"எழுத்தின் மூலம் நாம புகழ்பெற வேண்டும் என்று நினைப்பதைவிட அதன் மூலம் நம் தமிழ் சமூகத்துக்கு எதாவது செய்யனும்...அதுதான் நம் எழுத்தின் பயன், என்னால் எழுத முடியா விட்டாலும் எழுதும் நண்பர்களை பாராட்டுகிறேன்...எல்லோருமே எழுதனும் என்று நினைத்தால் எழுதுவதையெல்லாம் படிக்கிறது யாரு...அதைத் தான் நான் செய்கிறேன்' என்று அறிவுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் குறிப்பிடுவார்.
அல்வாக்களில் என்ன என்ன வகை இருக்கிறதோ ஒவ்வொன்றாக ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும் எடுத்துவருவார். யாரையும் மனம் புண்படும் வகையில் பேசியதே கிடையாது. சிங்கை அங்க்மோகியூவில் சற்று உயரமான சமவெளியில் பதிவர் சந்திப்பு வைத்த போது, மேலே ஏறிச் செல்லத் தயங்கினார். ஏற்கனவே அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தும்... அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி அனுதாபம் தேட முயற்சிக்கவில்லை. எப்போதும் பதிவர் சந்திப்பு என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் கடந்த இருமுறை பதிவர் சந்திப்பின் போது முன்கூட்டியே வரச் சொல்லி அழைக்க...அவரது செல்பேசி மணி ஒலித்துக் கொண்டு இருந்தது எடுக்கவே இல்லை. சென்றவாரம் தான் நண்பர் குழலி வழியாக அவர் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வந்தது. "என் பிரச்சனை என்னோடு போகட்டும், இப்போதைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கிறேன்...யாரும் வந்து பார்க்க வேண்டாம்....வந்தால் என்னால் பேசுவது கூட இயலாமல் இருக்கிறது...வேற எதாவது என்றால் சொல்கிறேன்" என்று குழலியிடம் சொல்லி இருக்கிறார். மிகவும் தயக்கத்திற்கு பிறகே குழலி இந்த தகவலை சென்ற சென்றவாரம் வெள்ளிக்கிழமை மணற்கேணி தொடர்பான குறும் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.
அதன் பிறகு சனிக்கிழமை நான் குறுந்தகவல் அனுப்பி, "வார்ட் நம்பர் சொல்லுங்க...உங்களைப் பார்க்கனும்" என்று தகவல் அனுப்பினேன். "இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்...இப்போதைக்கு மருத்துவ மனைக்கெல்லாம் வரவேண்டாம்...எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று பதில் அனுப்பி இருந்தார்.
இரண்டொரு நாளில் என்ன ஆனதென்றே தெரியவில்லை. பதிவர் நண்பர் செந்திலுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய வேண்டும்... இந்தியாவிற்கு அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அவர் உடல் நிலை இல்லை...சிங்கையிலேயே விரைவாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என்று மருத்துவர்களின் அவர் மனைவி திருமதி சாந்தி செந்தில் நாதனிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் செந்திலின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
உதவி எவ்வாறு செய்வது பற்றிய விவரங்கள் கேவிஆர் பதிவில் இருக்கிறது.
பதிவர் நர்சிம் குறிப்பிடும் 1000ல் ஒருவராக உங்களைப் பதிந்து கொள்ளுங்கள்.
28 கருத்துகள்:
நானும் சமீபகாலமாக அவர் கூட்டங்களில் தலைக்காட்டதைப் பற்றி நினைத்த்துண்டு.
நேற்று இடுகைகளில் அவரின் இந்த நிலையை படித்தவுடன். மனம் மிகுந்த வேதனைப்பட்டது.
:(((
நேற்று இதை கேள்வி பட்டதிலிருந்து மனம் பாரமாக உள்ளது .
