"தீர்த்த" யாத்திரை என்று கிளம்புபவர்கள் "புனித" நீராடுவது வழக்கம். தீர்த்த யாத்திரைக்கான புனித நீராடுதளமாக வடக்கில் வாரணாசி கங்கையும், தெற்கில் மகாமக கும்பகோண குளமும் உள்ளன. இந்த நூற்றாண்டின் புதிய வரவான பம்பை ஆறும் இந்த பட்டியலில் இருக்கிறது. கங்கை ஆற்றின் புனிதம் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்
பிழைப்பற்ற வேலையாக எவனோ ஒருவன் எதோ புரணக்கதை எழுதிவிட்டுப் போக, கங்கையில் கரைந்தால் பாவக் கணக்கெல்லாம் தண்ணீரில் கறைந்துவிடுமாம், நேரடியாக சொர்கம் தானாம். முன்பெல்லாம் 65 - 70 வயது வரை உள்ள பார்பன ஆண்கள் காசிக்கு யாத்திரையாக சென்று கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். ஏனென்றால் கங்கையில் சாவு மோட்சம் கொடுக்குமாம். எனது பார்பன நண்பர் ஒருவர்தான் இந்த தகவலைச் சொன்னார். 'எங்க முன்னோர்கள்...அப்படியே கங்கையில் முழுகி இறந்துடுவாங்க...இப்ப அப்படியாரும் செய்வது இல்லை' என்றார்.
அதுதவிர நாளைக்கு 700 - 1000 பிணங்கள் வரை வாரணாசி பகுதியில் எரிந்தும் எரியாத நிலையில், அகோரிகள் (என்று அழைத்துக் கொள்பவர்கள்) தின்றது போக மீதம் கங்கையில் இழுத்துத் தள்ளப்படுகிறது. பார்பனர்கள் தான் கங்கை மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால் பார்பனர்கள் அல்லாதவர்களிலும் கங்கை என்பது எதோ சிவனின் தலையில் இருந்து நேரடியாகவே கொட்டுவதாகவும், கங்கை சிவனின் சின்ன வீடு எனவும் நம்பிக் கொண்டு கங்கைக்கு படை எடுப்பவர்களும் உண்டு.
புராணம் எழுதுகிறவர்கள் பெரும்பாலும் வருமானத்துக்கு வழி ஏற்படுத்துவதற்கான வழியையும் அதில் நுழைப்பது வழக்கம். பாவ/புண்ணியம் இந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக பரிகார படலம் என்று ஒன்றை உள்ளே நுழைப்பார்கள், பரிகாரம் தான் வருமானத்தை சீராக வைத்திருக்க செய்யும் உத்தி. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று சொன்னாலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைவருமே அந்த கால போக்குவரத்து வசதி இன்மையால் கங்கைவரை செல்ல முடியுமா ? கங்கையில் செய்ய வேண்டிய பரிகாரம், பூசை எல்லாம் செய்ய முடியுமா ? அந்த குறையை சரி செய்ய உண்டாகப்பட்டது தான் மகாமகக் குளம், மகா மக குளத்தின் ஐ(பொய்)தீகப்படி வடநாட்டில் உள்ள கங்கை உட்பட அனைத்து ஆறுகளும் கும்பகோண மகாமக குளத்தில் சேர்வதாக (சங்கமிப்பதாக) சொல்லப்படுகிறது. கங்கையில் குளித்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும் இங்கும் கிட்டுமாம், அப்படி பாவங்களைப் போக்கிக் கொள்ள சசி மற்றும் ஜெ முயன்ற போதுதான் 40க்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் மோட்சம் அடைந்தார்கள். அதே போன்று சனீஸ்வரன் கோவில் குளத்தில் பழைய துணியைப் போட்டு பாவம் விரட்டும் செயலால் குளம் முழுவதுமே பழைய துணி பாசிகளால் நிறைந்திருக்கிறதாம்.
*****
ஒருபக்கம் தத்துவமாக பாவ / புண்ணியங்கள் ஒருவரின் செயலினால் ஏற்படுகிறது, அதை மாற்ற யாராலுமே முடியாது, அதற்கு உதாரணாமாக ஆற்றல் மாறாக் கோட்பாடுகளைக் காட்டும் இந்து மதம், மற்றொரு பக்கம் பரிகாரத்தினால் எதையும் மாற்றலாம் என்ற லாஜிக் அற்ற விசயத்தையும் சொல்லிவருகிறது. என்னைக் கேட்டால் புனித நீராடுவதால் ஒருவேளை தூய நீராக இருந்தால் உடலில் உள்ள அழுக்குகளை தேய்த்து குளித்தால் போகும். மற்றபடி பாவ/புண்ணியத்திற்கு குளியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி நம்புவது மூட(ர்) நம்பிக்கை !
பின்பற்றுபவர்கள்
13 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
90 கருத்துகள்:
//பாவங்களைப் போக்கிக் கொள்ள சசி மற்றும் ஜெ முயன்ற போதுதான் 40க்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் மோட்சம் அடைந்தார்கள்//
அவர்கள் கூட்டத்தால் சாகவில்லை, ஜேயும், சசியும் அவட்களுக்கு பாபவிமோச்சனம் கொடுத்தார்கள்.
நல்லாயிருந்தது!
அண்ணே...
எப்படிண்ணே சும்மா எல்லா டாபிகையும் பொளந்து தள்றீங்க.
யோவ் புண்ணாக்கு நம்பிக்கை உள்ளவர்கள் செய்ஞ்சிட்டு போறாங்க. உனக்கு தான் இல்லையே அப்புறம் என்ன மூடிகிட்டு போவவேண்டியதுதானே.
பெரிய பருப்பு மாதிரி எழுத வந்துட்ட.
//Rajaraman said...
யோவ் புண்ணாக்கு நம்பிக்கை உள்ளவர்கள் செய்ஞ்சிட்டு போறாங்க. உனக்கு தான் இல்லையே அப்புறம் என்ன மூடிகிட்டு போவவேண்டியதுதானே.
பெரிய பருப்பு மாதிரி எழுத வந்துட்ட.
//
வருண நம்பிக்கை உள்ளவன் பிராமணன் சூத்திரன் பிறப்பால் அமைவது என்கிறான், சக மனிதனை தீண்டுவது பாவம் என்கிறான் அவனை செருப்பால் அடிக்கிறார்கள் இல்லையா ? அதுபோல் தான், அப்புறம் என்ன மூடிகிட்டு போவவேண்டியதுதானே.
\\வருண நம்பிக்கை உள்ளவன் பிராமணன் சூத்திரன் பிறப்பால் அமைவது என்கிறான், சக மனிதனை தீண்டுவது பாவம் என்கிறான் அவனை செருப்பால் அடிக்கிறார்கள் இல்லையா ? அதுபோல் தான், அப்புறம் என்ன மூடிகிட்டு போவவேண்டியதுதானே.//
இந்த பதில் மூலம் நீர் என்ன சொல்ல வாரீர் என்றே ஒரு எழவும் புரியவில்லை. வாதம் செய்ய துப்பில்லை என்றால் பார்ப்பான் சூத்திரன் மூத்திரன் என்று வியாக்யானம் செய்வீர்.
இந்து மத நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தவையே. முடிந்தால் ஆராச்சியாளர்கள் எழுதிய நிறைய புத்தங்கள் உள்ளன அவற்றை படித்து தெளிவு அடைவீர்.
மேலும் இந்து மதம் என்பது பார்ப்பனுக்கே மட்டும் சார்த்து இல்லை என்னை ஏன் உன்னை போன்ற பலருக்கும் உரியது.
நீர் உமது பையன் அல்லது பெண்ணுக்கு பால்லியில் மதம் என்ன என்று கேட்டால் நாங்கள் பெரியார் வெங்காய மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வீரோ.
/// Rajaraman said...
இந்த பதில் மூலம் நீர் என்ன சொல்ல வாரீர் என்றே ஒரு எழவும் புரியவில்லை. வாதம் செய்ய துப்பில்லை என்றால் பார்ப்பான் சூத்திரன் மூத்திரன் என்று வியாக்யானம் செய்வீர்.
//
இந்து மதக் குப்பையில் இருப்பதாகச் சொல்லப்படும் பிராமணன், சூத்திரன் மூத்திரன் இதில் யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று சொல்லத் துப்பு இல்லை, பிறகு என்ன விவாதம் வெங்காயம் வேண்டிக்கிடக்கிறது ?
//இந்து மத நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தவையே. முடிந்தால் ஆராச்சியாளர்கள் எழுதிய நிறைய புத்தங்கள் உள்ளன அவற்றை படித்து தெளிவு அடைவீர். //
எவனாவது ஆராய்ச்சியாளன் கண்டுபிடிப்பான் அப்பறம் அது எங்க மதத்தில் இருக்குது இதுன்னு எல்லா மதக் குப்பைகளையும் இதே பல்லவியைத்தான் பாடுகின்றன. அடுத்த நூற்றாண்டு கண்டுபிடிப்பை எவனாவது முன்பே சொல்கிறான் என்றால் அதுவும் இல்லை. பின்ன என்னத்துக்கு மதத்தையும் அறிவியலையும் கொண்டு வந்து ஒட்டவைக்கனும் ?
//மேலும் இந்து மதம் என்பது பார்ப்பனுக்கே மட்டும் சார்த்து இல்லை என்னை ஏன் உன்னை போன்ற பலருக்கும் உரியது.
//நீர் உமது பையன் அல்லது பெண்ணுக்கு பால்லியில் மதம் என்ன என்று கேட்டால் நாங்கள் பெரியார் வெங்காய மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வீரோ.
//
நீங்களே பிழைக்க ஒரு ஊருக்குப் போறிங்க, பெங்களூர் என்று வைத்துக் கொள்ளுங்க, உங்க ஊர் எது என்று கேட்டால் பெங்களூருன்னா சொல்லுவிங்க, சொந்த ஊர் பெயரைத்தானே சொல்லுவிங்க, சொந்த ஊர் இப்ப சோறு போடுதா, இல்ல புகழை தேடித்தரப் போறிங்களா ? இருந்தாலும் சொந்த ஊர் இதுன்னு அடையாளத்துக்குத்தானே சொல்லுவிங்க. முதலில் பூணுல் போன்ற புற அடையாளங்களைத் துறந்துவிட்டு மனிதனை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
//நீர் உமது பையன் அல்லது பெண்ணுக்கு பால்லியில் மதம் என்ன என்று கேட்டால் நாங்கள் பெரியார் வெங்காய மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வீரோ.//
மதசார்பற்ற நாட்டில் இப்படி கேட்பது சரிதானா?சாதி,மதம் குறிப்பிடாமல் விண்ணப்பத்தைகொடுத்தபோது மீண்டும் திருப்பிக்கொடுத்து கட்டாயமாக நிரப்பச்சொல்லி,பிறகு வாங்குகிறார்கள்.சாதி,மதம் என்றால் என்ன எழவு என்றே தெரியாத குழந்தைக்கு முத்திரை குத்துகிறோமே,இந்த அநியாயத்துக்கு ஏதேனும் மாற்று வழிகள் இருக்கின்றதா?
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
நீங்கள் எத்தனை முறை காசிக்கு சென்றீர்கள்?
அப்பொழுது எத்தனை பிணங்கள் கங்கையில் மிதந்து வந்தது?
தசஅஸ்வமேத காட் எனும் இடத்தில் கங்கையின் தூய்மை தன்மையை தினமும் 36 முறை சோதிக்கிறார்கள். அவர்களின் தரக்கட்டுப்ப்படின் படி ஒரு நாள் கூட அது அசுத்தம் என காட்டியது இல்லை.
கங்கையில் குளித்தால் பாவம் போகும் புண்ணியம் பெருகும் என்பது அவர் அவர் நம்பிக்கையை பொருத்தது. மெக்கா, கயா, குருத்துவாரா என புனித பயணம் அனைத்து மதத்திலும் இருக்கிறது. ஆகவே நம்பிக்கையை அசிங்கப்படுத்தாதீர்கள்.
ஆனால் கங்கையில் ஆண்டி பாக்டீரியம் அதிகம். உங்கள் வீட்டின் தண்ணீரை பிடித்து வைத்தால் அதிக பட்சம் ஒரு மாதம் தூய்மையாக இருக்கும். ஆனால் விரைவில் புழு வந்துவிடும்.
ஐந்து வருடம் முன் நான் எடுத்த கங்கை நீர் இன்றும் எனது அறையில் தூய்மையுடன் இருக்கிறது. சுவையும் மாறாமல்.
