பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2008

'நியூ இந்தியா 2051' - அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக !

கிபி 2051 ஜனவரி 18, இந்திய அறிவியல் துறையின் தலைமையகக் வட்ட மேசை அறையில் பிரதமர் மற்றும் அறிவியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் கூடி இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி அனுமந்தராவ் தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கொண்டு இருந்தார்.

"பிரதமர் மற்றும் அமைச்சர் அவர்களே, முன்னாள் குடியரசு தலைவர் சொல்லியது போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகவில்லை, அதற்கு காரணம் என்று பார்தோமேயானால், இந்தியாவில் புரையோடி இருக்கும் சாதிப்பிரச்சனை தான். அவரவர் தத்தம் சாதி பற்றில் மூழ்கி இருப்பதால், இந்தியன் என்று சொல்லிக் கொண்டாலும், பிரிந்தே கிடக்கிறார்கள், 150 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கி அனைத்து சமூகங்களும் முன்னேறி இருந்தாலும், இடஒதுக்கீட்டை எடுத்துவிட அரசு முடிவெடுத்தால் அது கூடாது என்றே முழங்கி அங்காங்கே கலவரங்களை உண்டு பண்ணுகிறார்கள், உயர்சாதிக்காரர்களும் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் தன்னுடைய சாதிக்காரர்களையே உயர்பதவியில் அமர்த்துகிறார்கள்"

"நாட்டில் கல்விக்கோ, வேலைவாய்ப்புக்கோ குறைவு இல்லை. இருந்தாலும் இதைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கு முயற்சிக்காமல் எப்போதும் எதாவது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, நமது ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி பாகிஸ்தானும், சீனாவும் தங்கள் நில எல்லைகளை விரிவுபடுத்துக் கொண்டு பஞ்சாப் வரை வந்துவிட்டார்கள்..."

"இந்த நிலை நீடித்தால் நம் இந்தியாவையே தொலைத்துவிடும் ஆபத்து வெகுவிரைவில் நெருங்கிவிடும்...இதனைத் தடுக்க அனைவரையும் தாம் இந்தியர் என்று உணரவைக்க வேண்டும். அவரவர் மனதில் குடியேறி இருக்கும், ஜீன்களில் கலந்து இருக்கும் சாதிப்பேயை ஓட்டவேண்டும்....அதை விஞ்ஞான ரீதியாக செய்ய முடியும், இன்று நான் அதைப் பற்றிதான் சொல்லப் போகிறேன்"

"கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே ஜீன்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவியல் துறை சாதித்து இருக்கிறது, அதை மேலும் நான் 30 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டு ஜீன்களை ஆராய்ந்த போது சாதியல் கூறுகளை மனதில் விதைக்கும் ஜீன்களை தனித்து அடையாளம் கண்டேன். அதனை அகற்றிவிட்டால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கூட சாதி உணர்வற்றே பிறப்பார்கள், கலப்பு திருமணம் என்ற சொல் கூட வெளியே தெரியாமல் பல்வேறு சமூகமாக முன்பு இருந்தவர்களிடையே விருப்பத் திருமணங்கள் நடந்தேறும், எதிர்காலத்தில் சாதி என்ற ஒன்றே இருக்காது"

"இந்த சோதனையை நான் மேற்கொள்ள வேறு வேறு இரண்டு ஆண் தெருநாய்களை எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண் நாய்களுமே வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவை, அவற்றிற்கு சாதி மரபுகளை அழிக்கும் எனது 'நியூ இந்தியா 2051' பார்முலா ஊசியைச் செலுத்திய ஒருவாரத்திற்கு பிறகு, முன்பு எப்போதும் ஒன்றை ஒன்று 'உர்... உர்...' என்று பார்த்து உறுமும் நாய்கள், தற்போது ஒன்றை ஒன்று நக்கிக் கொடுக்கின்றன, இரண்டு வேறுபாடுகளை மறந்து நண்பர்கள் ஆகிவிட்டன... இதன் மூலம் எனது சாதி நீக்கும் ஜீன் ஆராய்ச்சி வெற்றி அடைந்திருக்கிறது"

