பின்பற்றுபவர்கள்

22 செப்டம்பர், 2009

(அ)தாங்க முடியல !

எத்தனை விமர்சனங்கள் எத்தனை ஆராய்ச்சிகள் ஒரு படம் வெற்றிப்படமாக அமைந்துவிட்டால் பதிவுலகம் அல்லோகலப்படுகிறது.

உன்னைப் போல் ஒருவன் - படத்துல எதும் மேசேஜ் இருக்கிறதா ? என்று பார்த்தால் எனக்கு தெரிந்த மெசேஜ், இந்தியில் வெற்றிபெற்ற முன்னா பாய் எம்பிபிஸ் போல் தமிழ் சூழலில் கமல் நடிக்க வசூல்ராஜா என்ற பெயரில் வெளியான படம் போல் தான் 'வெட்னெஸ்டே' என்ற படம் 'உன்னைப் போல் ஒருவன்' ஆனதும். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைத் துறைச் சார்ந்த வியாபார நோக்கம். வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் கதையை எடுத்து கையை சுட்டுக் கொள்ளாத தமிழ் பதிப்பு.

கமல் ஒரு நடிகர் என்பது போல் அவர் ஒரு தயாரிப்பாளர் வெற்றிபெற்ற படங்களை தமிழில் எடுத்து இருக்கிறார். இதில் யாரும் நட்டப்படவில்லை என்றால் கமல் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல வியாபாரி என்று நினைப்பதே சரி என்பதாக நான் கருதுகிறேன்.

இன்றைய தொழில் நுட்பங்களையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் திரைக்கதைக்குள் கொண்டுவந்து ஒரு திரைப்படமாக ஆக்கி இருக்கிறார்கள், படம் தொய்வின்றி செல்கிறது என்பதைத் தவிர்த்து வேறு கோணங்களில் என்னால் இந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை.

படத்தில் ஏன் மதத்தீவிரவாதிகளைக் மையப்படுத்தனும் ? சிறையில் இருந்த / இருக்கும் மஃபியா கும்பல்களை, கபிலன், ஆசைத் தம்பி, வெள்ளை ரவி, வெல்டிங் குமார் போன்ற ரவுடிகளை ஏன் அதற்குப் பதிலாகப் பயன்படுத்தி இருக்கக் கூடாது என்றெல்லாம் கூட யோசித்துப் பார்க்கும் போது. அது போன்ற ரவுடிகளை காவல் துறையினரே என் கவுண்டர் செய்துவிடுவதால் அவர்களைப் பயன்படுத்துவது கதைக்குப்பொருந்தாது என்று நினைத்திருக்கலாம், அதனால் இந்தி பதிப்பில் உள்ளதை அப்படியே தான் செய்திருக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு வலைப்பதிவுகளில் சிலர் எழுத்துக்களில் விமர்சனமாக வரும் மதவெறுப்பு சாயம் பூசுவது பொருந்திவரவில்லை.

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அது பற்றி பொதுவில் பேசனும், பேசப்படனும். முன்பெல்லாம் படங்களில் 'பாகிஸ்தான்' என்ற சொல் இடம் பெற்றாலே அதைத் தனிக்கை செய்து அந்த நாட்டைப் பற்றிப் பேசுவது தவறு என்பது போல் நல்லெண்ண(ஐ) நடவடிக்கையாக இந்திய அரசு திரைப்படத்திற்கு சில தனிக்கைகள் வைத்திருந்தன. பின்னர் விஜய்காந்து படங்களில் தீவிரமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாடினார் தனிக்கைக் குழுக்களும் கண்டு கொள்ளவில்லை.

