பின்பற்றுபவர்கள்

29 ஜூலை, 2008

வருத்தம் தான் லக்கிலுக் ! 'கலைஞரின் பிள்ளைப் பாசம்...!'

சென்னை : முதல்வர் பதவியிலிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து விடலாமோ என நான் நினைக்கிற அளவுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், என முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்தார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகனம் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.

- அது தினமலர் செய்தி வழியாக அறிந்தது, இப்போதெல்லாம் திமுக பற்றிய செய்திகளை தினமலர் ஆர்வத்துடன் வெளி இடுகிறது

*****

'தந்தை மகனுக்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி' என்கிற திருக்குறள்கள் பெருமை படுத்தப்படுகிறது என்று தான் இதைப்படித்ததும் நினைக்கத் தோன்றுகிறது. திரு முக ஸ்டாலின் வயது 60 வதை நெருங்கினாலும் இளைஞர் அணியின் நிரந்தர தலைவர், அதற்கும் மேல் பெரிய பதவிக்கெல்லாம் ஆசைப்படாதவர், மிகச் சிறந்த மாநில அமைச்சர், இருமுறை சென்னை மாநில மேயராக இருந்தவர் இதையெல்லலம் பார்க்கும் போது ஒரு தந்தைக்கு பெருமை இல்லையா ?

*****

வாரிசு அரசியல் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் திமுக வாரிசு அரசியல் பற்றி தவறாக எதுவும் சொல்வதற்கு இல்லை. வாரிசுகள் இல்லாத அரசியல் தலைவர்கள் மட்டுமே வாரிசு அரசியல் எதிர்பாளர்களாக இருப்பார்கள் என்ற அளவில் தான் வாரிசு அரசியலின் எதிர்ப்பு இருக்கிறது. முக ஸ்டாலின் அரசியலில் 40 ஆண்டுகாலமாக இருக்கிறார் என்பதால் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆசி உண்டு, ஆசை இல்லை(!) என்ற கொள்கையில் லோக ஷேமம் என்னும் பொதுச்சேவை செய்யும் (!) சங்கரமடமே, வாரிசுகளாக குறிப்பிட்ட சாதியினரே அதுவும் உள் ரெகமெண்டேசன் வழி சங்கராச்சாரியார்களைத் தேர்ந்தெடுக்கும் போது ... பச்சை அரசியலில் வாரிசு என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டே அல்ல... சொல்ல வந்ததைச் சொல்லாமல் சற்று இழுக்கிறது.....பொறுத்தருள்க...

*****

அரசியல் வேறு குடும்பம் வேறு, முக ஸ்டாலின் சிறப்பாக செயலாற்றுகிறார். முதல்வர் என்ற முறையில் மனம் திறந்து பாராட்டுகிறார் உனக்கு ஏன்யா எரியுது ? நல்ல கேள்வி தானே ?

தந்தையை மகன் 'தலைவர் அவர்களே...' என்றும், தந்தை மகனை 'மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களே....' என்று விளிப்பதெல்லாம் நகைச்சுவையா ? பதவிக்கு உரிய மரியாதைதானே ? பொறுங்கள் !

ஒகனேக்கல் பிரச்சனை என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை, கர்நாடக தேர்தல் முடியும் வரை காத்திருப்பதாகச் சொன்னார்கள். பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலையா ? கலைஞர் ஒகனேக்கல் குறித்து எதுவும் முடிவு செய்து இருந்தால், பெங்களூரூ வாட்டாள் நாகராஜின் ஆர்பாட்டம் மூலம் இன்னேரம் நமக்கு தெரிந்திருக்கும் :) வாட்டாள் நாகராஜ் வெகு அமைதியாக இருப்பதிலிருந்து தமிழக தரப்பில் இருந்து ஒகனேக்கல் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இருப்பது போல் தெரியவில்லை.

இராமேஸ்வர மீனவர் பிரச்சனை ? மத்திய அரசின் கவனம் ஈர்ப்புக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று சுழற்சி முறை உண்ணாவிரதம் மட்டுமே இருக்க முடிந்தது, பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை திமுக மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம், காங்கிரஸுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அறிக்கை கொடுக்க முடிந்ததா ? அப்படி செய்திருந்தால் உண்ணவிரதம் உண்மையிலேயே தமிழக மீனவர் குறித்த அக்கரை என்று பாராட்டி இருக்கலாம்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினால் அவர்கள் மீதே கடந்த ஆட்சியின் தவறுகள் இது என திரும்ப குற்றச்சாட்டுகளைச் சொல்வதும், மேலும் மின்வெட்டு தேதிகளை அறிவித்து இந்த தேதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று உறுதிப்படுத்துவது தான் பிரச்சனைகளை தீர்க்கும் அரசுக்கு அழகா ?

