோ வசிக்கவில்லை. உங்களை மதவாதி என்று சொல்லும்படி நானும் கேட்கவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அதை விட்டுவிட்டு இப்படி பொத்தாம்பொதுவாக 'குண்டுவெடிப்பு' 'தீவிரவாதம்' என்றெல்லாம் எழுதினால் உங்கள் பதிவுக்கு நிறைய ஓட்டுகளும் பின்னூட்டங்களும் வேண்டுமானால் கிடைக்கும். அதுதான் உங்கள் நோக்கம் என்றால் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள்.

நன்றி.//

ஏற்கனவே கூறிவிட்டேன், ஓட்டுபற்றி நான் அலட்டிக் கொள்வது இல்லை, இப்பதிவில் என்னுடைய ஓட்டுக் கூடக் கிடையாது. முன்பெல்லாம் குண்டுவெடிப்பு, தீவிரவாதம் என்றால் அதை எங்கள் மதத்தோடு தொடர்ப்பு படுத்தாதீர்கள் என்று தான் வேண்டுகோள் வரும், இப்போதெல்லாம் அந்தச் சொல்லையெ சொல்லக் கூடாது என்ற கருத்தை இப்போது தான் பார்க்கிறேன்.

காவி என்ன இந்துத்தீவிரவாதிகளின் பொது உடையா ? நீங்களெல்லாம் காவிக் கும்பல் என்று எழுதும் போது அதில் இருக்கும் பொதுமை பற்றி யோசித்தீர்களா ? அவ்வாறு எழுதியவர்களை கண்டித்தீர்களா ? எனக்கு தெரிந்த சாதுவான சாமியார் கூட காவித்தான் உடுத்துகிறார்.

எனக்கு ஒருவர் காவிக் கும்பல் என்று எழுதுவதில் சாடுவதில் ஆட்சேபம் இல்லை அதை எழுதுபவர் மதசார்பற்றவராக இருந்தால்

கோவி.கண்ணன் சொன்னது…

//அதை விட்டுவிட்டு இப்படி பொத்தாம்பொதுவாக 'குண்டுவெடிப்பு' 'தீவிரவாதம்' என்றெல்லாம் எழுதினால் உங்கள் பதிவுக்கு நிறைய ஓட்டுகளும் பின்னூட்டங்களும் வேண்டுமானால் கிடைக்கும். அதுதான் உங்கள் நோக்கம் என்றால் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள்.

நன்றி.//

எனக்கு தெரிந்து மோடியைத் திட்டிவரும் தமிழ்பதிவர்கள் கூட நேரிடையாக மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. பாதிக்கப்பட்டவன் தான் கண்டிகனும் என்பது கொடும் செயல் செய்தவருக்கு ஆதரவான இழிசெயல்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் பதிவு இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ பொருந்தாது நீங்கள் குறிப்பிட்டிருந்தால் நான் இதை உங்களிடம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது.//

:) இப்படிக் கூட டிஸ்கி போடலாமா ?

இந்தப்பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது அல்ல என்பது போல் அது புரிந்துவிடாதா என்ன ?

அடுத்து எழுதினால் நான் இதை மனதில் கொள்கிறேன், நல்ல யோசனையாக இருக்கிறது.

மதத்தீவிரவாதம் பற்றி எழுதி அதில் பின்லேடன் முதல் காசப் வரை எழுதிவிட்டு......

விடுங்க சார்.

*****

எனக்கு முகம் தெரிந்த பல்வேறு மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் உண்டு, அவர்கள் கேட்டால் என்னால் என் எழுத்துகளுக்கு விளக்கம் அளிக்க முடியும், உதாரணத்துக்கு சுவனப்பிரியன், உஙக்ளை எனக்கு யார் எவர் என்றே தெரியாது, உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் போட எனக்கு அவசியம் இல்லை, மேலும் சிங்கப்பூர் சட்டம் பற்றி தண்டனைக் குறித்தெல்லாம் பேசும் தங்களின் கருத்து அருவெறுப்பையே தருகிறது, எனக்குத் தேவை நேர்மையான விவாதம் அது உங்களிடம் கிடைக்காது என்றே தெரியும், உங்களுக்கு எனது கருத்தில் மாற்று இருந்தால் நீங்கள் உங்கள் பதிவிலேயே விவாதித்து உங்களுக்கு வேண்டியவர்களின் ஓட்டுகளைப் பெற்று என்னைத் தூற்றலாம், இதன் பிறகு உங்கள் பதிலையோ, பின்னூட்டங்களையோ நான் வெளியிடப் போவதில்லை

