டெல்லி: நான் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு திடீர் திடீரென போவதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே எனது பயணத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் போங்கிரஸ் பொதுச் செயலாளர் போகுல் வாந்தி.
உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக (தொற்று நோய் போல்) போகுல் வாந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், சாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.
இப்படி போகுல் வாந்தியின். திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து போகுல் வாந்தி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள், அவர்களின் இரவு உணவை என்னிடம் கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாகப் படுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்
என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வியாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.
ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ? பிறகு ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்று நானும் கேட்பதில்லை.
நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. என்னை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் போகுல் வாந்தி.
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது தான் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அரசியல் வியாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கொஞ்சம் போடுவதால் தான் தாங்கள் வாழ்வதாகவும், மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தலித்துகள் தன்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்ததாகச் சொன்னார் போகுல் வாந்தி
பின்துருப்பு : மேற்கண்ட தகவல்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை, படத்துக்கும் பதிவுக்கும் கூட தொடர்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

43 கருத்துகள்:
:))
நீங்க சொல்ல வந்த மேட்டர் தெளிவா புரியுது கோவியாரே!
இன்னமும் கொஞ்சம் விளக்கமா சொல்லனும் தலைவா, நான் அவங்க வீட்டுக்கு போவன், ஆனா அவங்கள எங்க வீட்டுல தங்க வைக்க மாட்டன்.நான் அவங்க கிட்ட புடுங்கி தின்பேன்,ஆனா எங்க வீட்டுல சேறு போட மாட்டேம். நாங்க இப்படி ஆக்ட் பண்ணறதா பார்த்து அவங்க எங்களை சரி சமமா நினைக்க கூடாதுனு விளக்கமா சொல்லுங்க. நல்ல பதிவு. எங்க பாட்டி,அப்பா எல்லாம் இப்படிதான் ஒரு வரி சேர்த்துக்குங்க.
முன் குறிப்பு:
இந்த விமர்சனத்திற்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எங்கள் அழகிய தெய்வம், நடமாடும் கடவுள், கனவில் வரும் தலைவி நமிதா கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றேன்.
//ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ?//
இருக்கின்ற வியாதிகள் போதாதென்று இதுவுமா???
பாவி.கண்ணன் வழக்கம் போல் கலக்குகிறார்.. :)
வலையுலகத்தின் நிரந்தர சு.சாமி என்பதை ஒவ்வொரு அரசியல் பதிவிலும் நிரூபிக்கிறீர் போங்கோ.. :)
அப்டியே இதை பத்தியும் எழுதுங்கோ.. நன்னா இருக்கும்.. :)
//விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஈழத்துக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவான நிலை வகிப்பது, தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பைக் கிளப்பி இருக்கிறது.
லண்டனில் உள்ள தமிழ் நண்பர்கள் சிலர் நம்மிடம், ''பிரிட்டன்வாழ் 'பொங்கிடு தீவு நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக திருமாவளவனும், தமிழருவி மணியனும் லண்டனுக்கு வந்தார்கள். தமிழ் ஈழத்துக்காக உயிர்நீத்த திலீபன், சங்கர் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் விழாவின் திட்டம். சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், 'ஈழத்தை அழிக்க உதவிய கருணாநிதியுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்? ஒரு எம்.பி. ஸீட்டுக்காக ஏமாந்துபோன உங்களை எப்படி நாங்கள் ஈழத்துக்கு ஆதரவான தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்? காங்கிரஸின் களவாணித்தனத்தைப் பட்டியல் போட்டுப் பேசிய நீங்கள், சோனியா காந்தியுடன் எப்படி ஒரே மேடையில் நின்றீர்கள்?' என்றெல்லாம் திருமாவளவனிடம் பலரும் கேள்வி கேட்டார்கள்.
அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட திருமாவளவன், 'யாருடன்
கூட்டணி அமைத்தாலும் ஈழ விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது. என் நிஜமான உணர்வுகளை தயவுபண்ணி சிறுமைப்படுத்தாதீர்கள்' எனச் சொன்னார். அடுத்து குளோபல் டி.வி. என்கிறலோக்கல் சேனலின் லைவ் ஒளிபரப்பிலும் திருமாவுக்கு எதிராகப் பலமான கண்டனக் குரல் கொடுத்தார்கள் நேயர்கள்.
அப்போது, 'ஈழத்துக்காக இருபது வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் என்னை சந்தேகப்படுகின்றீர்கள்... ஆனால், தேர்தல் கூத்துக்காக ஒருநாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த ஜெயலலிதா உங்களுக்கு நல்லவராகத் தெரிகிறாரா?' என திருமா எதிர்க்கேள்வி கேட்டார். நேயர்களின் எதிர்ப்புக் கேள்வி அதன்பிறகும் வலுத்ததைத் தொடர்ந்து, அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி அரைகுறையாகவே முடிந்தது..!'' என்றார்கள் லண்டன் தமிழ் நண்பர்கள்.
இதுகுறித்து நாக்பூரில் தீட்சாபூமி விழாவில் இருந்த திருமாவளவனிடமே கேட்டோம்.''லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் பேசிய கருத்துகளை, பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. 'முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்' எனக் கிளம்பும் அபவாதத்தை நம்பித்தான் உலகத் தமிழர்கள் சிலர் தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். உலக நாடுகள்அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டுமே தலையிட்டு எப்படி ஈழப் போரைத் தடுத்துவிட முடியும்? ஈழத்தின் விடிவுக்காக சிறுத்தைகள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், எங்களின் நிஜமான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்!'' என்றார் திருமா. கூடவே,
''ஈழப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த மே மாதம் 8-ம் தேதி வாக்கில் முள்ளிவாய்க்காலில் இருந்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசனும், ஊடகப் பிரிவைச் சேர்ந்த சேரலாதனும் போனில் பேசி, 'உங்களோடு தலைவர் பத்து நிமிடம் பேச விரும்புகிறார்' என்றார்கள். 'கலைஞரையோ சோனியாவையோ தயவுபண்ணி திட்டாதீர்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது. ஈழத்துக்கான போராட்டத்துக்குக் கைகொடுக்கும் விதமாகக் குரல் கொடுங்கள். யாரையும் வசைபாடி, எங்களின் பின்னடைவுக்கு வழிகோலாதீர்கள்' என்பதுதான் தலைவர் பிரபாகரன் எனக்கு சொன்ன தகவல்... அந்த கனத்த கணங்களை நினைக்கும்போதே என் நெஞ்சறுந்து போகிறது. அத்தனை விமர்சனங்களுக்கும் என் அழுத்தமான பதில் இது ஒன்றுதான்!'' - கொந்தளித்து அடங்குகிறது திருமாவின் குரல்!
//
இந்த வார ஜீவி பேட்டி.
போகுல் வாந்தி.....கிந்தினு எதுக்கு உங்க வயிறு பேதி ஆதுனு தெரியலை ...
அவர் ஏற்கனவே .U.P மாநிலத்தில் சாதிச்சிட்டார், மக்கள் ஆதரவு நிறையவே இருக்கு....
விடுதலை(???) வாங்கிய நாளிலிருந்து சில வருடங்கள் தவிர்த்து வாந்தி குடும்பம் தானே பல வருடங்களாக ஆண்டுக் கொண்டிருக்கிறது....ஏழைகளை பணக்காரர்களாக கூட ஆக்க வேண்டாம், ஆனால் குடிக்க தண்ணீருக்கு கூட இன்னமும் கோடிக் கணக்கான மக்கள் போராடித் தானே கொண்டிருக்கிறார்கள்??
