காதலுக்கும் வயதுக்கும் எதாவது தொடர்ப்பு இருக்கிறதா ? முதன் முதலில் அம்மா அப்பா விளையாட்டு யாரோடு விளையாண்டோம் என்று இன்றும் நினைத்திருந்தால் அதெல்லாம் காதல் என்ற இலக்கணத்துக்குள் வராதா ? இன்பேக்ஸ்வேசன் என்று சொல்லுவாங்களே, எதோ ஒரு ஈர்ப்பு அது பேரு காதல் இல்லை என்றெல்லாம் சொல்லுவார்கள், காதல் எந்த வயதில் வரவேண்டும் என்று எதாவது வரையறை இருக்கிறதா ? ஆணோ பெண்ணோ பருவமடைந்ததும் இயல்பாகவே எதிர்பாலினரின் மீது ஈர்ப்பு வரும் பருவம் காதல் பருவமா ? எல்லோருக்கும் அது போல் ஈர்ப்பெல்லாம் நிகழ்ந்து விடுவதில்லை. மீசை அரும்பும் பருவத்தில் காதலா ? செருப்பால் அடி :) அப்போ அந்த வயதில் அது தப்பா ? சென்ற நூற்றாண்டு வரை நமது மரபணுக்களில் சிறுவயது திருமணம் கலந்து இருக்கிறது. தற்பொழுது சமூக அமைப்பால் ஒருவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதியைப் பெரும் போதுதான் அவனுக்கு திருமணமே. அப்போ காதல் ? முதலில் வேலை அப்பறம் தான் காதல் கத்திரிக்காயெல்லாம். வயதுக்கும் காதலுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறதல்லவா ?
'ஹிஹி... நான் என் மனைவியைக் காதலிக்கிறேன்....' அச்சோ அச்சோ ... திருமணத்திற்கு முன்பு வரும் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறோம். பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். :) திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்காவிட்டால் முதலில் சோறு கிடைக்காது, அப்பறம் மத்ததெல்லாம் வேண்டாம் பாக்கியராஜ் மேட்டர் !!! வேண்டாம் ... எழுத வேண்டாம். திருமணத்திற்கு முன்பு எதிர்பாலினரோடு எந்த வயதிலாவது காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். யாரும் சின்ன வயசிலேயே குட்டிச் சாமியார் ஆகிவிடுவதில்லை. அது இன்பாக்ஸுவேசனா ? வேற எதாவதா ? எப்படி எதோ ஒண்ணு கண்டிப்பாக இருந்திருக்கும்.
ஐந்து வயதாக இருக்கும் போது தெருவில் இருக்கும் அதே வயது பையன் என்னிடம் சொன்னேன். 'அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும். சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம். இப்படி பலப் பலக் காதல் கதைகளை எல்லோரும் கடந்தே வந்திருப்போம்.
எனக்கும் ஐந்து வயதிருக்கும் அப்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குத்தான் விடுமுறைக்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வேன். அங்கேயே அப்பாவின் பெரியம்மா மகள் வீடும் இருந்தது, எனக்கு அத்தை முறை. பார்வதி அத்தை என்று தான் கூப்பிடுவோம். அத்தைக்கு ரோசாப்பு நிறத்துல அழகான குழந்தை மூன்று வயசுதான் இருக்கும், படிப்பறிவு இல்லாத பாட்டியும் அத்தையும்...'டேய் உன் பொண்டாட்டிக் கூட போய் விளையாடுடா என்பார்கள்' குழந்தை கொழுகொழு என இருப்பதால் ஆசை ஆசையாக நானும் அந்த குழந்தையும் விளையாடுவோம், அதுக்குச் சரியாகக் கூட பேச வராது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும். பெயர் திலகா. எப்போது பாட்டி வீட்டுக்குச் சென்றாலும் திலகா எனக்குத்தான் என்பார்கள். அவர்கள் சொல்லும் போது கூச்சமாகக் கூட இருக்காது. அறியாத வயசு இல்லையா ? பெரியவங்களானதும் கல்யாணம் தானே பண்ணிக்கிறாங்க, அது போல் பெரியவனானதும் திலகாவை நான் கட்டிக்கனும் போல.....' திலகாவிடம் அப்படித்தான் நானும் சொல்வேன். 'உன்னைய பெரியவனானதும் கட்டிக்கிறேன்...' பதிலுக்கு சிரிக்கும்.
