பின்பற்றுபவர்கள்

18 ஆகஸ்ட், 2008

குப்பைகள் !

உலக சுற்றுச் சூழல் அச்சுறுத்தலில் முதன்மை பங்கை வகிப்பது குப்பைகள் தான். மக்கிய குப்பை, மக்காத குப்பை போடுவதற்கு ஏற்ப சென்னை மாநகரத்தில் இரண்டு தொட்டிகளை வைத்திருப்பார்கள், சிங்கையிலும் ரீசைக்கிள் குப்பைத் தொட்டிகள் எங்கும் உண்டு, குளிர்பான அலுமினிய புட்டிகள் (can) , மற்றும் தாள்களைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. அதைத்தவிர ப்ளாஸ்டிக் குப்பைகளைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. ப்ளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகளைக் குறைக்கவும் பல்வேறு நடவெடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். பேரங்காடிகளுக்கு வருபவர்கள் கைப்பையை உடன் எடுத்துவருவதன் மூலம் ப்ளாஸ்டிக் பை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதியாகிறது.

சென்னைப் போன்ற இந்திய நகரங்களில் ஒரு ரூபாய் தண்ணீர் பாக்கெட்டுகளால் ப்ளாஸ்டிக் குப்பை மிகுதியாகிறது. இந்த குப்பைகள் கொட்டப்படும் நிலங்களை ஒன்றும் செய்யமுடியாமல் பாழ்பட்டுவிடும், மேலும் ப்ளாஸ்டிக் பொருள்களை எரிப்பதனால் ஏற்படும் புகை சுற்றுபுரம் மற்றும் காற்றின் தூய்மைக் கேட்டையும் மிகுதியாக்கிவிடும், சென்னை போன்ற பெருநகரங்களின் தண்ணீருக்காக பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை தடைசெய்யாவிட்டால் தூய்மைக்கேட்டை வெகு விரைவில் அடைவது திண்ணம். முடிந்த அளவு தூயத்தண்ணீரை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றே அருந்தினால் ப்ளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கையிலான பயன்பாடு குறையும். அல்லது அவைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.

எழுதவந்தது இது அல்ல, சுற்றுப்புர சூழலுக்காக என்னால் முடிந்த ஒட்டுத்தகவல் தான் அது.

*********

நம் இந்தியர்கள் வெளிநாடுகளில் துப்புரவு பணியாளராக வேலை செய்வதை கெளரவ குறைச்சலாக நினைப்பது இல்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள வெளிநாடுகளின் விமானநிலையங்களில் துப்புரவு தொழிலாளராக ஒரு இந்திய பணியாளராவது இருப்பார்கள். இவர்கள் இந்தியாவில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. டெல்லியைத் தவிர்த்து வேறெங்கிலும் பார்பனர்கள் துப்புறவு பணி செய்வதில்லை. இந்தியாவெங்கிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்கள் பலரும், பிற்பட்டவர்களில் வெகுசிலரும் அந்த வேலையைச் செய்துவருகிறார்கள், வெளிநாட்டில் ? மிகுதியாக பிற்பட்ட வகுப்பினர்கள் கூட அந்த வேலையைச் செய்கிறார்கள்.

வெளிநாட்டு பணம் என்றால் செய்யமுடிகிறது ? உள்நாட்டில் இவர்களால் இதைச் செய்யமுடியவில்லையே ஏன் ? இந்தியாவின் பண மதிப்புத்தான் காரணமா ? இந்தியாவில் குப்பை அள்ளுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் என்றால் எந்த வகுப்பினராக இருந்தாலும் சென்றுவிடுவார்களா ? வறுமை காரணமாக அந்த வேலையை பலபிரிவினரில் சிலர் அதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும் விருப்பத்தின் பேரில் அதைச் செய்யமாட்டாகள். இந்தியாவில் அதே வேலையை இந்தியர்கள் விருப்பத்துடன் செய்கிறார்களா ? வெளிநாடு, உள்நாடு எங்குமே இந்தியர்கள் அதை விருப்பத்துடன் செய்வதில்லை. வயிற்றுப்பாட்டுக்காகத்தான் செய்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் தவிர்த்து பிற பிரிவினர்கள் வெளிநாட்டில் அதே வேலையைச் செய்யும் போது இந்தியாவில் செய்யமுடியவில்லையே ஏன் ? இதற்கு காரணம் இந்தியாவில் தொழில் அடிப்படையில் ஒருவருக்கு உயர்வு, தாழ்வும், இழிவும் கற்பிப்பது ஆகும்.

