பின்பற்றுபவர்கள்

28 ஜூலை, 2008

ஆப்பு ரேசன் - பரிசல்காரன் வித் லதானந்த் !

பரிசல் : ஹலோ சென்ஷியா ?

சென்ஷி : யெஸ் யெஸ் ஸ்பீக்கிங்.

பரிசல் : மனதுக்குள் (நல்லவேளை பின்னவீனத்துவம் எதும் பேசல) ஒரு விசயம் சென்ஷி....

சென்ஷி : ம் சொல்லுங்க மதுரையில் தான் இருக்கேன், சாயங்காலம் கோவி.கண்ணன், வெயிலான் ராமேஷ் மதுரை வர்றாங்க

பரிசல் : நல்லாதாப் போச்சு...நானும் கிளம்பி வந்துடுறேன்.....சரி அங்கே வந்தே சொல்லிக் கொள்கிறேன்

*****

மதுரை.

பரிசல்காரன் மதுரை பஸ்டாண்டில் வந்து இறங்குகிறார்.

ஏற்கனவே கோவி, வெயிலான் மற்றும் சென்ஷி பெரிய மாலையோடு நிற்கிறார்கள்

எல்லோரும் பரிசல்காரனுக்கு மாலை அனுவிக்கிறார்கள்

பரிசல்காரன் மனதுக்குள் 'வெட்டப் போற ஆட்டுக்கு போடுறமாதிரியே போடுறானுங்களே...என்ன திட்டம் வச்சிருக்கானுங்களோ...'

சென்ஷி : பரிசல் நீங்க ஏன் பரிசலில் வராமல் பஸ்ஸில் வந்திங்கோ ?

பரிசல்காரன் : நாங்கெல்லாம் பேரையே பின்னவீனத்துவமாகத் தான் வைத்திருப்போம்

சென்ஷி : பூப்படைந்த பூமியில் மூப்படைந்த கன்னியராய் ....

பரிசல்காரன் அவர் வாயைப் பொத்துகிறார். நீ இந்த மாதிரி பேசினா நான் இப்படியே பஸ் ஏறிடுவேன்

கோவி: கோவிச்சிக்காதிங்க பரிசல்...நம்ம சென்ஷிதானே பொறுத்துப் போகலாமே ?

பரிசல் : இவ்வளவு நேரம் இவர்கிட்ட பேசிக் கொண்டு இருந்திங்களே நீங்கள் எரிச்சல் அடையல ?

கோவி : அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் பாதிப்பே அடையல...

பரிசல் : எப்படி எப்படி ?

பாக்கெட்டில் இருந்து பஞ்சை எடுத்துக் காட்டுக்கிறார்.

கோவி: இப்படித்தான், இம்மா நேரம் காதில் தான் வைத்திருந்தேன். உங்களைப் பார்த்ததும் தான் எடுத்தேன்

பரிசல் : வெயிலான் ரமேஷ் ஏன் எதுவுமே பேசமாட்டேன்கிறார் ?

கோவி: அதுவா ? அவர் இன்னும் பஞ்சை எடுக்கவே இல்லை,

சொல்வதைப் புரிந்து கொண்டு காதில் இருந்த பஞ்சை வெயிலான் ரமேசும் எடுக்கிறார்

வெயிலான் : திருப்பூரில் இருந்து வந்துருக்கிங்க, ஷென்சிக்கும், கோவிக்கும் என்ன வாங்கி வந்திருக்கிங்க

பரிசல் : 'மனதுக்குள் இவர் மட்டும் எதோ துபாயிலேர்ந்து வர்றமாதிரி முண்டா பணியனும், டிசர்டும் தானே எடுத்துவர முடியும், போட்டு வாங்குறாரோ...?'

"ஹிஹி எல்லாம் எடுத்து வச்சேன். மீராவும், மேகாவும் கிளம்புற நேரத்தில் ஒரே அடம்...சமாதனப்படுத்தி முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிட்டு...எடுத்துவச்சதெல்லாம் அப்படியே மறந்துட்டு வந்துட்டேன்..."

வெயிலான் : திருப்பூரில் இருந்து என்னத்த கொண்டுவந்து கொடுத்துட போறோம்...கைவச்ச பணியனும், காட்டன் டீ சர்ட்...நான் ஒரு செட் கொடுத்துட்டேன் விடுங்க...அவ்வளவு தூரம் வந்ததே பெருசு

சரி சரி எல்லோரும் சாப்பிட்டுக் கிட்டே பேசுவோம்

*******

மாலை 6 மணியாகிவிட்டது... சென்ஷி, வெயிலான் மற்றும் கோவி ஆகிய மூவர் பரிசலை வழியனுப்பிவிட கண்ணீர் ததும்ப நிற்கிறார்கள்.

கோவி : பரிசல் உங்களுக்கு நான் எதுவுமே கொடுக்கலையே....

தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து 4 - 5 பாக்கெட்டுகளை எடுக்கிறார்

பரிசல் : என்னாது ?