இந்த வாந்தி குடிசைக்கு போவதால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? வாந்தி மட்டுமே தன் படத்தை தானே படம் எடுத்து எல்லா பத்திரிக்கைகளுக்கும் வர வைக்கிறார்.....இதையே இவருக்கு பிறப்பு கொடுத்த வாந்தியும் செய்திருக்கிறார்....இதுல பெருசா அறிக்கை பேட்டி வேற....
ஒரு வேளை இவங்க குடும்பத் தொழிலே இது தானோ??
//
Sammy said...
போகுல் வாந்தி.....கிந்தினு எதுக்கு உங்க வயிறு பேதி ஆதுனு தெரியலை ...
அவர் ஏற்கனவே .U.P மாநிலத்தில் சாதிச்சிட்டார், மக்கள் ஆதரவு நிறையவே இருக்கு....
//
அப்படி என்ன பேதித்துவிட்டார் என்று தான் புரியவில்லை...முட்டை மார்க் எடுப்பான் என்று நினைத்தவன் இருபது மார்க் எடுத்ததை பெருமையாக கொண்டாடிய கதை தான்....
இப்பொழுது நடந்த இடைத்தேர்தலில் புடுங்கிடுச்சாமே???
//நாமக்கல் சிபி said...
:))
நீங்க சொல்ல வந்த மேட்டர் தெளிவா புரியுது கோவியாரே!
//
நன்றி
//பித்தன் said...எங்க பாட்டி,அப்பா எல்லாம் இப்படிதான் ஒரு வரி சேர்த்துக்குங்க.
//
:)
//முன் குறிப்பு:
இந்த விமர்சனத்திற்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எங்கள் அழகிய தெய்வம், நடமாடும் கடவுள், கனவில் வரும் தலைவி நமிதா கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றேன்.//
உங்க இஷ்ட தெய்வம் பற்றிய குறிப்பு நன்று
//அகல் விளக்கு said...
//ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ?//
இருக்கின்ற வியாதிகள் போதாதென்று இதுவுமா???
//
இது பெரும் வியாதி !
:)
//SanjaiGandhi said...
பாவி.கண்ணன் வழக்கம் போல் கலக்குகிறார்.. :)
வலையுலகத்தின் நிரந்தர சு.சாமி என்பதை ஒவ்வொரு அரசியல் பதிவிலும் நிரூபிக்கிறீர் போங்கோ.. :)
//
:)
அப்ப எல்லோரையும் சு.சாமி ஆக்கும் வரம் தருவது உங்க ஆட்கள் தானா ?
//SanjaiGandhi said...
அப்டியே இதை பத்தியும் எழுதுங்கோ.. நன்னா இருக்கும்.. :)
//
காங்கிரசுக்கு திருமாவின் சர்டிபிகேட்டா ? அவ்வ்.
உங்க நிலமை இப்படியெல்லாம் ஆச்சே.
// T.V.Radhakrishnan said...
:-)))
//
நன்றி
//Sammy said...
போகுல் வாந்தி.....கிந்தினு எதுக்கு உங்க வயிறு பேதி ஆதுனு தெரியலை ...
அவர் ஏற்கனவே .U.P மாநிலத்தில் சாதிச்சிட்டார், மக்கள் ஆதரவு நிறையவே இருக்கு....
//
எனக்கு வாந்தி பேதின்னா நான் மட்டுதான் கஷ்டப்படுவேன். போகுல் வாந்தி கங்கை, காவேரி எல்லாத் தண்ணீரையும் அசுத்தம் ஆக்கிவிடுகிறதே என்கிற ஆதங்கம் தான்
//ஒரு வேளை இவங்க குடும்பத் தொழிலே இது தானோ??//
அது சரி,
அவங்க குடும்பத் தொழில் முதலைக் கண்ணீர். முதலைகள் கூட ஒப்பந்தம் போட்டு வாங்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்
ஸ்ஸபாஆஆஆ.. ஒரே சீத பேதிக் கூட்டம்.. இப்டியே பொலம்பிட்டு வயித்தெரிச்சல் பட்டுட்டு இருக்க வேண்டியது தான்..
// அது சரி said...
