பின்பற்றுபவர்கள்

13 ஜூன், 2006

பேய்களின் ஆற்றல் ...


அறியாமை என்பதை இருள் என்று சொல்வதுண்டு, இருள் சூழ்ந்தி ருந்தால் எந்தப் பொருளும் தெளிவாக தெரிவதில்லை. அது வெற்றிடமாக இருந்தாலும் ஏதோ ஒன்று மறைந்திருப்ப தாகவே இருள் சூழ்ந்த இடத்தில் தனித்து இருக்கும் ஒருவர் பயம் கொள்ளுகின்றனர்.

என்ன தான் நாத்திகம் பேசும் ஒருவராக இருந்தாலும் தன் ஊரை தள்ளி, ஒதுக்கு புறமாக இருக்கும் இடுகாட்டுக்கு நடு இரவில் செல்ல நடுக்கம் கொள்ளுவர் என்பது நிஜம் தான். ஏன் உங்களால் அங்கு தனியாக இரவில் செல்ல முடியுமா ? என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் ?' என்று.

இந்த உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தத்தம் எதிரிகளை அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து தம்மை காத்தோ, எதிர்த்தோ வாழ்ந்து வருகின்றன. முட்டையிலிருந்து வெளியில் வந்த உடன் கோழிகுஞ்சு பருந்துதான் நம் எதிரி தெரிந்து கொள்கிறது. பருந்தைக் கண்டவுடன் தம் தாயின் இறக்கைக்குள் ஒழிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்கிறது. ஒரு வேளை மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சை அதன் தாய் கோழி முடிந்த மட்டும் பருந்தை எதிர்த்து காப்பாற்ற முயலுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொருந்தும்.

முன்பு காடுகளில் திரிந்தபோது விலங்குகளை எதிரிகளாக நினைத்து அழித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வந்தான், பின்பு அவற்றை அடக்கியாள கற்றுக் கொண்டு நாகரீக மனிதனாக மாறியதும் விலங்குகளின் மீதுள்ள பயம் மனிதனுக்கு போயிற்று. இன்றைய மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் சந்திக்கும் கொடிய மிருகங்கள் எத்தகையாதாக இருந்தாலும் கையில் சரியான தளவாடங்கள் இருந்தால் மோதிப் பார்த்துவிடுகின்றனர். அத்தகைய ஒரு நிகழ்வு தற்செயல் என்று நினைக்க முடிகிறது. மாறக இந்த விலங்கு தன் பரம்பரை எதிரி என்று எல்லக் காலங்களிலும் நினைத்து பயந்தபடி வாழ்வதில்லை.


தனக்கு எதிரி யாரும் இல்லை என்பதால் மனிதன் நாகரீகம் பெற்றவுடன் தன் இனத்தையே எதிரியாக நினைக்க ஆரம்பித்தான். புராண இதிகாச சொர்க்க, நரக கதைகளைக் கேட்டு, இறந்த மனிதன் ஆவியாக அலைவதாக நம்ப ஆரம்பித்தான். அதுவும் ஆவிகள் மனிதனைவிட பலம் பொருந்தியதாக நம்ப ஆரம்பித்து நடுங்க ஆரம்பித்தான். ஆவிகளுக்கு பகலில் வடிவம் கொடுக்க முடியது என்று தெரிந்ததால் அவன் மூளை ஆவிகளை இரவில் நடமாடுவதாக கற்பனை செய்து இருட்டில் இடம் மாற்றியது. இத்தகைய ஆவிபயம் உலக மக்கள் அனைவரிலும் மதங்கள் மூலம் தாக்கப் பட்டிருப்பதால் நாடு, இனம் தாண்டி மனித இனமே தனிமை இருட்டுக்குள் ஆவி இருப்பதாகவும் அவை தம்மை தாக்கக் கூடும் என்றே பயம் கொள்ளுகிறது.


