பின்பற்றுபவர்கள்

25 ஜூலை, 2008

பெண்டாட்டி கையில் அடிவாங்கியவர்கள் :)

தெக்கிக்காட்டான் பதிவில் ஒரு சுவையார்வமான விவாதம் ஓடிக் கொண்டிருந்தது, பதிவர் கயல்விழி பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

"மாட்டுக்கு பதில் நிலத்தில் உழ உறுதி இருக்கும், தனியே பிரசவம் பாக்க உறுதி இருக்கும் கருவாச்சி, தன்னுடைய கணவன் அடிக்கும் போது திரும்ப அடிக்க உறுதி இருக்காதா?? ஏன் அந்த உறுதியோ அல்லது தைரியமோ கருவாச்சிக்கு இல்லை?" - கயல்விழி

அங்கேயே கூட அவருக்கு பதில் அளித்தேன். ஞாயப்படுத்துதல் இல்லை. என்னைப் பொறுத்து அடிப்பதும், அடிவாங்குவதும் கூட தவறுதான். கண்டிக்கத் தக்கதே.

அடித்தல், அடிவாங்குதல் எல்லாம் உளவியல் தொடர்புடையது, மேற்கத்திய நாடுகள் தவிர்த்து கண்டிப்பு என்பதில் வன்முறையாக அடி உதை என்று குடும்பத்திற்குள்ளேயே நடப்பெதெல்லாம் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தான்.

திருப்பி அடிப்பதற்கு தைரியம் மட்டுமே தேவை என்றால் தானே தவறு செய்துவிட்டு, அதைச் சுட்டிக் கேட்கும் மகனை தாக்கவரும் தந்தையைக் கூட மகன் திருப்பி அடித்துவிட முடியும். வளர்ந்த அண்ணனை தம்பிகள் கூட 'தட்டி'க் கேட்ட முடியும். அடிப்பவர்கள் வயதில் பெரியவராகவும், அடிவாங்குபவர் அவரைவிட இளையராக இருப்பதும், சென்டிமென்ட்ஸ் காரணமாக எழுதப்படாத விதி. ஒத்த வயது நண்பர்களிடம் கூட அடிதடி நடந்தால் நட்பே கெட்டுவிடும், நட்பில் சமநிலையாக இருப்பதால் அடிதடி அந்த சமநிலையை குலைத்துவிடும்.

கணவன் - மனைவி உறவில் கணவர் தன்னைவிட வயதில் பெரியவர் என்பதாலேயே திருப்பி அடிக்கும் நிலைக்கு மனைவி செல்வது இல்லை என்பதைத் தவிர்த்து வேறு காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த சினத்தையெல்லாம் பிள்ளைகள் மீதும், மாமியார் மீதும் காட்டிவிடுவார்கள், ஆக வாங்கிக் கொண்டு மவுனியாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

சமவயது ஆணையோ, தன்னைவிட இளைய ஆணை மணக்க முன்வரும் பெண்களுக்கு அடிவாங்கும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். தன்னைவிட மனைவிக்கு ஒரு வயது அதிகம் என்றாலும் உளவியல் ரீதியாக மனைவி மீது தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற மதிப்பு ஆணின் மனதில் கண்டிப்பாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதெல்லாம் விட முதன்மைக் காரணமாக மனிதர்கள் நெருக்கமானவர்களிடம் கை ஓங்குவதற்கு கட்டற்ற சினம் தவிர்த்த் பார்த்தோமேயானால், ஆளுமையே காரணம், தான் சொல்வதைக் கேட்க வைப்பதன் மூலம், தன்மீது ஒரு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் உளவியல் ரீதியாக தனக்கு ஒரு பலத்தை (செயற்கையாக) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமுகவியல் ரீதியாக ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கும் கீழ்யாராவது வைத்திருப்பதுதான் தனக்கான பெருமை என்று நினைக்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும் நாய், பூனை ஆகியவற்றிக்கு பாதுகாப்புக் கொடுக்கும் காவலர்களாகவும், சிலர் விலங்குகளையும் ஆட்டிப்படைப்பவர்களாக மாறிவிடுவார்கள். உண்மையிலேயே விலங்குகள் மீது அன்பு செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் சவுக்கார் ஜானகியும் அவரது தோழியும் பேசிக் கொள்வார்கள், "புருசன் கையில் அடிவாங்குறதும்...அதைப் பின்பு நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே...அப்பப்பா..." என்று தோழி சொல்ல.

சவுக்கார் ஜானகி ஒரு காட்சியில் சிவாஜியிடம் அறைவாங்கிவிட்டு அதை நினைத்துப் பார்ப்பது கலக்கலான ரொமான்ஸ்.

திருமணமான ஆண்கள் மென்மையாக மனைவியிடம் அடிவாங்குவதையும், கிள்ளப்படுவதையும் ரசிக்கிறார்கள். மென்மையின் அளவு மாறும் போதுதான் பிரச்சனையே வெடிக்கிறது.

கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் அடிப்பது தவறுதான். நாலுபேருக்கு தெரியாமல் (வடிவேல் பாணியில்) அடிவாங்கிக் கொண்டால் எதுவாக இருந்தாலும் தப்பு இல்லை :) அன்பானவர்களிடம் அன்பை அனுபவிக்கும் போது, எதோ பொறுக்க முடியாமல் என்றோ ஒருநாள் சற்று கைநீளும் போது அதை ஏற்றுக் கொள்வது கடினம் தான் என்றாலும், பெரிதுபடுத்தாமல் எல்லோருமே புலன்களை அடக்கியாளும் பொறுமை சாலிகள் என்று புரிந்து கொள்ளவேண்டும். சரியான காரணமின்றி தொடர்ந்து அடிவாங்குவதும் தவறே. அடிப்பவர்களின் நிழலில் வாழ்வதைவிட விட்டு விலகுவதே நல்லது.

உழைக்கும் வர்கத்தில் கணவனை முடியைப் பிடித்து உலுக்கி அடித்து நெருக்குவதெல்லாம் நடப்பது தான். நடுத்தர வர்கத்திடம் எல்லோருக்கும் தெரிவது போல் நடப்பது இல்லை என்பதால் முற்றிலும் அவ்வாறெல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது.

எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் புரட்சிக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான். :)

பெண்களுக்கு சிறப்பு குணம் இருப்பதாகவும், அது பெருமைக் குரியதாகவும் இருக்கும் என்று நீங்கள் நம்பினால், அதே குணம் தான் மறைமுகமாக அவளை பலவற்றில் அமைதி காக்கவும் வைக்கிறது, பலவீனமாக்கியும் வைத்திருக்கிறது. இல்லற வாழ்வில் ஏற்படும் இடர்களின் போது சினங்களை கட்டுப்படுத்தாமல் பெண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி கற்பிப்பது (பின்நவீனத்துவச் சொல்) தவறே. சூழலுக்கு ஏற்றவாறு தான் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முடிவெடுக்க, நடந்து கொள்ள முடியும்.

பெண்டாட்டியிடம் அடிவாங்கிய எந்த கணவனும் அதை வெளியே சொல்லிக் கொள்ளமாட்ட்டார்கள். அதனால் பெண்கள் கணவனை அடிக்கிறார்களா இல்லையா என்பதே வெளியே தெரியவில்லை. அப்படியும் தவிர்க்கக் கூடாது என்றே திரை இயக்குனர்கள் கற்பனை என்ற பெயரில் தன்னுடைய அனுபவத்தையோ, பிறருடைய அனுபவத்தையோ நகைச்சுவை காட்சிகளாக வைத்துவிடுகிறார்கள்

பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

தலையில் கொத்துக் கொத்தாக முடி காணாமல் போய் இருக்கும். வழுக்கைத் தலையர்களுக்கு தலையில் தலையில் அங்கங்கே வெட்டுக்காயம் இருக்கும். :) சும்மா நகைச்சுவை !

பி.கு: தலைப்பைத் தொட்டு அல்லது உண்மையாகவே பொருளுக்காக இந்த பதிவு சூடானால் நான் பொறுப்பல்ல.

23 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சூடான இடுகைக்கு முருகன் சுழி நான் போடுகிறேன். மீண்டும் சந்திக்கிறேன் கொஞ்சம் தண்ணீரோடு...!

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சிங்கப்பூர் தண்ணிக்கு குளிக்கிறப்ப எல்லாம் தலைமுடி கொத்து கொத்தா போய்கிட்டே இருக்குண்ணே. அப்றம் உங்க தலையையும், என் தலையையும் பார்த்துட்டு நம்ம குசும்பன், அப்துல்லா அண்ணண் எல்லாம் நமக்கு வீட்ல அடி விழுதுனு வம்பிழுக்க போறாங்க. அதனால இந்த கொத்து கொத்தா முடி காண போறது சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு பொருந்தாதுனு ஒரு டிஸ்கி போட்டுருங்க.

பரிசல்காரன் சொன்னது…

நான்கூட சுயசரிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நெனச்சேன்!

பரிசல்காரன் சொன்னது…

"அடிவாங்கியவர்கள்”ன்னு பன்மைல இருக்கறதால என்னைப்பத்தியும் இருக்குமோன்னு நெனைச்சுட்டேன்!

