இந்திய சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, பத்திரிக்கைகளின் கருத்துக்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி வருகின்றன.
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறும் என்பது இவர்களின் நப்பாசையே. இன்றைய காலகட்டத்தில் 90% சதவிகிதம் அரசியல் வாதிகள் படித்தவர்களே. நாடு முன்னேறியதா ?
அரசியல் வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், அவர்கள் பின்னால் இயங்கும் அதிகாரிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் எல்லாம், ஐஏஎஸ், ஐபிஸ் படித்தவர்கள் தானே ? ஆட்சி மாறுவதும் முதல் வேலையாக இவர்களுக்கு இடமாற்றம், பணிமாற்றமும் செய்யப்படுவது எதற்காக ?
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறும் என்பது இவர்களின் நப்பாசையே. இன்றைய காலகட்டத்தில் 90% சதவிகிதம் அரசியல் வாதிகள் படித்தவர்களே. நாடு முன்னேறியதா ?
அரசியல் வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், அவர்கள் பின்னால் இயங்கும் அதிகாரிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் எல்லாம், ஐஏஎஸ், ஐபிஸ் படித்தவர்கள் தானே ? ஆட்சி மாறுவதும் முதல் வேலையாக இவர்களுக்கு இடமாற்றம், பணிமாற்றமும் செய்யப்படுவது எதற்காக ?
முந்தைய ஆட்சியில் கட்சி உறுப்பினர் போலவே, மாவட்ட செயலாளர்கள் போலவே இவர்கள் செயல்பட்டு அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு பாதை அமைத்துக் கொடுத்து, தானும் லாபம் அடைந்ததாலே அவர்களுக்கு அந்த நிலை ஏற்படுகிறது.
சாதரண திருட்டு வழக்கில் மாட்டிக்கொண்ட ஒருவனை உள் ஆடையுடன் நிற்கவைக்கும் காவல் துறையினர், இந்த மேதாவிகளுக்கு சகல சவுகர்யங்களையும் செய்து கொடுத்து சலூய்ட் அடிப்பதும் வேதனையான விசயம். இந்த அதிமேதவிகளை கடுமையான சட்டங்கள் மூலம் பொதுமக்கள் முன் அம்மனமாக நிற்க வைக்க வேண்டும்.
ஆட்சி மாற்றத்தை பொதுமக்களை விட அதிகம் எதிர்பார்பவர்கள் அதிகாரிகள்தான். இவர்கள் படித்தும் என்ன பயன்? நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை (?) மீண்டும் தொடரலாம் என்ற அபார நம்பிக்கை இருப்பதால் தான்.
இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் பொதுமக்களின் வரிபணத்திலிருந்து செய்யப்பட்டும், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பதும் எதற்காக ? அரசியல் வாதிகளை கெடுப்பதே இந்த படித்த பண்பில்லாத அதிகாரிகள் தான். தனக்கு ஆகாதவர் பெரும் கட்சித்தலைவர் அல்லது முன்னாள் முதல்வர் என்று தெரிந்தும் நடுஇரவில் புகுந்து கைது செய்து இவர்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். யோக்கியவான் என்று காட்டிக்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்வதாக கூறி, அப்படி செய்தவர்கள் பின்னாளில் சமுகவிரோதிகளிடம் தொடர்பு கொண்ட முத்திரைத்தாள் மோசடி போன்ற வழக்கிலும் சிக்கியிருக்கிறார்கள்.
படித்தவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வந்தால் ஊழல் குறையாது மாறாக விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாமல் வேண்டுமானல் இருப்பார்கள் மாறாக பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
8 கருத்துகள்:
"படித்தவன் சூது" என்ற ஒரு பதத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா? (பாரதியார் என்று நினைக்கிறேன்)
//"படித்தவன் சூது" என்ற ஒரு பதத்தை கேள்விப்பட்டுள்ளீர்களா? (பாரதியார் என்று நினைக்கிறேன்) //
முத்து,
நான் அந்த அளவுக்கு படிக்கலை. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது
தல கலக்கீட்டிங்க! சரியாதான் இருக்கு உங்க வாதமும். நீங்களும் நானும் ஒரே கட்சி போல. நான் "முதல்வன்" சினிமாவுல வர புகழேந்தியை தேடிக்கிட்டு இருக்கேன். வாங்க ஒன்னா தேடுவோம்!!! இதை பத்தி ஒரு பதிவு நான் கூட எழுதினேன் என் முந்தைய பதிப்பின் வலை முகவரி ஒரு இந்திய கனவு" படிக்கவும்
//இதை பத்தி ஒரு பதிவு நான் கூட எழுதினேன் என் முந்தைய பதிப்பின் வலை முகவரி ஒரு இந்திய கனவு" படிக்கவும் //
உங்கள் பதிவை படித்தேன், ஒத்த கருத்துகளாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்
கண்ணன் பாராட்டுக்கு நன்றி. பாராட்டுட்டை விட முக்கியம் புகழேந்தியை தேடுவது, தேடுங்க கெடச்சா சொல்லுங்க!!!
நம் கனவு பகல் கனவு ஆக கூடாது என்பதே என் ஆசை!!
You can read some of the articles in
tamilcircle.net
* ottu podathey puratchi sey
* mooncha paru Golkaya pakkathey - April month Puthiya Kalacharam.
உண்மை தாங்க. அதிகாரிகள் ஒழுங்கா இருந்தா எல்லாமே ஒழுங்கா நடக்கும்.
நல்ல ரோல் மாடல்கள் அதிகாரிகள் மத்தியில் இல்லாததே இதற்கு காரணமென நினைக்கிறேன்...
கருத்துரையிடுக