பின்பற்றுபவர்கள்

11 செப்டம்பர், 2009

நன்றி மறக்கும் தமிழன் !

ஒரு நிகழ்வு பற்றி ஊடகப் பார்வை, சமூகப் பார்வை, தனிமனிதப் பார்வைன்னு நிறைய இருக்கிறது. ஒரு இடத்தில் கொலை நடந்தால் ஊடகம் அதை ஒரு செய்தித்தகவலாக தொடர்புடையவர்களைப் பற்றி எழுதும், அதைப் படிப்பவர்கள் சம்பவம் என்ற அளவில் உணர்ச்சி காட்டாது படிப்பார்கள், அந்த கொலையை நேரில் பார்த்தவர்களின் உணர்வுகள் வேறு மாதிரியானவை. ஆனால் நிகழ்வு ஒன்று தான்.

முன்பெல்லாம் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவணித்துக் கேட்பது வழக்கம், பேச்சு என்பது ஒரு தகவல் பரிமாற்றம் என்ற அளவில் பேச்சுகள் புரிந்து கொள்வதுண்டு. அண்மையில் சென்னை சென்றிருந்த போது வெறும் தகவலாக பேச்சுக்களை கவணிக்க முடியவில்லை, அதைத் தவிர்த்து எத்தனை ஆங்கிலச் சொற்களை பேசும் போது பயன்படுத்துகிறார்கள் என்றும் கவனித்தேன். மூன்றாம் நபர் என்றால் உடை, வயது, பதவி இவைகள் தொடபில் 'சார்' என்ற சொல் மிகுதியாக பயன்படுத்துகிறார்கள். எவருமே முடிக்கும் போது 'தாங்க்ஸ், தாங்க்யூ' என்றே சொல்லி முடிக்கிறார்கள்.

மொழியைக் கலந்து பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைக்கிறார்கள், நாகரீகம் என்று நினைக்கிறார்கள் என்பதாக புரியவில்லை, ஆனால் அவை இயல்பாகவே கலந்துவிட்டது போல் தெரிகிறது. சார் என்று அழைப்பது மிகவும் மதிப்புக் கொடுக்கக் கூடியது என்று நினைக்கிறார்கள், அலுவலங்களில் பெயருடன் சேர்த்து சார் என்று அழைக்கும் ஒலி எப்போதும் கேட்கிறது, சிலர் பதவியின் பொருட்டு பெயரையும் சொல்லத் தயங்குகிறார்கள். தொழிலுக்காக, வேலைவாய்ப்பு, கல்விக்காக ஆங்கிலம் கற்றோம், அலுவலில் பயன்படுத்துகிறோம் சரி, ஆனால் இயல்பான பேச்சு வழக்கையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கான தேவை தான் என்ன ?

'யூஸ் பண்ணுங்க', யூஸ் பண்ணிக் கொள்கிறேன்' என்பதற்கு பதிலாக பயன்படுத்துங்கள், பயன்படுத்திக் கொள்ளுங்கள், பயன்படுத்திக் கொள்கிறேன் என்று நான் பேசினால் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், நான் தான் இயல்புக்கு மாறாக பேசுகிறேன் என்பது போல் எனக்கு புரிந்தது. யார் வாயிலும் பயன் என்ற சொல்லே வரவில்லை. தாங்க்ஸ் சார், தாங்க்ஸ் சார் என ஒரு அந்நிய மொழி அன்றாடப் பயன்பாடாகப் போனதைப் கேட்கும் போதும் வியப்பாகவே இருக்கிறது.


அழகாக அப்பா அம்மா என்று அழைப்பதை விடுத்து மம்மி, டாடி ன்னு எங்கள் உறவினர்கள் அவர்கள் இல்லத்தில் அவர்களுக்குள் அழைப்பதை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. அவர்களைப் பார்த்து நாமெல்லாம் எப்போது வெள்ளைக்காரனானோம் ? என்று கேட்கத் தோன்றும், அங்கெல்லாம் வழியுறுத்தல் செய்ய முடியாது, ஆனால் பொதுக்கருத்தாக ஊடகங்களில் எழுதும் போது அது சிலரையாவது சென்று அடையும் என்ற நம்பிக்கை கொண்டு பரிந்துரைக்கலாம்.

