பின்பற்றுபவர்கள்

8 ஜூன், 2010

நர்சிம்முக்கு ஒரு திறந்த கடிதம் !

அன்பு தம்பி நர்சிம்,

உங்களின் பதிவுகளின் அனைத்து பதிவுகளையும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். இதற்கு இடையே நான் சென்னை வந்த பொழுது இருமுறை உங்களை சந்தித்து இருக்கிறேன். பதிவுகளை வாசித்த பிறகு சந்திப்பவர்களில் பார்த்தவுடன் பழகியது போன்ற முகங்களில் உங்களுடையது ஒன்று. என்னுடன் பழகும் பல பதிவர்களில் உரிமையுடன் அண்ணன் தம்பி உறவின் பெயரால் உரிமையில் அழைப்பவர்களில் நீங்களும் ஒருவர். கடுகடுப்பு சிரிதுமின்றி சிரித்த முகத்துடன் பேசும் பாங்கு, எந்த தயக்கமில்லாமல் மற்றொரு குழந்தையுடன் எளிதில் பழகிவிடும் குழந்தைத்தன்மான மனது இவை அனைத்துமாக இருந்த தாங்கள் புனைவு என்ற பெயரில் எழுதிய இடுகையை நான் அன்று வாசிக்கவில்லை, சிங்கையில் பதிவர் நண்பர்கள் சார்பில் பல பல நிகழ்ச்சிகள் நடந்ததால் பதிவில் என்ன நடக்கிறது என்றே தெரியாத சூழலில் உங்கள் இடுகையை வாசிக்கவில்லை, அன்று வாசித்து இருந்தாலும் கூட அதில் இருக்கும் புனைவின் புனைவு விபரீதம் தெரியாமல் ஒருவேளை நானும் கூட இரண்டு மூன்று கும்மி பின்னூட்டங்கள் போட்டிருந்திருக்கக் கூடும்.

பிறகு நடந்தவை அனைத்தையும் கேள்விப்படும் போது அதன் விபரீதம் தெரிந்து மிகவும் நொந்து போனவர்களில் நானும் ஒருவன். வலைப்பதிவுகளில் நட்புகள் கிடைக்கிறது என்பது போலவே எதிரிகளும் கிடைக்கிறார்கள் அல்லது உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை மீண்டும் புரிய வைக்கும் மற்றொரு நிகழ்வு என்பதாகப் பார்க்கிறேன்.

உங்களின் 'இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் ?' என்ற பதிவில் இருந்த வரிகளைக் குறிப்பிட்டு உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினேன்.

date Mon, May 31, 2010 at 10:34 AM

//தோள்கொடுத்த கார்க்கிக்கு நன்றி. மிக முக்கியமான ஆதாரத்தை பின்னூட்டத்தில் கொடுத்த லக்கிக்கும் அதிஷாவிற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி//

நர்சிம்,

பதிவுலகம் எழுத்துக்களானது, அதில் கிடைக்கும் நட்புகளை எழுத்துகளில் கொண்டுவரத் தேவை இல்லை என்பது என் கருத்து. யார் யாருக்கு ஆதரவு எதிர்ப்பு போன்ற அரசியலை நாம் திரும்ப திரும்ப வலைப்பதிவில் பின்னுவதால் தான் ஒரு சிறிய பிரச்சனைகள் கூட நண்பர்கள் அல்லது எதிரிகள் என்று அடையாளப்படுத்தப்படுப்வர்களால் ஊதப்பட்டு பெரிதாகிறது.

எனக்கு பதிவுலகில் பிரச்சனைகள் வந்த பொழுது எனக்காக கோதாவில் இறங்குங்கள் என்று நான் யாரிடமும் கேட்டது இல்லை. என்னுடன் முன்பு எதிரே எதிரே நின்றவர்கள் இன்று மீண்டும் நெருங்கிய நண்பர்கள், எனக்காக யாராவது வரிந்து கட்டி இருந்தால் அவர்களுக்குத்தான் சங்கடம் ஆகி இருக்கும்.

பதிவில் எழுத்துகளையும், நட்பை பதிவுக்கு வெளியேயும் வைத்துக் கொள்வது என்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக நான் பார்பனர்களைப் பற்றிய விமர்சனம் செய்தாலும் எனது பார்பன நண்பர்களின் நட்புகள் பாதிக்கப்படுவதில்லை. நல்ல நடைமுறை முடிந்தால் நீங்களும் பின்பற்றுங்கள் என்பது எனது பரிந்துரை.

