பின்பற்றுபவர்கள்

14 ஜூலை, 2008

உங்கள் பதிவு ஹிட் / ஹீட் ஆகனுமா ? ஒரே உத்திதான் !

இந்திய நேரத்தில் எழுதினால் பதிவு சூடாகுமா ? அமெரிக்க நேரத்தில் எழுதினால் சூடாகுமா ? எப்போது பதிவிட்டால் மிகுந்த ஹிட் கிடைத்து, உடனே சூடாகும் ? நேற்று இரவு தூக்கம் வராமல் சிந்தனை செய்ததில் மூளையில் மின்னல் வெட்டியது (ஸ்ட்ரோக் வந்ததான்னு கேட்கப்படாது, அப்படி வந்தால் பதிவு எழுதுவேனா ?), பதிவுகள் ஹிட் ஆவதற்கும், ஆகாமல் போவதற்கும் பதிவர்களோ, பதிவில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதோ காரணமில்லை. சரியான ஒரே காரணம், சரியான நேரத்தில் பதிவை எழுத தொடங்கி, சரியான நேரத்திற்குள் முடிக்காததும், பதிவை நல்ல நேரம் / அல்லாத நேரங்களில் இடாததும் / இட்டதுமே தான் காரணம்.

பதிவர்களின் நலன் கருதி ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை சஞ்சாரம் செய்யும். நேரங்களைத் தொகுத்துள்ளேன். இந்த மூன்று துர்(கெட்ட)நேரங்களிலும் பதிவை எழுதுவதோ, முடிப்பதோ, வெளியிடுவது கூடாது.

கிழமைராகுகாலம்எமகண்டம்குளிகை
திங்கள்07:30 -09:00 10:30 - 12:0003:00 - 04:30
செவ்வாய்03:00 - 04:3009:00 - 10:3001:30 - 03:00
புதன்12:00 - 01:3007:30 -09:00 12:00 - 01:30
வியாழன்01:30 - 03:0006.00 - 07:3010:30 - 12:00
வெள்ளி10:30 - 12:0003:00 - 04:3009:00 - 10:30
சனி09:00 - 10:3001:30 - 03:0007:30 -09:00
ஞாயிறு04:30 - 06:0012:00 - 01:3006.00 - 07:30

நீங்கள் ராகு காலத்தில் பிறந்தவரா ?

ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் குழந்தைகள் பற்றி?

ராகுகாலம், எமகண்டத்தில் பிறப்பது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கும். படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். யார் எதைச் சொன்னாலும் அதை எக்காரணத்திற்காகவும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

அதிகமாக சிந்திப்பார்கள். எப்போதும் ஒரு சிந்தனையில் இருப்பார்கள். மேலும், எமகண்டத்தை விட ராகு காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக சிந்தனையுடையவைகளாக விளங்குகின்றன. விளையாட்டிலும் சிறப்பாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் நண்பர்களால் கெடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தில் மது, மாது, சூது போன்றவைகளுக்கு அடிமையாக வாய்ப்பு உண்டு. அந்த வகையில் மட்டும்தான் ராகு காலம், எமகண்டத்திலும் பிறக்கும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர, மற்றப் பிள்ளைகளை விட ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் பிள்ளைகள் எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருப்பார்கள்.

படிப்பிலும், விளையாட்டிலும் மற்றவர்களை விட சிறந்த மாணவர்களாகவே திகழ்வார்கள்.

ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்திற்கு (ஓ 'அந்த' மேட்டர் ? நீங்கள் 'அந்த' மேட்டர் பற்றியே ஸிந்தித்தால் நீங்கள் ராகுகாலத்தில் / எமகண்டத்தில் பிறந்தவர்) அடிமையாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

--ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

நன்றி : வெப்துனியா

பின்குறிப்பு : இந்த பதிவு ராகுகாலம் முடிந்ததும் வெளியிடப்பட்டது. லக்கி லுக்கின் அனைத்து பதிவுகள் எப்படி ஹிட் ஆகின்றன என்பதைக் குறித்து ஆராய்ந்த போது, அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ அவர் நல்ல நேரத்தில் வெளி இடுவதே காரணம் என்று தெரிந்தது. அவரே ராகுகாலத்தில் தான் பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன் இந்த இடுகையில் தனிப்பட்ட பதிவர்கள் யாரையும், ஒரு எழுத்தைக் கொண்டு, புள்ளியைக் கொண்டு கூட புண்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொக்கைப் போட மேட்டர் கிடைக்கவில்லை. அல்லாரும் மன்னித்துக் கொள்ளுங்கள். பயனுள்ள தகவல்கள் தான் அளித்துள்ளேன் என்று நம்புகிறேன்

44 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

remba mukkiyam....
:P

துளசி கோபால் சொன்னது…

எப்படியெல்லாம் 'உக்காந்து' யோசிக்கிறீங்கன்னு பார்த்தா......

உங்களுக்கு இப்ப நல்ல நேரம்:-)

cheena (சீனா) சொன்னது…

ஆமா - இந்த ராகு எமன் குளிகை எல்லாம் அமெரிக்க நேரத்துக்கா - இல்லை இந்திய நேரத்துக்கா ( சிங்கப்பூர் நேரமில்லையே )

மோகன் கந்தசாமி சொன்னது…

தகவல்களுக்காக சோதிட பராக்கிரமம் கோவியார் அவர்களுக்கு நன்றியும்,
தமிழ்மண ராவு காலம் லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்களும். :-))))))

Sivaram சொன்னது…

ஜோசியர் ஐயா, ஒரு வலைப்பதிவருக்கு என்னென்ன தோஷங்கள் ஏற்படும் , அதற்கான பரிகாரம் என்னென்ன , என்பதைப் பற்றியும், ஒரு மொக்கைப் பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
ஆமா - இந்த ராகு எமன் குளிகை எல்லாம் அமெரிக்க நேரத்துக்கா - இல்லை இந்திய நேரத்துக்கா ( சிங்கப்பூர் நேரமில்லையே )

10:31 AM, July 14, 2008
//

சீனா ஐயா,

இப்படியெல்லாம் கேட்பிங்க என்று தெரியும். உதயாதி நாளிகை கணக்கின் படிதான் ராகுகாலம் வரும்.
அப்படி ஒரு ஸ்டாண்டேர்டு இருக்கு. எந்த நாட்டுக்கும் அந்த நாட்டு நேரப்படி தான் கணக்கே. எல்லா நாடுகளிலும் சூரியன் உதித்துதானே நாள் பிறக்கிறது ? டைம் சோன் அட்ஜெஸ்ட் மெண்ட் கூட உண்டு. நம்புங்க.

நான் சீரியஸ் ஆக மறுமொழி இட்டு இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
எப்படியெல்லாம் 'உக்காந்து' யோசிக்கிறீங்கன்னு பார்த்தா......

உங்களுக்கு இப்ப நல்ல நேரம்:-)
//
துளசி அம்மா,

வீட்டில் பாம்பு பஞ்சாங்கம் இருந்தால் நான் குறிப்பிட்ட ராகுகாலம், எமகண்டம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பு,
பாம்பு பஞ்சாங்கம் வாங்கும் போது ஒரிஜினல் தானா என்று அறிய அதில் ஒரிஜினல் ஹலோக்ராம் இருக்கும், பார்த்து வாங்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
தகவல்களுக்காக சோதிட பராக்கிரமம் கோவியார் அவர்களுக்கு நன்றியும்,
தமிழ்மண ராவு காலம் லக்கிலுக்கிற்கு வாழ்த்துக்களும். :-))))))
//

:)