சிங்கையில் 10 ஆண்டுகளாகப் பார்க்கிறேன். இங்கு துப்புறவு பணியாளராக இருக்கும் சீன ஊழியரை அலுவலகத்தில் இருக்கும் பிறர் அலுவலக முதலாளி உட்பட எவரும் தாழ்வாக நினைப்பது இல்லை. அவர்கள் தொட்டதை நான் தொடமாட்டேன் என்று வேலையை வைத்து தாழ்வாக நினைப்பது இல்லை. குறிப்பாக எந்த ஒரு மனிதனுக்கும் கிடைக்கும் மரியாதைக் குறைவு, இழிவு இங்கு தொழில் சார்ந்ததாக இல்லை. இந்தியாவில் இருந்து வந்திருக்கும் துப்புறவு தொழிலாளர் குப்பை அள்ளுவதால் அவர்களை யாரும் அவமானப்படுத்தியது இல்லை. அது ஒரு தொழில், போதிய அளவு படிக்காததால் அந்த வேலையை வயிற்றுப்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள் அவ்வளவுதான், 'இந்த வேலை இங்கு பார்த்தேன்' என்று இந்தியாவில் சொன்னாலே அவமானம் என்ற அளவுக்குத்தான் தொழிலடிப்படையில் தாழ்வு கற்பிக்கப்பட்டு, 'துபாயில கக்கூஸ் தானே...கழுவினாய் ?' என்று கேட்பதை நகைச்சுவை வசனமாக்கி (படம் : வெற்றிக் கொடிகட்டு), அதை ரசிக்கும் வண்ணம் தொழில்பற்றிய இழிவு நிலை இன்னும் 90 விழுக்காடு இந்தியர்கள் மனதில் இருக்கவே செய்கிறது.

வெளிநாட்டில் அருவெறுப்பின்றி வேலை செய்தாலும், இன்னவேலை செய்தோம் என்ற சொல்வதே, அதாவது அந்த வேலையின் செயலைவிட, வேலையின் பெயரைச் சொல்வதே அவமானம் என்று தானே செய்பவர்கள் நினைக்கவேண்டிய நிலை இருக்கிறது! வெளிநாட்டில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியர் எவரும் வெளிநாட்டினரிடம் இயல்பாக பேசுவார்கள், இந்தியர்களைக் கண்டால் அவர்களின் இயல்பு சட்டென்று தொலைந்து, தாழ்வுணர்ச்சிக்கு வந்து சோகமாகிவிடுவார்கள். பலமுறை அதனை கவனித்து இருக்கிறேன். முடிந்த அளவுக்கு அவர்களைப் பற்றி விசாரித்து இயல்பாக பேசவைக்க முயற்சிப்பேன். வயதைப் பொருத்து 'அண்ணா,/ தம்பி எந்த ஊரு நீங்கள்?, எப்போ இங்கே வந்திங்க, திருமணம் ஆகிவிட்டதா ?' என்றெல்லாம் கேட்கும் போது இயல்பாக பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

நம்மைப் பார்ததும் 'இந்த தொழிலைச் செய்கிறோம், அவர்கள் நம்மை இழிவாக நினைப்பார்களே' என்று மனநிலைக்குக் கொண்டு சென்று தாழ்வுணர்ச்சியில், மனம் வாடும் அளவுக்கு தொழில் முறை இழிவுகள் நம்நாட்டில் புறையோடி இருக்கிறது. வசூல்ராஜா படத்தில் தரை துடைக்கும் ஒரு பெரியவரைக் கமல் கட்டியணைக்கும் போது காட்சி என்றாலும் ஈரமுள்ள நெஞ்சினருக்கு கண்களில் ஓரத்தில் ஈரம் சுரக்கும்.

