இன்னிக்கு வந்த செய்தி சமூகம் என்பதில் வல்லவன் வைத்ததே சட்டம் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, 100க் கணக்கில் பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள், இராசாயன கருவிகள் வைத்திருந்தார்கள் என்று ஈராக்கில் உள்ளே நுழைந்த அமெரிக்க செய்த போரில் கொல்லப்பட்டவர்கள் 1.67 லட்சம் பேர். இதில் அப்பாவிகள் 79 விழுக்காட்டினராம். கிட்டதட்ட ஒன்னேகால் லட்சம் அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறது அமெரிக்க இராணுவம் என்கிறது அந்தச் செய்தி.
இந்தக் கொலைக்கு அமெரிக்காவை மட்டுமே குற்றம் சுமத்தி ஆர்பரிக்கும் மதவாதிகள், அமெரிக்காப் படைகள் இறங்கிப் போர் செய்ய இடம் கொடுத்தது யார் யார் கேள்வியைக் கேட்டுக்கொள்வதே இல்லை என்பது தான் அந்த ஆர்பரித்தலில் உள்ள முரண்பாடு.
கொலை செய்ய பெரும்பான்மையும், ஆளுமையும் அதைத் தக்க வைத்திருக்க பணக்காரத் திமிர்த் தனமும் இருந்தால் கொலைகள் கண்டு கொள்ளப்படாது என்பதை வரலாறு இலங்கை ஈராக் நிகழ்வுகளின் வழியாகப் பதிந்துக் கொண்டுள்ளது என்பது தான் நிகழ்வுகள் விட்டுச் செல்லும் தகவல்.
ஒரு பணக்காரன் நாலு பேரைக் கொல்லலாம், ஒரு பெரும்பான்மை இனம் தன்னை விட 40 சதவிகிதம் குறைவாக உள்ள மக்களைக் கொல்லாம்.
2 கருத்துகள்:
அமெரிக்க படைகள் இறங்கி கொலை செய்ய இடம் கொடுத்தது யார்//
இந்த கேள்வி ஈராக் மற்றும் இலங்கைக்கும் பொருந்தும் தானே?
//இந்த கேள்வி ஈராக் மற்றும் இலங்கைக்கும் பொருந்தும் தானே?//
இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே சீமான், வைகோ, நெடுமாறன் உள்ளிடோர் கண்டித்து சிறை சென்றனர், தவிர பெருவாரியான தமிழ்நாட்டினரும் இந்திய செயல்பாடுகளை விரும்பவில்லை என்பதன் சாட்சியே காங்கிரஸ் பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியதாகும்
கருத்துரையிடுக