மோகன், திரு ஜீவன் அவர்களின் வேண்டுகோளுக்கு அடுத்து பதிவுகளுக்கு பரிகாரம் செய்வது எப்படி என்ற இடுகை ஆயத்தமாகிறது. படித்து பயன்பெறுக !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
ஜோசியர் ஐயா, ஒரு வலைப்பதிவருக்கு என்னென்ன தோஷங்கள் ஏற்படும் , அதற்கான பரிகாரம் என்னென்ன , என்பதைப் பற்றியும், ஒரு மொக்கைப் பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
//

ஜீவன்,
வாஸ்துபடி டெம்ப்ளேட் மாற்றனும், பரிகாரம் செய்யனும் அதுபற்றிய விவரம் அடுத்த பதிவில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
remba mukkiyam....
:P
//

கிண்டல் பண்ணிட்டே இல்லே ?
உனக்கு ராகுகாலத்தில் தான் கல்யாணம் நடக்கும் !

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உங்க பதிவ படிச்சுட்டு அதுல இருக்கது எல்லாம் செஞ்சு பதிவு எழுதுனா, அது ஹிட்/ஹீட் ஆகுதோ இல்லையோ, உங்க பதிவு சூப்பர் ஹிட் ஆயிடுச்சு போங்க.
இப்டிதான் பணக்காரர்கள் ஆவதற்கு எளிய வழினு புத்தகம் எழுதி ரொம்ப பேரு பணக்காரர் ஆனாங்களாம்.

//" கிண்டல் பண்ணிட்டே இல்லே ?
உனக்கு ராகுகாலத்தில் தான் கல்யாணம் நடக்கும் !"//.

இதுக்கு நேரடியா கல்யாணமே நடக்காதுனு சொல்லியிரலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
உங்க பதிவ படிச்சுட்டு அதுல இருக்கது எல்லாம் செஞ்சு பதிவு எழுதுனா, அது ஹிட்/ஹீட் ஆகுதோ இல்லையோ, உங்க பதிவு சூப்பர் ஹிட் ஆயிடுச்சு போங்க.
இப்டிதான் பணக்காரர்கள் ஆவதற்கு எளிய வழினு புத்தகம் எழுதி ரொம்ப பேரு பணக்காரர் ஆனாங்களாம்.
//

ஜோசப்,
சரியாக நாடியை பிடிச்சிட்டிங்க. பாலபாடம் சரியாக புரிந்துவிட்டால் அப்பறம் ஒன்னுமே இல்லை.

////" கிண்டல் பண்ணிட்டே இல்லே ?
உனக்கு ராகுகாலத்தில் தான் கல்யாணம் நடக்கும் !"//.

இதுக்கு நேரடியா கல்யாணமே நடக்காதுனு சொல்லியிரலாம்.//

சாபம் என்கிற பெயரில் வரம் கொடுத்து தான் பழக்கம், பம்மல்.கே.சம்பந்தம் படம் பார்த்திங்களா ? :)

பரிசல்காரன் சொன்னது…

வாத்தியார் சுப்பையா எங்கப்பா..

அவர உடனே கூப்பிடுங்க கன்சல்டேஷனுக்கு...

SurveySan சொன்னது…

கோ.க, அட்டவணையெல்லாம் போட்டீங்க, ஆனா, அந்த நேரமெல்லாம் ISTஆ, PSTஆ, ESTஆ, GMTஆ,SSTஆ?

தெளிவா சொல்லும்வோய்.

லக்கிலுக் சொன்னது…

வடகலை அய்யங்கார்வாள்!

நம்ம டெக்னிக்கை ரகசியமா வெச்சிக்கிட்டு நாமளே பொழைக்கறதை உட்டுட்டு ஊருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கறீளே? இது நியாயமா?

anujanya சொன்னது…

நன்றி கண்ணன் ரகசியத்தை அம்பலமாக்கியதற்கு.
என்னடா, லக்கி மற்றும் பரிசலைவிட 'படைப்பாற்றலில்' எந்த விதத்திலும் குறையாத எனது படைப்புகளுக்கு மொத்தமே சராசரியாக இரண்டு பின்னூட்டங்கள்தான் (ஒன்று எனது 'வருகைக்கு நன்றி') வருகிறதே என்று நொந்து பின்னூட்டவாதிகளின் இலக்கிய ரசனையை வைதுகொண்டிருந்தேன்.

