பின்பற்றுபவர்கள்

30 ஜனவரி, 2012

பெருவெடிப்பும் வாயுப் பிரிப்பும் !

கடைசியாக நடந்த பெருவெடிப்பு என்று 14 பில்லியன் ஆண்டுகளைச் சொல்லுகிறார்கள் அறிவியாலாளர்கள், 14 பில்லியன் ஆண்டுகள் என்பது மனித வயதையும் மனித இனத் தோற்றதையும் ஒப்பிட எண்ணற்ற ஆண்டுகள் அதாவது வரலாறுகளுக்குள் அடங்காத ஒரு காலம். 14 பில்லியன் ஆண்டுகள் என்கிற கணக்கு பால்வெளித் திறள்களின் இடப்பெயர்வு அல்லது விரிவு அவற்றின் ஒளித்தன்மையையும் வைத்துச் சொல்லப்படுகிறது. நூற்றாண்டுகள் தொலைநோக்கி வழியாக ஆய்ந்ததின் பயனாக பால்வெளித் திறள்கள் சுழலுகின்றன மற்றும் நகர்ந்து விரிவடைகின்றன, பால்வெளித் திரள்களின் விரிவுகள் என்பது முன்பு இருந்த இடத்தில் இருந்து மொட்டுகள் வளர்ந்து விரிவது போன்றது என்று படங்களின் வழியாக விலக்குகிறார்கள், அதாவது அடர்வுமிகு ஒரு புள்ளியில் இருந்து அடர்வின் விசையையானல் வெளித் தள்ளப்பட்டு விரிவது தான் பிரபஞ்சத் தோற்றம் என்பது தற்போதைய அறிவியலாளர்களின் முடிவு.

இதை முற்றிலும் தகர்க போதிய அளவு மதங்களிடையே எந்த ஒரு ஆதாரமும் இல்லை, மாறாக பிரபஞ்ச விரிவும் அவற்றின் வாயுக்களின் சேர்க்கையும் பிரபஞ்சம் மற்றும் கோள்களை தோற்றுவிக்கின்றன என்பதௌ மதங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது என்று காட்டிவிட்டாலே தங்கள் மதம் கடவுளால் உருவாக்கப்பட்டது என்று காட்டிவிடலாம் என்பதே மதப் பற்றாளர்களின் திட்டமாக உள்ளது.

Job 9:8
He alone stretches out the heavens and treads on the waves of the sea.

Psalm 104:2
He wraps himself in light as with a garment; he stretches out the heavens like a tent

Isaiah 40:22
He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.

பழைய ஏற்பாட்டின் வசனங்களாம்,

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.

மேலே ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளதற்கும் கீழே தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேறு சில பழைய ஏற்பாட்டு வசனங்களும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, மேலே கடவுளின் செயல் என்று குறிப்பிட்டு இருப்பவையில் சுவர்கத்தை ஒரு டெண்ட் டைப் போல் விரித்தான் என்றும் கீழே பூமி படைக்கப்பட்டபிறகே சூரியன் உள்ளிட்டவைகள் படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பெருவெடிப்பு நிருபனம் செய்ய முடியாத நிலையிலும் பூமியும் மற்ற சூரிய குடும்ப கோள்களும் சூரியனில் இருந்து பிரிந்தவை என்பதும், நிலவு பூமியில் இருந்து பிரிந்தது என்பதே (அவை சுற்றும் விசைகளின் மையம் தொட்டு அறிவியலாளர்களின் கூற்று) இதை இன்று வரை மதப்பற்றாளர்களால் மறுக்கவும் முடியவில்லை. இதற்கான வசனங்கள் இறைப்புத்தகங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறார்கள், ஆனால் மதப்புத்தகங்களில் பூமி முதலில் படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் தடுமாறுகிறார்கள்.

பெருவெடிப்பு என்ற கொள்கையின் தொடர்ச்சியில் தான் பரிணாமக் கொள்கையும் வருகிறது, ஆனால் பெருவெடிப்புக்கு வசன ஒட்டுப் போடும் மதப்பாற்றாளர்கள் பரிணாமம் என்றால் எட்டிக்காயாக தெரிகிறது, காரணம் ஆதாம் - ஏவாள் பற்றிய கருத்தாக்கத்தை முற்றிலும் சிதைக்கிறது. அனைத்தும் தான் தோன்றியவை என்பது பரிணாமவாதிகளின் கூற்றாக இருக்கும் போது கடவுளால் படைக்கப்பட்டது, படைப்பு அற்புதம் என்றெல்லாம் சுட்டிக்காட்ட ஒன்றும் இல்லாத சூழலில் பரிணாமவாதிகளை மறுக்க வழியில்லாமல் டார்வினுக்கு குரங்குபடம் போட்டு ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறார்கள் அன்றி அவற்றிற்கு மூலமான பெருவெடிப்புக் கொள்கையை கைப்பற்றிக் கொள்கின்றனர்.

