பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2008

காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆட்சி !

அடிக்கடி மாறும் தமிழக காங்கிரசின் தலைமை கிரிடம் தற்றோது தங்கபாலுவுக்கு சென்று இருக்கிறது. இவர் ஏற்கனவே இருந்தவர் தான். அப்போது ஏற்படுத்த முடியாத ஒன்றை, தற்போது தலைமை ஏற்றதும் மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அடிகளைப் பின்பற்றி அதே "காமராஜர் ஆட்சி அமைப்போம்" என்ற சூளுரையை மேற்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கனவாக போன பிறகு இவர்கள் அந்த காலக்கனவிலேயே தான் இன்னும் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் மானில அரசியலுக்குச் சொல்வது போல் தேசிய அரசியலில் தேர்தல் நேரத்தில் நேரு ஆட்சி, இந்திரா ஆட்சி, ராஜீவ் காந்தி ஆட்சி என்றெல்லாம் சொல்லுவதில்லை. தமிழகத்தைப் பொருத்து மறந்தும் கூட ராஜாஜி ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சொல்லிவிடமாட்டார்கள். தமிழக காங்கிரசில் ஒரே தலைமையை ஏற்கும் அரசியல் இருந்ததே இல்லை. கோஷ்டி மோதல்கள் வெளிப்படையாக தெரிவதால் இவர்களை ஒன்றுபடுத்திக் காட்டுவதற்காக அவ்வப்போது காமராஜர் பெயர் பயன்படுகிறது மற்றபடி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது தமிழக பாஜக தனித்து நின்று 'ஒரே ஒரு பாரளுமன்ற உறுப்பினரையாவது பெற்றுவிடுவோம்' என்ற நினைப்பிற்கு ஒப்பானது.

எம்ஜிஆர் இருந்த காலம் வரை எம்ஜிஆரும், கலைஞரும் அண்ணாவின் ஆட்சி என்று இருவருமே சொல்லிக் கொண்டு வாக்குக் கேட்டது கூட இதே போன்றது தான். முதல் முறை என்றால் பரவாயில்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும் 'அண்ணாவின்' பெயரைச் சொன்னால் தான் வாக்கு கிடைக்கும் என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் ஆட்சியின் கோலத்தை இவர்களே மறைப்பதற்கு பயன்பட்டது. 5 - 6 முறை முதல்வராக இருந்த கலைஞரும் ஒவ்வொரு முறை தேர்தலின் போது 'என்னுடைய பொற்கால ஆட்சி மீண்டும் மலர வாக்கு அளியுங்கள்' என்று சொன்னதே கிடையாது :). இருமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா அண்ணா ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அண்ணா நாமம், எம்ஜிஆர்(ருக்கு) நாமம் என்றே சொல்லிவருகிறார். ஜெயலலிதா ஒருமுறையேனும் எனது சொர்கலோக ஆட்சி தமிழகத்தில் மலர வாக்களியுங்கள் என்று சொன்னதே கிடையாது.

இவர்கள் யாவருக்கும் தாம் பரதனைப் போலவும், காமராஜர் அண்ணா ஆகியோர் இராமனைப் போலவும் அவர்களின் செருப்பை அரியணை ஏற்றிவிட்டு ஓரமாக அமர்ந்து கொண்டது ஆட்சிக் கடமையை கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன் செய்தது போல பேசிவருகிறார்கள்.

தம்பேரைச் சொன்னால் விழும் ஓட்டும் விழாது என்ற எண்ணம் தானே ? கேவலமாக ஆட்சி நடத்தி இருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கே இருக்கும் போது ஆசை வெட்கம் அறியாமல் அடுத்த முறை தேர்தலுக்கும் ஆசைவருவது நியாமானதா ?

ஒருவேளை ஸ்டாலின் அடுத்த முறை முதல்வர் வேட்பாளராக நின்றால் 'கலைஞரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர..திமுகவிற்கு வாக்களியுங்கள்' என்பாரோ ?

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகுத்தான் செத்துப் போன தலைவர்களின் பெயரைச் சொல்லி சொல்லி வாக்கு கேட்பது நிற்குமோ ?

13 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

இறந்தவர்களை தப்பாக யாரும் பேச மாட்டார்கள் என்பதும் அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது என்பது இப்போது உள்ள பெரும்பாலோர்களுக்கு தெரியாது என்பது தான் காரணமோ?

லக்கிலுக் சொன்னது…

கோவி கண்ணன் அய்யங்கார் அவர்களே!

2001 தேர்தலின் போது திமுகவின் கோஷம் “தொடரட்டும் இந்த பொற்காலம்!” என்பதை மறந்து விட வேண்டாம்.

கலைஞரை பொறுத்தவரை நான் நடத்துவதே காமராஜர் ஆட்சிதானே? என்று காங்கிரஸாரிடம் சொல்வார். நானும் கம்யூனிஸ்ட்டு தான் என்று கம்யூனிஸ்டுகளிடம் சொல்வார். அவர் ஒரு சூப்பர் தில்லாலங்கடி :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
இறந்தவர்களை தப்பாக யாரும் பேச மாட்டார்கள் என்பதும் அவர்கள் ஆட்சி எப்படி இருந்தது என்பது இப்போது உள்ள பெரும்பாலோர்களுக்கு தெரியாது என்பது தான் காரணமோ?
//

சரவணகுமரன்,

முதலில் குறிப்பிட்டுள்ளது(ம்) சரி என்றாலும் நீங்கள் இரண்டாவது சொல்லி இருப்பது தான் பொருத்தமாக இருக்கிறது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
கோவி கண்ணன் அய்யங்கார் அவர்களே!