மருந்து கொடுப்பதற்கு முன்பும், அதன் பின்பும் இரு வீடியோக்களைப் போட்டுக் காட்டுகிறார். அக்ரோசமாக கடித்துக் குதறிக் கொண்ட நாய்கள், ஒன்றை ஒன்று பசு கன்றை வருடுவதைப் போல் நக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தன

எல்லோரும் கைத்தட்டி பாராட்ட, பிரதமர் பேச ஆரம்பித்தார்

"முதலில் இந்த சிறப்பான ஆராய்ச்சி மேற்கண்ட விஞ்ஞானி அனுமந்தராவைப் பாராட்டுகிறேன்....'நியூ இந்தியா 2051' பார்முலா நமது நாட்டுக்கு மிக மிகத் தேவையான ஒன்று...ஒரே நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்திய 2051' பார்முலா மருந்தை போலியோ சொட்டு மருந்து போல செலுத்துவதற்கு வரும் பாராளுமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்"

அதற்குகிடையில் இந்த ஆராய்ச்சியைப் பாராட்டி நோபல் குழு அனுமந்தராவுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தது.

அமெரிக்கா போன்று வெள்ளையர், கருப்பர் இருக்கும் நாடுகளில் இந்த மருந்தில் மாற்றம் செய்து இனவேறுபாடுகளை களைவதற்கு உதவவேண்டும் என்றும் அதற்கு இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகவும் கூட்டாக அறிவித்தன

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்தியா 2051' பார்முலா மருந்து கொடுக்கப்படும் என்றும், மறுப்பவர்கள் அரசு உத்தரவை மீறுபவர்கள் என்று கருதி சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கபடும் என்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

********

2051 ஜூலை 31, காலை 9 மணியளவில் அன்றைய இந்திய செய்தி ஊடகங்கள் அனைத்திலும், ப்ரேக்கிங் நியூஸ் என அதிர்ச்சி செய்தியாக...

"இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தற்கொலைப் படைத்தாக்குதலால் முற்றிலும் அழிந்தது என்றும் அங்கு ஆராய்சியில் ஈடுபட்டிருந்த அனுமந்தராவ் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்" என்ற பரபரப்புத் தகவல்கள் எலோக்ட்ரோ மேக்னெட் அலைகள் முலம் பரவ...பரவ... அந்த செய்தி அடுத்த வினாடியே உலகம் முழுவதும் பரவியது.

அன்று மாலையே,

வடநாட்டில் இயங்கிய தடைசெய்யப்பட்ட இந்துவெறி அமைப்பு ஒன்று, செய்தி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிய தகவலில்... "இந்தியா இந்துவிற்கே சொந்தம், இந்து மதத்தின் சிறப்புத் தன்மை சாதி...சாதிகளை ஒழித்துவிட்டால் இந்துமதம் அழிந்துவிடும்....உலகில் தோன்றிய முதல் மதமான இந்துமதம் அழிவை சந்திக்க ஒருகாலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மீது நடந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்" என்று அறிவித்தது.

********

பின்குறிப்பு : இது பதிவர் சிறில் அலெக்ஸ் அறிவித்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

35 கருத்துகள்:

Sivaram சொன்னது…

ஆஹா. சாதி ஒழிப்புக்குக்கு கூட தடுப்பு

ஊசியா...?

நல்ல கற்பனை..

தருமி சொன்னது…

இப்போதைக்கு ....
.......உள்ளேன் ஐயா!!

கையேடு சொன்னது…

ஏறத்தாழ ஒரு மாதம் ஆயிடுச்சு உங்க வீட்டுக்கு வந்து.

