என்னப் பதிவு எழுதுவது என்று யோசனையில் இருப்பவர்களுக்கு பொதுவாக இந்த தொடர் பதிவு விளையாட்டுகள் கைக் கொடுக்கும் என்பதால் வரவேற்கிறேன்.
நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியனும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !
1. A – Available/Single? Not Available & Not Single (இதெல்லாம் 10 ஆண்டுக்கு முன்னால கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் Not இல்லாமல் சொல்லி இருப்பேன்.
2. B – Best friend? : இன்னும் கிடைக்கல (எதை வைத்து தீர்மானம் செய்வது ?)
3. C – Cake or Pie?: முட்டை இல்லாத கேக். ( இல்லை என்றால் ஆப்பிள் Pie)
4. D – Drink of choice? : சூடான காய்கறிச் சாறு (Soup)
5. E – Essential item you use every day? : MP3.
6. F – Favorite color? : வானவில் நிறங்கள் அனைத்தும். (நிற பேதம் பார்பது இல்லை)
7. G – Gummy Bears Or Worms?: இதுவா ? இதுவா ? மாட்டுக் கொழுப்பு சேர்த்திருக்கும், அதனால் சுவைத்துப் பார்த்தது இல்லை
8. H – Hometown? - கத்தும் கடல்கரை சார்(ந்த) நற்திரு நாகை (நாகப்பட்டினம்)
9. I – Indulgence? - பயணம் செய்வது.
10. J – January or February? February ( 28 நாளுக்கு ஊதியம் கொடுத்துவிடுவார்கள்)
11. K – Kids & their names? ஒண்ணே ஒண்ணு....பெண்ணே பெண்ணு..... கொஞ்சம் நீளமாக... 'இசை'வான பெயர்
12. L – Life is incomplete without? - Wife மற்றும் நெருங்கிய சுற்றம், வட்டம் (நட்புகள், உறவுகள்)
13. M – Marriage date? 16 செப் 1999. (இன்னிக்குத் தான்)
14. N – Number of siblings? 6 - ஒரு அக்கா, ஒரு தங்கை, ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள் (குறையில்லாம எல்லாவற்றிலும் குறைந்தது ஒண்ணு ஒண்ணு இப்படி எனக்கும் எங்க அம்மாவுக்கும், என்னோட முதல் தம்பிக்கும் தான் கிடைத்து)
15. O – Oranges or Apples? நாக்கில் வைத்தால் சுர்....சிட்ரிக் ஆசிட் மிகுதியாக உள்ள ஆரஞ்சு.
16. P – Phobias/Fears? Phobias இல்லை, உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்தால் கொஞ்சம் அச்சமாக இருக்கும். தரை நழுவது போல் இருக்கும், என்நேரமும் விழுந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கும். கைப்பிடிகளை இறுக்கி பிடித்துக் கொள்வேன். (அதற்காக விமான பயணத்தின் சாளர இருக்கை கிடைத்தால் உட்காரமாட்டேன் என்பது அல்ல, அதற்கெல்லாம் அச்சப்பட மாட்டேன்)
17. Q – Quote for today? : "எந்த ஒரு திட்டமிடும் செயலின் துவக்கம் என்பது அச்செயலை நோக்கிய முதல் படி, அப்'படி' அடி எடுத்து வைக்கவில்லை என்றால் அந்த செயல் வடிவம் பெறாதா பகல் கனவு"
18. R – Reason to smile? : நாம யாருக்கேனும் செய்த நல்லதை நினைத்து தனிமையில் மனமகிழலாம்
19. S – Season? இலைத்துளிர் காலம்
20. T – Tag 4 People? டிவி.இராதகிருஷ்ணன், வெ.இராதகிருஷ்ணன், கிருஷ்ண மூர்த்தி, சீனா (பெரியோரைப் போற்றுதும்)
21. U – Unknown fact about me? யாருமே பகைவர்கள் அல்ல என்று நினைப்பது ( நமக்கு தெரிந்தவர்கள் நமக்கு எதிர்யாக இருக்க முடியாது, நமக்கு தெரியாதவங்க நம் எதிரியும் அல்ல)
22. V – Vegetable you don't like? பச்சைப் பாகற்காய் (சமைத்தால் சாப்பிடுவேன்)
