பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2012

மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் !

இந்த இடுகைக்கு விளக்கம் தேவை இல்லை, இருந்தாலும் ஒரு சில விவரங்களைக் கூறிக் கொள்கிறேன்.

ஆக்கப்பூர்வமான படைப்புகளும், நல்ல விவாதங்களையும் எழுதுவதை ஊக்குவிக்க திரட்டிகள் பயன்படுகின்றன, அண்மைக் காலமாக மதவாதிகளின் பிரச்சாரக் கூடமாகவே பலர் எழுதுகிறார்கள், என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம். நான் தமிழ்மணம் தமிழ்வெளி தவிர்த்து வேறு எந்த திரட்டிகளுக்கும் அடிக்கடிச் செல்வதில்லை.

தமிழ்மணம் முகப்பை திறந்தாலே எதோ ஒரு மதபிரச்சாரப் பதிவும், சூடான இடுகைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டும், மகுடம் பகுதியில் தங்கள் இடுகையே நிற்கவேண்டும் என்று வாக்குக் குத்தி நிறுத்துகிறார்கள், தனித்துக் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை, அனைவருக்குமே இது தெரியும் என்பதால் தனியாகச் சொல்லி நான் மதவாதிகளின் கோபத்தைக் கிளறவிரும்பவில்லை, ஆம் நான் மதவாதிகளுக்கு பயப்படுகிறேன், அவர்களின் அவதூறுகளுக்காகப் பயப்படுகிறேன் என்று சொல்ல வெட்க்கப்படவில்லை, அது தான் உண்மை. என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள், அங்கெல்லாம் சென்று நான் விளக்கம் சொல்ல விரும்வும் இல்லை.

முன்பு தமிழ்மணம் மதவாதிகளையும், சோதிடப் பதிவர்களையும் கட்டம் கட்டியது, பின்னர் நாங்கள் மதம் பற்றி மட்டுமே எழுதவில்லை, 'இட்டலி பொடி செய்வது எப்படி ?' என்றும் போட்டுள்ளோம் என்று கூறி புரட்சி செய்து தமிழ்மணத்தின் வாயை மூடி மு(ம)டக்கினார்கள். பவர் ஸ்டார் லத்திகா படத்தை 300 நாள் ஓட்டியது போல் மதவாதிகளின் பதிவுகள் குழுவாக வாக்குக் குத்தப்பட்டு மிகச் சிறந்த இடுகை என்பது போல் காட்டப்படுகிறது. புதிதாக பதிவு எழுதவருபவர்கள் பதிவுலகில் மதம் தான் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதோ, எழுத வேண்டியதோ என்று நினைத்து விலகி ஓட வைக்கும் ஆபத்து உண்டு.

திரட்டிகளும், பதிவுலகும் மேம்பட மதவாதிகளைப் புறக்கணிக்க வேண்டும், நானும் ஒரு சில மதவாதிகளின் சர்சைகளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேன், எதிர்வினை எழுதி இருக்கிறேன் இப்போது அது தவறு என்றே நினைக்கிறேன்.

இது இப்படியே போனால் பீடி சாமியார், கேடி சாமியார் கதைகள் கூட ஆன்மிகம் போன்று மதவாதிகளால் கடைவிரிக்கப்படும்.

பின்குறிப்பு : மைனஸ் ஓட்டு விழும் என்றாலும் கூட இது மிகவும் தேவையான ஒரு தகவல் தான், மதவாதிகளின் மைனஸ் ஓட்டுகள் வரவேற்கப்படுகின்றன, ஆனால் அவை பாசிட்டிவ் வாக்காக் கருதப்படும்.

43 கருத்துகள்:

ராஜ் சொன்னது…

// பவர் ஸ்டார் லத்திகா படத்தை 300 நாள் ஓட்டியது போல் மதவாதிகளின் பதிவுகள் குழுவாக வாக்குக் குத்தப்பட்டு மிகச் சிறந்த இடுகை என்பது போல் காட்டப்படுகிறது///
உண்மை தான்......நான் கிட்ட தட்ட 2 வருசமா தமிழ் பதிவுகளை படிச்சுகிட்டு வரேன்....இப்ப இருக்குற மாதிரி ஒரு மோசமான சுழல் இதுக்கு முன்னாடி நான் பார்த்தது இல்ல....

//ஆபாச அர்சனைகளுக்கு பயப்படுகிறேன், அவர்களின் அவதூறுகளுக்காகப் பயப்படுகிறேன் என்று சொல்ல வெட்க்கப்படவில்லை,///
நீங்க ரொம்ப நேர்மையானவர்......உங்களுக்கு என்னோட ராயல் சல்யூட்..

ஆனா சார்....உங்க பதிவ படிச்சு யாரும் திருந்த போறது கிடையாது....அது உங்களுக்கும் நல்லா தெரியும்......இருந்தாலும் உங்க நிலைய ரொம்ப ரொம்ப தெளிவா சொல்லி இருக்கேங்க.......இவங்களை கண்டிப்பா தமிழ்மணம் மட்டும் தான் அடக்க முடியும்.....

UNMAIKAL சொன்னது…

கோவி கண்ணன் கூறுவது....

//என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம். //

அட உடனடியாக அதை கோவிகண்ணன் செய்யட்டும். யாரும் தடுக்கவில்லை. கோவிக்கண்ணன் போய்விட்டால் யார் குடியும் முழுகிடாது. தமிழ்மணம் எப்போதும் போல் சிறப்பாக செயல்படும்.

இந்தப்பதிவே தமிழ்மணத்தில் கோவிக்கண்ணனுடைய கடைசி பதிவாக இருக்கட்டும்.

Aashiq Ahamed சொன்னது…

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

உங்கள் கருத்தை அழகான முறையில் பதிவு செய்ததற்கு நன்றி.

உங்கள் நேர்மை இன்மை காரணமாக உங்கள் தளத்திற்கு வருவதை நான் தவிர்த்திருந்தேன். அது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

இருப்பினும் ஒரு சிறிய நெருடலை கண்டதால் கமெண்ட் போட வேண்டியதாக போய்விட்டது.

//என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள்//

அதனை செய்தது முஸ்லிம் என்றால், எங்கே என்று ஆதாரத்துடன் சொல்வீர்கள் என்றால் கண்டிக்க தயாராக இருக்கின்றோம். ஒரு இறையச்சம் கொண்டவர் இத்தகைய செயலை செய்ய மாட்டார் என்றே நம்புகின்றேன். எனினும் நீங்கள் ஆதாரங்கள் கொடுத்தால் அவரை ஒருவழி பண்ண ரெடி.

மீண்டும் நன்றிகள்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஜெய்லானி சொன்னது…

//திரட்டிகளும், பதிவுலகும் மேம்பட மதவாதிகளைப் புறக்கணிக்க வேண்டும்,//

இதேப்போல நாத்திகர்ளைகளையும் புறக்கனிக்கனுமின்னு எல்லாரும் கிளம்பினா பதிவுலகம் என்னாகிறது..:-))).