ஆமா.. அறிவியல் "புனைவுக்" கதை தானே எழுதனும் போட்டிக்கு .. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
ஏறத்தாழ ஒரு மாதம் ஆயிடுச்சு உங்க வீட்டுக்கு வந்து.
//

கையேடு சார்,

ஏன் ஏன் எதும் சண்டை போட்டுச் சென்றீர்களா ? நான் தவறாக எதும் எழுதிவிட்டேனா ? புரியல மாதக்கணக்கு.

//ஆமா.. அறிவியல் "புனைவுக்" கதை தானே எழுதனும் போட்டிக்கு .. :)
//

இது புனைக்கதைதானே 2051 இன்னும் வரலையே, சாதி பிரச்சனைகளும் பெரிதாகிக் கொண்டே செல்கிறதே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
இப்போதைக்கு ....
.......உள்ளேன் ஐயா!!
//

தருமி ஐயா,
இப்'போதை'க்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
ஆஹா. சாதி ஒழிப்புக்குக்கு கூட தடுப்பு

ஊசியா...?

நல்ல கற்பனை..
//

ஜீவன்,
கற்பனைப் பண்ணித்தான் பார்க்க முடிகிறது.
:()

மங்களூர் சிவா சொன்னது…

/
அன்று மாலையே,

வடநாட்டில் இயங்கிய தடைசெய்யப்பட்ட இந்துவெறி அமைப்பு ஒன்று, செய்தி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிய தகவலில்... "இந்தியா இந்துவிற்கே சொந்தம், இந்து மதத்தின் சிறப்புத் தன்மை சாதி...சாதிகளை ஒழித்துவிட்டால் இந்துமதம் அழிந்துவிடும்....உலகில் தோன்றிய முதல் மதமான இந்துமதம் அழிவை சந்திக்க ஒருகாலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மீது நடந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்கிறோம்" என்று அறிவித்தது
/

wow

அருமையான எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்!

கையேடு சொன்னது…

//புரியல மாதக்கணக்கு//

இணையத்தொடர்பில்லாமல் ஒரு மூன்று வாரம் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். அதைக் கூறினேன்.. :)

முடிவு கற்பனை போலத் தோன்றவில்லையே. :)

Thekkikattan|தெகா சொன்னது…

இது போல அண்மையில் வந்த The Next by Michael Crichton எழுதிய நாவலில் நிறைய மனித குணங்களை மரபணு ரீதியில் பிரித்தெடுத்து அல்லது சொறுகிக் கொள்வதனைப் போல கதையமைப்பு சில இடங்களில் செல்லும்.

இதனைப் படித்தவுடன் எனக்கு அந்த புதினம்தான் ஞாபகத்தில் ஓடியது. வித்தியாசமான சிந்தனை. நடைமுறைப் படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கலாம், சமூக பழக்க வழக்க மரபணுக்களை சிங்க்ல் அவுட் பண்ணும் கால கட்டத்தில்.

Chinmayi சொன்னது…

Arasiyalai jadi vachu panravanga ellam, puli thinuttu kambali pothi paduka vendiyathu than. kaadellam than vettiyache!

Sumarana kadai. Enna ariviyalunu theriyale.

கோவி.கண்ணன் சொன்னது…

// மங்களூர் சிவா said...

wow

அருமையான எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்!//

நன்றி சிவா,

நட்சத்திரம் பாராட்டியதே பரிசுபெற்றது போல் மகிழ்வாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...


இணையத்தொடர்பில்லாமல் ஒரு மூன்று வாரம் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். அதைக் கூறினேன்.. :)//

கையேடு சார்

நிம்மதியாக இருந்தீர்கள் என்று சொல்லுங்க!