எந்த வேலையும் இழிவு அல்ல, உழைக்க மறுத்தும், குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தும், அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்வதைவிட துப்புரவு பணி தாழ்வானது அல்ல. குறிப்பிட்ட தொழில் இழிவென்றால் அதே தொழிலை எவரும் செய்ய முன்வராத போது, அந்த வேலைக்கு மாதம் கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்தால், உயர்கல்வி படித்தவன் கூட அந்த வேலையைத்தான் தேர்ந்தெடுப்பான். எந்த ஒரு தொழிலையும் தாழ்வாக நினைப்பவர்கள் தான் குப்பைகள்.

31 கருத்துகள்:

SurveySan சொன்னது…

////வெளிநாட்டு பணம் என்றால் செய்யமுடிகிறது ? உள்நாட்டில் இவர்களால் இதைச் செய்யமுடியவில்லையே ஏன் ? இந்தியாவின் பண மதிப்புத்தான் காரணமா ? இந்தியாவில் குப்பை அள்ளுபவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் என்றால் எந்த வகுப்பினராக இருந்தாலும் சென்றுவிடுவார்களா ?///


கண்டிப்ப்பா, தேவை இருக்க்ரவங்க செய்வாங்க!

பெயரில்லா சொன்னது…

கோவி,

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

வெளிநாடு செல்பவர்களைக் குறித்த ஏளனம் இன்னுமிருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் கோவையில் ஒருவர் தனது ஓய்வு நேரத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் பிறரது கழிவறையைச் சுத்தம் செய்கிறார்.

கற்கை நன்றே

வெண்பூ சொன்னது…

சரியான கருத்துக்கள் கோவி.கண்ணன். வெளிநாடுகளைப் பொறுத்தவரை எந்த வேலையும் தாழ்வானதில்லை (நம் ஆட்களுக்கே). சிறந்த உதாரணம் ராஜிவ் காந்தி முதன் முதலாக சோனியா காந்தியை பார்த்தது ராஜிவ் படித்துக் கொண்டே பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பேக்கரியில் என்று படித்ததாக நினைவு.

ஆனால் இந்தியாவில் ஒரு ராகுல் காந்தியோ, உதயநிதி ஸ்டாலினோ, கார்த்தி சிதம்பரமோ படித்துக் கொண்டிருக்கும்போதே அடையாறு பேக்கரியில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் நம்மால் எத்தனை பேரால் அவர்களைத் தாழ்வாக நினைக்காமல் இருக்க முடியும்? உண்மையில் வெளியில் இருக்கும் குப்பையை விட நமது மனதில் இருக்கும் குப்பை அதிகம்தான்.

கிரி சொன்னது…

//குறைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுதியாகிறது//

உண்மை. IKEA போன்ற பேரங்காடிகளில் அவர்கள் கொடுக்கும் பைகளுக்கு 10 சென்ட் வசூலிக்கிறார்கள். இதை தவிர்க்க அனைவரும் வரும் போதே பைகளை எடுத்து வருகிறார்கள். இது நல்ல யோசனையாக எனக்கு படுகிறது.

//வெளிநாட்டில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியர் எவரும் வெளிநாட்டினரிடம் இயல்பாக பேசுவார்கள், இந்தியர்களைக் கண்டால் அவர்களின் இயல்பு சட்டென்று தொலைந்து, தாழ்வுணர்ச்சிக்கு வந்து சோகமாகிவிடுவார்கள்//

உண்மை தான்.

//எந்த ஒரு தொழிலையும் தாழ்வாக நினைப்பவர்கள் தான் குப்பைகள்.//

மொத்த பதிவும் இந்த ஒரு வரியிலேயே முடிந்து விட்டது :-)

கோவி கண்ணன்..பதிவா போட்டு தாக்குறீங்க.....கலக்குங்க கலக்குங்க ;-)

Sivaram சொன்னது…

ஐந்து நட்சத்திரப் பதிவு !!!