இப்படி ஒரு ஆண்டு வரையில் அன்பாக திலகாவிடம் விளையாடியது விதிக்குப் பிடிக்கவில்லை போலும். திலகாவிற்கு பெரியம்மை போட்டு ... மூன்று நாளில் இறந்ததுவிட்டது. தொட்டியில் போட்டு சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற சொல்லமுடியாத சோகம். பார்வதி அத்தை தஞ்சாவுருக்கு குடும்பத்தோடு பெயர்ந்த பிறகுதான் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
இது காதலா ? இல்லையா ? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்த இழப்பின் சோகம் பல ஆண்டுகள் நீடித்தது. மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும் மறக்கவே முடியாத நினைவுகளாகவே இருக்கும். அந்த வகையில் என்னுடைய ஐந்துவயதில் மூன்று வயது அத்தை மகள் திலகா மறைந்தது இன்றும் கூட நினைவில் இருக்கிறது. எங்கள் வீட்டில் 10 ஆண்டுவரை கருப்பு வெள்ளை புகைப் படமாக இருந்த திலாவின் நிழல்படம் அதன் பிறகு கரையானுக்கு உணவாகி மறைந்தது. அந்த குழந்தை உயிரோடு இருந்து, நானும் பெரியவனாக இருந்தால் நான் அவளைத்தான் மணந்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதால் அதுபற்றி கற்பனை கூட வீண் தான். கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார்.
என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை. எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயக்கிப்பட்ட திருமணம் தான் எனது திருமணம்.
பெரியவர்களே...தாய்மார்களே...குழந்தைகளின் சின்ன வயசிலேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிச்செல்லாம் போட்டு வைத்துடாதிங்க. அது பெரிய தப்பு !
டிஸ்கி 1 : இது பரிசல்காரனின் 'முதன் முதலில்...' சங்கிலி பதிவுக்காக எழுதியது. ஐந்து வயது நினைவை கிளறிவிட்ட அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் :). பதிவர்மார்களே... நான் எதோ சோகத்தில் இருப்பது போல் நினைச்சு பின்னூட்டத்தில் கண்ணீர் வடிச்சுடாதிங்க. அது ஒரு நிகழ்வு அது என் நினைவுப் பகுதியில் இன்னும் இருக்கிறது அம்புட்டுத்தான். நான் செல்லமாக வளர்த்த நாய்குட்டியை லவ் பண்ணினேனா ? என்றெல்லாம் தங்கள் சொந்த அனுபவத்தைச் சொல்லி... அதெல்லாம் காதல் இல்லையான்னு கேட்கப்படாது ? :)))
டிஸ்கி 2 : காதல் பற்றி தான் சொல்லி இருக்கிறேன். பால் உணர்வைப் பற்றி அல்ல. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை, காதலும் காமமும் சேர்ந்தே இருப்பது என்று சொல்கிறவர்களெல்லாம் எட்டப் போங்க.
இந்த தொடர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளமல அடுத்து தொடரவேண்டியது பதிவர் வடகரைவேலன்.
35 கருத்துகள்:
நான் தான் மொதல்லா?
//பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.//
எல்லாருமா அப்ப?
சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம்.//
அப்ப ஆரமிச்ச நாரதர் வேலைதானாண்ணே?
//காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். //
நீங்க என்ன மாதிரி பசங்களை பார்க்காமல் இப்படி ஒரு வார்த்தையை விட்டது ரொம்ப தப்பு...
//என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை. எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயக்கிப்பட்ட திருமணம் தான் எனது திருமணம்.
//
அழகா safe ஆக ஆடிவிட்டீர்கள் போலருக்கே. இதை எல்லாரும் நம்பிட்டா நானும் நம்பறேங்க கண்ணன்
/
திருமணத்திற்கு முன்பு வரும் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறோம். பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். :)
/
ம் ஒதுங்கி வழி விடுங்கப்பா
:)))))))))
/
அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும்.
/
நான் ஒருதடவை முடிவு பண்ணீட்டா அப்புறம் யார் பேச்சயும் கேக்க மாட்டேன்
அவ்வ்வ்வ்
/
கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார்.