எனது முன்னோர்கள் கொண்டு வந்த நீரும் இன்னும் அதே நிலையில் நீடிக்கிறது.
கங்கை ஆறு மூன்று மதங்களுக்கு புனித நீராக இருக்கிறது.
கங்கையில் பிணம்.. அசுத்தம் என சுட்டிகாட்டும் உங்களை போன்றவர்கள், கங்கை நீரில் எத்தனையோ தொழிற்சாலையின் கழிவுகள் கொட்டப்படுகிறதே தினமும் அதற்கு என்ன செய்தீர்கள்? அதிக பட்சம் ஒரு பதிவாவது போட்டீர்களா?
உங்களுக்காக ஒரு படம் :
http://gangajal.org.in/blog/wp-content/uploads/2008/12/35.jpg
தோல் தொழிற்சாலையின் கழிவில் இருக்கும் ரசாயணத்தை விடவா மனித உடலில் இருக்க போகிறது?
கவலை படாதீர்கள் எத்தனை அசுத்தம் வந்தாலும் கங்கை தாங்கும்.
காரணம் அதுதான் கங்கை.
திருநள்ளாற்றில் பத்து டன் பழைய துணிகளை 2 1/2 வருடத்திற்கு ஒரு முறை அகற்றுகிறார்கள். நானே அந்த கொடூரத்தை நேரில் பார்த்திருக்கிறேன். எனது பதிவிலும் நேரிலும் போராடி இருக்கிறேன்.
காரணம் இது மூட நம்பிக்கை.
இது போன்ற மூட நம்பிக்கைக்கு குரல் கொடுத்தால் நான் உங்கள் பக்கம் இருப்பேன்.
ஆனால் மேலோட்டமாக ஒரு கருத்தை சொல்லி அதை உதாசினமாக்குவது, பிறர் நம்பிக்கையை புண்படுத்துவது பகுத்தறிவல்ல.
உங்கள் பதிவு தரமானது என பலர் படுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான செய்தியை சேகரித்து வழங்குங்கள்.
\\நீங்களே பிழைக்க ஒரு ஊருக்குப் போறிங்க, பெங்களூர் என்று வைத்துக் கொள்ளுங்க, உங்க ஊர் எது என்று கேட்டால் பெங்களூருன்னா சொல்லுவிங்க, சொந்த ஊர் பெயரைத்தானே சொல்லுவிங்க, சொந்த ஊர் இப்ப சோறு போடுதா, இல்ல புகழை தேடித்தரப் போறிங்களா ? இருந்தாலும் சொந்த ஊர் இதுன்னு அடையாளத்துக்குத்தானே சொல்லுவிங்க. முதலில் பூணுல் போன்ற புற அடையாளங்களைத் துறந்துவிட்டு மனிதனை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.//
மேலே உள்ள உமது வாதம் உமக்கே சொதப்பலாக தெரியல.
நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் பார்ப்பான் கிடையாது. மேலும் எல்லா இந்துக்களும் பார்ப்பானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உமக்கு உமது பிழைப்பை ஓட்ட மட்டும் இந்து மதம் தேவை. இதை சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா உமக்கு.
///Mr. Rajaram
எல்லா இந்துக்களும் maa?
appo elloarum thrirudanugala?
hahahah..Nalla commedy..
///நான் இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் பார்ப்பான் கிடையாது.//
hahahahahahhahahahaahahahhahahahhahahahhahahaahahahahahahahahahahhhaahahahahahahahahahahahahahhahahahahahahahahahahahahahahhhahahahahaahahahaha
//எல்லா இந்துக்களும் பார்ப்பானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை//
Ama oi..Avlathan Suthiran moothiran nu muthiral kuthiduvaley
ஸ்வாமி ஓம்கார்,
//மேலோட்டமாக ஒரு கருத்தை சொல்லி அதை உதாசினமாக்குவது, பிறர் நம்பிக்கையை புண்படுத்துவது பகுத்தறிவல்ல.
//
நம்பிக்கை நம்பிக்கை.... என்பதில் நரபலியைக் கூட ஞாயப்படுத்திவிட முடியும். ஏற்றுக் கொள்வீர்களா ?
//கங்கையில் பிணம்.. அசுத்தம் என சுட்டிகாட்டும் உங்களை போன்றவர்கள், கங்கை நீரில் எத்தனையோ தொழிற்சாலையின் கழிவுகள் கொட்டப்படுகிறதே தினமும் அதற்கு என்ன செய்தீர்கள்? அதிக பட்சம் ஒரு பதிவாவது போட்டீர்களா?//
அசுத்தம் வேறு, "புனிதப்படுத்ததுதல்" வேறு. அசுத்தம் பற்றி முறையிடுவதற்கு தூய்மைக் கட்டுபாடு வாரியம் இருக்கிறது. புனிதத்தன்மையின் புனிதத்தைக் கேள்வியை யாரிடம் எழுப்புவது ?
வாரணாசியில் பிடிக்கும் தண்ணீர் தூய்மையாக இருக்கிறதா என்று சொல்லுங்க, மற்ற இடங்களில் ஆறு ஓடிக் கொண்டு இருப்பதால் தூய்மைக்கேடு குறைந்திருக்கலாம். வீட்டுத்தண்ணீரும் வானில் இருந்து வரவில்லை, அதுவும் எதோ ஒரு ஆற்றில் இருந்து தான் எடுத்து தருகிறார்கள். நான் எங்க வீட்டுத்தண்ணீர் புனிதம் என்றோ, தூய்மையானது என்றோ சொல்லவில்லை
// சாலிசம்பர் said...
//நீர் உமது பையன் அல்லது பெண்ணுக்கு பால்லியில் மதம் என்ன என்று கேட்டால் நாங்கள் பெரியார் வெங்காய மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வீரோ.//
மதசார்பற்ற நாட்டில் இப்படி கேட்பது சரிதானா?சாதி,மதம் குறிப்பிடாமல் விண்ணப்பத்தைகொடுத்தபோது மீண்டும் திருப்பிக்கொடுத்து கட்டாயமாக நிரப்பச்சொல்லி,பிறகு வாங்குகிறார்கள்.சாதி,மதம் என்றால் என்ன எழவு என்றே தெரியாத குழந்தைக்கு முத்திரை குத்துகிறோமே,இந்த அநியாயத்துக்கு ஏதேனும் மாற்று வழிகள் இருக்கின்றதா?
//
சாலிசம்பர்,
இவனுங்க அலும்பு தாங்கமுடியல, வெள்ளைக்காரன் கொடுத்த 'இந்து' பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள். மற்றபடி ஒண்ணும் நடக்கல, நேற்றைய இல.கனேசனின் சவாலைப் பார்த்தீர்களா ?
'இராமர் பற்றி தேர்த்தல் நேரத்தில் கருணாநிதியால் பேச முடியுமா ?' ன்னு கேட்கிறார். ஏனென்றால் ஈழப்பிரச்சனையில் இராமரையோ, பாலத்தையோ யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அரிப்பு எடுத்து இப்படி கேட்டால் யாராவது இராமர் பால பிரச்சனையை கிளப்புவாங்களா ? அதைவைத்து அரசியல் செய்ய முடியுமான்னு பார்க்கிறார்.
//நம்பிக்கை நம்பிக்கை.... என்பதில் நரபலியைக் கூட ஞாயப்படுத்திவிட முடியும். ஏற்றுக் கொள்வீர்களா ?
//
நம்பிக்கை என்பது பிறரை துன்புறுத்தாதவரை தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள் , எந்த விதத்தில் பிறரை துன்பம் செய்தார்கள்?.
////அசுத்தம் வேறு, "புனிதப்படுத்ததுதல்" வேறு. அசுத்தம் பற்றி முறையிடுவதற்கு தூய்மைக் கட்டுபாடு வாரியம் இருக்கிறது. புனிதத்தன்மையின் புனிதத்தைக் கேள்வியை யாரிடம் எழுப்புவது ?
///
அசுத்தமானல் கவலையில்லை, புனிதமானால்தான் கவலையோ. நல்ல இருக்கு உங்க கருத்து.
”தூய்மைக் கட்டுபாடு வாரியம்” இந்தியாவில் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
கங்கை இவ்வளவு அசுத்தமான பிறகும் தனது தூய்மையை இழப்பதில்லையே ( அறிவியல் மூலம் சொல்லுகிறேன்.)
அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
///
வாரணாசியில் பிடிக்கும் தண்ணீர் தூய்மையாக இருக்கிறதா என்று சொல்லுங்க, மற்ற இடங்களில் ஆறு ஓடிக் கொண்டு இருப்பதால் தூய்மைக்கேடு குறைந்திருக்கலாம். வீட்டுத்தண்ணீரும் வானில் இருந்து வரவில்லை, அதுவும் எதோ ஒரு ஆற்றில் இருந்து தான் எடுத்து தருகிறார்கள். நான் எங்க வீட்டுத்தண்ணீர் புனிதம் என்றோ, தூய்மையானது என்றோ சொல்லவில்லை
//
என்னிடம் இருக்கும் கங்கை நீர் நீங்கள் காண்பித்த படங்களில் இருக்கும் இடத்தில் எடுத்ததுதான்.
கங்கோத்தரி எனும் இமயமலையில் கங்கை புறப்படும் இடத்தில் எடுத்ததில்லை. குறைந்த பட்சம் 800 கிமி. ஓடிய நீர் இன்னும் சுத்தமாக இருக்கிறது.
ஸ்வாமி ஓம்கார்,
நம்பிக்கை என்ற பெயரில் 40 கும்பகோணத்தில் பேருக்கும் மேல் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் கூட்ட நெரிசலில் இறந்தது ஜீவகாருன்யமா ?
உண்மையிலேயே இதுபோன்ற நம்பிக்கைகள் எதோ இலவசம் கொடுப்பதைப் போல் ஓடிவந்து குவிவது தேவைதானா ?
வாரணாசி தண்ணீர் பற்றிய தகவல்களை வைத்து கங்கையை உலக அதியமாக்க ஏன் முயலக் கூடாது ? :)
கோவி.கண்ணன் நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். இந்து மதம் ஒரு குப்பை என்று. அப்புறமென்ன. அதை தூக்கி எறிந்துவிட்டு இனிமேல் நானோ எனது மனைவி மக்களோ இந்து மதம் கிடையாது என்று சொல்ல வேண்டியதுதானே.
அதைவிட்டு இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அதன் பண்டிகைகளையும் மனைவி மக்களோடு கொண்டாடிகொண்டும் இது போல் முர்ப்போக்காளராக காட்டிக்கொள்ள அவ்வப்போது பதிவிடுவது பெற்ற தாயை கேவலமாக தூஷிப்பதற்கு சமம். மன்னிக்கவும் இவ்வாறு குறிப்பிடுவதற்கு. மேலும் உங்கள் மனதை புண் படுத்தவேண்டும் என்று இவ்வாறு பின்னூட்டமிடவில்லை.
//Rajaraman said...
கோவி.கண்ணன் நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். இந்து மதம் ஒரு குப்பை என்று. அப்புறமென்ன. அதை தூக்கி எறிந்துவிட்டு இனிமேல் நானோ எனது மனைவி மக்களோ இந்து மதம் கிடையாது என்று சொல்ல வேண்டியதுதானே. //
சரி, நான் அப்படி சொல்வதால் உங்களுக்கு என்ன வந்தது ? நீங்கள் இந்துமத இடிதாங்கியா ? நான் மூடநம்பிக்கைகளை சாடி எழுதினால், நல்ல நம்பிக்கைகளை நீங்கள் எடுத்து உயர்த்தி எழுதுங்களேன். நான் தடுத்தேனா ? பொறுப்பற்ற ஒருவர் குப்பை போட்டால்... என்ன செய்வது ? பொறுப்பான இன்னொருவர் சகிக்க முடியாமல் அதை எடுத்து போடவேண்டி இருக்கிறது.
//அதைவிட்டு இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அதன் பண்டிகைகளையும் மனைவி மக்களோடு கொண்டாடிகொண்டும் இது போல் முர்ப்போக்காளராக காட்டிக்கொள்ள அவ்வப்போது பதிவிடுவது பெற்ற தாயை கேவலமாக தூஷிப்பதற்கு சமம். மன்னிக்கவும் இவ்வாறு குறிப்பிடுவதற்கு. மேலும் உங்கள் மனதை புண் படுத்தவேண்டும் என்று இவ்வாறு பின்னூட்டமிடவில்லை.