Subash சொன்னது…

நல்ல பதிவு கண்ணன்.
இந்த விடயத்தில் அப்படி வேலை செய்பவர்களை குறைவாக நினைப்பவர்கள் திருந்தினால் வேலை செய்பவர்களும் சகஜமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
சுபாஷ்

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் குப்பை அள்ளும் தொழிலுக்கு வந்த போது, துப்புர‌வாளர் பணிக்கு அவர்கள் நடத்திய நேர்முகத்தேர்வுக்கு பல தரப்பினரும் வந்திருந்தனர். அதில் பலர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் துப்புரவு தொழிலில் ஈடுபடும் குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்புக்கும் ஆளானார்கள்.
ஓனிக்ஸ் குறைந்தபட்சம் கையுறை மற்றும் கருவிகளையெல்லாம் கொடுத்தது, நல்ல சீருடையும் அளித்தது. ஆனால் காலப்போக்கில் அதில் வேலை பார்ப்பவர்களும் அதையெல்லாம் கழட்டி போட்டுவிட்டுத்தான் வேலை செய்தனர்.

திருச்சி மாநகராட்சியில் எல்லோருக்கும் கையுறை, முகக் கவசம், ரப்பர் ஷீ போன்றவை அளித்தார்கள். ஆனால் எத்தனை துப்புரவாளர்கள் அதை பயன்படுத்துகின்றார்கள்? கேட்டால் அதையெல்லாம் போட்டுக்கொண்டு குப்பை அள்ள முடியாது என்கிறார்கள். இங்கு கையுறை இல்லாமல் யாராவது குப்பை அள்ளுவதை பார்க்க முடியுமா?

சிங்கப்பூர் வந்த புதுசுல இங்க இருக்க வசதிகளையெல்லாம் பார்த்துட்டு உடனே என் மனசு நம்ம ஊருக்கு அதை கொண்டு போய் பார்க்கும். ஆனா நம்ம ஊர்ல அதை நடைமுறைப்படுத்துரதுல இருக்க சிக்கல்களையெல்லாம் யோசிச்சுட்டு குழம்பிடுவேன். நம்ம ஊர திருத்துரப்பத்தி ரொம்ப யோசிச்சா ஒன்னு பைத்தியக்காரனாகிடுவோம், இல்லைன்னா நக்ஸலைட் ஆயிடுவோம். மிதமா யோசிச்சா பதிவு எழுதி தள்ளிக்கிட்டு இருப்போம். இதுதான் நம்மால முடிஞ்சது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் குப்பை அள்ளும் தொழிலுக்கு வந்த போது, துப்புர‌வாளர் பணிக்கு அவர்கள் நடத்திய நேர்முகத்தேர்வுக்கு பல தரப்பினரும் வந்திருந்தனர். அதில் பலர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் துப்புரவு தொழிலில் ஈடுபடும் குறிப்பிட்ட சமூகத்தினரின் எதிர்ப்புக்கும் ...
//

பால்ராஜ்,

தமிழ்நாட்டு வெயிலுக்கு கை உறை, கால் உறையெல்லாம் போட்டுக் கொண்டால் மனுசன் செத்து தான் போவான் ! நம்ம ஆளுங்க காலில் செருப்பு இல்லாமல் நடந்தே பழகிவிட்டார்கள், ஒரு அரைக்கால் சட்டையுடனேயே அந்த வேலையைச் செய்துவிடுவார்கள். இங்கு எழுதி இருக்கும் பிரச்சனை பாதுகாப்பு குறித்தது அல்ல, அவர்களை சக மனிதராக நடத்தப்படாது தான்.

anujanya சொன்னது…

கண்ணன், நல்ல பதிவு. ஆனால், ஜோசப் சொல்லுவதில் ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது. துப்புரவு பணி என்பது உடல் நலனுக்கு நிச்சயம் ஓரளவு கேடு விளைவிக்கும், தகுந்த பாதுகாப்பு இல்லாவிடில். அது இந்திய ஆழ்மனங்களில் இன்னும் சென்று சேரவில்லை. சமீபத்தில் (ரஜினி-பசுபதி அட்டைப்படம்) விகடன் இதழில் குப்பை பொறுக்கும் சிறார்கள் பற்றி ஒரு பத்தி வந்திருந்தது. அவர்கள் தோல் அரிப்பு, இருமல் போன்ற உபாதைகளினால் மிகவும் அவதியுறுகிறார்கள்.