******

ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது மதம் சொல்லிக் கொடுப்பதால் ஏற்படுவது இல்லை, ஒருவேளை குறிப்பிட்ட மதத்தினால் தான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான் என்று நிருபனம் செய்யப்பட்டால் அது பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கெட்டவர்கள் என்று சொல்வதன் நிருபனமாகவும் இருக்கும்.

எங்கள் மதத்தில் இருக்கும் நல்லவர்கள் உங்கள் கண்ணுக்குப்படவே இல்லையா என்பவருக்கு என் பதில் எப்போதும் இது தான், ஒருமனிதன் நல்லவன் என்பது அவன் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டதால் அவனுக்கு ஏற்பட்ட நல்லியல்பு அதை அவன் சார்ந்த மதத்தின் அளவீடாக் கொள்ளமுடியாது. இதை ஒப்புக் கொள்வோர் எந்த ஒரு நல்லமனிதரின் மதம் என்ன என்ற ஆராய்ச்சி செய்யமாட்டார்கள். எனக்கு கிடைத்த பல்வேறு நண்பர்கள் பல்வேறும் மதம் சார்ந்தவர்கள் அவர்களில் எவரும் நான் இந்த மதத்தைச் சார்ந்து இருப்பதால் தான் எல்லோரிடம் நல்லபெயர் எடுக்க முடிகிறது என்று சொல்பவர் எவரும் இலலை.

உங்கள் மீதும் மதிப்பு இருந்ததாலே இவ்வளவு பின்னூட்டங்களுக்கும் பொறுமையாக பதில் கொடுக்க முடிந்தது, இதற்கு மேல் அது நீடிக்காது என்றே நினைக்கிறேன், அதன் காரணம் நீங்கள் தான்

மரைக்காயர் சொன்னது…

//முன்பெல்லாம் குண்டுவெடிப்பு, தீவிரவாதம் என்றால் அதை எங்கள் மதத்தோடு தொடர்ப்பு படுத்தாதீர்கள் என்று தான் வேண்டுகோள் வரும், இப்போதெல்லாம் அந்தச் சொல்லையெ சொல்லக் கூடாது என்ற கருத்தை இப்போது தான் பார்க்கிறேன்.//

தமிழ் இணையங்களில் அளவுக்கு அதிகமாக misuse செய்யப்படும் வார்த்தைகள் 'கருத்துச் சுதந்திரம்' 'மததீவிரவாதம்' 'பெண்ணுரிமை' போன்று இன்னும் சில உண்டு. தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள், அறிவுஜீவிகள், அதிமேதாவிகள் என கருதிக் கொள்ளும் சிலர் இந்த வார்த்தைகளை அதிகம் உபயோகப் படுத்துவதை நீங்களே பார்த்திருக்கலாம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத இவர்கள் அகில உலகத்திற்கும் அறிவுரை சொல்வதற்கு தயங்குவதேயில்லை. தீவிரவாதச் செயல்களை மதங்களோடு, குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தோடு தொடர்புபடுத்துவதற்கும் இவர்கள் கொஞ்சமும் தயங்குவது கிடையாது.