இந்தப் படத்தில் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை நேரடியாகத் தூண்டிவிடுவதாக பலகாட்சிகளில் சொல்லபடுகிறது. குறிப்பாக பொம்மை முசாரப் (முஷ்) மற்றும் பொம்மை புஷ் இடம்பெறும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. பாகிஸ்தானைப் பற்றி நல்லெண்ணம் தொடர்ந்து ஏற்படுத்துவதால் நாம் அடையப் போவது ஒன்றுமே இல்லை என்பதை இந்திய அரசு வெளிப்படையாக உணர்ந்து இருப்பதால் திரைப்படங்களில் அது பற்றிய அடிக்கோடுகள் வரும் போது தனிக்கை குழுக்களால் கண்டு கொள்ளமால் விடப்படுகிறது என்பதே உண்மை. முன்பு நல்லெண்ண(ஐ) அடிப்படையில் 'பாகிஸ்தான்' பெயர் வரும் போது தனிக்கை செய்தார்கள் ஆனால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை மாறாக மும்பை ஓட்டல்கள் நம் கண் முன்னே தாக்குதலுக்கு ஆளானது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் லஷ்கர் ஈ தொய்பா, அல்லும்மா போன்ற பெயர்களை படத்தில் நேரடியாகப் பயன்படுத்தி இருப்பதால் படத்தயாரிப்பாளரான கமல் தான் இந்தக் குழுக்களால் ஒரு வேளை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணி திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்க வேண்டும், மாறாக உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து மோடி முதல் தீவிரவாதக் குழுக்கள் பெயர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் துணிவுள்ளோர்கள் அனைவரும் பாராட்டலாம். அதைவிடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்திவிட்டார்கள், சங்கர்பரிவாரம், பார்பனக் கமல் இதெல்லாம் டூ........மச்.

இந்திய அளவில் இந்துக்கள் இந்துத்தீவிரவாதிகளைக் கண்டித்து வருவது போலவே ( அவர்களுக்கு ஆதரவென்றால் காங்கிரசு ஆட்சியில் அமர்ந்திருக்காது) இஸ்லாமியர்கள் இஸ்லாம் பெயரில் நடந்துவரும் தீவிரவாதக் கும்பல்களை கண்டிப்பதற்கு முன்வரவேண்டும் (மிகச் சிலரே அவ்வாறு செய்கிறார்கள்). மற்றவர்கள் இஸ்லாம் தீவிரவாதிகள் என்று குறிப்பிடும் போது இஸ்லாமியர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது, ஆனால் அந்த வருத்தம் மட்டுமே இஸ்லாம் பெயரில் இருக்கும் தீவிரவாதங்களை அப்புறப்படுத்துவிடாது.

அணு ஆயுத வல்லரசுகள் தங்கள் செயலை மறைக்க உலக அளவில் உருவாகி இருப்பதாகக் காட்டுவது தான் 'இஸ்லாம் தீவிரவாதம்' - இதை இஸ்லாமியர்களும் ஏனையோர்களும் புரிந்து கொண்டு களைய முன்வருவது நல்லது

நானும் இரண்டாவது முறை உ.போ.ஒ எழுதிட்டேன் :)

22 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//நானும் இரண்டாவது முறை உ.போ.ஒ எழுதிட்டேன் :)//

நானும் இரண்டாவது முறை உ.போ.ஒ பார்த்துவிட்டேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன் :)

samundi சொன்னது…

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post_21.html

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் அது பற்றி பொதுவில் பேசனும், பேசப்படனும். முன்பெல்லாம் படங்களில் 'பாகிஸ்தான்' என்ற சொல் இடம் பெற்றாலே அதைத் தனிக்கை செய்து அந்த நாட்டைப் பற்றிப் பேசுவது தவறு என்பது போல் நல்லெண்ண(ஐ) நடவடிக்கையாக இந்திய அரசு திரைப்படத்திற்கு சில தனிக்கைகள் வைத்திருந்தன. பின்னர் விஜய்காந்து படங்களில் தீவிரமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பந்தாடினார் தனிக்கைக் குழுக்களும் கண்டு கொள்ளவில்லை. //

விஷயகாந்து மாதிரி ஆட்களைத் தான் நாங்க பிரதமரா எதிர்பாக்குறோம்.

:P

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\அதைவிடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்திவிட்டார்கள், சங்கர்பரிவாரம், பார்பனக் கமல் இதெல்லாம் டூ........மச்.\\


ரிபீட்டேய்ய்ய்...

maruthamooran சொன்னது…

‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்தை மத ரீதியாக விமர்சிக்கின்றவர்களுக்கு படத்திலும், கமல் மீதும் ஏதாவது குறை சொல்லிவிட வேண்டும் என்பதே நோக்கம். அந்த படத்தில் தயாரிப்பு மற்றும் உருவாக்கம் (மேக்கிங்) குறித்து பேசமாட்டார்கள். ஏனென்றால் நடைமுறையிலுள்ள சில விடயங்களை சொன்னால் அதற்கு மதச்சாயங்களை பூசி அரசியல் நடத்துவது இந்தியாவில் (தற்போது எங்குமே) புதிதில்லையே. குறித்த படத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்தும் மறைமுகமாக கூறப்பட்டதே. (நான் இலங்கைப் பதிவன்) அதற்கு ஏன் இனவாத, மதவாத சாயங்களை பூசாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு வழியில் பெயர் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத ரீதியிலான உணர்வுகளைத் தூண்டுகின்றனர் சிலர். இதுவும் தீவிரவாதம் தானே.

