பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2006

நாம் ஒருவர் ?

ஏதோ ஒரு நாள் மின்னல் வெளிச்சத்தில்
இதயம் இடம் மாறியதாக உணர்ந்து கொண்டோம் !
உனக்கு என்னைப் பிடிப்பதால்,
எனக்கு பிடித்தது, உனக்கு பிடித்தது,
என தனியாக எதுவும் இல்லை
என்று சொல்லிக் கொண்டோம் !

அன்று முதல் எனக்கு பிடித்தது உனக்கும்,
உனக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும்
என்றெல்லாம் பேசிவந்தோம் !

காலவேகத்தில் கைபிடித்ததும்,
எனக்கு பிடித்தது, ஏன் உனக்கு பிடிக்கவில்லை ?
உனக்கு பிடித்தது, ஏன் எனக்கு பிடிக்கவில்லை ?
என்ற கேள்வியில், பதில் பிடிபடாமல் போனதால்,
உனக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்க வேண்டும் ?
என்று நினைக்கிறாய், கட்டாயப் படுத்துகிறாய் ?
என்ற கேள்வி ஒன்றுபோல் கேட்டு கொண்டோம்.

உனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் !
எனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் !
என்ற சமாதான ஒப்பந்தத்தில்,
நாம் என்பது ஒருவரல்ல இருவர் என்ற
நிதர்சனம் உணர்ந்து கொண்டோம்.

24 கருத்துகள்:

சேதுக்கரசி சொன்னது…

யதார்த்தம்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//
சேதுக்கரசி said...
யதார்த்தம்!!

//
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

ப்ரியன் சொன்னது…

நல்லா வாழ்க்கை எதார்த்ததை சொல்லி இருக்கு கோவி!ஆனா, கொஞ்சம் குழப்பி தல சுத்தியிடுச்சு வார்த்தை விளையாட்டில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ப்ரியன் said...
நல்லா வாழ்க்கை எதார்த்ததை சொல்லி இருக்கு கோவி//
எதார்தங்களை மறுக்கப்படுகிறதா ? மறைக்கப்படுகிறாதா என்பது எனக்கு புரிவதே இல்லை. யாதார்தம் வாழ்க்கையில் இல்லை என்பது மட்டும் புரிகிறது

அருட்பெருங்கோ சொன்னது…

நிதர்சனமான உண்மை!
முன்னமேப் புரிந்து கொண்டால் பிரச்சினையும் இல்லை!!

SK சொன்னது…

யதார்த்தங்கள்தான் வாழ்க்கையே!

அதது அப்படியே என்பதுதான் யத்+அர்த்தம்.

இது மறுக்கப்படவும் இல்லை, மறைக்கப்படவும் இல்லை!

நம் உணர்ச்சி வேகத்தில் 'மறக்கப்படுகிறது'!

பின், உண்மை சுடும்போது, பொய்மான்கரடு இல்லையென்று ஆகும்போது, சுரீரென உரைக்கிறது!

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
நிதர்சனமான உண்மை!
முன்னமேப் புரிந்து கொண்டால் பிரச்சினையும் இல்லை!! //
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
யதார்த்தங்கள்தான் வாழ்க்கையே!//
எஸ்கே,
மறுமொழிக்கு நன்றி...
யதார்த்ததின் யதார்த்தம் என்னவென்றால்
யதார்த்தம் யதார்த்த வாழ்க்கைக்கு
யதார்த்தமாக இருப்பதில்லை :)

SK சொன்னது…

//யதார்த்ததின் யதார்த்தம் என்னவென்றால்
யதார்த்தம் யதார்த்த வாழ்க்கைக்கு
யதார்த்தமாக இருப்பதில்லை :) //
...என்று யதார்த்தமாக யாரோ சொன்னதை யதார்த்தமாக நாமும் நம்பி, யதார்த்தமாகவே, யதார்த்த வாழ்வைக் கோட்டை விடுகிறோம்.
இதுதான் யதார்த்தம்!!

கோவி.கண்ணன் சொன்னது…

//...என்று யதார்த்தமாக யாரோ சொன்னதை யதார்த்தமாக நாமும் நம்பி, யதார்த்தமாகவே, யதார்த்த வாழ்வைக் கோட்டை விடுகிறோம்.
இதுதான் யதார்த்தம்!! //
யதார்த்தம் யதார்த்தமாக இல்லை, யதார்தததில் உள் யதார்த்தம் இருக்கிறது என்று யதார்த்தம் பேசியே எஸ்கே அவர்களே நீவீர் வாழ்க. இந்த வாழ்த்து நிச்சயமாக யதார்தமாக வந்தது :)

துளசி கோபால் சொன்னது…

இந்த 'ஒருவர்' மயக்கம் இருவருக்கும் வந்து கொஞ்ச நாளுலெ போயிரும்.

தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும்வயிறும் வேறு.

அடுத்த பாதியை சந்தோஷப்படுத்த நாம் எடுக்கற முயற்சிதான் இந்த 'ஒருவர்'.

ஆனா, அப்படியெல்லாம் வாழ்நாள் பூராவும் 'ஒருவரை' சந்தோஷப்படுத்த முடியாது என்பதுதான் நிஜமான உண்மை.

துளசி கோபால் சொன்னது…

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இந்த 'ஒருவர்' மயக்கம் இருவருக்கும் வந்து கொஞ்ச நாளுலெ போயிரும்.
//
துளசியக்கா நல்ல சொல்லியிருக்கிங்க ... எதோ ஒரு சந்தப்பர்ப்பத்தில் 'நாம்' பிரிந்துவிடுகிறது என்பது உண்மை. ஒன்றாயிருக்கும் போது இருந்தது வசந்தமா என்பது அவரவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். அது மோகத்தின் மேகம் என்பது என்கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இந்த 'ஒருவர்' மயக்கம் இருவருக்கும் வந்து கொஞ்ச நாளுலெ போயிரும்.
//
துளசியக்கா நல்ல சொல்லியிருக்கிங்க ... எதோ ஒரு சந்தப்பர்ப்பத்தில் 'நாம்' பிரிந்துவிடுகிறது என்பது உண்மை. ஒன்றாயிருக்கும் போது இருந்தது வசந்தமா என்பது அவரவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். அது மோகத்தின் மேகம் என்பது என்கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/
//
துளசியக்கா,
நன்றி

ப்ரியன் சொன்னது…

யதார்த்தம் இல்லா வாழ்க்கைக்கு ஏது அர்த்தம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//ப்ரியன் said...
யதார்த்தம் இல்லா வாழ்க்கைக்கு ஏது அர்த்தம்? //
இல் வாழ்க்கையில் யதார்த்துக்கு ஏது அர்த்தம் :)

இதையும் படியுங்கள்,
http://govikannan.blogspot.com/2006/06/blog-post_27.html

lenin சொன்னது…

மிகவும் ரசிக்கும் படியான தொகுப்பு..!

வாழ்த்துக்கள்...!

கோவி.கண்ணன் சொன்னது…

// lenin said...
மிகவும் ரசிக்கும் படியான தொகுப்பு..!

வாழ்த்துக்கள்...! //

லெனின் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ...

இப்படி எதாவது தத்துவம் சொல்லவில்லை என்றால் ... காமடியன் என்று சொல்லிவிடுகிறார்கள். வலைப் பொழப்பு நடத்தும் போது பின்னூட்ட மீன்கள் விழனும் என்றால் எதாவது தத்துவ இரையை போட வேண்டியிருக்கிறது :)

Samudra சொன்னது…

//வலைப் பொழப்பு நடத்தும் போது பின்னூட்ட மீன்கள் விழனும் என்றால் எதாவது தத்துவ இரையை போட வேண்டியிருக்கிறது :)
//

ஆமா அப்ப தான் நாங்க வந்து பின்னூட்டம் போடுவோம்! :)

அனுபவபட்டவங்க சொல்லறீங்க, நான் கேட்டுக்குறேன்.

Sivabalan சொன்னது…

கோவி கண்ணன்,

ஆகா அருமை

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

சிவபாலன் ... நன்றி... மீண்டும் வருக !

நாமக்கல் சிபி @15516963 சொன்னது…

அங்கே ஒருவரல்ல இருவர் என்று சொல்கிறீர்கள். இங்கே இருவரல்ல ஒருவர் என்று சொல்கிறீர்கள்.

ஏனிந்த முரண்பாடு?

கோவி.கண்ணன் சொன்னது…

//அங்கே ஒருவரல்ல இருவர் என்று சொல்கிறீர்கள். இங்கே இருவரல்ல ஒருவர் என்று சொல்கிறீர்கள்.
//
நம் இருவர் நமக்கு ஒருவர் என்று சொல்லும் அரசாங்கத்தை மட்டும் கேள்வி கேட்க மாட்டீர்களோ ?
:)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்