இவற்றிற்கு இடையே தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்வது உண்மையிலேயே பார்க்கும் நம்மை எரிச்சல் அடையவே வைக்கிறது. திமுககாரர்களுக்கு ?

திமுககாரர்களுக்கு ஒரு கேள்விகள்,

கலைஞர் ஒரு கட்சித்தலைவராக திரு முகஸ்டாலினின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டுகிறார், இதில் குடும்பம் பாசம் எங்கே வந்தது என்று நீங்கள் கேட்க நினைக்கலாம், இதே கேள்விதான் பலரின் மனதிலும் ஏற்படுகிறது, திரு தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக சிறப்பாகத்தான் செயலாற்றினார், மதுரை தினகரன் நிறுவனம் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மூன்றுபேர் எரித்துக் கொள்ளப் பட்டபோது, சன் டிவி நிர்வாகம் திரு முக அழகிரி அவர்களை 'ரவுடி அழகிரி' என்று சிறப்பு பெயரிட்டு செய்தியில் வாசித்ததற்கும்... தயாநிதி மாறனின் அமைச்சர் செயல்பாட்டுக்கும் என்ன தொடர்பு ? மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் அடித்துக் கொல்லப்பட்டது கொல்லப்பட்டது தான், தருமபுரி மாணவிகள் எரிப்பை அதிமுகவுக்கு எதிரான அம்பு போலவே பயன்படுத்திய திமுக அரசு மதுரை தினகரன் ஊழியர்களின் படுகொலைகளுக்கு என்ன நடவெடிக்கை எடுத்தது ?

தன் செல்ல மகனை இழிவாக பேசிவிட்டார்களே... என்று கொதித்தெழுந்து தயாநிதிமாறனுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவியை பறித்தார்கள் அவ்வளவுதான். இங்கு மட்டும் அரசியல் வேறு குடும்பம் வேறு என்று கலைஞரால் ஏன் பார்க்க முடியவில்லை ? மாறன் சகோதரர்களுடன் நடத்தும் குடும்ப யுத்தம் வேறு, அரசியல் வேறு அதாவது தயாநிதிமாறனின் அமைச்சர் பதவி வேறு என்று ஏன் பார்க்க முடியவில்லை. தயாநிதிமாறனின் 1 ரூபாய் தொலைபேசி இந்தியா முழுவதும் பேசப்பட்டதே. அமைச்சருக்கும் பொதுமக்களிடம் நல்ல பெயர் இருந்ததே.

நான் மாறன் சகோதர்கள் சத்தியவான்கள் என்று சொல்லவரவில்லை. மூன்றுபேர் எரிந்ததைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தாத்தாக் குடும்பத்துடன் இணக்கமாக செல்லவே பல்வேறு தூதுக்கள் விட்டு பலனளிக்காமல் தற்போது(தான்) தங்கள் நிறுவனம் கட்சி சார்பற்றது என்று சொல்லிக் கொள்ள முயல்கிறார்கள், முன்பு இவர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் முகங்கள் தற்போதுதான் பொதுமக்கள் பார்வைக்காக காட்டப்படுகிறது.

கலைத்துறையில், தமிழ் இலக்கியத்திலும் யாரும் எட்டமுடியாத சாதனை நிகழ்த்தியவர், திராவிடத் தலைவர் என்பதால் கலைஞர் மீது பெரும் மதிப்பே உண்டு, அரசியல் ? அண்மைக்காலமாக கலைஞரின் அரசியல் ரசிக்கத்தக்கதாக இல்லை.

37 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

நாந்தான் மொதோ!

பரிசல்காரன் சொன்னது…

//வருத்தம் தான் லக்கிலுக் !//

கலைஞர் என்ன பண்ணினாலும், பாவம் லக்கியைத்தான் பதிவர்கள் எல்லாரும் வறுத்தெடுக்கறாங்க!

விஜய் ஆனந்த் சொன்னது…

சரியான கருத்து..ஒரு நீண்ட விவாத்த்திற்கான ஆரம்பப்புள்ளி...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, காலையில வந்ததும் தினமலர்ல இந்த செய்திய படிச்சதும் நான் இதுக்கு கட்டாயம் ஒரு பதிவு எழுதனும்னு நினைச்சேன். நீங்க முந்திட்டீங்க.
நிறைய ஆணி இன்னைக்கு அலுவலகத்துல.

