பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2008

இதுதான் உண்மை...!

பலசமயங்களில் செய்தியின் கருப்பொருளைவிட தலைப்பைத் தொட்டுவரும் வாசகர் கருத்துக்களுக்காகவே தட்ஸ்தமிழ் செய்தியைப் படிப்பதுண்டு. வலை அரசியலுக்கும் கொஞ்சம் சளைக்காமல் அங்கே நடக்கும் வாசகர் கருத்துக்கள் ரசிக்கத்தக்கவையாகவும் இருக்கும், முகம் சுழிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும், இங்கு நடப்பது போன்றே, கிறித்துவ பெயர்களில் இஸ்லாமியரைத் திட்டுவது, இஸ்லாமியர் பெயரில் கிறித்துவர்களைத் திட்டுவது, ஈழத்தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழகத் தமிழர்களைத் திட்டுவது, இஸ்லாமியர் பெயரில் பிஜேபி / இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவு முழங்குவது போன்ற தந்திர பின்னூட்ட அரசியல் நடப்பிற்கு தட்ஸ்தமிழில் 'வாசகர் கருத்து' குறைவே இல்லை. அவற்றைத் தாண்டியும் அவ்வப்போது கருத்தாழமிக்க வாசகர் கருத்துக்கள் இடம் பெறுவதுண்டு. இன்று படித்தது,

பெங்களூரில் ஷீரடி சாய்பாபா சிலை கண் திறந்ததாக பரபரப்பு - இது செய்தி,

வாசகர் ஒருவரின் இதற்கான கருத்து...

பதிவு செய்தவர்: தந்தை பதிவு நேரம்: 21 Jul 2008 02:28 am

சிறுவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள மேஜிக் கலையைப் பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று பிரபல மேஜிக் நிபுணர் ஜாதுகர் ஆனந்த் சென்னையில் கூறியிருக்கிறார். பாடத் திட்டத்தில் வைக்க வாய்ப்பு இல்லை என்றாலும், தந்திரக்கலை நிபுணர்களைக் கல்விக் கூடங்களுக்கு அழைத்து மாணவர்கள் மத்தியிலே நடத்தச் செய்யலாம். மேஜிக் என்பது தந்திரமே தவிர, அதில் எந்தவித மந்திரமும் கிடையாது. மந்திரம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது மந்திரத்தால் ஆகக்கூடியது என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. மக்கள் மத்தியில் பாமரத்தனமாக மந்திரம் என்ற ஒன்று இருப்பதுபோலவும், அதன்மூலம் எதையும் சாதித்துக் கொள்ளலாம்; நம்மைப் பிடிக்காதவர்களை இதன்மூலம் வீழ்த்திவிடலாம் என்பது போன்ற மூடத்தனங்களும் இருந்து வருகின்றன.

இந்த மந்திரத்தின் தொப்புள் கொடி பிள்ளைகள் தாம், பில்லி, சூன்யம் வகையறாக்களும்; மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் இத்தகு மூட எண்ணங்களைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டக் கூடிய ஆசாமிகள்தான் இந்த மந்திரவாதிகள் - சாமியார்கள் என்கிற கூட்டத்தார். இந்த மூட நம்பிக்கைகளின் உச்சம்தான் நரபலி என்கிற மாபெரும் கொடுமையாகும். எனவே, பள்ளிப் பருவத்திலேயே இந்த மூட நம்பிக்கையின் ஆணி வேர்களைக் கெல்லி எறியும் வகையில் மந்திரமும் அல்ல - மண்ணாங்கட்டியும் அல்ல என்று செயல்முறைகள் (Demonstration) மூலம் விளக்கிக் காட்டினால் இந்தப் பித்தலாட்டங்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமலே போகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்ற பகுதியில், மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும்; எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் உணர்வை உருவாக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தாலும், மந்திரத்தால் மாங்காய் விழும் என்கிற பித்தலாட்ட மூடத்தனங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில், தந்திரக்கலை வகுப்புகளைத் தொடக்கக் கல்வி முதல் தொடர்ந்து நடத்தச் செய்வது அவசியமாகும். அப்படி நடத்துகின்றவர்கள் தொடக்கத்தில் கைத்திறனால் செய்து காட்டி, அதன்பின் எப்படி செய்யப்பட்டது என்பதைக் காரண காரியத்தோடு விளக்கிச் சொல்லி, செய்து காட்டவும் வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், அதுவும் மந்திரத்தால்தான் நடந்தது என்ற எண்ணம்தான் ஏற்படும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இத்தகைய மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை ஒரு பிரச்சாரத் திட்டமாகவே கொண்டு நாடு முழுவதும் செய்து காட்டப்படுகிறது. அதன் காரண மாகப் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியைக் கழகம் செய்து வருகிறது. புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்கள் இத்தகைய தந்திரவாதி களே! ஆனால், அதனைத் தந்திரம் என்று சொல்லாமல், பகவான் சக்தி தங்களிடம் இருப்பதால் அவ்வாறு செய்ய முடிகிறது என்று பாமர மக்களை ஏய்த்து வருகின்றனர்.