//முடிவு கற்பனை போலத் தோன்றவில்லையே. :)//

2050க்குள் இந்துமதத்தில் சாதிகளை ஒழிக்க முடியும் என்று நீங்கள் நம்பினால் நான் எழுதி இருப்பது மிக மோசமான கற்பனை
:)

முரளிகண்ணன் சொன்னது…

கலக்கல். நல்ல தீம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
இது போல அண்மையில் வந்த The Next by Michael Crichton எழுதிய நாவலில் நிறைய மனித குணங்களை மரபணு ரீதியில் பிரித்தெடுத்து அல்லது சொறுகிக் கொள்வதனைப் போல கதையமைப்பு சில இடங்களில் செல்லும்.

இதனைப் படித்தவுடன் எனக்கு அந்த புதினம்தான் ஞாபகத்தில் ஓடியது. வித்தியாசமான சிந்தனை. நடைமுறைப் படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கலாம், சமூக பழக்க வழக்க மரபணுக்களை சிங்க்ல் அவுட் பண்ணும் கால கட்டத்தில்.

11:39 PM, July 15, 2008
//

தெகா,

நல்ல உதாரணத்துடன் பாராட்டி இருக்கிறீர்கள். எழுதி முடித்த மனநிறைவைவிட தங்கள் பாராட்டு மிக்க நிறைவை தருகிறது. மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Aruna said...
Arasiyalai jadi vachu panravanga ellam, puli thinuttu kambali pothi paduka vendiyathu than. kaadellam than vettiyache!

Sumarana kadai. Enna ariviyalunu theriyale.

11:44 PM, July 15, 2008
//

காடெல்லாம் வெட்டியாச்சு, விசச்செடிகள் மண்டிக்கிடக்கிறதே, புலியை விட ஆபத்தானது. இணையத்திலேயே பார்க்கிறோமே, எவ்வளவு விரோதம், குரோதம் !
:)

கதையில் என்ன அறிவியல் என்று ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள். :)

இரா. வசந்த குமார். சொன்னது…

ஏதோ நல்லது நடந்தா சர்தான்.... நல்ல கற்பனை...!

இக்பால் சொன்னது…

நல்ல உதாரணத்துடன் முடித்திருக்கிறீர்கள்.
அருமை

ஜெகதீசன் சொன்னது…

அய்யங்கார்வாள்,
நன்னா ஷொல்லீருக்கேள்....
:)

ஜெகதீசன் சொன்னது…

//
Aruna said...

Arasiyalai jadi vachu panravanga ellam, puli thinuttu kambali pothi paduka vendiyathu than. kaadellam than vettiyache!
//
யாராவது இதை மொழிபெயர்த்துத் தாங்களேன் தயவு செய்து...
:)

பரிசல்காரன் சொன்னது…

இந்த முடிவைப் பாருங்கள்...


//2051 ஜூலை 31, காலை 9 மணியளவில் அன்றைய இந்திய செய்தி ஊடகங்கள் அனைத்திலும், ப்ரேக்கிங் நியூஸ் என அதிர்ச்சி செய்தியாக...

"இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தற்கொலைப் படைத்தாக்குதலால் முற்றிலும் அழிந்தது என்றும் அங்கு ஆராய்சியில் ஈடுபட்டிருந்த அனுமந்தராவ் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்" என்ற பரபரப்புத் தகவல்கள் எலோக்ட்ரோ மேக்னெட் அலைகள் முலம் பரவ...பரவ... அந்த செய்தி அடுத்த வினாடியே உலகம் முழுவதும் பரவியது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு...

அந்த விமானம், மும்பையில் தரையிறங்கி, பயணிகளை விடுவித்தது.

கூட்டத்திலிருந்து அந்த இளைஞன் பிரிந்து நேராக நின்றிருந்த கருப்புக் காரில் ஏறிக்கொண்டான்.

டிரைவர் வாகனத்தைச் செலுத்தியபடி ஒரு லெதர் கேக்கை அந்த இளைஞனிடம் கொடுத்தான். ஒரு அபார்ட்மெண்ட் முன் அந்த இளைஞனை இறக்கி விட்டான்.