ஸ்டாலினுக்கு பதிவி என்பதை வாரிசு அரசியலாக பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் கட்சியில் படிப்படியாகத்தான் அவர் வளர்ந்துள்ளார். ஆனாலும் இப்படி மேடையில் பாராட்டுவது ரொம்ப அதிகம் தான்.

தமிழகத்தின் தற்போதைய அமைச்சர்களில் ஸ்டாலினை விட திறமையாக செயல்படுபவர்களே இல்லையா ? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மிக சிறப்பாக செயல்படுகின்றார். அவரை ஒரு முறையாவது பாராட்டினாரா முதல்வர்? தென்னரசை தவிர வேறு யாரையும் சிறப்பாக செயல்படுகின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை.

வாரிசு என்பதால் தயாநிதியை திடீரென்று அரசியலுக்கு கொண்டுவந்து, அவரை அமைச்சராக்கியதும் தவறு. நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த அவரை திடீரென குடும்பத் தகராறின் காரணமாக நீக்கியதும் தவறு.

நான் ஏற்கனவே என் பதிவில் சொல்லியதைத் தான் திரும்பவும் சொல்லவிரும்புகிறேன். தமிழகமே என் குடும்பம் என்று நினைக்க வேண்டிய முதல்வர் குடும்பமே தமிழகம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

கோவை சிபி சொன்னது…

இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் அந்தந்த மாவட்டங்களின் பலம் வாய்ந்த அதிகாரமையமாகிப்போனது தலைவர் குடும்ப அரசியலால்தான்.இன்று கட்சிஅலுவலகம் என்பது வீடு .அரசாங்கம் என்பது தொழில் செய்யும் இடம்.உறவினர்(?) மற்றும் நண்பர்களை தவிர யாருக்கும் தொழிலில் பங்கு கேட்கும் உரிமை இல்லை.மற்றபடி கொள்கை,கோட்பாடு என்பது தொழில்மேம்பாட்டுக்கென்று வகுக்கப்படும் வியாபார உத்திகள்.இதில் கொஞ்சம் மந்தமென்றால் வியாபாரத்தை பெருக்க, இலவசம்,கொள்கை மாநாடுகள் என்றால் போச்சு!

Bharath சொன்னது…

ஸ்டாலின் உண்மையிலேயே நன்றாக செயல்படும் பொழுது பாரட்டுவதில் என்ன தவறு?? இங்கே அப்பா-மகன் என்று பார்ப்பது எனக்கு சரி என்று படவில்லை..

தயாநிதி விஷயம் வேறு.. அதில் சதையாடுவது உண்மை.. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், 2G Spectrum Allocation auction'ல், தயாநிதி மற்றும் ராசாவால் அரசுக்கு நஷ்டம் சுமார் 22000 கோடி என்று ஆதரத்துடன் விளக்கினார்!!!!!

rapp சொன்னது…

அதானே, உலகத்தில் எம்புட்டு பிரச்சினை இருக்கு, எம்புட்டு பேர் வறுமையில் இருக்காங்க, சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறாங்க. நாம தினமும் சாப்பிடறது தப்பு, இருக்கிற உலகப் பிரச்சினைகளை தீர்க்க முடியலை, நாம நண்பர் சொன்ன ஜோக்குக்கு சிரிக்கிறோம். ரொம்ப சரி

rapp சொன்னது…

கலைஞர் என்னைக்காவது தன்னை எல்லாரும் ஹீரோ வர்ஷிப் பண்ணனும்னு சொல்லிருக்காரா? அவர் ஒரு அரசியல்வாதி, குறை நிறை இல்லாம செயல்பட முடியாது. அவ்வப்போது சப்பைக்கட்டு கட்டத்தான் செய்வார். இதை செய்யாத அரசியல் தலைவர்களே இல்லை.

rapp சொன்னது…

//ஸ்டாலின் உண்மையிலேயே நன்றாக செயல்படும் பொழுது பாரட்டுவதில் என்ன தவறு?? இங்கே அப்பா-மகன் என்று பார்ப்பது எனக்கு சரி என்று படவில்லை..