ஆம் வானத்தில் இருந்து பூமியைப் பிரித்தான் என்ற வசனம் பெருவெடிப்பைத்தான் பேசுகிறது, எனவே எங்கள் மதம் கடவுளால் உண்டாகப்பட்டதற்கு இதுவே நிருபனம் என்கிறார்கள்.

******

மிக எளிதாக போர்களின் மீதும், கைப்பற்றுவதன் மூலமும் பரவிய மதங்கள் (குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை, பெருவாரியான மதங்கள் அப்படித்தான் பரவின) அரசர் எவ்வழியோ குடிகளும் அவ்வழி என்று தான் மதங்கள் அரசர்கள் மதம் மாறியதன் மூலம் மாறினார்கள், ஆங்கிலேயர்களின், ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்பால் கிறித்துவம் பரவியது, இஸ்லாம் பரவிய விதம் பற்றி நான் சொன்னால், அவர்கள் மதத்தை கிள்ளிவிட்டேன் நான் என்று சர்சை ஆகிவிடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையில் அதைப் பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. பவுத்தமும் அரசர்கள் வழியே தான் பெருவாரியாகப் பரவியது.

இன்றைக்கு மன்னர் ஆட்சிகள் ஒழிந்து மக்கள் ஆட்சிகள் ஏற்பட்ட நிலையில் மதங்களைப் பரப்ப அறிவியல் முட்டுக்கட்டையாக நிற்பதால் அறிவியலை வரித்துக் கொள்ளுதல் என்ற நிலையில் மதப்பற்றாளர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள், அதாவது மதம் அறிவியலை மெய்ப்பிக்கிறதாம், அறிவியல் மூலம் மதக்கருத்துகள் நிருபனம் செய்யப்படுகிறதாம், அறிவியலை மதம் மெய்பிக்கிறதா ? அல்லது அதிலிருந்து உருவப்படும் தகவல் மதக்கருத்துகளுடன் ஒட்டவைக்கப்பட்டு மதங்களுக்கு உயிர்பிச்சை கேட்கப்படுகிறதா என்பது வேறு விவாதம். இதுவே இப்படிப் பட்ட விவாதமாகப் போகும் போது 'உங்கள் வேதம் இறைவனால் அருளப்பட்டதா ?' என்ற விவாதங்களின் மூலாம் எதை மெய்ப்பிக்க முயற்சிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மற்றவர்களின் மதநம்பிக்கை விமர்சனம் செய்யத் தக்கது என்ற நிலையில் இருப்பவர் தம் மதம் விமர்சிக்கப்படும் போது பொங்கி எழுவது சகிப்புத்தன்மை அற்ற செயலின்றி வேறு என்ன ?

திரும்பவும் பிக்பாங்க், ஆம் அவை ஏற்கனவே என்னுடைய மதத்திலும் சொல்லப்பட்டுள்ளது அவை வாயுப்பிரிதல் போன்று மிகப் பெரிய சத்தத்துடனும் வெளிப்பட்ட வாயு அதிலிருந்தே அனைத்தும் தோன்றின. என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள். பூனை எப்படி கடவுளாக முடியும் ? எகிப்தியர்களின் கடவுள் பூனையாம், நாமெல்லாம் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து பரவிய பல்வேறு கூட்டங்களாம். நான் என் மூதாதையர்களின் மதத்தை முன்னும் பின்னும் பற்றுகிறேன்

13 கருத்துகள்:

Robin சொன்னது…

ஆன்மீகக் கருத்துக்களை விஞ்ஞானத்தை வைத்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆன்மிகம் என்பது மெஞ்ஞானம்!

ராஜ நடராஜன் சொன்னது…

//Blogger Robin said...