விமான நிலையங்களில் அம்மணகுண்டி ஆக்குவதுதான் உங்களுக்கு நேரும் அதிகபட்ச பாதிப்பு. ஆனால் ஒரு முஸ்லிமாக வாழ்வதில் உள்ள பிரச்னைகளை குஜராத்தில் வசிக்கும் ஒரு முஸ்லிமிடம் கேட்டுப் பாருங்கள். குண்டு வைத்தவன் பாகிஸ்தான்காரனாக இருந்தாலும் சாமியாரிணி பிரக்யாசிங்காக இருந்தாலும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவது அதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இந்திய முஸ்லிம். இதனால் எத்தனை அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கையை, உயிரை தொலைத்திருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? தீவிரவாதச் சம்பவம் நடந்த உடனேயே அதை இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடும் ஊடகங்கள் ஒரு புறம், அந்தச் செய்தியை 'பொறுப்பாக' தனது பதிவுகளில் பதிந்து கூடவே மதவாதிகளுக்கு அட்வைஸ் மழை பொழிந்து நிறைய ஓட்டுகளும் பின்னூட்டங்களும் பெறும் பதிவுலக மேதைகள் இன்னொரு புறம்.

உங்கள் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார். எங்கள் மதத்திலிருந்து வழிதவறிச் செல்பவர்களை நேர்வழிப் படுத்துவது எப்படி என்று எங்கள் மத அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லும்முன்பே அதை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கள் மத இளைஞர்கள் அவர்களின் நன்னடத்தையினாலேயே பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் மனம் திருந்தச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். சாமியார் அசீமானந்தா இதற்கு ஒரு உதாரணம்.

எனவே, நிறைய ஓட்டு, பின்னூட்டமெல்லாம் வர்ற மாதிரி பதிவு போடனும்னு உங்களுக்கு கை நமநமத்தால் அதற்காக நிறைய மொக்கை விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் பதிவு சூடாக வேண்டுமென்பதற்காக தயவு செய்து எங்களை, எங்கள் மார்க்கத்தை இதில் இழுக்காதீர்கள். இது உங்களுக்கு ஒரிரு பதிவுகளுக்கு உள்ள செய்தி. ஆனால் இது எங்கள் வாழ்க்கை நெறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாதத்திறமையை, புத்தி சாதுர்யத்தை வேறு இடங்களில் காட்டிக் கொள்ளுங்கள். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//விமான நிலையங்களில் அம்மணகுண்டி ஆக்குவதுதான் உங்களுக்கு நேரும் அதிகபட்ச பாதிப்பு. ஆனால் ஒரு முஸ்லிமாக வாழ்வதில் உள்ள பிரச்னைகளை குஜராத்தில் வசிக்கும் ஒரு முஸ்லிமிடம் கேட்டுப் பாருங்கள். /

எனக்கு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அம்மணகுண்டி ஆவதில் தயக்கமில்லை, ஆனால் நம் நாட்டின் குடிமகனின் ஒட்டு மொத்த அடையாளமான அரசியல் தலைவர்களே அவ்வாறு ஆக்கப்பட்டுள்ளனர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர், மற்றவர்களும் அவ்வாறான அவமானங்கள் வெளியே தெரிவதில்லை. ஏன் உங்கள் மத வழிகாட்டுதல் படி கை கழுத்து காதுகளை மறைத்துக் கொள்ளும் பெண்களை எக்ஸ்ரே வழியாக ஊடுறுவிப் பார்ப்பது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லையா ?

குஜராத்தில் முஸ்லிமாக வாழ்வது பிரச்சனையா என்ற கேள்விக்கு முன்பே இங்கே கோவையில் இந்துவாக வாழ்வதன் பிரச்சனைகளின் பின்னனிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாதது அல்ல, கோவையில் குண்டு வெடித்த போது மோடி தமிழ்நாட்டின் முதல்வர் அல்ல. சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை கேள்விக் குறியானது எதனால், இவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்காத போது மற்றவற்றிற்கு கவலைப்படுவது ஏன் ? தவிர உங்களை பொறுப்பெற்கச் சொல்வது என் நோக்கம் அல்ல, உங்களின் பார்வை இஸ்லாமியர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டும் தான் உள்ளது என்பதற்காகச் சுட்டினேன்.

