பின்பற்றுபவர்கள்

24 ஜூன், 2006

கடிகள்

எச்சரிக்கை இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கடிகளில் சிக்கி உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரத்தத்தையும் இழந்துவிட வேண்டாம்.
இது கடியா ? என்று கேட்பவர்கள் தங்களின் கழுத்தை தடவிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.கண்ணுசாமி : எம் பொன்டாட்டி நான் கிளிச்ச கோட்ட தாண்டமாட்டா ?
பொன்னு சாமி : அவ்வளவு நல்லவங்களா ?
கண்ணுசாமி : கரித்துணி பிடிக்க வச்சுக்குவா, எங்க வீட்டு சமயல்கட்டுல என்னோட கோட்டு தான் கரித்துணி

ரமா : கவிஞனை காதலிச்சது பெரிய மடத்தனாம போயிடுச்சுடி !
உமா : ஏன்டி என்ன ஆச்சு ?
ரமா : உண்மைக் காதல் என்றால் அது தோல்வியில் முடியனும்னு சொல்லி வசனம் பேசி கைகழுவிட்டு போய், இப்ப தாடியோட அலையுரான்டி

ராமு : எங்கப்பா என்னை சகிலா படம் பாக்கிறப்ப பாத்துட்டார்
சோமு : ஐயையோ, அப்புறம் வகையா மாட்டிக்கிட்டியா ?
ராமு : அம்மாக்கிட்ட மூச்சு விட்டு என்னை மாட்டிவிட்டுடாதேன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டார்

பெண்ணின் அப்பா : நீங்க பெருந்தன்மையா 'பெண்ணை புடவையோடு அனுப்புங்க அதுபோதும்னு' சொல்றதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.
சம்பந்தி : பராவாயில்லை, உங்களுக்கு விருப்பம் எதுவோ அதை செய்யுங்க அது போதும்.
பெண்ணின் அப்பா : சம்பந்தி தப்பா நெனெச்சிக்காதிங்க, என் பெண்ணுக்கு புடவை கட்டத் தெரியாது, வேண்டுமானால் சுடிதார்போட்டு அனுப்புகிறோம், அதுதான் சொன்னேன்.

கலா : இப்பெல்லாம் நான் சந்தோசமாக இருக்கிறேன், எங்க வீட்டுக்காரர் வீட்டுக்கு லேட்டா வருகிறார் !
மாலா : தினமும் அர்சனா ஸ்வீட்டு தானா ? கொடுத்துவச்சவடி நீ !, அதுதான் இப்பல்லாம் எனக்கு போன் பன்றதே இல்லையா ?
கலா : விசயம் அது அல்ல, இப்பத்தான் நிம்மதியாக மெகா சீரியல்களை முழுசா பார்க்கமுடியுது, இல்லாட்டி என்ன ஆச்சுன்னு உனக்கு போன் பண்ணி பண்ணி கேட்க வேண்டியது இருக்கும்.

சுப்பு : என் மனைவி காலையில் சீக்கரமே எழுந்துடுவா
குப்பு : அப்போ எல்ல வேலைகளையும் அவுங்கதான் பார்பாங்க, நீங்க கொடுத்து வச்சவங்க !
சுப்பு : நீ வேறப்பா, அவ காலையில் சீக்கிரம் எழுவதே, என்னை எழுப்பி வேலைசெய்ய சொல்வதற்குத்தான்

9 கருத்துகள்:

நாகை சிவா சொன்னது…

கடைசி ஒ,கே
மத்தது எல்லாம் தாங்கல.............

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
கடைசி ஒ,கே
மத்தது எல்லாம் தாங்கல.............
//
அடடே வாங்க, உங்களத்தான் தேடிகிட்டு இருந்தேன் :)

அடடே வாங்க, உங்களத்தான் தேடிகிட்டு இருந்தேன் :) அதுதான் ஒரு முன்னோட்டம் குடுத்துட்டோம்ல

ஜயராமன் சொன்னது…

நன்றாக சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.

அழகான துணுக்குகள்.

ரொம்ப ஜோர்.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜயராமன் said...
நன்றாக சிரிக்க வைத்திருக்கிறீர்கள்.

அழகான துணுக்குகள்.

ரொம்ப ஜோர்.

நன்றி
//

வாங்க ஜெயராமன் சார்,
எழுதறத்துக்கு விசயமே இல்லையென்றால் எதாவது ஜோக் எழுத ஆரம்பித்துவிடுவேன்.
தமிழ்மணம் திரட்டியைப் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. புதிய விசயங்களை படிப்பதும் குறைந்துவிட்டது. எழுதுறது விட்டுப்போகக் கூடாது என்று இந்த மாதிரி ஜோக் எழுத வேண்டியிருக்கிறது.
உங்களை மாதிரி புள்ளி விபரமாக எழுதுபவர்களைப் பார்த்தால் ஆச்சிரியமாக இருக்கிறது.

குமரன் (Kumaran) சொன்னது…

:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
:-)))))
//
திருப்பரம் குன்றத்தில் நீ(ங்கள்) சிரித்தால் குமரா, திருத்தனி மலைமீது எதிரொலிக்கும் :)

நாமக்கல் சிபி @15516963 சொன்னது…

:))

அப்படியே பொள்ளாச்சியிலும் எதிரொலிக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
:))

அப்படியே பொள்ளாச்சியிலும் எதிரொலிக்கிறது //
திரு குமாரன் பொள்ளாச்சிகாரரா ? அப்ப மருதமலையில் எதிரொலிக்குனு சொல்லுங்க :)

நன்மனம் சொன்னது…

////நாமக்கல் சிபி @15516963 said...
:))

அப்படியே பொள்ளாச்சியிலும் எதிரொலிக்கிறது //
திரு குமாரன் பொள்ளாச்சிகாரரா ? அப்ப மருதமலையில் எதிரொலிக்குனு சொல்லுங்க :) //

இதாங்க பெஸ்ட் கடி. (பஞ்ச தந்திரம் பாத்த எபெக்ட்)

:-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்