இன்றைய தேதியில் தமிழில் ஆங்கிலக் கலப்பு மிகுதியாக ஏற்பட்டுக் கொண்டுவருவதற்கு தொலைக்காட்சிகளில் மக்கள் நேரடியாக அழைத்துப் பாடல் கேட்கும் நிகழ்சிகள், திரையுலகினரின் நேர்முகம் ஆகியவை. பாடல் நிகழ்ச்சி நடத்தும் இளைஞர்களுக்கு மொழிப் பற்று பற்றி சிறிதும் கவலை இன்றி சரளமாக ஆங்கிலம் கலந்த தமிழைப் பேசுகிறார்கள். இது தான் இன்றைய நாகரீகம் என்பது போல் நிகழ்ச்சி கேட்கும் அனைவருமே அதனை பின்பற்றி விடுகிறார்கள்.

தவிர்க்க முடியாத இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தலாம், ஆனால் இயல்பான பேச்சுகளின் போதும் 50 விழுக்காடு வரை ஆங்கிலம் கலந்து பேசுவது மொழிச் சிதைவையும், சுவையான சொற்களையும் மொழி வழக்கில் இருந்து மறையச் செய்துவிடும். சிங்கையில் பல நண்பர்களை அழைக்கும் போது அவர்கள் 'வணக்கம்' என்று சொல்லியே தொடங்குவார்கள், அது போன்று தமிழகத்திலும் 'ஹலோ' விற்கு பதில் பயன்படுத்தலாம், பேச்சு முடிவின் போது தாங்க்ஸ்க்கு பதிலாக நன்றி என்று சொல்லலாம். நன்றி என்ற சொல்லை நாயுடன் தொடர்பு படுத்துவிட்டதால் அதைச் சொல்லும் போது நம்மை நாயாக நினைத்துக் கொள்கிறோமா என்னவோ, சார் - க்கு பதிலான ஐயா வோ, தாங்க்ஸ் - க்கு பதிலான நன்றியோ தரக் குறைவான சொல்லும் அல்ல. பேசும் போது ஆங்கில்ச் சொற்களைக் குறைத்துக் கொண்டு பேச சிறுது கவனம் எடுத்தால் பிறகு ஆங்கில சொற்கள் இன்றி தமிழர்களிடம் பேசுவது இயல்பாகவே ஆகிவிடும்.

தொடக்கத்தில் கேட்பவர்கள் வியப்புடன் மாறுபட்டு பார்ப்பார்கள். பிறகு பிறரிடம் குறிப்பிட்டுச் சொல்லும் போது நாம் தமிழுக்கு முதன்மைத்துவம் கொடுப்பதை குறிப்பிட்டு பாராட்டுவார்கள். தாங்கஸ் மறந்து நன்றியை பயன்படுத்துவோம்.

மிக்க நன்றி !

22 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

நன்றி

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

சீர் வளர் சீர் சிங்கை ஆதீனகர்த்தா கோவி.கண்ணனுக்கு நன்றிகள் :))

கவனிக்கவும் சார் சொல்ல வில்லை :).


சார் என்பது அமெரிக்க, ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தங்களை அடிமைகள் கூப்பிட உருவாக்கபட்டது. அது அனேகருக்கு தெரியாமல் சாரம் புரியாமல் சாரில் தொங்குகிறார்கள்.

அமெரிக்கர் ஒருவரை சார் என கூப்பிட்டால் (அவர் மனிதத்தை மதிப்பவராக இருந்தால்) கூனிகுறுகிவிடுவார்.

ஹல்லோ மிஸ்டர் ஒபமா என்றால் மரியாதை.. ஒபமா சார் என்றால் அவமரியாதை..!

சதங்கா (Sathanga) சொன்னது…

நல்ல சிந்தனைப் பதிவு.

Unknown சொன்னது…

சார் சூப்பரா சொல்லீருக்கீங்க...

தாங்க்ஸ் சாரே. :D :P

SurveySan சொன்னது…

good one :)

நையாண்டி நைனா சொன்னது…

உள்ளேன் ஐயா....

குப்பன்.யாஹூ சொன்னது…

தமிழ் மொழி மேல உள்ள பற்று பாராட்டுக்கு உரியது.

ஆனால் இன்றைய சென்னையில் ஆங்கில நிறுவனங்களே வேலை வாய்ப்புக்கள் அளிக்கின்றன (IT, ITES, BPO). எனவே இல்லத்தில், நண்பர்களிடத்தில் பேசி பழகும் ஆங்கில புலமை அலுவலகத்தில் உதவியாக இருக்கிறது.