உங்களுக்கு பிடிச்சதை நீங்க எழுதுறீங்க .அவங்களுக்கு பிடிச்சதை அவங்க எழுதுறாங்க . நடுவில ஏன் இப்படி.?? :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//அதனை செய்தது முஸ்லிம் என்றால், எங்கே என்று ஆதாரத்துடன் சொல்வீர்கள் என்றால் கண்டிக்க தயாராக இருக்கின்றோம். ஒரு இறையச்சம் கொண்டவர் இத்தகைய செயலை செய்ய மாட்டார் என்றே நம்புகின்றேன். எனினும் நீங்கள் ஆதாரங்கள் கொடுத்தால் அவரை ஒருவழி பண்ண ரெடி.

மீண்டும் நன்றிகள்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ//

செங்கொடி தளத்திலும் இன்னும் பிற தளத்திலும் இருக்கு, அதை செய்தது யார் என்ற ஆராய்சி தேவையின்றியே அது உள்ளங்கை நெல்லிக்கனி தான்.

இறையச்சத்துக்கு பயந்தவன் எந்த தவறும் செய்யமாட்டான் என்கிற உங்கள் நம்பிக்கை நல்வாழ்த்துகள், எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அட உடனடியாக அதை கோவிகண்ணன் செய்யட்டும். யாரும் தடுக்கவில்லை. கோவிக்கண்ணன் போய்விட்டால் யார் குடியும் முழுகிடாது. தமிழ்மணம் எப்போதும் போல் சிறப்பாக செயல்படும்.

இந்தப்பதிவே தமிழ்மணத்தில் கோவிக்கண்ணனுடைய கடைசி பதிவாக இருக்கட்டும்.//

பதிவின் சாரத்தை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. உங்க ஆசையின் படி கோவி.கண்ணன் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள்

Aashiq Ahamed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இதற்கு தான் உங்க தளம் பக்கமே வராம இருந்தேன்.

மறுபடியும் நிரூபித்ததற்கு நன்றி..

Barari சொன்னது…

ண்பர் ஜெய்லானி கூறுவது போல் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் எழுதுங்கள் மதவாதிகள் அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் எழுதட்டும் .
இதில் என்ன தவறு இருக்க முடியும் .தமிழ்மணத்தை ஒரு சாராருக்கு மட்டுமே உரியதாக்க ஏன் விரும்புகிறீர்கள் ?அப்படி என்னதான் எல்லோருக்கும் பயன்படும் ஆக்கங்களை நீங்கள் படைத்து இருக்கிறீர்கள்

சிராஜ் சொன்னது…

சகோ கோவி கண்ணன்,

வெளியில் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இப்பொழுதான் உகாண்டாவில் இருந்து ஒரு நண்பர் உங்கள் பதிவு பற்றி குறிப்பிட்டார். அதனால் வந்து பார்த்தேன்.
உங்கள் ஆதங்கத்தை சொல்லி உள்ளீர்கள். தவறேதும் இல்லை. எனது நிலைப்பாடு சம்பந்தமாக பின்னூட்டம் சரிவராது, ஆகவே ஒரு பதிவு(எதிர் பதிவு அல்ல) வரும்.
பார்த்துவிட்டு உங்கள் வெள்ளியான கருத்துக்களை தெரிவியுங்கள்.

farook சொன்னது…

//என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள்// இது மோசமான செயல், ஆனால் இந்த உலகத்தில் உங்களின் பெயரில் நீங்க மட்டும் இருந்த அவர்களின் செயலுக்கு நம் ஒற்றுமையாக அவர்களை எதிர்கலாம்.


//உங்க ஆசையின் படி கோவி.கண்ணன் எழுதாவிட்டாலும் வேறு யாராவது எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள்// அப்போதும் யாரவது பதில் இடுவார்கள்

சின்ன ஆட்வைஸ், எதிர்பதிவு போட்டே எதிர்ப்பு அதிகரிக்கும். உங்களுக்கு சிலகாலம் ஓய்வு தேவை. ஆப்பொழு தான் நீங்கள் புதிய செய்தியை அளிப்பீர்.

வினையூக்கி சொன்னது…

திரைத்துறை சார்ந்த விசயங்களுக்கு தனியாக திரட்டி வைத்திருப்பது போல , ஆன்மீகம், மதம் சார்ந்த விசயங்களுக்கு தமிழ்மணத்தில் தனியாக ஒன்றைக் கொடுத்துவிட்டால் , ஆன்மீக நண்பர்கள் அங்குப் போய் படித்துக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

நண்பர் சிராஜ், தீயாக வேலை செய்பவர்கள் என்று மட்டுமே கேள்விபட்டு இருக்கேன், உகாண்டாவிலிருந்து பேசும் அழைத்துச் சொல்லும் அளவுக்கா ? இந்த பதிவு எழுதும் போது வராத பயம் இப்ப வருது. தகவலுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

வினையூக்கி நீங்கள் சொல்வது நல்ல யோசனை. இருந்தும் கவர்சிகரமான தலைப்புகளில் உள்ளடக்கம் மாற்றி ஏமாறினால் தமிழ்மணம் என்ன செய்யும் ? நான் ரீடருக்கு மாறிட உள்ளேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

கோவி.கண்ணன்!வணக்கம்.
எத்தனை ஆண்டுகளாக நீங்கள் பதிவுலகில் இருக்கிறீர்கள்!மூட்டைப் பூச்சிகள் பெருகி விட்டதென்று வீட்டையே கொழுத்தி விடலாமென்கிறீர்களே:)

தமிழ்மணம் மீதான தாக்குதலையே தாங்கிக் கொண்டு தமிழ்மணம் இன்னும் நடை போடுகிறது.தனி மனித தாக்குதல்கள் செய்யாமல் உங்கள் கருத்துக்களை இனியும் தொடருங்கள்.

எப்பொருள் யார் யார் பதிவு வழி கேட்பினும் மெய்ப்பொருள் பதிவுலகில் காணப்படும்:)

சிராஜ் சொன்னது…

இன்னொரு விஷயம், என்னோட(சுவனப்பிரியனோடது) இடுகை தான் இப்பொழுது மகுடத்தில் இருக்கிறது. ஒரு வோட்டு இரண்டு வோட்டுதான் வித்தியாசம் என்று நினைக்கிறேன். நீங்கள் தாராளமாக மைனஸ் வோட்டு போட்டு என்னை இறக்கி விடலாம். நிச்சயம் நான் கோபப்பட மாட்டேன். உங்களுக்கு ஒரு பிளஸ் வோட்டும் போட்டுட்டேன், நீங்க நல்லா பேஷா மகுடத்தில் போய் அமர்ந்து கொள்ளுங்களேன். யார் தடுத்தா??????

சிராஜ் சொன்னது…

/*
திரைத்துறை சார்ந்த விசயங்களுக்கு தனியாக திரட்டி வைத்திருப்பது போல , ஆன்மீகம், மதம் சார்ந்த விசயங்களுக்கு தமிழ்மணத்தில் தனியாக ஒன்றைக் கொடுத்துவிட்டால் , ஆன்மீக நண்பர்கள் அங்குப் போய் படித்துக் கொள்ளலாம். */

அப்படியே நாத்திகம் பேசுவதற்கு தனியாக ஒன்று, கம்யுனிஷம் பேசுவதற்கு தனியாக ஒன்று, சகோ கோவி கண்ணன் போல் இரண்டும் கலந்து பேசுவதற்கு ஒன்று,

அரசியல் பேசுவதற்கு ஒன்று, 18 + போடுவதற்கு ஒன்று.... இப்படியே போய்கிட்டு இருந்தா....