கெட்ட நேரங்கள்தான் காரணம் என்று சொல்லி பரிகாரமும் கூறிய உங்களுக்கு இந்தப் பின்னூட்டத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அனுஜன்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
வாத்தியார் சுப்பையா எங்கப்பா..

அவர உடனே கூப்பிடுங்க கன்சல்டேஷனுக்கு...
//

பரிசல்,

அவர் எதோ பிரமாண்டம் என்று நமீதா பெயரில் பதிவு போட்டுவிட்டு கிரக்கமாக இருக்கிறார். இங்கே வரமாட்டார். அதுமட்டுமல்ல, ஒருவேளை அவரை வைத்துதான் கும்மியோ என்று கூட நினைத்திருக்கலாம். :) அப்படி ஒன்றும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
கோ.க, அட்டவணையெல்லாம் போட்டீங்க, ஆனா, அந்த நேரமெல்லாம் ISTஆ, PSTஆ, ESTஆ, GMTஆ,SSTஆ?

தெளிவா சொல்லும்வோய்.

1:06 PM, July 14, 2008
//

சர்வேஷன்,

சீனா ஐயாவுக்கு மறுமொழி சொல்லி இருக்கிறேன் பாருங்கள். அந்தந்த நாட்டு காலை ஆறுமணி தான் கணக்கு. Local Time.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
வடகலை அய்யங்கார்வாள்!

நம்ம டெக்னிக்கை ரகசியமா வெச்சிக்கிட்டு நாமளே பொழைக்கறதை உட்டுட்டு ஊருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கறீளே? இது நியாயமா?
//

லக்கிலுக் தென்கலை ஐயங்கார்,

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று நினைப்பது தவறா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
நன்றி கண்ணன் ரகசியத்தை அம்பலமாக்கியதற்கு.
என்னடா, லக்கி மற்றும் பரிசலைவிட 'படைப்பாற்றலில்' எந்த விதத்திலும் குறையாத எனது படைப்புகளுக்கு மொத்தமே சராசரியாக இரண்டு பின்னூட்டங்கள்தான் (ஒன்று எனது 'வருகைக்கு நன்றி') வருகிறதே என்று நொந்து பின்னூட்டவாதிகளின் இலக்கிய ரசனையை வைதுகொண்டிருந்தேன்.

கெட்ட நேரங்கள்தான் காரணம் என்று சொல்லி பரிகாரமும் கூறிய உங்களுக்கு இந்தப் பின்னூட்டத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அனுஜன்யா
//

அதுக்குள்ள அவசரப்பட்டால் எப்படி ?

நாளைக்கு வாஸ்துபடி பேஜ் கவுண்டர் எங்கே வைப்பது என்று எழுத இருக்கிறேன்.
:)

தருமி சொன்னது…

அனுஜன்யா பிரச்சனைதான் எனக்கும். பின்னூட்டம் வருவதேயில்லை. ஒருவரிடம் கேட்டேன். எண்கணிதப் படி என் தலைப்பை மாற்றினால் பின்னூட்ட வெள்ளம் வரும் என்றார். அவரிடம் கேட்க விட்டுப் போச்சு. என் வலைபூவின் பெயரை எப்படி மாற்றலாம் என்று எண்கணிதப்படி சொல்ல முடியுமா?

வாஸ்து பிரகாரம் கவுண்டரை (!) எங்கே வைக்கணும்னு சொல்லுங்க; காத்திருக்கிறேன். ஆனலும் கவுண்டரின் இடம் வலைப்பூவின் பெயருக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்க வெண்டுமா இல்லை எல்லோருக்கும் ஒரே இடம்தானா என்ற தகவலையும் அழி(ளி)யுங்கள்.