இன்றைய ஆங்கில நிறுவனங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை தீர்மானிப்பதில் ஆங்கில புலமை பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ் புலமை எங்கள்ளுக்கு வேலையும், சம்பளமும் தந்தால் நாங்களும் தமிழில் உரையாட தயாராகத் தான் உள்ளோம்.

என்ன செய்ய மேன்புருள், அவுத்சௌர்சிங் துறையில் தான் அதிக சம்பளம் வழங்குகிறார்கள், வாரத்திற்கு இரண்டு நாள் விடுப்பு, எனவே எங்கள் மனம் அந்த துறையை தான் தேடி போகிறது.

தமிழ் MOZI, தமிழ் பற்று எல்லாம் பொழுது போக இணையதளம், வலைபதிவு க்கு மட்டும் தான் boss.

IN Chennai and Metros we call office college with their first name, i wonder where u heard sir.

காலப் பறவை சொன்னது…

@ராம்ஜி.யாஹூ

//தமிழ் புலமை எங்கள்ளுக்கு வேலையும், சம்பளமும் தந்தால் நாங்களும் தமிழில் உரையாட தயாராகத் தான் உள்ளோம்

எவளவு முட்டாள் தனமான கருத்தை கூறி இருகிறீர்கள்!!!

அலுவலகத்தில் நம் இருப்பது ஒரு வாரத்தில் 40-45 மணி நேரமே.

எஞ்சிய நேரம் அனைத்தும் நாம் இந்த சமுதாயத்தை சார்ந்தே இருக்கிறோம்... அலுவலகத்தில் ஆங்கிலம் பேசுவதால் வீட்டிலும் ஆங்கிலம் பேசுவேன் எனபது அடி முட்டாள் தனம்.

//இன்றைய ஆங்கில நிறுவனங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை தீர்மானிப்பதில் ஆங்கில புலமை பெரும் பங்கு வகிக்கிறது.

ஓரளவுக்கு உண்மை ஆயினும் அதிக சம்பளம் தந்தால் தான் தமிழில் பேசுவோம் என்று கூறுவது அபத்தம்.

காலப் பறவை சொன்னது…

நன்றி மறக்கும் தமிழன்

நல்ல பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

//காலப் பறவை said...
@ராம்ஜி.யாஹூ

//தமிழ் புலமை எங்கள்ளுக்கு வேலையும், சம்பளமும் தந்தால் நாங்களும் தமிழில் உரையாட தயாராகத் தான் உள்ளோம்

எவளவு முட்டாள் தனமான கருத்தை கூறி இருகிறீர்கள்!!!
//

காலப் பறவை,

உங்கள் கருத்தைச் சொல்லும் போது அடுத்தவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அவரவர் அனுபவத்தின் மூலம் கருத்து சொல்கிறார்கள் என்பதைத் தவிர ஆராய்ச்சி செய்ய ஒன்றும் இல்லை.

இங்கு பின்னூட்டமிட்ட ராம்ஜி.யாஹூ என்பரின் கருத்தை 'முட்டாள் தனம்' என்று குறித்து இருப்பதை நான் வரவேற்கவில்லை. சிலர் அறியாமையில் கூட அவ்வாறு செய்யலாம், அறியாமையும் முட்டாள் தனமும் ஒன்று அல்ல, அன்பு கூர்ந்து பிறரை புண்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள், அதில் எனக்கு உடன்பாடு இல்லை, மற்ற கருத்துகளெல்லாம் பிறகே, முதலில் தன்மையாக பேசினால் தான் நமது கருத்துக்களை பரிந்துரைக்க முடியும்,

ராம்ஜி.யாஹூ பின்னூட்டம் தட்டச்ச ஒரு 5 நிமிடமாவது செலவு செய்தது உங்களிடம் முட்டாள் பட்டம் வாங்குவதற்கா ?
:(

காலப் பறவை சொன்னது…

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். எனது பின்னூட்டம் யாரையாவது புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

குப்பன்.யாஹூ சொன்னது…

காலப்பறவை உங்களின் பின்னோட்டம் கண்டு கோபம் எல்லாம் வர வில்லை.நானும் உங்கள் அளவும் கோவி கண்ணன் அளவும் தமிழ் மீது பற்று காதல் கொண்டவன் தான்.

ஆனால் இன்றைய எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு முதல் தேவை உணவு உடை இருப்பிடம். அது பணம் மூலமே கிடைக்கும். அந்த பணம் வேலை அல்லது வியாபாரம் மூலமே கிடைக்கும், அடிப்படை தேவைக்கு பிறகுதான் இலக்கியம், மொழி என்பது எல்லாம்.

