பின்பற்றுபவர்கள்

19 செப்டம்பர், 2009

குடும்பப் படம் !

திரைப் படம் பார்த்தால் கட்டாயம் கருத்துரை எழுதியாகவே வேண்டும் என்கிற பதிவர் கடமை இருக்கிற படியால், உன்னைப் போல் ஒருவன் படம் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும்.

* 'தமிழகத்தில் பொதுவில் புகைப்பிடிக்கும் இளம் பெண்கள் இருக்கிறார்கள்' என்கிற மறைமுக இயல்பு கருத்தும் படத்தில் இருக்கிறது.

* படங்களில் இரு அதிரடிப் படை வீரர்கள் தவிர எவருக்கும் உடை மாற்றம் நடைபெறவில்லை.

* வேகமான காட்சி அமைப்பு என்றாலும் இரண்டாம் முறை பார்க்கும் போதும் அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. தசவதாரம் இரண்டாம் முறை பார்க்கும் போது விறுவிறுப்புக் குறையாமல் இருந்தது

* மோகன்லால் நடித்ததில் தமிழில் முதல் வெற்றிப்படமாக இது அமைந்திருக்கும், அவரது பிற தமிழ்படங்கள் (இருவர் மற்றும் சிறைச்சாலை) தோல்வியில் முடிந்ததால் நொந்து போய் தமிழ் படத்தில் இனி நடிப்பதில்லை என்கிற முடிவில் இருந்தவராம். இந்தப் படத்தில் இயல்பான நடிப்பை அள்ளி வழங்கினார்

* கமல் இடம் பெறும் காட்சிகள் குசேலனில் ரஜினி இடம் பெறுவதைவிடக் குறைவே. ஆனாலும் படத்தில் அது அப்பட்டமாக தெரியவில்லை. கதைப்படி பெரும்பாலும் கமல் காட்சிகள் முகக் கோணக் (க்ளோசோப்) காட்சியாக இருந்தது.

* படத்தில் சோழவரத்தில் தீவிரவாதிகளைக் கொண்டு வரவேண்டும், அங்கிருந்து நாங்கள் தப்பிக்கப் போகிறோம் என்று வெடிகுண்டுகளை எடுக்க நிபந்தனை விதிக்கும் போது கமலின் நோக்கம் திரைக் கதையின் முடிவும் தெரிந்தது. (முன்னனி ஹீரோவை வில்லனாகக் காட்ட முடியாதே)

* கமாண்டராக ஒரு புதுமுகம் (பேரு என்ன ?) நன்றாக செய்து இருந்தார்.

* கமல் படத்தில் கட்டாயம் இடம் பெறும் சந்தானபாரதி கைது செய்ப்பட்ட தீவிரவாதிகளில் இந்து தீவிரவாதியாக இதில் வருகிறார். வழக்கமாக கமல் படத்தில் வரும் நடிகர் நாகேஸ் முன்பே மறைந்ததால் அவர் படத்தில் இல்லை

* இசை ஸ்ருதிஹாசனின் முதல் படம் போல் காட்டிக் கொடுக்கவில்லை

* மிகக் குறைந்த பாத்திரங்களால் படம் ஆக்கப்பட்டு இருகிறது

* படத்தில் கமலின் ஊதியம் தவிர்த்து பெரிய செலவுகள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

* ஒரே ஒரு பின்னனி பாடல் தவிர்த்து படத்தில் பாடல் இல்லை

* மோகன்லால் மற்றும் லட்சுமியுடன் தொலைபேசியில் முதலமைச்சராக பேசும் காட்சிகளில் கருணாநிதி போன்ற ஒரு குரலை இணைத்திருந்தார்கள், அது நல்ல நகைச்சுவையாக இருந்தது

* கொஞ்சம் நீளமான உரையாடல்களாக இருந்தாலும் அலுப்பை ஏற்படுத்தவில்லை

* படத்தில் இருக்கும் ஒரே ஒரு துரத்தல் காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தது




மொத்தத்தில் ஆபாசக் காட்சிகள் எதுவுமே இல்லாத குடும்பப் படம். நான் குடும்பப் படம் என்று சொல்வதற்குக் காரணம், இந்தப் படத்தைக் காண நான்கு குடும்பங்களாகச் சென்றோம். விஜய் ஆனந்த் தம்பதிகள், நிஜமா நல்லவன் தம்பதிகள், ஜோதிபாரதி தம்பதிகள், கோவியார் தம்பதிகள் மற்றும் நிஜமா நல்லவரின் நண்பர் குடும்பத்தினர் என மொத்தம் 14 நுழைவு சீட்டுகள் மூலம் இந்தப் படத்தைக் கண்டு களித்தோம், ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சென்று பார்த்த இது குடும்பப் படம் தானே.
:)

26 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//வழக்கமாக கமல் படத்தில் வரும் நடிகர் நாகேஸ் முன்பே மறைந்ததால் அவர் படத்தில் இல்லை//

ஒரு புகைப்படம் கூடவா இல்லை தலைவரே..,

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

A wednesday மூலப்படத்தைப் பார்த்துவிட்டபடியால், இது சுகப்படுமா என்பது தெரியவில்லை. பொதுவாகவே, கமலுக்குப் படம் எடுக்கும் போது, சில கெட்ட விஷயங்கள் தொற்றிக்கொண்டுவிடும்.