ஸ்...ஸ்..ஸ்.... இப்பவே கண்ண கட்டுதே. வெளங்கிரும் தமிழ்மணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

சிராஜ், என் இடுகைகளுக்கு நான் வாக்களிப்பதில்லை. என் இடுகைகள் அனைவரும் படிக்க வேண்டியது என்று பரிந்துரை செய்து ஏமாற்ற நான் விரும்புவதும் இல்லை.

தருமி சொன்னது…

//அதனை செய்தது முஸ்லிம் என்றால், எங்கே என்று ஆதாரத்துடன் சொல்வீர்கள் என்றால் கண்டிக்க தயாராக இருக்கின்றோம். ஒரு இறையச்சம் கொண்டவர் இத்தகைய செயலை செய்ய மாட்டார் என்றே நம்புகின்றேன். //

ஏறத்தாழ இதே போன்ற நிலை என் பதிவில். ஒருவர் 'மிகப் பிரியத்துடன்' ஒரு மயில் அனுப்பியதைப் பதிவாக்கினேன். ஒரு 'மானிட்டர்' வந்து, அது 'எங்க ஆளா' இருக்காது என்றார். எல்லாவற்றையும் சரி பண்ணி விடுவேன் என்றார். அந்த 'இறையச்சம் கொண்டவ்ரையும்' காணவில்லை; அவர் பதிவுகளும் இப்போது இல்லை.

'இறையச்சம் கொண்டவர்களுக்கு' ஒரு சான்று மட்டும் இது.

சுவனப்பிரியன் சொன்னது…

திரு கோவிக் கண்ணன்!

சமீப காலமாகவே உங்கள் பதிவுகளில் நிறைய தடுமாற்றம். ஏன் இப்படி? பழைய கோவி கண்ணன் எங்கே? வாரத்தில் சில பதிவுகள் மத சம்பந்தமானவை இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு? இதற்கு முன் நாத்திக பதிவுகளும், ஆபாச பதிவுகளும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளும் மகுடத்தை எட்டிய போதும் சூடான இடுகைகளில் வந்த போதும் யாரும் இவ்வாறு பொங்கவில்லையே!

எதிர்க் கருத்து சொல்வதற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பதை இப்படிப் பதிவு எழுதி போட்டு உடைத்திருக்க வேண்டாம்.

காலம் கடந்து விடவில்லை. இனிமேலாவது மத வாதிகள் வைக்கும் வாதத்தை தர்க்க ரீதியாக பதிவிட்டு முறியடிக்க முயற்சி பண்ணுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html

R.Puratchimani சொன்னது…

மனித நேயத்திற்கு தராத முக்கியத்துவத்தை மதத்திற்கு தருபவன் மனிதன் அல்ல இறைவனாக கூட இருக்க முடியாது.

நீங்கள் சொல்லும் வாக்கு இடும் குற்றத்தை மத வாதிகள் மாட்டுமே செய்வதில்லை.
உண்மையை சொன்னால் பல பதிவர்களும் இத்தவறை செய்கின்றனர்.
ஓட்டுக்கு காசு நாட்டில்.....ஓட்டுக்கு ஒட்டு பதிவுலகில்.....
பிடித்து ஒட்டு குத்துவதில் தவறல்ல ...மற்றவர் நமக்கு ஒட்டு குத்த வேண்டும் என்று செய்வதுதான் தவறு.

பதிவுலகம் சீக்கிரம் திருந்தும் என்று நம்புவோம்

R.Puratchimani சொன்னது…

மனித நேயத்திற்கு தராத முக்கியத்துவத்தை மதத்திற்கு தருபவன் மனிதன் அல்ல இறைவனாக கூட இருக்க முடியாது.

நீங்கள் சொல்லும் வாக்கு இடும் குற்றத்தை மத வாதிகள் மாட்டுமே செய்வதில்லை.
உண்மையை சொன்னால் பல பதிவர்களும் இத்தவறை செய்கின்றனர்.
ஓட்டுக்கு காசு நாட்டில்.....ஓட்டுக்கு ஒட்டு பதிவுலகில்.....
பிடித்து ஒட்டு குத்துவதில் தவறல்ல ...மற்றவர் நமக்கு ஒட்டு குத்த வேண்டும் என்று செய்வதுதான் தவறு.

பதிவுலகம் சீக்கிரம் திருந்தும் என்று நம்புவோம்

Robin சொன்னது…

காமெடியா எடுத்துக்க வேண்டிய விஷயத்தையெல்லாம் சீரியஸா எடுத்துக்குறீங்க. சுவனப்பிரியன் பதிவுகளை படித்துப் பாருங்கள், உங்களை அறியாமலே சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நீங்கள் ஏன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது, மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே.

பழனி.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

thequickfox சொன்னது…

நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை.
//ஆனால் நான் மதவாதிகளுக்கு பயப்படுகிறேன்//
இன்று உலகமே அவர்களை பற்றி அறிந்து பயப்படுகிறது. அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கின்றன.
//என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம்//
மிவும் தவறு. பின்பு தமிழ்மணம் அப்கானிஸ்தான்மணமாக மாறும்.
//நீங்கள் ஏன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே.-ரொபின்//
நண்பர் ரொபின் தெரிவித்த யோசனை அருமையானது. எனது மருத்துவ இன்ஸுரன்ஸ் கொம்பனி தனது வாடிக்கையாளருக்கு மாதாந்தம் அனுப்பும் சஞ்சிகைளில் எவ்வளுவு முடியுமே இறைச்சிவகைகளை குறைக்கவும், கூடியளவு சைவ உணவுவகைகளை சாப்பிடு என்று ஆலோசசை வழங்கபடுகிறது. நுனிதோலை வெட்டு என்று ஒரு மத வெறி பிடித்தவர் தனது மத நம்பிக்கையை பதிவிடும் போது எல்லா மனிதர்களுக்கு நன்மை தரும் விடயங்களை நீங்கள் ஏன் பதிய கூடாது.

சுவனப்பிரியன் சொன்னது…

அதானே! நீங்கள் சத்திய சன்மார்க்கத்தைப் பற்றி எழுதுங்கள். ராபின் கிறித்துவத்தைப் பற்றி எழுதட்டும். முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பற்றி எழுதட்டும். தருமி நாத்திகத்தைப் பற்றி எழதட்டும். யாரும் தடுக்கவில்லையே! ஒருவர் மற்றவரின் மார்க்கத்தை தெரிந்து கொண்டால் சகப்புகள் நீங்குமே! இதில் கோவியாருக்கு என்ன பிரச்னை?

G u l a m சொன்னது…

அன்பு சகோ கோவி.கண்ணன்

உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்...

சிலமுறை உங்கள் தளத்தை பார்வையிட்டாலும். கருத்திட விளைந்தது இதுவே முதல்முறையென நினைக்கிறேன்...
தொடர்ந்து இஸ்லாத்தை மையப்படுத்திய சில இடுகைகள் தமிழ்மண மகுடமாக வந்திருப்பது உண்மைதான். இதை மையப்படுத்தி தற்போது பதிவிட்ட நீங்கள் அத்தகைய ஆக்கங்கள் என்னவிதமான பிரச்சனைகளை தனிமனிதருக்கோ அல்லது ஒட்டு மொத்த சமூகத்திற்கோ ஏற்படுத்தியது என்பதை சொல்ல வில்லையே?

