பின்பற்றுபவர்கள்

31 ஜூலை, 2008

ரஜினி மன்னிப்புக் கேட்டார் ! நாமும் மன்னிப்போம் !

ஒகனேக்கல் விவகாரத்தில் உணர்ச்சிவசப் பட்ட ரஜினிகாந்த் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே உரிமை எடுத்துக் கொண்டு கன்னடர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகளிடமிருந்து ரஜினிக்கு எதிர்ப்புக் கிளம்பியது தெரிந்ததே.

குசேலன் படம் பெங்களூரில் வெளியிட முடியாதபடி வாட்டாள் கும்பல்கள் தொடர்ந்து அச்சுறுத்திவர, குசேலன் படத் தயாரிப்பாளர்களும் ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து இருப்பார்கள் என்றே நினைக்க முடிகிறது. அதைத் தொடர்ந்து கன்னட திரைப்பட சங்கத்தலைவருக்கு (சபரிமலை அய்யன் புகழ் அதே ஜெயமாலா) மன்னிப்பு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதை செய்தியாளர்களுக்கு முன்பு எடுத்துக்காட்டி ரஜினி தன்னிடமே மன்னிப்பு கோரியுள்ளார் என்பதுபோல் காட்டி அதைத் தனக்கான விளம்பரம் ஆக்கிக் கொண்டார் ஜெயமாலா. இது ரஜினி தரப்பை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கும் என்றே தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் தற்போது (இன்று) தொலைக்காட்சியில் தோன்றி கன்னடர்களிடம் வெளிப்படையான மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்.

மனிதன் தவறு செய்வது இயல்பு, மன்னிப்புக் கேட்பது பாராட்டுக்குரியது, மன்னிப்பு கேட்பது பெரும்தன்மை கூட.

ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம். சொல்றத செய்வேன் செய்றதைச் சொல்லுவேன் என்கிற பத்தரை மாற்று பஞ்ச் டயலாக்குக்கு அவரே பங்கம் வைத்துவிட்டார்.

ரஜினி பல்டிகள் தெரிந்தது தான், எல்லா நடிகர்களும் நெய்வேலிக்கு சென்று போராடிய போது, தனக்கு ஒப்புதல் இல்லை என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர் தான் ரஜினி. கன்னடர்களை கண்டிக்கிறேன் என்று கண்டித்தவர் தற்பொழுது அதைத் திரும்ப பெற்று இருக்கிறார். இதில் அவருடைய தவறு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவர் ஒரு நடிகர் அவருக்கு இருக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு அவருடைய படங்கள் விற்பனையாகின்றன, அதை வாங்கும் வெளியீட்டாளர்கள் ( விநியோகம்) நட்டப்படக் கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. அதைத்தான் செய்து இருக்கிறார். திரைத்துறையினரிடமே அவர் முரண்டு பிடித்தால் அவர் தன்னை நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. தான் ஒரு நடிகன் என்பதை நன்றாகவே உணர்ந்து அந்த முடிவை எடுத்து இருக்கிறார். அது தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதைத் தவிர்த்து இந்த திடீர் மன்னிப்புக்கு காரணம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் அப்பாவி ரசிகர்களும் சரி, பரபரப்பு செய்தி இதழ்களும் சரி, ரஜினி வாய்ஸ் கொடுத்தால் சூரியன் கூட நிலவாகிவிடும் என்று அவரை சீண்டுவதை நிறுத்தவேண்டும், தன்னால் முடியாத ஒன்றை செய்துவிட்டு அவர் படும் பாடு அவருக்குத்தான் தெரியும்.

ரஜினி ஸ்டெயில் உங்களுக்கு பிடித்து இருந்தால் படத்தை 100 முறை கூட பாருங்கள், தலையில் கூட வைத்து கொண்டாடுங்கள், ஆனால் அவரை உலகரட்சகன் போன்று புகழ்வதால் அவருக்கும் நட்டம், உங்களுக்கும் இழுக்கே !

எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும், ஒரு நல்ல மனிதராகத்தான் பார்க்கிறேன். கடவுள் அவதாரம், அகில உலகத்திற்கும் தலைவன் என்று சொல்வதையெல்லாம் கேட்டால் சிரிப்பே வருக்கிறது.

ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூவிவிட்டு அவரை ஒகனேக்கல் விவகாரம் போல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்.

ரஜினி தமிழர்களுக்காக கன்னடர்களைப் பகைத்துக் கொண்டார், கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவர்கள் மன்னித்துவிட்டார்கள். தமிழர் - கன்னடர் விவகாரங்களில் இன்னொமொருமுறை தமிழ்களுக்காக வாய்திறக்கமாட்டேன் என்று மறைமுகமாக சொல்லாமல் சொல்லியதை நாமும் மன்னிப்போம். ரஜினியைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் தமிழருக்கு எதிராக வன்முறையில் இறங்கும், கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேறு தலைவர்களே இல்லையா ? இல்லை.... ரஜினியே சொல்லிவிட்டார் என்ற கன்னடர்கள் தான் அடங்கிவிட்டார்களா ?

*******

இதுபோன்று இனிதர்மசங்கடத்திற்கு ஆளாகவேண்டாம் ரஜினி சார் ! தமிழர்களுக்குஆதரவாக இல்லாவிட்டாலும், எதிர்ப்பாகவே பேசினாலும் கூட இருக்கும் உங்கள் ரசிகர்களில் 50 விழுக்காட்டும் மேல் அதைத் கேட்டு மெய்சிலிர்த்து உங்கள் காலில் விழவும் தயாராக இருக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு உங்கள் கையில் இருப்பதால் நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை பாபா படமே 100 நாள் வரை ஓடிய போது, குசேலனை ஓடவைத்துவிடமாட்டோமா ? நீங்கள் சொல்வதைக் கேட்போர் இங்குண்டு எங்களுக்கெல்லாம் விளக்கம் தேவை இல்லை. கர்நாடகத்தில் தானே நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்பது தேவையான ஒன்று தான். இதைக்கூட கன்னடர்கள் சந்தர்பவாத மன்னிப்பு என்று நினைத்து பிரச்சனையை நீட்டிக்காமல் இருந்தால் நல்லதே !