மோகன் கந்தசாமி சொன்னது…

/////சவுக்கார் ஜானகி ஒரு காட்சியில் சிவாஜியிடம் அறைவாங்கிவிட்டு அதை நினைத்துப் பார்ப்பது கலக்கலான ரொமான்ஸ்.////

அர லூசுத்தனம் கலக்கலான ரொமான்சா? :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
/////சவுக்கார் ஜானகி ஒரு காட்சியில் சிவாஜியிடம் அறைவாங்கிவிட்டு அதை நினைத்துப் பார்ப்பது கலக்கலான ரொமான்ஸ்.////

அர லூசுத்தனம் கலக்கலான ரொமான்சா? :-))
//

மோகன்,

எல்லாவித காமடிகளும் அப்படித்தானே. அதில் இது ஒன்று !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
சூடான இடுகைக்கு முருகன் சுழி நான் போடுகிறேன். மீண்டும் சந்திக்கிறேன் கொஞ்சம் தண்ணீரோடு...!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி,

தண்ணீரா எதுக்கு ? தீ பற்றி எரிகிறதா ? அப்படி எதுவும் பதிவில் இங்கே தூண்டியதாக தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சிங்கப்பூர் தண்ணிக்கு குளிக்கிறப்ப எல்லாம் தலைமுடி கொத்து கொத்தா போய்கிட்டே இருக்குண்ணே. அப்றம் உங்க தலையையும், என் தலையையும் பார்த்துட்டு நம்ம குசும்பன், அப்துல்லா அண்ணண் எல்லாம் நமக்கு வீட்ல அடி விழுதுனு வம்பிழுக்க போறாங்க. அதனால இந்த கொத்து கொத்தா முடி காண போறது சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு பொருந்தாதுனு ஒரு டிஸ்கி போட்டுருங்க.

11:08 AM, July 25, 2008
//

ஜோசப் மிகச் சரியான டிஸ்கி,

எனக்கும் உங்க நிலைமைதான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
"அடிவாங்கியவர்கள்”ன்னு பன்மைல இருக்கறதால என்னைப்பத்தியும் இருக்குமோன்னு நெனைச்சுட்டேன்!

11:29 AM, July 25, 2008
//
பரிசல்,
தானே வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டால், இல்லை அப்படியெல்லாம் இருக்காது என்று நம்புவார்களா ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
நான்கூட சுயசரிதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நெனச்சேன்!

11:27 AM, July 25, 2008
//

சரிதைதான் எழுதனும், கதையைச் சொல்லுங்க !
:)

சரவணகுமரன் சொன்னது…

//எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான்//

:)

தமிழ் பொறுக்கி சொன்னது…

சத்தியமா இதை படித்த எவனும் இனி அடிக்க மாட்டான்னு
நினைக்கிறேன்....

பெயரில்லா சொன்னது…

\எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் புரட்சிக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான்.\\ அதிலயும் அந்த கல்கி படத்துல ப்ரகாஷ் ராஜ் ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு மாதிரி இருந்தா எல்லாரும் திருந்தீட மாட்டாங்க :)

உங்களுக்கு மட்டும் தலைமுடி இல்லாம இருந்திருந்தா கதையை தலைகீழா மாத்திருப்பீங்களொ!!:):)

கோவி.கண்ணன் சொன்னது…

// சரவணகுமரன் said...
//எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான்//

:)
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் பொறுக்கி said...
சத்தியமா இதை படித்த எவனும் இனி அடிக்க மாட்டான்னு
நினைக்கிறேன்....

2:10 PM, July 25, 2008
//
அடியும் வாங்கிக்க மாட்டாங்கன்னு சொல்ல மனசு வரலையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...
\எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் புரட்சிக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான்.\\ அதிலயும் அந்த கல்கி படத்துல ப்ரகாஷ் ராஜ் ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கற பொண்ணு மாதிரி இருந்தா எல்லாரும் திருந்தீட மாட்டாங்க :)

உங்களுக்கு மட்டும் தலைமுடி இல்லாம இருந்திருந்தா கதையை தலைகீழா மாத்திருப்பீங்களொ!!:):)

2:44 PM, July 25, 2008//

அப்படி இல்லாவிட்டாலும் விக் வைத்து சமாளிப்போம் ! கதையை மாற்ற மாட்டோம்
:)

Thekkikattan|தெகா சொன்னது…

அடக் கொடுமையே இதை வைச்சி ஒரு பதிவா :-).

என்னது கொத்து கொத்தா முடி கொட்டியிருந்தாலும் அடி வாங்கினதுக்கு அடையாளமா :-((, அப்ப நானெல்லாம் கன்ஃபார்ம்டா... :-)).