ஆவனாழியை, கமல் சொந்தமாக கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று தமிழில் தயாரித்த போது சத்தியராஜையும், நளதமயந்தி எடுத்தபோது மாதவனையும் வைத்து எடுத்தமாதிரி, வேறு யாரையாவது, அது ஒரு புதுமுகமாகக் கூட இருந்திருக்கலாம், வைத்து எடுத்திருந்தால், இந்தக் கதை, சொல்லும் செய்தி இன்னமும் வீரியமாக உறைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது!

தன்னைப்பெரிய அறிவுஜீவியாகவே எப்போதும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறவர், படத்தில் தன்னை a stupid common man என்று வசனம் பேசுகிற கன்றாவியைக் கற்பனை செய்து பார்க்கக்கூட என்னால் முடியவில்லை!

திருமணநாள் முடிந்து மூன்று நாள் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படி ஒரு தண்டனையை ஏன் வலியப்போய் ஏற்றுக்கொண்டீர்கள்:-))

Unknown சொன்னது…

yr reviewing style is really remarkable. what a fantastic looks for you. u r a great man in this little world. only u can kick this world like a football. u r such a great personality. u can go to anandhavikatan instead of mr.madhan.congratulations. best of luck. betterluck next time. don,t worry be happy... i like it.

Cable சங்கர் சொன்னது…

/முகக் கோண//

பேசாமல்க்ளோஸ் அப் என்றே எழுதியிருக்கலாம்.. இல்லாவிட்டால் அருகாமை கோணம் என்று கூட எழுதியிருக்கலாம்


கிருஷ்ணமூர்த்தி தான் ஒரு அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ள கமல் பேசும் வசனத்தை உதாரணம் காட்டி பேசியது மிகக் கண்றாவியாக உள்ளது..

பீர் | Peer சொன்னது…

சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்க்கும் உங்கள் விமர்சனம் மகிழ்ச்சியளிக்கிறது. ;)

அப்பாவி முரு சொன்னது…

குடும்ப படமா?

படம் சுமார இருந்ததால அஞ்சு பெரும் தப்பிச்சீங்க, இல்ல ஆவ்வ்வ்வ் ..தான் ..

அப்பாவி முரு சொன்னது…

//Cable Sankar said...


கிருஷ்ணமூர்த்தி தான் ஒரு அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ள கமல் பேசும் வசனத்தை உதாரணம் காட்டி பேசியது மிகக் கண்றாவியாக உள்ளது..//



கண்ணா பின்னான ரிப்பீட்டு...






ஏன்னா, ஒரு தன்னை முழுசா தெரின்ச்ச புத்திசாலியாலதான், தன்னை ஒரு முட்டாள்ன்னு சொல்லிக்க முடியும்...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அதுக்குள்ள விமர்சனம் போட்டாச்சா!

அப்பவே நினைச்சேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தன்னைப்பெரிய அறிவுஜீவியாகவே எப்போதும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறவர், படத்தில் தன்னை a stupid common man என்று வசனம் பேசுகிற கன்றாவியைக் கற்பனை செய்து பார்க்கக்கூட என்னால் முடியவில்லை! //


தனிமனித அறிவு ஜீவித் தனத்திற்கும் கதாப்பாத்திரத்தின் இயல்பான நடிப்பிற்கும் தமிழர்களுக்கு வேறுபாடு தெரியாததால் தான் தமிழகம் இன்றளவும் நடிகர்களிடமும் வசனகர்த்தாக்களிடமும் அடிமைப் பட்டுக் கிடக்கிறது என்பதை கொஞ்சம் அறிந்து கொண்டால் நல்லது.

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

//தனிமனித அறிவு ஜீவித் தனத்திற்கும் கதாப்பாத்திரத்தின் இயல்பான நடிப்பிற்கும் தமிழர்களுக்கு வேறுபாடு தெரியாததால் தான் தமிழகம் இன்றளவும் நடிகர்களிடமும் வசனகர்த்தாக்களிடமும் அடிமைப் பட்டுக் கிடக்கிறது என்பதை கொஞ்சம் அறிந்து கொண்டால் நல்லது.//

:)
அன்புடன்
சிங்கை நாதன்

Singai Nathan

பீர் | Peer சொன்னது…

வாழ்த்துக்கள் சிங்கை நாதன்.

மிக்க மகிழ்ச்சி.