கும்மிக்கு நாம கோஷ்டி சேர்க்க சேர்க்க கோஷ்டியில் இணையாத பிறர்களிடம் இருந்து நாம விலகுகிறோம். இந்த சமயத்தில் இந்த மின் அஞ்சல் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம். மன்னிக்கவும். எனது நோக்காம் அறிவுரை அல்ல பரிந்துரை மட்டுமே.

அன்புடன்

கோவி

*****

ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த உங்களிடம் இருந்து இதற்கு எந்த பதில் அஞ்சலும் வரவில்லை, இதற்கிடையே 'செய்த தவறுக்கு மாற்றாக எழுதுவதை நிறுத்தப் போவதாக ஒரு பதிவின் பின்னூட்டத்தில் அறிவித்திருந்ததைப் படித்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ யார் காலையை மிதித்துவிட்டு காலை வெட்டிவிட்டால் சரியாகிவிடும் என்பது போன்ற உங்கள் முடிவு எழுத்துத் தற்கொலை முயற்சியாக தெரிகிறது. செய்த தவறுக்கு மனம் திருந்தி, விரும்பி மன்னிப்பு கேட்டுவிட்டீர்கள். மன்னிப்பு கொடுக்கவிட்டாலும், நட்பு என்ற பெயரில் நம்பிக்கைத் தூரோக மயிர்களால் உங்களின் மீதும் உங்களின் தந்தையின் மீதும் புனைந்த பார்பான், பார்ப்பான் புத்தி, பார்பனத் திமிர், பார்பன மலம், பணக்காரத் திமிர், ஈ, கொசு, பன்றி, ஓநாய் போன்ற சொற்களுக்குள் சிதைந்து போகாத, புதிய சொற்களுடன் ஆன புனைவுகள் உங்களுக்கான மன்னிப்புகளாக இருக்கும் என்ற காத்திருப்பில் உங்களுக்கான மன்னிப்புகள் மேலும் காலதாமதம் ஆகலாம், அல்லது கிடைக்காமலே கூடப் போகலாம்.

இது தான் சாக்கு என்கிற காத்திருப்பின் கனங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களை நோக்கி துப்பிய நாக்குகள், எச்சில் உலர்ந்த நிலையில், மீண்டும் ஊறும் வரையில் மற்றொரு சூழலுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்களை நோக்கி அழைப்புகள் விட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு உங்களை பின் தொடர்பவர்களுக்காவது எழுதலாம். நல்லோர் நினைப்பது இவைதான் 'மனிதன் தவறு செய்வதுண்டு ஆனால் மனிதன் தவறு செய்யவே பிறந்தவன் இல்லை'. செய்த தவற்றின் மன உளைச்சல் உங்களை மீண்டும் அது போல் ஒருநாளும் செய்யக் கூடாது என்ற மன உறுதி தந்து செம்மைப் படுத்தி இருக்கும், அந்த உறுதி உங்களுக்கு இருக்கும் என்பது எம்போன்றவர்களின் நம்பிக்கை. எழுத்துக்களை நேசித்த உங்கள் கைகளை எதன் பொருட்டும் கட்டிப் போடாதீர்கள்.

அன்புடன்
கோவியார்

19 கருத்துகள்:

Sanjai Gandhi சொன்னது…

//என்னுடன் முன்பு எதிரே எதிரே நின்றவர்கள் இன்று மீண்டும் நெருங்கிய நண்பர்கள், எனக்காக யாராவது வரிந்து கட்டி இருந்தால் அவர்களுக்குத்தான் சங்கடம் ஆகி இருக்கும்.//

அதே.. பெரிசு பெருசுதான்யா.. :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/கோவி கண்ணன் நிதானத்துடன் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பயன்படுத்தியிருக்கும் பதிவு இது. ஏற்கெனெவே மனம் நொந்து போயிருக்கும் நரசிம், அந்தத் துயரத்தில் இருந்து மீண்டு, மறுபடியும் எழுதத் தொடங்குவது அவருக்கும் நல்லது, பதிவுலகத்துக்கும் நல்லது!/

ரீடரில் இந்தப் பதிவு தோன்றியதுமே அதைப் பகிர்ந்து கொண்டு எழுதிய குறிப்பு இது.

நர்சிம்முடைய பலவீனம் அவர் எழுதிய புனைவு மட்டுமே அல்ல!