இளைஞன் லெதர் பேக்கை திறந்து அதிலிருந்த சாவியை எடுத்துக் கொண்டு 17-ம் நம்பர் ஃப்ளாட்டைத் திறந்து தன் செல்ஃபோனை உயிர்ப்பித்தான்.

“நன்றி”

“ம்” என்றது எதிர்க்குரல். “அனுமந்தராவ் சொன்னபடி உனக்கு எல்லா வசதிகளும், புதிய வாழ்க்கையும் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம். நாங்கள் தடைசெய்யப்பட்ட இந்துவெறி அமைப்பு என்பதும், இந்து மதத்தை வாழவக்கவே இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மீது தாக்குதல் நடத்தினோம், அனுமந்தராவும் இதற்கு அடிபணிந்து அவரது ஒரே உறவினரான உனக்கு நூறு கோடி பெறுமான சொத்துக்களைக் கொடுக்கச்சொல்லி அவரும் அழிந்து விட்டார் என்பதும் நமக்குள்ளே மட்டும் இருக்கட்டும்!”

“சரி” என்று ஃபோனை வைத்தவன்
கண்ணாடியைப் பார்த்தான்.
”நான் கண்டுபிடித்த முதுமையை இளமையாக்கும் ஆராய்ச்சி மூலம் முதலில் பலனடைந்தவன் நாந்தான். இனி இந்தக் கண்டுபிடிப்பை ஊருக்குச் சொல்லி பிரபலமடைய வேண்டியதுதான்” என்று நினைத்துகொண்டான் ஆறுமாத ப்ளான் மூலம் தன்னை மாற்றிக்கொண்ட அனுமந்தராவ்.
*****************
அவசர அவசரமாக எழுதியது! யோசித்து, ஓட்டைகளை சரி செய்து எழுத நேரமில்லை!

உங்கள் முடிவு நேரடியாக இருந்தது! இது எக்ஸ்ட்ரா ட்விஸ்ட்!

இந்துமதத்துக்கு ஆதராவாகத்தானே அனுமந்தராவ் இருந்திருப்பார் என்று சிந்தித்ததில் வந்த விளைவு!

பரிசல்காரன் சொன்னது…

லெதர் பேக் - லெடர் கேக்காகிவிட்டது!

ஸாரி!

மோகன் கந்தசாமி சொன்னது…

போட்டிக்கு ஜட்ஜ் எழுத்தாளர் ஜெயமோகன் -ன்னு கேள்விப்பட்டேன்! எனினும் வாழ்த்துக்கள்.

செமத்தியா இருக்கு கதை.

யோசிப்பவர் சொன்னது…

ஒரே ஒரு கேள்வி. அது ஏன் இந்துவெறி அமைப்பு?

கோவி.கண்ணன் சொன்னது…

//யோசிப்பவர் said...
ஒரே ஒரு கேள்வி. அது ஏன் இந்துவெறி அமைப்பு?
//

கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் ஒரிசா பாதிரியாரை அவரது இரண்டு குழந்தைகளுடன் எரித்தது இவையெல்லாம் நடந்திருக்காவிடில் உங்கள் கேள்விக்கு விடை கிடைப்பது அரிதுதான். இந்த சிறுகதையில் இந்துவெறி அமைப்பு என்று ஆர் எஸ் எஸ்ஸையோ, பஜ்ரங்க்தள் அமைப்பைப் பற்றி நான் சொல்லவில்லை. அவைகளெல்லாம் தேச தியாக, பக்தி இயக்கம்.

துளசி கோபால் சொன்னது…

நானும் உள்ளேன் ஐயா.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உண்மையிலேயே ஏதாவது ஊசி கண்டுபிடிச்சாத்தான் நம்ம நாட்டுல சாதிய ஒழிக்கலாம் போல இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//இரா. வசந்த குமார். said...
ஏதோ நல்லது நடந்தா சர்தான்.... நல்ல கற்பனை...!