//உங்கள் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார். எங்கள் மதத்திலிருந்து வழிதவறிச் செல்பவர்களை நேர்வழிப் படுத்துவது எப்படி என்று எங்கள் மத அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லும்முன்பே அதை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கள் மத இளைஞர்கள் அவர்களின் நன்னடத்தையினாலேயே பிற மதத்தைச் சேர்ந்தவர்களையும் மனம் திருந்தச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். சாமியார் அசீமானந்தா இதற்கு ஒரு உதாரணம். //

ஏ சிங்கள இனவெறி அரசே ......ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே, விரதமே என்று மிகப் பெரிய கட்டுரை எழுதினால் இலங்கையோ, அமெரிக்காவோ ஏறிட்டுப்பார்க்காது, அவர்கள் செவிமடுப்பார்கள் என்று யாரும் நினைப்பதில்லை, வெறும் விழிப்புணர்வு என்ற அடிப்படையில் தான் அந்த தொகுப்பை முன்வைக்கிறார்க்கள், மதவாதிகள் திருந்துவார்கள் என்று யாரும் நினைப்பதில்லை, ஆனால் மதவாதிகள் பற்றிய விழிப்புணர்வு பிறரையும் மதவாதி ஆகுவதில் இருந்து தடுக்கும். எனவே இங்கு மதவாதிகளுக்கான வேண்டுகோள் என்பது கூட மதவாதிகளை கேட்டுக்கொள்வதாக பொருள் ஆகாது, மதவாதிகளிடம் கேட்கவேண்டியவை என்கிற அடிப்படையில் அவை எழுதப்பட்டதாகவும், எனவே இங்கு கேட்கப்பட்டு மதவாதிகள் குறித்த கேள்விகளுக்கு உங்களை பொறுப்பேற்கச் சொல்லி நானும் கேட்கவே இல்லை.

மரைக்காயர் சொன்னது…

என்னுடைய இன்னொரு பின்னூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?

கோவி.கண்ணன் சொன்னது…

// மரைக்காயர் said...
என்னுடைய இன்னொரு பின்னூட்டத்திற்கு என்ன நேர்ந்தது?//


கிளிப்பிள்ளைக்குச் சொன்னது போல் சொல்லியும் மறுபடியும் சிங்கப்பூர் சட்டம் பற்றிய அறிவுரை இருந்ததால் நான் வெளியிட வில்லை.

மரைக்காயர் சொன்னது…

//குஜராத்தில் முஸ்லிமாக வாழ்வது பிரச்சனையா என்ற கேள்விக்கு முன்பே இங்கே கோவையில் இந்துவாக வாழ்வதன் பிரச்சனைகளின் பின்னனிகள் உங்களுக்கு ஒன்றும் தெரியாதது அல்ல, கோவையில் குண்டு வெடித்த போது மோடி தமிழ்நாட்டின் முதல்வர் அல்ல. சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை கேள்விக் குறியானது எதனால், இவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்காத போது மற்றவற்றிற்கு கவலைப்படுவது ஏன் ?//

கோவையில் நடந்ததற்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அங்கு நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் முஸ்லிம்கள் என்பதாலா? தமிழ் பேசும் வலைப்பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் மிக ஆபாசமாக எழுதுகிறார். பிறருடைய அந்தரங்கங்களை வெளிப்படுத்துகிறார். அவரால் பலருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உங்களைப் போலவே அவரும் தமிழ் பேசும் வலைப்பதிவர்தான். உங்களைப் போலவே அவரும் ப்ளாக்ஸ்பாட்தான் உபயோகிக்கிறார். உங்களைப் போலவே அவரும் தமிழில்தான் எழுதுகிறார். அவருடைய செயல்களுக்கு நீங்கள் ஏன் பொறுப்பேற்க கூடாது? ஊர் உலகத்திற்கெல்லாம் அறிவுரை சொல்வதற்கு முன்பு ஏன் நீங்கள் அவருக்கு பிரச்சாரம் பண்ணி அவரை உங்களுடைய வழிக்கு திருப்பக்கூடாது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

கோவையில் முஸ்லிம்கள் குண்டு வைத்தார்களென்றால் அதற்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பதிவை படித்துப் பாருங்கள்: http://wahhabipage.blogspot.com/2008/06/blog-post_13.html

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். உங்கள் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார். எங்கள் மதத்திலிருந்து வழிதவறிச் செல்பவர்களை நேர்வழிப் படுத்துவது எப்படி என்று எங்கள் மத அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லும்முன்பே அதை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீங்கள் வேண்டுமானால் ஏ அமெரிக்க அரசே, ஆப்பிரிக்க அரசே என்று விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவையில் நடந்ததற்கு நான் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அங்கு நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் முஸ்லிம்கள் என்பதாலா?//

திரும்பவும் திரித்தல், நான் எங்கே பொறுபேற்கச் சொன்னேன், அதில் அடுத்த வரிகளையும் சேர்த்தே படிக்கவும். நுனிப்புல் மேய வேண்டாம்.