23. W – Worst habit? என்னை யாரும் தவறாக நினைக்கக் கூடாது என்கிற உயர்வு மனப்பான்மை
24. X – X-rays you've had? 5 ஆண்டுக்கு முன் பொதுப் பரிசோதனைக்காக மார்பு X-rays
25. Y – Your favorite food? பாசுமதி அரி சோறு அதை பிசைந்து உண்ண உருளை கிழங்கு, பட்டானி மற்றும் சோயா பைட் சேர்த்த கூடுதல் காரத்துடன் குருமா
26. Z – Zodiac sign? ஜெமினி...ஜெமினி
அன்புக்குரியவர்கள்: குலுக்க வரும், இணைந்து கொள்ளும் கைகள்
ஆசைக்குரியவர்: மொறுகலாக தோசை சுட்டுத் தருபவர்கள்
இலவசமாய் கிடைப்பது: சுவாசக் காற்று
ஈதலில் சிறந்தது: வலது கை அறியாத கொடை
உலகத்தில் பயப்படுவது: கடைசி காடுகளின் அமைதி
ஊமை கண்ட கனவு: பேசுபவர்களின் மோசமான பகல் கனவு
எப்போதும் உடனிருப்பது: கொஞ்சம் இனிப்பு
ஏன் இந்த பதிவு: தம்பி ஸ்டார்ஜன் கூப்பிட்டாக மற்றும் நம் பதிவு உறவினர்களெல்லாம் கூப்பிட்டாக
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிறருக்குத் தரக் கூடிய அறிவு
ஒரு ரகசியம்: தண்ணி அடிக்காதவங்க மட்டும் தனியாக வந்து கேளுங்க
ஓசையில் பிடித்தது: தொலைவின் இடிமுழக்கம்
ஔவை மொழி ஒன்று: ஆறுவது சினம்
(அ)ஃறிணையில் பிடித்தது: சின்ன வயசில் சுறுக்கு போட்டு ஓணான் பிடிச்சிருக்கேன் :)
பின்பற்றுபவர்கள்
16 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
29 கருத்துகள்:
திருமணநாள் நல்வாழ்த்துகள் கோவியாரே.
பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது, ரசிக்கும்படியாகவும் இருந்தது.
இடற் புதிய வார்த்தையாக இருக்கிறது.
இடர்?
'யாரும் தவறாக நினைக்கக்கூடாது எனும் உயர்வு மனப்பான்மை'. மிகவும் சிறப்பு.
இப்பதிவைத் தொடர அழைத்திருப்பது குறித்து நன்றி.
இதோ தொடர்கிறேன்.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
திருமணநாள் நல்வாழ்த்துகள் கோவியாரே.
பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது, ரசிக்கும்படியாகவும் இருந்தது.
இடற் புதிய வார்த்தையாக இருக்கிறது.
இடர்?
//
இடர் தான் சரி என்று நினைக்கிறேன். கூகுளில் தேடினால் இரண்டுமே கிடைக்கிறது.
//'யாரும் தவறாக நினைக்கக்கூடாது எனும் உயர்வு மனப்பான்மை'. மிகவும் சிறப்பு.//
இதுல என்ன சங்கடம் என்றால் நம்மை நிரூபிக்க ரொம்ப முயற்சி செய்வோம், அது தேவையற்றது தான்.
//இப்பதிவைத் தொடர அழைத்திருப்பது குறித்து நன்றி.
இதோ தொடர்கிறேன்.//
தொடர்வதற்கு மிக்க நன்றி ஐயா.
திருமண நாள் வாழ்த்துகள் கோவியார்!
Have a beautiful and nice wedding day
திருமண நாள் வாழ்த்துகள்
T.V.Radhakrishnan and
Kanchana Radhakrishnan
\\M – Marriage date? 16 செப் 1999. (இன்னிக்குத் தான்)\\
வாழ்த்தினை இடுகையாகவே நான் இட்டுவிட்டாலும் இங்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதே தனி மகிழ்ச்சி
\\ஆசைக்குரியவர்: மொறுகலாக தோசை சுட்டுத் தருபவர்கள்\\
பல பொருள் தருதே :)))
பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
திருமணநாள் நல்வாழ்த்துகள் கோவியாரே.
Wishes again for ur wedding day.
//24. X – X-rays you've had?// For me just today :)
don't scold me :) ok i go back and take rest.