//
இந்துமதம் புனிதமானது,
இந்துமதம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது அல்லது யாராலும் படைக்கப்படாதது
இந்துமதத்தில் அனைத்து அறிவியலும், மருத்துவம் உண்டு !
இந்துமதமே அனைத்து உலக மதங்களுக்கும் தாய் !
:))))))
போதுமா ?
\\எல்லா இந்துக்களும் maa?
appo elloarum thrirudanugala?
hahahah..Nalla commedy..//
தரன் நீங்கள் பின் லேடன் பேரனோ?
\\இந்துமதம் புனிதமானது,
இந்துமதம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது அல்லது யாராலும் படைக்கப்படாதது
இந்துமதத்தில் அனைத்து அறிவியலும், மருத்துவம் உண்டு !
இந்துமதமே அனைத்து உலக மதங்களுக்கும் தாய் !//
மேலே உள்ளவை சத்தியமான உண்மைகள்.
அறிந்தோ அல்லது அறியாமலோ அல்லது உங்கள் உள்மனதில் உள்ளதை எழுதியதற்கு ரொம்ப நன்றி.
//மேலே உள்ளவை சத்தியமான உண்மைகள்.
அறிந்தோ அல்லது அறியாமலோ அல்லது உங்கள் உள்மனதில் உள்ளதை எழுதியதற்கு ரொம்ப நன்றி.//
ஆனால் அப்படித்தான் ஒவ்வொரு மதவாதியும் தங்கள் மதத்தைப் பற்றி பெருமையாகவும், பிற மதங்களைப் பழித்தும் சொல்கிறான்.
குழந்தைகள், தாய் என்று இழுத்து தேவையற்றதையெல்லாம் பேசும் உங்களைப் போன்றவர்கள் இருப்பதும் இந்துமதம் தான். அதுக்காக பெருமை பட முடியுமா ? முதலில் மதவெறியர்கள் மற்றும் போலி சாமியார்களிடமிருந்து இந்துமதத்தைக் காப்பாற்ற முயலுங்கள், நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் நாத்திகன் செய்கிறான்
\\குழந்தைகள், தாய் என்று இழுத்து தேவையற்றதையெல்லாம் பேசும் உங்களைப் போன்றவர்கள் இருப்பதும் இந்துமதம் தான். அதுக்காக பெருமை பட முடியுமா ? முதலில் மதவெறியர்கள் மற்றும் போலி சாமியார்களிடமிருந்து இந்துமதத்தைக் காப்பாற்ற முயலுங்கள், நீங்கள் செய்ய வேண்டியதைத்தான் நாத்திகன் செய்கிறான்//
ஒரு அமைப்பின் உள்ளேயே இருந்துக்கொண்டு அந்த அமைப்பையே கேவலமாக எழுதும் உம்மைப்போன்றவர்களை திருத்த இப்படி எழுத வேண்டியிருக்கிறது. மேலும் நான் ஒன்றும் தவறாக எதவும் குறிப்பிடவில்லையே.
மேலும் இந்து மதத்தை காப்பாற்ற யாருமே தேவை இல்லை. அதன் உயர்ந்த தத்துவங்கள் தான் அதை இன்றளவும் தழைத்தோங்க செய்திருக்கிறது.
மொகலாயர்கள், வெள்ளைக்காரங்கள் முடியாததை , நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் நாதாரிகள் மேலும் உங்களைப்போன்ற கோடரிக்காம்புகளால் இந்து மதத்தை ஒன்றும் மங்க செய்ய முடியாது.
//ஒரு அமைப்பின் உள்ளேயே இருந்துக்கொண்டு அந்த அமைப்பையே கேவலமாக எழுதும் உம்மைப்போன்றவர்களை திருத்த இப்படி எழுத வேண்டியிருக்கிறது. மேலும் நான் ஒன்றும் தவறாக எதவும் குறிப்பிடவில்லையே. //
இந்துமதத்தில் இருந்தால் எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடனுமா ? சாமியார்களின் லீலைகளை கண்டுகொள்ளக் கூடதா ? அட்ரா சக்கை. புரிகிறது புரிகிறது. வருணாசிரம வா(ந்)திகள் கவனிக்க வேண்டிய ஒன்று !
//மேலும் இந்து மதத்தை காப்பாற்ற யாருமே தேவை இல்லை. அதன் உயர்ந்த தத்துவங்கள் தான் அதை இன்றளவும் தழைத்தோங்க செய்திருக்கிறது.
மொகலாயர்கள், வெள்ளைக்காரங்கள் முடியாததை , நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் நாதாரிகள் மேலும் உங்களைப்போன்ற கோடரிக்காம்புகளால் இந்து மதத்தை ஒன்றும் மங்க செய்ய முடியாது.//
ஆமாம், இந்தியாவில் இருக்கும் கிறித்துவர்களும் முன்னால் இந்துக்கள் இல்லை, ஆகாயத்தில் இருந்து குதித்தார்கள்
\\இந்துமதத்தில் இருந்தால் எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடனுமா ? சாமியார்களின் லீலைகளை கண்டுகொள்ளக் கூடதா ? அட்ரா சக்கை. புரிகிறது புரிகிறது. வருணாசிரம வா(ந்)திகள் கவனிக்க வேண்டிய ஒன்று !//
எல்லாவற்றிக்கும் உம்மை யார் ஜால்ரா போடச்சொன்னது. போலிச்சாமியார்களின் லீலைகளை தாராளமாக தொளுரியுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது. மேலும் அணைத்து மதங்களிலும் போலிச்சாமியார்கள் மதத்தை வைத்து ஏமாற்றும் பேர்வழிகள் உண்டு.
மேலும் நான் உம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல திராணியில்லாமல் எங்கெங்கோ சுற்றி வருகிறீர்.
பாவம் நீர் பதிவுலகில் வடிவேலு பாணியில் நானும் முர்ப்போக்குவாதிங்கோ என்று காட்டிக்கொள்ள நீரும் ரொம்பதான் பாடுபடுகிரீர்.
***
நம்பிக்கை என்பது பிறரை துன்புறுத்தாதவரை தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள் , எந்த விதத்தில் பிறரை துன்பம் செய்தார்கள்?.
***
ஓம்காரின் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன ?
***
மதசார்பற்ற நாட்டில் இப்படி கேட்பது சரிதானா?
***
ராஜாராமன் கேட்ட கேள்வில சுத்தமா எனக்கு உடன்பாடு இல்ல. முதல்ல திட்டற மாதிரி கேள்வி கேக்குது, அதுக்கு பிறகு கொஞ்ச நேரத்துக்கு reasonable விவாதம் பண்றது. அதன்பின் மறுபடியும் திட்டறது. இது தான் இப்போ வலையுலகுல ஒரு trend.
ஆனா ஒண்ணு, இப்போ இருக்கறதுலயே ரொம்ப அதிகமா மிஸ்யூஸ் பண்ற வார்த்தை "மதசார்பற்ற" என்ற வார்த்தை தான். நீங்க என்ன சொல்ல வரீங்க ? மதசார்பற்ற நாடுன்னா எப்படி இருக்கணும் ? உங்களோட கருத்த சொல்லுங்க.
ஒரு அமைப்பின் உள்ளேயே இருந்துக்கொண்டு அந்த அமைப்பையே கேவலமாக எழுதும் உம்மைப்போன்றவர்களை திருத்த இப்படி எழுத வேண்டியிருக்கிறது. மேலும் நான் ஒன்றும் தவறாக எதவும் குறிப்பிடவில்லையே.
மேலும் இந்து மதத்தை காப்பாற்ற யாருமே தேவை இல்லை. அதன் உயர்ந்த தத்துவங்கள் தான் அதை இன்றளவும் தழைத்தோங்க செய்திருக்கிறது.///
இந்துமதம் தழைத்தோங்கியிருக்கிறது என்பது உண்மைதான். சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அது உண்டாக்கியிருக்கிறது. கடவுள் படைத்த இந்துமதம் என்று சொல்லும் ராஜாராமன் அவர்களுக்கு ஒரே கேள்விதான்....
இந்து மதத்தின் அங்கம் வருணம். அந்த வருணத்தை படைத்தவன் இறைவன்....அதை நல்ல நோக்கத்திற்காகவே அவன் படைத்திருக்கட்டும்..ஆனால் அதை வைத்து நமது மக்கள் சமூகத்தை நாரடித்து விட்டார்கள்...
ஆக இந்துமதம் தழைத்தோங்கியிருக்கிறது ஆனால் அந்த மதத்தை பின்பற்றுபவர்களை அது நாகரீகமற்றவர்களாக்கி விட்டிருக்கிறது. தன்னைச் சார்ந்த தன்னைப் பின்பற்றும் கூட்டத்தைக் கூட திருத்த , நல்வழிப்படுத்த வக்கில்லாத இந்து மதம் தழைத்தோங்கி என்னதான் பிரயோசனம்???????????????????
****
மொகலாயர்கள், வெள்ளைக்காரங்கள் முடியாததை , நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் நாதாரிகள் மேலும் உங்களைப்போன்ற கோடரிக்காம்புகளால் இந்து மதத்தை ஒன்றும் மங்க செய்ய முடியாது.///
ஆமாம் , இனிமேல் யாருமே இந்து மதத்தை எதுவும் செய்ய முடியாதுதான். காரணம் அதைப் பின்பற்றுவர்களின் மூளை அவ்வளவு மழுங்கிப்போயிருக்கிறது.....!!!
சொல்லவரும் கருத்தின் ஆழம் புரியாமல் தாய் அது இது என்று உறவுகளைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு அது எங்கே புரிய வாய்ப்புண்டு??? அதைத்தான் இந்த விவாதமும் காட்டுகின்றது.....!
***
இந்துமதத்தில் இருந்தால் எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடனுமா ? சாமியார்களின் லீலைகளை கண்டுகொள்ளக் கூடதா ? அட்ரா சக்கை. புரிகிறது புரிகிறது. வருணாசிரம வா(ந்)திகள் கவனிக்க வேண்டிய ஒன்று
***
வருணாசிரம வாந்திகளுக்கும் போலி சாமியாருக்கும் என்ன சம்பந்தம் ? இல்லாட்டி இந்த பிரச்சனைக்கும் காரணம் பிராமணர்கள தான் சொல்ல வரீங்களா ? இப்ப வரும் போலி சாமியார் எல்லாம் எந்தவித ஜாதி மத வேறுபாடும் கடைபிடிக்கறது இல்ல. அப்பதான் அனைத்து தரப்பினரையும் ஏமாத்த முடியும்.
மகாமக குளத்துல போய் குளிக்கறது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாவே இருக்கட்டும். அத செய்ய கூடாதுன்னு சொல்றது நானோ, நீங்களோ யாரு ? அந்த குளத்துல உள்ள அழுக்குல தான் குளிப்பேன்னு சொல்றவங்க கிட்ட எந்த மண்ணாங்கட்டி பிரச்சாரமும் எடுபடாது.
இந்தியாவுல உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே குழுவ சாடுவது எளிது தான். முதியோர் இல்லத்துல சாவறதுக்கு பதிலா காசில போய் சாகறாங்க. அத பத்தி உங்களுக்கோ / எனக்கோ என்ன கவலை ? அவங்க செய்யும் செயல் தவறுன்னு எப்படி சொல்லுவீங்க. இல்லாட்டி மதசார்பற்ற நாடுன்னா மத நம்பிக்கை / மூட நம்பிக்கை இருக்க கூடாதா ?
சினிமா தியேட்டர் வெளியில கூட தான் கூட நெரிசல்ல சாவறாங்க. ஏன் ஸ்கூல் குழந்தைங்க கூட தான் வெந்து சாவறாங்க. அதுனால, ஸ்கூலுக்கு போக கூடாது, சினிமாவுக்கு போக கூடாதுன்னு சொல்லறது என்ன பகுத்தறிவு ? மகாமக குளத்துல இறப்புக்கு பொறுப்பு நம்பிக்கை கிடையாது. அவ்வளவு மக்களின் நம்பிக்கைக்கு ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கைன்னு ஒண்ணும் செய்யல. அட்லீஸ்ட், மக்கள் செத்த உடன கூட ஒருவித நடவடிக்கையும் எடுக்கல. ஒருவேள, பகுத்தறிவு படி இதுவும் வருணாசிரம தருமம் தானா ?
