முதலிரண்டு இங்கே,
வலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...
வலைப்பூ ? கிலோ என்ன விலை ?
கற்பனையான பெயர்களுக்கு பதில், கற்பனையான வலைப்பூக்களின் பெயர் இடம் பெருகிறது.
நேர் பார்வை : எனக்கு தெரிந்து நடுனிலை பதிவாளர் என்றால் 'வர்ண தாசனின் நினைவுகள்' என்று எழுதுபவர் தான்.
ஆதவன் நிழல் : எப்படி சொல்கிறீர்கள் ???
நேர் பார்வை : தன் பெயரில் எழுதும் போலி தன்னைவிட நன்றாகவே எழுதுவதாக போலியை வாழ்த்தி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா ?
ஓடக்காரன் : 'சிந்தனை சிகாமணி' பதிவாளரை நேரில் சந்தித்து வந்தீர்களே அவருடன் உறையாடிய அனுபவம் எப்படி இருந்தது ?
இரவின் ஒளி: நிஜமாகவே அவர் சிந்தனையாளர்தான், பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன்.
ஓடக்காரன் : அப்படியா ??? !
இரவின் ஒளி: அவருடைய தலையில் ஒரு முடிகூட இல்லையின்னா நீங்களே முடிவுபண்ணிக்குங்க
நாட்டு நடப்பு : வர வர நம்ப வலைப்பதிவாளர்கள் மத்தியில் கோஷ்டி தொல்லை அதிகமாக போய்விட்டது ?
நெஞ்சின் ஏக்கம்: ஏ.....ன் என்ன நடந்தது, கோஷ்டியா வந்து பின்னூட்டம் போட்டு கலங்கடிக்கிறாங்களா ?
நாட்டு நடப்பு : அப்படி இருந்தா தான் பரவாயில்லையே ?
நெஞ்சின் ஏக்கம்: பின்ன ?
நாட்டு நடப்பு : எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.
புதிய பதிவாளர் : அண்ணே பின்னூட்டம்னா என்ன அண்ணே ?
பழம் தின்னவர் : இது கூடத் தெரியாதா ? ... வயைக் கொடுத்து எதையோ .... சாரி வாங்கிக் கட்டிக்கொள்வது தான்.
புதிய பதிவாளர் :இன்னொரு சந்தேகம் இந்த மீள்பதிவு ???
பழம் தின்னவர் : திடீர்னு யாரோ உங்க வீட்டுக்கு வந்துடுராங்க, அப்ப பழைய இட்லிதான் இருக்கு என்ன செய்விங்க ? உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா ? இல்லையா ? அதாவது எழுதுறத்துக்கு விசயமே இல்லேன்னு வையுங்க... இன்னைக்கு எப்படியாவது ஒரு பதிவு போடனும்னு நெனெச்சுடுறீங்கன்னு வையுங்க என்ன செய்விங்க ? பாத்து பாத்து எழுதினபதிவு, யாரும் கவனிக்காமல் போன பதிவு இது மாதிரி பழையபதிவு ஒன்றை எடுத்து இட்லி உப்புமா செஞ்சு மீள்பதிவுன்னு போடனும் புரியுதா ?
புதிய பதிவாளர் : இந்த மட்டுறுத்தல் ....?
பழம் தின்னவர் : உங்க வீடு திறந்திருந்தா என்ன நடக்கும் ? வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா ? கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா ? அதுதான் மட்டுறுத்தல்
அன்பு ஆதவன் : அந்த நட்சத்திர பதிவாளர் இவ்வளவு தூரம் போவருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை
எண்ண வேள்வி : என்ன ஆச்சு ? பெரிய படைப்பாளராக ஆகிவிட்டாரா ?
அன்பு ஆதவன் : இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.
11 கருத்துகள்:
//எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.//
:-))))))))))
நன்மனம் said...
//எதோ 'பின்னூட்ட //
நன்மனம் நீங்க அந்த குழுவில் இல்லையென்று சிம்பாளிக்காக சொல்லிவிட்டீர்கள் :)
//நன்மனம் நீங்க அந்த குழுவில் இல்லையென்று சிம்பாளிக்காக சொல்லிவிட்டீர்கள் :) //
என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!! :-)
//என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!! :-) //
கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க ...
நான் இப்போதாவது பின்னூட்டம் இடாவிட்டால் ஏதாவது குழுவில் வலுக்கட்டாயமாகச் சேர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே ! வந்தாச்சு சாமி, குறிச்சிகிடுங்க:)
// இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.
//
:-))))
//மணியன் said...
நான் இப்போதாவது பின்னூட்டம் இடாவிட்டால் ஏதாவது குழுவில் வலுக்கட்டாயமாகச் சேர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே//
சாமி சத்தியமாக, பின்னூட்டம் வாங்குவதற்காக எழுதலிங்கோ :)
//குமரன் (Kumaran) said...
:-)))) //
திரு குமரன்
வாய்விட்டு சிரிச்ச மாதிரி தெரியுது :)
//பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.//
கேட்டா என்ன தப்பு......
திண்டிவனம் ராமமூர்த்தி 30 சீட் கேட்குறார், ராஜேந்தர் 20 சீட் கேட்குறார்.........நம்ம ஏன் ஒரு சீட் கேட்கனும், கேட்குறது நிறைவே கேட்போம். நாகை தொகுதி உங்களுக்கு தான்.......
//நாகை சிவா said...
கேட்டா என்ன தப்பு......//
சிவா,
சத்தமாக சொல்லாதீர்கள், யாராவது உண்மையிலேயே கெளம்பிட போறாங்க :)
அரைவேக்காட்டு விசயத்த வச்சுக்கிட்டு மக்களை ஈர்க்குறதுக்காகவே ஸ்பெசலா தலைப்பு போட்டு ஏமாத்துறாங்களே, அதப் பத்தி ஒரு சோக்கு எடுத்துவிடுங்க?
கருத்துரையிடுக