Unknown சொன்னது…

ஆக, ஹிட்டாவுறதுக்கு பதிவில் சரக்குன்னு தனியா எதுவும் தேவையில்லேன்னு சொல்றீங்க? :)

ஜெகதீசன் சொன்னது…

//
வடகலை அய்யங்கார்வாள்!

நம்ம டெக்னிக்கை ரகசியமா வெச்சிக்கிட்டு நாமளே பொழைக்கறதை உட்டுட்டு ஊருக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கறீளே? இது நியாயமா?
//
எச்சுகிச்சுமீ....
நான் எந்தக் கலை அய்யங்கார்???
எங்க ஊடு கிழக்குப் பக்கம் திரும்பீருக்கு... அதனால நான் கிழங்கலை அய்யங்காரா??
:P

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
அனுஜன்யா பிரச்சனைதான் எனக்கும். பின்னூட்டம் வருவதேயில்லை. ஒருவரிடம் கேட்டேன். எண்கணிதப் படி என் தலைப்பை மாற்றினால் பின்னூட்ட வெள்ளம் வரும் என்றார். அவரிடம் கேட்க விட்டுப் போச்சு. என் வலைபூவின் பெயரை எப்படி மாற்றலாம் என்று எண்கணிதப்படி சொல்ல முடியுமா?

வாஸ்து பிரகாரம் கவுண்டரை (!) எங்கே வைக்கணும்னு சொல்லுங்க; காத்திருக்கிறேன். ஆனலும் கவுண்டரின் இடம் வலைப்பூவின் பெயருக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்க வெண்டுமா இல்லை எல்லோருக்கும் ஒரே இடம்தானா என்ற தகவலையும் அழி(ளி)யுங்கள்.
//

நீங்கள்
http://dharumi.blogspot.com என்பதற்கு பதிலாக

http://dharumivijay.blogspot.com/ அல்லது

http://vijaydharumi.blogspot.com/

என்று மாற்றிக் கொண்டால் 'டாக்டர்' பதிவர் ஆகலாம்.
:)

//வாஸ்து பிரகாரம் கவுண்டரை (!) எங்கே வைக்கணும்னு சொல்லுங்க; காத்திருக்கிறேன். ஆனலும் கவுண்டரின் இடம் வலைப்பூவின் பெயருக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்க வெண்டுமா இல்லை எல்லோருக்கும் ஒரே இடம்தானா என்ற தகவலையும் அழி(ளி)யுங்கள்.//

கவுண்டர் எண்ணிக்கையைக் காட்டுவது, எண்ணிக்கை எப்போது உயர்வதற்கு உயரமான இடத்தில் வைப்பது தான் நல்லது, உயர்ந்த இடத்தில் வைத்தால் தான் எண்ணிக்கை உயரும். முடிந்தால் கவுண்டர் லொகேசனை இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் டூல்பாரில் வைத்துவிடுங்கள். (செய்முறை விளக்கம் எல்லாம் கேட்கப்படாது)

கோவி.கண்ணன் சொன்னது…

//தஞ்சாவூரான் said...
ஆக, ஹிட்டாவுறதுக்கு பதிவில் சரக்குன்னு தனியா எதுவும் தேவையில்லேன்னு சொல்றீங்க? :)

3:51 PM, July 14, 2008
//

தஞ்சை சார்,
நகைக்கடையில் அட்சய த்ரிதியை அன்னிக்கு விற்காத டிசைன் நகைகள்கூட வித்துடுமாம். எல்லாம் நேரம், நாள் கிழமைதான் என்று பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன் said...
//
எச்சுகிச்சுமீ....
நான் எந்தக் கலை அய்யங்கார்???
எங்க ஊடு கிழக்குப் பக்கம் திரும்பீருக்கு... அதனால நான் கிழங்கலை அய்யங்காரா??
:P
//

கிழங்கலை என்று எழுதியதால் தப்பித்தீர், ளை போட்டு இருந்தால் அம்புட்டுதான்.