ஒவ்வொரு தடவ, கோவில் எரியும் போதும், கோவில் நெரிசல்ல பக்தர்கள் சாவும் போதும், பகுத்தறிவு பாசறைகள் உடனே இறைவனுக்கு அவரையே காப்பாத்திக்க தெரியலன்னு சொல்றதே பொழப்பா போச்சு. இதுக்கு எல்லாம் காரணம் மூட நம்பிக்கை கிடையாது. அரசாங்கத்தின் மெத்தனம் தான். இத காரணம் காட்டி பகுத்தறிவு பிரச்சாரம் பண்றது, பிணத்து மேல வியாபாரம் பண்ற மாதிரி தான்.
கோவி கண்ணன் சொன்னது போல், மூடநம்பிக்கைகள் களையப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால், அது மூடநம்பிக்கைதானா எனவும் அறியப்படவேண்டும்.
நல்ல ஆரோக்கியமான விவாதம். விவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. இதன்மூலம் பல தகவல்களை தெரிந்துகொண்டோம்.
//தசஅஸ்வமேத காட் எனும் இடத்தில் கங்கையின் தூய்மை தன்மையை தினமும் 36 முறை சோதிக்கிறார்கள். அவர்களின் தரக்கட்டுப்ப்படின் படி ஒரு நாள் கூட அது அசுத்தம் என காட்டியது இல்லை.//
பாராட்டப்பட வேண்டிய விஷயம் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்.
//ஐந்து வருடம் முன் நான் எடுத்த கங்கை நீர் இன்றும் எனது அறையில் தூய்மையுடன் இருக்கிறது. சுவையும் மாறாமல்//
அப்படியா! பலருக்குத் தெரியாத தகவல்.
முக்கிய அறிவிப்பு:
இதன் மூலம் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் தமிழகத்தை சேர்ந்த தற்ப்போது சிங்கையில் பனி புரிந்து வரும் நம் அருமை நண்பர் திருவாளர் கோவி.கண்ணன் அவர்கள் முற்ப்போக்குவாதி. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும் அவர் தன்னுடைய பிளாக்கில் பொழுதுபோவதற்காக தத்துபித்தென்று ஏதாவது உலரிக்கொட்டினால் ச்சே.. எழுதினால் அதை படித்து ரசித்துவிட்டு போகவும்.. ஆராயக்கூடாது. சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
மேலும் பகுத்தறிவு பகலவன் மதிபாலா வேறு வந்து கண்ணனுக்கு ஞானஸ்தானம் செய்து அருளியிருக்கிறார்.
வணக்கம்,
இன்னைக்கு விவாதம் ஆரோக்கியமா இருக்கு.
ஆனா ரோக்கியமா இல்லை!
நன்றி,
ஜோதிபாரதி.
****
நல்ல ஆரோக்கியமான விவாதம். விவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி.
****
உழவன், உங்களுக்கு காமெடி சென்ஸ் கொஞ்சம் அதிகம் தான்!
மேலும் பகுத்தறிவு பகலவன் மதிபாலா வேறு வந்து கண்ணனுக்கு ஞானஸ்தானம் செய்து அருளியிருக்கிறார்.//
ஹிஹிஹிஹிஹிஹி...நல்ல சமாளிப்பு போங்க ராஜாராமன் சார்.....!!!!!!! பதில் பேச முடியலேன்னா இப்பிடிக்கூட சமாளிக்கலாமோ??????
ரைட்டு நடத்துங்க....
***ரோக்கியமா***
அப்படினா என்ன ஜோதிபாரதி ?
நண்பர் ராஜாராமன் , இதோ எனது பழைய கேள்விகள்...இன்னும் அப்படியே இருக்கின்றன.......மதங்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா?
மதங்கள் தரும் நம்பிக்கைகள்....
Friday, July 4, 2008
1. யாரோ ஒரு சமுதாயம்தான் கடவுளை தொட அனுமதிக்கப்பட்டவர்கள்....
2. தீ மிதிச்சா கடவுள் அருள் பாலிப்பார்...
3. உண்டியல்ல லஞ்சம் போட்டா கடவுள் நமக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்துவார்.....
4. இன்ன டிரெஸ் போட்டுட்டு வந்தாதான் கடவுள் கோவிச்சுக்க மாட்டார்.....
5. ஆளக்கொன்னா குத்தம்...ஆட்டகொன்னா குத்தமில்லே....
6. ரோட்டுல போனாக்க முள் குத்தினா , சகுனம் செரியில்லே...
7. ஒருவனுக்கு ஒருத்தி...அந்த ரூல்ஸ் ஆண்டவனுக்கு பொருந்தாது....
8. நாகரீகத்தை மதிப்போம்...அரைநிர்வாண சாமிகளையும் மதிப்போம்.....
9. சொந்த முயற்சியில் அடையாத வெற்றியை கல்கி சாமியார் செய்து கொடுப்பார்...
10. கடவுளைத் தொழு....ஆனால் உன் கடவுளை மட்டும் தொழு....
11. உன் கடவுளை எதிர்ப்பவன் மனித இன விரோதி.....
12. ரோட்டில் பசிக்காக பிச்சையெடுப்பவன் பைத்தியக்காரன்....பசிக்கு சோறிடாமல் முக்குக்கு முக்கு கோயில் கட்டு....புண்ணியம் கிடைக்கும்..
13.கோயிலில் புலால் உண்ணாதே , கஞ்சா குடி......
14.உன் சாமியின் கோயிலைக்கட்டு.....அடுத்தவன் சாமியின் கோயிலை இடி..
15.ஆயிரம் வருசம் வாழும் பாபாவும் உண்டு.....அஞ்சு நாளே வாழும் குழந்தையும் உண்டு...அது அவனவன் செய்த பாவத்தை பொருத்தது.....அஞ்சு வயசுக்குழந்தை நடுராத்திரியில் அழுது அம்மாவின் தூக்கத்தை கெடுத்தது பாவம்தானே??
16.குலத்தொழிலை செய்யாதவன் மகா பாவி.....
17.அரசியல்ல பிரச்சினையா....ராம்ராம் சொல்லி ரத யாத்திரை நடத்து........ ஆண்டவன் அருளுவார்....
18.சமயத்தில் ஆண்டவன் கடலுக்கு கீழேயும் பாலம் கட்டுவார்....
19.ஆதாமையும் , ஏவாளையும் ஆண்டவன் படைத்தார்......(பட்டாம்பூச்சிகளை மனிதனா படைத்தான்?)
20.வானுயர்ந்த கோபுரம் கட்டு...அதற்குமேல் மக்கள் குடியிருக்க மாடிகளை கட்டாதே ( மதுரை..)
21.கங்கையில் குளித்தால் பாவம் தீரும்........( பாவம் பண்ணிவிட்டு கங்கை நோக்கிச்செல்..)
22. மகாமகத்தில் குளித்தால் பாவங்கள் தீரும் ......( சமயத்தில் மக்களே தீருவார்கள்......)
23. ஆசையை விடு ..புத்தர்...( ஆனால் ஆளும் ஆசைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை...சிங்களம்..)
24. எல்லா வியாதிகளையும் பரிசுத்த ஆவி குணப்படுத்தும்...( போதகரின் மகன் மருத்துவமனையில்..)
25. ஆட்டைக்கொல்லலாம்.....ஆனால் மாட்டைக்கொல்லாதே மகாபாவம்...
http://www.mathibala.com/2008/07/blog-post_04.html
\\ஹிஹிஹிஹிஹிஹி...நல்ல சமாளிப்பு போங்க ராஜாராமன் சார்.....!!!!!!! பதில் பேச முடியலேன்னா இப்பிடிக்கூட சமாளிக்கலாமோ??????
ரைட்டு நடத்துங்க....//
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் (அதாவது உங்களைப்போன்றவர்களை) எழுப்ப முடியுமா.
உங்களைப்போன்ற நாலு பேர் ஊருக்கு ஊர் வரட்டுக்கரடியாக வெறறு கூச்சலை அவ்வப்போது செய்து கொண்டுதான் உள்ளீர்கள். (ஆனால் பிரயோசனமே இல்லாமல். ஆனால் உங்களைப்போன்றவர்களை பயன்படுத்தி வீரமணி போன்ற நவீன மடாபதிகள் கொழுத்துக்கொண்டு உள்ளார்கள். அவருக்கு பிறகு அவரது மகனுக்கு பட்டாபிஷேகம் வேறாம். நீங்கள் தான் பாவம்.)
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் (அதாவது உங்களைப்போன்றவர்களை) எழுப்ப முடியுமா.
உங்களைப்போன்ற நாலு பேர் ஊருக்கு ஊர் வரட்டுக்கரடியாக வெறறு கூச்சலை அவ்வப்போது செய்து கொண்டுதான் உள்ளீர்கள். (ஆனால் பிரயோசனமே இல்லாமல். ஆனால் உங்களைப்போன்றவர்களை பயன்படுத்தி வீரமணி போன்ற நவீன மடாபதிகள் கொழுத்துக்கொண்டு உள்ளார்கள். அவருக்கு பிறகு அவரது மகனுக்கு பட்டாபிஷேகம் வேறாம். நீங்கள் தான் பாவம்.)//
வீரமணி போன்ற மடாதிபதிகள் மக்களைத் தேடிச்சென்று அருள்பாலிக்கிறார்கள்... சங்கராச்சாரி போன்ற மடாதிபதிகள் தான் மக்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி தங்களைத் தேடிவரவைத்து அருள்பாலிக்கிறார்கள்...
மக்களைத் தேடிச்சென்று தேவையான சுயமரியாதைக் கருத்துக்களைச் சொல்பவர்களுக்கும் , உட்கார்ந்த இடத்தில் அருள்பாலிப்பதாகச் சொல்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை பதிவுலக வாசகர்கள் உணர்ந்து கொள்ள உதவிய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....!
மதிபாலா,
நீங்க சொல்லி இருக்கற பல கருத்துக்கள் நிதர்சனமான உண்மை. அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் ? மதம் மூலமாக ஏற்பட்ட ஏற்ற தாழ்வு, வேறுபாடு எல்லாம் களையறதுக்கு ஆக்கபூர்வமா சிலபேர் முயன்று வருகிறார்கள். சிலர், இது தேவையற்ற வேலைன்னு மதத்த விட்டுடறாங்க. ஒரு சிலர் வேறு மதத்துக்கு போறாங்க. ஒரு சிலர் வேற்றுமை இருக்கனும்ன்னு முயற்சி செஞ்சி கிட்டு இருக்காங்க.
ஆனா இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?
யாரோ ஒருவர் நம்பிக்கையின் (மூடநம்பிக்கை ஆகவே இருந்தாலும்) பேரில் ஒரு நதில போய் குளிக்கறத சாடுவது எந்த விதத்தில் உதவும் ? குளிக்கும் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்படும் சாவுகளை உதாரணம் காட்டுவது என்ன கருமாந்திர பகுத்தறிவு ? இறந்தவர்களை இதவிட அசிங்கமா எப்படி கொச்சை படுத்த முடியும் ?
வீரமணி போன்ற மடாதிபதிகள் மக்களைத் தேடிச்சென்று அருள்பாலிக்கிறார்கள்... சரி அவருக்கு பிறகு மக்களை தேடி சென்று அருள்பாலிக்கவும், ஈ.வே.ரா. விட்டுச்சென்ற கோடிக்கணக்கான சொத்துக்களையும், நிறுவங்களையும் நிர்வகிக்க உங்கள் இயக்கங்களில் உங்களைப்போன்ற துடிப்பான பலர் இருக்கும் போது, வீரமணியாரின் மகனுக்கு ஏன் பட்டாபிஷேகம். உங்கள் பாணியிலேயே சொன்னால் ஈ.வே.ரா நிறுவங்கள் என்ன சங்கர மடமா?
யாரோ ஒருவர் நம்பிக்கையின் (மூடநம்பிக்கை ஆகவே இருந்தாலும்) பேரில் ஒரு நதில போய் குளிக்கறத சாடுவது எந்த விதத்தில் உதவும் ? குளிக்கும் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்படும் சாவுகளை உதாரணம் காட்டுவது என்ன கருமாந்திர பகுத்தறிவு ? இறந்தவர்களை இதவிட அசிங்கமா எப்படி கொச்சை படுத்த முடியும் ?///
அய்யா , நீங்களே அது மூட நம்பிக்கையாகவே இருந்தாலும்னு சொல்றீங்க....அந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறது தானே பகுத்தறிவாளர்களோட வேலை...????
அந்த மூடநம்பிக்கைகள் அவனவன் வீட்டோட இருந்தா யார் கேக்கப்போறா?? மொத்த சமுதாயத்தையும் அல்லவா கெடுத்து வச்சிருக்கு????