விமரிசனங்கள், தாக்குதல்கள் வரும்போது துவண்டுபோய், நான் இனி எழுதவே மாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்கிற விதம் தான் பெரும் பலவீனம்! சென்ற வருடம் தீபாவின் பதிவைத் தொட்டும் இது தான் நிகழ்ந்தது. இப்போது மறுபடியும்.....!

தவறு செய்வது மனித இயற்கை தான்! செய்த தவறைத் தொடர்ந்து நியாயப் படுத்திக் கொண்டிருப்பதும், திரும்பத் திரும்ப அதே தவறைச் செய்வதும் தான் மன்னிக்கப் பட முடியாதது.

காயங்கள் ஒரு நாள் ஆறும்! கம்பனைப் படித்திருக்கும் நரசிம், வாலி பாத்திரத்துக்குக் கம்பன் கொடுத்திருக்கும் 'சிறியன சிந்தியாதான்' என்ற அடை மொழியையும் தெரிந்து வைத்திருக்கக் கூடும்!

தன்னுடைய உயிரைப்பறித்த கணையை எய்தவனையே, மனைவியை பிரிந்த தடுமாற்றத்தில் என்ன செய்வதென்றறியாமல் தவறிழைத்தனன் என்று ராமனை மன்னித்த அந்தப்பெரும் குணத்தைக் கம்பன் சிறியன சிந்தியாதான் என்ற அடைமொழியால் வர்ணிக்கிறான்.

அது போலவே, உயிரைச் சுடும் வார்த்தைகளால் சுட்ட பதிவுலகத்தையும் புரிந்துகொண்ட 'சிறியன சிந்தியாதானாக' நரசிம் மீண்டு வர என்னுடைய வாழ்த்துக்களும், வேண்டுகோள்களும்!

கபிலன் சொன்னது…

அருமையான பரிந்துரை கோவியாரே ! இப்படி பொதுவாக எழுதினால் கூட ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவாங்க...பாத்துக்கோங்க...!

Unknown சொன்னது…

கோவி கண்ணன் அவர்களே,
நல்ல நிதானமாக எழுதப் பட்ட பதிவு.
வாழ்க்கையின் இறுதி நாள் வரை தொடர்ந்து பாடம் படித்துக் கொண்டே இருக்கிறோம்.
பாஸ்கர்.

selvanambi சொன்னது…

சரியான பதிவு.
நன்றி கோவியாரே.

Comeon Narsim.

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

for follow-up

நாடோடி இலக்கியன் சொன்னது…

என் எண்ண‌மும் இதேதான் கோவியார்.

Unknown சொன்னது…

.......... இது தான் சாக்கு என்கிற காத்திருப்பின் கனங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களை நோக்கி துப்பிய நாக்குகள், எச்சில் உலர்ந்த நிலையில், மீண்டும் ஊறும் வரையில் மற்றொரு சூழலுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்களை நோக்கி அழைப்புகள் விட்டுக்கொண்டிருக்கிறது..........

மிக சரியான அவதானிப்பு. நடந்தவைகளை புறம்தள்ளி வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்லது

ராஜவம்சம் சொன்னது…

நல்லா சொன்னிங்கன்ணா
கோவிகண்ணா

smart சொன்னது…

அவர் மீண்டும் எழுத வேண்டும் என்ற உங்கள் வாதம் சரியானது.

Unknown சொன்னது…

எந்த ஒரு தடங்கலோ, பிரச்சனையோ, மன சிக்கலோ, படைப்பாக்கதையும் எழுதும் திறனையும் வீழ்த்திவிடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நரசிம்மீது நம்பிக்கை இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட, வாக்களித்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நன்றி !

Unknown சொன்னது…

நீங்கள் சொல்வது சரியே.

எழுதாமல் நிறுத்துவது இதற்கு தீர்வல்ல

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

அருமை அருமை - இடுகை அருமை - தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் சிந்தையில் உதித்தது நன்று - நல்லதொரு இடுகை

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா

பூங்கோதை சொன்னது…

த்தூ!

வெண்பூ சொன்னது…

ந‌ன்றி கோவி..

மறத்தமிழன் சொன்னது…

கோவி கண்ணன்,

உங்களைப்போன்ற மூத்த பதிவர்கள் செய்ய வேண்டியது இதுதான்.
பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல், தீர்த்து வைக்கும் நோக்கில் பயணிப்பது.
உ.த,வ.வே,வானம்பாடிகள்,ஆ.மூ.கி மற்றும் கோ.வி.க அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.