விடுதலை(???) வாங்கிய நாளிலிருந்து சில வருடங்கள் தவிர்த்து வாந்தி குடும்பம் தானே பல வருடங்களாக ஆண்டுக் கொண்டிருக்கிறது....ஏழைகளை பணக்காரர்களாக கூட ஆக்க வேண்டாம், ஆனால் குடிக்க தண்ணீருக்கு கூட இன்னமும் கோடிக் கணக்கான மக்கள் போராடித் தானே கொண்டிருக்கிறார்கள்??
இந்த வாந்தி குடிசைக்கு போவதால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? வாந்தி மட்டுமே தன் படத்தை தானே படம் எடுத்து எல்லா பத்திரிக்கைகளுக்கும் வர வைக்கிறார்.....இதையே இவருக்கு பிறப்பு கொடுத்த வாந்தியும் செய்திருக்கிறார்....இதுல பெருசா அறிக்கை பேட்டி வேற....
ஒரு வேளை இவங்க குடும்பத் தொழிலே இது தானோ??//
கொலம்பஸ் ப்ரம்பரையில் மற்றுமொரு கண்டுபிடிப்பாளர்.. :) பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் தானே பல ஆண்டுகளாக ஆட்சி செய்கின்றன. நாட்டின் எல்லா நிலமைக்கும் மத்திய அரசு தான் பொறுப்பாக வேண்டும் என்றால், மாநில அரசுகள் என்ன புடுங்குகின்றன(உங்கள் பாஷையிலேயே) என்பதை தெரிந்துக் கொள்ள ஆசை.
அது சரி ...
//அப்படி என்ன பேதித்துவிட்டார் என்று தான் புரியவில்லை...முட்டை மார்க் எடுப்பான் என்று நினைத்தவன் இருபது மார்க் எடுத்ததை பெருமையாக கொண்டாடிய கதை தான்....//
என்ன சார் புரியாம பேசறீங்க, தமிழ்நாட்டில் போன சட்டமன்ற தேர்தலில் ...கேப்டன் முட்டை மார்க் எடுத்தார், "அம்மா" இருபது மார்க் எடுத்தாங்க....தேர்தல் அப்புறம் மக்கள் யாரை பத்தி அதிகம் பேசினாங்க ?..இப்ப "அம்மா" யாரை பத்தி அதிகம் கவலை படுறாங்க ? அரசியல்ல மார்கா சார் முக்கியம்.
//இந்த வாந்தி குடிசைக்கு போவதால் அவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? ///
உங்க வீட்டுக்கு உங்களுக்கு பிடித்த தலைவர் ஒருத்தர் வந்தா ...அவரிடம் என்ன எதிர்பார்பீங்க?
//ஆனால் குடிக்க தண்ணீருக்கு கூட இன்னமும் கோடிக் கணக்கான மக்கள் போராடித் தானே கொண்டிருக்கிறார்கள்??// இந்த திடீர் ஏழை சிந்தனை எப்படி வந்தது உங்களுக்கு ? அவர் அந்த குடிசை வீட்டுக்கு போனதினால் தானே..இல்லைனா நம்ம பேசுற "தண்ணி" வேரவால இருக்கும்.
கோவி --
//எனக்கு வாந்தி பேதின்னா நான் மட்டுதான் கஷ்டப்படுவேன். போகுல் வாந்தி கங்கை, காவேரி எல்லாத் தண்ணீரையும் அசுத்தம் ஆக்கிவிடுகிறதே என்கிற ஆதங்கம் தான்//
கங்கை, காவேரி பாத்துகிரதுகு நிறைய பேர் இருகாங்க ...நீங்க உங்க உடம்பை (வயித்து எரிச்சல் ) பார்த்துகோங்க...தேர்தல்கு அப்புறம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு ...சக தமிழன் மேல இருக்குற அக்கரைல சொன்னேன்.