2001 தேர்தலின் போது திமுகவின் கோஷம் “தொடரட்டும் இந்த பொற்காலம்!” என்பதை மறந்து விட வேண்டாம்.

கலைஞரை பொறுத்தவரை நான் நடத்துவதே காமராஜர் ஆட்சிதானே? என்று காங்கிரஸாரிடம் சொல்வார். நானும் கம்யூனிஸ்ட்டு தான் என்று கம்யூனிஸ்டுகளிடம் சொல்வார். அவர் ஒரு சூப்பர் தில்லாலங்கடி :-)

2:50 PM, July 10, 2008
//

லக்கி தென்கலை ஐயங்கார்,

ஜெயலலிதா அம்மையாரின் பொற்கால ஆட்சியையும் (நாங்களே) அமைப்போம் என்று(ம்) கலைஞர் சொல்லுவாரா ?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சரியா சொன்னீங்க கோவி.கண்ணண்
நீங்க காங்கிரஸ சொல்றதோட நிறுத்தியிருந்தீங்கன்னா, ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா இங்க பாருங்க , கலைஞரை சொன்னதும் லக்கி அண்ணா வந்து உங்களை அய்யங்காருனு கூப்பிடுறாரு.
சாதியை ஒழிக்கணும், சாதி பாகுபாடே இருக்கக் கூடாதுனு பெரியார் சொன்னார். பெரியாரின் சீடரான கலைஞரை அவர் செய்யும் தவறுகளை கூட நியாயப்படுத்தும் அளவுக்கு ஆதரிக்கும் அண்ணன் லக்கி இங்கு தேவையேயில்லாமல் சாதியை இழுக்கின்றார். இது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு வேளை சிங்கப்பூருக்கு ஆட்டோ அனுப்ப முடியாததால்தான் இப்படியோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...

ஜோசப் பால்ராஜ் சார், டென்சன் ஆகாதிங்க...

ஐயங்கார் பட்டம் குறித்த ஐயம் இங்கே தெளிவு படுத்தபட்டு இருக்கிறது, அதன் அடிப்படையில் தான் லக்கி அப்படி விளிக்கிறார்
:)

லக்கிலுக் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சரியா சொன்னீங்க கோவி.கண்ணண்
நீங்க காங்கிரஸ சொல்றதோட நிறுத்தியிருந்தீங்கன்னா, ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா இங்க பாருங்க , கலைஞரை சொன்னதும் லக்கி அண்ணா வந்து உங்களை அய்யங்காருனு கூப்பிடுறாரு.
சாதியை ஒழிக்கணும், சாதி பாகுபாடே இருக்கக் கூடாதுனு பெரியார் சொன்னார். பெரியாரின் சீடரான கலைஞரை அவர் செய்யும் தவறுகளை கூட நியாயப்படுத்தும் அளவுக்கு ஆதரிக்கும் அண்ணன் லக்கி இங்கு தேவையேயில்லாமல் சாதியை இழுக்கின்றார். இது எந்த விதத்தில் நியாயம்?
//

ஜோசப் பால்ராஜ் அவர்களே!

உங்களுக்கு அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். ஷங்கர் படங்களை விரும்பி பார்ப்பீர்கள். சரியா? :-)))))

rapp சொன்னது…

//உங்களுக்கு அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். ஷங்கர் படங்களை விரும்பி பார்ப்பீர்கள். சரியா? :-)))))//
ஹா ஹா ஹா, செமக் கலக்கல் ஹா ஹா ஹா

கோவை விஜய் சொன்னது…

//காங்கிரசுக்கு-காமராஜ் ஆட்சி
தி.மு.க வுக்கு-அண்ணாஆட்சி
அ.தி.மு.க வுக்கு-M.G.R ஆட்சி

அனைத்து உண்மைகளும் " சூப்பர்"
கோவி.கண்ணன் சார்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

ஜெகதீசன் சொன்னது…

//
உங்களுக்கு அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். ஷங்கர் படங்களை விரும்பி பார்ப்பீர்கள். சரியா? :-)))))
//
:-)))))))))))))))))

Bleachingpowder சொன்னது…

//கலைஞரும் ஒவ்வொரு முறை தேர்தலின் போது 'என்னுடைய பொற்கால ஆட்சி மீண்டும் மலர வாக்கு அளியுங்கள்' என்று சொன்னதே கிடையாது //

தவறான தகவல். தொடரட்டும் இந்த பொற்காலம்னு சொல்லிதான் ஒட்டு கேட்டார்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணா, பின்னூட்டங்களை நான் கவனிக்காம விட்டுட்டேன்.

//உங்களுக்கு அப்துல் கலாமை ரொம்ப பிடிக்கும். ஷங்கர் படங்களை விரும்பி பார்ப்பீர்கள். சரியா? //.

அப்துல்கலாமை எனக்கு பிடிக்கும். ஆனால் ஷங்கர் படங்கள் எனக்கு பிடிக்காது. ஏன் இதை கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை. பதில் சொல்லுங்க, அதவைச்சு முடிஞ்சா 2 பதிவ போட்ருவோம்.

லக்கிலுக் சொன்னது…

//அப்துல்கலாமை எனக்கு பிடிக்கும்.//

அப்போ சரி :-)

அது ஒரு குறியீடு அவ்வளவுதான். கூலா விடுங்க!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்