/
அதே அதே
/
பதிவர்மார்களே... நான் எதோ சோகத்தில் இருப்பது போல் நினைச்சு பின்னூட்டத்தில் கண்ணீர் வடிச்சுடாதிங்க.
/
சரி சரி புரியுது புரியுது. அண்ணி திலகாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
டிஸ்கி சூப்பர்
:)
ஜெகதீசனை காணுமே!?
/
rapp said...
அழகா safe ஆக ஆடிவிட்டீர்கள் போலருக்கே. இதை எல்லாரும் நம்பிட்டா நானும் நம்பறேங்க கண்ணன்
/
நான் நம்பலைங்க அம்மிணி !!
அப்ப நீங்களும் நம்பமாட்டீங்கல்ல!?!?
/
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்காவிட்டால் முதலில் சோறு கிடைக்காது
/
பதிவுல எங்கடா மெசேஜ் இல்லியேன்னு தேடினேன், இங்க இருக்கு
:))))
//நான் நம்பலைங்க அம்மிணி !!
அப்ப நீங்களும் நம்பமாட்டீங்கல்ல!?!?
//
யாரும் நம்பமாட்டாங்கன்னு தெரியுங்க சிவா, அதாலதான் அப்படி ஒரு பிட்ட போட்டேன் :):):)
கண்ணா, உங்களுக்கும் செருப்பு போடாத பிகருக்கும் ஏதோனு பசங்க பேசிப்பாங்கலே, அத பத்தி எழுதல? :)
இதுபோன்ற உணர்வுபூர்வமாக நமது பல முதல் அனுபவங்கள் இருக்கும். அதை பகிர்ந்துகொள்ளவே இதை ஆரம்பித்தேன். அதை சரியாகப் புரிந்துகொண்டு தொடர்ந்துவிட்டீர்கள்!
சூப்பர்!
லக்கிலுக்கும் தனது முதல் காதலைப் பற்றிதான் எழுதியிருக்கிறார் இன்று!
அடுத்ததாக எழுத வடகரைவேலன் ரெடியாகியிருப்பார் என்று நினைக்கிறேன். (அடுத்ததாக எழுதுபவர் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே? நினைவுகளில் கொஞ்சம் மூழ்கியதால் வந்த விளைவோ?)
//JTP said...
கண்ணா, உங்களுக்கும் செருப்பு போடாத பிகருக்கும் ஏதோனு பசங்க பேசிப்பாங்கலே, அத பத்தி எழுதல? :)
1:55 AM, July 29, 2008
//
பலபேரு என்னைய லவ் பண்ணி இருக்கலாம், நான் அவர்களையெல்லாம் லவ் பண்ணீனேனா ? சும்மா எதையாவது கொளுத்தி போடாதிங்க பாஸ்.
:)
//மங்களூர் சிவா said...
சரி சரி புரியுது புரியுது. அண்ணி திலகாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
//
இதெல்லாம் 10 மச் இல்லே ?
34 வருசமாக 3 வயது குழந்தையின் ஆத்மா இன்னும் சாந்தியடையாமல் இருக்குமா ?
சிவா உங்களுக்கு இருக்கிற லொள்ளுக்கு.......
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம்.//
அப்ப ஆரமிச்ச நாரதர் வேலைதானாண்ணே?
//
ஹிஹி அது கூட நன்மையில் தான் முடியும் என்பார்கள்.
:)
//புதுகைச் சாரல் said...
நான் தான் மொதல்லா?
10:22 PM, July 28, 2008
//
நன்றி
//புதுகைச் சாரல் said...
//பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.//
எல்லாருமா அப்ப?
//
அப்ப என்ன இப்ப என்ன எல்லோரும் கல்யாணம் ஆகிவிட்டாலே அப்படித்தான். அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி. :)
//VIKNESHWARAN said...
//காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். //
நீங்க என்ன மாதிரி பசங்களை பார்க்காமல் இப்படி ஒரு வார்த்தையை விட்டது ரொம்ப தப்பு...
11:07 PM, July 28, 2008
//
அவ்வளவு நல்லவரா சாமி நீங்கள் !
:)
// rapp said...