ஆதி காலத்தில் அவர்கள் விலக்கப்பட்டது பெரும்பாலும் சுகாதாரம் சரி இல்லை என்பதால் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதற்கு ஜாதி சாயம் பூசப்பட்டு விட்டது. சக மனிதராக நடத்த வேண்டும் எனில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களுக்கும் சுகாதார உரிமைகள் உண்டு என்று அனைவரும் அறிய வேண்டும்.

அனுஜன்யா

பி.கு. இவ்வளவு நல்ல மனிதரையா, குசும்பன் இந்தத் தாக்கு தாக்குகிறார்!

பரிசல்காரன் சொன்னது…

எங்கள் முதலாளியின் சகோதரி மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டே பார்ட் டைமில் பணிபுரிகிறார். சென்றமுறை இந்தியா வந்தபோது சொன்னார்: ”ஒரு ஹோட்டல்ல சர்வர் வேலை! அப்துல்கலாமுக்கு பரிமாறியிருக்கிறேன்”

இங்கே, சாதாரண ஹோட்டலுக்குள்கூட சாப்பிட செல்லமாட்டார் அவர்!

என்ன சொல்ல?

manikandan சொன்னது…

****எந்த ஒரு தொழிலையும் தாழ்வாக நினைப்பவர்கள் தான் குப்பைகள்*****

நச்ன்னு சொல்லி இருக்கீங்க.

கையேடு சொன்னது…

அருமையான பதிவு திரு.கோவி. கண்ணன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சூப்பரான பதிவு... நல் கருத்துக்கள்.

Unknown சொன்னது…

மிக நல்ல பதிவு ஜி.கே.

எங்கள் ஊரில் நல்ல குடும்பத்தில் உள்ளவர் இங்கு மாநகராட்சியில் குப்பை அள்ளுபவராக வேலை செய்தார். அவர் ஊர்க்காரர்களுடன் தங்குவதையே தவிர்த்தார். நம்மவர்களுக்கு மத்தியில்தான் இந்தக் கோளாறு. அரபிகள் அவரை அழைக்கும் போது நண்பரே (ஹபீபி) என்றே அழைத்தனர்.

நேர்மையான தொழிலாயிருந்தால் எந்தத் தொழிலிலும் தாழ்வில்லை. திருடுவதும், பொய் சொல்வதும், பிச்சை எடுப்பதும்தான் கேவலமானது என்று என் தாயார் அடிக்கடி சொல்லி வந்தது நினைவுக்கு வருகிறது.

Kanchana Radhakrishnan சொன்னது…

//குறிப்பிட்ட தொழில் இழிவென்றால் அதே தொழிலை எவரும் செய்ய முன்வராத போது, அந்த வேலைக்கு மாதம் கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்தால், உயர்கல்வி படித்தவன் கூட அந்த வேலையைத்தான் தேர்ந்தெடுப்பான்.//
unmaiyaana varikal.

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்டிப்ப்பா, தேவை இருக்க்ரவங்க செய்வாங்க!

12:10 PM, August 18, 2008
//

சர்வேஷன்,
சரிதான். கூப்பிட்டு யாரும் வரவில்லை என்றால் அவரவர்கள் சாக்கடையை, கழிவரையின் அடைப்பை நீக்க அவரவர்தானே வேலை செய்தாவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வடகரை வேலன் said...
கோவி,

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

வெளிநாடு செல்பவர்களைக் குறித்த ஏளனம் இன்னுமிருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் கோவையில் ஒருவர் தனது ஓய்வு நேரத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் பிறரது கழிவறையைச் சுத்தம் செய்கிறார்.