தயாநிதி விஷயம் வேறு.. அதில் சதையாடுவது உண்மை.. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், 2G Spectrum Allocation auction'ல், தயாநிதி மற்றும் ராசாவால் அரசுக்கு நஷ்டம் சுமார் 22000 கோடி என்று ஆதரத்துடன் விளக்கினார்!!!!!//


இதை நான் வழிமொழிகிறேன்

துளசி கோபால் சொன்னது…

//மூன்றுபேர் எரித்துக் கொள்ளப் பட்டபோது//

கொள்ளப்பட்டபோது= கொல்லப்பட்டபோது

SP.VR. SUBBIAH சொன்னது…

//////அண்மைக்காலமாக கலைஞரின் அரசியல் ரசிக்கத்தக்கதாக இல்லை.//////

சொன்னது நீர்தானா? சொல்! சொல்! சொல்.......என்.......(............!?)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//வருத்தம் தான் லக்கிலுக் !//

கலைஞர் என்ன பண்ணினாலும், பாவம் லக்கியைத்தான் பதிவர்கள் எல்லாரும் வறுத்தெடுக்கறாங்க!

10:53 AM, July 29, 2008
//

லக்கிதான் திமுக சார்பில் பதிவுலக அபிசியல் :) அவரைக் கேட்காமல் ?

முரளிகண்ணன் சொன்னது…

இந்த பதிவில் ஏதும் உள்குத்து இருக்கிரதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Vijay Anandh said...
சரியான கருத்து..ஒரு நீண்ட விவாத்த்திற்கான ஆரம்பப்புள்ளி...
//

:) ஆட்டோ வராமல் இருந்தால் சரி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said... நான் ஏற்கனவே என் பதிவில் சொல்லியதைத் தான் திரும்பவும் சொல்லவிரும்புகிறேன். தமிழகமே என் குடும்பம் என்று நினைக்க வேண்டிய முதல்வர் குடும்பமே தமிழகம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்.//

சிந்திக்க வேண்டிய வரிகள், நாம இல்லே கட்சிக்காரர்கள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் அந்தந்த மாவட்டங்களின் பலம் வாய்ந்த அதிகாரமையமாகிப்போனது தலைவர் குடும்ப அரசியலால்தான்.இன்று கட்சிஅலுவலகம் என்பது வீடு .அரசாங்கம் என்பது தொழில் செய்யும் இடம்.உறவினர்(?) மற்றும் நண்பர்களை தவிர யாருக்கும் தொழிலில் பங்கு கேட்கும் உரிமை இல்லை.மற்றபடி கொள்கை,கோட்பாடு என்பது தொழில்மேம்பாட்டுக்கென்று வகுக்கப்படும் வியாபார உத்திகள்.இதில் கொஞ்சம் மந்தமென்றால் வியாபாரத்தை பெருக்க, இலவசம்,கொள்கை மாநாடுகள் என்றால் போச்சு!
//

ம் அப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டால், அப்பறம் கலைஞர் பேச்சைக் கேட்டு நாமும் சிரிச்சுட்டு போய்விடலாமே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Analyzt said...
ஸ்டாலின் உண்மையிலேயே நன்றாக செயல்படும் பொழுது பாரட்டுவதில் என்ன தவறு?? இங்கே அப்பா-மகன் என்று பார்ப்பது எனக்கு சரி என்று படவில்லை..//

ஸ்டாலின் செயல்பாட்டை குறை சொல்லவில்லை. ஒரு கண்ணில் வெண்ணை அதைத்தான் சொன்னேன்.

//தயாநிதி விஷயம் வேறு.. அதில் சதையாடுவது உண்மை.. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், 2G Spectrum Allocation auction'ல், தயாநிதி மற்றும் ராசாவால் அரசுக்கு நஷ்டம் சுமார் 22000 கோடி என்று ஆதரத்துடன் விளக்கினார்!!!!!
//

நல்லவேளை தற்போதைய அமைச்சர் ராசாவின் பெயரையும் குறிப்பிட்டீர்கள், காலரைத்துக்கலாம் என்று முனைவதற்குள் :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
கலைஞர் என்னைக்காவது தன்னை எல்லாரும் ஹீரோ வர்ஷிப் பண்ணனும்னு சொல்லிருக்காரா? அவர் ஒரு அரசியல்வாதி, குறை நிறை இல்லாம செயல்பட முடியாது. அவ்வப்போது சப்பைக்கட்டு கட்டத்தான் செய்வார். இதை செய்யாத அரசியல் தலைவர்களே இல்லை.