சகோ முதலில் எதார்த்தம் என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
ஒருவர் பொதுவில் ஒன்றை பகிரவேண்டுமென்றால் எது தெளிவாக தெரியுமோ, அல்லது புரியுமோ அதைக்குறித்துதான் அவரால் பதிவுகளாக வெளியிடமுடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று!.

சினிமாத்துறையே விரும்புவர் சினிமா பற்றியும்,
அரசியலில் ஆர்வம் கொண்டவர் அரசியல் குறித்தும் - அஃதில்லாத
தொழில் நுட்பம் அறிந்தவர் அதைக்குறித்தும் ஆக்கங்கள் எழுதுவர்.

அதுப்போலவே இஸ்லாத்தை தெரிந்தவர்கள் இஸ்லாத்தை தானே சொல்ல முடியும்!

இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு சகோ ? தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி. நமது கருத்துக்கள் பலரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு அத்திரட்டியில் பகிரப்படுதல் அவசியமென நினைப்பவர்கள் அவற்றில் பகிர்கிறார்கள். அதில் முஸ்லிம்களும் அடக்கம். ஓட்டளிப்பது அவரவர் உரிமை. ஆக பலர் அளிக்கும் வாக்குகள் ஒருவரின் பதிவை மகுடத்திற்கு கொண்டுசெல்வதில் என்ன தவறு? இதில் எந்த வித முறைகேடு நிகழ்ந்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள்? இன்று வரையிலும் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. ஆகையால் இது போன்ற நிலைகள் சுய தீர்மானிப்பு என்றும் கண்டனம் தெரிவிக்க முடியாது. மேலும் முஸ்லிம்கள் எழுதும் ஆக்கங்களுக்கு சமூக பயன்பாடு இருப்பதாக சக முஸ்லிம்கள் நினைப்பதால் ப்ளஸ் ஓட்டளிக்கிறார்கள். அவ்வாக்கம் சமூக நலனுக்கு கேடு விளைவிக்குமென்றால் மைனஸ் ஓட்டுப்போட்டு தாரளமாக அங்கே எதிர்ப்பை தெரிவிக்கலாமே?

எனக்கு ப்ளஸ் ஓட்டு போடும் உரிமையை வழங்கிய அதே தமிழ்மணம் உங்களுக்கும் மைனஸ் ஓட்டுப்போடும் உரிமையை அங்கு வழங்கிதானே உள்ளது! பிறகென்ன?

இவைப்போன்றவைகள் தேவையற்ற அல்லது அவசியமற்ற பதிவுகள் என உங்களைப்போல நினைப்போர் தாரளமாக பதிவுகளை முன்னுக்கு வருவதை தடை செய்யலாமே...?
ஏனெனில் பொதுவாக இணையத்தை அதிகம் பயன்படுத்துவோர் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாத சகோதர்களே., அப்படியிருக்க மேற்சொன்ன வழிமுறை மிக இலகுவானதே? ஏன் அப்படி செய்யவில்லை...? இஸ்லாமிய பதிவுகளால் எந்த வித பாதகமும் ஏற்படுவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிந்தவர்களாக இருப்பதாலே...

தமிழ்மணத்தில் இஸ்லாமிய பதிவுகள் மகுடம் சூட்டுவதற்கு முஸ்லிம்களின் ஆக்ரமிப்பு காரணமில்லை சகோ முஸ்லிம்கள் மத்தியில் தமிழ்மண வாசிப்பின் அதிகரிப்பே காரணம்.

சரி இன்னும் எளிய விளக்கம் தர முயல்கிறேன்

பெரும்பாலும் உங்கள் கருத்துக்கள் மதங்களை அல்லது கடவுளை (குறிப்பாய் இஸ்லாத்தை) விமர்சித்தே ஆக்கமாக இருக்கிறது. அதே நிலையில் உங்கள் மீது நான் குற்றச்ச்சாட்டை பொருத்தினால்...? தமிழ்மண விருதுகள் இரண்டு முறை பெறுவதற்கு மதங்ளை தாக்கி எழுதியது தான் காரணம் என்றால் எப்படி அது பொருத்தமான வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுப்போல தான் உங்களின் மேற்கண்ட குற்றச்சாட்டும்!

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை சகோ எழுதப்படும் ஆக்கங்கள் எதற்காக என்பதே... இங்கு சிந்தையில் நிறுத்த வேண்டிய ஒன்று!

இப்போதும் பாருங்கள் மத ஆக்ரமிப்பு எனும் பேரில் மதத்தை விமர்சித்தே ஹிட் பெற நினைக்கிறீர்கள்... ? இதை எந்த வகை பதிவில் சேர்க்க...
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்


இறை நாடினால் இனியும் தொடர்கிறேன்

வவ்வால் சொன்னது…

கோவி,

உங்களை என்னமோனு நினைச்சேன் , இப்படி இருக்கிங்களே. நீங்க என்ன திரட்டிக்கு கண்டெண்ட் புரொவைடர் வேலை செய்யவா எழுத ஆரம்பிச்சிங்க?

என்னமோ வெளிநடப்பு செய்யப்போறேன்னு சொல்லிக்கிட்டு ஒரு பதிவு வேறப்போட்டுக்கிட்டு. என் பதிவு எத்தனை முறை தமிழ்மணத்தில டாப்ல வந்திருக்கும் , ஒரு முறை கூட வராது. அய்யோ வரலையேனு பொலம்புவதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சத்தம் போடாமல் என் பதிவில் இருந்து கருவிப்பட்டையும் எடுத்துட்டேன். இதெல்லாம் என்னத்துக்கு சொல்லிக்கிட்டுனு இருந்தேன்.நாளைக்கே மீண்டும் ஆசைப்பட்டா கருவிப்பட்டையை மாட்டிக்கொண்டு வருவேன். என் இஷ்டம் அது. அடுத்தவங்க வசதிக்கு அல்ல என்ப்பதிவு.
(உனக்கு கவர்ச்சியா எழுத வரவில்லை, நாங்க எல்லாம் அல்டிமேட் பிலாக்கர்னு சொல்றவங்களுக்கு , சொல்வதற்கு ஏதுமில்லை)


நான் பதிவுபோட்டதும் உடனே கூட இணைக்கமாட்டேன். எனக்கு இதை இணைச்சா நல்லா இருக்கும்னு தோனினா மட்டுமே இணைப்பேன். எனக்கு திரட்டி மற்றப்பதிவுகளைப்படிக்க ஒரு இணைப்பு பாலம், என்பதிவுக்கு திரட்டியும் ஓட்டும் , தேவைனு நினைப்பதில்லை.திரட்டிகளில் கிடைக்கும் முதல் இடம் வைத்துக்கொண்டு ஒரு டீ ,பன் கூட வாங்க முடியாது அப்புறம் என்னதுக்கு பெரிது படுத்தனும்?

கூகிளில் அக்கா,அண்ணி,அம்மானு டைப் செய்து பாருங்க, என்ன முதலில் வருதுனு. அய்யோ இப்படி கூகிள் காட்டக்கூடாதுனு சொல்வீங்களா? நீங்க தான் பில்டர் செட் செய்துக்கணும்.