கையசைப்பில் தங்கச் சங்கிலியைக் கொண்டு வந்து காட்டி, மக்களைப் பிரமிக்க வைக்கும் சாய்பாபா, இதுபோன்ற கை அசைவில் ஒரு பூசணிக்காயைக் கொண்டு வந்து காட்ட முடியுமா என்ற கேள்வி வெகுநாள்களாகக் கேட்கப்படுகிறது. அதற்கு எந்த விதமான நாணயமான பதில் அவரைப் போன்றவர்களிடத்தி லிருந்து வரவில்லை. புட்டபர்த்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் பங்குகொண்டார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புட்டபர்த்தி சாய்பாபா தம் கை அசைப்பில் ஒரு தங்கச் சங்கிலியை வரவழைத்து, அதனைப் பிரதமரிடம் அளித்தார்.
எல்லோரும் ஆச்சரியமாகப் பல்லிளித்துக் கிடந்தனர்.திரைமறைவில் அந்தத் தங்கச் சங்கிலி எப்படி சாய்பாபாவின் கைக்கு வந்தது என்பது வீடியோவில் பதிவாகி விட்டது. அந்த வீடியோவைப் பறிமுதல் செய்வதில் சாய்பாபா எந்தெந்த முயற்சி களையெல்லாம் கையாண்டார் என்பது சுவையான கதையாகும். அந்த வீடியோ அவர் கைக்கு வருவதற்குள் பல படிகள் எடுக்கப்பட்டு இந்தியா முழுமையும் பரவிவிட்டது. அதற்குப்பின் கொஞ்சகாலம் சாய்பாபாவின் சாகசம்பற்றி பேச்சு மூச்சு இல்லாமலே இருந்தது.

அதுபோலவே, சந்திராசாமி, பிள்ளையார் பால் குடித்தார் என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டார். தேர்தல் நோக்கத்தோடு பா.ஜ.க.வுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் செய்யப்பட்ட பிரச்சாரம் என்பதும் அம்பலத்திற்கு வந்துவிட்டது. என்றாலும், மக்கள் மத்தியில் அந்த மூட நம்பிக்கை இன்னும் நிலவி வருவதால், அவர்கள் சுரண்டப்படாமல் இருக்கவும், மோசம் போகாமல் காப்பாற்றப்படவும் இந்தத் தந்திரக்கலையை பள்ளிப் பருவத்தில் சொல்லிக் கொடுப்பது அவசியம்தான். பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பள்ளிகளில் இத்தகைய தந்திரக் கலை நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாமே.

நன்றி : தட்ஸ்தமிழ்

*********

பின்குறிப்பு : ஆன்மிகத்தின் பெயரில் நடக்கும் பித்தலாட்டங்கள் என்பது வேறு, ஆன்மிகம் வேறு என்பதை நம்பிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் ஆன்மிகவாதி என்பதாலேயே அதன் பெயரில் நடக்கும் மோசடிகளுக்கெல்லம பொறுப்பேற்றுக் கொண்டு சப்பைக் கட்டத் தேவையில்லை. அதுபோலவே திராவிட உணர்வாளர் என்பதாலேயே மானமிகுக்களின் மலைபோன்ற சொத்துமிகுதிக்கும் சப்பைக் கட்டத் தேவையில்லை. (ப)சப்பைக் கட்டுவதாலேயே மோசடிப் பேர்வழிகள் திருந்துவதற்கு வாய்ப்பு என்பதைவிட அவர்கள் வளர்வதற்கு வாய்ப்பாகவே அது அமைந்துவிடுகிறது. 80 விழுக்காடு ஏழைகளாகவே இருக்கும் நாட்டில், தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும், சொல்லவைக்கும் ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலி பெருவதற்கான வாய்ப்பும் தகுதியும் என்னதாக இருக்க முடியும் ?