கற்கை நன்றே

12:18 PM, August 18, 2008
//

வெளிநாடு செல்பவர்கள் குறித்த ஏளனம் இல்லை, வெளிநாட்டில் கழிவரை சுத்தம் செய்பவர்கள் பற்றிய ஏளனம் இன்னும் இருக்கிறது. தொழிலை தாழ்வாகச் சொல்வதால் தானே செய்பவர்கள் கூச்சப்பட வேண்டி இருக்கிறது. தொழில் தாழ்வாக்கப்படவில்லை என்றால் உள்நாட்டில் கூட பலசமூகத்தினரும் அந்த வேலைகளை செய்வதை தாழ்வாக நினைக்காமல் செய்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வடகரை வேலன் said...
கோவி,

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

வெளிநாடு செல்பவர்களைக் குறித்த ஏளனம் இன்னுமிருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் கோவையில் ஒருவர் தனது ஓய்வு நேரத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் பிறரது கழிவறையைச் சுத்தம் செய்கிறார்.

கற்கை நன்றே

12:18 PM, August 18, 2008
//

வெளிநாடு செல்பவர்கள் குறித்த ஏளனம் இல்லை, வெளிநாட்டில் கழிவரை சுத்தம் செய்பவர்கள் பற்றிய ஏளனம் இன்னும் இருக்கிறது. தொழிலை தாழ்வாகச் சொல்வதால் தானே செய்பவர்கள் கூச்சப்பட வேண்டி இருக்கிறது. தொழில் தாழ்வாக்கப்படவில்லை என்றால் உள்நாட்டில் கூட பலசமூகத்தினரும் அந்த வேலைகளை செய்வதை தாழ்வாக நினைக்காமல் செய்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
சரியான கருத்துக்கள் கோவி.கண்ணன். வெளிநாடுகளைப் பொறுத்தவரை எந்த வேலையும் தாழ்வானதில்லை (நம் ஆட்களுக்கே). சிறந்த உதாரணம் ராஜிவ் காந்தி முதன் முதலாக சோனியா காந்தியை பார்த்தது ராஜிவ் படித்துக் கொண்டே பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பேக்கரியில் என்று படித்ததாக நினைவு.

ஆனால் இந்தியாவில் ஒரு ராகுல் காந்தியோ, உதயநிதி ஸ்டாலினோ, கார்த்தி சிதம்பரமோ படித்துக் கொண்டிருக்கும்போதே அடையாறு பேக்கரியில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் நம்மால் எத்தனை பேரால் அவர்களைத் தாழ்வாக நினைக்காமல் இருக்க முடியும்? உண்மையில் வெளியில் இருக்கும் குப்பையை விட நமது மனதில் இருக்கும் குப்பை அதிகம்தான்.

1:13 PM, August 18, 2008
//

வெண்பூ,

உதாரணத்துடன் மிகச் சரியான கருத்துரைத்தீருக்கிறீர்கள். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோவி,

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

வெளிநாடு செல்பவர்களைக் குறித்த ஏளனம் இன்னுமிருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் கோவையில் ஒருவர் தனது ஓய்வு நேரத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் பிறரது கழிவறையைச் சுத்தம் செய்கிறார்.

கற்கை நன்றே

12:18 PM, August 18, 2008
//

வேலன்,

அந்த கட்டுரையைப் படித்தேன். என்ன சொல்வது ? 'நல்லார் ஒருவர் பொருட்டே எல்லோர்க்கும் பெய்யும் மழை !' என்று பாராட்ட முடிகிறது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...


மொத்த பதிவும் இந்த ஒரு வரியிலேயே முடிந்து விட்டது :-)

கோவி கண்ணன்..பதிவா போட்டு தாக்குறீங்க.....கலக்குங்க கலக்குங்க ;-)

1:31 PM, August 18, 2008//

பாராட்டுக்கு மிக்க நன்றி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
ஐந்து நட்சத்திரப் பதிவு !!!