நிலவற்ற இருட்டில் சென்ற ஒருவரை ஏதோ ஒரு விலங்கோ, வவ்வாளோ தாக்க, பேய் தன்னை தாக்கியதாக தானும் நம்பி, தன்னைச் சார்ந்தவர்களுக்கு அத்தகைய பய உணர்வை தோற்றுவித்தான். இவை நம் ஜீன்களின் அடிப்படையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துவிட்டதால் நாம் எத்தகைய பலசாலியாக இருந்தாலும், எந்த தத்துவம் பேசுவராக இருந்தாலும் ஆவிகளுக்காக பயப்படுகிறோம்.

ஆவிகள் ஆற்றல் மிக்கது என்றால், வீரப்பனின் ஆவி அவனைவிட ஆற்றல் மிக்கதாக கொடூரமானதாகவே இருந்து தமிழகம் முழுவது கட்டுபாடின்றி, குறிப்பாக எல்லைக் காவல் படையின் பயமின்றி, உயிருடன் இருந்த காலத்தில் அவன் செய்த கொலைகளை விட அதிகமாகவே நடத்திக் காட்டியிருக்கும். ஏன் முன்னாள் முதல்வரை கூட அடித்துப் போட்டிருக்கும். இதேபோல் அயோத்திக் குப்பம் வீரமணியின் ஆவி கடற்கரைக்கு வருவோரையெல்லாம் கடல் நீரில் அமிழ்த்தி கொலை செய்திருக்கும் இருக்கும். இதே போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆவி இருப்பது உண்மையா? பொய்யா ? என்ற சர்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவைகளுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்வதை மட்டும்
மறுக்கிறேன்.

5 கருத்துகள்:

சுதேசன் சொன்னது…

பலநாட்டு அறிஞர்களாலும்,
விஞ்ஞானிகளாலும்இந்தபேய்,பிசாசு
மற்றும்தெய்வநம்பிக்கை ,அவைகளதுபலம் என்பன பற்றியெல்லாம் பலவாறாக ஆராயப்பட்டுள்ளன.
உண்மை யாதெனில்இவ்வாறான விடயங்கள் விடை காணமுடியாது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது
என்பதுதான்.

செந்தழல் ரவி சொன்னது…

கொஞ்சம் சுற்றிவளைத்தாலும் பேய் இருக்கிறது என்கிறது பதிவு...ஆனால் பகுத்தறிவுக்கு - அறிவியல் அறிந்த மனதுக்கு ஒப்பவில்லையே கண்ணன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//கொஞ்சம் சுற்றிவளைத்தாலும் பேய் இருக்கிறது என்கிறது பதிவு...//
ரவி,
இரவில் தனிமை பயம், எனக்கு இருக்கும் வரை என்னால் ஆவிகள் இருக்காது என்று உறுதியாக எழுதமுடியவில்லை. எல்லாம் பயம்தென்

கார்த்திக் பிரபு சொன்னது…

¬Å¢¸û þÕ츢Ȧ¾ýÀÐ ¯ñ¨Á ¾¡ý..±ÉìÌ «ÛÀÅÁ¢Õ츢ÈÐ..þ¨¾ ÀüÈ¢ ÜÊ츢Ãõ ´Õ À¾¢× ±Ø¾ §À¡¸¢§Èý...

«ôÀʧ ±ý Àì¸ò¾¢üìÌõ Å¡í¸..ÀÊòРŢðÎ ¦º¡øÖí¸ ±ôÀÊ þÕ츢Ȧ¾ýÚ...¿ýÈ¢..

கோவி.கண்ணன் சொன்னது…

karthick said...
ஆவிகள் இருக்கிறதென்பது உண்மை தான்..எனக்கு அனுபவமிருக்கிறது..இதை பற்றி கூடிச்சீக்கிரம் ஒரு பதிவு எழுத போகிறேன்...

அப்படியே என் பக்கத்திற்க்கும் வாங்க..படித்து விட்டு சொல்லுங்க எப்படி இருக்கிறதென்று...நன்றி..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்