Cable சங்கர் சொன்னது…

படம் ஹிட்டாகி போய் விட்டதால் தான் பெருமுகிறார்கள்.. ஒரு வேளை இது ஹேராம் போல் தோற்று இருந்தால் இவ்வளவு பேச்சு இருந்திருக்காது..

குப்பன்.யாஹூ சொன்னது…

.

நான் கேபிள் சங்கர் வழி செல்கிறேன்.

இப்போவே எந்திரன் படத்திற்கும் பதிவு ரெடி செய்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

படம் ஹிட்டாகி போய் விட்டதால் தான் பெருமுகிறார்கள்.. ஒரு வேளை இது ஹேராம் போல் தோற்று இருந்தால் இவ்வளவு பேச்சு இருந்திருக்காது..

வந்தியத்தேவன் சொன்னது…

அண்ணன் கேபிள் சங்கரை வழிமொழிகின்றேன். படம் ஹிட் இதனால் காண்டான சிலர் கமலை இகழ்கின்றார்கள். அதுசரி கதை A Wednesday கதைதானே, A Wednesday ஹிந்தியில் வந்தபோது ஏன் இவ்வளவு எதிர்ப்புவரவில்லை

மணிஜி சொன்னது…

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? மன்னிக்கவும்..பின்னுட்டம் போட்டு களைத்துவிட்டேன்

Kumky சொன்னது…

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? மன்னிக்கவும்..பின்னுட்டம் போட்டு களைத்துவிட்டேன்...

மன்னிக்கவும்...பின்னூட்டங்களை வாசித்து களைத்துவிட்டேன்.

அன்புடன் அருணா சொன்னது…

யாருமே படம் பார்க்கலாமா? வேண்டாமான்னு சொல்ல மாட்டேங்கறாங்க!

ஜெகதீசன் சொன்னது…

இன்னும் படிச்சு முடிக்கலை... இருந்தாலும்...

//

இந்தப்படத்துக்கு வலைப்பதிவுகளில் சிலர் எழுத்துக்களில் விமர்சனமாக வரும் மதவெறுப்பு சாயம் பூசுவது பொருந்திவரவில்லை.
//
அது எப்படிங்க... நாடோடிகள் படத்துக்கு மட்டும் நீங்க பூசுற "நடுத்தரவர்க்கத் தீண்டாமை" சாயம் பொருந்தும்... ஆனால் இந்தப் படத்துக்கு சாயம் பொருந்தலையா....

நீங்க பூசுற சாயம் மட்டும்தான் பொருந்துமா என்ன?
(இந்தப் பின்னூட்டத்தை நீங்க மட்டும் யோக்கியமா என்ற கேள்வியாகவும் எடுத்துக் கொள்ளலாம்....;))

வால்பையன் சொன்னது…

தண்டோராவுக்கும், கும்க்கிக்கும் ரிப்பிட்டு!

ஜெகதீசன் சொன்னது…

இது பின்னூட்டங்களை அஞ்சலில் பெற....
;)

Chittoor Murugesan சொன்னது…

கலாமின் மனைவி ‍:1 , 2 என்ற என் பதிவுகளுக்கான மறுமொழிகளுக்கு நான் கொடுத்த மறு மறுமொழி இது.( தங்கள் மேலான பார்வைக்கு )
பாலா & வீரபாண்டியன் அவர்களே !
தங்கள் மறுமொழியிலிருந்து தமிழ் ஓவியா,கோவி.கண்ணன்,தோழர் ஏகலைவன்,தோழர் மதிமாறன் ஆகியோர் இன்னும் பட்டவர்த்தனமான உண்மைகளை போட்டு உடைப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டேன். இன்னும் என்னில் ஹிப்பாக்ரடிக் சிந்தனைகள் இருப்பதை உணர்கிறேன்.