12:45 AM, July 16, 2008
//

பின்னூட்ட ஆதரவுக்கு மிக்க நன்றி !

நிறைவேறா ஆசைகள் கனவாக வரும், எழுதுபவர்களுக்கு கற்பனையாக வரும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...
நல்ல உதாரணத்துடன் முடித்திருக்கிறீர்கள்.
அருமை

8:59 AM, July 16, 2008
//

பாராட்டுக்கு மிக்க நன்றி இக்பால் சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அய்யங்கார்வாள்,
நன்னா ஷொல்லீருக்கேள்....
:)

9:51 AM, July 16, 2008
//

ஜெகதீசன் ஐயர்,

ஷேமமாக இருங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said... அனுமந்தராவ்.
*****************
அவசர அவசரமாக எழுதியது! யோசித்து, ஓட்டைகளை சரி செய்து எழுத நேரமில்லை!

உங்கள் முடிவு நேரடியாக இருந்தது! இது எக்ஸ்ட்ரா ட்விஸ்ட்!

இந்துமதத்துக்கு ஆதராவாகத்தானே அனுமந்தராவ் இருந்திருப்பார் என்று சிந்தித்ததில் வந்த விளைவு!//

பரிசல்,

கோயம்புத்தூர் பக்கமாக நீங்க இருப்பதால் இராஜேஷ் குமாரின் குற்றவியல் (க்ரைம்) கதைகள் நிறைய படிப்பீர்கள் என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
Aruna said...

Arasiyalai jadi vachu panravanga ellam, puli thinuttu kambali pothi paduka vendiyathu than. kaadellam than vettiyache!
//
யாராவது இதை மொழிபெயர்த்துத் தாங்களேன் தயவு செய்து...
:)
//
ஆரசியலை ஜாடி வசு பன்ரவங்க எல்லாம், புலி தின்னுட்டு கம்பலி பொதி படுக வென்டியது தன். காடெல்லாம் தன் வெட்டியசெ.

- ஜகதீசன் சுரதாவில் மொழிமாற்றினால் இப்படித்தான் வருது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
போட்டிக்கு ஜட்ஜ் எழுத்தாளர் ஜெயமோகன் -ன்னு கேள்விப்பட்டேன்! எனினும் வாழ்த்துக்கள்.

செமத்தியா இருக்கு கதை.

1:05 PM, July 16, 2008
//

மோகன்,
ஓ அப்படியா...தகவலுக்கு நன்றி !

பாராட்டுக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நானும் உள்ளேன் ஐயா.

4:03 PM, July 16, 2008
//

டீச்சர்,

மேலே இன்னும் ஒரு வாத்தியாரும் 'உள்ளேன்' சொல்லி இருக்கிறார்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
உண்மையிலேயே ஏதாவது ஊசி கண்டுபிடிச்சாத்தான் நம்ம நாட்டுல சாதிய ஒழிக்கலாம் போல இருக்கு.

7:16 PM, July 16, 2008
//

ஜோசப்,

சாதி உணர்வு மன நோய்தான். சாதி உணர்வு மரபியல் ரீதியானது என்று(ம்) நினைக்கத் தோன்றுகிறது. அது முற்றிலும் சரியென்றே சொல்ல முடியாது.

பிற சாதியினர் வீட்டில் தத்துக் குழந்தையாக வளர்ந்து பெரியவனாக ஆகியதும், வளர்த்தவரின் சாதியைச் சார்ந்த உணர்வு தான் வளர்ந்தவருக்கும் இருக்கும்.

தீண்டாமைப் பேய் ஓரளவுக்கு ஒழிந்திருக்கிறது, ஜாதிப்பேய் ஒழிய இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம், மதப்பேய் ஒழிய இன்னும் 500 ஆண்டுகள் கூட ஆகும்.

manikandan சொன்னது…

sorry boss. probably my previous comment was in bad taste. But it was not intended to be like that.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்