கோவி.கண்ணன் சொன்னது…

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//வழக்கமாக கமல் படத்தில் வரும் நடிகர் நாகேஸ் முன்பே மறைந்ததால் அவர் படத்தில் இல்லை//

ஒரு புகைப்படம் கூடவா இல்லை தலைவரே..,
//

படத்தில் கமல் மனைவி பாத்திரத்தின் குரல் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் நாகேசை எங்கே இடை நுழைப்பது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தன்னைப்பெரிய அறிவுஜீவியாகவே எப்போதும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறவர், படத்தில் தன்னை a stupid common man என்று வசனம் பேசுகிற கன்றாவியைக் கற்பனை செய்து பார்க்கக்கூட என்னால் முடியவில்லை! //

இறுதிக் காட்சியில் ஐஐடி மாணவனை வைத்து அவர் சாதாரண ஆள் இல்லை என்று சொல்லும் வசனம் இருக்கிறது
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//sundaravadivelu said...
yr reviewing style is really remarkable. what a fantastic looks for you. u r a great man in this little world. only u can kick this world like a football. u r such a great personality. u can go to anandhavikatan instead of mr.madhan.congratulations. best of luck. betterluck next time. don,t worry be happy... i like it.
//

நன்றி ! ஆனால் ரொம்ப டு மச்சாக இருக்கிறது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...
/முகக் கோண//

பேசாமல்க்ளோஸ் அப் என்றே எழுதியிருக்கலாம்.. இல்லாவிட்டால் அருகாமை கோணம் என்று கூட எழுதியிருக்கலாம்
//

கொஞ்சம் திணறித்தான் மொழிப் பெயர்த்தேன் சங்கர் சார். அருகாமைக் கோணம் அல்லது அருகாமைக் காட்சியாக என்பது க்ளோசப்புக்கு நன்றாக பொருந்தும்

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
சினிமாவை பொழுது போக்காக மட்டும் பார்க்கும் உங்கள் விமர்சனம் மகிழ்ச்சியளிக்கிறது. ;)
//

அது பொழுதுபோக்குப் படமாக மட்டும் இருந்தால் அப்படித்தான் விமர்சனம் செய்ய முடியும். நான் எழுதிய நாடோடிகள் பட விமர்சனம் படித்து இருந்தால் இப்படிச் சொல்ல மாட்டீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
குடும்ப படமா?

படம் சுமார இருந்ததால அஞ்சு பெரும் தப்பிச்சீங்க, இல்ல ஆவ்வ்வ்வ் ..தான் ..
//

:)

ஆபாசக்காட்சிகள் எதுவும் இல்லை. அதனால் அப்படிச் சொல்வதில் தவறுகள் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அதுக்குள்ள விமர்சனம் போட்டாச்சா!

அப்பவே நினைச்சேன்!
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//:)
அன்புடன்
சிங்கை நாதன்

Singai Nathan//

மருத்துவமனையில் உங்கள் பொழுது போக்கிற்கு, இங்கெல்லாம் எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது.
:)

மங்களூர் சிவா சொன்னது…

/
ஐந்து குடும்பங்கள் சேர்ந்து சென்று பார்த்த இது குடும்பப் படம் தானே.
/

wow nice!

அறிவிலி சொன்னது…

@கோவியார்
வித்தியாசமான விமர்சனம். அருமை.


@கிருஷ்ணமூர்த்தி

அறிவுஜீவிகள் சினிமாவிலும் அறிவுஜீவியாகத்தான் நடிக்க வேண்டுமா? அதற்கு பெயர் நடிப்பா?

படம் பார்த்தவரே நன்றாக இருப்பதாக சொல்லும் போது, நீங்கள் ஏன் அதை தண்டனையாக தீர்ப்பளிக்கிறீர்கள்.

சி தயாளன் சொன்னது…

ஏற்கனவே A wednesday ஹிந்தி மூல படம் பார்த்தாகி விட்டது. இன்று போகிறேன்..பார்ப்போம் என் எண்ணப் பிரதிப்பலிப்பு எப்படி இருக்கின்றது என்று :-)

Raju சொன்னது…

\\* படத்தில் கமலின் ஊதியம் தவிர்த்து பெரிய செலவுகள் ஏற்பட்டது போல் தெரியவில்லை.\\

நீங்க எப்பிடிண்ணே, உங்களுக்கு நீங்களே சம்பளம் குடுத்துக்குவீங்களா...?
உங்க கம்பெனியில..?
:-)

samundi சொன்னது…

இப்படம் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html

samundi சொன்னது…

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

கோவி.கண்ணன் சொன்னது…

//samundi said...
இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html
//

தயவு செய்து இதுபோன்ற பொய் பரப்புரைகளை நிறுத்துங்கள். இறந்து போன ஒருவரை களங்கப்படுத்தாதீர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்