அப்ப அத சரிப் படுத்த சமுதாயத்தின் மீதான கேள்விகள் தானே துணை? அதைத்தானே இந்தப்பதிவு செஞ்சிருக்கு???????
கங்கையில் போய் உயிர் விட்டா புண்ணியம்ங்கிறது நம்பிக்கைன்னு வாதாடற நீங்க அல்லது உங்க மாதிரியான இந்துத்துவ வாதிகள் தனக்குப் பிடிச்ச உடைகளைப் போடுறதால ஒரு தன்னம்பிக்கை ஏற்படுறதா இளைய தலைமுறையோட நம்பிக்கையை மட்டும் சாடுறது என்ன முறை??
அந்த நம்பிக்கையை விட இந்த நம்பிக்கை எவ்விதத்தில் கீழானது???
அடுத்தவனோட நம்பிக்கையில் அல்லது உரிமையில் தலையிடக்கூடாதுன்னு இப்ப சொல்ற இந்துத்துவா வாதிகள் தாங்கள் மட்டும் அடுத்தவன் நம்பிக்கையில / உரிமையில தலையிடறது ஏன்????
இங்க யாரும் அவனவன் கங்கையில போயி குளிக்கிறத வேணாம்னு சொல்லலே.......ஆனா அப்படி கங்கையில போயி குளிச்சா தான் புண்ணியம் ங்கிறது முட்டாள்தனம்னு தான் சொல்றாங்க....
புரிஞ்சவங்க ஏத்துக்குவாங்க...புரியாதவங்க ஏத்துக்கப் போறதில்ல...அதுக்காக மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள்னு எடுத்துச் சொல்லக்கூடாது எப்படி நீங்க சொல்றீங்க???
அது எப்படி நியாயமாகும்????
வீரமணி போன்ற மடாதிபதிகள் மக்களைத் தேடிச்சென்று அருள்பாலிக்கிறார்கள்... சரி அவருக்கு பிறகு மக்களை தேடி சென்று அருள்பாலிக்கவும், ஈ.வே.ரா. விட்டுச்சென்ற கோடிக்கணக்கான சொத்துக்களையும், நிறுவங்களையும் நிர்வகிக்க உங்கள் இயக்கங்களில் உங்களைப்போன்ற துடிப்பான பலர் இருக்கும் போது, வீரமணியாரின் மகனுக்கு ஏன் பட்டாபிஷேகம். உங்கள் பாணியிலேயே சொன்னால் ஈ.வே.ரா நிறுவங்கள் என்ன சங்கர மடமா?//
முதல்ல வீரமணிக்கோ , ஈ.வே.ரா சொத்துக்களுக்கோ, அவரோட மகன் பட்டாபிசேகத்துக்கு வக்காலத்து வாங்குறது என் நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்...
அதனால் மேற்கண்ட கேள்விகள் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் எவருக்கும் ரீ டைரக்ட் செய்யப்படுகிறது...
\\இங்க யாரும் அவனவன் கங்கையில போயி குளிக்கிறத வேணாம்னு சொல்லலே.......ஆனா அப்படி கங்கையில போயி குளிச்சா தான் புண்ணியம் ங்கிறது முட்டாள்தனம்னு தான் சொல்றாங்க....
புரிஞ்சவங்க ஏத்துக்குவாங்க...புரியாதவங்க ஏத்துக்கப் போறதில்ல...அதுக்காக மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள்னு எடுத்துச் சொல்லக்கூடாது எப்படி நீங்க சொல்றீங்க???//
நம்பிக்கை உள்ளவர்கள் செய்கிறார்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. விட்டுவிடுங்கள். மற்றவர்களின் செயலை விமர்சிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.
உங்களுக்கு அது எப்படி மூட நம்பிக்கையாக தெரிகிறதோ மற்றவருக்கு அது நம்பிக்கையாக தெரிகிறது. அவரர் அவரவரின் வழியில் செல்வோம்.
\\முதல்ல வீரமணிக்கோ , ஈ.வே.ரா சொத்துக்களுக்கோ, அவரோட மகன் பட்டாபிசேகத்துக்கு வக்காலத்து வாங்குறது என் நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்...
அதனால் மேற்கண்ட கேள்விகள் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் எவருக்கும் ரீ டைரக்ட் செய்யப்படுகிறது...//
ரொம்ப நன்றி. சரி நாட்டில் எது எதற்கோ பதிவெழுதும், கொடி பிடிக்கும் உங்களைப்போன்றவர்கள் இதை எதிர்க்காதது ஏன்.
நம்பிக்கை உள்ளவர்கள் செய்கிறார்கள். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. விட்டுவிடுங்கள். மற்றவர்களின் செயலை விமர்சிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.
உங்களுக்கு அது எப்படி மூட நம்பிக்கையாக தெரிகிறதோ மற்றவருக்கு அது நம்பிக்கையாக தெரிகிறது. அவரர் அவரவரின் வழியில் செல்வோம்.//
சரி , ரோட்டில் போகிறீர்கள்!!!
உங்க வீட்டுப்பக்கம் ஒரே நாத்தம்......உங்களுக்கு வேண்டுமானால் அந்த நாத்தம் சம்பந்தமில்லாமல் இருக்கலாம்...ஆனால் எல்லோருக்கும் எப்படி??? அதைச் சுத்தபடுத்த ஒருவன் நினைக்கிறான்...அதைச் செய்ய முயற்சிக்கிறான்...
ஆனால் அந்த நாத்தத்தை தாங்க நான் தயார் , அதனால் அது அப்படியே இருந்துவிட்டுப்போகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்...அது எப்படி முறையாகும்?
அந்த நாத்தத்தை சகிக்க முடியாதவர்களும் இருக்கலாம் அல்லவா??? அந்த நாத்தத்தைப் போலத்தான் இந்து மதமல்ல , எந்த மதத்தின் மூட நம்பிக்கைகளும்....!!!!
உங்களுக்கு வேண்டுமானால் அந்த மூட நம்பிக்கைகளில் குளிர் காய்வது சுகமாக இருக்கலாம்...ஆனால் எல்லோருக்கும் அல்ல.
அந்த மூட நம்பிக்கைகளற்ற ஆரோக்கியமான சமுதாயத்திற்காக போராடும் பகுத்தறிவாளர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய சமூகம் மாறாக அவர்களைத் தூற்றுகிறது....
மலத்தை சுத்தப்படுத்துபவன் இருப்பதால்தான் நாம் சுத்தமாக இருக்கிறோம் என்ற உணர்வற்று அய்யே மலத்தை சுத்தப்படுத்துபவன் வருகிறான் என்று முகஞ்சுளிக்கும் நன்றியற்ற சுயநல சமுதாயத்தின் ஒரு அங்கமாகத்தான் எனக்கு நீங்கள் தெரிகிறீர்கள்...
நீங்கள் சுயநலவாதியாக இருந்துவிட்டுப்போங்கள்...நான் சுயநலவாதியாக இருப்பதால் உலகமே சுயநலவாதியாக இருக்க வேண்டும் என்று சொல்வது என்ன முறை நண்பரே???
நான் நல் வாசனையாக உணரும் ரோஜா இதழ் உங்களுக்கு நாற்றமாக தெரிந்தால் நானென்ன செய்வது மதிபாலா சார்.
அதைத்தான் நானும் சொல்கிறேன்....நீங்கள் நல் வாசனையாக நினைக்கும் ரோஜா நல்வாசனை அல்ல என்று நான் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கிறேன்.......
நீங்கள் அதை இல்லை அது நல்வாசனைதான் என்று அறிவியல் பூர்வமாக நிருபியுங்கள்...
இல்லை இல்லை என் ரோஜாவின் வாசனை நிருபணத்திற்கு அப்பாற்பட்டது என்று வாதிடுவீர்களானால் அந்த வாதம் விதண்டாவாதமாகத் தான் முடியும்.....
நான் விதண்டாவாதத்திற்கு தயாரில்லை. விவாதத்திற்கு எப்போதுமே தயார்தான்.
ரோஜா இதழுக்கு நல் வாசம் உண்டு என்பதை நிரூபிக்க அறிவியல் ஆராச்சி லேப் எல்லாம் தேவை இல்லை. அது போன்றது தான் இந்து மதம். மதம் மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த விஷயங்களை லேப்பில் வைத்து நிருபி என்று சொல்வது போல் கூறுவது விதண்டாவாதம் தான். இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.
ஒக்கே மதிபாலா சார் வீரமணியார் வாரிசு முடிசூட்டு சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில்?
மதிபாலா,
நீங்க எவ்வளவு முறை என்னைய இந்துத்துவா வாதி, பயங்கரவாதின்னு சொன்னாலும், எனக்கு திருப்பி திட்டும் எண்ணம் இல்ல. அதுனால மறுபடியும் நீங்க முயற்சித்து பாக்கலாம்.
கும்பகோண மகாமக குளத்துல (அழுக்குல) குளிச்சா புண்ணியம் கிடைக்கும்ன்னு சொன்னா, அந்த நம்பிக்கை அர்த்தமற்றதுன்னு சொல்லுங்க. அத விட்டுட்டு அங்க குளிக்கறவன் எல்லாம் முட்டாள், குளிச்சு செத்து போயும் புத்தி வரலன்னு சொல்றது எந்த விதத்துல பகுத்தறிவு பிரசாரத்துக்கு உதவும்ன்னு தெரியல. அது என்ன பகுத்தறிவு ? நம்பிக்கைய மூட நம்பிக்கைன்னு சொல்லுங்க. சொல்ற விதத்துல மக்களை கொச்சைப்படுத்தாதீங்க. ஏத்துக்கறதும், ஏத்துகாததும் அவன் அவன் விருப்பம்.
***
இந்துத்துவ வாதிகள் தனக்குப் பிடிச்ச உடைகளைப் போடுறதால ஒரு தன்னம்பிக்கை ஏற்படுறதா இளைய தலைமுறையோட நம்பிக்கையை மட்டும் சாடுறது என்ன முறை??
***
இது எனக்கு சரியா புரியல. ஜீன்ஸ், t-SHIRT போட்டுக்கிட்டு ஜாலியா இருக்கறவங்கள சொல்லுறீங்களா ? அவங்கள சாடறவன் பைத்தியக்காரனுங்க. அதுல ஒன்னும் சந்தேகமே இல்ல.
ஸ்ரேயா ஏன் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு வந்தாங்கன்னு சட்டமன்றத்துல கேள்வி கேக்கறவங்களும், விவாதம் நடத்தறவங்களும் இந்துத்துவ வாதிகள் தானா ? இல்லாட்டி மொத்த சமுதாயத்தையும் கெடுத்தா மாதிரி பகுத்தறிவு பாசறைகளையும் இந்துத்துவ வாதிகள் கெடுத்துட்டாங்களா ?
எனக்கு மகாமக குளத்துல இறந்து போன குடும்பத்துல இருந்த ஒருவரோட பழக்கம் இருந்தது. அதுனால. எனக்கு இதுல எழுதி இருந்த கருத்து கொச்சையா தெரிந்தது. அதுனால கேள்வி கேட்டேன். அவ்வளவே ! அதுக்கு இந்துத்துவ வாதின்னு சொல்லுங்க. முட்டாள்ன்னு சொல்லுங்க. I don't give a shit.
//மதிபாலா 8:10 PM, March 13, 2009
அதைத்தான் நானும் சொல்கிறேன்....நீங்கள் நல் வாசனையாக நினைக்கும் ரோஜா நல்வாசனை அல்ல என்று நான் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கிறேன்.......
நீங்கள் அதை இல்லை அது நல்வாசனைதான் என்று அறிவியல் பூர்வமாக நிருபியுங்கள்...//
உங்களின் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.
ஒருசில மனோவியாதிகளுக்கு, இஷ்ட தெய்வ வழிபாடு-தியானம் செய்யச்சொல்லி மனோத்தத்துவ மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்களே எதை எதில் எவ்வாறு சேர்ப்பது.
mee the 50 th
அது அறிவியல் பூர்வமான நிறுபனமா? இல்லையா? இல்லை வெரும் கண்துடைப்பா?
**
அது அறிவியல் பூர்வமான நிறுபனமா? இல்லையா? இல்லை வெரும் கண்துடைப்பா
**
மனோத்தத்துவம்.
நண்பர் முரு...