66 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஹிம்ம்..... :((

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த பதிவை சின்னக் கோடம்பாக்கம், சிங்கை இளம்சிங்கம், சின்ன ரஜினி கிரி அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//பாபா படமே 100 நாள் வரை ஓடிய போது, குசேலனை ஓடவைத்துவிடமாட்டோமா ?//
ஆஹா !

கிரி சொன்னது…

கோவி கண்ணன் உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் ஹி ஹி ஹி ஹி

//எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும்//

நம்பிட்டோம் :-)))

இன்னும் ஒரு மாதத்திற்கு ரஜினி வறுவல் தான் :-)))))))))

பெயரில்லா சொன்னது…

நீங்கள் என்னதான் சொன்னால[ம் ரஜினி மன்னிப்பு கேட்டது தமிழக ரசிகர்களுக்கு வருத்தமானது தான், அரசியல். சினிமா என்ற 2 படகில் பயணம் செய்யாமல் ரஜினி சினிமாவில் மட்டும் கவனம் செல[த்தி இருந்தால் இந்த பிரச்ச[னை எழுந்து இருக்காது, பணம் மட்டும் குறிக்கோளாக இருக்க கூடாது, கருத்து கூறும் போ து தமிழர்களை பற்றி அவர் நினைத்தாரா? நானும் ரஜினி ரசிகன் தான், அதற்காக அவர மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது, கர்நாடகத்தில் படம் ஓடவில்லை என்றhல் லாபம் குறைந்து இருக்கும் அவ்வளவு தான், இதை ரஜினி தனது சம்பளத்தில் ஈடுகட்டி இருக்லாம்,

சின்னப் பையன் சொன்னது…

//ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம்//

சரியா சொன்னீங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் உங்கள் பதிவை எதிர்பார்த்தேன் ஹி ஹி ஹி ஹி

//எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும்//

நம்பிட்டோம் :-)))

இன்னும் ஒரு மாதத்திற்கு ரஜினி வறுவல் தான் :-)))))))))

11:06 PM, July 31, 2008
//

ஹலோ கிரி சார்,

பாண்டியன் படத்திற்கு பிறகு வெளிவந்த அத்தனைப் படங்களையும் பார்த்திருக்கிறேன். நம்புவதும் நம்பாததும் தங்கள் விருப்பம் !

நான் ரஜினி படம் விரும்பிப் பார்ப்பதால் ரஜினிக்கு காவடியும் எடுக்க வேண்டுமா ?

rapp சொன்னது…

அன்றைக்கு ரஜினி அப்படி பேசலைனா (சத்தியராஜ் சார் அப்படி பேசனத்துக்கப்புறம்) அவரோட நிலைமை என்னாகி இருக்கும். ஒரு சாதாரண நடிகரை இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு, அவரும் ஒரு வியாபாரிங்கரதை மறந்திட்டு, சமூகப் புரட்சியாளர் கணக்கா பில்டப் செஞ்சுட்டு, அவர் நான் அதெல்லாம் இல்லைங்கறதை தெளிவுப்படுத்தும் போது ஏன் இப்படி குதிக்கனும்னு தெரியல. படங்கறது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அது மோசமான கருத்தை பரப்பாதவரை இது மாதிரி காரணங்களை சொல்லி திட்டறதில் அர்த்தமில்லைங்கறது என்னோட தனிப்பட்ட கருத்துங்க.

தீரன் சொன்னது…

ரஜினியின் இந்த துரோகச் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தயவு செய்து ரஜினியின் படங்களை புறக்கணியுங்கள் தன்மானத்தமிழர்களே

கிரி சொன்னது…

//நான் ரஜினி படம் விரும்பிப் பார்ப்பதால் ரஜினிக்கு காவடியும் எடுக்க வேண்டுமா ?//

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க.... :-))) இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? :-)

சும்மாவே ரஜினிய போட்டு காய்ச்சுவாங்க.. இன்னைக்கு வாய கொடுத்து வேற மாட்டிகிட்டாரு :-))) சிக்கியாச்சு இனி தப்பவா முடியும் ஹா ஹா ஹா

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//நான் ரஜினி படம் விரும்பிப் பார்ப்பதால் ரஜினிக்கு காவடியும் எடுக்க வேண்டுமா ?//

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க.... :-))) இதுக்கெல்லாம் அசந்தா எப்படி? :-)

சும்மாவே ரஜினிய போட்டு காய்ச்சுவாங்க.. இன்னைக்கு வாய கொடுத்து வேற மாட்டிகிட்டாரு :-))) சிக்கியாச்சு இனி தப்பவா முடியும் ஹா ஹா ஹா

11:38 PM, July 31, 2008
//

ஹிஹி, நீங்க தானே சொல்லுவிங்க நமக்கொரு ஞாயம் ரஜினிக்கு ஒன்னான்னு ? ரஜினியும் சராசரி மனிதன் தான் என்று ஒப்புக் கொண்டீர்களே அது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
//பாபா படமே 100 நாள் வரை ஓடிய போது, குசேலனை ஓடவைத்துவிடமாட்டோமா ?//
ஆஹா !
//

75 நாட்களாவது ஓடியதா இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//anandrey said...
நீங்கள் என்னதான் சொன்னால[ம் ரஜினி மன்னிப்பு கேட்டது தமிழக ரசிகர்களுக்கு வருத்தமானது தான், அரசியல். சினிமா என்ற 2 படகில் பயணம் செய்யாமல் ரஜினி சினிமாவில் மட்டும் கவனம் செல[த்தி இருந்தால் இந்த பிரச்ச[னை எழுந்து இருக்காது, பணம் மட்டும் குறிக்கோளாக இருக்க கூடாது, கருத்து கூறும் போ து தமிழர்களை பற்றி அவர் நினைத்தாரா? நானும் ரஜினி ரசிகன் தான், அதற்காக அவர மன்னிப்பு கேட்டதை ஏற்க முடியாது, கர்நாடகத்தில் படம் ஓடவில்லை என்றhல் லாபம் குறைந்து இருக்கும் அவ்வளவு தான், இதை ரஜினி தனது சம்பளத்தில் ஈடுகட்டி இருக்லாம்,