விரைவில் நலமடைய வேண்டுகிறேன்
சிங்கப்பூரில் ஹெல்த் இன்சியூரன்ஸ் கிடையாதா?
100000$ பணம் யாரிடம் இருக்கும்?
நேற்று சிலர் மடலியிருந்தார்கள்
பார்த்ததுமுதல் மனம் கஷ்ட்டமாகத்தான் உள்ளது.
இயன்றதை முயற்சிக்கிறேன்.
--- பிரார்த்தனைகளுடன்.
//குடுகுடுப்பை said...
விரைவில் நலமடைய வேண்டுகிறேன்
சிங்கப்பூரில் ஹெல்த் இன்சியூரன்ஸ் கிடையாதா?
//
ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் ஏற்கனவே பண்ணி இருந்தால் இருக்கலாம், இவர் அந்த அளவுக்கு போகும்னு நினைக்கவில்லை. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார், அதன் பிறகு (புதுசாக) இன்சுரென்ஸ் கிரிட்டிகல் ஸ்டேஜாக இருக்கு என்று கொடுக்க மாட்டாங்க, மருந்துகளை மாற்றியதால் தான் இப்ப நிலமை சீர்கெட்டதாக சொல்கிறார்கள்.
//100000$ பணம் யாரிடம் இருக்கும்?
//
ஆளுக்கு 10 டாலர் போட்டால் கூட 10,000 பேரால் அந்த தொகையை கொடுக்க முடியும். மனமும் தனமும் இருப்பவர்கள் தாரள உதவி செய்தால் கிடைத்துவிடும்.
இவரது மனைவியுடன் இன்று பேசி விவரம் அறிந்தேன்.
இதயமாற்று ஒன்றுதான் இப்போது தீர்வு.
சிங்கையிலேயே இது நிகழமுடியும்.
சென்னை செல்லத் தேவையில்லை.
ஆனால், சென்னையில் ஏதேனும் ஒரு அமைப்பு இதற்கான செலவை ஏற்றால் இது அங்கும் நிகழலாம்.
செரியன் மருத்துவமனை இதற்கான இடம்
அவரவர்க்குத் தெரிந்த லயன்ஸ் க்ளப், ரோட்டரி நண்பர்களிடம் இதைச் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள்.
அமெரிக்காவில் இதற்கான விவரங்களை நான் விசாரித்துச் சொல்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளேன்
நலம் பெறுவார்
முருகனருள் முன்னிற்கும்!
//100000$ பணம் யாரிடம் இருக்கும்?
//
ஆளுக்கு 10 டாலர் போட்டால் கூட 10,000 பேரால் அந்த தொகையை கொடுக்க முடியும். மனமும் தனமும் இருப்பவர்கள் தாரள உதவி செய்தால் கிடைத்துவிடும்.
//
பணம் புரட்டுதல் புரிகிறது, சிங்கப்பூரில் ஒரு தனி மனிதனிடம் இவ்வளவு பணத்துக்கு எங்கே போவான் என்ற கருத்தில் எழுதியது.
கண்டிப்பாக பணம் கிடைத்துவிடும், இந்தியாவில் இருந்து வந்து வேலை செய்யும் நண்பர்களே ஒழுங்கான இன்சூரன்சை வைத்துக்கொள்ளுங்கள்.
விரைவில் நலமடைய வேண்டுகிறேன்
கோவியரே! இது சம்மந்தமாக நம் பதிவர் நண்பர்கள் ஒருங்கிணைந்து நம்மால் இயன்ற உதவியை உடனே செய்ய வேண்டும்.
தங்கள் பதிவுக்கு நன்றி!
அருமை நண்பரின் உடல் நிலை
மிகுந்த வேதனையை அளிக்கிறது.
வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து சீக்கிரமே நண்பர் நண்பர் சிங்கை நாதன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
அப்பாவி முரு,
ஜோ,
குடுகுடுப்பை,
ஜமால்,
வீஎஸ்கே,
குமார்,
ஜோதி.பாரதி,
துபாய் ராஜா
அனைவருக்கும் நன்றி !