"இவற்றிற்கு நீங்கள் பொறுப்பேற்காத போது மற்றவற்றிற்கு கவலைப்படுவது ஏன் ? தவிர உங்களை பொறுப்பெற்கச் சொல்வது என் நோக்கம் அல்ல, உங்களின் பார்வை இஸ்லாமியர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மட்டும் தான் உள்ளது என்பதற்காகச் சுட்டினேன்."

//தமிழ் பேசும் வலைப்பதிவர் ஒருவர் தனது வலைப்பதிவில் மிக ஆபாசமாக எழுதுகிறார். பிறருடைய அந்தரங்கங்களை வெளிப்படுத்துகிறார். அவரால் பலருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மேலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உங்களைப் போலவே அவரும் தமிழ் பேசும் வலைப்பதிவர்தான். உங்களைப் போலவே அவரும் ப்ளாக்ஸ்பாட்தான் உபயோகிக்கிறார். உங்களைப் போலவே அவரும் தமிழில்தான் எழுதுகிறார். அவருடைய செயல்களுக்கு நீங்கள் ஏன் பொறுப்பேற்க கூடாது? ஊர் உலகத்திற்கெல்லாம் அறிவுரை சொல்வதற்கு முன்பு ஏன் நீங்கள் அவருக்கு பிரச்சாரம் பண்ணி அவரை உங்களுடைய வழிக்கு திருப்பக்கூடாது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.//

அவனவன் கழிவறையில் (மீண்டும் அதே உதாரணம்) அவிழ்த்துக் கொண்டு அமர உரிமை இருக்கிறது, கழிவறையில் அமருபவர் அனுமதி அளித்தாலோ, கதவில் ஓட்டை இருந்தாலோ எட்டிப் பார்த்து இன்பம் அடைபவர்கள் அங்கு செல்வார்கள், உங்களின் ஆபாசப் பதிவு குறித்த கேள்விக்கு இது தான் என் பதில். பதிவு திரட்டிகள் போன்று பொதுவில் அவ்வித ஆபாசப் பதிவுகள் பகிரப்பட்டால் நீங்களோ நானோ ஆபாசமாக எழுதுபவரை செருப்பால் அடிக்கும் போது தடுக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை.

மதவாதிகள் தங்களுக்கென தனிதளம் கண்டு (தமிழிந்து, ஓபிஜெ) போன்று எழுதி கொண்டால் எம் போன்றோர் ஏன் கேள்வி கேட்கப் போகிறார்கள், என்ன கெரகமா ?

//கோவையில் முஸ்லிம்கள் குண்டு வைத்தார்களென்றால் அதற்கு முன்னால் நிகழ்ந்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பதிவை படித்துப் பாருங்கள்: http://wahhabipage.blogspot.com/2008/06/blog-post_13.html//

1001 க்கூட இருக்கட்டும், ஆனால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உறவினர்கள் இந்தக்காரணங்களை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்துவிட்டார்கள் என்று எங்கேனும் தகவல் இருந்தால் கொடுக்கவும்.

//மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். உங்கள் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சார். எங்கள் மதத்திலிருந்து வழிதவறிச் செல்பவர்களை நேர்வழிப் படுத்துவது எப்படி என்று எங்கள் மத அறிஞர்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லும்முன்பே அதை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீங்கள் வேண்டுமானால் ஏ அமெரிக்க அரசே, ஆப்பிரிக்க அரசே என்று விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதுங்கள்.//

நான் மீண்டும் சொல்கிறேன், நான் மதவாதிகளுக்கு அறிவுரைக் கூறவில்லை, என் நோக்கமும் அது இல்லை, மேலே சொன்னது போன்று 'ஏ அமெரிக்க ஏகாதி பத்தியமே' என்று காம்ரோடுகள் எழுதுவது போல் தான் நானும் எழுதியுள்ளேன், அதைப் படித்து மதவாதிகள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு கிடையாது. எல்லோரும் மனதினுள் போட்டு புழுங்கிவருவது, என் போன்ற ஒரு சிலரால் சில சமயம் வெளிப்படுகிறது, நான் எழுதாவிட்டாலும் வேறு எவரோ எழுதத்தான் செய்வார்கள், என்னைப் போன்ற பூனைகள் எழுதாவிட்டாலும் யானைகள் எழுதும், அதை தடுக்கும் ஆற்றல் எனக்கும் உங்களுக்கும் கிடையாது, மதவாதிகளால் தான் மற்றொரு மதவாதி உருவாகிறான். நீங்கள் பீஜேக்களை உருவாக்குங்கள் அவர்கள் அரவிந்தன் நீலகண்டனையோ, நேசக்குமாரையோ உருவாக்குவார்கள்.

இங்கு நான் எழுதியவற்றைப் போல் வேறொரு பதிவில் வேறொரு பெயரில் என்னால் எழுத முடியும், அவ்வாறு செய்யாத அடிப்படை நேர்மை என்னிடத்தில் இருக்கிறது, அதைப் பொறுக்கமாட்டால் விமர்சனங்களும் கல்லடிகளும் என்னைப் போல் எழுத நினைக்கும் பிறரை 'அவதாரம்' எடுக்க வைத்துவிடும் என்பதை தூற்றுபவர்கள் சிந்திக்கட்டும்.

Robin சொன்னது…

//நீங்கள் பீஜேக்களை உருவாக்குங்கள் அவர்கள் அரவிந்தன் நீலகண்டனையோ, நேசக்குமாரையோ உருவாக்குவார்கள்.// உண்மை. தங்கள் முதுகில் அழுக்கு மூட்டையை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பதிவர்களால்தான் இஸ்லாத்தை விமர்சித்து பலரும் எழுதவேண்டி வந்தது. தங்கள் மதத்திலுள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை.

கலகலப்ரியா சொன்னது…

எனக்கு மதங்களில் நம்பிக்கை இல்லை...

இந்தக் கட்டுரையில் சில பல உண்மைகள் இருந்தாலும்... இதுவும் ஒரு மதப் பிரச்சாரம் போன்று வடிவமெடுத்திருப்பது ஏனோ?..

இவரை நம்புங்கள்... இது உங்களுக்கு கிடைக்கும்..

இதைச் செய்யுங்கள்..

இதைச் செய்யாதீர்கள்..

இது தப்பு.. இது சரி..

இப்படி “நாத்திகம்” என்பதையும் ஒரு மதமாக்கிப் பிரச்சாரம் செய்வதில் என்ன ஆகிவிடும் என்று நினைக்கிறீர்கள்?

இதனால் ஒரு மதவாதி, நாத்திகனாகி... நான் மனம் திருந்தி விட்டேன்.. என்று சமண சமயத்திலிருந்து திரும்ப சைவத்துக்குத் திரும்பிய திருநாவுக்கரசர் ரேஞ்சுக்கு... கூற்றாயினவா பாடினா சரியா இருக்குமா?

கலகலப்ரியா சொன்னது…

follow up...

மரைக்காயர் சொன்னது…

//திரும்பவும் திரித்தல், நான் எங்கே பொறுபேற்கச் சொன்னேன், அதில் அடுத்த வரிகளையும் சேர்த்தே படிக்கவும். நுனிப்புல் மேய வேண்டாம்.//

40, 50 பின்னூட்டங்கள் வந்துட்டதுனால நீங்க முதல்ல உங்க பதிவுல என்ன எழுதினீங்கன்னு உங்களுக்கு மறந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.

//உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?//

இதை நீங்கதானே எழுதினீங்க? எங்க மதத்து தீவிரவாதிகளிடம் நாங்கள் பொறுப்பாக பிரச்சாரம் செய்து அவர்களை நல்வழிக்கு திருப்ப வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் சக வலைப்பதிவரிடம் பிரச்சாரம் செய்து அவரை உங்கள் வழிக்கு திருப்ப மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வேறு நியாயமா?