11:07 PM, July 31, 2008
//

அப்படி செய்தால் கன்னடர்களிடம் அவர் தீராத பகை கொண்டிருப்பதாகக் காட்டாதா ?

kavi சொன்னது…

இனி ரஜினியை ஒரு நடிகராக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, ஒரு தலைவரைப் போல் பார்ப்பதை அநேகம் பேர் நிறுத்திக் கொள்ள வேண்டும்,

கிரி சொன்னது…

//ஹிஹி, நீங்க தானே சொல்லுவிங்க நமக்கொரு ஞாயம் ரஜினிக்கு ஒன்னான்னு ? ரஜினியும் சராசரி மனிதன் தான் என்று ஒப்புக் கொண்டீர்களே அது //

நான் ரஜினி சராசரி மனிதன் இல்லை என்று எப்போது கூறினேன்....சராசரி மனிதன் என்பதாலே அப்படி கூறினேன்.

தற்போது விவாதம் செய்யும் நேரம் இது இல்லை. ரஜினி இவ்வாறு கூறியதை சரி என்று நான் கூறவில்லை, நியாயப்படுத்தி பேசவில்லை. எனக்கும் வருத்தம் தான். நான் எப்போதும் கூறுவது நான் ரஜினி ரசிகன் தான் வெறியன் கிடையாது.

பெயரில்லா சொன்னது…

அப்படி செய்தால் கன்னடர்களிடம் அவர் தீராத பகை கொண்டிருப்பதாகக் காட்டாதா ?
,,
இப்போது இரண்டு பக்கமும் மாட்டீ வீட்டாரோ? இதற்கு உங்கள் பதில் என்ன?

kavi சொன்னது…

5 கோடி ரூபாய்க்காக 5 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிவிட்டார் ரஜினி. அவருக்கு தமிழ் மக்களின் தண்ணீர் பிரச்சனை பெரிதல்ல , தன் சொந்தப் பிரச்சனைதான் பெரிது என நமக்கு புரிய வைத்து விட்டார்.

kavi சொன்னது…

இருந்தாலும் நம் மக்கள் குசேலன் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்களா என்ன , இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை இன்னும் 100 ரஜினிகள் வந்து கொண்டுதானிருப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//ஹிஹி, நீங்க தானே சொல்லுவிங்க நமக்கொரு ஞாயம் ரஜினிக்கு ஒன்னான்னு ? ரஜினியும் சராசரி மனிதன் தான் என்று ஒப்புக் கொண்டீர்களே அது //

நான் ரஜினி சராசரி மனிதன் இல்லை என்று எப்போது கூறினேன்....சராசரி மனிதன் என்பதாலே அப்படி கூறினேன்.

தற்போது விவாதம் செய்யும் நேரம் இது இல்லை. ரஜினி இவ்வாறு கூறியதை சரி என்று நான் கூறவில்லை, நியாயப்படுத்தி பேசவில்லை. எனக்கும் வருத்தம் தான். நான் எப்போதும் கூறுவது நான் ரஜினி ரசிகன் தான் வெறியன் கிடையாது.
//

கிரி,
உங்களிடம் சீரியஸாக விவாதம் செய்யவில்லை. லூசுலில் விடுங்க ! நீங்களும் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுவர் என்று நானும் சொல்லவில்லை
:)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:(

கோவி.கண்ணன் சொன்னது…

//anandrey said...
அப்படி செய்தால் கன்னடர்களிடம் அவர் தீராத பகை கொண்டிருப்பதாகக் காட்டாதா ?
,,
இப்போது இரண்டு பக்கமும் மாட்டீ வீட்டாரோ? இதற்கு உங்கள் பதில் என்ன?

12:04 AM, August 01, 2008
//

தமிழ் ரசிகர்கள் எதையும் மனசில வச்சிக்க மாட்டாங்க. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//kavi said...
இருந்தாலும் நம் மக்கள் குசேலன் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்களா என்ன , இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை இன்னும் 100 ரஜினிகள் வந்து கொண்டுதானிருப்பார்கள்.

12:17 AM, August 01, 2008
//

:) சரிதான்!

பொன்னர் சொன்னது…

நீங்கள் எப்படித்தான் கத்தினாலும் ஆனந்தவிகடன் ஒவ்வொருவாரமும் ரஜனி பற்றிய செய்தியைப்போட்டுக்கொண்டே இருக்கும், கலைஞர் தொலைக்காட்சியில் ரஜனிபற்றிய செய்திகள் வரும். ரஜனி மன்னிப்புகேட்டவிவகாரம் ஏனோகலைஞர் செய்திகளில் வெளிவரவில்லை. சன் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. எப்போ ரஜனியை போற்றுவதை ஊடகங்கள் நிறுத்துகின்றனவோ அன்றைக்குத் தான் விடிவு.

வெண்பூ சொன்னது…

தன் மகனை முன்னிலைப்படுத்த ஒகேனக்கல் திட்டத்திற்கு பிரமாண்ட விழா எடுத்து பிரச்சினையை கிளப்பிய அதே தலைவர் கர்நாடகத் தேர்தலில் தன் கூட்டணிக் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக திட்டத்தையே கிடப்பில் போட்டார்.

அன்று வீராவேசமாக பேசிய நடிகர் இன்று தன் படம் ஓடுவதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். இன்னொரு நடிகர் தன் பிரம்மாண்டப் படத்திற்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக அந்த மேடையிலேயே யாருக்கும் புரியாதவாறு பேசிவிட்டு கழன்று கொண்டார்.