தியானமோ , யோகாசனமோ நமது இறை நம்பிக்கையின் நல்ல வெளிப்பாடுகள் என்பது என் கருத்து...ஆனால் அவைகள் மட்டுமெ இந்து மதத்தின் இழிவுகளை நியாயப்படுத்த போதுமானவை அல்ல....
****
நண்பர் ராஜாராமன்
விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் ஒன்றைச் சொல்வீர்களானால் பிறகெதற்கு இந்த விவாதம்...ரோஜா இதழின் நல்வாசனை ஒரு விவாதத்திற்கான பொருளேயன்றி அதை வைத்து விவாதத்தின் முடிவை தீர்மானிக்க முடியும் என்பது எவ்விதத்தில் சரி....
ஒக்கே மதிபாலா சார் வீரமணியார் வாரிசு முடிசூட்டு சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில்?
///
அதற்குத்தான் நான் அப்போதே பதில் சொல்லியாயிற்றே நண்பரே???? அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது என் வேலையுமில்லை , நோக்கமுமில்லை..
நீங்க எவ்வளவு முறை என்னைய இந்துத்துவா வாதி, பயங்கரவாதின்னு சொன்னாலும், எனக்கு திருப்பி திட்டும் எண்ணம் இல்ல. அதுனால மறுபடியும் நீங்க முயற்சித்து பாக்கலாம்.//
நான் உங்களைப் பார்த்து இந்துத்துவா வாதி என்று சொல்வதை எப்படி திட்டுவதாக எடுத்துக்கொள்கிறீர்கள் நண்பரெ? அதுவும் தெளிவுடன் நடுநிலை தவறாமல் பேசும் உங்களை திட்டுவதுதான் முறையாகுமா??
இந்துத்துவாதி என்று சொன்னால் கேவலமானது என்று நீங்களே உணர்ந்து கொண்ட ஞானத்தின் வெளிப்பாடா என்ன ???
அது அறிவியல் பூர்வமான நிறுபனமா? இல்லையா? இல்லை வெரும் கண்துடைப்பா?//
எது நண்பர் முரு???
ஆரோக்கியமான முறையில் தனிமனித தூற்றல்கள் இன்றி நல்ல முறையில் சென்ற இந்த விவாதத்தில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றி...
காலம் தடை போடுவதால் மீண்டும் நாளை அல்லது திங்களன்று சந்திப்போம்...நன்றிகள்...!
***
இந்துத்துவாதி என்று சொன்னால் கேவலமானது என்று நீங்களே உணர்ந்து கொண்ட ஞானத்தின் வெளிப்பாடா என்ன ?
***
ஆமாம்.
வழக்கம் போல தவறான ஞானத்த திருத்தற பகுத்தறிவாளர் தான நீங்க ? இதுக்கும் எதாவது விளக்கம் இருக்கா ?
வழக்கம் போல தவறான ஞானத்த திருத்தற பகுத்தறிவாளர் தான நீங்க ? இதுக்கும் எதாவது விளக்கம் இருக்கா ?//
தற்போதைக்கு விளக்கம் ஏதும் ஸ்டாக் இல்லை நண்பரே....!!! வந்தால் சொல்லியனுப்புகிறேன்....!!!
ஹிஹிஹிஹிஹிஹிஹி...
NO SERIOUS ATTEMPT , SO NO TENSION , BE HAPPY....
SEE YOU LATER....
என்னை கேட்டால் குளிப்பதே கெட்ட பழக்கம் என்பேன்.
இங்க யாரோ சாதிய பத்தி கேட்டு இருந்தாங்க!
நான் என் பொண்ணுக்கு சாதி சான்றிதழ் தரமாட்டேன்.
கண்டிப்பா வேணும்னு கேட்டா கோர்ட்ல கேஸ் போடுவேன்னு சொல்லியிருக்கேன்.
***
என்னை கேட்டால் குளிப்பதே கெட்ட பழக்கம் என்பேன்.
***
குடில குளிக்கறத பத்தி கேட்டா ?
நீங்கள் உடலை சுத்தம் செய்ய குளிக்கிறீர்கள்
நான் மனதை சுத்தம் செய்ய குடிக்கிறேன்.
உங்களுக்கு குளிப்பது முக்கியம்
எனக்கு குடிப்பது முக்கியம்
***
நீங்கள் உடலை சுத்தம் செய்ய குளிக்கிறீர்கள்
நான் மனதை சுத்தம் செய்ய குடிக்கிறேன்.
உங்களுக்கு குளிப்பது முக்கியம்
எனக்கு குடிப்பது முக்கியம்
***
ஹா ஹா ஹா. எனக்கும் குடிப்பது முக்கியம் தான் ! அதுனால தான் கெட்ட பழக்கமான்னு தெரிஞ்சிக்க கேள்வி கேட்டேன்.
கெட்ட பழக்கமா?
எனது பதிவையெல்லாம் நீங்க படிக்கிறதே இல்லையா?
குறைந்த பட்சம் வாங்க கடைசி பதிவுக்கு!
//மணிகண்டன் said...
***ரோக்கியமா***
அப்படினா என்ன ஜோதிபாரதி ?//
மணி,
ஓ! அதுவா? வட்டார வழக்கு!
தூய தமிழ் அகரமுதலியை எடுத்துப் பார்த்தால் இருக்காது. கெட்ட சொல் அல்ல.
//Rajaraman said...
ஒக்கே மதிபாலா சார் வீரமணியார் வாரிசு முடிசூட்டு சம்பந்தமாக நான் எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில்?//
திரு இராசாராமன் ஐயா,
திரு வீரமணி ஐயா அவர்களின் மகன் பெயர் என்ன என்று தெரிந்தால் அறியத் தாருங்கள்! நன்றி!!
//வால்பையன் said...
கெட்ட பழக்கமா?
எனது பதிவையெல்லாம் நீங்க படிக்கிறதே இல்லையா?
குறைந்த பட்சம் வாங்க கடைசி பதிவுக்கு!//
வாலு! தாங்கள் தான் முன்/பின் நவீனத்துவ கவிஞராயிற்றே!!
தாங்கள் குழப்பலாம். ஆனால் குழம்பக்கூடாது! அதுதான் நமக்கு உரம்.
ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,
நீங்கள் எத்தனை முறை காசிக்கு சென்றீர்கள்?
அப்பொழுது எத்தனை பிணங்கள் கங்கையில் மிதந்து வந்தது?
தசஅஸ்வமேத காட் எனும் இடத்தில் கங்கையின் தூய்மை தன்மையை தினமும் 36 முறை சோதிக்கிறார்கள். அவர்களின் தரக்கட்டுப்ப்படின் படி ஒரு நாள் கூட அது அசுத்தம் என காட்டியது இல்லை.//
நீங்கள் குறிப்பிடும் தச அஸ்வமேத காட் என்ற இடமானது வாரணாசி(காசி)யில் தான் இருக்கிறது.
கங்கை நதி காசி நகருக்குள் நுளையும்போதே எண்ணற்ற அசுத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது என்று 2008 டிசம்பர் 11ந் தேதிய தி எகனாமிஸ்ட் நாளிதழில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிபீடியா சொல்கிறதே!
பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Ganga_Action_Plan
அப்படி இருக்கும்போது நீங்கள் கூறும் தரக்கட்டுப்பாட்டின் மீதே சந்தேகம் எழுகிறது ஸ்வாமி!
ஒரு 5 மனி நேரம் பதிவு பக்கம் வரலை, அதுக்குள்ள இவ்வளவு பின்னூட்டமா ? முடிந்தவரை மறுமொழி இடுகிறேன்.
///மணிகண்டன் said...
***
நம்பிக்கை என்பது பிறரை துன்புறுத்தாதவரை தான் ஏற்றுக்கொள்ள முடியும்.
கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள் , எந்த விதத்தில் பிறரை துன்பம் செய்தார்கள்?.
***
ஓம்காரின் இந்த கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன ?
***
மதசார்பற்ற நாட்டில் இப்படி கேட்பது சரிதானா?
***
ராஜாராமன் கேட்ட கேள்வில சுத்தமா எனக்கு உடன்பாடு இல்ல. முதல்ல திட்டற மாதிரி கேள்வி கேக்குது, அதுக்கு பிறகு கொஞ்ச நேரத்துக்கு reasonable விவாதம் பண்றது. அதன்பின் மறுபடியும் திட்டறது. இது தான் இப்போ வலையுலகுல ஒரு trend.
ஆனா ஒண்ணு, இப்போ இருக்கறதுலயே ரொம்ப அதிகமா மிஸ்யூஸ் பண்ற வார்த்தை "மதசார்பற்ற" என்ற வார்த்தை தான். நீங்க என்ன சொல்ல வரீங்க ? மதசார்பற்ற நாடுன்னா எப்படி இருக்கணும் ? உங்களோட கருத்த சொல்லுங்க.//
மணிகண்டனும் ஆட்டையில் சேர்ந்தாச்சா ?
நம்பிக்கை என்ற பெயரில் செய்வதில் என்ன இருக்கிறது ? யாருக்கும் பாதிப்பே இல்லையா ? போலி சாமியார்களின் உருவாகுவது, இவ்வளவு கூட்டங்களைப் பார்த்த பேராசையில் தான், பெரியார் பெரியார் ஆனதற்கும் இந்த வாரணாசி காட்சிகளே சாட்சி. குளத்தில் குளிப்பதால் பாவம் போகும் என்பது மூட நம்பிக்கை என்கிறேன், அதைப் பற்றி அவர் எதுவுமே சொல்லாமம் பாதிப்பு இல்லை என்றால் எந்த நம்பிக்கையும் தவறு அல்ல என்பது போல் சொல்கிறார். மதவாதிகள் கூட அவரவர் நம்பிக்கையால் தான் உலகை ரணகளம் ஆக்கி வைத்திருக்கிறார்கள். கங்கை நீரில் குளித்தால் பாவம் போகும் என்று நீங்கள் நம்புகிறீர்களா ? எதற்காக இப்படிப்பட்ட நம்பிக்கைகளை ஏற்படுத்தி மனிதர்களை முட்டாளாக வைத்திருக்க வேண்டும் ?
இராச இராமன் பற்றி லூசில் விடுங்க, அவரு ஆபாசமாக பேசவில்லை, ஆவேசமாகத்தான் பேசுகிறார் என்றே புரிந்து கொண்டு பதில் சொல்லிவருகிறேன். முன்பே கூட விவாதம் செய்திருக்கிறார். ஒருசிலவற்றை பாராட்டியும் இருக்கிறார், அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளனுமே :)
// Rajaraman said...
\\இந்துமதத்தில் இருந்தால் எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடனுமா ? சாமியார்களின் லீலைகளை கண்டுகொள்ளக் கூடதா ? அட்ரா சக்கை. புரிகிறது புரிகிறது. வருணாசிரம வா(ந்)திகள் கவனிக்க வேண்டிய ஒன்று !//
எல்லாவற்றிக்கும் உம்மை யார் ஜால்ரா போடச்சொன்னது. போலிச்சாமியார்களின் லீலைகளை தாராளமாக தொளுரியுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது. மேலும் அணைத்து மதங்களிலும் போலிச்சாமியார்கள் மதத்தை வைத்து ஏமாற்றும் பேர்வழிகள் உண்டு.
மேலும் நான் உம்மிடம் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல திராணியில்லாமல் எங்கெங்கோ சுற்றி வருகிறீர்.
பாவம் நீர் பதிவுலகில் வடிவேலு பாணியில் நானும் முர்ப்போக்குவாதிங்கோ என்று காட்டிக்கொள்ள நீரும் ரொம்பதான் பாடுபடுகிரீர்.//
நாத்திகனிடம் மோதுவதைத் தவிர்த்துவிட்டு போலி சாமியார்களை ஒழிக்கலாமே ? பெரும்பாலும் போலியாக இருப்பதால் ஒழித்துவிட்டால் இந்துமதமே ஒழிந்திவிடும் என்கிற பயம் தானே ? எனக்கு அதெல்லாம் இல்லை. நான் முற்போக்கு வாதியல்ல, நான் போலி நாத்திகன், நநன் இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கும் போலி மதசார்பற்றவன் என்று ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
//மணிகண்டன் said... வருணாசிரம வாந்திகளுக்கும் போலி சாமியாருக்கும் என்ன சம்பந்தம் ? இல்லாட்டி இந்த பிரச்சனைக்கும் காரணம் பிராமணர்கள தான் சொல்ல வரீங்களா ? இப்ப வரும் போலி சாமியார் எல்லாம் எந்தவித ஜாதி மத வேறுபாடும் கடைபிடிக்கறது இல்ல. அப்பதான் அனைத்து தரப்பினரையும் ஏமாத்த முடியும்.