நான் சென்னை நகரத்து நிலைமயை சொல்கிறேன், மற்ற நகரங்கள் பரிச்சயம் இல்லை, ஆங்கிலப் புலமை இல்லாது வேலை கிடைப்பது, நேர் முகத் தேர்வில் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம்.

எனவே இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க ஆங்கிலம் தேவை, நாம் விரும்புகிறோமோ வெறுக்கிறமோ அதுதான் எஅதார்தம்.

கபிலன் சொன்னது…

மிகவும் தெளிவான அருமையான பதிவு. தங்களின் தமிழ் பற்றிற்கு பாராட்டுக்கள்.

உண்மைதான், தூய தமிழ் சொற்களை பயன்படுத்தும்போது நம்மை வேறுவிதமாகத் தான் பார்க்கிறார்கள். ஆங்கிலம் பேசுவது தான் மதிப்பு என்ற நிலை இப்பொழுது மாறி வருகிறது.

ஆனால் ஒன்று, மொழி என்பது புது சொற்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு வளர வேண்டும். உதாரணமாக ஆங்கிலம். வேற்று மொழிச் சொல்லைப் பயன்படுத்தமாட்டேன் என்று ஆங்கிலம் சொல்லுவதில்லை. உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் உருவாகும் புதுப் புதுச் சொற்களை தன்னகத்தே சேர்த்துக்கொள்வதால் நன்றாக வளர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. தமிழ் இதற்கு சம்மதிக்குமா?

Jawahar சொன்னது…

கண்ணன்ஜி,

முதற்கண் சிறப்பானதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள். இந்தத் தலைப்பில் இரண்டொரு விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன்.

ஆங்கிலக் கலப்படமின்றி பேசுவது வரவேற்கத் தக்கதே. ஆனால் அதற்காக பென்சில் என்பதை கரிக்குச்சி, காபி என்பதை குளம்பி என்றெல்லாம் மொழி மாற்றம் செய்கிற மட்டத்துக்குப் போய் விடக் கூடாது. தானியங்கி வாகனம் என்று ஆட்டோவையும், தொடர்வண்டி என்று டிரயினையும் மொழி மாற்றம் செய்வது இலக்கணப்படி சரி என்றாலும் ஏதோ இடிக்கிறது.

புழக்கத்தில் இருக்கிற சொற்களை அப்படியே விட்டுவிடலாம். பிற மொழிச் சொற்களை ஏற்கிற மொழிகள் நெடுங்காலம் இருக்கும்.

நீங்கள் சொன்ன யூஸ் பண்றது....தேங்க்ஸ், ப்ளீஸ் இதையெல்லாம் நிச்சயம் மாற்றத்தான் வேண்டும்.

இன்னொரு விஷயம்.

ஐயா என்பது தமிழை சரியாகத் தெரிந்தவர்களுக்கு மரியாதைச் சொல். சென்னைத் தமிழில் ஐயா என்பது மரியாதைக் குறைவான சொல். என்னய்யா என்றால் முறைப்பார்கள். என்னப்பா அல்லது என்னம்மா என்றால் குழைவார்கள்.

அது போகட்டும்,

காண்டு, கல்லீஜ், பேஜார், அசால்ட்டு, டாவு உள்ளிட்ட பல சொற்கள் தமிழ் என்கிற ஜோதியில் ஐக்யமாகி நெடுங்காலமாகிறது. தொல்காப்பியர் திரும்பிப் பிறந்தால் கூட அகராதியை அப்டேட் செய்வாரே ஒழிய அவரால் இந்த வழக்கத்தை மாற்ற முடியாது.

http://kgjawarlal.wordpress.com

துபாய் ராஜா சொன்னது…

நன்றி. வணக்கம்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// அழகாக அப்பா அம்மா என்று அழைப்பதை விடுத்து மம்மி, டாடி ன்னு //

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே... பல இல்லங்களில் தாய், தந்தையரை மம்மி, டாடி என்று அழைப்பதைப் பார்க்கின்றேன். அதை பெருமயாக நினைக்கும் பெற்றோரையும் பார்க்கின்றேன்.

நான் கூடியவரை நம் தமிழ் அன்பர்களைப் பார்க்கும் போதோ, பேசும் போதோ, மின்னாடல் செய்யும் போதோ வணக்கம் நண்பரே என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

நீங்க கூறியது மாதிரி, தமிழ் மிகவும் வழக்கொழிந்துக் கொண்டுதான் இருக்கின்றது.