18 கருத்துகள்:

G.Ragavan சொன்னது…

மிகச்சரியான கருத்து. ஒப்புக்கொள்ள வேண்டியதே.

ஆன்மீக ஆர்வம் இருப்பதால் இறைவன் பெயரைச் சொல்லும் எதற்கும் ஆதரவு தர வேண்டியதில்லை. திராவிடனாக இருப்பதால் மாண்புமிகு கலைஞப் புரட்சித் தலைவ/விகளுக்கு கண்மூடித்தன ஆதரவும் தரத் தேவையில்லை.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
மிகச்சரியான கருத்து. ஒப்புக்கொள்ள வேண்டியதே.

ஆன்மீக ஆர்வம் இருப்பதால் இறைவன் பெயரைச் சொல்லும் எதற்கும் ஆதரவு தர வேண்டியதில்லை. திராவிடனாக இருப்பதால் மாண்புமிகு கலைஞப் புரட்சித் தலைவ/விகளுக்கு கண்மூடித்தன ஆதரவும் தரத் தேவையில்லை.

மிகச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
//

ஜிரா,
முதல் பின்னூட்டமே ஆன்மிக வாதியிடமிருந்து. ஆசிர்வதிக்கப்பட்டேன். ஆசிர்வதிக்கப்பட்ட பதிவு.

Samuthra Senthil சொன்னது…

காஞ்சி ஜெயேந்திரர் வழக்கு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவர் வழக்கில் சிக்கிய நாட்களில் ஒரு நிருபராக காஞ்சிபுரத்தில் சுமார் இரண்டரை மாத காலம் தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஜெயேந்திரரைப் பற்றிய சில பல விஷயங்கள் எனக்கு தெரியவந்தன. அவரை உள்ளூர் சாதாரண மக்கள் சந்திக்க அனுமதி கிடையாது. அப்படியே சங்கர மடத்துக்குள் சென்றாலும் எந்த பிரசாதமும் சங்கராச்சாரியார் கைகளால் வழங்கப்பட மாட்டாது. அப்படியே வழங்கினாலும் எட்ட நின்று கையை நீட்ட வேண்டுமாம். அவர் மக்களின் கை மேல் அவரது கை படாமல் தூக்கி போடுவாராம்... இதுதான் காஞ்சி சங்கர மடத்தின் அவலம். எனக்கு பெரியவர் சங்கராச்சாரியார் மீது நல்ல மதிப்பு உண்டு. இதை நினைக்கும்போதெல்லாம்... முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்துதான் என் நினைவுக்கு வரும். ஆபத்து என்றதும் தண்டு கமண்டலத்தை போட்டுவிட்டு ஒடிய சாமியார், என்பதுதான் முதல்வரின் கருத்து. இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் மக்களின் மூடநம்பிக்கை இன்னமும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

SurveySan சொன்னது…

நல்ல கமெண்ட்டு போட்டிருக்கார் தந்தை.

இந்த ஜாலவித்தையெல்லாம் ஆரம்பித்திலேயே தட்டி ஒடுக்கியிருக்கணும். வளர விட்டு இப்போ பல பேர் குளிர் காயராங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//சினிமா நிருபர் said...
காஞ்சி ஜெயேந்திரர் வழக்கு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவர் வழக்கில் சிக்கிய நாட்களில் ஒரு நிருபராக காஞ்சிபுரத்தில் ...
//

வாங்க நிருபரே,

நேரடி அனுபவம் என்பதால் நீங்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கும். தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஆன்மிகம் நம்பிக்கைகள் இராமநாரயணன் டைப்பு பரவசக் கதைகளாவும், மாயஜாலங்களாகவும், மோசடி குருக்கள்களின் பிடியில் இருப்பதாலேயும் அதன் மூலம் கவர்ந்திழுக்கப் படுவதாலேயே இழுக்குப்படுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
நல்ல கமெண்ட்டு போட்டிருக்கார் தந்தை.