மொத்தத்தில் மக்களைப் பற்றி சிந்திக்க நாதி இல்லை...

விஜய் ஆனந்த் சொன்னது…

என்னதான் சமாதானப்படுத்த முயற்சி பண்ணாலும்....மனசு கேக்க மாட்டேங்குது...சுத்த பச்சோந்தித்தனம்...
// அவர் ஒரு நடிகர் அவருக்கு இருக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு அவருடைய படங்கள் விற்பனையாகின்றன //
நடிகரோ. வியாபாரியோ...அவருக்குண்டான வேலையை மட்டும் செஞ்சா குத்தமில்ல...ஆனா, ஆபத்பாந்தவர் மாதிரி அப்போ பேசிட்டு, இப்போ சொந்த வசதிக்காக ( என்னதான் வெளியீட்டாளர்கள் நட்டப்படக் கூடாதுன்னு சொன்னாலும், அதில சுய லாபமே கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது ) பல்டி அடிக்கிறது.....உறுத்துதுங்க. I'm extreamly sorry Mr. Govi. Kannan...என்னால கண்டிப்பா மன்னிக்க முடியாது.

Kanchana Radhakrishnan சொன்னது…

கன்னட திரைப்படவர்த்தக சபைக்கு ரஜினி ரசிகனின் கடிதம் என்ற என் பதிவைப் படியுங்க்கல் கோவி சார்..உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

விஜய் ஆனந்த் சொன்னது…

இத நா ஒரு தமிழனாவோ இல்ல, கன்னடர்களுக்கு எதிரானவனாவோ சொல்லல...ஒரு சாதாரண மனுஷனா தோணிச்சி...அதுதான்.....

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ரஜினி ஒரு பெரிய வென்று என்று எடுத்ததெற்கெல்லாம், ஒரு பதிவு போட்டு, சாமானிய ரசிகன் செய்வதை நாமும் செய்கிறோமா...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சத்தியமா சொல்றேன், சத்தியராஜ் அந்த உண்ணாவிரதத்துல மிக கேவலமா பேசுனதுல தப்பேயில்லை. அன்னைக்கு உண்ணாவிரதத்துல ரஜினி பேசுனது தமிழ் நாட்டுல தன்னோட சொல்வாக்க காப்பாத்திக்கிறதுக்காக.
இப்போ, கர்நாடகாவுல தன்னோட படம் ஓடணும்கிறதுக்காக இன்னைக்கு கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்கின்றார் என்றால், அன்று தமிழர்களுக்காக அவர் பேசியது அனைத்தும் தவறு என்று தானே அர்த்தம். அப்போ கர்நாடகாவில் படம் ஓடினால் போதும், தமிழன் என்ன அடிச்சாலும் வாங்கிக்குவான், என்ன சொன்னாலும் தன் படத்தை பார்ப்பான் என்ற திமிர்தானே? மானங்கெட்ட தமிழர்களை சத்தியராஜ் இன்னும் கேவலமாகத்தான் திட்டியிருக்க வேண்டும்.

நெல்லை எக்ஸ்பிரஸ் சொன்னது…

interesting one from thatstamil.com comments section

பதிவு செய்தவர்: Rajinish பதிவு செய்தது: 31 Jul 2008 10:32 pm

1995 - batsha:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - Sivaji:
பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - during election:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalith:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!
சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 - kuselan release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!

பொன்னர் சொன்னது…

உண்மைதான் ஜோசப்
இதனைத் தமிழர்கள் எப்போ உணரப்போகின்றார்கள். நாளைக்கு பீராபிசேகம் பாலபிசேகம் செய்யப்போபது நம்ம தமிழர்கள் தான் ஏனென்றால் இவர்களுக்கு இந்த பரதேசி தலைவனாம். தூ வெட்கமாகய் இல்லை.

enRenRum-anbudan.BALA சொன்னது…

சரியான கருத்துகள் கொண்ட நல்ல பதிவு.

ரஜினி மன்னிப்பு கேட்டதில் எனக்கு வருத்தமே :(

இயற்கை நேசி|Oruni சொன்னது…

நரி வேஷம் களைஞ்சு போச்... டும்..டும்..டும்

காட்டை விட்டே ஓடிப் போச்...டும்..டும்..ம்..ம்.

:-((. இன்னும் வரும். இது காலத்தின் கட்டாயம். சத்யம் பேசணும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ரஜனி வறுவல் சூடாக இல்லையே? வேற எங்காவது சூடான வறுவல் கிடைக்குதான்னு பார்த்து வருகிறேன்:)

புதுகை.அப்துல்லா சொன்னது…

rapp said...
அன்றைக்கு ரஜினி அப்படி பேசலைனா (சத்தியராஜ் சார் அப்படி பேசனத்துக்கப்புறம்) அவரோட நிலைமை என்னாகி இருக்கும். ஒரு சாதாரண நடிகரை இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு, அவரும் ஒரு வியாபாரிங்கரதை மறந்திட்டு, சமூகப் புரட்சியாளர் கணக்கா பில்டப் செஞ்சுட்டு, அவர் நான் அதெல்லாம் இல்லைங்கறதை தெளிவுப்படுத்தும் போது ஏன் இப்படி குதிக்கனும்னு தெரியல. படங்கறது ஒரு பொழுதுபோக்கு அம்சம். அது மோசமான கருத்தை பரப்பாதவரை இது மாதிரி காரணங்களை சொல்லி திட்டறதில் அர்த்தமில்லைங்கறது என்னோட தனிப்பட்ட கருத்துங்க.
//

ராப்! நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம். நான் இநத பதிவைப் படித்தபின் எழுத நினைத்த விஷயம் அப்படியே உன் பின்னூட்டத்தில் இருக்கிறது.அதுனாலா தான் வெறும் ரிப்பீட்டுன்னு சொல்லாம இதைச் சொல்றேன்.

