பின்பற்றுபவர்கள்

14 ஜூன், 2006

வளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்

கால்வலிக்க மிதித்து வெறுத்துப் போகும்முன்பே,
கனிவுடன், கேட்கும்முன்பே சைக்கிளுக்கு மாற்றாக,
கண்முன் புதுபைக்கை நிறுத்திய தந்தையை,
கட்டிக்கொண்டு காலில்விழுந்து மகிழ்ந்த நாளா ?

கல்லூரியில் கால் பதித்ததும், புதுநட்புடன்
கனவுலகில் மிதந்தபடி, கனநேர இன்பமென
கான்டின் பக்கத்து மறைவில் காற்றுடன்
கலந்த புகையை கனைப்புடன் விட்டநாளோ ?

வீடன்றி வேறறியேனை, தூரத்து சொந்தம் தம்
வீட்டிற்கு அழைக்க, போவென்று சொல்லிவைக்க,
தயங்கியே முதன்முதலில், தந்தைக்கு சொல்லிவிட்டு
தனியாக பேருந்தில் பயணித்த நாளா ?

நட்ட நடுஇரவில் நண்பர் புடைசூழ
கொட்டம் அடித்து, முதன்முதாலாய் இரண்டாம்
ஆட்டம் பார்த்துவிட்டு, சுவரேறி குதித்து
மொட்டை மாடியில் படுத்துறங்கிய நாளா ?

புத்தகத்தில் மயிலிறகு ? இல்லை இல்லை !
புத்தகத்துள் புத்தகம் மறைத்து வைத்து
பக்கத்தில் எவரும் இல்லையென பார்த்துப்,
பார்த்து பாலியல் பாடம்படித்த நாளா ?

கிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,
வளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,
தளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்
உளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.

-கோவி.கண்ணன்

பி.கு: தேன் கூட்டின் "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டிக்காக எழுதப்பட்டது

13 கருத்துகள்:

நெல்லை சிவா சொன்னது…

கவிதை அருமை, வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

நெல்லை சிவா,

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

jojo சொன்னது…

இன்னும் போட்டிக்கு அனுப்பவில்லை போலிருக்கிறதே..

http://www.thenkoodu.com/contestants.php

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோஜோ,

மிக்க நன்றி, எங்க எப்படி யாருக்கு அனுப்புறதுன்னு தெரியலை, ஏற்கனவே தேன்கூட்டில் பதிவிட்டிருந்தால் அவர்களாகவே திரட்டிக் கொள்வார்கள் என்று எண்ணி வாளாவிருந்துவிட்டேன்.
சுட்டி தந்து சுட்டி காட்டியதற்கு உங்களுக்காக கைதட்டு.

கேட்டதா ?

KVR சொன்னது…

கவிதை நல்லா இருக்கு கண்ணன். வெற்றிபெற வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//KVR said... //

கேவிஆர், வாழ்த்துக்கள் ஊக்கம் அளிக்கிறது, மிக்க நன்றி

SK சொன்னது…

நம் வீட்டிலேயே சொல்லிவிட்டேன்.
இங்கும் சொல்லிவிடுகிறேன்.
நன்ராக வந்திருக்கிறது.
வாழ்த்துகள்.

Chameleon - பச்சோந்தி சொன்னது…

கவிதை கோர்வையாகவும், அருமையாகவும் வந்துள்ளது.

என் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
Chameleon - பச்சோந்தி said... கவிதை கோர்வையாகவும், அருமையாகவும் வந்துள்ளது.

என் வாழ்த்துக்கள். //
நீங்கள் ஆர்வத்துடன் எழுதுவதைப்பார்த்து, நிமிர்ந்து கொண்டேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

tamilatamila சொன்னது…

கவிதை அருமை.ஏன் இன்னும் நல்லா,அருமையாக கலக்கி இருக்கலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//At 1:43 PM, tamilatamila said…

கவிதை அருமை.ஏன் இன்னும் நல்லா,அருமையாக கலக்கி இருக்கலாம். போட்டியில் வெற்றிபெற வாழ்துகள்.
//
வெற்றிபெறுவதற்காக எழுதவில்லை, கவிதை முயற்சியாக எழுதினேன். பாராட்டியதற்கு நன்றி

யாத்திரீகன் சொன்னது…

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

செந்தழல் ரவி சொன்னது…

நல்ல முயற்ச்சி, வாழ்த்துக்கள்..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்