எந்த குப்பை டாப்பில் இருந்தா என்ன குப்பை குப்பைத்தானே.உங்களுக்கு பிடித்ததைப்படிங்க, எழுதுங்க. ஒரு திரட்டியில் சேர்வதும் போவதும் ஒருவர் மனநிலைப்பொறுத்து. ஆனால் இப்படிலாம் காரணம் சொல்லிக்கொண்டு போவது சரியாகப்படவில்லை.ஒரு திரட்டியை அதிகம் சார்ந்து இருக்கும் மன நிலையை வளர்த்துக்கொண்டீர்களோ என சந்தேகம் வர வைக்கும்.

Riyas சொன்னது…

:))

வால்பையன் சொன்னது…

நான் தமிழ்மணம் பார்த்து தான் உங்களை படிக்கிறேனா என்ன, விட்டு தள்ளுங்க தல!

மதவாதிகளே ஒருநாள் நம்மகிட்ட ஓடி வருவாங்க!

தருமி சொன்னது…

//எந்த குப்பை டாப்பில் இருந்தா என்ன குப்பை குப்பைத்தானே//

ithai thaan nanum raaj pathivil sonnaen .

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன்
திரு கோவிக் கண்ணன்!

சமீப காலமாகவே உங்கள் பதிவுகளில் நிறைய தடுமாற்றம். ஏன் இப்படி? பழைய கோவி கண்ணன் எங்கே? //

நான் ஆடோ நீங்கள் ஓநாயோ இல்லை, நான் எப்பவும் போல் தான் இருக்கிறேன், பதிவுலகில் நுழைந்ததிலிருந்து இன்று வரை சிந்தனை மாற்றம் பெரிதாக ஏற்படும் அளவுக்கு இல்லை, பொது புத்திகள் மாறி இருந்தன, ஆனாலும் அவை வலிந்து திணிக்கப்படும் நிலை மதவாதிகளால் உருவாகிறது. என்னுடைய இஸ்லாமிய நண்பர்களை வைத்து இஸ்லாம் என்றால் இது தான் என்று நான் நினைத்திருந்ததை மதவாதிகள் மாற்றியுள்ளனர்.


//வாரத்தில் சில பதிவுகள் மத சம்பந்தமானவை இடம் பிடிப்பதில் ஏன் இவ்வளவு பொறாமை உங்களுக்கு? //

உங்கள் குழுவில் இல்லாத பிற இஸ்லாமிய பதிவர்களிடம் கேளுங்கள் அவர்களே முகம் சுளிக்கும் வண்ணம் தான் உங்கள் குழுவினர் மதப்பிரச்சாரங்களை திணித்து வருகின்றனர், அளவுக்கு மிகுதியாக கொடுக்கப்படுபவை வாந்தி அல்லது பேதியாகத்தான் ஆகும் என்று உங்களுக்கு தெரியாதா ?

நான் இங்கு மதவாதிகள் என்று மட்டும் தான் குறிப்பிட்டேன், உடனேயே இஸ்லாமிய பதிவர்கள் தாங்கள் தான் அது என்று ஒப்புதல் கொடுத்ததிலிருந்து உங்கள் செயல்களை நீங்கள் (என்றால் நீங்கள் மட்டும் அல்ல) ஒப்புக் கொள்கிறீர்கள் ஆனால் திருத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே தெரிகிறது

//இதற்கு முன் நாத்திக பதிவுகளும், ஆபாச பதிவுகளும் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளும் மகுடத்தை எட்டிய போதும் சூடான இடுகைகளில் வந்த போதும் யாரும் இவ்வாறு பொங்கவில்லையே! //

அப்படி எவனும் கும்மி அடித்து மகுடம் ஏற்றியது போல் தெரியவில்லை, ஆனால் தொடர்ச்சியாக செயப்படும் எதுவும் கவனம் பெறும் என்பது தாங்களுக்கு தெரியாதது இல்லை, உதரணத்திற்கு டோண்டு இராகவன் மோடி மற்றும் சோ இராமசாமி புகழ் பாடி அதை 30 பேர் தொடர்ந்து வாக்கு குத்தி மகுடம் ஏற்றினால் நீஙக்ள் ரசிப்பீர்களா ? பொதுச் சந்தைகடைகளில் மீனும் மாட்டுக்கறியும் மட்டுமே விற்கப்படுகிறது என்பது போல் காட்டினால் வேறு சாமான் வாங்கச் செல்பவர்களும் மார்கட்டையே புறக்கணிக்கும் நிலை தான் ஏற்படும் ஏற்கனவே மாட்டுகறி வாங்குபவர்களும் இவர்கள் செத்த மாட்டை விற்கக்கூடும் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது இல்லையா ?

//எதிர்க் கருத்து சொல்வதற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பதை இப்படிப் பதிவு எழுதி போட்டு உடைத்திருக்க வேண்டாம். //

அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், மதவாதிகளின் கருத்துகளை எதிர்கொள்ள எனக்கு போதிய அளவு திறன் உண்டு. நீங்களும் தலித் வாயில் மலம், சதுர்வர்ணம் என்று நாளொரு பதிவிலும் எழுதிவருகிறீர்கள் என்பதால் உங்களிடம் சரக்குடன் ஊறுகாயும் சேர்ந்தே இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. உங்களுக்கு ஆதரவான மற்றும் பிறரை தூற்றும் வகையில் தான் எழுதுகிறீர்கள் என்று மட்டுமே நான் நினைப்பதுண்டு


//காலம் கடந்து விடவில்லை. இனிமேலாவது மத வாதிகள் வைக்கும் வாதத்தை தர்க்க ரீதியாக பதிவிட்டு முறியடிக்க முயற்சி பண்ணுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_28.html//

நாய்வாலை நிமிர்த்த முடியாது என்று தான் நாய்களின் வாலை வெட்டிவிடுகிறார்கள், நீங்கள் தான் மதவாதி இல்லை நான் மார்க வாதி என்றீர்களே பிறகு ஏன் உங்களுக்கு இந்தக் கவலை

*****

உங்களை நோக்கிய என் பின்னூட்டமும், பிற கருத்துகளும் சுவனப்பிரியன் என்கிற தனிமனிதனை நோக்கியது அல்ல, உங்களின் கருத்துக்களை மட்டுமே நோக்கியது என்பதை மீண்டும் நான் உறுதிப்படுத்துகிறேன், பின்னூட்டத்தில் கடுமை இருந்தால் நான் உங்களை தாக்குவதாகக் கொள்ள வேண்டாம்

கபிலன் சொன்னது…

நூற்றுக்கு நூறு நியாயமான ஆதங்கம். சும்மா ஒரு 20 பேர் ஒண்ணு கூடி ஓட்டு போட்டு அந்த மாதிரியான பதிவுகளையே முன்னாடி கொண்டு வர்றாங்க. அட, இது என்னப்பா சிறந்த பதிவு ந்னு போய் பார்த்தா....ஏமாற்றம் தான். சிறந்த பதிவே இப்படின்னா...அப்புறம் நார்மலா இருக்குற பதிவுகள் எப்படி இருக்கும்னு பதிவர்கள் அல்லாதவர்கள் நினைப்பதில் தவறில்லையே. ஆக மொத்தம் தரமான படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கல. நல்ல பதிவுக்கு + ப்ளஸ் ஓட்டு குத்துறோமோ இல்லியோ...இப்படிப்பட்ட போலி சூப்பர் பதிவுகளுக்கு - மைனஸ் ஓட்டு குத்த வேண்டியது ரொம்ப தேவை. நான்
அப்படி செய்வதில் கூச்சப் படுவதே கிடையாது !