பொன்னர் சொன்னது…

தாட்ஸ்தமிழில் சூடான வறுவல் நெறையக் கிடக்கு ராஜ நடராஜன் சார் போய் பாருங்களேன்.

jinishivs சொன்னது…

கர்நாடக ரஜினியின் இந்த துரோகச் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தயவு செய்து ரஜினியின் படங்களை புறக்கணியுங்கள் தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே

jinishivs சொன்னது…

சரியான கருத்துகள் கொண்ட நல்ல பதிவு.

- hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 - kuselan release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!

G.Ragavan சொன்னது…

இவ்வளவு நாளா... ரஜினிக்கு நடிக்கவே தெரியாது. இவரையெல்லாம் ஒரு நடிகர்னு எப்படிச் சொல்றதுன்னு கேட்டுக்கிட்டிருந்தேன். அவருடைய திறமை இப்பப் பளிச்சிடுது. ரஜினிகாந்தைப் போலச் சிறந்த நடிகரையும் பார்க்க முடியாது. தமிழர்களைப் போல ஏமாளிகளையும் பார்க்க முடியாது. இனிமே ரஜினி படமெல்லாம் பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அது பத்தி ஒரு பதிவும் போட்டாச்சு.

http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html

VSK சொன்னது…

அப்போதும் தமிழகத்துக்காகக் குரல் கொடுத்தார்.
இப்போது கீழிறங்கி மன்னிப்பு கேட்டதும், தமிழகத் திரையுலகத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சுமை வராமல் காக்கவே!
இது அவருடைய சொந்தப்படம் இல்லை.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பலரும் பாதிக்கப் பட்டிருப்பார்கள், இந்தப் படம் அங்கு திரையிடப்படாமல் இருந்தால்.
எனக்கென்ன? எனப் போகாமல் அவர் இப்படிச் செய்தது பாராட்டத் தக்க பண்பு.
இதை அரசியலாக்க முனைய வேண்டாம்.
நிலைமையை நேராகப் பாருங்க. உண்மை புரியும்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

கண்ணன்,
ரஜினி அரசியல்வாதி ஆக முடியாது. நடிகர்கள் அனைவரும் பணம் சேர்க்க, முடிந்தால் புகழ் சேர்க்க நடிக்கிறார்கள். நல்லது சொல்லும் வரை கண்டுக்க வேண்டாம்.
அதற்கு மேல் எதிர்பார்க்கவே கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

விடியறத்துக்குள்ளே இம்புட்டு பேரு கமெண்டு போட்டு இருக்காங்க அத்தினி பேருக்கும் எப்படி மறுமொழி போடுவது ?

அருணாசலேஸ்வரா காப்பாற்று .... :)

//Trisha said...
எப்போ ரஜனியை போற்றுவதை ஊடகங்கள் நிறுத்துகின்றனவோ அன்றைக்குத் தான் விடிவு.
//

நூத்துல ஒரு சொல், ஊடகங்கள் யாரையாவது தூக்கிவிட்டுவிட்டு அதை வச்சே பொதுச் சேவை செய்வது தானே அவர்கள் வேலை. நிறுத்துவாங்களா ? கஷ்டம் கஷ்டம் !

//வெண்பூ said...
மொத்தத்தில் மக்களைப் பற்றி சிந்திக்க நாதி இல்லை...

12:37 AM, August 01, 2008//

மக்கள் இவர்களைத் தங்கள் சிந்தனைகளில் இருந்து தூக்கி எறியனும். நடிகர் என்றால் நடிப்பைப் பாராட்டலாம்,அதுக்கும் மேல எதிர்பார்த்தால் 2 பக்கமும் சங்கடம் தான் என்று இந்த நிகழ்வு காட்டுது !

// விஜய் ஆனந்த் said...
என்னதான் சமாதானப்படுத்த முயற்சி பண்ணாலும்....மனசு கேக்க மாட்டேங்குது...சுத்த பச்சோந்தித்தனம்...
நடிகரோ. வியாபாரியோ...அவருக்குண்டான வேலையை மட்டும் செஞ்சா குத்தமில்ல...ஆனா, ஆபத்பாந்தவர் மாதிரி அப்போ பேசிட்டு, இப்போ சொந்த வசதிக்காக ( என்னதான் வெளியீட்டாளர்கள் நட்டப்படக் கூடாதுன்னு சொன்னாலும், அதில சுய லாபமே கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது ) பல்டி அடிக்கிறது.....உறுத்துதுங்க. I'm extreamly sorry Mr. Govi. Kannan...என்னால கண்டிப்பா மன்னிக்க முடியாது.

12:48 AM, August 01, 2008
இத நா ஒரு தமிழனாவோ இல்ல, கன்னடர்களுக்கு எதிரானவனாவோ சொல்லல...ஒரு சாதாரண மனுஷனா தோணிச்சி...அதுதான்.....
//
அவராக தன்னை தெய்வம் என்று புகழுங்க என்றாரா ? இவர்களாக ஏற்றிவிட்டு, இன்னிக்கு நிலை உயர்ந்ததால அவரும் பேச முடியாமல் திணறுகிறாரே. நம்ம மேலேயும் தப்பு இருக்கிறது

//
TBCD said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ரஜினி ஒரு பெரிய வென்று என்று எடுத்ததெற்கெல்லாம், ஒரு பதிவு போட்டு, சாமானிய ரசிகன் செய்வதை நாமும் செய்கிறோமா...//

டிபிசிடி ஐயர்,

குசேலன் டிக்கெட் எடுத்தாச்சா ? :)

