பின்பற்றுபவர்கள்

11 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தருக்கு டிப்ஸ் !

அன்பு நண்பர் சுந்தர்,

மறுமொழி திரட்டி, சூடான இடுகைப் பட்டியலில் செய்திருக்கும் (ஒழுங்குமுறை) மாற்றம் குறித்து தமிழ்மணம் நிர்வாகம் பட்டியல் இட்டிருக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. அதாவது தலைப்பு புதிய வாசகர்களுக்கும், இணைய வழி தேடுபவர்களுக்கும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இடுகையின் உள்ளிடு (Content) பற்றி அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

உங்களுடைய அந்த கதைகளை ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தால் அடுத்த பகுதியை அதே தலைப்பில் எப்படி வெளி இடுவது என்ற தயக்கம் இருக்கும், ஒரிஜினல் தலைப்பில் வெட்டு விழுவதால், இனி இப்படி வைக்கலாம்,

மகா கதைகள் - 45(14)
மகா கதைகள் - 45(16)
.
.
.

மகா கதைகள் - 45(99)



:)))))))))))))))

அன்புடன்
கோவி.கண்ணன்

**************

பொழுது போகாமல் உற்சாகம் குன்றியவர்களுக்கு, உற்சாகம் ஏற்படுத்த பதிவின் கீழ் பகுதியில் (Footer Section) ல் 'வாத்து வேட்டை' விளையாட்டை இணைத்திருக்கிறேன். விளையாடிப்பாருங்கள் ! அது குறித்த நான் விடுத்துள்ள எச்சரிக்கையை கவனமாக பின்பற்றுங்கள் :)

8 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

//////பொழுது போகாமல் உற்சாகம் குன்றியவர்களுக்கு, உற்சாகம் ஏற்படுத்த
பதிவின் கீழ் பகுதியில் (Footer Section) ல் 'வாத்து வேட்டை' விளையாட்டை
இணைத்திருக்கிறேன். விளையாடிப்பாருங்கள் !
அது குறித்த நான் விடுத்துள்ள எச்சரிக்கையை கவனமாக பின்பற்றுங்கள் :)/////


அது 'வாத்துமடையர்'களுக்கு மட்டுமா? அல்லது யார் வேண்டுமென்றாலும் விளையாடலாமா?:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அது 'வாத்துமடையர்'களுக்கு மட்டுமா? அல்லது யார் வேண்டுமென்றாலும் விளையாடலாமா?:-))))

10:14 AM, July 11, 2008
//

சுப்பையா ஐயா,

எல்லோருக்கும் தான் !

anujanya சொன்னது…

கண்ணன்,

சுந்தருக்கு உங்கள் டிப்ஸ் உபயோகப் படுமோ இல்லையோ, பரிசலின் 'வார்த்தை விளையாட்டு' பதிவுக்குப் பயன்படும். நன்று.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நான் காதல் கதைகள் 45 என்றுதான் தலைப்பு வைத்தேன். அதீதன் தான் இங்கே நிறைய பேரு காமத்தைக் காதல்னு நினைச்சு ஏமாந்துடறாங்க / ஏமாத்தறாங்க, நீயும் அதைச் செய்யாதேன்னு சொன்னான். :)

பாருங்க காமம் என்ற வார்த்தையே தலைப்பில் வந்தா ஆபாசம்னா என்ன செய்ய ??

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நான் காதல் கதைகள் 45 என்றுதான் தலைப்பு வைத்தேன். அதீதன் தான் இங்கே நிறைய பேரு காமத்தைக் காதல்னு நினைச்சு ஏமாந்துடறாங்க / ஏமாத்தறாங்க, நீயும் அதைச் செய்யாதேன்னு சொன்னான். :)

பாருங்க காமம் என்ற வார்த்தையே தலைப்பில் வந்தா ஆபாசம்னா என்ன செய்ய ??
//

:)

தலைப்புக்கு பொருந்தா காமம் !

பரிசல்காரன் சொன்னது…

நெஜமாவெ நல்ல ஐடியா கண்னன் சார்.

நேத்துதான் கிரி எனக்கு கூப்ட்டார்.. ”கண்ணனுக்கு ஏதாவ்து பரிசு தர்றேன்.. கொண்டு போய் குடுக்க முடியுமா”ன்னு கேட்டேன். சரீன்னார்.

அந்தப் பரிசை இந்த ஐடியாவுக்காக=ன்னு வெச்சுக்கோங்க!


//கண்ணன்,

சுந்தருக்கு உங்கள் டிப்ஸ் உபயோகப் படுமோ இல்லையோ, பரிசலின் 'வார்த்தை விளையாட்டு' பதிவுக்குப் பயன்படும். நன்று.

அனுஜன்யா//

நல்லாப் போடுறாய்ங்கய்யா பிட்டை!

லக்கிலுக் சொன்னது…

//அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.//

தவறான பொய்யான தகவலை பயனாளிகளுக்கு தமிழ்மண நிர்வாகம் தரவேண்டாமே?

தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!

இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?

இந்த பதிவும் மறுமொழியிடப்பட்ட இடுகைகள், சூடான இடுகைகள் எதிலும் வரவில்லை.

//அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள்//

மற்றபடி, புதுவை பதிவர்களுக்கு தமிழ் இணையம் குறித்தும், தமிழ்மணம் குறித்தும் இருக்கும் அக்கறை குறித்து மெய்சிலிர்க்கிறேன் :)


ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது

இந்த தலைப்பிலான பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் தற்சமயம் இடம்பெற்றிருக்கிறது. இத்தலைப்பில் தமிழ்மணத்துக்கு தவறான பார்வையை தரும் சொற்கள் எதுவும் இல்லை என்று மனதார நம்புகிறேன். :)

கயல்விழி சொன்னது…

//அதீதன் தான் இங்கே நிறைய பேரு காமத்தைக் காதல்னு நினைச்சு ஏமாந்துடறாங்க / ஏமாத்தறாங்க, நீயும் அதைச் செய்யாதேன்னு சொன்னான். :)
//

காமம் இல்லாமல் காதல் மட்டும் இருப்பது கடினம். இரண்டுக்கும் இருக்கும் தொடர்பு பிரிக்க முடியாதது. காமம் இல்லாத காதல் தேவையென்றால் அது நட்பாகவே இருந்துவிட்டு போகலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்