//மதவாதிகள் தங்களுக்கென தனிதளம் கண்டு (தமிழிந்து, ஓபிஜெ) போன்று எழுதி கொண்டால் எம் போன்றோர் ஏன் கேள்வி கேட்கப் போகிறார்கள், என்ன கெரகமா ? //

உங்களை யாராவது 'எங்கள் மதத்திற்கு வாருங்கள்' என்று கையைப் பிடித்து இழுத்தார்களா? அப்படி இழுத்தார்களென்றால் அந்த நபருக்கு ஒரு தனிமடல் எழுதியிருக்கலாமே நீங்கள்? அப்படி செய்திருந்தீர்களென்றால் நாங்களெல்லாம் ஏன் உங்களிடம் வந்து முட்டிக் கொண்டிருக்கப் போகிறோம்? கெரகமா என்ன?

//1001 க்கூட இருக்கட்டும், ஆனால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உறவினர்கள் இந்தக்காரணங்களை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் இணைந்துவிட்டார்கள் என்று எங்கேனும் தகவல் இருந்தால் கொடுக்கவும்.//

நீங்கள் நுனிப்புல் மேய்வதன் விளைவுதான் இந்தக் கேள்வி. கோவையில் நடந்த சம்பவங்கள் ஏதோ இஸ்லாத்தை வளர்ப்பதற்காக நடத்தப்பட்டவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல. நாட்டு நடப்பை கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள் சார்.

//நான் எழுதாவிட்டாலும் வேறு எவரோ எழுதத்தான் செய்வார்கள், என்னைப் போன்ற பூனைகள் எழுதாவிட்டாலும் யானைகள் எழுதும், அதை தடுக்கும் ஆற்றல் எனக்கும் உங்களுக்கும் கிடையாது, மதவாதிகளால் தான் மற்றொரு மதவாதி உருவாகிறான். நீங்கள் பீஜேக்களை உருவாக்குங்கள் அவர்கள் அரவிந்தன் நீலகண்டனையோ, நேசக்குமாரையோ உருவாக்குவார்கள். //

என்ன சார் மிரட்டலா?

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன சார் மிரட்டலா?//

மிரட்டல் உருட்டெல்லாம் சிங்கப்பூர் சட்டம் தெரிஞ்சு உங்களிடமா ?

அய்யோ பயமாக இருக்கு.......


நீங்கள் யார் எவர் என்றே தெரியாது, கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் உங்கள் கேள்விகளில் பின்னூட்டங்களில் ஆபாசம் இல்லை என்பதால் அனுமதித்து நானும் பொறுமையாக பதில் கூறினேன், ஆனால் நீங்கள் என்னது கைய பிடிச்சு இழுத்தியா பாணியில் திரும்ப திரும்ப பேசியதையே பேசுவது உங்களுக்கு அலுப்பில்லாமல் இருக்க உங்களுக்கு வேலையில்லாமல் கூட இருக்கலாம். ஆனா எனக்கு அலுப்பாக இருக்கு....

நல்ல வீடியோ...
பார்த்து மகிழவும், நம்ம வடிவேலு தான்.

http://www.youtube.com/watch?v=Rxep9oQwrGU

கோவி.கண்ணன் சொன்னது…

//இதனால் ஒரு மதவாதி, நாத்திகனாகி... நான் மனம் திருந்தி விட்டேன்.. என்று சமண சமயத்திலிருந்து திரும்ப சைவத்துக்குத் திரும்பிய திருநாவுக்கரசர் ரேஞ்சுக்கு... கூற்றாயினவா பாடினா சரியா இருக்குமா?//

யாரும் யாரையும் திருத்த முயற்சிக்கவில்லை மதவாதக் கூறுகளின் தன்மை எவ்வளவு அருவெறுப்பாக உணரப்பட்டு புறந்தள்ளப்படுகிறது என்பதற்கான தொகுப்பில் என்னுடைய சில கருத்துகள் அவ்வளவு தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்