அன்புடன்
சிங்கை நாதன்
திருமண நாள் வாழ்த்துகள் தல!
திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா.
மனங்கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள் கோவி.
சூப்பர் அண்ணே , கலக்கல் பதில்கள் ,
உங்க கல்யாண நாள் வாழ்த்துக்கள்
திருமணநாள் வாழ்த்துக்கள் கோவியரே
வாழ்த்துக்கள் கோவியாரே!
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
திருமண நாள் வாழ்த்துகள் கோவியார்!
//
சுந்தர் மிக்க நன்றி !
// அக்னி பார்வை said...
Have a beautiful and nice wedding day
//
மிக்க நன்றி சார்.
//kanchana Radhakrishnan said...
திருமண நாள் வாழ்த்துகள்
T.V.Radhakrishnan and
Kanchana Radhakrishnan
//
வாழ்த்திய தங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
/நிகழ்காலத்தில்... said...
\\M – Marriage date? 16 செப் 1999. (இன்னிக்குத் தான்)\\
வாழ்த்தினை இடுகையாகவே நான் இட்டுவிட்டாலும் இங்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதே தனி மகிழ்ச்சி
\\ஆசைக்குரியவர்: மொறுகலாக தோசை சுட்டுத் தருபவர்கள்\\
பல பொருள் தருதே :)))
//
மிக்க நன்றி சிவா.
//நாடோடி இலக்கியன் said...
பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
திருமணநாள் நல்வாழ்த்துகள் கோவியாரே.
//
நாடோடி இலக்கியன் மிக்க நன்றி !
//singainathan said...
Wishes again for ur wedding day.
//24. X – X-rays you've had?// For me just today :)
don't scold me :) ok i go back and take rest.
அன்புடன்
சிங்கை நாதன்
//
சிங்கை நாதன்,
உங்கள் வாழ்த்து மிக்க மகிழ்ச்சி அளிக்க்கிறது. விரைவில் வெளியே வந்து உங்களது மருத்துவ சிகிச்சை அனுபவங்களைத் தொடராக எழுதி அனைவருக்கும் பயனளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
//வால்பையன் said...
திருமண நாள் வாழ்த்துகள் தல!
//
நன்றி வால்
//நட்புடன் ஜமால் said...
திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா.
//
நன்றி ஜமால். நேற்று அலைபேசியில் அழைத்தும் வாழ்த்துச் சொல்லியதற்கு நன்றி !
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
மனங்கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள் கோவி.
//
நன்றி ஐயா.
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சூப்பர் அண்ணே , கலக்கல் பதில்கள் ,
உங்க கல்யாண நாள் வாழ்த்துக்கள்
//
நன்றி தம்பி !
//சுவனப்பிரியன் said...
வாழ்த்துக்கள் கோவியாரே!
//
நன்றி சார். நலமாக இருக்கிறீர்களா ?
நோன்பு திருநாள் வாழ்த்துகள் !
//Logan said...
திருமணநாள் வாழ்த்துக்கள் கோவியரே
//
நன்றி லோகன்
திருமணநாள் வாழ்த்துக்கள் !!!
//
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: பிறருக்குத் தரக் கூடிய அறிவு
ஒரு ரகசியம்: தண்ணி அடிக்காதவங்க மட்டும் தனியாக வந்து கேளுங்க
//.
நல்ல பதிவு. பிறர்க்கு தரும் அறிவு எப்பொழுதும் தருவது அல்ல வளர்த்துக்கொள்வது. அள்ளினால் குறைவது செல்வம், அள்ள அள்ளக் குறையாது கல்வி மற்றும் அறிவு. நாம் எவ்வளவு அள்ளிக்கொடுக்கிறேமோ அவ்வளவு வளரும் அறிவு.
அந்த ரகசியம் என்ன என்பதை தண்ணியடித்து விட்டு எனக்கு மட்டும் சொல்லிவிடுங்கள்.
மலரும் மணமும் போல, நகமும் சதையும் போல, நிலவும் வானும் போல, நீங்களும் தங்கள் துனைவியாரும் அன்றில் பறவைகள் போல் வாழ வாழ்த்துக்கள்.
டிஸ்கி::::.
நானும் சரக்கும் போல, கோ.வி. கண்ணனும் பார்ப்பன எதிப்பும் போல அப்படினு ஸேர்த்துகொங்க
கருத்துரையிடுக