KOVI,
I suggest that one of the blogger friends to co-ordinate and collect the contributions from our blogger friends in Singapore.
My prayers for him!
Anbudan,
-Ravichandran
இடுகைக்கும் உதவிகளுக்கும் நன்றி கோவி.கண்ணன்.
சிங்கை நாதனின் தந்தையார், சென்ற வாரத்தில் சென்னைக்குச் செல்ல புறப்பட்டபோது கீழெ விழுந்து முட்டியில் அடிப்பட்டு ரெஸ்ட் எடுக்கவேண்டிய நிலையாம்! :(
//சந்தனமுல்லை said...
இடுகைக்கும் உதவிகளுக்கும் நன்றி கோவி.கண்ணன்.
சிங்கை நாதனின் தந்தையார், சென்ற வாரத்தில் சென்னைக்குச் செல்ல புறப்பட்டபோது கீழெ விழுந்து முட்டியில் அடிப்பட்டு ரெஸ்ட் எடுக்கவேண்டிய நிலையாம்! :(
//
:(
நன்றி சந்தனமுல்லை,
சிங்கை நாதன் சிங்கை பதிவர்கள் அனைவருக்குமே நெருங்கிய நண்பர்.
//ரவிச்சந்திரன் said...
KOVI,
I suggest that one of the blogger friends to co-ordinate and collect the contributions from our blogger friends in Singapore.
My prayers for him!
Anbudan,
-Ravichandran
//
இரவிச்சந்திரன்,
மிக்க நன்றி ! நாம் இன்று மாலை சந்தித்து பேசுவோம். உங்களைப் போன்று சேவை அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் மிகுந்த பயனளிக்கும்.
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. வேண்டிய உதவிகள் கிடைக்கப்பெற்று விரைவில் அவர் பூரண உடல்நலம் பெற வேண்டுகிறேன்.
முடிந்தவரை உதவிசெய்வோம்..
எவ்வளவு கலாட்டா செய்தாலும் புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொள்வது அவர் சிறப்பு. பாவக்காய் அல்வா கொண்டு வரப்போறாருன்னுக்கூடக் கேலி செஞ்சுருக்கோம்.
மார்ச் மாத பதிவர் சந்திப்பிலும் கலாட்டாதான்.
எல்லோரும் இணைந்து செயல்படுகிறோம்.
விரைவில் குணமாவார் என்ற நம்பிக்கை பொய்க்காது.
நண்பர்களே
நாம் எல்லோரும் அவசரமாக அவசியமாக செய்ய வேண்டிய பணி இது.
விரைவில் நலம் அடைய வேண்டுகின்றேன்.
அவரின் இந்த நிலையை படித்தவுடன். மனம் மிகுந்த வேதனைப்பட்டது.விரைவில் நலமடைய வேண்டுகிறேன்
நிச்சயம் நம்மால் இயன்றதை செய்வோம்.
//நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள்..
தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும். //
நண்பர் ஒருவர் எனக்குச் சொன்னது. பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
தகவலறிந்து மனக்கவலை அடைந்தேன்.. உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.
விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
மிகவும் வருத்தமளிக்கும் செயல். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் இயன்ற உதவிகளை பதிவுலக நண்பர்களால் செய்யமுடியும்.
நீங்கள் சிங்கையில் உள்ள தமிழ் மற்றும் உதவி அமைப்புகளையும் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் தமிழ்நாடு chiefminister fund-ல் அல்லது prime minister fund -ல் முறையாக தகவல் தெரிவித்தால் உதவி செய்கிறார்கள். தூதரகம் வழியாக நீங்கள் முயலலாம். எங்கள் நண்பர் ஒருவருக்கு அப்படி உதவி செய்தனர். அது 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்று இதய சிகிச்சைதான் அதுவும்.
கருத்துரையிடுக