நீங்களும் ஐய்யங்கார் ஆகவேண்டாம், பேசாமல் ஐய்யர் ஆகிடுங்க.

ஜெகதீசன் சொன்னது…

//
கிழங்கலை என்று எழுதியதால் தப்பித்தீர், ளை போட்டு இருந்தால் அம்புட்டுதான்.

நீங்களும் ஐய்யங்கார் ஆகவேண்டாம், பேசாமல் ஐய்யர் ஆகிடுங்க.
//
இல்லை.. எனக்கு அய்யங்கார் தான் வேணும்...
எங்காத்துல எல்லாரும் நாமம் தான் போடுவா... பட்டை போட மாட்டா... அதனால நானும் அய்யங்கார் தான்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இல்லை.. எனக்கு அய்யங்கார் தான் வேணும்...
எங்காத்துல எல்லாரும் நாமம் தான் போடுவா... பட்டை போட மாட்டா... அதனால நானும் அய்யங்கார் தான்...

5:24 PM, July 14, 2008
//

உங்க வீடு கிழாக்கால இருப்பதால், நீங்கள் இந்த ஜென்மத்துக்கு ஐயங்கார் ஆகமுடியாது, கனவு காணாதிங்க, வீண் முயற்சி. அடுத்த பிறவியில் ஐய்யங்காராக பிறக்க வேண்டும் என்று மகரநெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்ளுங்கள்.நீங்கள் இந்த பிறவியில் ஐய்யர்.... ஐய்யர் தான்.

பெயரில்லா சொன்னது…

வ ைலப்பதிவாளருக்கு ஏங்க சாபம் ெகாடுங்கிறீங்க... அவங்க ேள ஆயிரம் கனவில் இருப்பாங்க(கல்லயாண கனவு)

பெயரில்லா சொன்னது…

ஏங்க... எல்ேலாருக்கும் சாபம் ெகாடுக்கிறீங்க... எல்ேலாரும் ஆயிரம் கனவில் இருங்காங்க.

manikandan சொன்னது…

சாபம் என்கிற பெயரில் வரம் கொடுத்து தான் பழக்கம், பம்மல்.கே.சம்பந்தம் படம் பார்த்திங்களா ? :)

இந்த அளவுக்கு அடிபட்டு இருக்கீங்களா கண்ணன் சார் ? சின்ன வயசுல சேம் பின்ச்ன்னு சொல்லிக்கிட்டு கிள்ளிப்போம். இப்ப blog.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:)

மங்களூர் சிவா சொன்னது…

/
கவுண்டர் எண்ணிக்கையைக் காட்டுவது, எண்ணிக்கை எப்போது உயர்வதற்கு உயரமான இடத்தில் வைப்பது தான் நல்லது, உயர்ந்த இடத்தில் வைத்தால் தான் எண்ணிக்கை உயரும். முடிந்தால் கவுண்டர் லொகேசனை இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் டூல்பாரில் வைத்துவிடுங்கள். (செய்முறை விளக்கம் எல்லாம் கேட்கப்படாது)
/

ROTFL

:))))))))

Subramanian சொன்னது…

அப்படியே எந்தெந்த ஹோரை காலங்களில் பதிவுகள் போடலாம் என்பதற்கும் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்.

ஹூம்.உங்களுக்கு நேரந்தான்.கலக்குறீங்க.