//ஜோசப் பால்ராஜ் said...
சத்தியமா சொல்றேன், சத்தியராஜ் அந்த உண்ணாவிரதத்துல மிக கேவலமா பேசுனதுல தப்பேயில்லை. அன்னைக்கு உண்ணாவிரதத்துல ரஜினி பேசுனது தமிழ் நாட்டுல தன்னோட சொல்வாக்க காப்பாத்திக்கிறதுக்காக.
இப்போ, கர்நாடகாவுல தன்னோட படம் ஓடணும்கிறதுக்காக இன்னைக்கு கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்கின்றார் என்றால், அன்று தமிழர்களுக்காக அவர் பேசியது அனைத்தும் தவறு என்று தானே அர்த்தம். அப்போ கர்நாடகாவில் படம் ஓடினால் போதும், தமிழன் என்ன அடிச்சாலும் வாங்கிக்குவான், என்ன சொன்னாலும் தன் படத்தை பார்ப்பான் என்ற திமிர்தானே? மானங்கெட்ட தமிழர்களை சத்தியராஜ் இன்னும் கேவலமாகத்தான் திட்டியிருக்க வேண்டும்.
//

நீங்க வேறு எரிகிற தீயில் பெட்ரோலையும், பினாயலையும் சேர்த்தே ஊற்றுகிறீர்கள் !

//நெல்லை எக்ஸ்பிரஸ் said...
interesting one from thatstamil.com comments section

பதிவு செய்தவர்: Rajinish பதிவு செய்தது: 31 Jul 2008 10:32 pm //

அவர் தான் சொல்றதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன் என்று தெளிவாக சொல்லி இருக்காரே...!
:)

//Trisha said...
உண்மைதான் ஜோசப்
இதனைத் தமிழர்கள் எப்போ உணரப்போகின்றார்கள். நாளைக்கு பீராபிசேகம் பாலபிசேகம் செய்யப்போபது நம்ம தமிழர்கள் தான் ஏனென்றால் இவர்களுக்கு இந்த பரதேசி தலைவனாம். தூ வெட்கமாகய் இல்லை.
//
நளின நடிகை பெயரை வச்சுக்கிட்டு இப்படி பதிலுக்கு பொறிஞ்சு தள்ளுறிங்களே...!

//enRenRum-anbudan.BALA said...
சரியான கருத்துகள் கொண்ட நல்ல பதிவு.

ரஜினி மன்னிப்பு கேட்டதில் எனக்கு வருத்தமே :(
//
விடுங்க காலம் காயங்களை ஆற்றும், ரோபோ வர்றபோது பாருங்க...எல்லோருமே இதையெல்லாம் மறந்திருப்போம் !

//Orani said...
நரி வேஷம் களைஞ்சு போச்... டும்..டும்..டும்

காட்டை விட்டே ஓடிப் போச்...டும்..டும்..ம்..ம்.

:-((. இன்னும் வரும். இது காலத்தின் கட்டாயம். சத்யம் பேசணும்.
//

பாவங்க அவரும், இங்கே கன்னடத்துக்காரன் என்று திட்டுறாங்க, அவங்களும் அவர் சொல்றதை ஏத்துக்கமாட்டேன்கிறார்கள், என்ன தான் செய்வாரு,
மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி மாதிரி அவரு நெலமை ஆகிப் போச்சு !

//ராஜ நடராஜன் said...
ரஜனி வறுவல் சூடாக இல்லையே? வேற எங்காவது சூடான வறுவல் கிடைக்குதான்னு பார்த்து வருகிறேன்:)
//

ரொம்ப சூடாகப் போட்டால் பின்னூட்டத்தில் ஆபாச திட்டு வாங்குறது யார், இரண்டாவது எனக்கும் அந்த எண்ணமில்லை. மனுசன் சூழ்நிலை கைதியாவது இயல்புதானே
ரஜினியும் புகழடைந்தாலும் மனுசன் தானே.

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ராப்! நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம். நான் இநத பதிவைப் படித்தபின் எழுத நினைத்த விஷயம் அப்படியே உன் பின்னூட்டத்தில் இருக்கிறது.அதுனாலா தான் வெறும் ரிப்பீட்டுன்னு சொல்லாம இதைச் சொல்றேன்.
//
அப்துல்லா பிரதர்,
அதே பின்பாட்டுதான் பதிவின் சாரமும், இருவருக்கும் நன்றிகள் !

//shivs_4 said...
கர்நாடக ரஜினியின் இந்த துரோகச் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தயவு செய்து ரஜினியின் படங்களை புறக்கணியுங்கள் தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
தன்மானத்தமிழர்களே
//
துளசி அம்மா, ஜிராகவன் பதிவில் சொல்லி இருக்காங்க பாருங்க, பெங்களூர் தமிழர்கள் குசேலன் படம் பார்க்க வேண்டுமே என்ற அக்கரையே அவரை இப்படி ஒரு முடிவெடுக்கச் செய்தது,
இதையெல்லாம் துரோகம் என்று சொல்லலாமோ ? :)

//shivs_4 said...
சரியான கருத்துகள் கொண்ட நல்ல பதிவு.

- hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 - kuselan release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....!//

மன்னிப்புக்கேட்டதற்கு காரணம் சொல்லும் வசனம் கண்டிப்பாக ரோபோ படத்தில் இடம்பெறும் தற்போதைக்கு கவலையை தள்ளிப் போடுவோம்

//G.Ragavan said...
இவ்வளவு நாளா... ரஜினிக்கு நடிக்கவே தெரியாது. இவரையெல்லாம் ஒரு நடிகர்னு எப்படிச் சொல்றதுன்னு கேட்டுக்கிட்டிருந்தேன். அவருடைய திறமை இப்பப் பளிச்சிடுது. ரஜினிகாந்தைப் போலச் சிறந்த நடிகரையும் பார்க்க முடியாது. தமிழர்களைப் போல ஏமாளிகளையும் பார்க்க முடியாது. இனிமே ரஜினி படமெல்லாம் பாக்குறதில்லைன்னு முடிவு பண்ணியாச்சு. அது பத்தி ஒரு பதிவும் போட்டாச்சு.