1:54 PM, July 29, 2008
//

அது சொன்னிங்களே மிகச் சரி. யாரும் இங்கே தூயவர் இல்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//மூன்றுபேர் எரித்துக் கொள்ளப் பட்டபோது//

கொள்ளப்பட்டபோது= கொல்லப்பட்டபோது
//

எரித்துக் கொல்லவில்லை, தாக்கப்பட்டு தான் இறந்தார்கள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
//////அண்மைக்காலமாக கலைஞரின் அரசியல் ரசிக்கத்தக்கதாக இல்லை.//////

சொன்னது நீர்தானா? சொல்! சொல்! சொல்.......என்.......(............!?)
//

சுப்பையா ஐயா,

இதுல என்ன இருக்கு ? கொள்கை அளவில் ஆதரித்தால் தவறுகளைச் சுட்டிக் காட்டாவேக் கூடாது என்கிற நிலைப்பாடும் எடுக்கனுமா ? புண்ணை மறைப்பதைவிட வெளிக்காட்டி குணப்படுத்த முயல்வதே சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
இந்த பதிவில் ஏதும் உள்குத்து இருக்கிரதா?

2:36 PM, July 29, 2008
//

ஐயை ஐயோஓஓஓஓஓஓஓஓ....எல்லாம் நேராகத்தானே எழுதி இருக்கேன். !

Great சொன்னது…

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் லாலாலலே.........

கோவி.கண்ணன் சொன்னது…

//Great said...
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் லாலாலலே.........
//

அப்படின்னா என்ன ? சேலம் ஆர்காட்டார் தெரியும், மாம்பழம் - சேலம் தெரியும். இங்கே மாம்பழத்துக்கு என்ன தொடர்பு ?

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//முதல்வர் பதவியிலிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து விடலாமோ என நான் நினைக்கிற அளவுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், என முதல்வர் கருணாநிதி பெருமிதம்//
இது பெருமிதம் இல்லை . பொறாமை . அடுத்தவர்களுக்கு ஒரு பாராட்டு கூட கிடைக்க கூடாது என்ற சுயநலம் .
என்ன ஒரு நல்ல எண்ணம் பாருங்கள் . மகனை சிலர் பாராட்டுவதை பார்த்து கூட பொறாமை வருகிறது !
ஆஹா நீயல்லவோ சிறந்த தந்தை !

manikandan சொன்னது…

*****வாரிசுகள் இல்லாத அரசியல் தலைவர்கள் மட்டுமே வாரிசு அரசியல் எதிர்பாளர்களாக இருப்பார்கள் என்ற அளவில் தான் வாரிசு அரசியலின் எதிர்ப்பு இருக்கிறது******

அப்படியா ? அத்வானி, மன்மோகன் சிங்க் பசங்க எல்லாம் அரசியல்ல பெரிய பதவில இருக்காங்களா ? கலைஞர் குடும்பம், நேரு குடும்பம் இது ரெண்டும் தான் ரொம்ப மோசமான எடுத்துகாட்டு.

வாரிசு அரசியலுக்கு வருது தப்பு இல்லை சொல்லுங்க. அது வேற விதமானா சிந்தனை. அத விட்டுட்டு இது மாதிரி சொல்லி நியாயபடுத்தாதீங்க.

அதே மாதிரி ஸ்டாலின வாரிசு அரசியல்ன்னு தமிழ்நாட்டுல சொல்றவங்க ரொம்ப அதிகம் கிடையாது.(அவர் குடும்பதினற தவிர) கனிமொழி, கயல்விழி, தயாநிதி இப்படி எல்லாரும் அவங்க குடும்பதுலேந்து வருது தான் கலைஞருக்கு பிடிச்சிருக்கு. மக்களுக்கு இத பத்தி பேசறதுக்கு சரியான தீனி.

ஒரு அமைச்சர் நல்லா செயல்பட்டா அவர முதலமைச்சர் ஆக்கறது பத்தி பேசி அவர உற்சாகபடுத்தலாம். இது என்ன வித்யாசமா யோசிக்கிறார் கலைஞர் !