பி.கு:
மேற்சொன்ன பதிவர்களோடு தாங்கள் குறிப்பிட்ட "நக்சல் தீவிரவாத பதிவர்கள் இருவர். "வலையுலக ஓ என் ஜி சி பெரியார்" காட்டாமணக்கு ஆகியோரின் பதிவுகளையும் தேடிப்பிடித்து படிக்க முடிவு செய்துள்ளேன். மறு மொழிக்கு நன்றி

மதி.இண்டியா சொன்னது…

பல வரிகள் முகத்தில் அறையும் நிஜம் , நம் ஆதங்கம் புரியும் என நினைக்கிறேன் , நன்றி

பெயரில்லா சொன்னது…

தோழர் கோவி கண்ணன்!
தற்செயலாக இந்த பதிவை கண்டவுடன் பின்னூட்டமிட தூண்டியது.. இஸ்லாமியர்கள் ஏன் இங்கு குண்டு வைக்கிறார்கள்.. வேறு வேலை இல்லையா?..1970 களிலெயே ஐ.நா மன்றம் காஸ்மீர் மக்களிடத்தில் நீ(இந்தியா) தேர்தலை நடத்து..அவர்களுக்கான முடிவை அவர்களே தீர்மானிப்பார்கள்.. அவர்கள் இந்தி யாவோடு இருப்பதா.. பாகிஸ்தானோடு இருப்பதா..அல்லது தனிநாடாக போவதா.. என அறிவித்துவிட்டது இன்னும் தேர்தலை நடத்தி கொண்டே இருக்கிறார்கள்.. காரணம் என்ன? காசுமீரு பண்டிட்டு நேரு குடும்பம் அப்போதைய சூழ்நிலையில்(இப்போது வேறு.. இத்தாலிகாரியே இந்த நாட்டை ஆளுகிறாள்) தமது குடும்பம் இந்தி ய அரசியலில் கோலோச்சி கொண்டிருக்க முடியாது என தூர 'நோக்கோடு ' சிந்தித்ததுதான்.. தீவிரவாதம் என்பது ஏற்புடையதே! ஆனால் அது அப்பாவிகளை கொல்வதற்காக அல்ல.. அநியாயம் செய்யும் அரசியல வியாதிகளை கொல்வதற்கு..மேற்கு வங்க மாவோயிஸ்டுகளை போன்று.. மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக அரசியல் வியாதிகளிடம் மனுகொடுத்து அலுத்து.. தாங்களே சிறுக சிறுக சேர்த்து சாலை முதலிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியவுடன் ..அதை தாம் செய்ததாக கணக்குகாட்டும் அரசியல் வியாதிகளை கொளுத்துவதற்கு.. இந்தியா தீவிரவாதத்தை எதிர்கிறதா?அப்ப பலுசிஸ்தானிலில் ஆயுதம் வெடிமருந்து ஆகியவற்றை சப்ளை செய்வது யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? ஈழ விடுதலை அமைப்பான புளோட் அமைப்பை மாலத்தீவில் ராணுவ புரட்சி மூலம் கைப்பற்றுமாறு கூறி தூண்டிவிட்டு பின்பு தானே ஆபந்தவான் போல வேடமிட்டு அவர்களை கொன்றோழித்தது நாம் வாழும் அகி இம்சை நாடு..இதோ.. நாலாம் கட்ட ஈழபோர் முடிந்துவிட்டது..புலிகளை பழிதீர்த்தாகிவிட்டது.. ம்ம் இன்னும் இலங்கை வழிக்கு வருவதாக காணோம்..சீனா பக்கம் போகிறான் ..ஆயிற்று போவது நம்முயிரா?இல்லையே?என்ற ஈழ அமைப்பிற்கு மீண்டும் ஆயுதமேந்த கொம்புசீவி விடுகிறார்கள் ..தூத்தேறி.. இதெல்லாம் ஒரு பொழப்பு..அவனவன் அவனவன் வேலைபார்த்தாலே போதும்..அடுத்தவன் விசயத்தில் தலையிடும் போதுதான் பிரச்சனை உருவாகிறது.. தமிழ்தேசியன்