http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html
//

ஜிரா சார், கொஞ்சம் பாலச்சந்தர் சாரையும் நெனச்சுப் பாருங்க, ரஜினி சாரின் முத்துப்படத்திற்கு பிறகு ரொம்பநாளாக காத்திருந்து காத்திருந்து ரஜினி சாரின் குசேலன் படத்தை தயாரித்து இருக்கிறார், உங்களோட
இந்த பாதகமான முடிவுல ஒரு கலைதாகம் கொண்ட இயக்குனருக்குத் தான் பெரும் பொருள் நட்டம்.
//VSK said...
அப்போதும் தமிழகத்துக்காகக் குரல் கொடுத்தார்.
இப்போது கீழிறங்கி மன்னிப்பு கேட்டதும், தமிழகத் திரையுலகத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சுமை வராமல் காக்கவே!
இது அவருடைய சொந்தப்படம் இல்லை.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பலரும் பாதிக்கப் பட்டிருப்பார்கள், இந்தப் படம் அங்கு திரையிடப்படாமல் இருந்தால்.
எனக்கென்ன? எனப் போகாமல் அவர் இப்படிச் செய்தது பாராட்டத் தக்க பண்பு.
இதை அரசியலாக்க முனைய வேண்டாம்.
நிலைமையை நேராகப் பாருங்க. உண்மை புரியும்.//

VSK ஐயா, ஊருக்கு மாறுப்பட்டு உங்களுக்குன்னு எப்போதும் ஒரு கருத்து இருக்கும் என்று அவ்வப்போது உணர்த்துகிறீர்கள்

//வல்லிசிம்ஹன் said...
கண்ணன்,
ரஜினி அரசியல்வாதி ஆக முடியாது. நடிகர்கள் அனைவரும் பணம் சேர்க்க, முடிந்தால் புகழ் சேர்க்க நடிக்கிறார்கள். நல்லது சொல்லும் வரை கண்டுக்க வேண்டாம்.
அதற்கு மேல் எதிர்பார்க்கவே கூடாது.
//
வல்லியம்மா நீண்ட நாள் சென்று இந்தபக்கம் வந்து இருக்கிங்க, கருத்தும் தெளிவாக இருக்கு,
மிக்க நன்றி !

பரிசல்காரன் சொன்னது…

எதுவும் சில காலம்!
EVEN THIS WILL PASS!

விஜய் ஆனந்த் சொன்னது…

// அவராக தன்னை தெய்வம் என்று புகழுங்க என்றாரா ? இவர்களாக ஏற்றிவிட்டு, இன்னிக்கு நிலை உயர்ந்ததால அவரும் பேச முடியாமல் திணறுகிறாரே. நம்ம மேலேயும் தப்பு இருக்கிறது //
ரஜினிய ஏத்தி விட்டதுல நம்ம எல்லாரோட பங்கும் இருக்குங்கறத ஓரளவுக்கு ஒத்துக்கறேன்..ஆனா, அவருடைய முந்தைய படங்களோட பஞ்ச் டயலாக்குகள் & மேடைப்பேச்சுக்களெல்லாம் "என்ன ஏத்தி உடுங்கப்பா"-ன்னு tempt பண்ற மாதிரிதானே majority இருக்கு??? நா mean பண்றது, சொல்லும் கருத்துக்களில் அவருக்கு இருக்க வேண்டிய self-responsibility பத்தி...எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி பண்ற மாதிரி காட்டிட்டு, உண்மையில, எல்லா பக்கமும் கெட்ட பேரு வாங்கிகிட்டு இருக்காரு...

Sen22 சொன்னது…

//ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம்//

நான் இதை வழிமொழிகின்றேன் Boss..

சரவணகுமரன் சொன்னது…

நல்லா பக்குவமா எழுதி இருக்கீங்க...

http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_31.html

உதயம் சொன்னது…

தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் .
இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ஒரு தடவைகூட புரியாது.

Syam சொன்னது…

//ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம்//

எப்படியும் மன்னிப்பு கேட்க வேண்டிவரும் என்று அவருக்கு முன்பே தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு...அதுனால அப்பவே பேசாம இருந்து இருக்கலாம்

VSK சொன்னது…

//விடியறத்துக்குள்ளே இம்புட்டு பேரு கமெண்டு போட்டு இருக்காங்க அத்தினி பேருக்கும் எப்படி மறுமொழி போடுவது ?

அருணாசலேஸ்வரா காப்பாற்று .... :)//

அதுதான் ரஜினி என்னும் பெயரின் சக்தி!!:))))
அது தெரிஞ்சுதானே மாஞ்சு மாஞ்சு பதிவு போடறாங்க!

நையாண்டி நைனா சொன்னது…

திரு. உதயம் அவர்களின் கூற்று....
தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் .
இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ஒரு தடவைகூட புரியாது.
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு சிறு திருத்தம்...
ரஜினீகல்ல...
தமிழக ரசிகர்களுக்கு புரியாது....

பின் குறிப்பு: குசேலன் படத்திரிக்கு நேற்றே 300/- ரூபாய்க்கு முன் பதிவு செய்தாச்சு, அடிலாப்ஸ்-ல்

//விஜய் ஆனந்த் said...
மேலேயும் தப்பு இருக்கிறது
ரஜினிய ஏத்தி விட்டதுல நம்ம எல்லாரோட பங்கும் இருக்குங்கறத ஓரளவுக்கு ஒத்துக்கறேன்..ஆனா, அவருடைய முந்தைய படங்களோட பஞ்ச் டயலாக்குகள் & மேடைப்பேச்சுக்களெல்லாம் "என்ன ஏத்தி உடுங்கப்பா"-ன்னு tempt பண்ற மாதிரிதானே majority இருக்கு??? நா mean பண்றது, சொல்லும் கருத்துக்களில் அவருக்கு இருக்க வேண்டிய self-responsibility பத்தி...எல்லாருக்கும் நல்லவனா இருக்க முயற்சி பண்ற மாதிரி காட்டிட்டு, உண்மையில, எல்லா பக்கமும் கெட்ட பேரு வாங்கிகிட்டு இருக்காரு...

