பின்பற்றுபவர்கள்

16 மார்ச், 2009

வாய்மூடி சிரிக்கலாம் போங்க ! அரசியல்

தொண்டர் 1 : நம்ம தலைவர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்க இப்படியெல்லாம் அறிவிப்பு விட்டு கெஞ்சுவார்னு யாரும் எதிர்பார்க்கல

தொண்டர் 2 : என்ன அறிவிப்பு விட்டார் ?

தொண்டர் 1 : கூட்டணிக்கு சேர்ந்தால் அந்த முக்கிய கட்சிக்கு 45 சீட் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

தொண்டர் 2: 45 ? இருப்பதே 39 தொகுதிதானே ?

தொண்டர் 1 : பக்கத்து மாநிலத்திலும் சில தொகுதிகளை கேட்டு வாங்கித்தருவாராம்

****

தொண்டர் : எங்க தலைவர் குறிப்பிட்ட தொகுதியை மட்டும் விட்டுத்தரமாட்டேன் என்று கராராக பேசிவிட்டார்

மற்றவர் : ஏன் ஏன் ?

தொண்டர் : போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்

***

வட்ட துணைச் செயலாளர் : நம்ம கட்சியில் தான் பெண்களுக்கு 33 % சீட் கொடுத்திருப்பதாக தலைவர் பெருமையாக பேசினாரே விவரம் என்ன ?

வட்டச் செயலாளர் : கேட்டு வாங்கிய 10 சீட்டில் 3ல் அவரது மனைவியும், மகளும், மருமகளும் நிற்கிறார்கள், அவர்களெல்லாம் பெண்கள் தானே.இந்த பெரும் தன்மை யாருக்கு வரும் ?

***

அப்பாவி : எங்க கட்சி தான் தேர்தலுக்கு கவர்சிகரமான திட்டம் அறிவிச்சிருக்காங்க

ஐயாசாமி : ஓஹோ......?

அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்

***

மும்பை நடிகையை பிராச்சாரத்துக்கு கூப்பிட்டது தப்பாக போய்விட்டது

ஏன் ஏன் ?

எல்லோரும் நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேசச் சொல்லிக் கொடுத்தால், அந்த அம்மா 'அல்லாரும் நம் கட்ச்சிக்கு ஓட்டை போடுது' ன்னு பேசிவிட்டது. அதனால் எல்லோரும் எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு நம்ம கட்சியை ஓட்டை ஆக்கிட்டாங்க

***

ராமசாமி : அந்த நடிகரை ஏன் தான் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டோம் என்று நம்ம தலைவர் நொந்து போய் இருக்கிறார்

குழந்தை சாமி : ஏனாம் ?

ராமசாமி : அவரோட ரசிகர்கள் வழியெங்கும் நம்ம முதல்வர் கண்ணில் படுவது போல் 'வருங்கால முதல்வரே வாருங்கள்' என்று நடிகருக்கு வரவேற்பு கட் அவுட் வச்சிட்டாங்களாம்

8 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஹா! ஹா! ஹா! ஹா!

நட்புடன் ஜமால் சொன்னது…

நாம் சிரிச்சிக்கிட்டே இருக்கும் போதே சைக்கிள் கேப்புல ஆட்டோ போயிடும்

இருந்தாலும் வேறு என்ன செய்ய

நானும்

:)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:-)))

Sanjai Gandhi சொன்னது…

:))

//போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்//

அவர் எதுனா பேங்குல வேலை பார்த்தாரா? :))

அப்டியே இதையும் பாருங்க.. வாய்விட்டு தானா சிரிப்பிங்க.. :))

http://kusumbuonly.blogspot.com/2009/03/vs.html?ext-ref=comm-sub-email

Sanjai Gandhi சொன்னது…

:))

//போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்//

அவர் எதுனா பேங்குல வேலை பார்த்தாரா? :))

அப்டியே இதையும் பாருங்க.. வாய்விட்டு தானா சிரிப்பிங்க.. :))

http://kusumbuonly.blogspot.com/2009/03/vs.html

மணிகண்டன் சொன்னது…

****
அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்
****

எந்த கட்சி ? எந்த கட்சி ?

கோவி.கண்ணன் சொன்னது…

மணிகண்டன்,

இப்போதைக்கு இலவச டிவிக்கு போட்டியாக அறிவிக்க இருக்கிற எதாவது ஒரு கட்சியை நினைத்துக் கொள்ளுங்களேன். அவங்களவிட சிறப்பாகன்னு அப்பதானே சொல்ல முடியும்.

priyamudanprabu சொன்னது…

//
தொண்டர் 2: 45 ? இருப்பதே 39 தொகுதிதானே ?

தொண்டர் 1 : பக்கத்து மாநிலத்திலும் சில தொகுதிகளை கேட்டு வாங்கித்தருவாராம்
/////

ஹ ஹா

////
அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்
////

கண்டிப்பா ஓட்டு உண்டு

////

ராமசாமி : அவரோட ரசிகர்கள் வழியெங்கும் நம்ம முதல்வர் கண்ணில் படுவது போல் 'வருங்கால முதல்வரே வாருங்கள்' என்று நடிகருக்கு வரவேற்பு கட் அவுட் வச்சிட்டாங்களாம்
////

நடிகருக்கு கெட்-அவுட்டு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்