*******அதுவும் உள் ரெகமெண்டேசன் வழி சங்கராச்சாரியார்களைத் தேர்ந்தெடுக்கும் போது ... பச்சை அரசியலில் வாரிசு என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டே அல்ல... சொல்ல வந்ததைச் சொல்லாமல் சற்று இழுக்கிறது*****

இழுக்காம சொன்னா மக்கள் தப்பா புரிஞ்சிகிடுவாங்கலே. என்ன பண்றது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
//முதல்வர் பதவியிலிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து விடலாமோ என நான் நினைக்கிற அளவுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், என முதல்வர் கருணாநிதி பெருமிதம்//
இது பெருமிதம் இல்லை . பொறாமை . அடுத்தவர்களுக்கு ஒரு பாராட்டு கூட கிடைக்க கூடாது என்ற சுயநலம் .
என்ன ஒரு நல்ல எண்ணம் பாருங்கள் . மகனை சிலர் பாராட்டுவதை பார்த்து கூட பொறாமை வருகிறது !
ஆஹா நீயல்லவோ சிறந்த தந்தை !
//

அச்சா அச்சா பகூத் அச்சா ...

உங்க சோ அண்ட் சோ துக்ளக் கார்டுன் ஸ்பெசல் எதும் வருதா ?

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

//அச்சா அச்சா பகூத் அச்சா ...

உங்க சோ அண்ட் சோ துக்ளக் கார்டுன் ஸ்பெசல் எதும் வருதா ?//
ரொம்ப கோபமோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...


அப்படியா ? அத்வானி, மன்மோகன் சிங்க் பசங்க எல்லாம் அரசியல்ல பெரிய பதவில இருக்காங்களா ? கலைஞர் குடும்பம், நேரு குடும்பம் இது ரெண்டும் தான் ரொம்ப மோசமான எடுத்துகாட்டு.

வாரிசு அரசியலுக்கு வருது தப்பு இல்லை சொல்லுங்க. அது வேற விதமானா சிந்தனை. அத விட்டுட்டு இது மாதிரி சொல்லி நியாயபடுத்தாதீங்க.
//

அத்வானி ஜீ, மன்மோகன் ஜீ தேவையான அளவு சேர்த்துட்டாங்களா என்னவோ ! வாசன், கார்த்திக் சிதம்பரம் திடிரென்று குதித்தது போல் அத்வானி, மன்மோகன் சிங்க் பசங்க எல்லாம் அரசியல்ல குதிச்சாலும் குதிப்பாங்க அவசரப்பட்டு சான்றிதழ் வழங்கிடாதிங்கோ.

//
ஒரு அமைச்சர் நல்லா செயல்பட்டா அவர முதலமைச்சர் ஆக்கறது பத்தி பேசி அவர உற்சாகபடுத்தலாம். இது என்ன வித்யாசமா யோசிக்கிறார் கலைஞர் ! //

கலைஞரின் வயதும் அனுபவமும் அவர் ஏன் மாறுபட்டு சிந்திக்க மாட்டார் ?
:)

//அதுவும் உள் ரெகமெண்டேசன் வழி சங்கராச்சாரியார்களைத் தேர்ந்தெடுக்கும் போது ... பச்சை அரசியலில் வாரிசு என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டே அல்ல... சொல்ல வந்ததைச் சொல்லாமல் சற்று இழுக்கிறது*****

இழுக்காம சொன்னா மக்கள் தப்பா புரிஞ்சிகிடுவாங்கலே. என்ன பண்றது ?
//

உதாரணம் இல்லாமல் எதையுமே உரக்கச் சொல்ல முடியாது. 'ஓடியாங்க ...ஓடியாங்க...கருணாநிதியை கும்முவோம்...' என்று தலைதெறிக்க வரும் போது தடுக்கி விழுந்திடக்கூடாது இல்லையா ? அதுக்கு வேகத்தடை போன்றது தான் அது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
//அச்சா அச்சா பகூத் அச்சா ...

உங்க சோ அண்ட் சோ துக்ளக் கார்டுன் ஸ்பெசல் எதும் வருதா ?//
ரொம்ப கோபமோ ?
//

யார் மீது கலைஞர் மீதா ?
கோபமெல்லாம் இல்லை.
'தம்பி தேவைப்பட்டால் தட்டிக் கேள் ... என்று சொல்வாரே...'
:))))

Thamira சொன்னது…

//இதுல என்ன இருக்கு ? கொள்கை அளவில் ஆதரித்தால் தவறுகளைச் சுட்டிக் காட்டாவேக் கூடாது என்கிற நிலைப்பாடும் எடுக்கனுமா ? //

ரிப்பீட்டேய்..