பெயரில்லா சொன்னது…

அப்படியே கொஞ்சம் நேமாலஜி, நியுமராலாஜி பத்தியும் எழுதுங்களேன்.

rapp சொன்னது…

ஹப்பா, மங்களூர் சிவா மறுபடி கமண்ட் போட வந்துட்டார், இனி ப்ளாகர்கள் எல்லாருக்கும் நல்ல நேரம்தான்

dondu(#11168674346665545885) சொன்னது…

//வாஸ்து பிரகாரம் கவுண்டரை (!) எங்கே வைக்கணும்னு சொல்லுங்க; காத்திருக்கிறேன். ஆனலும் கவுண்டரின் இடம் வலைப்பூவின் பெயருக்கு ஏற்றாற்போல் மாற்றி வைக்க வெண்டுமா இல்லை எல்லோருக்கும் ஒரே இடம்தானா என்ற தகவலையும் அழி(ளி)யுங்கள்.//
இது என்ன குழந்தைத்தனமான கேள்வி. செந்திலின் பின்பக்கமாக கவுண்டரை வைத்தால்தான் அவருக்கு உதைக்க வாகாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//anandrey said...
வ ைலப்பதிவாளருக்கு ஏங்க சாபம் ெகாடுங்கிறீங்க... அவங்க ேள ஆயிரம் கனவில் இருப்பாங்க(கல்லயாண கனவு)
//

உங்களுக்கு கனவு நெனவாகிவிட்டதா இல்லையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
சாபம் என்கிற பெயரில் வரம் கொடுத்து தான் பழக்கம், பம்மல்.கே.சம்பந்தம் படம் பார்த்திங்களா ? :)

இந்த அளவுக்கு அடிபட்டு இருக்கீங்களா கண்ணன் சார் ? சின்ன வயசுல சேம் பின்ச்ன்னு சொல்லிக்கிட்டு கிள்ளிப்போம். இப்ப blog.
//

:) ஆமாம், அதே, ஆனால் இங்கு முகம் தெரியாதவர்களுடன் பழகி, நட்பாகி, வலையுலகம் மகிழ்வாகத்தான் இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
:)
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
அப்படியே எந்தெந்த ஹோரை காலங்களில் பதிவுகள் போடலாம் என்பதற்கும் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்.

ஹூம்.உங்களுக்கு நேரந்தான்.கலக்குறீங்க.
//

திண்டுக்கள் சார்,

தப்பான கால ஹோரையில் பதிவிட்டால் உடனே பரிகார பதிவு ஒன்று போட்டுவிட்டால் தோஷம் போய்விடும். கவலை வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
அப்படியே கொஞ்சம் நேமாலஜி, நியுமராலாஜி பத்தியும் எழுதுங்களேன்.
//

பதிவில் விஜய என்று வருவது போல் பெயர் வைத்துக் கொள்ல வேண்டும், விஜய என்றால் வெற்றி, வெற்றி நிச்சயம், விஜய டி ராஜேந்தர் பெயர் இப்படித்தான் வந்தது.

இடுகையிலும் எழுத்துக்களை ஒன்று கூட்டினால் ஒற்றைப்படையில் வருவது போல் இருக்க வேண்டும். முடியவில்லை என்றால் /, - , !எதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...

இது என்ன குழந்தைத்தனமான கேள்வி. செந்திலின் பின்பக்கமாக கவுண்டரை வைத்தால்தான் அவருக்கு உதைக்க வாகாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார்,

கவுண்டருக்கு வயசாகிவிட்டது, 72 வயது இளைஞர் ஆகிவிட்டார். இப்போதெல்லாம் எட்டி உதைத்தால் அவர்தான் பின்பக்கமாக மல்லாந்து விழுவார்.

மங்களூர் சிவா சொன்னது…

/
rapp said...
ஹப்பா, மங்களூர் சிவா மறுபடி கமண்ட் போட வந்துட்டார், இனி ப்ளாகர்கள் எல்லாருக்கும் நல்ல நேரம்தான்
/

ஆமாம் மேடம் நல்ல நேரம்தான் இனிமேல். இந்தவார நட்சத்திர பதிவுகளை (நாந்தான் நாந்தான் )கொஞ்சம் எட்டிப்பாக்கிறது!!

:)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்