கோவி : தெரியல சிங்கபூர் பிஸ்கெட் ...எல்லாம் உங்களுக்குத்தான். ரயிலில் போய்கிட்டே சாப்பிடுங்க...யாராவது கேட்டாலும் கொடுங்க...நல்லா இருக்கும்

பரிசல் : அம்புட்டு நல்லவரா நீங்கள் ... !

கோவி : ரொம்ப புகழாதிங்க...எனக்கு கூச்சமாக இருக்கு... !

மூவரும் டாட்டா காட்ட டிரெயின் கிளம்புகிறது........

************

பரிசல் 'மேகா...மீரா...உமா...' என்று மாறி மாறி நினைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்

எதிரே ஒரு சின்னக் குழந்தையும், குழந்தையின் இளம் வயது அம்மா மற்றும் குழந்தையின் பாட்டி அமர்ந்திருக்கிறார்கள்.....திடிரென்று குழந்தை அழுகிறது

பரிசல் மனதுக்குள் : 'பார்க்க நம்ம மேகா மாதிரியே இருக்கா...எப்படியாவது அழுகையை நிப்பாட்டானுமே....என்ன செய்வது......ஆங்...கோவி.கண்ணன் கொடுத்த பிஸ்கெட் இருக்கு.....ஒரு பாக்கெட்டை வெளியே எடுத்து பிரித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார்

அங்குதான் மாபெரும் திருப்பம் நிகழ்கிறது,

திடிரென்று ஒரு முறுக்கு மீசை....வேகமாக அந்த பிஸ்கெட்டை தட்டிவிட்டு.....பற்களை நறநறவென கடித்து.....விழிசிவக்க...ஒரு கையால் பரிசலின் கழுத்தை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்குகிறது.

அதிர்சியடைந்த பரிசல் நிலைகுழைந்து ... அந்த உருவத்தின் சட்டைப் பாக்கெட்டைப் பார்க்கிறார்

'லதானந்த் இன்ஸ்பெக்டர் ஆப் ரயில்வே போலிஸ்' மிரட்டும் குரலில்...

லதானந்த் : இங்கே ரொம்ப நாளாகவே புகார் வந்துக்கிட்டு இருக்கு...நீ தானா அது ?

பரிசல் : 'என்ன புகார்...என்ன வந்தது...வீரப்பனைத்தான் சுட்டுட்டாங்களே...இங்கே எப்படி மாறுவேசத்துல'

லதானந்த் : என்ர கெட்டப்பு உனக்கு வீரப்பனாக்கும் ? இது செட்டப்பு இல்ல கெட்டப்பு

பரிசல் : எதோ ஒன்னு...என் கழுத்தை விடுங்கோ...நான் என்ன தப்பு செஞ்சேன் ?

லதானந்த் : என்ன தப்பு செஞ்சியா ? செய்றது தப்புன்னே தெரியாமல் செய்துகிட்டே இருக்கியே அதான் பெரிய தப்பு

பரிசல் : சத்தியமாக ஒன்னும் 'புரியல தயவு செய்து விளக்கவும்...'

லதானந்த் : நிசமா ஒன்னும் புரியலையா ? இல்லாட்டி நடிக்கிறியா ?...சொல்றேன் கேளு... இந்த ட்ரெயினில் மயக்க பிஸ்கெட் கொடுத்து நகை பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சுட்டு போறதா அடிக்கடி எங்களுக்கு புகார் வருது.....இன்னிக்குத்தான் கண்ணி வச்சு புடிச்சிருக்கோம்

பரிசல் : வடிவேல் பாணியில் மனசுகுள் 'அடப்பாவிங்களா...உண்மையான திருடனுங்களிடம் பிஸ்கெட் வாங்கிதிண்ணுட்டு மயங்கித் தூங்கி கோயம்பத்தூரில் போய் முழுக்கிறவனுங்க இவனுங்க...என்னையைப் போய் திருடன்னு சொல்றானுங்களே' அவ்வ்வ்வ்வ்

லதானந்த் : என்னமேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல் : சார்...நீங்க வேண்டுமானால் ஒரு பிஸ்கெட் திண்ணுபாருங்க...நல்ல பிஸ்கெட் தான்

லதானந்த் : வாய்யா வா...போலிசுக்கே மயக்க பிஸ்கெட் கொடுத்துட்டு ஓடிடலாம்னு பார்க்கிறிய ? அடுத்த ஸ்டேசனில் உன்னைய ஹேண்ட் ஓவர் பண்ணுறேன்...அங்க வந்து நல்ல பிஸ்கெட்டா மயக்க பிஸ்கெட்டான்னு சொல்லு.....

ரயில் நின்றதும்...கழுத்தில் கைவைத்தப்படி பரிசலை கீழே இறக்குகிறார்...

பரிசல் : மனதுக்குள் இந்த கோவிதான் நம்மளை சிக்க வைத்தது...போனைப் போட்டு நாலு கேள்வி நறுக்குனு கேட்கனும்..மொபைலைத் தேடி எடுத்து...டயல் செய்கிறார்

'இந்த தொலை பேசி தற்பொழுது உபயோகத்தில் இல்லை' என்று குரல் வர எரிச்சல் அடைகிறார்

லதானந்த் : என்ன மேன் லேட்டஸ்டு மொபைல் போனா ? நல்லா இருக்கே...நேற்று டிரெயினில் அடிச்சதா ?