பி.கு: சரி இந்த அடிதடி இனிமே நடக்காம இருக்கிறதுக்கு ஒரு யோசனை, யாருக்கெல்லாம் பெண் குழந்தைகள் இருக்கிறதோ அதுகளுக்கு சிறு வயதிலேயே காரத்தே வகுப்பு எடுக்கச் சொல்லி ஒரளவிற்கு எங்கே அடிச்சா சுருண்டு விழ வைக்கலாங்கிற வரைக்கும் கத்துக்க வைச்சிட்டா... இந்த அடிதடியை நல்லிஃபை பண்ணிடலாம் :) (ஐடியா மணியின் யோசனைகளில் ஒன்று).

manikandan சொன்னது…

*****கணவன் - மனைவி உறவில் கணவர் தன்னைவிட வயதில் பெரியவர் என்பதாலேயே திருப்பி அடிக்கும் நிலைக்கு மனைவி செல்வது இல்லை என்பதைத் தவிர்த்து வேறு காரணம் தெரியவில்ல******

மெய்யாலுமே சொல்றீங்களா ?

Thamira சொன்னது…

ஊம்.. ம்..ஊம்.. ம்.. (அழுதிட்டுருக்கேங்க..)

கோவை விஜய் சொன்னது…

நல்லா சொல்லியிருங்கீங்க நாட்டு நடப்பை கோவி சார்.

1. குடிசையின் நிலை---அடிதடி

2. நடுத்திரவர்க்கம்--சிறு பூசலுடன் கைகலப்பு
3. பரந்து விரிந்த பங்களா வாசி ?


புகைப்படபேழைக்கு வருகைதந்து தந்திட்ட கருத்துக்கு நன்றி.
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

PRABHU RAJADURAI சொன்னது…

ஏதோ ஜாலியாக இருக்கப் போகிறது என்று வந்தால்...என்ன சீரியஸ்?

நேற்று அடியா?:-))

rapp சொன்னது…

//கணவன் - மனைவி உறவில் கணவர் தன்னைவிட வயதில் பெரியவர் என்பதாலேயே திருப்பி அடிக்கும் நிலைக்கு மனைவி செல்வது இல்லை என்பதைத் தவிர்த்து வேறு காரணம் தெரியவில்லை//
சரி அப்ப உலகத்துக்கே மகாத்மாவா இருந்த காந்திஜி ஏன் தன் மனைவி கஸ்தூரிபா கிட்ட மட்டும் அப்படி நடந்துக்கிட்டார்?

நம்ம இந்திய சமூகத்தில் மட்டுமல்லாம ஓரளவுக்கு தொன்மையான சமூகங்கள் பலவற்றிலும் ஏன் பெண்ணுக்கு தன்னை விட மூத்த ஆண்மகனை கல்யாணம் செஞ்சு வெச்சாங்கன்னு நினைக்கிறேன்னா, பல சமூகங்கள்ள நிலவி வந்த ஆணாதிக்கப் போக்கினால் பெண்கள் பலவித கஷ்டங்களை சிறுவயதிலிருந்தே தாங்கி பழக்கப்பட்டு, தன் வயதிற்கு மீறிய மனமுதிர்ச்சி பெற்றார்கள், ஆனால் ஆணிற்கு அந்தப் பிரச்சினை இல்லாததால் அவர்களிடம் அந்த மெச்சூரிட்டி இல்லை. அதன் பொருட்டே பொதுவாக ஒரு பெண்ணை விட மூத்த வயதுள்ள ஆணை மணமுடிக்கும் பழக்கம் ஏற்பட்டது என நினைக்கிறேன்.

rapp சொன்னது…

//அந்த சினத்தையெல்லாம் பிள்ளைகள் மீதும், மாமியார் மீதும் காட்டிவிடுவார்கள், ஆக வாங்கிக் கொண்டு மவுனியாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.
//

இதென்ன வாதம்னே புரியலைங்க, வயதிற்கும் செல்வாக்கிற்கும் சம்பந்தமே இல்லைங்க. கணவன் வயது முதிர்ந்தவன் என்கிற காரணத்தால் மனைவி பேசாமல் இருக்கிறாளென்றால், மாமியாரிடமும் மாமனாரிடமும் கூட அப்படித்தானே இருக்கவேண்டும்? நீங்க சொல்றபடி வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் குணம் இரு பாலினருக்கும் இருந்திருந்தால் நாட்டில் முதியோர் இல்லங்களே இருந்திருக்காது. பெண்கள் மட்டுமா செல்வாக்கில்லாதவர்களிடம் கோபத்தை காண்பிக்கிறார்கள்? மனிதக்குலத்தில் தோன்றிய அனைவருக்குமே பொதுவான நெகடிவ் குணமது. செல்வாக்கை நிர்ணயிக்கும் விஷயம் ஒவ்வொரு குடும்பத்திலும் வேறுபடுகிறது. அதன் பொருட்டே அந்தக் குடும்பத்தில் கணவனோ மனைவியோ செல்வாக்குடயவர்கள் ஆகிறார்கள். அதீத அன்போ, உரிமையோ, அக்கறையோ எக்காரணமாயிருப்பினும் அதிகார துஷ்பிரயோகம் ஆபத்தானது மட்டுமில்லை கையாலாகாத்தனமானதும் கூட

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்