//விடுதலை(???) வாங்கிய நாளிலிருந்து சில வருடங்கள் தவிர்த்து வாந்தி குடும்பம் தானே பல வருடங்களாக ஆண்டுக் கொண்டிருக்கிறது....//
நாடு மேல ஒரு சிந்தனை வேற வந்திருக்கா பலே , இதை பார்க்க மறந்துட்டேன் ...
ஒழுங்கா வரி கட்டுங்க, லஞ்சம் குடுக்காம காரியம் பண்ணுங்க, லஞ்சம் வாங்காம வேலை பண்ணுங்க, வீடு, நிலம் ..registration சரியான விலைக்கு பண்ணுங்க ...ஒழுங்கா ஒட்டு போடுங்க சார் முதல...சும்மா பதிவுல மட்டும் வந்து காந்தி வாந்தினு சொல்லிடு இருந்தா..இந்த மாதிரி கேள்வி இன்னும் ஒரு அம்பது வருசத்துக்கு கேட்டுதே இருக்க வேண்டிதான்.
"ask not what the country did for you, ask what you did for the country"
ஏழைப் பங்காளன் ! //
சரிதான்!
ஏழைகளோட காச பங்கு போட்டு சாப்பிடுறவங்க!
நான் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கு திடீர் திடீரென போவதால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே எனது பயணத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார் போங்கிரஸ் பொதுச் செயலாளர் போகுல் வாந்தி.//
தமிழகத்துல காங்கிரஸ் போண்டியா போனதுனால போங்கிரஸா!?
அதன் தலைவர்கள் பேசுறதல்லாம் வாந்தியா? இல்ல தலைவர்களே வாந்தியா?
உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக (தொற்று நோய் போல்) போகுல் வாந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், சாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.//
உ.பி ல காங்கிரஸ் உப்பியுள்ளதா?
உப்பி இருந்தா எதோ சீக்கா இருக்கப் போவுது. சாயாவதியே சாயா குடிக்க காங்கிரஸ்காரங்க விடுவாங்களா?
அவங்களும் குடிக்கட்டும் விடுங்கப்பா!
வாந்தி தொற்று நோயாக இருக்கக்கூடும் என்பது உண்மை.
ஆனால் கொழம்பிய வாந்தி...!
எண்ணிப்பாருங்கள்!
இப்படி போகுல் வாந்தியின். திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
//
போகுற வாந்திக்கோ, வாந்தியில போகுறவங்களுக்கோ பாதுகாப்பு தேவையில்லய்யா!
இதுகுறித்து போகுல் வாந்தி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள், அவர்களின் இரவு உணவை என்னிடம் கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாகப் படுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்//
அரசியல் வியாதிகள்,
இப்பல்லாம் வீட்டுக்கு வந்து கஞ்சி குடிக்கிற ஏழை சனத்தையும் உரிஞ்சி வாழ ஆரம்பிச்சிட்டாங்களா?
அவ்வ்வ்வ்!
என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வியாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.//
ஏன் ஓட்டு இல்லாதவங்க வீட்டுக்கு போய்ட்டாரோ?, அதான் போனதுக்கு ரெண்டு கஞ்சி பருக்கையை சாப்பிட்டுட்டு அவங்க வயித்த கழுவிட்டு வந்திருக்காரு!
ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வியாதி போனால் அவர்களுக்கு புதிதாக வேறு வியாதி வந்து விடப் போகிறதா ? பிறகு ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்று நானும் கேட்பதில்லை.//
எங்க குஞ்சானுக்கு வீடு கட்டனும் ஒரு மாதத்து கள் அள்ளிக் கொடுக்கனும் வருவாரா வாந்தி!
நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. என்னை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் போகுல் வாந்தி.//
அப்பரம் எப்படி கோவியார் படம் எடுக்க முடிந்தது!
ஏழைகள் ஏழைகளாகவே இருப்பது தான் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், அரசியல் வியாதிகள் தேர்தலுக்கு தேர்தல் கொஞ்சம் போடுவதால் தான் தாங்கள் வாழ்வதாகவும், மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தலித்துகள் தன்னிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்ததாகச் சொன்னார் போகுல் வாந்தி//
அய்யகோ!