மகாமக குளத்துல போய் குளிக்கறது பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயலாவே இருக்கட்டும். அத செய்ய கூடாதுன்னு சொல்றது நானோ, நீங்களோ யாரு ? அந்த குளத்துல உள்ள அழுக்குல தான் குளிப்பேன்னு சொல்றவங்க கிட்ட எந்த மண்ணாங்கட்டி பிரச்சாரமும் எடுபடாது. //
நான் பார்பனர்கள் காரணம் என்று சொல்லவில்லை, உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா ? போலி சாமியார்கள் யார் போலியான, மூட நம்பிக்கைகள் எந்த மதத்தில் மலிந்து கிடக்கிறது என்பதை அனைத்தும் அருகில் இருந்து பார்த்த அக்னிஹோத்ரம் தாதாச்சாரியார் சொல்லி இருக்கிறார். போலிசாமியார்களுக்கு மதம் காவல் இல்லை என்றால் பிறகு எந்த தைரியதில் அவர்கள் கார்ப்ரேட் சாமியார்களாக உலாவருகிறார்கள் ? பிரச்சாரம் ஏன் எடுபடாது ? பெரியார் செய்த பிரச்சாரத்தில் இன்னும் கூட பல கிராமங்களில் பகுத்தறிவாளர்களால் நிரம்பி இருக்கிறது, நம்ம ஜோதிபாரதியிடம் கேளுங்க. புற்றீசல் தோன்றுவது போலவே அதன் அழிப்பும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதெல்லாம் தனிமையில் சாமியார்களை சந்திக்கப் போகும் பெண்கள் கூட்டம் குறைந்துவிட்டதா இல்லையா ?
//இந்தியாவுல உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே குழுவ சாடுவது எளிது தான். முதியோர் இல்லத்துல சாவறதுக்கு பதிலா காசில போய் சாகறாங்க. அத பத்தி உங்களுக்கோ / எனக்கோ என்ன கவலை ? அவங்க செய்யும் செயல் தவறுன்னு எப்படி சொல்லுவீங்க. இல்லாட்டி மதசார்பற்ற நாடுன்னா மத நம்பிக்கை / மூட நம்பிக்கை இருக்க கூடாதா ?//
குழுவை நான் சாடவில்லை, நண்பர் சொன்னதைத்தான் எழுதினேன். மூடநம்பிக்கை குறித்துப் பேசக்கூடாது என்றும் எதாவது இருக்கிறதா / நீங்களே தான் சொல்றிங்க, என்ன தான் சொன்னாலும் செய்வதை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று, பிறகு ஏன் தேவையற்ற சலனம் ?
//சினிமா தியேட்டர் வெளியில கூட தான் கூட நெரிசல்ல சாவறாங்க. ஏன் ஸ்கூல் குழந்தைங்க கூட தான் வெந்து சாவறாங்க. அதுனால, ஸ்கூலுக்கு போக கூடாது, சினிமாவுக்கு போக கூடாதுன்னு சொல்லறது என்ன பகுத்தறிவு ? மகாமக குளத்துல இறப்புக்கு பொறுப்பு நம்பிக்கை கிடையாது. அவ்வளவு மக்களின் நம்பிக்கைக்கு ஏதுவாக பாதுகாப்பு நடவடிக்கைன்னு ஒண்ணும் செய்யல. அட்லீஸ்ட், மக்கள் செத்த உடன கூட ஒருவித நடவடிக்கையும் எடுக்கல. ஒருவேள, பகுத்தறிவு படி இதுவும் வருணாசிரம தருமம் தானா ?//
எல்லாம் ஒண்ணுதான் என்பதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனாலும் இந்த கூட்டமே தவறான நம்பிக்கையால் கூடுகிறது, பிறகு தான் விபத்து பற்றி பேசினேன். எல்லா சாவுகளும் ஒன்றுதான் என்றால் ஏன் அந்த குளியலுக்கு மட்டும் புனித பூச்சு ? அதைத்தான் கேள்வியாக கேட்கிறேன். உங்களுக்கு ஏன் வருணாசிரமம் மீது இப்படி ஓர் ஈர்ப்பு ?
//ஒவ்வொரு தடவ, கோவில் எரியும் போதும், கோவில் நெரிசல்ல பக்தர்கள் சாவும் போதும், பகுத்தறிவு பாசறைகள் உடனே இறைவனுக்கு அவரையே காப்பாத்திக்க தெரியலன்னு சொல்றதே பொழப்பா போச்சு. இதுக்கு எல்லாம் காரணம் மூட நம்பிக்கை கிடையாது. அரசாங்கத்தின் மெத்தனம் தான். இத காரணம் காட்டி பகுத்தறிவு பிரச்சாரம் பண்றது, பிணத்து மேல வியாபாரம் பண்ற மாதிரி தான்.//
நான் கடவுள் நம்பிகை பற்றி இந்த பதிவில் எங்கும் குறிப்பிடவில்லை, மூட நம்பிக்கையை மட்டும் தான் குறிப்பிட்டேன், பதிவை மீண்டும் படியுங்கள் கங்கையில் குளிப்பதால் பாவம் போய்விடுமா ? இதுதான் கேள்வி. இதில் கடவுள் எங்கே வந்தார் ?
//Rajaraman said...
நான் நல் வாசனையாக உணரும் ரோஜா இதழ் உங்களுக்கு நாற்றமாக தெரிந்தால் நானென்ன செய்வது மதிபாலா சார்.
//
பிணத்தின் மீது போட்டிருக்கும் ரோஜாமாலை கூட மணக்கும். பலருக்கும் முகம் சுளிப்பாகத்தான் இருக்கும்
//Rajaraman said...
\\ஹிஹிஹிஹிஹிஹி...நல்ல சமாளிப்பு போங்க ராஜாராமன் சார்.....!!!!!!! பதில் பேச முடியலேன்னா இப்பிடிக்கூட சமாளிக்கலாமோ??????
ரைட்டு நடத்துங்க....//
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் (அதாவது உங்களைப்போன்றவர்களை) எழுப்ப முடியுமா.
உங்களைப்போன்ற நாலு பேர் ஊருக்கு ஊர் வரட்டுக்கரடியாக வெறறு கூச்சலை அவ்வப்போது செய்து கொண்டுதான் உள்ளீர்கள். (ஆனால் பிரயோசனமே இல்லாமல். ஆனால் உங்களைப்போன்றவர்களை பயன்படுத்தி வீரமணி போன்ற நவீன மடாபதிகள் கொழுத்துக்கொண்டு உள்ளார்கள். அவருக்கு பிறகு அவரது மகனுக்கு பட்டாபிஷேகம் வேறாம். நீங்கள் தான் பாவம்.)
//
உங்களுக்கு வேண்டுமானால் போலிசாமியார்கள், மூட நம்பிக்கைகள் இந்துமதத்தின் அங்கமாக இருக்கலாம், ஆனால் மூடநம்பிக்கை எதிர்பாளர்கள் அனைவருமே நாங்கள் வீரமணியின் சிஷ்ய கோடிகள் என்று சொல்லிக் கொள்வதில்லை. உலகெங்கிலுமே அநதந்த பகுதிகளில் மதவாதிகளுக்கு எதிரான போராட்டம் இயற்கையிலேயே தோன்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கோவி.கண்ணன் said...
//மதிபாலா said...
நண்பர் ராஜாராமன் , இதோ எனது பழைய கேள்விகள்...இன்னும் அப்படியே இருக்கின்றன.......மதங்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா?
மதங்கள் தரும் நம்பிக்கைகள்....
Friday, July 4, 2008
1. யாரோ ஒரு சமுதாயம்தான் கடவுளை தொட அனுமதிக்கப்பட்டவர்கள்....
//
மதிபாலா சார், அருமையான கேள்விகள், இதற்கெல்லாம் இந்து மதவாதிகள் பதில் சொன்னதே கிடையாது. கடவுள் பெயர் மதவாதிகளுக்கு கார்ப்ரேட் பிஸ்னஸ் நடத்த பயன்படுகிறது, அந்த பிஸ்னசுக்கு கவர்சிகரமான விளம்பரம் தான் அதில் நுழைக்கப்படும் மூட நம்பிக்கள்
//ஆனா இதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?
யாரோ ஒருவர் நம்பிக்கையின் (மூடநம்பிக்கை ஆகவே இருந்தாலும்) பேரில் ஒரு நதில போய் குளிக்கறத சாடுவது எந்த விதத்தில் உதவும் ? குளிக்கும் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏற்படும் சாவுகளை உதாரணம் காட்டுவது என்ன கருமாந்திர பகுத்தறிவு ? இறந்தவர்களை இதவிட அசிங்கமா எப்படி கொச்சை படுத்த முடியும் ?//
நான் கொச்சைப் படுத்தவில்லை நண்பரே. உப்பிப் போய், குடல் சரிந்து, பலர் பார்க்க மிதக்கும் உடல்கள், ஒருவரின் தனது இறப்பையும் கூட கேவலப்படுத்த வைக்கிறது என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன்.
உள்ளமே கோவில், ஊனுடம்பே ஆலயம் தமிழ் சூழலில் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள், அதைவிடுத்து சொர்க்கப் பேராசைக்காக கங்கையில் தற்கொலை செய்து கொள்வது அறிவார்ந்த செயலா என்று தான் கேட்டு இருக்கிறேன்
பிற்காலத்தில் உங்கள் வலைப்பதிவை வைத்து பின்னூட்டப் பரணி பாடலாம் போலிருக்கு. போர்க்களம் போல இருக்கு.. :)
***
நான் கடவுள் நம்பிகை பற்றி இந்த பதிவில் எங்கும் குறிப்பிடவில்லை, மூட நம்பிக்கையை மட்டும் தான் குறிப்பிட்டேன்
***
இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு நான் கழண்டுக்கறேன். கடவுள் நம்பிக்கையும் சிலருக்கு மூட நம்பிக்கை தான். கங்கைல குளிச்சா பாவம் போகும் அப்படிங்கறது அவங்களோட கடவுள் நம்பிக்கையின் ஒரு அங்கம் தான்.
அதே மாதிரி வருணாசிரம தர்மத்தின் பேருல எனக்கு ஒரு பிடிப்பும் இல்ல. அது சம்பந்தமான போதிய அறிவும் இல்ல. அதுனால நீங்க மூட நம்பிக்கை பத்தி எழுதறதுல எனக்கு ஒரு சலனமும் இல்ல. (சலனம் வந்தது மகாமக குளத்து எடுத்துக்காட்டுன்னால) எல்லா நிகழ்ச்சிக்கும் வருணாசிரமத்த காரணம் காட்டி பொறுப்ப தட்டி கழிச்சிகிட்டு இருக்கறதுக்கு தான் வழிவகுக்குது பகுத்தறிவு பிரச்சாரம். ஐரோப்பால கிறித்துவ மதம் தேய்ந்ததுக்கு பகுத்தறிவு பிரச்சாரம் தேவைபடல. ஏன்னா, அங்க உள்ள அரசாங்கம் வருணாசிரமம், பிராமின்னு காரணம் காட்டி அவங்களோட பொறுப்ப தட்டி கழிக்கல. சுர்ச்க்கு முன்னாடி கூட்ட நெரிசல் வராம பாத்துக்கறாங்க. நதிகளையும், சுற்றுபுரத்தையும் தூய்மையா வச்சிக்க சட்டம் போடறாங்க. எல்லாத்துக்கும் நம்பிக்கைக்கு எதிரா பகுத்தறிவு பிரச்சாரம் பண்றது இல்ல. அடுத்தவனுக்கு பாதிப்பு வராதவழில மத நம்பிக்கை இருக்கும்படி சட்டம் போடறாங்க. பாவ மன்னிப்புக்கு எதிரா பிரச்சாரம் பண்றது இல்ல. பல நாடுகள் மத சார்பற்ற நாடுன்னும் சொல்லிக்கறது இல்ல.
சமீப காலமா நான் ப்ளாக் படிக்கும்போது ஏற்பட்ட பாதிப்பு தான் இந்த பதில். இந்தியாவுல என்ன அத்துமீறல் நடந்தாலும் அதுக்கு காரணமா சொல்றது இந்துத்துவம், வருணாசிரமம், பிராமணர்கள். கொஞ்ச நாள் முன்னாடி மதிமாறன்னு ஒருத்தரோட கேள்வி பதில்கள் படிச்சிகிட்டு இருந்தேன். அதுல யாரோ தெருவுல வெறி நாய்கள் தொல்லை அதிகமா இருக்கேன்னு கேட்ட கேள்விக்கு அவரோட பதில் உயர் சாதீயம் தான். அதுக்கு ஒரு பகுத்தறிவு / கம்யூனிச விளக்கம் வேற.