இதில் மேலும் ஒரு விசயம், தமிழும் கொலை செய்யப் படுகின்றது கூடவே ஆங்கிலமும் கொலைச் செய்யப் படுகின்றது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நன்றி கோவி

suvanappiriyan சொன்னது…

Azhakiya Pathivu. Valtthukkal.

மங்களூர் சிவா சொன்னது…

/
அங்கெல்லாம் வழியுறுத்தல் செய்ய முடியாது,
/

என்ன கொடுமை இது வலியுறுத்துங்க, வழியுறுத்தாதீங்க.

Karthik சொன்னது…

உண்மையிலேயே நல்ல பதிவு. இப்பொழுது ஐயா என்று சொல்ல முடியாதது போலவே இன்னும் கொஞ்ச நாள்களில் பல சொற்களை ஆங்கிலம் ரீப்ளேஸ் (சுத்தம்!) பண்ணிவிடக்கூடும். :( :(

என்னுடைய கடைசி பதிவை தயவுசெய்து பார்த்துவிட வேண்டாம்.

Lee சொன்னது…

தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருந்தன.சிற்சில இடங்களில் பிழைகள் இருப்பதாக எமக்குத் தோன்றியதால் அவற்றை சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்திற்கும் நன்றி

கல்வெட்டு சொன்னது…

//அமெரிக்கர் ஒருவரை சார் என கூப்பிட்டால் (அவர் மனிதத்தை மதிப்பவராக இருந்தால்) கூனிகுறுகிவிடுவார்.//

இது உண்மையல்ல ஓம்கார்.

"சார்" , "மிஸ்டர்" எங்கே எப்படி பயன்படுகிறது என்பதைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும்.

"மிஸ்டர் பிரசிடென்ட்" --- சரி .அப்படி ஆரம்பித்து (விளித்து) பிரசிடென்டிடம் பேச அரம்பித்தபின் , பிரசிடென்ட் கேட்கும் ஒரு கேள்விக்கு நீங்கள் "யெஸ் மிஸ்டர்" என்று சொல்லிவிட்டால் அது அவமரியாதை.

அதையே "யெஸ் சார்" என்று சொன்னால் சரியான விளிப்பு.

**
நீங்கள் வரிசயில் நிற்கும்போது முன்னால் நிற்பவர் உங்கள் காலை இரண்டாவது முறை கவனக்குறைவில் மிதித்துவிட்டார். அப்போது "எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர்" என்று உங்கள் கோபத்தை வார்த்தையில் கொண்டுவரலாம்.

அங்கே "எக்ஸ்கியூஸ்மீ சார்" என்றால் காரம் குறைந்து போகும்.

**
நீங்கள் வரிசயில் நிற்கும்போது முன்னால் நிற்பவரிடம் இருந்து பேனா கடன் வாங்கவேண்டும். அப்போது "எக்ஸ்கியூஸ்மீ மிஸ்டர்" என்று கேட்பது சரியல்ல.

அங்கே "எக்ஸ்கியூஸ்மீ சார்" பேனா ப்ளீஸ் என்று கேட்கலாம்.
***

மிஸ்டர்,மிஸ்,மிசஸ்,சார்,மேடம்,ஸ்வீட்டி,ஹனி,டார்லிங்,வெஜினா,பிரஸ்ட்..எந்த வார்த்தையும் தவறான வார்த்தைகள் அல்ல. அது எங்கே எப்படி பயனாகிறது என்பதில்தான் எல்லாம் உள்ளது.

இடம்,சூழல்,காலம்,பயன்பாடு போன்ற எண்ணற்ற காரணிகள் ஒரே வார்த்தையை பலவாறு அர்த்தப்படுத்தும்.

****************

"மை டாடி அன்ட் மம்மி கோஸ் டூ வொர்க்" என்று ஒரு தமிழ் பின்னனியுள்ள குழந்தை அதன் ஆங்கிலப்பாடத்தில் எழுதினால் மிகச் சரி.

அதே குழந்தை, தனது தாத்தவிடம் பேசும்போது சொன்னால், குடும்பத்தில் தமிழ் பேச்சுவழக்கு குறைந்துவிட்டது என்பது உண்மை.

இது அறியாமையா? முட்டாள்தனமா? மொள்ளமாரித்தனமா? கூமுட்டைத்தனமா என்பது அவரவர் சிந்திக்க வேண்டியது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்