அழகா safe ஆக ஆடிவிட்டீர்கள் போலருக்கே. இதை எல்லாரும் நம்பிட்டா நானும் நம்பறேங்க கண்ணன்
11:44 PM, July 28, 2008
//
அச்சா அச்சா அச்சா ..... !
:)
// மங்களூர் சிவா said...
/
அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும்.
/
நான் ஒருதடவை முடிவு பண்ணீட்டா அப்புறம் யார் பேச்சயும் கேக்க மாட்டேன்
அவ்வ்வ்வ்
1:04 AM, July 29, 2008
//
இப்பவும் அவனை பார்க்கும் போதெல்லாம் பெரியவங்க எல்லோரும் ஓட்டுவாங்க :)
//மங்களூர் சிவா said...
/
கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார்.
/
அதே அதே
1:04 AM, July 29, 2008
//
எதோ மனசுக்குள்ள மறைவாக எதோ ரகசியம் இருக்குன்னு சொல்லுது 'அதே அதே' ?
//மங்களூர் சிவா said...
:)
ஜெகதீசனை காணுமே!?
//
தம்பி காலையில் தான் ஆட்டத்தில் கலந்து கொள்ளுவான்
//rapp said...
//நான் நம்பலைங்க அம்மிணி !!
அப்ப நீங்களும் நம்பமாட்டீங்கல்ல!?!?
//
யாரும் நம்பமாட்டாங்கன்னு தெரியுங்க சிவா, அதாலதான் அப்படி ஒரு பிட்ட போட்டேன் :):):)
1:17 AM, July 29, 2008
//
சிறுகதைப் போட்டிக்கு எழுதவில்லை. இதுல கற்பனை எதுவும் இல்லிங்க. நம்பாவிட்டால் போங்க :)
//பரிசல்காரன் said...
இதுபோன்ற உணர்வுபூர்வமாக நமது பல முதல் அனுபவங்கள் இருக்கும். அதை பகிர்ந்துகொள்ளவே இதை ஆரம்பித்தேன். அதை சரியாகப் புரிந்துகொண்டு தொடர்ந்துவிட்டீர்கள்!
சூப்பர்!
லக்கிலுக்கும் தனது முதல் காதலைப் பற்றிதான் எழுதியிருக்கிறார் இன்று!
அடுத்ததாக எழுத வடகரைவேலன் ரெடியாகியிருப்பார் என்று நினைக்கிறேன். (அடுத்ததாக எழுதுபவர் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே? நினைவுகளில் கொஞ்சம் மூழ்கியதால் வந்த விளைவோ?)
2:40 AM, July 29, 2008
//
சரி இல்லை சொல்லிட்டேன்,
தங்கச்சிக்கு போன் பண்ணி வீட்டுக்கார நேரத்தோடு தூங்க வையுன்னு சொல்லனும். கண்ட கண்ட நேரத்தில் முழித்துக் கொண்டு பதிவர்களை அந்த பதிவை போடுங்க, இதைப் போடுங்க என இம்சை படுத்துறார் என்று சொல்லப் போகிறேன்.
:)))))))))))
ஓவர் டூ சென்ஷி, வெயிலான், கயல்விழி முத்துலட்சுமி, rapp
அண்ணே ஏதே சொன்ன மாதிரியும் இருக்கு, சொல்லாத மாதிரியும் இருக்கு.
முதல் காதல பத்தி சொல்லியாச்சு, அண்ணிகிட்ட அடிவாங்காமா தப்பிச்சாச்சு.
உங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்குண்ணே.
இந்த தொடர் விளையாட்டை அடுத்த எழுத வேண்டியவர் யார் என தயவு செய்து இனி எழுதுபவர்கள் குறிப்பிடவும்.
//என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை.//
சும்மா காச்சிக்கு தானே சொல்கிறீர்கள் ;-)
//எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை.//
ஹி ஹி ஹி ஹி
//பெரியவர்களே...தாய்மார்களே...குழந்தைகளின் சின்ன வயசிலேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிச்செல்லாம் போட்டு வைத்துடாதிங்க. அது பெரிய தப்பு !//
பாருங்க கோவி கண்ணன் எப்படி பீல் பண்ணுறாரு!