1:53 PM, August 18, 2008
//

:)
பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுபாஷ் said...
நல்ல பதிவு கண்ணன்.
இந்த விடயத்தில் அப்படி வேலை செய்பவர்களை குறைவாக நினைப்பவர்கள் திருந்தினால் வேலை செய்பவர்களும் சகஜமாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
சுபாஷ்

2:28 PM, August 18, 2008
//

சுபாஷ்,
ச்பாஷ் !
நேரடியாகவே அதை உணர்ந்திருக்கிறேன். இங்கு குடியிருப்பில் துப்புறவு வேலையில் பங்களாதேசிகள் தான் இருப்பார்கள். அவர்களிடம் இயல்பாகவே பேசுவேன். மகிழ்ச்சியடைவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
கண்ணன், நல்ல பதிவு. ஆனால், ஜோசப் சொல்லுவதில் ஒரு ஆழமான விஷயம் இருக்கிறது. துப்புரவு பணி என்பது உடல் நலனுக்கு நிச்சயம் ஓரளவு கேடு விளைவிக்கும், தகுந்த பாதுகாப்பு இல்லாவிடில். அது இந்திய ஆழ்மனங்களில் இன்னும் சென்று சேரவில்லை. சமீபத்தில் (ரஜினி-பசுபதி அட்டைப்படம்) விகடன் இதழில் குப்பை பொறுக்கும் சிறார்கள் பற்றி ஒரு பத்தி வந்திருந்தது. அவர்கள் தோல் அரிப்பு, இருமல் போன்ற உபாதைகளினால் மிகவும் அவதியுறுகிறார்கள். //

அனுஜன்யா ,
அதை நான் மறுக்கவில்லை. ஏற்கிறேன். அவை தனிப்பதிவாக பேசப்படவேண்டியவை. அது உடல்நலம் சார்ந்தவை. இங்கு பொதுநலம் பற்றி சொல்லிவருகிறேன்.

//ஆதி காலத்தில் அவர்கள் விலக்கப்பட்டது பெரும்பாலும் சுகாதாரம் சரி இல்லை என்பதால் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதற்கு ஜாதி சாயம் பூசப்பட்டு விட்டது. சக மனிதராக நடத்த வேண்டும் எனில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்களுக்கும் சுகாதார உரிமைகள் உண்டு என்று அனைவரும் அறிய வேண்டும். //

ஆதிகாலத்தில் சுகாதாரமின்மையால் விலக்கப்பட்டது என்றால், அவன் விரல் தொட்டு கறந்து கொடுத்த பாலைத்தானே குடித்தார்கள், 'பால் தீட்டு இல்லை' என்றெல்லாம் வசதிக்கேற்ப புழுகினார்களே, தீண்டாமையை எந்த காரணத்தைக் கொண்டு ஞாயப்படுத்துபவகளுக்கு ஆதரவாக நாம் எதுவும் சொல்லிவிடாமால் கவனமாக இருக்க வேண்டும். குப்பை சுகாதாரமற்றது என்று நினைப்பதில் தவறு அல்ல, அந்த வேலை செய்பவனும் அப்படி என்பது இழிவுதானே ? யார் தான் உடலுக்குள் மலத்தை சுமக்காமல் இருக்கிறார்கள் ? சுகாதாரமெல்லாம் வெளியில் தானே, உள்ளுக்குள் இல்லையே !

//அனுஜன்யா

பி.கு. இவ்வளவு நல்ல மனிதரையா, குசும்பன் இந்தத் தாக்கு தாக்குகிறார்!

3:39 PM, August 18, 2008
//

குசும்பன் என்னை தாக்குவதா ? அவன் என் தம்பி ! அவனோட திருமணத்திற்கு பரிசு பொருள் வாங்கி அனுப்பவில்லை என்ற கோபத்தில் இருக்கிறான்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
எங்கள் முதலாளியின் சகோதரி மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டே பார்ட் டைமில் பணிபுரிகிறார். சென்றமுறை இந்தியா வந்தபோது சொன்னார்: ”ஒரு ஹோட்டல்ல சர்வர் வேலை! அப்துல்கலாமுக்கு பரிமாறியிருக்கிறேன்”

இங்கே, சாதாரண ஹோட்டலுக்குள்கூட சாப்பிட செல்லமாட்டார் அவர்!

என்ன சொல்ல?

3:41 PM, August 18, 2008
//

பரிசல்,

இந்தியாவில் இது இதெல்லாம் கவுரமான விசயம் என்ற அபத்தமான வரைமுறை வைத்திருக்கிறார்கள். அதற்கு பயந்து இந்தியா வரும் போது அப்படி செய்கிறார் போல.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
****எந்த ஒரு தொழிலையும் தாழ்வாக நினைப்பவர்கள் தான் குப்பைகள்*****

நச்ன்னு சொல்லி இருக்கீங்க.

