பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2006

வெள்ளையர் ஆதிக்கம் !

ஒரு ஹைக்கூ... ஹைக்கூ இத்தனை வரிகளில் எழுதவேணடும் என்று என்னென்னுமோ விதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் புரிந்து கொள்வது என்னவென்றால் ஏதோ சொல்லும் போது, வேறு எதையாவது மறைமுகமாக காட்டுவது என்பதைத் தான். அந்த அடிப்படையில் சில எண்ணங்களை ஹைக்கூ எனப்படும் துளிப்பாவாக எழுதுகிறேன்.
வெள்ளையர் ஆதிக்கம் !

ஊன்று கோலுடன், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி,
பங்குசந்தையில் வெள்ளையன் டாலரை வீழ்த்த,
இன்றும் தொடருகிறது போராட்டம் !

8 கருத்துகள்:

ப்ரியன் சொன்னது…

கண்ணன்,அழகான ஹைக்கூ கவிதை!நச் சுன்னு இருக்கு வாழ்த்துக்கள்!

இன்னமும் வார்த்தைகளைக் குறைந்திருந்தால் இன்னும் நச் என இருந்திருக்கும்.

உங்களுக்காக:

ஹைக்கூ பற்றி மரவண்டு - (ஹைக்கூ)கணேஷ் எழுதியவை

என் இனிய ஹைக்கூவே ....

ஹைக்கூ ஓர் அலசல் - 1

ஹைக்கூ ஓர் அலசல் - 2

அயல் நாடுகளில் ஹைக்கூ

தமிழகத்தில் ஹைக்கூ

அருட்பெருங்கோ சொன்னது…

ம்ம்ம்..நல்ல கருத்துதான் சொல்லியிருக்கீங்க....

கோவி.கண்ணன் சொன்னது…

//ப்ரியன் said...
கண்ணன்,அழகான ஹைக்கூ கவிதை!
இன்னமும் வார்த்தைகளைக் குறைந்திருந்தால் இன்னும் நச் என இருந்திருக்கும்.//
ப்ரியன், பாராட்டுகளுக்கு நன்றி !
சிறிய வடிவில் எழுதுவது எனக்கு வரும், ஆனால் எல்லோருக்கும் புரியாதே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
ம்ம்ம்..நல்ல கருத்துதான் சொல்லியிருக்கீங்க....
//
அருட்பெருங்கோ அடிக்கடி வந்துட்டுபோங்கோ :)

ப்ரியன் சொன்னது…

/*சிறிய வடிவில் எழுதுவது எனக்கு வரும், ஆனால் எல்லோருக்கும் புரியாதே ? */

அதுவும் உண்மை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ப்ரியன் said...
/*சிறிய வடிவில் எழுதுவது எனக்கு வரும், ஆனால் எல்லோருக்கும் புரியாதே ? */

அதுவும் உண்மை :)
//
இந்த ஹைக்கூவை இப்படியும் எழுதலாம்,

பங்குசந்தையில் தொடர் போராட்டம்
கைத்தடியுடன் ரூபாய் நோட்டில் காந்தி !

ஆனால் எத்தனைப் பேர் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது.

ஊரில் நண்பர் ஒரு ஹைக்கூ சொன்னார்

குளத்தில் கொக்கு,
துள்ளி ஓடும் மீன்கள்
வெள்ளை என்பது சமாதனமல்ல !

புரிந்து கொள்வதற்கு சில நொடிகள் ஆனது.

ப்ரியன் சொன்னது…

/*
பங்குசந்தையில் தொடர் போராட்டம்
கைத்தடியுடன் ரூபாய் நோட்டில் காந்தி !
*/
இன்றும் தொடருகிறது போராட்டம் ! என்ற வரி இல்லாமல் இது பொருள் தரவில்லை / பலருக்கு (எனக்கும்) புரியாது கோவி.

உங்கள் நண்பர் சொன்ன ஹைக்கூ அருமை

/*
குளத்தில் கொக்கு,
துள்ளி ஓடும் மீன்கள்
வெள்ளை என்பது சமாதனமல்ல !
*/

இதுவும் கடைசிவரி

/*வெள்ளை என்பதெல்லாம் சமாதனமல்ல !*/

என இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்

கோவி.கண்ணன் சொன்னது…

ப்ரியன் said...
/*வெள்ளை என்பதெல்லாம் சமாதனமல்ல !*/

சரியாக சொன்னீர்கள்
அவர் வெள்ளை 'என்பது எப்பொழுது சமாதனமல்ல' என்று சொன்னதாக நினைவு. நீங்கள் இன்னும் சுருக்கியிருக்கிறீர்கள். நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்