ஆன்மீகக் கருத்துக்களை விஞ்ஞானத்தை வைத்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆன்மிகம் என்பது மெஞ்ஞானம்!//

ராபின்!விவிலியம் குறித்த வாதமாக பார்க்காமல் விஞ்ஞானமா.மெய்ஞானமா அல்லது இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதா போன்ற விடயங்கள் குறித்த விவாதங்கள் தேவையான ஒன்றே.இது போன்ற கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் வலிமை கிறுஸ்துவத்திற்கு உண்டு.எனவே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் போல் நீங்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அண்ணனும் தொலைந்தான்,திண்ணையும் காலி என்ற குதுகலிப்பில் இப்படியா பதிவை அள்ளிப் போடுவது:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணனும் தொலைந்தான்,திண்ணையும் காலி என்ற குதுகலிப்பில் இப்படியா பதிவை அள்ளிப் போடுவது:)//

விவிலியத்தை இழுத்தேன் என்று ராபின் பொங்காமல் விட்டாரே என்று நான் இருக்கேன், நீங்க வேற.

:)

எதை எடுத்தாலும் 3 பொருள் பத்துருவா சீக்கிரமாக அள்ளுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
ஆன்மீகக் கருத்துக்களை விஞ்ஞானத்தை வைத்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆன்மிகம் என்பது மெஞ்ஞானம்!//

ஆன்மிகம் என்பது இனிமா என்றல்லவா திகைக்க திகைக்க (திகட்ட திகட்ட இல்லை) திணிக்கப்படுகிறது.

Jagannath சொன்னது…

பிரபஞ்ச தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த விடயங்களில் அறிவியல் இதெல்லாம் எப்படி நடந்தது என்றுதான் சொல்கிறது. ஏன், எதற்காக நடந்தது என்பதைச் சொல்ல கேள்வி கேட்கப்படாத ஒரு சக்தி தேவைப்படுகிறது. அதைத்தான் கடவுள் என்று ஒவ்வொரு மதத்தவரும் தமக்கு புரிந்த விதத்தில் விவரிக்கின்றனர். இரு தரப்பும் கடவுள் பரிணாமம் மூலமாக உயிர்களை உருவாக்கினார் என்ற உடன்படிக்கைக்கு வந்து உலகின் இன்றைய பிரச்சினைகளுக்கு விடை காண முயற்சிப்பது நல்லது.

பூனை எனக்கு மிகவும் பிடித்த பிராணி. எப்பொழுது பார்த்தாலும் மன அமைதியையும், சந்தோஷத்தையும்
தரக் கூடிய பிராணி. அதைக் கடவுளாகத் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. :)

வவ்வால் சொன்னது…

ராபின்
//Robin said...
ஆன்மீகக் கருத்துக்களை விஞ்ஞானத்தை வைத்து நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆன்மிகம் என்பது மெஞ்ஞானம்!//


ஹி..ஹி மார்க்க பந்துக்கள் விஞ்ஞானத்தை ஆன்மீக கருத்துக்களை வைத்து விளக்கப்பார்ப்பது தானே கொடுமை :-))


-------------
கோவி,

இப்படி அடிச்சு ஆடுவதை விட்டு விட்டு. என்னமோ ,ஏதோனு ஒரு பதிவு முன்னாடி போட்டுபிட்டிங்களே :-))

முரண்டுப்பண்ணும் மாட்டுக்கு மூக்கணாங்கயிரு தான் போடனும்.

அறிவியல் பேட்டைக்கு வந்துட்டிங்க, இனிமே நாங்க தான் உஷாரா இருக்கணும் :-))

அப்படியே மட்டுறுத்தலும் எடுத்துட்டா நானும் , ராஜ நடராஜனும் சேர்ந்த்து தானியங்கி பின்ன்னூட்டம் போட்டு பின்னூட்ட பெருவெடிப்பு செய்வோம் :-))

//பரிணாமம் என்றால் எட்டிக்காயாக தெரிகிறது, காரணம் ஆதாம் - ஏவாள் பற்றிய கருத்தாக்கத்தை முற்றிலும் சிதைக்கிறது.//

ஹி..ஹி நான் ஆதாம் ஏவாள் கதை உங்க மார்க்கப்படியே சரினு வச்சுப்போம் அப்போ கெயினின் மனைவி யாரு, சொந்த சகோதரியானு கேட்டுப்பதிவும் போட்டாச்சு. மார்க்க பந்துக்கள் பதில் சொல்ல முடியாமல் பம்மிட்டாங்க :-))