மீண்டும் நர்சிம் மூலம் தேன்மதுரைத் தமிழ் வாசிக்க அவா...

அன்புடன்,
மறத்தமிழன்.

THE UFO சொன்னது…

அன்பின் சகோதரர்
கோவி கண்ணன் அவர்களே...
சரியான பதிவு. நன்றி.

நம் நாட்டில் பெரும்பாலும் வலியாருக்கு ஒரு நீதி, எளியாருக்கு ஒரு நீதி என்றுதான் கூறப்படுகிறது. இது எதிர்க்கப்படவேண்டும்.

ஒரு வலியார் 1500கோடிக்கு தொலைபேசி கட்டணத்தில் அரசை ஏமாற்றிவிட்டு, கைது-வழக்கு,தண்டனை ஏதுமின்றி வெறும் 90லட்சம் அபராதம் கட்டிவிட்டு தப்பமுடிகிறது. இதே ஒரு மெலியார் ஒருமாதம் போன்பில் கட்டாமல் தப்ப முடியாது.

சில வலியார்களின் ஹோட்டல்கள் மும்பையில் தாக்கப்பட்டுவிட்டால் உடன் இழப்பீடும் ஓரிரு வருடத்துக்குள் குற்றவாளிக்கு தூக்குதண்டனையும் வழங்கப்பட்டுவிடுகிறது. இதே எளியவர்களின் மசூதிக்குள் உடைத்து சிலைவைத்து மசூதியியை பூட்டிய வழக்கில் அறுபது ஆண்டுக்கு மேலாகியும் தீர்ப்பில்லை. இழப்பீடும் இல்லை.

வலியாரின் 'மன விருப்பத்துக்கு' இணங்க ஆதாரம் எதுவுமின்றியும் அப்சல் குருவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மெலியாரின் மனம் விரும்பியும், ஆயிரம் ஆதாரம் இருந்தும் வாறன் ஆண்டர்சன் தப்புவிக்கப்படுகிறார்.

இதே அளவுகோலின்படி, நர்சிம் தன்னை சீண்டிய பெண்ணை நேரடியாக இன்றி புனைவாக அசிங்கமாய் ஆபாசமாய் எழுதியதால் இனி எப்போதும் எழுதமுடியாத தண்டனையை மன்னிப்பு கேட்டபின்னும் வழங்கிவிட்டார்கள். (அல்லது வழங்கிக்கொண்டார்). ஆனால், வலையுலக வலியார் வினவு, தன் கொள்கைத்தலைவர்கள் ஒரு பெண்ணால் ஆபாசமாய் இழிவுபடுத்தப்பட்டபோது, அப்பெண்ணையும் அவரின் பெண்மையையும் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று புனைவாக இன்றி நேரடியாக வக்கிர அசிங்க அருவருக்கத்தக்க வரிகளால் பல பதிவுகளும் எண்ணற்ற பின்னூட்டங்களையும் வெளியிட்டுவிட்டு, 'அவை எல்லாமே சரிதான்' என்று சப்பைக்கட்டவும் முடிகிறது. வினவின் அடிபொடிகளான வால்பையன், ராஜன் போன்றவர்கள் கடவுளையும், கடவுள் நம்பிக்கையையும் எவ்வளவு கேவலமாயும் அசிங்கமாய் அருவருக்கத்தக்க நடையில் எழுதமுடிகிறது-வினவின் பின்னூட்ட பச்சைக்கொடி ஆதரவோடு...! இந்த 'வலையுலக வாறன் அண்டர்சன்களை' முதலில் தூக்கில்போட முடியுமா....?-அதாவது இனி எப்போதும் எழுதமுடியாமல் வலையுலகத்தைவிட்டு வெளியேற்ற முடியுமா?. இது முடியவில்லை எனில், 'வலையுலகத்தின் அஜ்மல் கசாப்' நர்சிம்முக்கு மட்டும் எதற்கு அந்த தண்டனை என்பதே ஏன் கேள்வி?

நீதியில் வலியாருக்கு ஒன்று எளியாருக்கு ஒன்று என்பதில் என்றும் உடன்பாடில்லை. எனக்கு எப்போதுமே நீதி சமமாய் வழங்கப்படவேண்டும். வினவு/வாழல்/ராஜன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட அதே நீதி நர்சிம்முக்கும் வழங்கப்பட வேண்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்