இந்த ஜாலவித்தையெல்லாம் ஆரம்பித்திலேயே தட்டி ஒடுக்கியிருக்கணும். வளர விட்டு இப்போ பல பேர் குளிர் காயராங்க.

9:48 AM, July 21, 2008
//

சர்வேசன்,
ஒருவர் தன்னை சாமியார் என்று சொல்லிக் கொண்டாலே அவர் சந்தேகத்துக்கு இடமானவர் என்ற நினைப்பு பொதுவாக வர ஆரம்பித்துவிட்டது
:)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

எல்லா அமைப்புகளிலுமே சில நல்லவையும் இருக்கும், சில தீயவைகளும் இருக்கும்.
உதாரணமாக ஆன்மீக அமைப்புகளில் இருக்கும் தீண்டாமை. தஞ்சாவூர் அருகே பிருந்தாவனம் எனுமிடத்தில் உள்ள ராகவேந்திரா கோயிலில் உள்ள அர்சகர் பிராமணர் அல்லாதவரின் கை விரல் தன்மேல் பட்டால் கூட உடனே போய் குளித்துவிட்டு வந்து பூசையைத் தொடர்வார். பிரசாதம் எல்லாம் தூக்கித்தான் போடுவார்.
ஒரு வேளை இது போல் செய்பவர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் வேளையிலும் இதே போல் பிராமணர்தான் தன்னைத் தூக்க வேண்டும், பிராமண மருத்துவர்தான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பிராமண செவிலியர்தான் ஊசி போட வேண்டும் என எதிர்பார்ப்பார்களா ?

அதேபோல் அரசியல் அமைப்புகளில் உள்ள குடும்ப அரசியல், சொத்துக்குவிப்பு போன்ற தீமைகள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதில் உள்ள நல்லவைகளை மட்டும்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர கண்மூடித்தனமாக நாம் நம்பும்/விரும்பும் அமைப்பையோ அல்லது அதன் தலைமையின் செயல்களையோ ஆதரிக்க கூடாது என்பதுதான் எனது நிலை.

நல்ல பதிவு அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
எல்லா அமைப்புகளிலுமே சில நல்லவையும் இருக்கும், சில தீயவைகளும் இருக்கும்.
உதாரணமாக ஆன்மீக அமைப்புகளில் இருக்கும் தீண்டாமை. தஞ்சாவூர் அருகே பிருந்தாவனம் எனுமிடத்தில் உள்ள ராகவேந்திரா கோயிலில் உள்ள அர்சகர் பிராமணர் அல்லாதவரின் கை விரல் தன்மேல் பட்டால் கூட உடனே போய் குளித்துவிட்டு வந்து பூசையைத் தொடர்வார். பிரசாதம் எல்லாம் தூக்கித்தான் போடுவார்.
ஒரு வேளை இது போல் செய்பவர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் வேளையிலும் இதே போல் பிராமணர்தான் தன்னைத் தூக்க வேண்டும், பிராமண மருத்துவர்தான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பிராமண செவிலியர்தான் ஊசி போட வேண்டும் என எதிர்பார்ப்பார்களா ?

அதேபோல் அரசியல் அமைப்புகளில் உள்ள குடும்ப அரசியல், சொத்துக்குவிப்பு போன்ற தீமைகள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதில் உள்ள நல்லவைகளை மட்டும்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர கண்மூடித்தனமாக நாம் நம்பும்/விரும்பும் அமைப்பையோ அல்லது அதன் தலைமையின் செயல்களையோ ஆதரிக்க கூடாது என்பதுதான் எனது நிலை.

நல்ல பதிவு அண்ணா.
//

பிராமணர்தான் தன்னைத் தூக்க வேண்டும், பிராமண மருத்துவர்தான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பிராமண செவிலியர்தான் ஊசி போட வேண்டும் என எதிர்பார்ப்பார்களா ? -

ஜோசப்,

இதெல்லாம் கூட வேண்டாம்,

முகத்தில் எதாவது மாஸ்க் போட்டு இருக்கிறாரா ? பிராமணர் அல்லாதவர்கள் பின்னாலிருந்து விடுவதும் கூட சுவாசிக்கும் காற்றில் கலந்து தானே இருக்கும் ? அதை வடிகட்டி சுவாசிக்க வேண்டுமே ?
:)