தமிழ்மணம் இதை எப்படி சரி செய்ய முடியும்னு தெரியல. டெக்னிகலா...நிறைய ஓட்டு விழுகிற பதிவு தானே சிறந்த பதிவு..!

சார்வாகன் சொன்னது…

ந்ண்பர் கோவி
மத விளம்பர பதிவுகள் தமிழ்மண முண்ணனி பதிவுகளாக பிரச்ச்சாரகர்களால் கொண்டு வரப் படுகின்றன.
விள்மபரம் என்றால் சகல‌விதமான உத்திகளும் பயன்படுத்தப் படுவது இயல்புதானே!!!!!!!!!

தமிழ்மண திரட்டி இலவசமாக் அனுமதிக்கும் பதிவுகளின் வரம்புகளின் எல்லைகளில் நின்று செயல்படுகிறர்கள் என்றால் இதனை குறித்து தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க விரும்பினால் எடுக்கட்டும்.மற்றபடி எதுவும் சொல்ல இயலாது.

மற்றபடி விளம்பரதாரர்களின் அவர்களின் கருத்தை எதிர்த்தாலும் கருத்திடும் உரிமையை ஆதரிக்கிறேன்.

இப்பதிவுகளால் எந்த பயனும் இல்லை.மத்த்தை எப்படியாவது காப்பாற்றுவது மனிதன் என்பதை நிரூபிக்கிறார்கள்.

உண்மையில் என்னவென்றால் மத பிரச்சார பதிவுகள் எதிர்வினையை ஊக்குவிப்பது மட்டுமன்றி தங்கள் மத,கொள்கைகளை விவாதப் பொருளாக்கி இருந்த(?) பெயரையும் கெடுக்கிறார்கள் என்பதே என் கருத்து.
(எ.கா வேண்டுமெனில் தருகிறேன்).

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றபடி விளம்பரதாரர்களின் அவர்களின் கருத்தை எதிர்த்தாலும் கருத்திடும் உரிமையை ஆதரிக்கிறேன்.//

சார்வாகன்,

தொலைக்காட்சி நடத்துபவன் எந்த விளம்பரம் போடுவது என்பது அவன் தீர்மானம் தான் என்றாலும் வெறும் வெளம்பரம் என்றால் யார் தான் அந்த தொலைக்காட்சியைப் பார்ப்பார்கள் எரிச்சல் ஏற்பட்டு சானலை மூடிவிடுவார்கள், மதவாதிகளின் பழைய கோபம் தமிழ்மணத்தை முடக்குவதாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழ்மண பயனீட்டாளன் என்ற முறையில் இதைச் சுட்டிக்காட்டுகிறேன் எதிர்பாளர்கள் சாணி அடிப்பார்கள் என்றாலும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனா சார்....உங்க பதிவ படிச்சு யாரும் திருந்த போறது கிடையாது....//

நான் செய்பவர்கள் திருந்தவேண்டும் என்ற வேண்டுகோளை பதிவில் வைக்கவும் இல்லை, இவர்களின் செயல்பாடுகள் எதிர்க்கப்பட வேண்டியது என்று பிறருக்கு சுட்டுகிறேன், அதுவும் ஏற்கனவே பலர் வெளிப்படுத்த இயலாமல் தவித்துக் கொண்டு இருப்பதைத் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

// Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்,

இதற்கு தான் உங்க தளம் பக்கமே வராம இருந்தேன்.

மறுபடியும் நிரூபித்ததற்கு நன்றி..//

எனக்கு இது முக்கியமற்றது. நீங்கள் வருவீர்கள் என்று நானோ, நான் வருவேன் என்று நீங்களோ பதிவுகள் எழுதுவதில்லை என்பதால் இதுபற்றிய கருத்துகள் தேவையற்றதும் கூட

கோவி.கண்ணன் சொன்னது…

// Barari said...
ண்பர் ஜெய்லானி கூறுவது போல் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் எழுதுங்கள் மதவாதிகள் அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் எழுதட்டும் .
இதில் என்ன தவறு இருக்க முடியும் .தமிழ்மணத்தை ஒரு சாராருக்கு மட்டுமே உரியதாக்க ஏன் விரும்புகிறீர்கள் ?அப்படி என்னதான் எல்லோருக்கும் பயன்படும் ஆக்கங்களை நீங்கள் படைத்து இருக்கிறீர்கள்

5:39 PM, January 28, 2012//

தமிழ்மணத்தை ஒரு சாராருக்கு மட்டுமே உரியதாக்க ஏன் விரும்புகிறீர்கள் - இந்தக் கேள்வி தான் இங்கும் வைக்கப்பட்டுள்ளது. அடுத்தவருக்கு வைக்கப்படும் கேள்வி தம் செயலுக்கு பொருந்துகிறதா என்று பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை நீங்கள் எழுதி இருக்கவே மாட்டீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
கோவி.கண்ணன்!வணக்கம்.
எத்தனை ஆண்டுகளாக நீங்கள் பதிவுலகில் இருக்கிறீர்கள்!மூட்டைப் பூச்சிகள் பெருகி விட்டதென்று வீட்டையே கொழுத்தி விடலாமென்கிறீர்களே:)

தமிழ்மணம் மீதான தாக்குதலையே தாங்கிக் கொண்டு தமிழ்மணம் இன்னும் நடை போடுகிறது.தனி மனித தாக்குதல்கள் செய்யாமல் உங்கள் கருத்துக்களை இனியும் தொடருங்கள்.

எப்பொருள் யார் யார் பதிவு வழி கேட்பினும் மெய்ப்பொருள் பதிவுலகில் காணப்படும்:)//

மிக்க நன்றி ராஜ நடராஜன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் ஏன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது, மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே.//

சன்மார்க்கமாகட்டும் வேறு எந்த மதக்குப்பைகள் ஆகட்டும் அவை எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை அல்ல என்பதே உண்மை. வள்ளலாரின் சன்மார்க்கம் அவரது காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், இன்றைக்கு வள்ளலார் பெயரைச் சொல்லிப் பரப்படும் சன்மார்க்கத்தில் சாதி நெடிகள் சகிக்கக் கூடியதாக இல்லை என்பதே உண்மை.