பரிசல் மீண்டும் மனதுக்குள் : செல்போனும் பறிபோகப் போகுதா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*******

மீரா : அப்பா அப்பா எழுந்திரு போன் அடிக்குது....

பரிசல் : அடச்சே எல்லாம் கனவா ? லதானந்த் அங்கிளை நினைத்தாலே இப்படி கெட்ட கெட்ட கனவாக வருது.


பிகு : நண்பர் பரிசலை, பிரச்சனையில் சிக்க வைக்க மனசு வரல, அதனால் கடைசி பத்தி கடைசியில் சேர்த்திருக்கிறேன்.... கோவி-மதுரை-சென்ஷி-வெயிலான் - பஸ்டாண்டு - ரயில்வேஸ்டேசன் எல்லாம் தொடர்போ லாஜிக்கோ இல்லாமல் இருக்கும். கனவு தானே ? அதில் என்ன லாஜிக் ? :)

16 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

ஆஹா... பிஸ்கட்டுலயுமா போலியா... :))

ஆயில்யன் சொன்னது…

//என்ன தப்பு செஞ்சியா ? செய்றது தப்புன்னே தெரியாமல் செய்துகிட்டே இருக்கியே அதான் பெரிய தப்பு//


சூப்பரூ :))))))))

புதுகை.அப்துல்லா சொன்னது…

ஹா..ஹா..ஹா
சூப்பர்ணே

கயல்விழி சொன்னது…

//லதானந்த் : என்ன மேன் லேட்டஸ்டு மொபைல் போனா ? நல்லா இருக்கே...நேற்று டிரெயினில் அடிச்சதா ?//

லதானந்த் சித்தர் தான் இப்போ ஹாட் டாப்பிக் போல இருக்கு :) :)

rapp சொன்னது…

ஆஹா, இது ஒரு தனி சங்கிலித் தொடரா போய்க்கிட்டே இருக்கே :):):)

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
ஆஹா... பிஸ்கட்டுலயுமா போலியா... :))
//

பிஸ்கெட் நல்ல பிஸ்கெட்தான் (கோவி கொடுத்து இருக்காரே :) அட்றாசக்கை)

சூழ்நிலை பரிசலை மாட்டிவிட்டது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயில்யன் said...
//என்ன தப்பு செஞ்சியா ? செய்றது தப்புன்னே தெரியாமல் செய்துகிட்டே இருக்கியே அதான் பெரிய தப்பு//


சூப்பரூ :))))))))
//

ஹிஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஹா..ஹா..ஹா
சூப்பர்ணே

2:35 AM, July 28, 2008
//

வாங்க அப்துல்லா,

அடுத்து உங்கள வச்சித்தான் காமடி பண்ணனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
ஆஹா, இது ஒரு தனி சங்கிலித் தொடரா போய்க்கிட்டே இருக்கே :):):)

3:13 AM, July 28, 2008
//

அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நான் நிறுத்துறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கயல்விழி said...
//லதானந்த் : என்ன மேன் லேட்டஸ்டு மொபைல் போனா ? நல்லா இருக்கே...நேற்று டிரெயினில் அடிச்சதா ?//

லதானந்த் சித்தர் தான் இப்போ ஹாட் டாப்பிக் போல இருக்கு :) :)

2:41 AM, July 28, 2008
//

ஆமாம், லதானந்த் அங்கிள் தான் எங்களுக்கெல்லாம் Guardian :)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஆத்தாடி கோவி அண்ணண் பதிவர் சந்திப்பு எதுவும் சாப்பிட குடுத்த உடனே சாப்புட கூடாதுப்பா, வேற யாரையாச்சும் சாப்பிட சொல்லி ஒன்னும் ஆவலன்னாத்தான் நாம சாப்பிடனும், ரொம்ப சூதனமாக இருக்கனும் போல இருக்கே.

முரளிகண்ணன் சொன்னது…

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

பரிசல்காரன் சொன்னது…

நீங்களுமா?

பரிசல்காரன் சொன்னது…

//மீராவும், மேகாவும் கிளம்புற நேரத்தில் ஒரே அடம்...சமாதனப்படுத்தி முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிட்டு...எடுத்துவச்சதெல்லாம் அப்படியே மறந்துட்டு வந்துட்டேன்//

எப்படி இவ்ளோ கரெக்டா சொல்றீங்க?

பரிசல்காரன் சொன்னது…

//rapp said...

ஆஹா, இது ஒரு தனி சங்கிலித் தொடரா போய்க்கிட்டே இருக்கே ://

ஆமாமா!

☼ வெயிலான் சொன்னது…

இதெல்லாம் எப்ப நடந்துச்சு?

நல்ல'காலம்' நீங்களாவது என்னை நல்லவரா எழுதியிருக்கீங்க.

ஆனா இந்த பரிசலும்,லதானந்த் இன்ஸ்பெக்டரும் என்னை வாரு வாருனு வார்றாங்க கோவியாரே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்