4:10 PM, August 18, 2008
//

பட்டுக்கோட்டைப் பாட்டில் சொன்னாரே .......ரிப்பீட்டு.....
வசூல்ராஜா கமல் மாதிரி கட்டியணைத்துப் பாடி இருந்தால் நல்லா இருந்திருக்குமே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
அருமையான பதிவு திரு.கோவி. கண்ணன்.

4:15 PM, August 18, 2008
//

கையேடு ,
பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
சூப்பரான பதிவு... நல் கருத்துக்கள்.

4:39 PM, August 18, 2008
//

விக்கி,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//சுல்தான் said...
மிக நல்ல பதிவு ஜி.கே.
//
பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

//எங்கள் ஊரில் நல்ல குடும்பத்தில் உள்ளவர் இங்கு மாநகராட்சியில் குப்பை அள்ளுபவராக வேலை செய்தார். அவர் ஊர்க்காரர்களுடன் தங்குவதையே தவிர்த்தார். நம்மவர்களுக்கு மத்தியில்தான் இந்தக் கோளாறு. அரபிகள் அவரை அழைக்கும் போது நண்பரே (ஹபீபி) என்றே அழைத்தனர்.//

இதைத்தான் பலரும் வெளிநாட்டில் பார்க்கிறோம். நாம முன்வந்து அவர்களை அரவணைக்காவிடில் அவர்களுக்கு தாழ்வுணர்வு போகாது. ஆனால் மாறாக என்ன நினைக்கிறார்கள் தெரியுமா ?

'கழிவரை வேலை செய்து, இந்தியர்களையே கேவலப்படுத்துகிறார்களே' என்று தான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் அவர்கள் எதோ அரசு தூதுவராக வந்தது போல் கழிவரை வேலை செய்யும் இந்தியர்கள் பற்றி இழிவாக நினைக்கிறார்கள்.

//நேர்மையான தொழிலாயிருந்தால் எந்தத் தொழிலிலும் தாழ்வில்லை. திருடுவதும், பொய் சொல்வதும், பிச்சை எடுப்பதும்தான் கேவலமானது என்று என் தாயார் அடிக்கடி சொல்லி வந்தது நினைவுக்கு வருகிறது.

7:13 PM, August 18, 2008
//

உங்கள் தாயார் போற்றூதலுக்குரியவர், பெற்றோர்கள் தான் பிள்ளைகளை சரியாக வழிநடத்தமுடியும் !

10:48

ISR Selvakumar சொன்னது…

நம்ம ஆளுங்க பிளைட் ஏறின அடுத்த நாளே மனம்,குணம் மாறிடுவாங்க.

குப்பை விஷயத்தில் இந்தியர்களின் மனது ஒரு குப்பை என்பதை அருமையாக எழுதியுள்ளீர்கள்

Kalaiyarasan சொன்னது…

இந்தியாவில் இந்த நிலை மாறுவதற்கு, மேலை நாடுகளில் நடந்தது போல ஒரு கலாச்சாரப்புரட்சி நடக்க வேண்டும். முதலில், குடும்பத்தில் உள்ள வேலைப்பிரிவினை (ஆணுக்கொரு வேலை, பெண்ணுக்கு ஒரு வேலை) ஒழிய வேண்டும். தொழிலில் உள்ள ஏற்றத்தாழ்வு, அதி குறைந்த, அதி கூடிய சம்பளம் கொடுப்பதால் உண்டாகின்றது. துப்பரவு பணியாளர்களை நிரந்தர வறுமையிலேயே வாழ வைப்பதற்காக, அதி குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகின்றது. அரசும், தொழிலதிபர்களும் மனசு வைத்தால், இந்த நிலமையை மாற்றலாம். மேலை நாட்டிலிருந்து நல்ல விடயங்களை கற்றுக்கொள்வோம்.

-கலையரசன்
http://kalaiy.blogspot.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்