எனக்கு வள்ளலாரையும் பெரியாரையும் பிடிக்கும் என்பதற்காக அவர்கள் பேரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செல்லவேண்டும் என்று நான் நினைப்பது இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால் தங்கள் அன்புக்கு நன்றி, உங்களுக்கும் எனக்கும் சிந்தனை அடிப்படையில் பெரிய ஒற்றுமைகள் உண்டு, உங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் நான் படிக்கும் ரசிக்கும் பதிவர்களில் கல்வெட்டு, வவ்வால் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அன்பு சகோ கோவி.கண்ணன்//

மிக்க நன்றி

//உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்...//

பிறருக்கு கொடுக்கப்படும் பொருள் தன்னிடம் போதிய அளவு பயன்பாட்டில் இருந்து கொண்டு கொடுக்கப்படுகிறதா என்பதே முக்கியம், உங்களிடம் சாந்தி அதிகமாக இருக்கிறதா என்று முதலில் பாருங்கள், இருந்தால் உங்களவர்களிடம் அதை முதலில் கொடுங்கள், பிறகு என்னைப் போன்றோருக்கு தாருங்கள், உங்களிடம் கையிருப்பு இல்லாத நிலையில் பிறருக்கு கொடுக்கப்படும் சாந்தி என்பது வெறும் சொல் மட்டுமே. அவை போலி சாமியார்கள் செய்யும் நல்லாசி போன்றது.

//சிலமுறை உங்கள் தளத்தை பார்வையிட்டாலும். கருத்திட விளைந்தது இதுவே முதல்முறையென நினைக்கிறேன்...
தொடர்ந்து இஸ்லாத்தை மையப்படுத்திய சில இடுகைகள் தமிழ்மண மகுடமாக வந்திருப்பது உண்மைதான். இதை மையப்படுத்தி தற்போது பதிவிட்ட நீங்கள் அத்தகைய ஆக்கங்கள் என்னவிதமான பிரச்சனைகளை தனிமனிதருக்கோ அல்லது ஒட்டு மொத்த சமூகத்திற்கோ ஏற்படுத்தியது என்பதை சொல்ல வில்லையே?//

என்ன நடக்கனும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? குறைந்த பட்சம், நிறைய வாக்குகள் பெற்ற இடுகை என்ற ஆர்வத்துடன் எட்டிப்பார்த்து ஏமாறுவது அயர்சியை ஏற்படுத்துகிறது, பிறரின் நேரங்களை விழுங்குகிறீர்கள் என்ற மனசாட்சி உங்களுக்கு வேலை செய்வதே இல்லையா ? வெறும் கவர்ச்சி தலைப்பு வைத்தோ அல்லது குழுவாக கும்மியடிப்பது பிறரால் முடியவே முடியாது என்று நம்புகிறீர்களா ? உங்களின் (தனிப்பட்ட நீங்கள் அல்ல) குழுவாக்குப் போட்டுக் கொள்ளும் செயல் பிறரையும் குழுவாக இணைந்து அவ்வாறு செய்யத் தூண்டி இருந்தால் அதற்காக நீங்கள் பெருமைபடுவீர்களா ? உரிமை கொண்டாடுவீர்களா ?

//சரி இன்னும் எளிய விளக்கம் தர முயல்கிறேன்

பெரும்பாலும் உங்கள் கருத்துக்கள் மதங்களை அல்லது கடவுளை (குறிப்பாய் இஸ்லாத்தை) விமர்சித்தே ஆக்கமாக இருக்கிறது. அதே நிலையில் உங்கள் மீது நான் குற்றச்ச்சாட்டை பொருத்தினால்...? தமிழ்மண விருதுகள் இரண்டு முறை பெறுவதற்கு மதங்ளை தாக்கி எழுதியது தான் காரணம் என்றால் எப்படி அது பொருத்தமான வாதமாக ஏற்றுக்கொள்ள முடியாதோ அதுப்போல தான் உங்களின் மேற்கண்ட குற்றச்சாட்டும்!

இப்போதும் பாருங்கள் மத ஆக்ரமிப்பு எனும் பேரில் மதத்தை விமர்சித்தே ஹிட் பெற நினைக்கிறீர்கள்... ? இதை எந்த வகை பதிவில் சேர்க்க...
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்

//

அரண்டவன் கண் என்றே சொல்லுவார்கள், நான் மதவாதிகள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளேன், அது நீங்களாகத் தான் இருக்கும் என்று குற்ற உணர்வுடன் உங்களைப் போன்றோர் மட்டுமே இதில் பதில் சொல்லி இருக்கிறார்கள், பீடி சாமியார் கேடிசாமியார் உங்கள் மதத்தில் இருக்கிறார்களா ? கடைசி வரிகளில் அவற்றை நான் எழுதியுள்ளேனே ? நாத்திகர்கள் என்றால் அவை பிறர் மதத்தைப் பின்பற்றும் காபீர்கள் என்று நீங்கள் நினைப்பது போல் மதவாதம் என்ற சொல்லில் இருக்கும் ஒரே மதம் நாங்கள் மட்டுமே என்று நீங்கள் பிரகடனப்படுத்தத் தேவை என்ன ? ஒரு வேளை மதம் என்றாலும் மார்க்கம் என்றாலும் அவை உங்கள் மதத்தை மட்டுமே குறிப்பிடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?

//யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை சகோ எழுதப்படும் ஆக்கங்கள் எதற்காக என்பதே... இங்கு சிந்தையில் நிறுத்த வேண்டிய ஒன்று!//

யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் எழுதட்டும் ஆனால் அதை பரிந்துரைக்கும் நபர் அவற்றின் தகுதி பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தால் இவ்வாறு துண்டு போட்டுவைத்துக் கொண்டு, ஆக்கரமிக்கும் செயல் நடைபெறாது என்று குறிப்பிட விரும்புகிறேன்


//இறை நாடினால் இனியும் தொடர்கிறேன்//

ஏன் எங்களையும் நாடட்டும் என்று பொருமை காக்கவேண்டியது தானே ?
எதற்கு இறை நாடத எங்களின் மீது பரிதாபத்திற்கு பதில் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?

வவ்வால் சொன்னது…

//சன்மார்க்கமாகட்டும் வேறு எந்த மதக்குப்பைகள் ஆகட்டும் அவை எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை அல்ல என்பதே உண்மை. வள்ளலாரின் சன்மார்க்கம் அவரது காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், இன்றைக்கு வள்ளலார் பெயரைச் சொல்லிப் பரப்படும் சன்மார்க்கத்தில் சாதி நெடிகள் சகிக்கக் கூடியதாக இல்லை என்பதே உண்மை.

எனக்கு வள்ளலாரையும் பெரியாரையும் பிடிக்கும் என்பதற்காக அவர்கள் பேரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செல்லவேண்டும் என்று நான் நினைப்பது இல்லை
9:10 AM, January 30, 2012//

கோவி,

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

வள்ளலார் படம் எல்லாம் பக்கவாட்டில் இருக்கவும் தீவிர வள்ளலார் பக்தரோ என்று நினைத்தேன். ஏன் எனில் எனது கருத்தும் நீங்கள் இப்போது சொன்னது போன்றதே(தனிப்பட்ட முறையில் பிடிக்கும்,அவர் ஒருசித்தர் என்பது எனது கருத்து).நீங்களாவது தூரத்தில் இருந்து பார்த்திருப்பீர்கள். நான் அருகில் இருந்தே பார்த்தவன். இப்பொழுதும் வடலூரில் ஆண்டுக்கு ஒரு முறை அன்னதானம் செய்வவார்கள் எங்க வீட்டில். முன்னர் எல்லாம் சமைத்து எடுத்து செல்வார்கள் இப்போது ஆர்டர் செய்து விட்டால் பொட்டலம் கட்டி தருவார்கள். 100 அ 200 என வசதிக்கு ஏற்ப கட்டி வாங்கிப்போய் கொடுத்து விட்டு வரு வோம்.

எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, பெற்றோர்கள் செய்வது தான் எல்லாம். நாம் அவர்களை கட்டுப்படுத்த இன்னும் அனுபவம் பெறவில்லை. ஏன் எனில் ஆரம்ப காலம் தொட்டு நெல் ,அரிசி என்ன சத்தியதர்ம சாலைக்கு கொடுத்துவந்தார்கள். விவசாயம் செய்வது நின்றவுடன் இப்படி.

மதிய வேளையில் நடைபெறும் அன்னதானத்தில் ஜாதிய அடிப்படையில் உட்கார வைப்பார்கள். மேலும் நீங்கள் சொன்னது போல உள்ளே நிறைய பூசல்கள்.இராமலிங்கம் என்ற பெயரை வைத்து இது எங்கள் சொத்து என ஒரு கூட்டம் உரிமைக்கொண்டாடி வழக்கெல்லாம் போட்டுள்ளது.இடைக்காலத்தில் உள்ளே லிங்கம் எல்லாம் வைத்து வழிப்பட ஆரம்பித்தார்கள்.பின்னர் வழக்குப்போட்டு லிங்கம் எடுக்கப்பட்டது.இதற்காக போறாடியவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர்.கட்சி சார்பாக இல்லை எனினும் பொதுவாக என சொல்லலாம்.

உண்மையில் வள்ளலார் சொன்னது புதிய மார்க்கம் உருவ வழிப்பாடுக்கு மாறானது. ஆனால் இந்து மதம் அதனையும் சுவீகரித்து தனக்குள் அடக்கிக்கொண்ட ஒரு பகாசுர மதம்.வள்ளலார் இன்றூ இருந்தால் தற்போதைய நிலையை வெறுக்கவே செய்வார்.

தியானம் செய்யும் போது கண்களை மூடக்கூடாது என்று கண்மூடி பழக்கம் மண் மூட வேண்டும் என்பது போல புதிய கருத்துக்களை மதம் சார்ந்து என்றாலும் சொன்னவர். இன்னும் சொல்லப்போனால் வள்ளலார் பற்றி படித்தால் , அவர் புத்தர் போன்று தனி மார்க்கத்தையே சொல்லி இருப்பது தெரியும். ஆனால் இந்து மதம் சார்ந்த கருத்துகளாக இருக்கவே இந்து சாமியார் என் று அடையாளத்துக்கு ஆளாகிவிட்டார்.

--------------

முந்தைய பின்னூட்டத்தில் நான் சொல்லவந்தது, திறட்டிக்காக எழுத நாம் இல்லை, .திரட்டியின் உள் அடக்கம் பதிவர்களே.பதிவர்கள் தரமே திரட்டியின் தரம். நம் எண்ணங்களீன் பகிர்வுக்கே எழுத வேண்டும். எழுதுங்கள் என சொல்ல போட்டது அது. பலபேர் எழுதும் திரட்டியில் யாரோ ஒருவர் குவாலிட்டி கண்ரோல் மேனஜர் ஆக முடியாது. ஒரு கூட்டு அமைப்பில் அனைவரும் உணர வேண்டும் .ஒரு பதிவின் தரம் குறித்து அவரின் மன சாட்சியே தீர்மானிக்கட்டும். ஒரு வேளை நான் தெளிவாக அதில் சொல்லாமல் இருந்து இருக்கலாம்.

குப்பை மேலே வருவதால் கோமேதகம் ஆகி விடாது என சொல்ல வந்தேன். தருமிய்யா கூட அதை தான் சொல்ல வந்ததாக சொல்லியிருப்பார் பாருங்கள்.

பிட்டு படத்துக்கு சாதாரணமா ஒரு ரெண்டுக்கலர் எழுத்தில் போஸ்டர் ஒட்டுவாங்க, தியேட்டரும் அடாசா இருக்கும், ஆனா மக்கள் ஓடிபோவாங்க.நல்ல படத்துக்கு மல்டி கலர் போஸ்டரடிச்சு , டீவில அடிக்கடி விளம்பரம் ஓடும் ஆனால் கூட்டம் கம்மியா இருக்கும். அது போலத்தான் இந்த தமிழ்மண டாப்,, ஓட்டு எல்லாம். கண்டுக்காம விடுங்க. பிட்டுப்பட ஹீரோ, ஹீரோயின் நான் அந்தப்படத்தில் நடிச்சேன்னு பெருமையா வெளில சொல்லிக்க முடியாது. அது போலத்தான் இப்போது தமிழ்மணத்தில் டாப் அடிப்பவர்களும் பெருமையா ஒரு பதிவர்னு ஒரு பதிவர் சந்திப்பில் சொல்லிக்க முடியாது.அப்படி சொன்னாலும் அவனா நீ போலத்தான் பார்ப்பார்கள் :-))

தருமி சொன்னது…

யாராவது ஒரு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணினார்கள். நீங்கள் செய்து விட்டீர்கள். நன்றி. இது போதும். இதை விட்டு விட்டு மூட்டைப் பூச்சிக்கு எதுக்கு வீட்டைக் கொளுத்தணும்.

நீங்கள் என்ன சொன்னாலும் அங்கே ஏறாது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? இது போன்று ஒத்து வரும் ஒட்டு மொத்த பின்பாட்டுகளை நீங்கள் எதிர்பார்க்காமலா இப்பதிவைப் போட்டிருப்பீர்கள்!

//மத பிரச்சார பதிவுகள் எதிர்வினையை ஊக்குவிப்பது மட்டுமன்றி தங்கள் மத,கொள்கைகளை விவாதப் பொருளாக்கி இருந்த(?) பெயரையும் கெடுக்கிறார்கள் //

என்னைப் பொறுத்தவரையில் இது 200% சரி. பலதடவையும் இதைச் சொல்லியாயிற்று. மத மறுப்பாளனாக நான் பதிவுகளில் எழுத ஆரம்பித்த போது இஸ்லாமியம் இன்னொரு மதம் என்பது மட்டுமே என் எண்ணமாயிருந்தது. இப்போது அது ஒரு 'தனி மார்க்கம்' என்பதும், அவர்கள் வழியே 'தனி வழி' என்பதும் தெரிந்து, புரிந்து விட்டது. அவர்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கு; நாம் சொல்வதெல்லாம் பொய்வாக்கு. இதுதான் அவ்ர்களது இலக்கணம்.

அறிவியலா 'ஆய்'வியலா எனப்தும் புரிந்து போய்விட்டது. என்ன சொன்னாலும் ஏற்கப்போவதில்லை என்று தெரிந்தும் நாமும் மீண்டும் மீண்டும் எழுதுவதில்லையா .. அதே போல் அவர்களும் எழுதுகிறார்கள்.

இசை வேண்டாம் என்று உங்கள் சாமி சொல்கிறதேயென்றால் ஆளுக்கொரு தத்துவம் சொல்லுவார்கள். எனக்கோ இசையே வேண்டாம் என்று ஒரு சாமி சொன்னால் அது என்ன சாமியோ?! கழுத்தை வெட்டும்போது எதற்கு 'அல்லாஹூ அக்பர்' என்றால் பதிலே இருக்காது.

விடுங்கள்; காற்றடிக்குது .. சில மேலே பறக்குது ...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்