இது எப்படி இருக்கு!~
பின்துருப்பு : மேற்கண்ட தகவல்களுக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை, படத்துக்கும் பதிவுக்கும் கூட தொடர்பு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்//
கண்டிப்பாக இல்லை என்று எப்படி நம்புவது என்று நினைத்து, பின் நம்ப வேண்டியிருப்பதால், எப்படி நம்புவது என்று யோசிக்க வைக்கிறது.!
பேர மட்டும்தான் மாத்திப் போட்டீரோ!
முழு நீள நகைச்சுவையும் வாந்தியோடதா!?
வந்துட்டாருப்பா மற்றும் ஒரு வயித்து எரிச்சல்..ஏழைகள் வீட்டுக்கு போகும் அரசியல் வாதிகள்..ஒரு சின்ன கண்ணோட்டம்....
தேர்தல் சமயத்தில் போனால் ....
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- வந்துடாண்ட அஞ்சு வருஷாம இந்த பக்கமே வரலை. வோட்டு வேணும்னா மட்டும் வீட்டுக்கு வரான்.
கிரிக்கெட் மேட்ச் பார்க்க போனா ..இல்லை பணக்கரார்கள் சகவாசம்......
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- ஏழைகள் கஷ்டம் இவனுக்கு எப்படி தெரிய பொது ...ஒரு நாளாவது அவுங்க வாழ்கை வாழ முடியுமா .இவனால.
தேர்தல் இல்லாத சமயத்தில் ஏழை வீட்டுக்கு போனா ....
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- விளம்பரம் பன்றதுகாகவே போறான் பாருங்க...
தேவை இல்லாத செலவு செய்யும் M.P. ....
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- யாரு வீடு பணத்தில், இப்படி செலவு பண்ணா எப்படி நாடு முன்னேறும் ( வரி கட்டாத இவர்கள் புலம்பல்)
M.P. செலவு குறைப்பு நடவடிக்கை ----
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- பார்ரா ! ....விளம்பரம் பண்றான் ,விளம்பரம் பண்றான் .. மக்கள் ஏமாத்துகிறார்கள். ( இவர்கள் மனதில் ஞானிகள் என்று நினைப்பு )
//Sammy said...
தேவை இல்லாத செலவு செய்யும் M.P. ....
புலம்பல்கள் (அத்தி, கோவி, அது சரி )----- யாரு வீடு பணத்தில், இப்படி செலவு பண்ணா எப்படி நாடு முன்னேறும் ( வரி கட்டாத இவர்கள் புலம்பல்)
//
சாமி,
காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசினால் பிரியாணியுடன் கைச் செலவுக்கும் ஏதாவது கொடுக்கிறார்களா என்று சஞ்செயிடம் கேட்டுவிட்டு நானும் காங்கிரஸ் துதிப் பாடலாம் என்று இருக்கிறேன். ஓகே வா ?
:)
காந்தி ஜெயந்தி ...ஒரு நாளைக்காவது ..அந்த 'கா' வை 'வா' என்று மாத்தாம விவாதம் பண்ணுங்க ....காந்திக்காக..
கோவி ..
//காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசினால் பிரியாணியுடன் கைச் செலவுக்கும் ஏதாவது கொடுக்கிறார்களா என்று சஞ்செயிடம் கேட்டுவிட்டு நானும் காங்கிரஸ் துதிப் பாடலாம் என்று இருக்கிறேன். ஓகே வா ?///
இப்படி கூட சமாளிகலாமா !.
யாருப்பா சஞ்சய்..நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். எதையும் யோசிச்சு எழுதுபவன் நான், யாரு மேலயும் வயித்து எரிச்சலோடு எழுதுபவனும் அல்ல. ..அடுத்த முறை அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணுங்க.
//Sammy said...