கயல்விழி சொன்னது…

வாரிசு அரசியல் இல்லாமல் இந்திய அரசே இல்லை என்றாகிவிட்டது. கலைஞரின் வாரிசு அரசியலை எதிர்த்த இராமதாஸும், விஜயகாந்தும் கூட தங்களது கட்சியின் முக்கிய பொறுப்புக்களை தங்கள் வாரிசுகள்/உறவினர்களுக்கே கொடுத்தார்கள். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்றாலும் 'உடன்பிறவா தோழி' எல்லாவற்றுக்கும் சேர்த்து காம்ப்ரமைஸ் பண்ணுகிறார். இந்த பதிவைப் பார்த்து யாராவது 'வியப்படைந்ததாக' சொன்னால் தான் ஆச்சர்யம்.

G.Ragavan சொன்னது…

கோவி இந்தப் பதிவு இரண்டு விஷயங்களை அலசுகிறது. ஒன்று வாரிசு அரசியல். மற்றொன்று கருணாநிதியின் சமீபத்திய ஆட்சிமுறை. இரண்டுமே விமர்சனத்திற்கு உரியதுதான்.

முதலில் வாரிசு அரசியல். இதில் தீடீர் குதிப்பு...முதலிலிருந்தே குதிப்பு என்று இரண்டு வகை உண்டு. ஸ்டாலினைப் பொருத்தவரை முதலில் இருந்தே தட்டுத்தடுமாறி அடியெல்லாம் வாங்கித்தான் வந்திருக்கிறார். வந்தபிறகு அவருக்கென்று ஒரு அடையாளமும் உருவாக்கிக் கொண்டார். ஆகையால் அரசியலில் அவரது இருப்பை அவ்வளவாக விமர்சிக்க முடியவில்லை. அதுவுமில்லாமல் தகுதியிருந்து..ஆனால் வாரிசு என்ற காரணத்தினால் வரமுடியாமல் போகுமானால் அதுவும் துரதிர்ஷ்டமே.

ஸ்டாலின் வாரிசு அரசியலை ஏற்றுக்கொண்ட நிலையில் வேறெந்த வாரிசு அரசியலையும் தவறு என்றும் தார்மீக உரிமை போய்விடுவதும் ஒரு விதத்தில் உண்மைதான். பொதுவில் நாம் செய்தால் சரி. அடுத்தவன் செய்தால் தவறுதானே.

விமர்சனம் என்று வந்தால் அழகிரியின் இருப்பு அதிகமாக விமர்சிக்கப்பட வேண்டியது.

அடுத்தது கருணாநிதி அவர்களின தற்போதைய ஆட்சி. அது குறித்து வருத்தமே மிஞ்சுகிறது. ஏதோ ராஜதந்திரம் என்று ஒகேனக்கல் பிரச்சனையை தேர்தலுக்குப் பின்னால் தள்ளிப்போட்டது சிலாகிக்கப்பட்டது. அந்த ராஜதந்திரம் ஓன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இப்பொழுதுதான் புரிகிறது. எந்தத் தேர்தலுக்குப் பிறகு என்று சரியாகச் சொல்லாமல் விட்டு விட்டாரோ!!! அடுத்தது மீனவர் பிரச்சனை. கரைமேல் பிறக்க வைத்தான். அவர்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.

அப்புறம்.. அந்தக் கத்திப்பாரா ஜங்ஷன்.... அந்தப் பாலத்தை எப்ப முடிப்பாங்கன்னே தெரியலை.

இந்த விஷயங்கள்ள ஜெயலலிதா என்ன கிழிச்சிருப்பாருன்னு பாத்தா மண்ணாங்கட்டிதான். ஆனா அதே கட்டிதான் இங்கயும் இருக்குன்னு சொல்றதுக்கு வருத்தமாத்தான் இருக்கு.

அப்புறம் ஓன்னு கேக்கனும்னு நெனச்சேன். ஒரு அமைச்சர் நல்லா வேலை பாக்குறப்போ பாராட்டுவது நல்லதே. தவறேதும் இல்லை. ஸ்டாலின் நல்லா வேலை பாத்தா பாராட்டுறது சரியே. ஆனா மத்த அமைச்சருங்க? அவங்கள்ளாம் நல்லா வேலை பாக்குறாங்களா? அவங்களையும் இதே மாதிரி பாராட்டுறாரா?

Sambar Vadai சொன்னது…

நேத்தைக்கு ஓவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைவருக்கும் ஒரு டாடா சுமோ குடுத்துருக்காரே

- ஒரு டாடா சுமோ என்ன விலை (தற்போது) ?

எவ்வளவு டாடா சுமோ கொடுத்துள்ளனர் ?

அதற்கு டீசல் செலவு யார் கொடுக்கப்போகிறார்கள் ?