பெயரில்லா சொன்னது…

தோழர் கோவி கண்ணன்!
தற்செயலாக இந்த பதிவை கண்டவுடன் பின்னூட்டமிட தூண்டியது.. இஸ்லாமியர்கள் ஏன் இங்கு குண்டு வைக்கிறார்கள்.. வேறு வேலை இல்லையா?..1970 களிலெயே ஐ.நா மன்றம் காஸ்மீர் மக்களிடத்தில் நீ(இந்தியா) தேர்தலை நடத்து..அவர்களுக்கான முடிவை அவர்களே தீர்மானிப்பார்கள்.. அவர்கள் இந்தி யாவோடு இருப்பதா.. பாகிஸ்தானோடு இருப்பதா..அல்லது தனிநாடாக போவதா.. என அறிவித்துவிட்டது இன்னும் தேர்தலை நடத்தி கொண்டே இருக்கிறார்கள்.. காரணம் என்ன? காசுமீரு பண்டிட்டு நேரு குடும்பம் அப்போதைய சூழ்நிலையில்(இப்போது வேறு.. இத்தாலிகாரியே இந்த நாட்டை ஆளுகிறாள்) தமது குடும்பம் இந்தி ய அரசியலில் கோலோச்சி கொண்டிருக்க முடியாது என தூர 'நோக்கோடு ' சிந்தித்ததுதான்.. தீவிரவாதம் என்பது ஏற்புடையதே! ஆனால் அது அப்பாவிகளை கொல்வதற்காக அல்ல.. அநியாயம் செய்யும் அரசியல வியாதிகளை கொல்வதற்கு..மேற்கு வங்க மாவோயிஸ்டுகளை போன்று.. மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக அரசியல் வியாதிகளிடம் மனுகொடுத்து அலுத்து.. தாங்களே சிறுக சிறுக சேர்த்து சாலை முதலிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியவுடன் ..அதை தாம் செய்ததாக கணக்குகாட்டும் அரசியல் வியாதிகளை கொளுத்துவதற்கு.. இந்தியா தீவிரவாதத்தை எதிர்கிறதா?அப்ப பலுசிஸ்தானிலில் ஆயுதம் வெடிமருந்து ஆகியவற்றை சப்ளை செய்வது யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? ஈழ விடுதலை அமைப்பான புளோட் அமைப்பை மாலத்தீவில் ராணுவ புரட்சி மூலம் கைப்பற்றுமாறு கூறி தூண்டிவிட்டு பின்பு தானே ஆபந்தவான் போல வேடமிட்டு அவர்களை கொன்றோழித்தது நாம் வாழும் அகி இம்சை நாடு..இதோ.. நாலாம் கட்ட ஈழபோர் முடிந்துவிட்டது..புலிகளை பழிதீர்த்தாகிவிட்டது.. ம்ம் இன்னும் இலங்கை வழிக்கு வருவதாக காணோம்..சீனா பக்கம் போகிறான் ..ஆயிற்று போவது நம்முயிரா?இல்லையே?endlfஎன்ற ஈழ அமைப்பிற்கு மீண்டும் ஆயுதமேந்த கொம்புசீவி விடுகிறார்கள் ..தூத்தேறி.. இதெல்லாம் ஒரு பொழப்பு..அவனவன் அவனவன் வேலைபார்த்தாலே போதும்..அடுத்தவன் விசயத்தில் தலையிடும் போதுதான் பிரச்சனை உருவாகிறது.. தமிழ்தேசியன்

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல பதிவு. பொதுவாக நான் திரைப்பட விமர்சன பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை. என்னை பொறுத்தவரை, திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம், அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அது பணம் பண்ணுவதற்காக எடுக்கப்பட்டது. இதில் லாஜிக் பார்ப்பது வீண்வேலை.

ARV Loshan சொன்னது…

நடுநிலையா ஆராய்ந்துள்ளீர்கள்..

உண்மை தான் கமல் ஒரு படைப்பாளி, ஓரளவு தேர்ந்த வியாபாரி(குணா, ஹே ராம் போன்றவற்றால் கையைச் சுட்டவர் தானே),நல்ல ரசிகர்..
அரசியல் வாதி இல்லை என மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்..

// சொல்லப் போனால் லஷ்கர் ஈ தொய்பா, அல்லும்மா போன்ற பெயர்களை படத்தில் நேரடியாகப் பயன்படுத்தி இருப்பதால் படத்தயாரிப்பாளரான கமல் தான் இந்தக் குழுக்களால் ஒரு வேளை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணி திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்க வேண்டும், மாறாக உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் துணிந்து மோடி முதல் தீவிரவாதக் குழுக்கள் பெயர்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அதைத் துணிவுள்ளோர்கள் அனைவரும் பாராட்டலாம். அதைவிடுத்து இஸ்லாமியர்களை கேவலப்படுத்திவிட்டார்கள், சங்கர்பரிவாரம், பார்பனக் கமல் இதெல்லாம் டூ........மச்.
//

அப்பிடிப் போடுங்கள் அண்ணாச்சி..

ஜெகதீசன் சொன்னது…

என் பின்னூட்டத்துக்கு எதாவது பதில் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்