காந்தி ஜெயந்தி ...ஒரு நாளைக்காவது ..அந்த 'கா' வை 'வா' என்று மாத்தாம விவாதம் பண்ணுங்க ....காந்திக்காக..//
ம் இன்னும் கொஞ்ச நாளில் காந்தி என்றால் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி என்கிற 'காந்தி' குடும்பத்தின் பெருமையைப் பற்றி வரலாறுகளாக மாற்றி எழுதப்படாதவரை காந்தியைப் பற்றி நீங்களும் நானும் பேசலாம் :)
//இப்படி கூட சமாளிகலாமா !.
யாருப்பா சஞ்சய்..நமக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம். எதையும் யோசிச்சு எழுதுபவன் நான், யாரு மேலயும் வயித்து எரிச்சலோடு எழுதுபவனும் அல்ல. ..அடுத்த முறை அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணுங்க.
//
சஞ்செய் பற்றித் தெரியவில்லை என்று கூறியதற்கு கடுமையான கண்டனம். தம்பி சஞ்செய் கோவை மாவட்டத்து காங்கிரசு இடிதாங்கி
//எதையும் யோசிச்சு எழுதுபவன் நான், யாரு மேலயும் வயித்து எரிச்சலோடு எழுதுபவனும் அல்ல. ..அடுத்த முறை அந்த மாதிரி எழுத முயற்சி பண்ணுங்க.//
ஆஹா ஆஹா, நிறைய ஆலோசனைக் கேட்கலாம் போல, அறிவூற்று தாங்களென அறியாச் சிறுவனை மன்னிக்க வேண்டும்.
கோவி
// இன்னும் கொஞ்ச நாளில் காந்தி என்றால் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி என்கிற 'காந்தி' குடும்பத்தின்//
நல்ல முன்னேற்றம் ..ஒரு வழியா ..அந்த "வா" ந்தி. சொல்லை விட்டீங்க ..நன்றி.
//சஞ்செய் பற்றித் தெரியவில்லை என்று கூறியதற்கு கடுமையான கண்டனம். தம்பி சஞ்செய் கோவை மாவட்டத்து காங்கிரசு இடிதாங்கி//
சரி இருக்கட்டும்..என்னுடைய அரசியல் வாதி..ஏழை கண்ணோட்டதில். எங்கயுமே காங்கிரஸ் பத்தியோ, போகுல் பத்தியோ நான் எழுதவே இல்லையே ...அரசியல் வாதி ,M.P. தானே எழுதினேன். எப்படி நீங்க உடனே சஞ்சய் அறிமுகம் குடுகிறீங்க.
//நல்ல முன்னேற்றம் ..ஒரு வழியா ..அந்த "வா" ந்தி. சொல்லை விட்டீங்க ..நன்றி. //
அடிக்கடி வாயல எடுப்பது நல்லது இல்லையே :)
//சரி இருக்கட்டும்..என்னுடைய அரசியல் வாதி..ஏழை கண்ணோட்டதில். எங்கயுமே காங்கிரஸ் பத்தியோ, போகுல் பத்தியோ நான் எழுதவே இல்லையே ...அரசியல் வாதி ,M.P. தானே எழுதினேன். எப்படி நீங்க உடனே சஞ்சய் அறிமுகம் குடுகிறீங்க.//
யாரு சஞ்செய்னு கேட்டதால சொன்னேன்.
//காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசினால் பிரியாணியுடன் கைச் செலவுக்கும் ஏதாவது கொடுக்கிறார்களா என்று சஞ்செயிடம் கேட்டுவிட்டு நானும் காங்கிரஸ் துதிப் பாடலாம் என்று இருக்கிறேன். ஓகே வா ?
:) //
புலி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் போதும் ஜெ வாழ்க கோஷம் போட்டு ஓட்டுக் கேட்கும் போதும் கிடைத்த எலும்புத்துண்டுகளைப் போல் கங்கிரசில் எதிர்பார்க்க வேண்டாம். நான் பிரியாணியோ கை செலவுக்கு காசோ எதிர்பார்க்கும் பிச்சைகாரன் இல்லை என்பதால் உங்கள் கேள்விக்கு பதில் இல்லை கோவிஜி.