ஜெகதீசன் சொன்னது…

//
திரைமறைவில் அந்தத் தங்கச் சங்கிலி எப்படி சாய்பாபாவின் கைக்கு வந்தது என்பது வீடியோவில் பதிவாகி விட்டது. அந்த வீடியோவைப் பறிமுதல் செய்வதில் சாய்பாபா எந்தெந்த முயற்சி களையெல்லாம் கையாண்டார் என்பது சுவையான கதையாகும்.
//
அந்த வீடியோ லிங்க் எதாவது இருக்கா?
:P

TBCD சொன்னது…

இதை பலரும் பல காலமாக சொல்லி வருகிறார்கள்..


"சூத்ராள் பூசை பண்ணுறதுன்னா படாது" என்று காஞ்சி பெரியவர் முழங்கியதை படியுங்கள்..தெளிவு பிறக்கும்..

பாம்பில் குட்டி என்ன பெரிதென்ன...

///சினிமா நிருபர் said...

எனக்கு பெரியவர் சங்கராச்சாரியார் மீது நல்ல மதிப்பு உண்டு. ///

TBCD சொன்னது…

சினிமா நிருபர்,

'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்றார் மகா பெரியவர். (அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் 'இந்து மதம் எங்கே போகிறது?" - நக்கீரன் 30-03௨005)

பரிசல்காரன் சொன்னது…

//பிராமணர்தான் தன்னைத் தூக்க வேண்டும், பிராமண மருத்துவர்தான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பிராமண செவிலியர்தான் ஊசி போட வேண்டும் என எதிர்பார்ப்பார்களா ? -

ஜோசப்,

இதெல்லாம் கூட வேண்டாம்,

முகத்தில் எதாவது மாஸ்க் போட்டு இருக்கிறாரா ? பிராமணர் அல்லாதவர்கள் பின்னாலிருந்து விடுவதும் கூட சுவாசிக்கும் காற்றில் கலந்து தானே இருக்கும் ? அதை வடிகட்டி சுவாசிக்க வேண்டுமே ?
:)//


வழிமொழிகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
அந்த வீடியோ லிங்க் எதாவது இருக்கா?
:P
//

ஜெகதீசன் நீங்கள் கேட்டது

nagoreismail சொன்னது…

"ஒரு வேளை இது போல் செய்பவர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் வேளையிலும் இதே போல் பிராமணர்தான் தன்னைத் தூக்க வேண்டும், பிராமண மருத்துவர்தான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், பிராமண செவிலியர்தான் ஊசி போட வேண்டும் என எதிர்பார்ப்பார்களா ? "
- பைத்தியக்கார மருத்துவமனையில் 'பிராமின் வார்ட்' என்று ஒன்று இருந்ததாமே, அந்த சங்கதி தெரியுமா நண்பரே?

nagoreismail சொன்னது…

"ஒருவர் தன்னை சாமியார் என்று சொல்லிக் கொண்டாலே அவர் சந்தேகத்துக்கு இடமானவர் என்ற நினைப்பு பொதுவாக வர ஆரம்பித்துவிட்டது "

தோழர் மதிமாறன் எழுதியது தான் ஞாபகத்திற்கு வருகிறது, "சாமியார் என்றாலே போலி தான், வேணும்னா சாமியாரை போலி மனிதர்கள் என்று சொல்லலாம்" என்று ஒரு போடு போட்டார்

rapp சொன்னது…

கண்டிப்பாக இதனை செய்தால் நல்ல பயன் இருக்கும்

மங்களூர் சிவா சொன்னது…

/
கையசைப்பில் தங்கச் சங்கிலியைக் கொண்டு வந்து காட்டி, மக்களைப் பிரமிக்க வைக்கும் சாய்பாபா, இதுபோன்ற கை அசைவில் ஒரு பூசணிக்காயைக் கொண்டு வந்து காட்ட முடியுமா என்ற கேள்வி வெகுநாள்களாகக் கேட்கப்படுகிறது.
/

இது ஜூப்பர்
வாயிலிருந்து லிங்கம் எடுக்கிறவன் ஏன் பூசனிக்காய் எடுப்பதில்லை?

உடன்பிறப்பு சொன்னது…

முதல் பத்தி அப்படியே என் நிலையை எடுத்து சொல்வது போல் இருக்கிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்