பராமரிப்பு மற்றும் இன்சூரன்சு பணம் எங்கிருந்து வரும் ?

ஒரு ஊராட்சியின் (சராசரி) சதுர கி.மீ எவ்வளவு ?

இத்தனை நாட்கள் இந்த தலைவர்கள் இந்த சதுர கி.மீயை வலம் வர என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

இதனால் இப்போது கிராமங்களையும் புகை சூழூமா ?

பெரும்பான்மையான பெண் தலைவர்கள் இந்த வண்டியை ஓட்டப்போகிறார்களா ? இல்லை டிரைவர் வைத்துக்கொண்டால் அவர் சம்பளம் எங்கிருந்து ?

(ஒரு சுமோவுக்கு எத்தனை கமிஷன் கிடைச்சிருக்கும்? )

மேலே கேட்டதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா / கண்டுபிடிச்சா சொல்றீங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தாமிரா said...
//இதுல என்ன இருக்கு ? கொள்கை அளவில் ஆதரித்தால் தவறுகளைச் சுட்டிக் காட்டாவேக் கூடாது என்கிற நிலைப்பாடும் எடுக்கனுமா ? //

ரிப்பீட்டேய்..

10:45 PM, July 29, 2008
//

தாமிரா,
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கயல்விழி said...
வாரிசு அரசியல் இல்லாமல் இந்திய அரசே இல்லை என்றாகிவிட்டது. கலைஞரின் வாரிசு அரசியலை எதிர்த்த இராமதாஸும், விஜயகாந்தும் கூட தங்களது கட்சியின் முக்கிய பொறுப்புக்களை தங்கள் வாரிசுகள்/உறவினர்களுக்கே கொடுத்தார்கள். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை என்றாலும் 'உடன்பிறவா தோழி' எல்லாவற்றுக்கும் சேர்த்து காம்ப்ரமைஸ் பண்ணுகிறார். இந்த பதிவைப் பார்த்து யாராவது 'வியப்படைந்ததாக' சொன்னால் தான் ஆச்சர்யம்.

1:48 AM, July 30, 2008
//

மிகச் சரியாக சொல்லிய கயல்விழி அவர்களுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Sambar Vadai said...
நேத்தைக்கு ஓவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைவருக்கும் ஒரு டாடா சுமோ குடுத்துருக்காரே

- ஒரு டாடா சுமோ என்ன விலை (தற்போது) ?

எவ்வளவு டாடா சுமோ கொடுத்துள்ளனர் ?

அதற்கு டீசல் செலவு யார் கொடுக்கப்போகிறார்கள் ?

பராமரிப்பு மற்றும் இன்சூரன்சு பணம் எங்கிருந்து வரும் ?

ஒரு ஊராட்சியின் (சராசரி) சதுர கி.மீ எவ்வளவு ?

இத்தனை நாட்கள் இந்த தலைவர்கள் இந்த சதுர கி.மீயை வலம் வர என்ன செய்துகொண்டிருந்தார்கள் ?

இதனால் இப்போது கிராமங்களையும் புகை சூழூமா ?

பெரும்பான்மையான பெண் தலைவர்கள் இந்த வண்டியை ஓட்டப்போகிறார்களா ? இல்லை டிரைவர் வைத்துக்கொண்டால் அவர் சம்பளம் எங்கிருந்து ?

(ஒரு சுமோவுக்கு எத்தனை கமிஷன் கிடைச்சிருக்கும்? )

மேலே கேட்டதுக்கெல்லாம் பதில் தெரிஞ்சா / கண்டுபிடிச்சா சொல்றீங்களா ?

3:56 PM, July 30, 2008
//

சாம்பார் வடையண்ணே......விஜயகாந்த் கட்சிக்காரன் நான் இல்லை, புள்ளி வெவரமெல்லாம் தெரியாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
கோவி இந்தப் பதிவு இரண்டு விஷயங்களை அலசுகிறது. ஒன்று வாரிசு அரசியல். மற்றொன்று கருணாநிதியின் சமீபத்திய ஆட்சிமுறை. இரண்டுமே விமர்சனத்திற்கு உரியதுதான்.

........
//

ஜிரா,

உங்கள் கருத்து முழுவதிலும் ஒப்புக் கொள்ளவேண்டியவை. இப்போதெல்லாம் தாங்கள் அதிகம் எழுதுவதில்லை...நேரமின்மையோ... ?அப்படிப்பட்ட சூழலிலும் நீங்கள் இங்கு இட்ட நெடிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்