ஆதாம்,ஏவாள் சிந்தாந்தத்தை சிதைக்க பரிணாமம் எல்லாம் வேண்டாம்,மார்க்க பந்துக்களின் புனித கதைகளே போதும் :-))

//என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள். பூனை எப்படி கடவுளாக முடியும் ?//


ஹி..ஹி இது நல்லா இருக்கே. ஏற்கனவே நான் வவ்வாலிசம் னு ஒரு மதம் வைத்து இருப்பதை மறக்க வேண்டாம் அங்கே நான் கடவுள்! நானே இறைத்தூதர் :-)) என்னோட மெசெஞ்சர் யஹு மெசெஞ்சர் :-))


அடுத்து பூனையிசமா , வவ்வாலிசமா எது சிறந்த மார்க்கம்னு ஒரு விவாதம் ஆரம்பிக்கலாம்!

சுவனப்பிரியன் சொன்னது…

//என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள்.//

உங்க மதத்துல என்னையும் சேர்த்துக்குவீங்களா? :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//Jagannath said...
பிரபஞ்ச தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த விடயங்களில் அறிவியல் இதெல்லாம் எப்படி நடந்தது என்றுதான் சொல்கிறது. ஏன், எதற்காக நடந்தது என்பதைச் சொல்ல கேள்வி கேட்கப்படாத ஒரு சக்தி தேவைப்படுகிறது. அதைத்தான் கடவுள் என்று ஒவ்வொரு மதத்தவரும் தமக்கு புரிந்த விதத்தில் விவரிக்கின்றனர். //

கடவுள் இருக்கு இல்லைன்னு சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை, நான் நம்பிக்கையைக் குறைச் சொல்வதில்லை, அதன் கட்டமைப்புகளை மட்டுமே கேள்வுக்கு உட்படுத்துகிறேன்.

மதவாதிகளின் கடவுள் என்பவை மதத்தைத் தாண்டிய கருணை இல்லாதவை என்பது போல் தானே காட்டப்படுகின்றன. பின்னர் இவர்கள் சமய நல்லிணக்கம் என்று பேசுவதெல்லாம் வெறும் சொற்சிலம்பங்கள் தானே


//பூனை எனக்கு மிகவும் பிடித்த பிராணி. எப்பொழுது பார்த்தாலும் மன அமைதியையும், சந்தோஷத்தையும்
தரக் கூடிய பிராணி. அதைக் கடவுளாகத் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. :)//

சிங்கப்பூரில் பூனையைக் கொன்றால் 5 ஆண்டி சிறை, சிங்கப்பூர் பூனைகளுக்கு சொர்க்கலோகம். அவையாரையும் தொந்திரவு செய்யாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அடுத்து பூனையிசமா , வவ்வாலிசமா எது சிறந்த மார்க்கம்னு ஒரு விவாதம் ஆரம்பிக்கலாம்!//

எங்க பூனையிசத்தில் பூனையார் தவிர்த்து வேறு யாருக்கும் 'காலை வணக்கம்' சொல்ல முடியாது, மீறிச் சொன்னால் பூனைக்கு துணை வைத்ததாகச் சொல்லி தண்டனைக் கொடுப்போம்.

எங்க மதத்தின் முக்கிய சுலோகம்

"காலை வணக்கத்துக்குரியவர் பூனையார் மட்டுமே."

உங்கள் வவ்வாலிசத்தில் இரவு வணக்கமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
//என்னுடைய மதத்தின் பெயர் பூனையிசம், பூனை தான் எனது கடவுள்.//

உங்க மதத்துல என்னையும் சேர்த்துக்குவீங்களா? :-(//

என்ன ஆச்சு சுவனப்பிரியன் ? மார்க்கவாதி என்பவர் தாங்கள் மதவாதிகளின் வலைக்குள் விழுந்துவிட்டீர்கள். எனக்கு உங்க மதத்தை விமர்சிப்பது நோக்கமல்ல.

பைபிள் இறைவேதமா ? என்ற விமர்சனங்களுக்கு நீங்கள் துணை போவது ஏன் ?

பைபிள் என்ற இடத்தில் குரான் என்று இருந்தால் நீங்கள் ரசீப்பீர்களா ? தவிர பைபிள் இறைவேதமா இல்லையா என்று விமர்சனம் செய்வதும் அதன் தீர்ப்பும் இவர்கள் சொன்னால் ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக் கொள்ளுமா ?