11:51 AM, August 01, 2008
//

ஹிஹி அவர் ஏற்று நடிக்கும் பாத்திரம் பேசும் வசனங்களுக்கு அவரை ஏன் பொறுப்பாக்குகிறீர்கள். இயக்குனர், வசனகர்த்தா எழுதிக் கொடுத்ததைத் தானே பேசினார்.

தமிழ்பால் குடித்தேன் என்பது அண்ணாமலைப் படத்தில் பால்கார அண்ணாமலை என்னும் பாத்திரம் பாடிய பாடல் அம்புட்டுதான்.

:) இப்படி நெனச்சு ஆறுதல் அடைந்து கொள்ளுங்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
நல்லா பக்குவமா எழுதி இருக்கீங்க...

http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_31.html

12:40 PM, August 01, 2008
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயம் said...
தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் .
இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ஒரு தடவைகூட புரியாது.

12:52 PM, August 01, 2008
//

மக்களை கவரும் வகையில் படம் எடுக்கத் தெரிந்த ஒரு வியாபாரி அவ்ர் அவ்வளவுதான். பைத்தியத்தை வைத்து யாரும் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுப்பாங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
திரு. உதயம் அவர்களின் கூற்று....
தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் .
இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு ஒரு தடவைகூட புரியாது.
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு சிறு திருத்தம்...
ரஜினீகல்ல...
தமிழக ரசிகர்களுக்கு புரியாது....

பின் குறிப்பு: குசேலன் படத்திரிக்கு நேற்றே 300/- ரூபாய்க்கு முன் பதிவு செய்தாச்சு, அடிலாப்ஸ்-ல்

1:30 PM, August 01, 2008
//

நைனா,
படத்தைப் பற்றி ரிசல்டு வந்துட்டு, எதுக்கும் ப்ளாக்கில் டிக்கெட்டை தள்ளிவிட முடியுமா என்று பாருங்கள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...

அதுதான் ரஜினி என்னும் பெயரின் சக்தி!!:))))

1:09 PM, August 01, 2008
//

அச்சா அச்சா ! அது மாயை என்பதே பலருக்கும் இப்பதான் விளங்குது !

மங்களூர் சிவா சொன்னது…

Good post.

கோவி.கண்ணன் சொன்னது…

// Syam said...
எப்படியும் மன்னிப்பு கேட்க வேண்டிவரும் என்று அவருக்கு முன்பே தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு...அதுனால அப்பவே பேசாம இருந்து இருக்கலாம்
//

தமிழ் ரசிகர்களைப் பொறுத்த வரையில் அவர் எது பேசினாலும் அதற்கெல்லாம் ஆயிரம் பொருள் கண்டுபிடித்து புகழ்பவர்கள் உண்டு. ரஜினி பேசியதை ஆதரிக்கும் தமிழர்கள் பலருண்டு. கன்னடர்களிடம் எடுபடுமா ? தலைவர் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கிறார்.

suvanappiriyan சொன்னது…

//ரஜினி ஸ்டெயில் உங்களுக்கு பிடித்து இருந்தால் படத்தை 100 முறை கூட பாருங்கள், தலையில் கூட வைத்து கொண்டாடுங்கள், ஆனால் அவரை உலகரட்சகன் போன்று புகழ்வதால் அவருக்கும் நட்டம், உங்களுக்கும் இழுக்கே !//

சரியா சொன்னீங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
//ரஜினி ஸ்டெயில் உங்களுக்கு பிடித்து இருந்தால் படத்தை 100 முறை கூட பாருங்கள், தலையில் கூட வைத்து கொண்டாடுங்கள், ஆனால் அவரை உலகரட்சகன் போன்று புகழ்வதால் அவருக்கும் நட்டம், உங்களுக்கும் இழுக்கே !//

சரியா சொன்னீங்க..
//

சகோதரர் சுவனப்பிரியன் அவர்களே,
சற்றுமுன் தான் உங்கள் இடுகையில் உங்களின் மீள்வரவை வாழ்த்தி ஒரு பின்னூட்டம் இட்டு வந்தேன். அதே நேரத்தில் தான் நீங்களும் இங்கே பின்னூட்டி இருப்பீர்கள் போல் தெரிகிறது !
:)

உதயம் சொன்னது…

தமிழரில் சிலர் ரஜினி பைத்தியம் ,ரஜினி ஒரு காரிய பைத்தியம் .
இதை நான் நூறுதடவை சொன்னாலும் ரஜினி பைத்தியத்திற்கு(ரசிகர்களுக்கு) ஒரு தடவைகூட புரியாது.

Kumar சொன்னது…

Intha echaporiki naya pathi pesurathey time waste...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தான் ஒரு நடிகன் என்பதை நன்றாகவே உணர்ந்து அந்த முடிவை எடுத்து இருக்கிறார். அது தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதைத் தவிர்த்து இந்த திடீர் மன்னிப்புக்கு காரணம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.//

சரியான கருத்து. இது அவருக்கும் மக்களுக்கும் புரிய அந்த ஆண்டவன் அண்ணாமலையார் அருள் புரிவாராக...!

தாங்கள் பணிபுரியும் இடத்தில் ரஜினி ரசிகர்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ராகவேந்திரர் அய்யாவை வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள்(நம்ம) சத்தியராஜ் கோவிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பல்ல...!

அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்கள் இந்த சனி ஞாயிறு முழுக்க இந்த பதிவுக்கு பதில் எழுத வேண்டியது தான். அது தான் அந்த ரஜினியின் மகிமை..!!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

உருப்புடாதது_அணிமா சொன்னது…

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அவர் மன்னிப்பு (மன்னிப்பு இல்லையாம் வருத்தமாம்)கெட்கவில்லை என்றால் என்ன நடந்துயிருக்கும் என்று நினைக்கின்றீகள் கண்ணன்.. ரஜினி ஒரு சந்தற்ப்ப வியாபாரி...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்