பகுத்தறிவு பிரசாரத்துக்கு பிறகு சாமியார்கள் குறைந்து உள்ளார்கள் என்பதிலோ, போலி இறை நம்பிக்கை குறைந்து உள்ளதாகவோ எனக்கு தோன்றவில்லை. அப்படி நடந்து இருந்தா நல்லதே. அதே சமயம் பெண்கள் தனியாக ஆசிரமத்துக்கு செல்வது பகுத்தறிவு பிரச்சாரத்தால் தான் குறைந்ததுன்னு உங்களுக்கு தோனிச்சுனா, அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. அப்படின்னா, பெருமளவுல, பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருவது போலி சாமியார்கள் தான் ! அவங்க மாட்டினது தான் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு.
கங்கையில் குளித்தா பாவம் போயடும்ன்னு நம்பிக்கை இருக்கா அப்படிங்கற கேள்விக்கு நேரடி பதில் - இல்லை.
அடுத்தவனுக்கு பாதிப்பு இல்லையென்றால் ஒருவனோட மூட நம்பிக்கையும் தவறு இல்லை என்பதும் என்னோட கருத்து. நேரடியா சொன்னா, ஒருத்தன் வந்து கங்கைல பாவத்த தொலைக்க குளிக்க போறதா சொன்னா அதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. அவன் அப்படி கூறுவதால் அவன பத்தி எனக்கு எந்த மதிப்பீடும் இல்ல. அதுனால யாரும் பாதிப்பு அடையறதா எனக்கு தோனல. அதனால் வரும் பாதிப்புன்னு உங்களுக்கு தோன்றுவது மூட நம்பிக்கையால் வந்தது அல்ல, அரசாங்க சட்ட திட்டத்தாலும், மெத்தன நடைமுறையாலும் தான்.
***
ஓ! அதுவா? வட்டார வழக்கு!
தூய தமிழ் அகரமுதலியை எடுத்துப் பார்த்தால் இருக்காது. கெட்ட சொல் அல்ல.
***
நல்லவேளையா கோவி பதிவு படிக்கரதுன்னால, அகரமுதலி புரிஞ்சது !!!
//அடுத்தவனுக்கு பாதிப்பு இல்லையென்றால் ஒருவனோட மூட நம்பிக்கையும் தவறு இல்லை என்பதும் என்னோட கருத்து.//
I very much agree with what Manikandan says.
More significantly, what is the position of the so called progressives on intolerant religions. ?. Isn't it more dangerous for society as a whole when these 'religion of peace' and 'religion of love' embark on a mission of killing/converting all those who dont believe in them.
Isn't history replete with millions being butchered, cultures destroyed and nations enslaved in the name of these religions ?.
Usually people who have realized their sins and want to become good human beings undertake these tasks to wash off their sins. Maybe it is just symbolic but is not harmful to others.
Why crib about this when there is a bigger danger lurking ?.
புனித நீராடல் என்பது நீங்கள் வெறுக்கும் இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
கிருத்தவம்
சீக்கிய மதம்
யூத மதம்
போன்ற உலக மதங்களில் பலவற்றிலும் உண்டு.
தந்தை (உங்கள் தாயைக் கேவலப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை) பெரியார் குளிக்காத பீடையாதிபதியாக இருந்ததால் குளிப்பதைக் கேவலப்படுத்தும் மந்த புத்தியை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.
சாமி பேரைச் சொல்லியோ, சொல்லாமலோ இருங்கள். ஆனால் தினமும் குளிப்பது உடல் நலத்திற்கு சிறந்தது.
////
கோவி.கண்ணன் நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். இந்து மதம் ஒரு குப்பை என்று. அப்புறமென்ன. அதை தூக்கி எறிந்துவிட்டு இனிமேல் நானோ எனது மனைவி மக்களோ இந்து மதம் கிடையாது என்று சொல்ல வேண்டியதுதானே.
அதைவிட்டு இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அதன் பண்டிகைகளையும் மனைவி மக்களோடு கொண்டாடிகொண்டும் இது போல் முர்ப்போக்காளராக காட்டிக்கொள்ள அவ்வப்போது பதிவிடுவது பெற்ற தாயை கேவலமாக தூஷிப்பதற்கு சமம். மன்னிக்கவும் இவ்வாறு குறிப்பிடுவதற்கு. மேலும் உங்கள் மனதை புண் படுத்தவேண்டும் என்று இவ்வாறு பின்னூட்டமிடவில்லை.
/////
ஏன் ராஜா"ராமன்" இப்படி இந்து சந்து பொந்துனு கத்துரீங்க
மதம் மனிதனுக்கு செய்தது என்ன??
ஒரு வெங்காயமும் இல்லை
மதத்தை வைத்து சிலருக்கு பிழைப்பு நடக்குது அவ்வளாவே
எழவெடுத்த ---பயலுக சாதி சான்றிதல் கொடுனு கேட்கலைனா அந்த வெங்காய மதம் எனக்கு தேவையே இல்லை
நான் மதம் அற்றவன்
விழக்கள் கொண்டாடுவதில் எங்கள் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்கிறேம் , எவனையோ எவனோ கொன்றான் என்பாதற்க்காக நான் தீபாவளி கொண்டாடுவதில்லை
உலகத்தில் திவிரவாதம் அதிகம் மதத்தின் பெயரால் தான் நடக்குது
உங்க கடவுளெங்கே போனார்
எல்லாம் பாவபுண்ணியம் என்று நீங்கள் இப்போது பேசலாம்
உங்கள் வீட்டு கூரைக்கு ஒருவன் தீ வைத்தால் இது என் பாவபுண்ணிய கண்க்கு என்று அமைதியா இருப்பீரோ
என்ன செய்ய குழந்தைக்கு தாய்பால் தரும்போதே மதம் , உயர்ந்தஜாதி பொன்ற போதை வஸ்த்துக்களும் கலந்து தரப்பட்டு மூளை மழுங்கி கிடகும் உங்களை என்ன சொல்லி திருத்துவாது
////
சினிமா தியேட்டர் வெளியில கூட தான் கூட நெரிசல்ல சாவறாங்க. ஏன் ஸ்கூல் குழந்தைங்க கூட தான் வெந்து சாவறாங்க. அதுனால, ஸ்கூலுக்கு போக கூடாது, சினிமாவுக்கு போக கூடாதுன்னு சொல்லறது என்ன பகுத்தறிவு ?
////
நன்றி மணிகண்டன்
எப்படியோ தியேட்டர் அதிபரூம் உங்கள் கடவுளும் ஒன்று(வியபாரிகள்) என்று ஒப்புகொண்டுவிட்ட்டிர்கள்
///
ரோஜா இதழுக்கு நல் வாசம் உண்டு என்பதை நிரூபிக்க அறிவியல் ஆராச்சி லேப் எல்லாம் தேவை இல்லை. அது போன்றது தான் இந்து மதம்.
////
நன்பரே
இந்து மதம் ரோஜாவை போன்றதா என்பதுதான் கேள்வியே
ரோஜாவுக்க்கு வாசம் உண்டு என்பதில் அல்ல
***
நன்றி மணிகண்டன்
எப்படியோ தியேட்டர் அதிபரூம் உங்கள் கடவுளும் ஒன்று(வியபாரிகள்) என்று ஒப்புகொண்டுவிட்ட்டிர்கள்
***
ஆமாங்க ப்ரியமுடன் பிரபு !!!
இப்படி எத்தனை பதிவுகளைப் பதித்தாலும்... படித்தாலும்.. எதும் மாறாது.
சமுகத்திற்கு உபயோகமான பதிவு நண்பரே!
கோவி சார் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்து பங்கு கொள்ள எங்களைப்போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து நேரமும் ஒதுக்கியதற்கு ரொம்பவும் நன்றி. அதே போன்று மதிபாலாவுக்கும் என் நன்றி.
விவாதத்தின் ஊடே சூடான கருத்துக்கள் பரிமாரப்பட்டிருந்தால் பொறுத்தருள்க.
மீண்டும் சந்திப்போம்.
"கோவி சார் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுத்து பங்கு கொள்ள எங்களைப்போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து நேரமும் ஒதுக்கியதற்கு ரொம்பவும் நன்றி. அதே போன்று மதிபாலாவுக்கும் என் நன்றி." நீஙக ஆம்பிள்ளைன்னு நெனை நினைக்கிரான் உங்களுடைய கருத்துக்களை அனைத்து மதங்களுக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்
புனிதமான கங்கை நீரை தூய்மைப்படுத்த அரசாங்கம் பில்லியன் கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன.
கங்கை( மிருகங்கள் தன்னை நக்கி நக்கி தூய்மைப்படுத்திக்கொள்வதுப் போல்,) தானே தூய்மையாகிவிடுமாம்மே.. :), பின்னே எதற்க அவசியமற்ற இந்த செலவுகள்..
புதசெவி
மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கை மேல் மறிதலிப்பு வரக்காரணமே அதில் உள்ள கோட்பாடுகளே. அது பிராமணர்களுக்கு சாதகமாகவே அவர்களைத்தவிர பிறரை அசிங்கமாக வர்ணிக்கவும், திட்டவுமே உருவாக்கி பயனபடுத்தப்பட்டிருக்கின்றது. புராணங்களில் வரும் கதைகளை அவரவரவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி மாற்றி கூறிவருகின்றனர். இந்த நீராடல் பற்றியும் இப்படித்தான் மாறி, மாறிக் கதைகளை கூறி வருகின்றனர். ஏர் உழுத பிராமணன் இருக்கின்றானா? மலம் அள்ளுகின்ற பிராமணன் இருக்கின்றானா? இல்லை அதை நான் அருவருப்பு இல்லாமல் செய்கின்றேன் என்று ஒரு பிரமாணன் கூறுவானா? சாதாரணமாக ஒருவரை வேசிமகன் என்று திட்டினால் எவ்வளவு கோபப்படுகின்றோம் ஆனால் அவன் சதா சர்வகாலமும் மந்திரங்கள் மூலமாகவும், பூசைகள் மூலமாகவும் முதலில் தாய் , துணைவி, தந்தை என எல்லோரையும் சகட்டு மேனிக்கு இழித்துரைக்கின்றான். நாம் அதற்கு பரிசாக பணம், அரிசி அனைத்தையும் கொடுத்தனுப்புகின்றோம். உடல் உழைப்பு இல்லாமல் காசு பண்ணவும், பிறர்களை தன் பலத்தின் மூலம் அடக்கி ஆளமுடியாது என்ற காரணத்தினால் அவன் மிக வஞ்சகமாக புகுத்தியவை தான் சாஸ்திரங்களும், மந்திரங்களும். அதன்மூலம் அரசன் முதல் ஆண்டி வரை அடக்கி ஆண்டான் இன்னும் ஆளுகின்றான். அதிலும் பிறரை மிகவும் அசிங்க அசிங்கமாக திட்டியே உச்சாடணைகள் செய்யப்படுகின்றன. இவையனத்தையும் பிறர் (சூத்திரர்கள்-வேசிமகன்) கல்வியறிவு பெற்றதினால் உணர்ந்து கொண்டனர். பிராமணர்களே ஒத்து கொண்டனர். உணர்ந்து கொண்டவர்கள் பகுத்தறிவு வாதியாயினர். இன்னும் பலரை பகுத்தறிவுவாதிகளாக ஆக்க முயல்கின்றனர் இதில் ஒன்றும் தவிறில்லை. இதில் நம்பிக்கை வைத்திருப்பவுர், நம்பிக்கையில்லாதவர் என்று ஒன்றில்லை. எல்லாரும் ஒரு காலத்தில் மூதாதையர்களால் வழிவழியாய் நம்பிக்கையூட்டப்பட்டவர்களே (பெரியார் உட்பட). அதில் உள்ள அசிங்கங்கள் தெரிந்த பின் தங்களை மாற்றிக்கொண்டனர். இதற்கு பெரியாரே சாட்சி.............அவரைத் தொடர்ந்து........ இன்னும் பலர்...நீங்களாகவும் இருக்கலாம்......தொடருட்டும்......பணிகள்
கருத்துரையிடுக