கோவி கண்ணன் உங்க சிறு வயது மேட்டரை வைத்து ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கே :-) கலக்குங்க
//தங்கச்சிக்கு போன் பண்ணி வீட்டுக்கார நேரத்தோடு தூங்க வையுன்னு சொல்லனும். கண்ட கண்ட நேரத்தில் முழித்துக் கொண்டு பதிவர்களை அந்த பதிவை போடுங்க, இதைப் போடுங்க என இம்சை படுத்துறார் என்று சொல்லப் போகிறேன்.//
ஏற்கனவே இங்க கிழிஞ்சுட்டிருக்கு, இதுல நீங்க வேறயாண்ணா?
@ ஜோசப் பால்ராஜ்
\\இந்த தொடர் விளையாட்டை அடுத்த எழுத வேண்டியவர் யார் என தயவு செய்து இனி எழுதுபவர்கள் குறிப்பிடவும்.\\
நல்லா சொல்லுங்க!
//பரிசல்காரன் said...
ஏற்கனவே இங்க கிழிஞ்சுட்டிருக்கு, இதுல நீங்க வேறயாண்ணா?//
ஆப்பு மேல ஆப்பு வச்சு அடிக்கிற நேரமிது !
:)
//@ ஜோசப் பால்ராஜ்
\\இந்த தொடர் விளையாட்டை அடுத்த எழுத வேண்டியவர் யார் என தயவு செய்து இனி எழுதுபவர்கள் குறிப்பிடவும்.\\
நல்லா சொல்லுங்க!
//
பதிவில் சேர்த்தாச்சு...!
:)
//கிரி said...
//என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை.//
சும்மா காச்சிக்கு தானே சொல்கிறீர்கள் ;-)//
சொன்ன நம்பனும், கேள்வி கேட்கப்படாது, எங்க வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எதுவும் கிடையாது, காதலித்து இருந்தால் திருமணத்தில் முடிந்திருக்கும். எங்க வீட்டில் அண்ணன் தம்பிகள் அனைவரும் விருப்ப திருமணம் தான் செய்து கொண்டனர்.
////எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை.//
ஹி ஹி ஹி ஹி ... ////அந்த ஏக்கத்தை வச்சு ஒரு குறுங்காவியமே எழுதி இருக்கேன்.
//பாருங்க கோவி கண்ணன் எப்படி பீல் பண்ணுறாரு!
கோவி கண்ணன் உங்க சிறு வயது மேட்டரை வைத்து ஒரு புத்தகமே போடலாம் போல இருக்கே :-) கலக்குங்க
//
கிரி சார்
அச்சா அச்சா ! ஆச்சா வேறெதும் இருக்கா ?
//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே ஏதே சொன்ன மாதிரியும் இருக்கு, சொல்லாத மாதிரியும் இருக்கு.
முதல் காதல பத்தி சொல்லியாச்சு, அண்ணிகிட்ட அடிவாங்காமா தப்பிச்சாச்சு.
உங்ககிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்குண்ணே.
இந்த தொடர் விளையாட்டை அடுத்த எழுத வேண்டியவர் யார் என தயவு செய்து இனி எழுதுபவர்கள் குறிப்பிடவும்.
//
ஜோசப் பால்ராஜ் ,
safe ஆக சொல்லிவிட்டதாக rapp சொல்லி இருக்காரே !
:)
//சொன்ன நம்பனும், கேள்வி கேட்கப்படாது, எங்க வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எதுவும் கிடையாது, காதலித்து இருந்தால் திருமணத்தில் முடிந்திருக்கும். எங்க வீட்டில் அண்ணன் தம்பிகள் அனைவரும் விருப்ப திருமணம் தான் செய்து கொண்டனர்.
//
ஏங்க இதெல்லாம் சரி, நாங்க யாருமே இதை சொல்லல, புரியாதமாதிரியே பேசறீங்க :):):) உங்கவீட்ல கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்க சரி, ஆனா அதுக்கு முதல்ல நீங்க விரும்பின பெண் ஒத்துக்கணும் இல்ல?????????
என்னடா விஷயத்துக்கே வராம 'இது காதலா.. அது காதலா..'ன்னு இழுக்கிறாரேனு பார்த்தா ஒரு டச்சிங் ஸ்டோரி வருது. பின்னீட்டீங்க..
கிரிக்கு ஒரு ரிப்பீட்டேய்..
கருத்துரையிடுக