பிரியாணியும் கை செலவுக்கு காசும் கொடுத்தால் நீங்கள் துதிபாட தயாராக இருப்பது இப்போது தான் அறிகிறேன். உங்கள் நிலை இவ்வளவு மோசமானதற்காக நிஜமாகவே வருந்துகிறேன். :( அதை நானே தருகிறேன் . காங்கிரசை இனி துதிபாடுஙகள்.
//யாருப்பா சஞ்சய்//
இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா?
//சஞ்செய் பற்றித் தெரியவில்லை என்று கூறியதற்கு கடுமையான கண்டனம். தம்பி சஞ்செய் கோவை மாவட்டத்து காங்கிரசு இடிதாங்கி //
இதுக்கு ஒன்னியும் கொறைச்சல் இல்லை..:)
பின்னூட்டங்கள் அருமை!
:)))))))))
காங்கிரசு களவாணிகளை தோலுரித்து காட்டிய தோழர் கோவி.கண்ணனுக்கு நம் பாராட்டுகள்.. ஏதோ காங்கிரசு அடிப்பிடிகள் காசுமீரு பண்டிட்டு குடும்பதிற்கு ஒத்து ஊதுவதை தோழர் பெரிது படுத்தவேண்டாம்.. தமிழினத்தின் முதல் எதிரி காசுமீர் பண்டிட்டு குடும்பமே.. சிறிது இந்தி அரசியலை கூர்ந்து கவனித்தால் தோழர்களுக்கு ஒன்று புலப்படும்.. இரண்டை நிறுத்திவிட்டு இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொல்வது.. அது திமுக-அதிமுக அல்லது மத்தியில் காளவாணிகள் (காங்கிரசு)- பார்பானர்கள்(பிஜேபி) என இரண்டை தவிர வேறு எதையும் மாற்றாக விட்டு வைப்பது இல்லை..இந்த இரண்டுக்குள் எப்படியாவது எதிர்கருத்தாளர்களை நிறுத்துவது,, இப்படித்தான் ஆண்டான்டு காலமாக தமிழினத்தை அடிமைபடுத்தி வைத்திருக்கிறார்கள்.. ஏன் காங்கிரசு களவாணிகள் இந்தி அரசியல் அமைப்பு சட்டத்தின் படி 371(அ) படி நாகாவை தனி தேசிய இனமாக அங்கிகரிக்கிறார்கள்.. மூத்த தமிழனதிற்கு இல்லை? காவிரி ,முல்லை பெரியாறு.. பாலாறு.. மலையகதமிழர்களை நாடற்றோர் ஆக்கியது...ஈழ தமிழர் இழவுக்கு.. தமிழக மீனவர் பிரச்சனை.. என அனைத்திற்கும் மூல முதல்வர்கள் இவர்களே! நமது மண்ணில் நமது தமிழ்தேசிய ராணுவம் நிற்கும் வரையில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை! இந்தியா எனும் போலி தேசியம் உடைக்கபட வேண்டும்..பாண்டிநாடு சோழநாடு கொங்கு நாடு வருச நாடு தொண்டை நாடு என எதிர்கருத்து வைக்கும் ஆரிய தோழர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.. நீங்கள் எப்படி இந்தி யா எனும் போது எவ்வாறு ஒன்று படுகிறீர்களோ அதேபோல் தமிழ்தேசியம் எனும் போது எங்களாலும் ஒன்றுபட முடியும்.. மக்களை இந்தியனை விடுத்து தமிழனாக மாற்ற வேண்டிய கடமை தமிழ்தேசியர்கள் முதல் கடமை! --தோழர் சிறுத்தை(http://siruthai.wordpress.com)
கருத்துரையிடுக