நாலு பேர் தான் இஸ்லாம் என்பதாக பரப்பப்படும் தகவல்களில் நீங்களும் இடம் பெருகிறீர்கள் என்பது உங்களுக்கு வருத்தம் ஏற்படவில்லையா ?

நட்புடன் ஜாமால் என்று ஒரு பதிவர் அவர் என்னை அண்ணன் என்று தான் கூப்பிடுவார், அவர் கூப்பிடும் போது வெளிப்படம் சொல் கூடவே சகோதரப் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக உணருவேன், ஆனால் உங்கள் குழுவில் இருப்பவர்கள் சகோ, நண்பரே என்று அழைக்கும் போது எரிச்சலே ஏற்படுகிறது. காரணம் பார்க்கையில் ஜமாலின் மதம்சார்ந்த நம்பிக்கைகளை அவர் கடைபிடிப்பதுடன் அதை அவர் திணிக்க முயன்றதில்லை, தவிர்த்து மற்றவர்களை விமர்சனம் செய்து தம் மதத்தை உயர்த்தலாம் என்று நினைக்கவில்லை, அவர் தம் அன்றாடச் செயலின் மூலம் அவர் மதத்தின் மூலம் நல்லதை மட்டும் தான் கற்றுக் கொண்டுள்ளார் என்று புரிய வைக்கிறார்.

அப்துல்கலாம் போல் யாரும் பொட்டு வைத்துக் கொண்டோ பகவத் கீதை படிக்கவேண்டும் அதனால் மத ஒற்றுமை மேம்படும் என்று சொல்லவரவில்லை. குறைந்த பட்சம் பிற மதத்தினரை சீண்டாமல் இருக்கலாமே.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ!!!!!!!!!
அடித்து ஆட ஆரம்பித்து விட்டீர்களா.அவ்வளவுதான்!!!!!!

// டார்வினுக்கு குரங்குபடம் போட்டு ஆத்திரம் தீர்த்துக் கொள்கிறார்கள் //
இதுக்கு யாரும் கோபப் பட மாட்டார்கள்.வன்முறை வெடிக்காது.மொத்தாமாக மைனஸ் வோட்டு கூட குத்த மாட்டார்கள்.மன்னிப்பு கேடக்வும் சொல்ல மாட்டார்கள்.உண்மையில் மனிதனும் ஒரு வகை ஆபிரிக்க வகை குரங்கினமே என்னும் பரிணாம் கொள்கையை ஏற்பது போல் தான் இப்படம் போடுவது.

பரிணாம் கொள்கை& டார்வினை விமர்சிக்கவும்&திட்டவும் மதவாதிகளுக்கு உள்ள உரிமையையும் ஆதரிக்கிறேன்!!!!!!!!!!

அதே போல் எனக்கும் எதிர்வினை ஆற்றும் உரிமையை மதவாதிகள் ஆதரிக்காவிட்டாலும் கவலை இல்லை விமர்சிப்பேன்! ஹா ஹா ஹா!!!!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிணாம் கொள்கை& டார்வினை விமர்சிக்கவும்&திட்டவும் மதவாதிகளுக்கு உள்ள உரிமையையும் ஆதரிக்கிறேன்!!!!!!!!!!

அதே போல் எனக்கும் எதிர்வினை ஆற்றும் உரிமையை மதவாதிகள் ஆதரிக்காவிட்டாலும் கவலை இல்லை விமர்சிப்பேன்! ஹா ஹா ஹா!!!!!!!!!//

ஒரு முடிவோடு தான் இருக்கிங்கப் போல.

சரி பரிணாமம் பற்றி உங்களிடம் ஒரு கேள்வி.

சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி தோற்றத்தை உயிரினப் பெருகிறது என்பது சரி. ஆனால் தாவிர இனம் பற்றி பரிணாமம் என்ன சொல்கிறது ?

வண்ணங்கள் மாறுபட்டு ஒரே வகைப் பூக்கள் இருப்பது எந்த வகை பரிமாணம் ? எந்த ஒரு சூழலால் வண்ணம் மட்டும் பல்வேறாக மாறியது ?

கக்கு - மாணிக்கம் சொன்னது…

ரொம்பத்தான் நக்கல் நையாண்டி,
// பெரும் வெடிப்பும் வாயு பிரிப்பும் //
சிரித்து முடியல சாமீ!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்